Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொறுப்­புக்­கூறும் விட­யத்தில் இனி­யா­வது அக்­கறை தேவை

Featured Replies

பொறுப்­புக்­கூறும் விட­யத்தில் இனி­யா­வது அக்­கறை தேவை

 

இலங்­கையில் தமிழ் மக்­க­ளுக்கு நீதி கிடைப்­பதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு தலை­யீடு செய்­யு­மாறு அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்­பிடம் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. ட்ரம்­பிற்­கான தமி­ழர்கள் அமைப்பு இந்த விடயம் தொடர்­பாக ஜனா­தி­பதி ட்ரம்­பிற்கு கடி­த­மொன்றை அனுப்­பி­வைத்­துள்­ளது.

புத்­தாண்டை முன்­னிட்டு அவ­ருக்கு வாழ்த்து தெரி­வித்து அனுப்­பப்­பட்­டுள்ள இந்தக் கடி­தத்தில் பாதிக்­கப்­பட்ட தமி­ழர்­க­ளுக்கு சர்­வ­தேச நீதி கிடைப்­ப­தற்­காக அவர் செயற்­ப­ட­வேண்டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்றம் அல்­லது போர்க்­குற்றங்­க­ளுக்­கான சர்­வ­தேச தீர்ப்­பாயம் என்­ப­வற்றின் ஊடாக இன­மோதலின்­போது இலங்கை அதி­கா­ரி­க­ளினால் கொல்­லப்­பட்­டமை தொடர்­பாக நீதியை கிடைக்கச் செய்­யு­மாறு கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்தக் கடி­தத்தில் பிரிட்டி­ஷா­ரி­ட­மி­ருந்து சுதந்­திரம் பெற்ற காலம் தொடக்கம் தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான எந்­த­வொரு செயற்­பாட்­டுக்கும் சிங்­க­ள­வர்கள் எவரும் பதி­ல­ளிக்கும் கடப்­பாட்டை கொண்­ட­வர்­க­ளாக்­கப்­ப­ட­வில்லை. நீதியும் உண்­மையும் நிறை­வே­றாமல் உள்­ளன. 2018ஆம் ஆண்டு அவற்றை தமி­ழர்கள் பெற்­றுக்­கொள்­வார்கள் என நாங்கள் எதிர்­பார்க்­கின்றோம். தென்­சூடான் மக்கள் தமது சொந்த தலை­வி­தியை தீர்­மா­னிப்­ப­தற்கு அமெ­ரிக்கா சரி­யான முறை­யிலும் துணிச்­ச­லு­டனும் உதவி வரு­கின்­றது. இலங்­கையில் வடக்கு, கிழக்கில் பாதிக்­கப்­பட்ட தமி­ழர்­க­ளுக்கு உதவி செய்­வது அவ­சி­ய­மாகும். அதனை செய்­வீர்கள் என்று நாங்கள் கரு­து­கின்றோம் என்றும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இத­னை­விட வடக்கு, கிழக்கில் உள்ள பாதிக்­கப்­பட்ட தமி­ழர்­க­ளுக்கு உதவி செய்­ய­வேண்­டிய தேவைப்­பாடு காணப்­ப­டு­கின்­றது. அவர்கள் தமது சொந்தத் தலை­விதியை தீர்­மா­னிக்­கவும் சுதந்­தி­ரத்தை மீள ஏற்­ப­டுத்­தவும் உத­வு­வ­தற்­கான தேவைப்­பாடு உள்­ளது. இலங்­கையில் ஐரோப்­பி­யர்­க­ளினால் கால­னித்­துவ ஆட்சி மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தற்கு முன்­பாக தமி­ழர்கள் கொண்­டி­ருந்த ஸ்திரத்­தன்­மையை பெற்­றுக்­கொள்­ள­வேண்­டு­மென நாங்கள் எதிர்­பார்க்­கின்றோம் என்றும் ட்ரம்­புக்­கான அமைப்பு தமது செய்­தியில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

அமெ­ரிக்­காவின் முன்னாள் ஜனா­தி­பதி பராக் ஒபா­மாவின் ஆட்­சியின் போதும் ஒபா­மா­விற்­கான தமிழர் அமைப்பு என்ற பெயரில் அமெ­ரிக்­கவாழ் இலங்கை தமி­ழர்கள் செயற்­பட்டு வந்­தனர். இறுதி யுத்­தத்­தின்­போது அன்­றைய அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒபா­மா­விடம் இந்த அமைப்­பினர் பல கோரிக்­கை­க­ளையும் முன்­வைத்­தி­ருந்­தனர். யுத்தம் முடி­வ­டைந்த பின்­னரும் வடக்கு, கிழக்கை மீளக்­கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும் அமெ­ரிக்கா உத­வ­வேண்டும் என்றும் இறுதி யுத்­தத்­தின்­போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், யுத்­தக்­குற்­றங்கள் தொடர்பில் விசா­ரணை நடத்­தப்­பட்டு நீதி நிலை­நாட்­டப்­பட வேண்டும் என்றும் ஒபா­மா­விற்­கான தமிழர் அமைப்பு வலி­யு­றுத்தி வந்­தி­ருந்­தது.

தற்­போது அமெ­ரிக்க ஜனா­தி­பதி ட்ரம்­புக்­கான தமிழர் அமைப்பும் ஆரம்­பிக்­கப்­பட்டு யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உத­வ­வேண்­டி­யதன் அவ­சியம் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.

இறுதி யுத்­தத்­தின்­போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்­தக்­குற்­றங்கள் தொடர்பில் சர்­வ­தேச நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய உள்­ளக விசா­ர­ணைப்­பொ­றி­முறையின் கீழ் விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்­டு­மென்று சர்­வ­தேசம் வலி­யு­றுத்தி வரு­கின்­றது. 2015 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரின் போது சர்­வ­தேச நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய உள்­ளக விசா­ரணை இடம்­பெ­ற­வேண்­டு­மென்ற பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டது. இந்தப் பிரே­ர­ணைக்கு நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது இணை அனு­ச­ரணை வழங்கி ஏற்­றுக்­கொண்­ட­துடன் உள்­ளக விசா­ரணை நடை­பெறும் என்றும் உறு­தி­ய­ளித்­தி­ருந்­தது.

ஆனால் சர்­வ­தேச நீதி­ப­தி­களை விசா­ர­ணையில் ஈடு­ப­டுத்த முடி­யாது என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உட்­பட அர­சாங்க அமைச்­சர்கள் திட்­ட­வட்­ட­மாக கருத்­துக்­களை தெரி­வித்து வந்­தனர். ஆனாலும் உள்­ளக விசா­ர­ணையின் மூலம் நீதியை வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென்று அர­சாங்கம் உறு­தி­ய­ளித்­தி­ருந்­தது. உள்­ளக விசா­ரணை பொறி­மு­றைக்­கான செயற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தா­கவும் அர­சாங்கத் தரப்பில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் படைத்­த­ரப்­பி­னரை விசா­ரிக்கும் வகையில் உள்­ளக விசா­ர­ணைகள் கூட இன்­னமும் ஆரம்­பிக்­கப்­ப­ட­வில்லை. உள்­ளக விசா­ர­ணைக்­கான பொறி­முறை கூட இன்­னமும் உரு­வாக்­கப்­ப­ட­வில்லை.

இவ்­வா­றான நிலை­யில்தான் கடந்த மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் அமர்­வின்­போது யுத்­தக்­குற்­றங்கள் தொடர்­பிலும் மனித உரிமை மீறல்கள் தொடர்­பா­கவும் விசா­ரணை நடத்தும் விட­யத்தில் அர­சாங்­கத்­திற்கு இரண்டு வரு­ட­கால அவ­காசம் வழங்­கு­வ­தற்­கான தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது. இந்தத் தீர்­மா­னத்­திற்கு அமெ­ரிக்­கா­வா­னது பூரண ஆத­ர­வினை வழங்­கி­யி­ருந்­தது. அமெ­ரிக்கப் பிர­தி­நி­திகள் இந்த கால அவ­கா­சத்­திற்­கான யோச­னை­களை முன்­வைத்­த­துடன் ஏனைய தரப்­பி­னர்­களின் ஆத­ர­வையும் திரட்­டி­யி­ருந்­தனர்.

அர­சாங்­கத்­திற்கு கடந்த மார்ச் மாதம் இரண்டு வரு­ட­கால அவ­காசம் வழங்­கப்­­­­­பட்ட பின்­னரும் பொறுப்­புக்­கூறும் விட­யத்தில் அர­சாங்­க­மா­னது இன்னும் அக்­கறை செலுத்­து­வ­தாக தெரி­ய­வில்லை. உள்­ளக விசா­ர­ணைக்­கான பொறி­மு­றைகள் கூட இன்­னமும் தயா­ரிக்­கப்­ப­ட­வில்லை. தற்­போது கால அவ­காசம் வழங்கி 9 மாதங்கள் கடந்­து­விட்­ட­போ­திலும் அர­சாங்கம் அந்த விட­யத்தில் எந்­த­வித அக்­க­றையும் காண்­பிக்­காமல் செயற்­பட்டு வரு­கின்­றது.

அர­சாங்­கத்­திற்கு இரண்டு வருடம் கால அவ­காசம் வழங்கும் செயற்­பாட்­டுக்கு தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பை தவிர ஏனைய தமிழ் கட்­சிகள் எதிர்ப்பு தெரி­வித்­தி­ருந்­தன. தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பிற்­குள்­ளேயே பல எம்.பி.க்கள் இதற்கு எதி­ரான நிலைப்­பாட்டை கொண்­டி­ருந்­தனர். ஆனால் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­மை­யா­னது அர­சாங்­கத்­திற்கு கால அவ­காசம் வழங்­கு­வ­தற்­கான ஒத்­து­ழைப்­பினை வழங்­கி­யி­ருந்­தது.

 அமெ­ரிக்­கா­வி­னது ஒத்­து­ழைப்பின் கார­ண­மா­கவே அர­சாங்­கத்­திற்கு இரண்டு வரு­ட­கால அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்த நிலையில் தான் தற்­போது ட்ரம்­பிற்­கான தமிழர் அமைப்­பினர் இலங்­கையில் தமிழ் மக்­க­ளுக்கு நீதி­கி­டைப்­பதை உறு­திப்­ப­டுத்­து­மாறு கோரிக்கை விடுத்­தி­ருக்­கின்­றனர்.

தற்­போ­தைய நிலையில் அர­சாங்­க­மா­னது மனித உரிமை மீறல் தொடர்­பிலும் யுத்­தக்­குற்­றங்கள் குறித்தும் படைத்­த­ரப்­பினர் மீது நட­வ­டிக்கை எடுக்க தயா­ராக இல்லை. ஆனாலும் காணா­மல்­போனோர் விடயம் தொடர்பில் ஆராய்­வ­தற்­காக செய­லகம் ஒன்றை அமைப்­ப­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கின்­றது. ஆனாலும் அந்த செய­ல­கத்­தினை செயற்­பட செய்­வ­தற்­கான துரித நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக தெரி­ய­வில்லை.

நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்கு நீதி வழங்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது. இதற்­கா­கத்தான் இறுதி யுத்­தத்­தின்­போ­தான மனித உரிமை மீறல்கள் தொடர்­பிலும் யுத்தக் குற்­றங்கள் குறித்தும் உரிய விசா­ரணை நடத்­து­மாறு தமிழ் தரப்­பி­லி­ருந்து கோரிக்கை முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றது. எதிர்­வரும் மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கை விவ­காரம் குறித்து ஆரா­யப்­ப­ட­வி­ருக்­கின்­றது. இந்த வேளையில் இலங்கை அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுக்­க ­வேண்டும் என்­ப­தற்­கா­கவே ட்ரம்­பிற்­கான தமிழர் அமைப்பு தற்­போது இத்­த­கைய வலி­யு­றுத்­தல்­களை விடுத்­தி­ருக்­கின்­றது.

நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது உண்­மை­யி­லேயே சர்­வ­தேச அழுத்­தங்­க­ளி­லி­ருந்து விடு­ப­ட­வேண்­டு­மானால் நீதி­யான விசா­ர­ணை­களை நடத்­த­வேண்டும். யுத்­தத்­தின்­போது பாதிக்­க­ப்பட்ட தமிழ் மக்­க­ளுக்கு உரிய நீதி வழங்­கப்­ப­ட­வேண்டும். இதற்கு ஐ.நா. மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள விட­யங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும்.

ஐ.நா. மனித உரிமை பேர­வையில் இலங்கை அர­சாங்­கத்­திற்கு இரண்டு வருடகால அவகாசம் வழங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அமெரிக்காவானது தற்போது இலங்கைக்கான ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை நிறுத்தியுள்ளது. இஸ்ரேலின் தலைநகரான ஜெருசலேமை பிரகடனம் செய்த விவகாரத்தில் அமெரிக்காவிற்கு எதிராக இலங்கை வாக்களித்திருந்தது. இதனையடுத்தே ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை அமெரிக்கா நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இவ்வாறான நிலையில் அமெரிக்காவானது ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கக்கூடிய சூழ்நிலையும் தற்போது நிலவுவதாகவே தெரிகின்றது. எனவே அரசாங்கமானது பொறுப்புக்கூறும் விடயத்தில் நியாயமாகவும் நீதியாகவும் செயற்படவேண்டும். மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய அரசாங்கம் செயற்பட்டு தமிழ் மக்களுக்கு நீதியை வழங்கினால் சர்வதேச அழுத்தங்களிலிருந்து மீட்சிபெறமுடியும். எனவே இனியாவது காலத்தைக் கடத்தாது பொறுப்புக்கூறும் விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டுமென வலியுறுத்துகின்றோம்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-02#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.