Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

19 வயதின் கீழ் உலகக் கிண்ண கிரிக்கெட் ஆரம்ப விழா

Featured Replies

19 வயதின் கீழ் உலகக் கிண்ண கிரிக்கெட் ஆரம்ப விழா

நியூ­ஸி­லாந்தில் இவ் வார இறு­தியில் ஆரம்­ப­மா­க­வுள்ள 19 வய­துக்­குட்­பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டிக்­கான உத்­தி­யோ­க­பூர்வ அங்­கு­ரார்ப்­பண நிகழ்வு நியூ­ஸி­லாந்து கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் டெபி ஹொக்லி தலை­மையில் நேற்று முன்தினம் நடை­பெற்­றது.

Team-captains.jpg
இப் போட்­டியில் பங்­கு­பற்றும் 16 நாடு­க­ளி­னதும் வீரர்­களும், க்றைஸ்ட்சேர்ச் மாந­கர சபை உறுப்­பினர் ஆரொன் கெயோனும் இந் நிகழ்வில் கலந்­து­கொண்­டனர். நியூ­ஸி­லாந்தின் கலா­சா­ரத்தைப் பிர­தி ப­லிக்கும் மயோரி நட­னமும் இடம்­பெற்­றது.

‘‘சர்வ­தேச கிரிக்கெட் அரங்கில் தொழில்சார் வீரர்­களை உரு­வாக்­கு­வதில் 19 வய­துக்­குட்­பட்ட உலகக் கிண்ணப் போட்டி முக்­கிய பங்­காற்­று­கின்­றது.

 

தோழமை, ஒழுக்கம், தலை­மைத்­துவம், அழுத்­தத்­திற்கு மத்­தியில் விளை­யா­டுதல் ஆகிய பெறு­ம­தி­மிக்க பண்­பு­களை இப் போட்டி கற்­பிக்­கின்­றது. அதற்கும் மேலாக விளை­யாட்­டின்பால் உள்ள ஆர்­வத்தைப் போற்றும் தன்­மை­யையும் இப்போட்டி கொண்­டுள்­ளது’’ என டெபி ஹொக்லி தெரி­வித்தார்.

Hockley.jpg
19 வய­துக்­குட்­பட்ட உலகக் கிண்ண வர­லாற்றில் பங்­கு­பற்றும் நாடு­களின் பங்­க­ளிப்­புடன் ஆரம்ப விழா ஒன்று நடத்­தப்­பட்­டது இதுவே முதல் தட­வை­யாகும்.

இது குறித்து பேசிய போட்டி ஏற்­பாட்டுக் குழுப் பணிப்­பாளர் ப்றெண்டன் பேர்க், ‘‘இதற்கு முன்னர் நடை­பெற்ற சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) 19 வய­துக்­குட்­பட்ட உலகக் கிண்ணப் போட்­டிக்கு முன்னர் 16 நாடு­களும் பங்­கு­பற்­றிய ஆரம்ப விழா ஒன்று நடை­பெற்­ற­தில்லை. எனவே நாங்கள் இந்த சந்­தர்ப்­பத்தை அதற்­காகப் பயன்ப­டுத்­திக்­கொண்டோம். அதன் மூலம் இளைய வீரர்­க­ளுக்கு ஒரு சிறந்த, நினைவில் நீங்காத சந்­தர்ப்­பத்தை உரு­வாக்கிக் கொடுத்தோம்’’ என்றார்.

இந்த வைப­வத்தில் கருத்து வெளி­யிட்ட இலங்­கையின் 19 வய­துக்­குட்­பட்ட அணித் தலைவர் கமிந்து மெண்டிஸ்,
‘‘நாங்கள் 19 வய­துக்­குட்­பட்ட உலகக் கிண்­ணத்தை வென்­ற­தில்லை. இவ் வருட உலகக் கிண்ணம் (தொடரில் வெற்­றி­பெ­று­வது) எமது நாட்­டிற்கு பெரும் உற்­சா­கத்தைக் கொடுக்கும் என நாங்கள் எண்­ணு­கின்றோம். எமது அணி மிகச் சிறந்­தது என்­ப­துடன் சிறப்­பா­கவும் விளை­யாடி வரு­கின்­றது.

kamindu-mendis.jpg

எனவே இம் முறை வெற்­றி­பெ­ற­வேண்டும் என பெரு­வா­ரி­யாக விரும்­பு­கின்றோம். எம்­மிடம் சில புதிய திட்­டங்கள் உள்­ளன. இப் போட்­டியை முன்­னிட்டு கடந்த இரண்டு மாதங்­க­ளாக எங்­களை ஆயத்தம் செய்­த­போது நாங்கள் சரி­யா­ன­வற்றை வெளிப்­ப­டுத்­தினோம். அதனை இந்த உலகக் கிண்ணப் போட்­டி­யிலும் செய்­து­காட்­ட­வேண்டும்’’ என்றார்.

19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பமாகி பெப்ரவரி 3ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியுடன் நிறைவுபெறுகின்றது.

http://metronews.lk/?p=19870

  • தொடங்கியவர்

ஜீனியர் கிரிக்கெட் முதலாவது போட்டியில் நியூசிலாந்து வெற்றி

 

ஜீனியர் கிரிக்கெட் முதலாவது போட்டியில் நியூசிலாந்து வெற்றி


ஜீனியர் கிரிக்கெட் உலக கிண்ண ஏ பிரிவுக்கான முதலாவது போட்டியில் மேற்கிந்தியா அணியை நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஜீனியர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இன்று நியூசிலாந்தில் ஆரம்பமாகியுள்ளது. இப்போட்டிகளில் பங்கு பற்றவுள்ள 16 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மவுன்ட் மயுங்கனுய் மைதானத்தில் இடம்பெற்ற ஏ பிரிவுக்கான போட்டியில் நியூசிலாந்து மற்றும் மேற்கிந்தியா அணிகள் மோதியுள்ளன.

முதலில் களமிறங்கிய மேற்கிந்தியா அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 233 ஓட்டங்களை பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில்  மேற்கிந்தியா அணி சார்பில் கேகன் சிம்மன்ஸ் 132 பந்துகளில் 92 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய  நியூசிலாந்து அணி 39.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 234 ஓட்டங்களை பெற்று 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நியூசிலாந்து அணி சார்பில் 100 பந்துகளில் 115 ஓட்டங்களை பெற்ற பென் அலென் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 

ஜீனியர் கிரிக்கெட் முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி!

 

ஜீனியர் கிரிக்கெட் முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி!


ஜீனியர் கிரிக்கெட் உலக கிண்ண டி பிரிவுக்கான முதலாவது போட்டியில் பாக்கிஸ்தான் அணியை ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஜீனியர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இன்று நியூசிலாந்தில் ஆரம்பமாகியுள்ளது. இப்போட்டிகளில் பங்கு பற்றவுள்ள 16 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று வாங்கறை மைதானத்தில் இடம்பெற்ற டி பிரிவுக்கான போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தான் அணிகள் மோதியுள்ளன.

முதலில் களமிறங்கிய பாக்கிஸ்தான் அணி 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 188 ஓட்டங்களை பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் பாக்கிஸ்தான் அணி சார்பில் றொகெல் நஸிர் 105 பந்துகளில் 81 ஓட்டங்களை பெற்றுள்ளார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 47.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து போட்டியில் 5 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது. இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் டர்விஸ் ரசூலி 78 பந்துகளில் 76 ஓட்டங்களை கூடுதலாக பெற்றுள்ளார். மேலும் ஆட்ட நாயகனாகவும் டர்விஸ் ரசூலி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

 

 

ஜீனியர் கிரிக்கெட் முதலாவது போட்டியில் பங்களாதேஸ் வெற்றி

 

ஜீனியர் கிரிக்கெட் முதலாவது போட்டியில் பங்களாதேஸ் வெற்றி


ஜீனியர் கிரிக்கெட் உலக கிண்ண சி பிரிவுக்கான முதலாவது போட்டியில் நமிபியா அணியை பங்களாதேஸ் அணி 87 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஜீனியர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இன்று நியூசிலாந்தில் ஆரம்பமாகியுள்ளது. இப்போட்டிகளில் பங்கு பற்றவுள்ள 16 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று லிங்கொயின் மைதானத்தில் இடம்பெற்ற சி பிரிவுக்கான போட்டியில் நமிபியா மற்றும் பங்களாதேஸ் அணிகள் அணிகள் மோதியுள்ளன. மேலும் போட்டி மழை காரணமாக 20 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

முதலில் களமிறங்கிய பங்களாதேஸ் அணி 20  ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 190 ஓட்டங்களை பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் பங்களாதேஸ் அணி சார்பில் சகிப் ஹாசன் 48 பந்துகளில் 84 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய  நமிபியா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 103 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளது. இப்போட்டியில் நமிபியா அணி சார்பில் எபின் வான்  52 பந்துகளில் 55 ஓட்டங்களை கூடுதலாக பெற்றுள்ளார். இதனால் போட்டியில் பங்களாதேஸ் அணி 87 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. மேலும் ஆட்ட நாயகனாக பங்களாதேஸ் அணியின் சகிப் ஹாசன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

 

 

 

 

ஜீனியர் கிரிக்கெட் முதலாவது போட்டியில் ஜிம்பாபே வெற்றி

 

ஜீனியர் கிரிக்கெட் முதலாவது போட்டியில் ஜிம்பாபே வெற்றி


ஜீனியர் கிரிக்கெட் உலக கிண்ண பி பிரிவுக்கான முதலாவது போட்டியில் பப்புவா நியு கினியா அணியை ஜிம்பாபே அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஜீனியர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இன்று நியுசிலாந்தில் ஆரம்பமாகியுள்ளது. இப்போட்டிகளில் பங்கு பற்றவுள்ள 16 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று லிங்கொயின் மைதானத்தில் இடம்பெற்ற பி பிரிவுக்கான போட்டியில் பப்புவா நியு கினியா மற்றும் ஜிம்பாபே அணிகள் மோதியுள்ளன. மேலும் போட்டி மழை காரணமாக 20 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

முதலில் களமிறங்கிய பப்புவா நியு கினியா அணி 20  ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 95 ஓட்டங்களை பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் பப்புவா நியு கினியா அணி சார்பில் மகிறு 26 பந்துகளில் 26 ஓட்டங்களை பெற்றுள்ளார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய  ஜிம்பாபே அணி 14 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி போட்டியில் 10 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது. இப்போட்டியில் ஜிம்பாபே அணி சார்பில் வெஸ்லி மதவீர 44 பந்துகளில் 53 ஓட்டங்களை கூடுதலாக பெற்றுள்ளார். மேலும் ஆட்ட நாயகனாகவும் வெஸ்லி மதவீர தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

https://news.ibctamil.com

  • தொடங்கியவர்

ஜீனியர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி

 

ஜீனியர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் மோதிய ஜீனியர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஜீனியர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நேற்று நியூசிலாந்தில் ஆரம்பமாகியுள்ளது. இப்போட்டிகளில் பங்கு பற்றவுள்ள 16 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று வயங்கரை மைதானத்தில் இடம்பெற்ற டி பிரிவுக்கான போட்டியில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் மோதியுள்ளன.மேலும் போட்டி மழை காரணமாக 48 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி 48 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 206 ஓட்டங்களை பெற்றுள்ளது. போட்டியில் அயர்லாந்து அணி சார்பில் ஜெமி கிறாஸி 117 பந்துகளில் 75 ஓட்டங்களை கூடுதலாக பெற்றுள்ளார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 37.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 207 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றிபெற்றுள்ளது. இலங்கை அணி சார்பில் லக்சன் 120 பந்துகளில் 101 ஓட்டங்களை கூடுதலாக பெற்றுள்ளார். மேலும் போட்டியின் ஆட்டநாயகனாக லக்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜீனியர் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி

 

ஜீனியர் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி

தென்னாபிரிக்கா மற்றும் கென்யா அணிகள் மோதிய ஜீனியர் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றிபெற்றுள்ளது.

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஜீனியர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நேற்று நியூசிலாந்தில் ஆரம்பமாகியுள்ளது. இப்போட்டிகளில் பங்கு பற்றவுள்ள 16 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று வயங்கரை மைதானத்தில் இடம்பெற்ற ஏ பிரிவுக்கான போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் கென்யா அணிகள் மோதியுள்ளன.

இந்நிலையில் முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 341 ஓட்டங்களை பெற்றுள்ளது. போட்டியில் தென்னாபிரிக்கா அணி சார்பில் ரொண்டர் 121 பந்துகளில் 143 ஓட்டங்களை கூடுதலாக பெற்றுள்ளார்.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய கென்யா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 172 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தென்னாபிரிக்கா அணியிடம் 169 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது. போட்டியில் கென்யா அணி சார்பில் ஜெஸ்ராஜ் 53 பந்துகளில் 41 ஓட்டங்களை கூடுதலாக பெற்றுள்ளார். மேலும் போட்டியின் ஆட்டநாயகனாக தென்னபிரிக்கா அணியின் ரொண்டர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

https://news.ibctamil.com/

 

 

U19 உலகக்கோப்பை கிரிக்கெட்: 100 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

 
அ-அ+

U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்தியா அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. #U19cwc #U19worldcup #INDvAUS

 
U19 உலகக்கோப்பை கிரிக்கெட்: 100 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா
 
 
 
 
வெல்லிங்டன்:
 
U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நேற்று தொடங்கியது. இன்றைய தினம் நான்கு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. ‘டி’ பிரிவின் லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன.
 
இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பிரித்வி ஷா பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷாவும், மன்ஜோத் கல்ராவும் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பிரித்வி ஷா 100 பந்துகளில் 94 ரன்கள் (8 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 180 ரன்கள் சேர்த்தது.
 
அவரைத்தொடர்ந்து கல்ராவும் 86 ரன்கள் (99 பந்து, 12 பவுண்டரி, ஒரு சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ஷுப்மன் கில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றவர்கள் பெரிதாக ரன்குவிக்க தவறியதையடுத்து இந்தியா, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 328 ரன்கள் எடுத்தது. கம்லேஷ் நகர்கோட்டி 11 ரன்களுடனும், ஆர்யன் ஜுயால் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
 
201801141356075192_1_u19-indiawin-shah._L_styvpf.jpg
 
ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சில் ஜாக் எட்வர்ட்ஸ் நான்கு விக்கெட்களும், வில் சுதர்லாண்ட், பரம் உப்பல், ஆஸ்டின் வாக் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணி 329 ரன்களை ஆஸ்திரேலியா அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. 
 
இதையடுத்து ஆஸ்திரேலியா அணி இன்னிங்சை தொடங்கியது, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் எட்வட்சும், மேக்ஸ் பிரயண்டும் களமிறங்கினர். எட்வர்ட்ஸ் நிலைத்துநின்று விளையாடினார். எதிர்முனையில் விளையாடிய மெக்ஸ் பிரயண்ட் 29 ரன்களிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜேசன் சங்கா 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் எட்வட்சுடன், ஜொனதன் மெர்லோ ஜோடி சேர்ந்தார்.  
 
சிறப்பாக விளையாடிய எட்வர்ட்ஸ் அரைசதம் அடித்தார். மெர்லோ சற்று நிலைத்துநின்று ஆடி 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்தவர்கள் இந்திய அணியினரின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பரம் உப்பல் 4 ரன்களிலும், ஆஸ்டின் வாக் 6 ரன்களிலும், வில் சுதர்லாண்ட் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடிய ஜாக் எட்வர்ட்ஸ் 73 ரன்களில் ஆட்டமிழந்தார். 
 
201801141356075192_2_u19-indiawin1._L_styvpf.jpg
 
சேவியர் பார்லெட் 7 ரன்களிலும், ஜேசன் ரால்ட்சன் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பேக்ஸ்டர் ஹோல்ட் நிதானமாக விளையாடி39 ரன்கள் எடுத்து இறுதி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா அணி 42.5 ஓவர்களில் 228 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #U19cwc #U19worldcup #INDvAUS

http://www.maalaimalar.com/News/TopNews/2018/01/14135608/1140219/U19worldcup-India-beat-Australia-by-100-runs.vpf

  • தொடங்கியவர்

#U19 உலகக்கிண்ணம் : முதல் போட்டியில் இலங்கை அபார வெற்றி

 

19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை அபார வெற்றி கொண்டது.

Dhananjaya-Lakshan.jpg

19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் இடம்பெற்று வருகின்றது.

 

இந்நிலையில் இன்று குழு “டி” யில் இடம்பெற்றிருந்த இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின.

 

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. 

 

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய அயர்லாந்து அணி, 48 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்களைப் பெற்றது.

 

அயர்லாந்து அணி சார்பாக கிரேஸி 75 ஓட்டங்களையும் டொன்கன் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

 

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக கமிந்து மென்டிஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

பதிலுக்கு 208 ஓட்டங்களைப்பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இளம் இலங்கை அணி, ஆரம்பத்துடுப்பட்ட வீரரான லக்ஷனின் சதத்தின் உதவியுடன் 3 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை அடைந்து 7 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றது.

 

இலங்கை அணிசார்பாக துடுப்பாட்டத்தில் அசத்திய லக்ஷசன் ஆட்டமிழக்காது 101 ஓட்டங்களையும் கமிந்து மென்டிஸ் ஆட்டமிழக்காது 74 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

அயர்லாந்து அணி சார்பாக கௌலி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இப் போட்டியின் ஆட்டநாயகனாக லக்ஷன் தெரிவுசெய்யப்பட்டார்.

http://www.virakesari.lk/article/29385

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.