Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் மீது தாக்குதல்

Featured Replies

தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் மீது தாக்குதல்

attack.jpg?resize=695%2C384
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் ஒரு மீது தாக்குதல் நடத்தப்பட்டது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  சாவகச்சேரி சிவன் கோயில் பகுதியில் இன்று காலை 10.30 மணிக்கு இந்தச் சம்பவம் இடம் பெற்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் கா.சற்குணதேவன் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

தாக்குதலில் படுகாயமடைந்த சற்குணதேவன் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை கைதுசெய்து விசாரணை செய்துவருகின்றனர்.

http://globaltamilnews.net/2018/59811/

  • கருத்துக்கள உறவுகள்

சாவகச்சேரியில் கூட்டமைப்பின் வேட்பாளர் தாக்கப்பட்டு படுகாயம்

by in செய்திகள்

tna-satkunadevan.jpg1

சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காசிலிங்கம் சற்குணதேவன் என்ற வேட்பாளரே காயமடைந்தவராவார்.

சாவகச்சேரி நகரசபையின் 8 ஆவது வட்டாரத்துக்கு (நுணாவில் கிழக்கு) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இவர் போட்டியிடுகிறார்.

இவர் சாவகச்சேரி- சிவன்கோவிலடிப் பகுதியில் நேற்றுக்காலை 10.30 மணியளவில் வாக்கு சேகரிப்பதற்காக வீடு வீடாகச் சென்று கொண்டிருந்தார்.  வீடு ஒன்றுக்குள் பரப்புரைக்காகச் சென்ற போது, வேட்பாளர் காசிலிங்கம் சற்குணதேவன் மீது அங்கிருந்தவர் தாக்குதல் நடத்தினார்.

இதில் படுகாயமடைந்த வேட்பாளர் உடனடியாக சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவரை சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தாக்கப்பட்ட வேட்பாளர் காசிலிங்கம் சற்குணதேவன், கடந்த முறையும் சாவகச்சேரி நகரசபை உறுப்பினராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.puthinappalakai.net/2018/01/07/news/28311

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன்,  சுமந்திரன் மீதுள்ள கோபத்தை.... 
இந்த ஆளின் மீது... "இறக்கி"  வைத்து விட்டார்கள் போலுள்ளது. :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.