Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனவாதமும் தேர்தலும்

Featured Replies

இனவாதமும் தேர்தலும்

1-f4efd1a712891f350a3c43b104587042016b68a6.jpg

 

நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­த­லா­னது தனி­ஈ­ழத்தை உரு­வாக்­கு­வ­தற்கு மீண்டும் ஒரு மக்கள் ஆணையை பெறும் தேர்­த­லாக தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பினால் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. இதை கவ­னத்தில் கொண்டு பேரின சமூகம் இந்த தேர்­தலில் தாமரை மொட்டை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற பகி­ரங்க அழைப்­பொன்றை விடுத்­தி­ருக்­கின்றார் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ. உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெர­முன தோல்வி அடை­யு­மானால் இலங்கை பிள­வு­பட்டு தனித்­தமிழ் ஈழம் உரு­வா­கு­வதை எவ­ராலும் தடுத்து நிறுத்த முடி­யாது என அடித்து கூறி­யுள்ளார் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ ராஜபக் ஷ.

அவ­ரு­டைய இன­வாத கூக்­கு­ர­லா­னது தமிழ் மக்­க­ளுக்கு கேட்டு புளித்துப் போன வாச­கங்­க­ளாக இருந்­தா­லும்­தென்­னி­லங்கை மக்கள் மத்­தியில் இவ்­வகை இனத்­துவ கூர்மை கொண்ட வாச­கங்­களும் கருத்­துக்­களும் எத்­த­கைய தாக்­கத்­தையும் பாதிப்­பையும் உண்­டு­பண்ணப் போகி­றது என்­பதை தேர்தல் முடி­வு­களின் பின்பே அறிய முடியும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெர­முன கூட்­ட­ணியை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­முகப்­ப­டுத்தும் நிகழ்வு கொழும்பு சுக­த­தாச அரங்கில் இடம்­பெற்­ற­போதே முன்னாள் ஜனா­தி­பதி இந்த விஷம பிர­சா­ரத்தை செய்­துள்ளார். தேசப்­பற்­றுள்ள ஒவ்­வொ­ரு­வரும் தாமரை சின்­னத்­துக்கு வாக்­க­ளிக்க வேண்டும். தாமரை மொட்டா தனி­ஈ­ழமா? என்­பதை மக்கள் தீர்­மா­னிக்க வேண்டும் என அவர் பார­தூ­ர­மான இனவாத கருத்­துக்­களை அள்ளி எறிந்­துள்ளார்.

தமிழ் மக்கள் சமஷ்டி வகை­யி­லான அதி­கார பகிர்வை வேண்டி நிற்­கின்­றார்கள். நாடு பிள­வு­ப­டு­வ­தையோ பிரிக்­கப்­ப­டு­வ­தையோ கோர­வில்லை. ஒரே நாட்­டுக்குள் பிள­வு­ப­டாத வகையில் அதி­கார பகிர்வை கோரு­கின்­றார்கள் என்­பதை தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் தெளி­வு­ப­டவும் உறு­தி­ப­டவும் கூறி­வ­ரு­கின்ற போதும் இன­வாத தரப்­பினர் இல்­லா­த­தையும் பொல்­லா­த­தையும் கூறி தென்­னி­லங்கை மக்­களை திசை திருப்­பு­வ­தற்­கு­ரிய கைங்­க­ரி­யத்தை மிக மூர்க்கத்தன­மாக செய்து வரு­வது மஹிந்­த­வுக்கு யாரும் நிக­ராக மாட்­டார்கள் என்­பது எளி­தா­கவே விளங்கிக் கொள்ளக் கூடிய விட­ய­மாகும்.

இவ்­வா­றான இன­வாத கருத்­துக்­களை அள்ளித் தெளிப்­ப­தற்கு வெறும் உள்­ளூ­ராட்சி தேர்­தலில் வெற்றி பெறு­வது மாத்­திரம் மஹிந்த அணி­யி­னரின் இலக்­கு­மல்ல நோக்­கு­மல்ல. ஏற்­பா­டாகி வரும் அர­சியல் சாச­னத்தை இல்­லா­த­தாக்கி தமிழ் மக்­க­ளுக்கு கிடைக்க கூடிய அர­சியல் தீர்­வுக்கு ஆப்பு வைப்­பது மாத்­திரம் அல்ல. நாட்டில் இன நெருக்­க­டிகள் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்ற அரை­குறை நோக்­கமே இதற்கு கார­ண­மாகும்.

மஹிந்த ராஜபக் ஷ போரை முடி­வுக்கு கொண்டு வந்தார். நாட்டை பயங்­க­ர­வா­தத்­தி­லி­ருந்து மீட்­டெ­டுத்­தவர் என்ற பெருமை பாடுவோர் தென்­னி­லங்­கையில் மாத்­தி­ர­மல்ல ஏனைய பிர­தே­சங்­க­ளிலும் இருக்­கத்தான் செய்­கி­றார்கள். இவர்கள் எல்­லோரும் மஹிந்த மீள் எழுச்சி பெற வேண்டும் அதி­கா­ரத்தை மீண்டும் கைப்­பற்ற வேண்டும் என்ற கனவில் மிதந்து கொண்­டி­ருக்­கின்­றனர். இவர்­க­ளுக்கு நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி தேர்­த­லா­னது மஹிந்­தவின் தென்­னி­லங்கை செல்­வாக்கை உரைத்துப் பார்க்கும் ஒரு கள­மா­கவே இருக்கப் போகின்­ற­தென்­பது ஏதோ ஒரு வகையில் உண்­மையே.

2017 ஆம் ஆண்டு மஹிந்த வீழ்த்­தப்­பட்­டதன் பின் அவர் தன்னை சுதா­க­ரித்துக் கொள்­வ­தற்கு பல­வ­ழி­க­ளையும் முறை­க­ளையும் பயன்­ப­டுத்தி இருந்­தாலும் கூட நேர­டி­யா­கவே மக்கள் செல்­வாக்கை அள­விட்டுப் பார்க்கும் முதல் சந்­தர்ப்­ப­மா­கவே இது அமையப் போகிறது.

என்­னதான் தேசிய அர­சாங்கம் என்ற பெயரில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியும் ஐக்­கிய தேசிய கட்­சியும் இணைந்து ஆட்­சியை நடத்தி வரு­கின்­ற­போ­திலும் தேர்தல் என்று வரு­கின்­ற­போது ஒவ்­வொரு கட்­சியும் தம்தம் செல்­வாக்கை தனித்­து­வத்­தை­யுமே நிலை­நி­றுத்திக் கொள்ளும் தேர்­த­லா­கவே இந்த தேர்­தலை அவர்கள் பயன்­ப­டுத்த பார்க்­கின்­றார்கள். கூட்­டாட்சி நடத்தும் ஐக்­கிய தேசிய கட்­சி­யா­யினும் சரி அல்­லது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யாக இருக்­கலாம் தங்­க­ளு­டைய வாக்கு வங்­கி­களை மேலும் மேலும் பலப்­ப­டுத்த பார்­க்கின்­றார்­களே தவிர கூட்­டுத்­தன்­மையை பலப்­ப­டுத்த அவர்கள் எந்த சந்­தர்ப்­பத்­திலும் தயா­ரில்லை என்­பதை இந்த தேர்தல் தெளி­வாக உணர்த்தி நிற்­கின்­றது.

ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கும் இடை­யி­லான இரு கட்சி ஆட்­சிக்­கான கூட்டு ஒப்­பந்தம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் முடி­வ­டைந்­து­விட்­டது என்­று­ கூ­றப்­ப­டு­கின்­றது. இதன் மறு­க­ருத்து என்­ன­வெனில் இரு­கட்சி ஆட்­சிக்­கான அந்­திமம் வந்­து­விட்­டது என்று பேசப்­ப­டு­கின்­ற­போ­திலும் அர­சியல் தீர்வு அர­சியல் சாசனம் என்­பன எவ்­வாறு முன்­னெ­டுத்து செல்­லப்­ப­ட­வி­ருக்­கின்­றது என்ற சந்­தேகம் தமிழ் மக்கள் மத்­தியில் ஊட­றுத்துக் கொண்டே இருக்­கின்­றது.

இதற்­கி­டையில் 2020 ஆம் ஆண்டு ஐக்­கிய தேசிய கட்­சியே ஆட்­சிக்கு வரு­மென்று அதன் தலை­வர்கள் வீராப்பு பேசிக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். இதேவேளை சுதந்­திரக் கட்­சி­யி­னரும் இதையே மீட்­டிக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். இந்த இரு கட்­சி­க­ளு­டைய எதிர்­கால நோக்கும் ஆட்­சியை கைப்­பற்­று­வ­தா­கவே அமைந்­துள்­ளது. இதனை விட தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வை விரை­வு­ப­டுத்­து­வ­திலோ முன்­னெ­டுத்து செல்­வ­திலோ கரி­ச­னை­காட்­டப்­ப­ட­வில்லை என்­பது தெளி­வா­கவே விளங்கிக் கொள்ளவேண்­டிய விட­ய­மா­க­வுள்ளது.

இது இவ்­வாறு இருக்கும் நிலை­யில்தான் மஹிந்த அணி­யினர் நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்­தலில் பெருந்­தொ­கை­யான உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை கைப்­பற்­றி­விட வேண்­டு­மென்ற தாகத்­து­டனும் வேகத்­து­டனும் இன­வாத கருத்­துக்­களை அள்ளி வீசிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இதில் கவ­லை­கொள்ளக் கூடி­ய­ வி­டயம் என்­ன­வென்றால் வட­கி­ழக்­கி­லுள்ள பல உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு தாமரை மொட்டு சின்­னத்தை கொண்ட ஸ்ரீலங்கா பொது­ஜ­ன ­பெ­ர­முன வேட்­பு­மனு தாக்கல் செய்து களத்தில் குதித்­துள்­ளது. இதில் பல தமிழ் பேசும் வேட்­பா­ளர்­களும் கள­மி­றக்­கப்­பட்­டி­ருக்­கிறார்கள்.

தமிழ் மக்கள் 30 வரு­டங்கள் அகிம்சை வழி­யி­லான போராட்­டங்­களை நடத்தி தோற்றுப் போன­வர்கள் என்­பது கவலை தரு­கின்­ற ­வி­டயம் தான். இந்­த­ அ­கிம்சை போரை ஏன் நடத்­தி­னார்கள், சமஷ்டி முறை­யி­லான ஒரு அர­சியல் தீர்வை வழங்கி நாட்டை பிள­வுப்­பா­தைக்கு இட்டு செல்­லாமல் பார்த்துக் கொள்­ளுங்கள் என சிங்­கள தலை­வர்­களை வேண்­டி­னார்கள்.அதற்­காக சத்­தி­யாக்­கி­ரக போராட்டம் சிங்­க­ள ஸ்ரீ போராட்டம் அர­சியல் சாசன போராட்­ட­மென எத்­த­னையோ வகை போராட்­டங்­க­ளை­அ­ற­வ­ழியில் நடத்தி பார்த்­தார்கள். இவை எல்­லா­வற்­றுக்கும் அப்பால் ஒப்­பந்­தங்­க­ளை­கூட செய்து பார்த்­தார்கள். நடந்­த­தென்ன ஏமாற்­றங்­களும் அழி­வு­க­ளும்தான். இவற்றின் கூட்டு மொத்த ஒப்­பந்­தம்தான் ஆயுதம் ஏந்த வைத்­தது.

இதே மஹிந்­த ராஜபக் ஷ தான் உலக பயங்­க­ர­வாதம் என்று சொல்லிக் கொண்டு உலக நாடு­களின் அனு­ச­ர­ணை­யோடு ஆயுத போருக்கு முடிவு கட்­டி­ய­தாக தம்­பட்டம் அடித்து கொண்­டவர். ஆயு­தப்­போரின் மௌனிப்பின் பின்­அவர் சர்­வ­தே­சத்­துக்கு அளித்த வாக்­கு­று­தி­யென்ன தமிழ் மக்­க­ளுக்­கான நிரந்­தர நீடித்து நிற்கக்கூடிய அர­சியல் தீர்­வொன்றை வழங்­குவேன் என அடித்து கூறினார். இதை சர்­வ­தேசம் நம்­பி­யது. ஆனால் நடந்­த­தென்ன எல்லா வாக்கு­று­தி­களும் நம்­பிக்­கை­களும் பூஜ்­ஜி­ய­மா­கி­யது. புதி­தாக வந்த தேசிய அர­சாங்­க­மா­னது மஹிந்­தவை மறை­மு­க­மாக தேசி­ய­த­லை­வ­ரா­கவும் பேரி­ன­வா­தத்தின் மாவீ­ர­ரா­கவும் ஆக்க முயற்­சித்­ததே தவிர தமிழ் மக்­களின் இழப்­பு­க­ளுக்கு ஈடு­கட்டும் எந்த கைங்­க­ரி­யத்­தையும் துணிச்­ச­லுடன் விரை­வா­கவும் செய்­வ­தற்கு முயற்சி செய்யவில்லை என்­பதே தமிழ் மக்கள் புதிய அர­சாங்­கத்தின் மீது காணும் குறை­பா­டாக உள்­ளது.

இவ்­வா­றான ஒரு சூழ்­நி­லை­யில்தான் நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் குட்டி பாரா­ளு­மன்ற தேர்­த­லாக இருக்கும். மஹிந்த தரப்­பினர் இன்­னு­மொரு பெயரில் கூறு­வ­தானால் தாமரை மொட்டு அதிக சபை­களை வெற்றி கொள்­ளு­மாயின் நிலை­மைகள் எவ்­வாறு மாறும் என்­ப­தற்கு ஆருடம் கூற­மு­டி­யாத ஒரு இக்­கட்­டான நிலையே காணப்­ப­டு­கின்­றது.

மஹிந்த தரப்­பினர் கையாளும் பெரி­ய­தொரு ஆயு­த­மாக தற்­போது காணப்­ப­டு­வது புதி­ய­அ­ர­சி­ய­ல­மைப்பு சாச­ன­மாகும். தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான எம்.ஏ. சுமந்­திரன் வடக்­குக்கு சென்று புதிய அர­சி­ய­ல­மைப்­பி­னூ­டாக சமஷ்டி உத­ய­மாகும் என்றும் பௌத்த தேரர்­களை ஏமாற்­று­வ­தற்­கா­கவே பௌத்­தத்­திற்கு முன்­னு­ரிமை வழங்­கப்­பட்­டுள்­ளது என்றும் பிர­சாரம் செய்து வரு­கிறார். இவ்­வி­ட­யத்­தில்­கூட தமி­ழர்­க­ளுக்கு ஒன்­றையும் சிங்­க­ள­வர்­க­ளுக்கு ஒன்­றை­யுமே இந்த அரசு கூறி ஒட்­டு­மொத்த சிங்­கள மக்­க­ளையும் ஏமாற்றி வரு­கின்­றது.

இந்­நி­லையில் தாமரை மொட்டு சின்­னத்­துக்கு வாக்­க­ளிப்­பதில் நாட்டின் வெற்­றியே தங்­கி­யுள்­ளது என மஹிந்த ராஜபக் ஷ அண்­மையில் அர­சாங்­கத்தை சாடி­யுள்ளார். இவரின் ஆவே­சத்­தின்­படி கூட்­ட­மைப்பின் தலை­வர்கள் மீது இவ­ருக்­கு­இ­ருக்கும் விசனம் வெளிப்­ப­டை­யா­கவே தெளி­வு­ப­டுத்­து­கி­றது.

உர­லுக்கு ஒரு பக்க இடி மத்­த­ளத்­துக்கு இரு பக்க இடி­யென்­ப­து­போல மஹிந்­த­த­ரப்­பி­னரும் இன­வா­தி­களும் காட்டும் மூர்க்­கத்­த­ன­மான சினத்தை இதி­லி­ருந்து புரிந்து கொள்­ளக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. சுமந்­திரன் தமிழ் மக்­க­ளுக்கு தெரி­விக்க வேண்­டிய உண்­மையை தெளி­வு­பட­வே­கூறி வரு­கின்றார். அதே­வேளை சிங்­கள தலை­வர்­க­ளுக்கு யதார்த்­தத்தை சொல்ல வேண்­டிய கடப்­பா­டு­அ­வ­ருக்­கு­ரிய தார்­மீ­க­பொ­றுப்­பாகும்.

நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி தேர்­த­லா­னது தெற்கில் ஐக்­கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி, மஹிந்த அணி­யென்ற முத்­த­ரப்­பி­ன­ரு­டைய பலத்தை பரி­சீ­லித்துப் பார்க்கும் தேர்­த­லாக இருக்கப் போகின்­றதோ என்­னவோ, வட­கி­ழக்கை பொறுத்­த­வரை அது தமிழ் தேசி­ய­கூட்­ட­மைப்­புக்கு மீண்டும் ஒரு பலத்தை நல்­கு­வ­தற்கோ ஆணையை பெற்று தரு­வ­தற்கோ உரி­ய­தேர்­த­லா­கவே எண்­ணப்­ப­டு­கின்­ற­தென்­பது சாலப் பொருத்­த­மான கருுத்­தாகும்.

உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் பிர­தே­சத்தின் அபி­வி­ருத்தி மற்றும் முன்­னேற்­றங்­களில் நேர­டி­யாக பங்கு கொள்ளும் சபை­க­ளாக பார்க்­கப்­பட்­டாலும் கூட அது இன்­னொரு வகையில் நேர­டி­யாக கிராம மக்­களோ அல்­லது பிர­தேச மக்­களோ தங்­க­ளது அபி­லா­ஷை­க­ளையும் அதி­ருப்­தி­க­ளையும் வெளிப்­ப­டுத்தும் ஒரு குட்டி தேர்தல் என்ற வகையில் முக்­கியம் பெற்­ற­தா­கவே காணப்­ப­டு­கின்­றது.

அரச பயங்­க­ர­வா­தத்தின் அச்­ச­றுத்தல் என்­றுமே இல்­லாத ஊழல் குற்­றச்­சாட்­டுக்கள், அரச சொத்­துக்­களை தனி­யா­ருக்கும் வெளி­நா­டு­க­ளுக்கும் விற்­பனை செய்­கி­றார்கள். நாட்டின் அபி­வி­ருத்தித் திட்­டங்கள் முடக்­கப்­ப­டு­கி­ன்றன. முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தில்லை. அத்­துடன் உள்­நாட்டுப் பொரு­ளா­தாரப் பிரச்­சி­னை­க­ளான அரி­சித்­தட்­டுப்­பாடு, தேங்காய் விலை­யேற்றம், வரி அதி­க­ரிப்பு என நாடே தலை­கீ­ழாக மாறிக் கொண்­டி­ருக்­கிற நிலையில் தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்­களை வீட்­டுக்கு அனுப்ப வேண்டும் என பொது­ எ­தி­ர­ணி­யினர் கோரி­வ­ரு­கின்­றனர். ஆளும் அர­சாங்­கத்தின் மீது குற்­றச்­சாட்­டுக்­களை அடுக்கி மக்­க­ளுக்கு இவ்­வாட்­சி­பற்றி தாறு­மா­றான பிர­சா­ரங்­களை எதி­ர­ணி­யினர் செய்து வரு­கின்­றார்கள் அது­வு­மன்றி பிணை­முறி தொடர்­பாக வெளிக்­கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருக்கும் அறிக்­கை­களும் வதந்­தி­களும் ஆளும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் சுதந்­தி­ரக்­கட்­சிக்கும் பாரிய பின்­ன­டை­வு­களை ஏற்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்­றன. அது­வு­மின்றி வெளிநாட்டு கொள்கை வர்த்­தகம் தொடர்­பிலும் கடு­மை­யான விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. இவ்­வா­றான தொகு­தி­நி­லையில் பொதுத் தேர்­தலை வெற்றி கொண்­டதைப் போலவோ அல்­லது ஜனா­தி­பதி தேர்­தலை வாகை கொண்­டது மாதி­ரியோ உள்­ளூ­ராட்சி தேர்­தலில் ஆளும் அர­சாங்கம் தன்னை நிலை­நி­றுத்த முடி­யுமா என்ற கேள்வி மக்கள் மத்­தியில் மாத்­தி­ர­மின்றி கட்­சியின் தலை­மைப்­பீ­டங்கள் மத்­தி­யிலும் ஆத­ர­வா­ளர்கள் மத்­தி­யிலும் இருக்­கத்தான் செய்­கி­றது.

இவை­யெல்­லா­வற்­றையும் ஒப்­பிட்­டுப்­பார்க்­கின்ற போது மஹிந்த ராஜபக் ஷவை முதன்­மைப்­ப­டுத்தும் கட்­சி­யாக தோற்றம் பெற்­றி­ருக்கும் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன என்­பது அடிப்­ப­டை­வா­தி­களும் இன­வா­தி­களும் ஒன்­றி­ணைந்து உரு­வாக்­கிய புதிய இன­வாத தலை­மு­றைக்­கட்­சி­யா­கவே தமிழ் மக்­களால் பார்க்­கப்­ப­டு­கி­றது.

ஏலவே இந்­நாட்டில் பல இன­வா­தி­களும் அடிப்­ப­டை­வா­தி­களும் காலத்­துக்கு காலம் தோன்றி தமிழ் மக்­க­ளுக்கு விரோ­த­மாக நடந்­துள்­ளார்கள் என்­பது வர­லாற்றில் தமி­ழர்கள் கற்­றுக்­கொண்ட பாடங்­க­ளாகும். ஆர்.ஜி.சேன­நா­யக்கா, கே.எம்.பி.ராஜ­ரட்ன என மூத்த இன வாதத் தலை­வர்­களின் வழியில் அண்­மைக்­கா­ல­மாக பல ­இ­ன­வாத அமைப்­பு­களும் கட்­சி­களும் உரு­வா­கியும் உரு­வாக்­கப்­பட்டும் தமிழ் மக்­க­ளுக்­கெ­தி­ரான விரோத சக்­தி­யாக செயற்­பட்­டார்கள் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றார்கள் இதற்கு உதா­ர­ணந்தான் பொது­ப­ல­சேனா ஜாதி­க ­ஹெ­ல­ உ­று­மய, பொது சவிய, தேச­பற்­றுள்ள தேசிய இயக்கம், ஜாதி­க­பல­சேனா, சிங்­கவே சிங்­க­ள­ரா­வய, ராவ­ண­ப­லய, என்­பன இந்த வரி­சையில் தற்­பொ­ழுது தாம­ரை­மொட்டு சின்­னத்தை அடை­யா­ள­மாக கொண்டு பொதுஜன­ பெ­ர­முன உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

இலங்­கை­யி­லுள்ள தேசிய கட்­சி­க­ளா­யினும் சரி அல்­லது தேசிய இயக்­கங்­க­ளா­யினும் சரி இன­வாதம் அடிப்­படை வாதம், மத­வாதம் என்ற கட்­டு­மா­னத்­தி­லி­ருந்தே இவை உரு­வா­கி­யுள்­ளன என்­பவை பொது­வான வர­லாற்று உண்மை. இதன் அடுத்­த­கட்ட பிடிப்­பா­கவே மேலே குறிப்­பிட்ட இன­வா­த­கட்­சி­களும் அமைப்­புக்­களும் தோற்றம் பெற்­றன. குறிப்­பாக யுத்­தமே முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டு­விட்­டது என ­அ­ர­சாங்கம் தம்­பட்டம் அடிதத்த நிலையில் இவ்­வா­றான அமைப்­புக்கள் தமிழ் விரோத சக்­தி­க­ளாக உரு­வா­கின.

இந்த வரி­சையில் புதி­தாக உரு­வா­கி­யி­ருக்கும் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன என்­பது உருப்­ப­டி­யாக பிறப்­ப­தற்கு முன்­னமே இன­வாத தத்­து­வத்தை மூல­த­ன­மா­க­கொண்டு செயற்­பட போகின்­ற­தென்­ப­தற்கு உதா­ர­ணந்தான் தாமரை மொட்டா, தனி­ஈ­ழமா என்ற இன­வா­தத்தை இந்தக் கட்சி கக்­கி­யி­ருப்­ப­தாகும்.

இனவாதமென்பது இலங்கையில் அது காலாகாலமாகவே வந்த விவகாரம். இந்த நெருக்கடியும் சவாலும் நிறைந்த சூழ்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டுமொரு ஆணையை வழங்க வடகிழக்கு தமிழ் மக்கள் அறிவுபூர்வமாகவும் நிதானமாகவும் தேர்தலை பயன்படுத்த வேண்டும்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-09#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.