Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தலில் தமிழ் மக்களின் முடிவினை சர்வதேசம் பார்த்துக்கொண்டிருக்கிறது...கூட்டணி, காங்கிரஸினால் எதனையும் சாதிக்க முடியாது என்கிறார் சம்பந்தன்

Featured Replies

தேர்தலில் தமிழ் மக்களின் முடிவினை சர்வதேசம் பார்த்துக்கொண்டிருக்கிறது

p45-fb034d41f3ae13c8aa94a36a0148f0fcfbf4aeaa.jpg

 

கூட்டணி, காங்கிரஸினால் எதனையும் சாதிக்க முடியாது என்கிறார் சம்பந்தன் 

(நமது நிருபர்)

சுயநிர்ணய அடிப்படையில் இறைமை யின்இலக்கணத்துக்கு அமைய அரசியல் தீர்வு வருமாக இருந்தால் அதுதான் சமஷ் டிக்கான அடிப்படையாகும். இதுதான் சமஷ்டி ஆட்சி முறையுள்ள நாடுகளில் காணப்படும் பண்பாகும். எந்தவொரு தரு  ணத்திலும் வரும் சந்தர்ப்பங்களையும் நாம் தவறவிடக்கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தெரி  வித்தார்.  

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் தேசி யக்கூட்டமைப்பின் சார்பில் போட்டி யிடும் வெருகல் மற்றும் மூதூர் பிரதேச சபை வேட்பாளர்களின் மக்கள் விழிப் பூட்டும் நிகழ்வுகள் பூமரத்தடிச்சேனை, இலங்கைத் துறைமுகத்துவாரம் மற்  றும் பள்ளிக்குடியிருப்பு ஆகிய இடங்க  ளில் நடைபெற்றன. இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றுகையி லேயே அவர் மேற்கண்டவாறு தெரி வித்தார்.  

இந்நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப் பினர் க.துரைரெட்ணசிங்கம், முன்னாள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண் டாயுதபாணி ஆகியோரும்  கலந்துகொண்டு கருத்துரையும் தோ்தல் விளக்கவுரைகளையும் ஆற்றினர். தொடர்ந்து உரையாற்றிய இரா.சம்பந்தன்,  நாம் வராலற்றில் பல சந்தர்ப்பங்களை இழந்திருக்கிறோம். அந்த நிலை தொடர்ந்தும் இடம்பெறக்கூடாது. சந்தர்ப்பங்களை உணர்ந்து சாணக்கியத்துடன் கையாள வேண்டும.் இதையே தந்தை செல்வா அடிக்கடி என்னிடம் கூறுவார். 

தற்பொழுது இந்நாட்டில் சில அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தி புதிய அரசியல் சாசனத்தினூடாக தீர்வுகாண முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். நீண்டகாலமாக தமிழ் மக்கள் சம உரிமையுடனும் சுய மரியாதையுடனும் இறைமையின் அடிப்படையில் உள்ளக, வௌியக சுய நிர்ணய உரிமையைப்பெற்று நாளாந்த கருமங்களை தாங்களே ஆற்றக்கூடிய வகையில் அதிகாரத்தைக்கேட்டு நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்து தந்தை செல்வா தலைமையில் போராடி வந்திருக்கிறரோம். இதில் நாம் முன்னேற்றத்தையும் காண்கின்றோம்.

 ஒரு காலத்தில் நாங்கள் மாவட்ட சபைகளைக்கூட பெறமுடியாமல் தத்தளித்தோம். ஆனால் இன்று மாகாண சபைகளை அரசியல் சாசனத்தினூடாக சுவீகரித்து மாகாணங்களுக்கான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்ப்பட்டு ஓரளவுக்கு எமது பிரச்சினைகள் தீரக்கூடிய வகையில் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் இது முழுமையானதல்ல, நீடித்து நிற்கக்கூடியதல்ல என்பதையும் நாம் அறிவோம். இதன் காரணமாகவே அதைத்திருத்தி இந்தியா, கனடா, அவுஸ்திரேலியா, பெல்சியம் போன்ற நாடுகளில் இருப்பதற்கு உகந்த வகையில் எமக்கும் ஒருமித்த நாட்டுக்குள் நாடு பிளவுபடாமல் அதிகாரங்கள் பகிந்தளிக்கப்பட வேண்டும். அது எமது இறைமையின் அடிப்டையில் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் சுகாதாரம,் கல்வி, விவசாயம் என்னும் எமது உள்ளார்ந்த செயல்முறைகளை எமது மாவட்டங்களில் நாம் தெரிவு செய்யும் பிரதிநிதிகள் ஊடாக எங்களால் உருவாக்கப்பட்ட மாகாண சபை, பிராந்திய சபை ஊடாக அதிகாரங்களைப ்பயன்படுத்தி எங்கள் தமிழ் மக்கள் அமைதியாகவும் கௌரவத்துடனும் தமது சுயமரியாதையைப் பாதுகாத்து வாழவேண்டுமென்பதற்காக எம்மால் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன.

சர்வதேச சமூகம் எங்கள் நிலைப்பாட்டின் நியாங்களை உணர்ந்துள்ளது. அதன் அங்கீகாரமும் ஒத்துழைப்பும் முழுமையாக எமக்கிருக்கின்றது. ஆகையால் இச்சந்தர்ப்பத்தை நாம் தவறவிடக்கூடாது. இதைப்பெறுவதற்கு எமக்குள்ள ஒரே வழி தமிழ் மக்களின் ஒற்றுமை. தமிழ் மக்கள் ஒருமித்து ஒற்றுமையாக நிற்கவேண்டும்.

குறித்த கொள்கைக்குப் பின்னால் 70 வருடமாக நிற்கின்றோம். தந்தை செல்வா மற்றும் அமிர்தலிங்கம் தலைமையில் போராடியும் வந்திருக்கிறோம். தமிழ் மக்களின் பிரச்சனைகள் விரைவில் தீர்த்து வைக்கப்பட வேண்டும். அதற்கு நாம் எல்லோரும் ஒற்றுமையாக நின்று குரல்கொடுக்க வேண்டும். அக்குரலானது இந்நாட்டிலுள்ள ஆட்சியாளர்கள் உட்ப ஏனைய சக்திகளுக்கும் கேட்க வேண்டும்.

 தமிழ் மக்கள் எவ்விதம் வாக்களிக்கப்போகிறார்கள். என்ன முடிவை எடுக்கப்போகிறார்கள் என்பதை சர்வதேசம் பார்த்துக்கொண்டிருக்கிறது. இத்தோ்தலில் தமிழ் காங்கிரஸ் போட்டியிடுகிறது. தமிழர் விடுதலைக்கூட்டணி போட்டியிடுகிறது. அடுத்து, அடுத்து சுயேச்சைக்குழுக்கள் பல போட்டியிடுகின்றன. இவர்களால் எதையுமே சாதிக்க முடியாது. சாதிக்கக்கூடிய வல்லமையும் அவர்களிடமில்லை.

யுத்த கெடுபிடிகள் காரணமாக மக்களின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கு கிராமங்கள் மிகமோசமாக பாதிக்கப்பட்டன. மூதூர், வெருகல், குச்சவௌி இன்னும் பல கிராமங்களில் வாழ்ந்த மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இலங்கையின் சுதந்திரத்துக்குப்பின் குடியேற்றங்கள் காரணமாகவும் ஏனைய திட்டமிட்ட நடவடிக்கைகள் காரணமாகவும் சனப்பரம்பலில் மாற்றங்கள் ஏற்பட்டன.

1827 இல் மூதூரிலும் குச்சவௌியிலும் தமிழ்மக்கள் பெருப்பான்மையாக வாழ்ந்தார்கள். யுத்தம் மற்றும் குறித்த இயற்கை இனவளர்ச்சியன் காரணமாகவும் இடப்பெயர்ச்சியின் காரணமாகவும் வேறு மாவட்டங்களுக்கும் வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்தமை காரணமாகவும் இந்நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

 

30 வருட கால யுத்தம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு ஏற்றவகையில் தேவையான அபிவிருத்திகள் முன்னேற்றங்கள் கொண்டுவரப்படவில்லை. யுத்தம் முடிந்த 2009 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையிலுள்ள மஹி்ந்தவின் ஆட்சிக்காலம் கெடுபிடிகள் நிறைந்ததாக காணப்பட்டன. மக்களுக்கு தேவையான எந்த அபிவிருத்திகளையும் அந்த அரசு செய்யவில்லை. கடந்த மூன்று வருடங்களில் பெரிதாக குறிப்பிட முடியாவிட்டாலும் நியாமான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கெடுபிடிகள் குறைந்துள்ளன.

 காணிகள் விடுவிக்கப்டுகின்றன, பலாத்காரமாக பறிக்கப்பட்ட சம்புர் காணிகள் விடுவிக்கப்பட்டு மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரங்களை உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காணாமல்போனோர் தொடர்பான விவகாரத்தில் தாமதங்கள் நிலவுகிறது என்பதை நாம் அறிவோம். அரசியல் கைதிகளின் 50 வீதமானோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். காணாமல்போனோர் தொடர்பாக சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இரண்டொரு மாதங்களில் அலுவலகம் அமைக்கப்பட்டு அது விரைவில் இயங்க வேண்டும். இவ்வலுவலகத்துக்கு 7 போ் நியமக்கப்பட வேண்டும் அதுவிரைவில் நடைபெறும்.

காணாமல்போனோர் தொடர்பாக உறிவினர்களுக்கு உண்மை தெரியப்படுத்தப்பட வேண்டும். அதற்கு மக்கள் உரிமையுடையவர்கள். மகனுக்கு என்ன நோ்ந்தது இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எனது கணவன் எங்கே? எனது சகோதரன் எங்கேயுள்ளான் என வருடக்கணக்காக உறவினர்கள் உண்மையை அறிய போராடி வருகிறார்கள். நாட்கணக்காக மாதக்கணக்காக கண்ணீருடன் அந்த உறவினர்கள் அலைந்து திரிவதை நான் அறிவேன்.

இதற்குரிய பதில்வேண்டும். காணாமல்போனோர் அலுவலகத்தை அரசாங்கம் விரைவில் அமைத்து பரிகாரம் காணப்பட வேண்டும.் உண்மை சொல்லப்பட வேண்டும். அந்த உறவினர்கள் அமைதியுடன் வாழவும் சமாதானம் அடையவும் ஏற்ற பரிகாரமும் உதவியும் செய்யப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

 காணாமல்போனோர் தொடர்பான நடவடிக்கைகளில் காலதாமதங்கள் காணப்படுகின்றன. காணாமல்போனோருக்கான நடவடிக்கை மூலம் இந்த அரசாங்கம் பயங்கரவாதத்தை வெற்றிகொண்ட அழித்த இராணுவ வீரர்களை குற்றம்சாட்டி தண்டிக்கப்பார்க்கிறது என்று மகிந்த ராஜபக்ஷ கூறிக்கொண்டிருப்பதனால் அரசு பயப்படுகிறது. நாம் தீவிரமாக செயற்பட்டால் சிங்கள மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும் என அரசு பயப்படுகிறது. இதுதான் உண்மைநிலை. ஆனால் இந்நிலை தொடர முடியாது. காலதாமதத்தை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது.

மக்களுக்கு உண்மை தெரிந்தாக வேண்டும். நாங்கள் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். பாராளுமன்றத்தில் காரசாரமாக கண்டித்துவருகிறோம். சர்வதேச சமூகத்துக்கு எமது நிலைப்பாட்டை விளக்கியுள்ளோம். அவர்கள் அதையேற்றுக்கொண்டுள்ளார்கள். எமது கோரிக்கை நியாமானது எனவும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன.இராணுவம் விடமாட்டோமென்று அடம்பிடித்த கேப்பாபுலவு காணியில் 136 ஏக்கர் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் கிளிநொச்சி, மன்னார், வலிகாமம் ஆகிய இடங்களில் விடுவிக்கப்பட்டுள்ளன. மயிலிட்டித்துறைமுகம் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதுபோல் அனைத்து காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும்.எமது மக்கள் தமது சொந்த நிலங்களில் குடியேறவேண்டும்.

இப்பொழுது வௌ்ளை வான் கடத்தல் இல்லை. கடத்தப்படுவோர் காணாமல்போகும் சம்பவங்கள் இடம்பெறுவதில்லை. காணாமல் யாரும் ஆக்கப்படவில்லை. இவையெல்லாம் இடம்பெற்றது மஹிந்த ஆட்சிக் காலத்தில் தான்.

அரசியல் தீாவொன்று கொண்டுவரப்பட வேண்டும். கொண்டுவந்தால் மாத்திரமே நிரந்தரமான சமாதானமும் நல்லிணக்கமும் ஏற்படும். எவரும் கருத்துக்களை சுதந்திரமாக கூறலாம். ஆனால் பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும். நமது கொள்கையில் நாம் உறுதியாக இருக்க வேண்டும் அதேவேளை வரும் சந்தர்ப்பங்களை கைநழுவ விட்டுவிடக்கூடாது ஏற்றுக்கொள்ள வேண்டும். உதாசீனம் செய்வோமாக இருந்தால் அந்த பாதிப்பு மக்களுக்குத்தான் ஏற்படும் என்று தந்தை செல்வா கூறுவார்.

தந்தை செல்வா பண்டாவுடன் டட்லியுடன் ஒப்பந்தங்களை செய்த வேளை சமஷ்டியைக் கைவிடவில்ல்ைை அவை மைல் கற்களாக இருந்தன. இறைமையின் அடிப்படையில் சுயநிர்ணயகோட்பாட்டின் அடிப்படையில் அரசியல் தீர்வொன்று ஏற்பட்டால் அதுதான் சமஷ்டிக்கான அடிப்படை. சமஷ்டியைப்பின்பற்றும் நாடுகளில் இதுதான் அடிப்படையாக இருந்து வருகிறது. ஆனபடியால் கவனமாக சந்தர்ப்பங்களை இழக்காமல் நடந்து கொள்ள வேண்டும். நாம் கடந்த காலங்களில் பலசந்தர்ப்பங்களை இழந்துள்ளோம். சுதந்திரத்துக்கு பின் ஆயுதப்போராட்ட காலம். அதன ்பின்னும்கூட சந்தர்பங்களை இழந்துள்ளோம்.

கடும் போக்குக்கள், கோரிக்கைகள் என்பவற்றால் நாம் வந்த சந்தர்ப்பங்கள் பலவற்றை இழந்துள்ளோம் ஒருபோதும் மக்களுக்கு பொருத்தமற்ற தீர்வை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை. மக்களுக்கு ஒருபோதும் துரோகமும் இழைக்கமாட்டோம். வரவிருக்கும் அரசியல் தீர்வானது மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான நிரந்தரமான தீர்வாக இருந்தால் மட்டுமே அதையேற்றுக்கொள்வோம் என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-20#page-1

  • கருத்துக்கள உறவுகள்

கடும் போக்குக்கள், கோரிக்கைகள் என்பவற்றால் நாம் வந்த சந்தர்ப்பங்கள் பலவற்றை இழந்துள்ளோம் ஒருபோதும் மக்களுக்கு பொருத்தமற்ற தீர்வை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை. மக்களுக்கு ஒருபோதும் துரோகமும் இழைக்கமாட்டோம். வரவிருக்கும் அரசியல் தீர்வானது மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான நிரந்தரமான தீர்வாக இருந்தால் மட்டுமே அதையேற்றுக்கொள்வோம்” - இரா.சம்பந்தன்

”,,, நல்ல தீர்வு வரும்வரை நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து  நாங்கள் செயல்படுவோம் “ என்பதையும் சேர்த்து சொல்லியிருக்கலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.