Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இயற்கை தேவைக்காகவே ஜனாதிபதி வெளியேறினார் : அமைச்சரவை சர்ச்சை தொடர்பில் பேச்சாளர்கள் விளக்கம்

Featured Replies

இயற்கை தேவைக்காகவே ஜனாதிபதி வெளியேறினார் : அமைச்சரவை சர்ச்சை தொடர்பில் பேச்சாளர்கள் விளக்கம்

IMG7765-629165f245d7fe9ef7f08f6adbb67cea1ef5e430.jpg

 

(ரொபட் அன்டனி)

அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இயற்கை தேவையை நிறைவுசெய்யவே ஆசனத்திலிருந்து எழுந்து சென்றார். மாறாக கோபப்பட்டு வெளிநடப்புச் செய்யவில்லை. இயற்கை கடமை எல்லோருக்கும் வரும் என்று இணை அமைச்சரவை பேச்சாளர்களான ராஜித சேனாரட்ன மற்றும் தயாசிறி ஆகி யோர் தெரிவித்தனர்.

அத்துடன் இதன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் எம்.பி.க்கள் ஜனாதிபதியை விமர் சிக்காத வகையில் பொறுப்புக்கூறுவதாக பிரதமர் உறுதியளித்தார். சுதந்திரக் கட்

சியினர் குறித்து ஜனாதிபதியும் அந்த விடயத்தில் உறுதியளித்தார் என்றும் அமைச்சரவை பேச்சாளர்கள் குறிப்பிட்டனர்.  

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெ ளியிடுகையிலேயே அவர்கள் மேற்கண்டவாறு கூறினர்.

அமைச்சரவை பேச்சாளர் ராஜித்த சேனாரட்ன மேலும் குறிப்பிடுகையில்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டத்தட்ட காரசாராமான உரையை உரையாற்றிவிட்டு எழுந்து சென்றார். ஆனால் அவர் எழுந்து சென்றது இயற்கைத் தேவையை நிறைவுசெய்வதற்காவேயாகும். மாறாக அவர் கோபித்துக்கொண்டு வெளியேறிச்செல்லவில்லை. இயற்கைத் தேவை வந்தால் யாரும் எழுந்து செல்வார்கள். அதைத்தான் ஜனாதிபதியும் செய்தார்.

கேள்வி: அப்படியானால் நீங்கள் ஏன் ஜனாதிபதியின் பின்னால் சென்றீர்கள்?

பதில்: எனக்கும் இயற்கைத் தேவை வந்துவிட்டது. அதனால்தான் நானும் சென்றேன்.

கேள்வி: அமைச்சரவைக் கூட்டத்தில் என்னதான் நடந்தது?

பதில்: நீங்கள் எதிர்பார்க்கும் வகையில் எந்தப்பிரச்சினையும் நடக்கவில்லை. அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஜனாதிபதி ஒருசில விமர்சனங்கள் தொடர்பில் கூற்று ஒன்றை வெளியிட்டார். வழமையாக யாரும் கூற்று வெளியிடுவார்கள். அதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் இடமிருக்கிறது.

கேள்வி: ஜனாதிபதி தேசிய அரசாங்கம் வேண்டுமா? வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்குமாறு கூறிவிட்டு ஜனாதிபதி எழுந்து சென்றதாக கூறப்படுகின்றதே?

பதில்: அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. அமைச்சரவைக்கூட்டம் என்பது ஜனநாயக ரீதியில் நடக்கும். அங்கு விருப்பம், விருப்பமின்மை என்பன நடக்கும். ஜே.ஆர். ஜயவர்த்தன ஜனாதிபதியாக இருக்கும்போது இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு அப்போதைய பிரதமரான ரணசிங்க பிரேமதாஸ எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது விருப்பமில்லாவிடின் வெளியில் செல்லுமாறு ஜே.ஆர். கூறிவிட்டார். பிரேமதாஸவும் வெளியே சென்றுவிட்டார். பின்னர் அவர் ஜனாதிபதியாகவும் வந்தார்.

கேள்வி: ஜனாதிபதி என்னதான் பேசினார்?

பதில்: ஜனாதிபதியை சில தினங்களாக சில எம்.பி.க்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர். அதனையே ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். பொதுவாக ஜனாதிபதியை யாரும் அவ்வாறு விமர்சிக்கக்கூடாது. ஆனால் கடும் விமர்சனங்கள் கடந்த சில தினங்களில் முன்வைக்கப்பட்டன.

கேள்வி: ஜனாதிபதி யாரை ஏசினார்.?

பதில்: ஜனாதிபதி அரசியல்வாதிகளைத்தான் ஏசினார். ஊடகவியலாளர்களை ஏசவில்லை. பிணைமுறி குறித்து ஜனாதிபதி பேசினார். அதாவது குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவானது ஐக்கிய தேசியக்கட்சியை இலக்குவைத்து கொண்டுவரப்பட்டதல்ல என்பதை ஜனாதிபதி எடுத்துக்கூறினார். இங்கு 11 பில்லியன் நட்டம் குறித்து பேசப்படுகின்றது. ஆனால் பெப்பர்ச்சுவல் நிறுவனத்தின் 12 பில்லியன் ரூபா மத்திய வங்கியிடம் இருக்கிறது. எனினும் 2008ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை 4000 ஆயிரம் பில்லியன் மோசடி செய்யப்பட்டுள்ளது. அதை யாரிடம் போய் பேசுவது?

கேள்வி: அர்ஜுன மகேந்திரனை ஆளுநராக நியமிக்கும்போது ஜனாதிபதி எதிர்தாராமே?

பதில்: ஆம் அதற்கு அவர் எதிர்ப்பு வெளியிட்டார். நானும் எதிர்ப்பு வெளியிட்டேன்.

கேள்வி: அப்படியானால் ஏன் அவரை நியமித்தீர்கள்?

பதில்: யாரும் தவறு செய்வார்கள் என்று எதிர்வுகூறமுடியாது.

கேள்வி: அமைச்சரவைக்கூட்டத்தின் இறுதியில் என்ன நடந்தது?

பதில்: ஐ.தே.க. எம்.பி.க்கள் இதன் பின்னர் ஜனாதிபதியை விமர்சிக்காதவாறு பார்த்துக்கொள்வதாக பிரதமர் கூறினார். அத்துடன் என்னை ரவிகருணாநாயக்கவுடன் பேசுமாறு கூறினார். சுதந்திரக்கட்சி எம்.பி.க்கள் பிரதமரை விமர்ச்சிக்காதவாறு பார்த்துக்கொள்வதாக ஜனாதிபதியும் கூறினார். ஆனால் ஜனாதிபதி எழுந்து சென்றது இயற்கை தேவையை நிறைவேற்றுவதற்காகவேயாகும்.

கேள்வி: ஜனாதிபதி கடந்த காலத்தில் பாரிய விமர்சனங்களை தாங்கிக்கொண்டிருந்தவர். ஐ.தே.க. வின் இளம் எம்.பி.க்களின் விமர்சனத்தை தாங்க முடியாமல்போய்விட்டதா?

பதில்: ஐ.தே.க. எம்.பி.க்கள் பாவித்த சில வார்த்தைப் பிரயோகங்கள் வேதனையைத் தந்திருக்கின்றது. இங்கு பாம்பையும், கீரிப்பிள்ளையையும் போன்ற இரண்டு கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கின்றன. எனவே இங்கு பிரச்சினைகள் ஏற்படுவது சகஜம். உலகில் ஜேர்மன், ஒஸ்டியா, இலங்கை ஆகிய நாடுகளிலேயே தேசிய அரசாங்கம் நடைமுறையில் உள்ளன. வேறு எங்கும் இல்லை. எமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த தேசிய அரசாங்கம் என்றால் என்னவென்று தெரியவில்லை. அதனால் கடும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். இதனால் சில சிக்கல்கள் அரசாங்கத்திற்கு ஏற்படுகின்றன. விமர்சனம் முன்வைப்பதால் கட்சிகளுக்குப் பிரச்சினை இல்லை. மாறாக அரசாங்கத்திற்கே பிரச்சினை ஏற்படுகின்றது. இரண்டு தரப்பினரும் யார் யாரை ஏசிக்கொண்டாலும் அது அரசாங்கத்தையே பாதிக்கும். மாறாக மஹிந்த ராஜபக்ஷவினால் எந்தப் பிரச்சினையும் இல்லை. முன்னைய ஆட்சியாளர்கள் செய்த கொலை, கொள்ளை தொடர்பில் யாரும் பேசுவதில்லை. மாறாக எமது உறுப்பினர்களே செய்துகொள்ளும் விமர்சனங்களை அரசாங்கத்தினைப் பாதிக்கின்றன.

கேள்வி: மரிக்கார் எம்.பி. பிட்பொக்கட் என்ற வார்த்தையை பிரயோகித்தமை சரியானதா?

பதில்: அது சரியில்லாத வார்த்தைப் பிரயோகம்தான், மஹிந்த காலத்தில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தால் கோத்தா தான் பதிலளித்திருப்பார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-18#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.