Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துருப்பிடித்த வாள்களுடன் வந்த கம்மன்பில அணியினரால் பரபரப்பு

Featured Replies

நீண்ட வாள்களுடன் கொழும்பில் ஊடக சந்திப்பை நடத்திய மஹிந்தவின் சகா

 

நீண்ட வாள்களுடன் கொழும்பில் ஊடக சந்திப்பை நடத்திய மஹிந்தவின் சகா 

ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பிலவும் அவரது கட்சி உறுப்பினர்களும் கூரிய வாள்களுடன் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.

கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உட்பட அக்கட்சியிலுள்ள உறுப்பினர்கள் அனைவரும் கறுப்பு ஆடையுடன் பிரசன்னமாகியிருந்த அதேவேளை, அவர்களது கைகளில் நீண்ட வாள்கள் காணப்பட்டன.

கடந்த 2015ஆம் ஆண்டு இதேபோன்றதொரு நாளில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ரணில் – மைத்திரி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி தோற்கடித்த நிலையில் இன்று அந்த வெற்றிதினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வீசிய வாளிற்குள் முக்கியமான குற்றவாளிகள் எவரும் அகப்படவில்லை என்பதை எடுத்துக்காட்டும் வகையில் பிவித்துரு ஹெல உறுமய செய்தியாளர் மாநாடு ஒன்றை கொழும்பில் நடத்தியுள்ளது.

மத்திய வங்கியின் பிணைமுறி ஊழல் விவகாரத்தில் குற்றவாளியாக காணப்படும் முக்கியமான அரசியல்வாதிகள் தான் வீசப்போகும் வாளிற்குள் அகப்படுவார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.

ஆனால் ஊழல் விவகாரம் தொடர்பான அறிக்கையை வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முக்கியமான குற்றவாளிகளை காப்பாற்றியுள்ளதாக சுட்டிக்காட்டிய அக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, ஜனாதிபதி வீசிய வாள் யாரையும் வெட்டிச்சாய்க்கவில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் பிரதான குற்றவாளிகள் என்றும் அவர்கள் இருவரும் உடனடியாக தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் எனவும் கூறிய உதய கம்மன்பில, அதற்கான ஏற்பாடுகள் எதுவும் அறிக்கையில் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பரான உதய கம்மன்பில, செய்தியாளர் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது காரசாரமான விமர்சனங்களையும் முன்வைத்தார்.

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/Udaya-gammanpila-with-Sword

 

 

 

துருப்பிடித்த வாள்களுடன் வந்த கம்மன்பில அணியினரால் பரபரப்பு

 
 

வாளேந்திய சிங்கத்தின் வாள்களை ஒத்த வாள்களை ஏந்தியபடி ஊடகவியலாளர் மாநாட்டிற்கு உதய கம்மன்பில அணியினர் வந்தமையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

udaya.jpg

வாள்களை ஏந்தியவாறு ஊடகவியலாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவிக்கையில்,

 

ஆட்சி அதிகாரத்தை அளித்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஜனாதிபதி தனது நன்றியை பூரணமாக செலுத்தியுள்ளார். 

 

தேசிய கொடியில் உள்ள வாளேந்திய சிங்கத்தின் வாளினை ஜனாதிபதி தனது கையிலேந்தி மூன்று வருடங்கள் இன்றுடன் பூர்த்தியாகியுள்ளது. 

நாட்டு மக்களின் அதிகாரத்தினை அனைவருக்கும் பொதுவானதாக பயன்படுத்த வேண்டும் . ஒருதலை பட்சமாக செயற்படுவது தேசிய இலட்சனையினை அவமதிக்கும் செயலாகும்.

26648757_10208807136490458_1657301960_n.

கடந்த கிழமைகளில் ஜனாதிபதியின் வாள்வீச்சு எவர் மீது பாயுமென பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜனாதிபதியின் வாள் வீச்சு இடம்பெற்றது.

26733232_10208807136130449_826518150_o.j

இருந்தபோதும் தேசியக் கொடியிலுள்ள சிங்கத்தின் கூரிய வாளினைப்போலல்லாது துருப்பிடித்த வாள் வீச்சாயிற்று. யாருக்கு வாள் வீசப்பட்டது. வீசிய வாள் எவருக்குப் பாய்ந்தது, இதன்போது இரத்தம் யாருக்கு வழிந்தது. இது  சினிமாவில் வரும் ஆரம்பக் காட்சிகள் போல் இருந்தது. ஆனால் பொறுமையாக இருந்து ஜனாதிபதியின் படத்தை பார்த்த எமக்கு  இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் அங்கீகாரத்தை கொடுத்த பொதுமக்கள் பிணைமுறி விவகாரத்தில் வாள் வீச்சு பயனற்றது என்ற விடயத்தை நன்கு அறிந்துக்கொண்டனர்.

இதன் காரணமாகவே நாம் இன்று துருப்பிடித்த வாள்களுடன் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டதாக அவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/29117

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.