Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிணைமுறி, இலஞ்ச ஊழல் மோசடி அறிக்கைகள் சபாநாயகரிடம் கையளிப்பு

Featured Replies

பிணைமுறி, இலஞ்ச ஊழல் மோசடி அறிக்கைகள் சபாநாயகரிடம் கையளிப்பு

p21-481fa17d2c545c5946226b2710468e79558a8c51.jpg

 

 22 ஆம் திகதி கட்சித்தலைவர்கள் கூட்டம்
(ஆர்.ராம்)

இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறிகள் விற்பனை தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை, பாரிய இலஞ்ச ஊழல் மோசடிகள் சம்பந்தமான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை ஆகியன சபாநாயகர் கருஜயசூரியவிடத்தில் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கைகள் குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக எதிர்வரும் 22ஆம் திகதி காலை 9.30இற்கு கட்சித்தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவித்த சபாநாயகர் கருஜெயசூரிய 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் உத்தியோக பூர்வமாக சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அறிக்கைளை விரைவாக மொழிபெயர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரச மொழி திணைக்களத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கவுள்ளதோடு பிரதிகளை அச்சடிப்பதற்காக அரச அச்சகத்தலைவருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

அணைக்குழவின் அறிக்கைகள் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர் நேற்று புதன்கிழமை பாரர்ளுமன்றத்தில் உள்ள முதலாவது குழவறையில் சபாநாயகர் கருஜெயசூரிய தலைமையிலான குழுவினரின் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பில் கருத்து வௌியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறிகள் விற்பனை தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழவின் விசாரணை அறிக்கை, பாரிய இலஞ்ச ஊழல் மோசடிகள் சம்பந்தமான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை ஆகியன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடத்தில் கையளித்த அறிக்கைகள் இன்று(நேற்று) முற்பகல் 11மணிக்கு என்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்றமானது என்றும் வௌிப்படைத்தன்மையுடன் செயற்படும் அதியுயர்ந்த கட்டமைப்பாகும். பாராளுமன்றம் அவ்வாறு செயற்படுவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வரும் நிலையில் இந்த அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்துவதற்காக எம்மிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமையை இட்டு மகிழச்சி அடைகின்றேன்.

கடந்த வாரம் செவ்வாய்க்கிழைமை நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தினைத் தொடர்ந்து பிணைமுறிகள் தொடர்பான அறிக்கை மற்றும் பாரிய இலஞ்ச ஊழல் மோசடிகள் விசாரணை அறிக்கை ஆகிய இரண்டையும் பாராளுமன்றத்திற்கு சமர்பிக்குமாறு கோரியிருந்தேன். இருப்பினும் ஒழுங்குவிதிகளின் பிரகாரம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருப்பதால் கடந்த புதன்கிழமை அந்த அறிக்கையை சமர்ப்பிக்க முயாதெனவும் 17ஆம் திகதி(இன்று) சமர்ப்பிப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்னிடத்தில் வாக்குறுதி அளித்திருந்தார்.

அதற்கு அமைவாக இன்றைய தினம்(நேற்று) இலங்கை மத்தியவங்கியின் பிணைமுறிகள் விற்பனை தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் 26பிரதிகள் எமக்கு கிடைத்துள்ளன. அவை அனைத்தும் ஆங்கில மொழியிலேயே காணப்படுகின்றன. பாராளுமன்ற நிலையியற்கட்டளைகளின் பிரகாரம் சிங்களம், தமிழ் மொழிகளிலும் இந்த அறிக்கையானது மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு உறுப்பினர்களுக்கு கையளிக்கப்பட வேண்டியுள்ளது.

ஆகவே இந்த விடயம் சம்பந்தமாக நாம் ஜனாதிபதி செயலகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். ஜனாதிபதி செயலகமானது அரசாங்க மொழித்திணைக்களத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. அதற்கு அமைவாக விரைவில் மொழிபெயர்ப்புச்செய்து எதிர்வரும் 23ஆம் திகதி உறுப்பினர்களிடத்தில் கையளிப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்.

இதேவேளை பாரிய இலஞ்ச ஊழல் மோசடிகள் சம்பந்தமான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழவின் விசாரணை அறிக்கையின் பிரதியொன்றே என்னிடத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த அறிக்கையானது 34தொகுதிகளைக் கொண்ட முழுமையான அறிக்கையாகும். இந்த அறிக்கையானது சிங்கள மொழியிலேயே காணப்படுகின்றது. இந்த அறிக்கையினது பிரதிகள் மேலும் எமக்கு கிடைக்கவுள்ளன. இவ்வறிக்கையும் மொழிபெயர்ப்புச் செய்யவேண்டியுள்ளது. இந்த அறிக்கையின் ஒரு பிரதியே காணப்படுவதால் பாராளுமன்ற நூலகத்தில் வைப்பதிலும் சிரமங்கள் உள்ளன.

மேலும் இவ்விரண்டு அறிக்கைகளின் பிரதிகளை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஊடகத்தினருக்கும் கையளிப்பதற்காக 300பிரதிகள் வரையில் அச்சிட வேண்டியுள்ளது. ஆதற்காக அரசாங்க அச்சகத்தின் தலைவருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளேன்.

இந்த அறிக்கைகளை இறுவெட்டில் வௌியிடுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்திருப்பதோடு, ஜனாதிபதி செயலகத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் பிரகாரம் இணையத்தின் ஊடாக அறிக்கை வௌியிடுவதற்குரிய நடவடிக்கைள் எடுக்கப்படவுள்ளன. குறிப்பாக ஜனாதிபதி செயலகமானது அறிக்கையை தமது உத்தியோக பூர்வ இணையதளத்தின் ஊடாக வௌியிடவுள்ள நிலையில் பாராளுமுன்ற உறுப்பினர்கள் அதனை இணைத்தின் ஊடாக பெற்றுக்கொள்வதற்குரிய நவீன வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அடுத்த கட்ட நடவடிக்கை

நான் சபாநாயகர் பதவியை ஏற்றதன் பின்னர் கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றேன். அதனை நடைமுறைப்படுத்துவதிலும் பக்கச்சார்பற்று செயற்பட்டு வருகின்றேன். கட்சித்தலைவர்களைப் பொறுத்தவரையில் வெவ்வேறு நிலைப்பாடுகளை கொண்டிருப்பார்கள்.

அவ்வாறு அவர்கள் ஏக தீர்மானத்திற்கு வரமுடியாதிருக்கும் பட்சத்தில் ஜனநாயகப் பண்பின் பிரகாரம் பெரும்பான்மையினர் ஏற்றுக்கொள்ளும் தீர்மானததிற்கு அமையவே நடவடிக்கைகளை மேற்கொள்கின்றேன். ஆகவே இத்தகைய நிலையில் அந்த விடயம் குறித்து நாம் அதிகளவில் முரண்பட வேண்டிய அவசியமில்லை.

அந்த வகையில் குறித்த அறிக்கைகள் சம்பந்தமாக அடுத்தகட்டமாக எவ்விதமான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்த தீர்மானங்களை எடுப்பதற்காக எதிர்வரும் 22ஆம் திகதி காலை 9.30இக்கு கட்சித்தலைவர்களை கூட்டுவதற்கான அறிவிப்பினை சபைமுதல்வருக்கும், எதிர்க்கட்சித்தலைவருக்கும் விடுத்துள்ளேன்.

அதன் பின்னர் தான் எவ்விதமான நடவடிக்கைகளை எடுப்பது என்பது குறித்து தீர்மானிக்கவுள்ளோம். அதற்கமையவே ஒழுங்குப்பத்திரம் தயார் செய்யப்படவுள்ளது. விவாதம் எப்போது நடத்துவது என்பது குறித்து அக்கூட்டத்திலேயே தீர்மானிக்க முடியும். எவ்வாறாயினும் 23ஆம் திகதி உத்தியோக பூர்வமாக சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-18#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.