Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இடைவெளி

Featured Replies

இடைவெளி

 

ஒரு வண்­டியை நான்கு குதி­ரைகள் வெவ்­வேறு திசை­களில் இழுத்துச் செல்­லும்­போது வண்­டியில் இருப்­பவர்கள் எதிர்­நோக்கும் அவஸ்­தைக்கு ஒத்­த­தா­ன­தொரு அர­சியல் சூழ்­நி­லைக்கு வடக்கு, கிழக்கு முஸ்­லிம்கள் தள்­ளப்­பட்­டுள்­ளனர். கிழக்கின் புல்­மோட்டை முதல் பொத்­துவில் வரை­யான பிர­தே­சங்­களில் வாழும் முஸ்­லிம்கள் எந்தத் தலை­மையை முஸ்­லிம்­களின் அர­சியல் தலை­மை­யாக ஏற்­றுக்­கொள்­வது என்­ற­தொரு குழப்ப நிலையை எதிர்­நோக்­கு­வதை தற்­கா­லத்தில் உணர முடி­கி­றது.

கீரைக்கடைக்கும் எதிர்­க்கடை உரு­வாக்­கப்­பட வேண்டும் என்­பதில் நியாயம் இருந்­தாலும், எந்தக் கடையில் பொருட்­கொள்­வ­னவு செய்­வது என்­பதைத் தீர்­மா­னிக்க வேண்­டி­ய­வர்கள் நுகர்­வோர்தான். அந்­ நு­கர்­வோரின் சரி­யான தீர்­மா­னமே இறு­தி­யா­ன­தாகும். இவ்­வாறு முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தியில் உள்ள அர­சியல் கட்­சிகள் குறித்து தீர்­மா­னிக்க வேண்டிய தரு­ணத்தில் குறிப்­பாக கிழக்கு முஸ்­லிம்கள் உள்­ளனர். ஏனெனில் கிழக்கு முஸ்­லிம்­களின் வாக்குப் பலம் கட்சி அர­சி­ய­லினால் பல­வீ­னப்­ப­டுத்­தப்­படும் சூழ்­நி­லையை புதிய தேர்தல் முறைமை உரு­வாக்கும் என்ற அச்சம் பர­வ­லாக உண­ரப்­ப­டு­கி­றது.

எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 10ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள உள்­ளூராட்சி மன்றத் தேர்தலில் முஸ்லிம் சமூ­கம்சார் கட்­சியைத் தலை­மை­க­ளினால் யானை­யிலும், கையிலும், மரத்­திலும், மயி­லிலும் எனப் பல சின்­னங்­களில் போட்­டி­யிட கள­மி­றக்­கப்­பட்­டுள்ள வேட்­பா­ளர்­களில் யாரை ஆத­ரித்து எந்தக் கட்­சிக்கு வாக்­க­ளிப்­பது என்ற தடு­மாற்­றமும் குழப்­பமும் உரு­வா­கி­யி­ருப்­பது ஒட்­டு­மொத்த கிழக்கு முஸ்­லிம்­க­ளுக்கும் தலைமை வகிக்கக்கூடிய அர­சியல் தலை­மைத்­து­வத்­துக்­கான இடைவெளி காணப்­ப­டு­வ­தையும் அது நிரப்­பப்­பட வேண்­டு­மென்­ப­தையும் தெ ளிவுபடுத்­து­கி­றது.

இயற்கை வெற்­றி­டத்தை வெறுக்கும் என்­பது இயற்­பி­யலில் அனை­வ­ரு­ம­றிந்த ஒன்­றாகும். ஏதோ­வொன்றில் வெற்­றிடம் இருக்­கு­மாயின் அதன் மறைவில் இன்­னு­மொன்று இருந்துகொண்டே இருக்கும். ஒளியின் வெற்­றி­டத்தில் இருள் இருக்கும். அறிவின் வெற்­றி­டத்தில் அஞ்­ஞானம் இருக்கும்.

சமு­தா­யத்தின் மத்­தியில் வாழ்ந்து, அச்­ச­மு­தா­யத்தின் விருப்பு வெறுப்­புக்­களில் பங்­கு­கொண்டு, தேசத்­தி­னதும், தேசத்தின் சொத்­துக்­க­ளான சமு­தா­யத்­தி­னதும் எழுச்­சிக்­கும் வளர்ச்­சிக்கும் உறு­து­ணை­யாகச் செயற்­பட்டு, அச்­ச­மூ­கத்தின் உரி­மைக்­கா­கவும், பிர­தே­சத்­தி­னதும், நாட்­டி­னதும் முன்­னேற்­றத்­திற்­கா­கவும் குரல் கொடுத்­த­வர்கள், குரல் கொடுப்­ப­வர்கள் மண்­ணையும், அம்­மண்ணின் மக்­க­ளையும் விட்டு பிரி­கின்­ற­போது, அவர்­களால் சமு­தா­யத்தில் ஏற்­ப­டு­கின்ற இடைவெளி நிரப்­பப்­ப­டு­வ­தற்கு பல நூறு ஆண்­டுகள் நகர்­கின்­றன அல்­லது அவ்­வெற்­றி­டங்கள் நிரப்­பப்­ப­டாமல் இடை­வெளி­க­ளாகவே காணப்­ப­டு­கின்­றன.

சமூ­கங்­க­ளுக்­கி­டையே ஒற்­று­மையும், புரிந்­து­ணர்வும், ஒரு­மைப்­பாடும் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும். அவற்­றினால் மக்­களும், பிர­தே­சங்­களும், நாடும் சுபீட்­சமும், நிம்­ம­தியும் அடைய வேண்டும் என்ற உன்­னத மனப்­பாங்கு கொண்டு, அவற்றை மல­ர்­விப்­ப­தற்­காக அறிவு, ஆற்றல், அனு­பவம் என்­ப­வற்றைப் பகிர்ந்து செயற்­பட்ட பல சமூகச் சிற்­பிகள் இன்று நம்­மி­டையே இல்லை.

நாட்­டிலும், சமு­தா­யங்­க­ளி­டை­யேயும் நல்ல மாற்­றங்கள் ஏற்பட வேண்டும் என்­ப­தற்­காக தங்­க­ளையே அர்ப்­பணம் செய்து வாழ்ந்த பல சமூகத் தலை­வர்கள் இத்­தே­சத்­தை­விட்டு மறைந்து விட்­டார்கள்.

தலை­மை­களும் ஞாப­க­மூட்­டல்­களும்

பல்­லின சமூகம் வாழும் இலங்கைத் தீவில் ஒவ்­வொரு சமூ­கத்­திலும் பல்­லா­யிரக் கணக்­கானோர் பிறந்து வாழ்ந்து மடிந்­தி­ருக்­கி­றார்கள். ஆனால், அவர்­களில் ஒரு சிலரே என்றும் மக்­க­ளினால் ஞாப­கப்­ப­டுத்­தப்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

1505 ஆம் ஆண்டு முதல் 1948ஆம் ஆண்டு வரை ஏறக்­கு­றைய 443 வரு­டங்கள் இலங்கை மண் ஏகா­தி­பத்­தி­ய­வா­தி­க­ளினால் ஆளப்­பட்­டது. அவர்­களின் தேவைக்­காக இத்­தேசம் பயன்­ப­டுத்­தப்­பட்­டது. இத்­தே­சத்­தி­ன­தும் மக்­க­ளி­னதும் அபி­வி­ருத்­தி­யிலும், முன்­னேற்­றத்­திலும் கவனம் கொள்­ளாது அவர்­க­ளது நலனை முன்­னி­லைப்­ப­டுத்­தியே பொது­வாக ஒவ்­வொரு செயற்­பா­டு­க­ளையும் திட்­டங்­க­ளையும் ஏகா­தி­பத்­தி­ய­வா­திகள் வகுத்துச் செயற்­பட்­டனர். அவை மாத்­தி­ர­மின்றி, சமூ­கங்­க­ளுக்­கி­டையே பிரி­வி­னை­யையும் மோதல்­க­ளையும் ஏற்­ப­டுத்­தினர்.

அவ்­வா­றான ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும் அவர்­க­ளுக்கு எதி­ராக நமது முன்­னோர்கள் இம்­மண்­ணி­லி­ருந்து அவர்­களை அகற்­று­வ­தற்­கா­கவும் மண்­ணுக்கு விடிவைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கா­கவும் கிளர்ந்­தெ­ழுந்­தனர். ஆனால், ஏகா­தி­பத்­தி­ய­வா­தி­க­ளுக்­கெ­தி­ரான அவர்­களின் எழுச்சி திட்­ட­மி­டப்­ப­டாத, ஒரு­மித்த போராட்­ட­மாக அமை­யா­த­தனால் அப்­போ­ராட்­டங்கள் வெற்றி கொள்­ளப்­ப­ட­வில்லை.

இருப்­பி­னும், 1930களின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் அனைத்துச் சமூ­கங்களையும் சேர்ந்த தலை­வர்கள் இன, மத, மொழி பேதங்­களை கடந்து ஒரு தாய் பெற்ற பிள்­ளை­கள்போல் ஒன்­று­பட்டுக் குரல் கொடுத்து போரா­டி­ய­தனால் ஏகா­தி­பத்­தி­ய­வா­தி­களின் பிரித்­தாளும் தந்­தி­ரத்­திற்கும், அடிமை சா­சனத்­திற்கும் சாவு­மணி அடிக்க முடிந்­தது. 1948இல் இந்­நாட்டு மக்கள் சுதந்­தி­ரக்­காற்றைச் சுவா­சிக்க வழி­யேற்­ப­டுத்­தப்­பட்­டது.

அந்­த­வகையில், சிங்­கள, தமிழ், முஸ்லிம் சமூ­கங்­களைப் பிரதி­நி­தித்­து­வப்­ப­டுத்தி நாட்டு மக்­களின் நல­னி­லும் சுதந்­தி­ரத்­திலும் அக்­க­றை­ கொண்ட தலை­வர்­க­ளாக அந­காரிக தர்ம­பால, குணா­நந்த தேரர், ஸ்ரீ ஆறு­முக நாவலர், சேர் பொன்­னம்­பலம் இரா­ம­நாதன், அறிஞர் சித்­தி­லெப்பை, டி.பி. ஜாயா போன்ற தலை­வர்கள் பல தசாப்­தங்­க­ளுக்கு முன்னர் விளங்­கினர்.

இத்­த­லை­வர்கள் சமு­தா­யத்தின் குரல்­க­ளாக இருந்து சமூக விழு­மி­யங்­களைப் பாது­காத்­தது மாத்­தி­ர­மின்றி, மக்­களின் நலன்­க­ளிலும் அக்­க­றை­கொண்டு செயற்­பட்­ட­தனால் அவர்கள் இன்றும் சமூ­கங்கள் மத்­தியில் ஞாப­க­மூட்­டப்­ப­டு­கி­றார்கள்.

இவ்­வாறு காலத்­திற்­கு ­காலம் சமூ­கங்கள் மத்­தியில் சமூ­கத்­திற்­காக குரல்­கொ­டுக்கக் கூடிய தலை­வர்கள் உரு­வாகி அவர்­க­ளது சமூகக் கட­மை­களை மனச்­சாட்­சி­யோடு நிறைவு செய்து மறைந்­தி­ருக்­கி­றார்கள். அவ்­வா­றான தலை­வர்­களின் சேவை­களும், பணி­களும் ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும் அவ­ரவர் சார்ந்த சமூ­கங்­க­ளி­னாலும், சமூ­கங்­களை நேசிக்­கின்ற ஏனை­ய­வர்­க­ளி­னாலும் நினை­வு­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

பெரும்­பான்மை சிங்­கள சமூ­கத்தில் பல தலை­வர்கள் உரு­வாகி பல்­வேறு துறை­களில் அவர்­களின் சமூகப் பணி­யினை நிறைவு செய்­தி­ருக்­கி­றார்கள். இந்­நாட்டை ஏகா­தி­பத்­தி­ய­வா­தி­க­ளி­ட­மி­ருந்து மீட்­டெ­டுப்­ப­தற்­காக அனைத்து இனத் தலை­வர்­க­ளு­டனும் ஒன்­றி­ணைந்து குரல் கொடுத்த சுதந்­திரத் தியா­கி­களில் ஒரு­வ­ரான குணா­நந்த தேரர் முதல் இலஞ்சம், ஊழல் மோசடி நிறைந்த ஆட்­சி­யி­லி­ருந்து நாடும் மக்­களும் விரும்பும் ஆட்சி இந்­நாட்டில் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும். ஆட்சி மாற்றம் உரு­வாக வேண்டும் என்பதற்­காக சமூக நீதிக்­கான மக்கள் இயக்கம் என்ற அமைப்பை உரு­வாக்கி தொடர்ச்­சி­யாகக் குரல்­கொ­டுத்து ஆட்­சி­மாற்­றத்­தையும் ஏற்­ப­டுத்­தி மறைந்த மாது­லு­வாவே சோபித்த தேரர் வரை சிங்­கள சமூ­கத்தின் மத்­தியில் பலர் மதிக்­கப்­பட்ட தலை­வர்­க­ளாக பேசப்­ப­டு­கி­றர்கள்.

மறைந்த மாது­லு­வாவே சோபித்த தேரர் ஒரு பௌத்த துற­வி­யாக இருந்தும் அத்­து­ற­வறத்­துக்கும் அப்பால் இந்­நாட்டில் சமூக ஒற்­றுமை மலர வேண்டும். நாட்டில் நல்­லாட்சி ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும். சமூ­கங்­க­ளுக்கு நீதி கிடைக்க வேண்டும். எந்­த­வொரு சமூ­கமும் மற்­று­மொரு சமூ­கத்­தினால் பாதிக்­கப்­படக் கூடாது. சிறு­பான்மை சமூ­கங்­க­ளான தமி­ழர்­களும், முஸ்­லிம்­களும் இந்­நாட்டு மக்­களே, அவர்­களும் நிம்­ம­தி­யாக வாழ வேண்டும். அவர்­க­ளது வாழ்­வி­டங்­களும், விழு­மியங்­களும் பாது­காக்­கப்­பட வேண்டும் என்று குரல் கொடுத்தார் என்­பது இங்கு நினை­வூட்­டத்­தக்­கது.

இவ்­வு­லகில் மனி­த­னாகப் பிறப்­பது முக்­கி­ய­மல்ல. மாறாக மனிதப் பண்­பு­களைக் கடைப்­பி­டித்து, அப்­பண்­பு­களை மதித்து, மனித நேயத்­துடன் வாழ்ந்து, சமூ­கத்­திற்கு பய­ன­ளித்த ஒரு மனி­த­னாக மர­ணிப்­பதே முக்­கி­ய­மாகும். இவ்­வாறு, பெரும்­பான்மை சமூகத்தில் மாத்­தி­ர­மின்றி சிறு­பான்மை சமூ­கத்­திலும் மக்கள் மனங்­களை விட்டு மறை­யாத தலை­வர்கள் இந்­நூற்­றாண்டில் வாழ்ந்து மறைந்­தி­ருக்­கி­றார்கள்.

**அர­சியல் தலை­மை­களும் இடை­வெளியும்**

ஒரு சமூ­கத்தின் சமூகக்கட்­ட­மைப்­புக்­களின் வளர்ச்­சிக்­காக தங்­களை அர்ப்­ப­ணித்துச் செயற்­பட்ட துறைசார் நிபு­ணர்­களும், தலை­வர்­களும் வாழ்ந்து மறைந்­தாலும் அவர்கள் காலங்­க­ளினால் நினை­வூட்­டப்­ப­டு­கின்­றனர்.

ஒரு சமூ­கத்தின் தலை­வி­தியை நிர்­ணயிக்கும் சமூகக் கட்­ட­மைப்புக் கூறாக அர­சியல்துறை உள்­ளது. இத்­து­றையில் கால்­ப­தித்து ஆளு­மை­யுள்ள தலை­மைத்துப் பண்­பு­க­ளினால் மக்­களை ஒன்­றி­ணைத்து செயற்­பட்ட அர­சியல் தலை­வர்கள் பலர் உள்­ளனர். அவர்­களில் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் வாழும் தமிழ் சமூ­கத்­தினால் அதிகம் பேசப்­ப­டு­ப­வ­ராக மறைந்த இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் ஸ்தாபகத் தலைவர் தந்தை செல்­வாவும், மலை­யக மக்கள் விரும்பும் தலை­வ­ராக இருந்து இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் ஸ்தாபகர் மறைந்த சௌமி­ய­மூர்த்தி தொண்­ட­மானும், முஸ்லிம் சமூ­கத்தில் அதிகம் பேசப்­ப­டு­ப­வ­ராக மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்­ரபும் திகழ்­கின்­றனர்.

1948ஆம் ஆண்டு மார்­கழி மாதம் இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்­சியை ஆரம்­பித்து தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மையைப் பெற்­றுக்­கொ­டுக்க உழைத்த தந்தை செல்வா தமிழ் மக்­களின் உரிமைப் போராட்­டத்­திற்­காக தன்னை அர்ப்­ப­ணித்துச் செயற்­பட்டார்.

1956 ஆம் ஆண்டு தனிச்­சிங்­களச் சட்டம் அன்­றைய பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­ட­போது, தாய் மொழி தமிழ் மொழிக்­கான உரி­மையைக்கேட்டு பல்­வேறு சாத்­வீகப் போராட்­டங்­களை தந்தை செல்வா முன்­னெ­டுத்தார். இப்­பி­ரச்­சி­னையை பேசித் தீர்த்­துக்­கொள்­ளலாம் வாருங்கள் என அன்­றைய பிர­தமர் பண்­டா­ர­நா­யக்க அழைப்பு விடுத்­த­போது, அவரைச் சந்­தித்த தந்தை செல்வா இந்தப் பிரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்கு நீங்கள் ஏதேனும் ஒன்­றினை செய்தே ஆக வேண்டும். இன்­றைய சூழலில் நாங்கள் ஒன்­றி­ணைந்து இப்­பி­ரச்­சி­னையைத் தீர்க்­கா­விட்டால் நாம் இறந்த பின்பு இந்­நாட்­டிற்கு இப்­பி­ரச்­சினை பெரும் பேரா­பத்தை உண்­டாக்கும் என அவர் அன்று சொன்­னது பிற்­கா­லத்தில் நிஜத்தில் நடந்­தே­று­வ­தையும் நாம் காண்­கிறோம். இவ்­வாறு எதிர்­கா­லத்­தையும் நிகழ் காலத்தில் எதிர்வு கூறி அப்­பி­ரச்­சி­னை­களை முடி­வுக்கு கொண்டு வந்து தாம் சார்ந்த இன மக்­களும் ஏனைய மக்­களும் சமத்­து­வத்­துடன் வாழ வேண்டும் என்று செயற்­பட்டு, மக்­க­ளுக்­காக வாழ்ந்த தந்தை செல்வா, அவர் மறைந்து தசாப்­தங்கள் பல கடந்தும் இன்றும் தமிழ் மக்கள் மனங்­களில் வாழ்ந்து கொண்­டி­ருக்­கிறார். தமிழ் சமூ­கத்தின் மத்­தியில் அவ­ரது வெற்­றிடம் இன்னும் நிரப்­பப்­ப­டாத இடைவெளி­யா­கவே உள்­ளது.

ஏனெனில், அவர் உரு­வாக்­கிய இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் செயற்­பா­டுகள் தொடர்­பிலும், தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­னதும் ஏனைய தமிழ் அர­சியல் கட்­சி­களின் தலை­மைகள் தொடர்­பிலும் தமிழ் மக்கள் மத்­தியில் விமர்­ச­னங்கள் எழுப்­பப்­பட்டு வரு­கின்றன. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு இரண்­டாகப் பிரிந்து இரு கூட்­ட­மைப்­புக்­க­ளாக நடை­பெ­ற­வுள்ள தேர்தலில் போட்­டியி­டு­கின்­ற­மையும், அக்­கூட்­ட­மைப்­புக்­களை ஆத­ரித்­தும் எதிர்த்தும் தமிழ் அர­சியல் தளத்தில் விமர்­ச­னங்கள் வெளிவந்து கொண்­டி­ருக்­கின்­ற­மையும் தந்தை செல்வா போன்ற அர­சியல் தலை­மையை தமிழ் சமூகம் வேண்டி நிற்­கி­றதா என்ற கேள்வியும் எழும்­பு­கி­றது.

இவ்­வாறு மலையக மக்­களின் பெரும் தலை­வ­ராகக் கரு­தப்­பட்ட இலங்கைத் தொழி­லாளர் காங்­கி­ரஸின் தலைவர் மறைந்த சௌமி­ய­மூர்த்தி தொண்­ட­மானின் மறைவின் பின்னர் மலை­யக மக்­களில் பெரும்­பா­லானோர் ஏற்­றுக்­கொள்ளக்கூடிய அர­சியல் தலைமை உரு­வாகவில்லை.

1954ஆம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டு மறைந்த சௌமி­ய­மூர்த்தி தொண்­டமான் இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் தலை­வா­ரக இருந்து மலை­யக மக்­களின் உரி­மை­களைப் பெற்றுக்கொடுத்­தது­டன் மலையக அபி­வி­ருத்­திக்கும் வழி­ச­மைத்­தவர். அவர் இறந்த பின் இலங்கை தொழி­லாளர் காங்­கி­ர­ஸுக்குள் பிள­வுகள் ஏற்­பட்­டன. புதிய அர­சியல் கட்­சி­களின் தோற்றம் மலையக மக்­க­ளின் வாக்குப் பலத்தில் சரி­வு­களைத் தோற்­று­வித்­தது. கட்சி அர­சி­ய­லுக்­கான முன்­னு­ரி­மை­யினால் மலை­யக மக்­களின் நலன்­களும் அபி­லா­ஷை­களும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை என்ற அம்­மக்­களின் மனக்­கு­மு­றல்­க­ளுக்கு மத்­தியில் அம்­மக்கள் இப்­பு­திய தேர்தல் முறை­மையின் கீழ் விரும்பும் கட்­சி­க­ளுக்கு வாக்­க­ளிக்­க­வுள்­ளனர்.

மலை­யக மக்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் கட்­சிகள் தனித்தும் அர­சியல் கூட்­ட­மைத்தும் பிர­தான கட்­சி­க­ளுடன் இணைந்தும் இத்­தேர்தலில் மலை­யக மக்­களின் வாக்­கு­களைப் பெறு­வதற்­காக வேட்­பா­ளர்­களை கள­மி­றக்­கி­யுள்­ளனர். இதனால் மலையக மக்கள் மத்­தி­யிலும் வாக்­க­ளிப்­பதில் தடு­மாற்றம் காணப்­ப­டு­வதை மலை­யகப் பிர­தேச மக்­களின் கருத்­துக்­க­ளி­லி­ருந்து அறிந்­து­கொள்ள முடி­கி­றது. இதனால், மலை­யகத்­திலும் அதி­கப்­ப­டி­யான மக்கள் அங்­கீ­க­ரிக்கும் அர­சியல் தலை­மைக்­கான இடைவெளி நிரப்­பப்ப­டாமல் காணப்­ப­டு­கி­றது என்­பது தெளிவாகும்.

அவ்­வா­றுதான் 1982ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸை உரு­வாக்கி நீல­மென்றும், பச்­சை­யென்றும் பிரிந்து நின்ற வடக்கு, கிழக்கு முஸ்­லிம்­களை ஒன்­றி­ணைத்து பெருவிருட்­ச­மாக்கி, அதன் மூலம் சமூ­கத்­திற்கும், நாட்­டிற்கும் பயன்­மிக்­கத்­தக்க பல பணி­களை 14 வரு­டங்­க­ளாக மேற்­கொண்ட மறைந்த தலைவர் அஷ்­ரபின் குறு­கிய கால அர­சியல் பயணம் சமூ­கத்தின் பல எதிர்­காலத் தேவை­க­ளுக்கு நிகழ்­கா­லத்தில் தீர்வைப் பெற்­றுக்­கொ­டுத்­தி­ருக்­கி­றது. அவ்­வாறு பெற்­றுக்­கொ­டுத்த அஷ்­ரபின் மரணம் கிழக்கு முஸ்லிம் அர­சி­யலில் நிரப்­பப்­பட முடி­யாத வெற்­றி­டத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது என்­பதை மறுப்­ப­தற்­கில்லை.

அவர் உரு­வாக்­கிய கட்­சியின் அடி­நாதம் தெரி­யா­தவர்கள், அவர் இக்­கட்­சியின் விருட்­சத்­திற்­காகப் புரிந்த உழைப்பின் ஒரு துளி அனு­ப­வத்தைக் கூடப்பெறா­த­வர்கள், அக்­கட்­சி­யினால் மகு­டங்­களைச் சுமந்­து­கொண்டு மக்­களின் நலன்­களை விடவும் தங்­க­ளது நலன்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்கி செயற்­பட்­டமை தொடர்பில் மறைந்த தலைவர் அஷ்­ரபை விசு­வா­சித்­துக்­கொண்­டி­ருக்கும் அவ­ரது அபி­மா­னிகள் மத்­தியில் பல்­வேறு விமர்­ச­னங்­களை உரு­வாக்­கி­யி­ருப்­பதைக் காண முடி­கி­றது. நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தலுக்­கான பிர­சார மேடை­களில் அவ்­வி­மர்­ச­னங்கள் பல­மாக ஒலிக்­கப்­ப­டு­வ­தையும் அவ­தா­னிக்க முடி­கி­றது.

அவரின் பாசறை வாரி­சுகள் நாங்­கள்­தா­னென ஆளுக்­கொரு கட்­சியை உரு­வாக்கிக் கொண்டு தேர்தல் காலங்­களில் வாக்­கு­களைக் பெற வரு­கி­றார்­களே தவிர, கடந்த 17 வருட கால­மாக மறைந்த அஷ்ரப் சமூ­கத்­திற்­காக புரி­யத்­திட்­ட­மிட்­ட பணி­களை முன்­னெ­டுத்துச் செயற்­பட முஸ்லிம் அர­சி­ய­லி­லுள்ள எவரும் இதய சுத்­தி­யுடன் முன்­்வ­ர­வில்லை என்ற முணுமுணுப்பை இத்­தேர்தல் காலத்தில் அவரை நேசித்­த­வர்­க­ளி­ட­மி­ருந்து கேட்க முடி­கி­றது.

ஏனெனில், ஒவ்­வொரு தேர்தல் காலங்­க­ளிலும் அஷ்ரப் சந்தைப்படுத்­தப்­ப­டு­வது போன்று நடை­பெ­ற­வுள்ள இத்தேர்தல் பிர­சா­ரங்­க­ளுக்­கா­கவும் அவர் வடக்கு, கிழக்கைத் தளமாகக் கொண்­டுள்ள முஸ்லிம் கட்­சி­க­ளினால் மக்கள் மத்­தியில் சந்தைப்படுத்­தப்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

கட்­சி­களின் சின்­னங்கள், வேட்­பா­ளர்­களின் நிழற்­ப­டங்கள் என்­ப­னவற்­றுடன் அன்­னாரின் நிழற்­படம் பதித்த போஸ்­டர்கள், பெனர்கள், துண்டுப்பிர­சு­ரங்­க­ளை முஸ்லிம் பிர­தே­சங்­களில் காண முடி­கி­றது. ஆயிரம் விளக்­குடன் ஆதவன் எழுந்து வந்தான் என்ற பாட­லையும் மூலைமுடுக்­கெங்கும் கேட்க முடி­வ­தா­கவும் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது. அஷ்­ரபின் புகைப்­ப­டங்­க­ளையும், பாடல்­க­ளையும் சந்­தைப்­ப­டுத்தி வடக்கு–கிழக்கு முஸ்­லிம்­களின் வாக்­கு­களைப் பெற்­றுக்­கொள்­­வ­தற்­கான பிரச்­சா­ரங்­களை முன்­னெ­டுத்து வரும் தறு­வாயில், ஆதர­வா­ளர்­களை பலி­கொ­டுத்தும், பலி­யெ­டுத்தும் இடம்­பெ­று­கின்ற சம்­பவங்கள் பர­வ­லாக நடை­பெற்று வரு­கின்­றன. கிழக்கு முஸ்லிம் பிர­தே­சங்­களில் 17 வரு­டத்­திற்கு முன்­னி­ருந்த அர­சியல் கலா­சாரம் மாற்­றப்­பட்­டு­விட்­ட­தாக தெர­ிவிக்­கப்­ப­டு­வ­தையும் சுட்­டிக்­காட்ட வேண்டும்.

முஸ்லிம் தேசி­யமும் நிரப்­பப்பட

 வேண்­டிய வெற்­றி­டமும்

தூர­நோக்­கோடு ஒன்றை உரு­வாக்கி அதை அடை­வ­தற்­கான செயல் நுணுக்­கத்தை விருத்தி செய்து, ஏனை­ய­வர்­களின் ஆத­ரவைத் திரட்டி, தூர­நோக்கை அடைந்து கொள்­வ­தற்­கான செயற்­பாட்டை ஊக்­கப்­ப­டுத்தக்கூடிய தலைமை முஸ்லிம் தேசி­யத்­துக்கு அவ­சிய­மா­க­வுள்­ளது.

ஒரு செயல்திறன் மிக்க தலைவர் எதிர்­காலம் பற்­றிய தூர இலக்கை உரு­வாக்­குவார். அத்­தூர இலக்கை நோக்கி இயங்­கு­வ­தற்­கான அறி­வு­பூர்­வ­மான செயல் உபா­யங்­களை விருத்தி செய்வார். அவ்­வாறு இயங்­கு­வ­தற்கு அவ­சி­ய­மா­கின்ற ஆத­ர­வையும் இணக்­கத்­தையும் குழு முயற்­சியை வழங்கக்கூடிய மிக முக்­கி­ய­மான அங்­கத்­தி­னர்­களின் ஒத்­து­ழைப்­பையும் திரட்­டுவார். அவற்­றுடன் செயல் உபா­யங்­களை அமுல்­ப­டுத்தும் விட­யத்தில் பங்­கு­கொண்டு தொழிற்­படக்கூடிய நபர்­களை நல்ல முறையில் ஊக்­கப்­ப­டுத்­துவார். அவ்­வாறு ஊக்­கப்­ப­டுத்­து­ப­வ­ராக விளங்­கிய அஷ்­ரபின் மரணம் ஏற்­ப­டுத்­திய இடைவெளி முஸ்லிம் தேசி­யத்தில் இன்னும் நிரப்­பப்­ப­ட­வில்லை.

ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும் மேற்கொள்ள வேண்­டிய விட­யங்­களை நிர்­ணயித்து, ஒழுங்­கு­ப­டுத்தி அவற்றை வெற்­றி­க­ர­மாக நிறை­வேற்றத் தேவை­யான திட்­டங்­களை வகுத்து இத்­திட்­டங்­களைச் செய­லு­ருப்­ப­டுத்த தம்­மோடு இணைந்­தி­ருக்கும் பல­ரையும் ஆர்வ­த்­தோடு பங்­கு­கொள்ளச் செய்­வ­தற்கும் குறித்த திட்­டங்­களைச் செயற்­ப­டுத்­தும்­போது ஏற்­படக்கூடிய முரண்­பா­டுகள், பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வைப் பெறக்கூடி­ய­வ­ரா­கவும் தலைவர் அல்­லது தலை­மைத்­துவம் இருக்க வேண்டும்.

தலை­வர்கள், உண்­மைத்­தன்மை, நம்ப­கத்­தன்மை, தூர­நோக்குச் சிந்­தனை, தொடர்­பாடல் திறன், ஏனை­ய­வர்­க­ளுடன் சுமு­க­மான உறவு, செல்­வாக்குச் செலுத்தும் தன்மை, நெகிழ்வுத் தன்மை, தீர்­மா­னிக்கும் ஆற்றல், திட்­ட­மிடல், கலந்­து­ரை­யாடல் போன்ற பண்­பு­டை­யவர்­க­ளாக இருத்தல் அவ­சி­யம்.

ஒரு சமூ­கத்தை அர­சியல் ரீதி­யாக வழி­ந­டத்தக்கூடிய இவ்­வா­றான தலை­மைத்­துவப் பண்­புகள் முஸ்லிம் அர­சி­யலில் அஷ்­ர­பிடம் காணப்­பட்­டதன் கார­ணத்­தினால் கவ­ரப்­பட்ட கிழக்கு முஸ்­லிம்கள் நாளுக்கு நாள் அவர் பக்கம் திரண்­டனர். ஆனால், இத்­த­கைய தலை­மைத்­துவப் பண்­புகள் தற்­போ­தைய முஸ்லிம் தலை­மை­க­ளி­டையே காணப்­ப­டு­கி­றதா, குறிப்­பாக முஸ்லிம் காங்கிரஸின் சமகாலத் தலைமை அதிகளவில் விமர்சிக்கப்படுவதற்குக் காரணம் வழிகாட்டிய தலைமையின் தலைமைத்துவ பண்புகளைத் தவறவிட்டதுதான் என அஷ்ரபின் அபிமானிகள் ஆதங்கப்படுவதிலும் அர்த்தமில்லாமலில்லை.

ஒரு தூர நோக்கை இலக்காகக் கொண்டுதான் மறைந்த அஷ்ரபினால் முஸ்லிம்களுக்கான கட்சி உருவாக்கப்பட்டது. ஆனால், இந்த இலக்கு நோக்கிய பயணம் அவரது மரணத்துடன் திசைமாற்றப்பட்டுள்ளது. அவரின் யுகம் சிதைக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டிருக்கிறது. போலி வாக்குறுதிகளினாலும், ஏகாதிபத்திய தலைமைத்துவப் பண்புகளினாலும் அவர் வித்திட்ட அரசியல் புரட்சி மீண்டும் பழைய குருடி கதவைத்திறடி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என இக்கட்சியை உருவாக்கிய கிழக்கு மக்கள் வெளிப்படுத்தும் ஆதங்கத்தினை நிராகரிக்க முடியாது.

கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் தலைமைத்துவப் பலம் வடக்கு, கிழக்கு முஸ்லிம்களுக்கு மாத்திரமின்றி, புத்தளம் முதல் ஹம்பாந்தோட்டைவரை வாழும் தென்னிலங்கை முஸ்லிம்களின் அபிலாஷைகளையும் உரிமைகளையும் பெற்றுக்கொடுத்திருக்கிறது.

தென்னிலங்கை பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது முதல் சிங்கள மொழிப் பாடசாலைகளில் முஸ்லிம் மாணவர்களும் விகிதாசார அடிப்படையில் கல்வி கற்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியது வரை கிழக்கு முஸ்லிம்களின் வாக்குப் பலத்தினுடனான அஷ்ரபின் இராஜதந்திர அரசியல் நகர்வுகள் என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது. இருமுறை இந்நாட்டின் அரசாங்கத்தை உருவாக்குவதற்கான அரசியல் பலத்தை மறைந்த அஷ்ரபிற்கு வழங்கியது கிழக்கு முஸ்லிம்களின் வாக்குப்பலம் என்பதையும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் பெரும்பாலானோரை அரசியல் ரீதியாக ஒன்றிணைத்து செயற்படக்கூடிய அரசியல் தலைமையாக விளங்கிய அஷ்ரபின் தலைமைத்துவ இடைவெளி நிரப்பப்பட வேண்டும் என்று குரல் எழுப்பப்பட்டு வருவதில் நியாயமில்லாமலில்லை. நடைபெறவுள்ள தேர்தல் முடிவுகள் இதனை உணர்த்தும் என்பதில் ஐயமில்லை.

 

http://epaper.virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.