Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனா­தி­ப­தியின் கடும் தொனி­யி­லான உரைகள்

Featured Replies

ஜனா­தி­ப­தியின் கடும் தொனி­யி­லான உரைகள்

 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த சில வாரங்­க­ளாக நாட்டில் பல்­வேறு பகு­தி­க­ளிலும் நிகழ்த்­தி­வரும் உரைகள் மக்கள் மத்­தியில் கடும் வர­வேற்பை பெற்­று­வ­ரு­வ­துடன் அர­சி­யல்­வாதிகளையும் அர­சியல் கட்­சி­க­ளையும் கடு­மை­யாக விமர்­சிப்­ப­தாக அமைந்­தி­ருக்­கின்­றன. உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்தல் எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 10ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள நிலையில் ஜனாதிபதி சுதந்­தி­ரக்­கட்­சியின் பிர­சா­ரக்­கூட்­டங்­களில் நிகழ்த்­து­கின்ற உரை­களே இவ்­வாறு கடும் விவா­தத்­திற்கு உட்­பட்டு வரு­கின்­றன.

குறிப்­பாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலைவர் என்ற வகையில் பிர­சா­ரக்­கூட்­டங்­களில் பங்­கேற்று வரு­கின்றார். அந்­த­வ­கையில் பிர­சா­ரக்­கூட்­டங்­களில் ஜனா­தி­பதி ஆற்­று­கின்ற உரைகள் அர­சி­யல்­வா­தி­களை கடு­மை­யாக விமர்­சிப்­ப­தாக அமைந்­தி­ருக்­கின்­றன. விசே­ட­மாக ஊழல் மற்றும் மோசடி செயற்­பா­டு­க­ளுடன் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு தொடர்­புகள் இருப்­ப­தாக சுட்­டிக்­காட்­டி­வரும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது நிர்­வா­கத்தில் அவ்­வா­றா­ன­வர்­க­ளுக்கு எதி­ராக கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் ஊழல்­வா­திகள் ஒரு­போதும் தப்­பிக்க முடி­யாது என்றும் சூளு­ரைத்து வரு­கின்றார்.

அது­மட்­டு­மன்றி கடந்த சில வாரங்­க­ளாக ஜனா­தி­பதி நிகழ்த்தும் உரை­களில் ஒரு­வி­த­மான வேகம் தென்­ப­டு­கின்­றது. அதா­வது மிகவும் ஆக்­ரோ­ஷ­மான முறையில் சில கூட்­டங்­களில் ஜனா­தி­பதி உரை­யாற்­று­வதை காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. அதா­வது தற்­போது தேர்தல் பிர­சா­ரக்­காலம் என்­பதால் ஜனா­தி­பதி தற்­போது உரை­யாற்­றலாம். ஆனால் அவ்­வா­றான உரை­களில் ஜனா­தி­பதி முன்­வைக்கும் விட­யங்­களே இங்கு முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றன. நேற்று முன்­தினம் மட்­டக்­க­ளப்பு பிர­தே­சத்தில் பிர­சா­ரக்­கூட்­ட­மொன்றில் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சி­யல்­வாதிகள் மீது கடும் விமர்­ச­னங்­களை முன்­வைத்­தி­ருந்தார்.

அதா­வது இந்த நாட்டில் அர­சியல் செய்ய வரு­கின்­ற­வர்­களில் நூற்­றுக்கு ஐம்­பது சத­வீ­த­மா­ன­வர்கள் மக்­களின் பணத்தை கள­வா­டு­கின்­றார்கள். 2008 முதல் 2016 வரை மத்­திய வங்கி ஊழல் மோச­டியில் ஆயி­ரக்கணக்­கான கோடி பணங்­களை கையாடல் செய்­துள்­ளார்கள். வேலை செய்யும் ஏழை மக்­களின் ஊழியர் சேம­லா­ப­நிதி, வங்­கி­களில் உள்ள வைப்பு, பல்க­லைக்­க­ழக மாண­வர்­களின் மகா­பொல புல­மைப்­ப­ரிசில் பணம் என்­ப­வற்றை கையாடல் செய்­துள்­ளார்கள் என்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அறி­வித்­தி­ருக்­கின்றார். அத்­துடன் திரு­டர்­களை பிடிப்­ப­தற்­கா­கவும் இலங்கை மத்­திய வங்கி கணக்­கு­களை ஆராய்­வ­தற்­கா­கவும் ஒரு ஆணைக்­குழு நிய­மித்தேன். அத்­துடன் அர­சி­யல்­வா­திகள் பல மேச­டி­களைச் செய்து சம்­பா­தித்த பணம் பற்றி அறி­வ­தற்­கான ஜன­தி­பதி ஆணைக்­குழு ஒன்­றையும் கடந்த வருடம் நிய­மித்தேன். இந்த ஆணைக்­குக்­கு­ழுவின் அறிக்­கையின் பிர­காரம் குற்­ற­வா­ளிகள் என கூறப்­பட்­டி­ருக்கும் அனை­வ­ருக்கும் எதி­ரா­கவும் நாங்கள் வழக்குத் தாக்கல் செய்வோம். எந்தக் கட்­சியைச் சார்ந்­த­வர்­க­ளா­னாலும் அவர்­க­ளுக்கு மன்­னிப்பு வழங்­க­மாட்டோம் என்றும் சூளு­ரைத்­தி­ருந்தார். அந்­த­வ­கையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இந்த நாட்டின் 50 வீத­மான அர­சி­யல்­வா­திகள் ஊழல்­வா­தி­க­ளாக இருப்­ப­தாக குற்­றம்­சாட்­டி­யி­ருக்­கின்றார். அது­மட்­டு­மன்றி கடந்த வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்ற மற்­று­மொரு தேர்தல் பிர­சா­ரக்­கூட்­டத்தில் உரை­யாற்­றி­யி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஊழல்­வா­திகள் எவரும் தன்­னி­ட­மி­ருந்து தப்ப முடி­யாது என தெரி­வித்­தி­ருந்தார்.

மத்­திய வங்கி பிணை­முறி ஆணைக்­குழு அறிக்கை குறித்து நாட்டு மக்கள் நன்­றாக அறிந்­துள்­ளனர். உண்­மை­யான குற்­ற­வாளிகள் யார், எவ்­வாறு ஊழல் இடம்­பெற்­றது என்­பது குறித்து மக்­க­ளுக்கு உண்­மைகள் தெரிந்­துள்­ளன. மத்­திய வங்கி பிணை­முறி குறித்து ஆணைக்­குழு என்­னிடம் வழங்­கிய அறிக்­கையில் அனைத்து விட­யங்­களும் தெளி­வாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளன. ஆகவே, ஊழல்வாதிகள் யாராக இருந்­தாலும் அவர்­க­ளுக்கு எதி­ராக நான் சட்ட நட­வ­டிக்கை முன்­னெ­டுத்து தண்­டனை வழங்­குவேன் என்று ஜனா­தி­பதி குறிப்­பிட்­டி­ருந்தார். அது­மட்­டு­மன்றி இலங்­கையின் பொரு­ளா­தார கொள்­கை­யினை ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் சரி­வர செய்­ய­மு­டி­ய­வில்லை. மூன்று ஆண்­டு­களில் மக்­க­ளுக்­கான பொரு­ளா­தார கொள்கை உரு­வா­க­வில்லை. எனவே, பொரு­ளா­தா­ரத்தை ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யி­ட­மி­ருந்து பெற்று நான் நிர்வ­கிக்­கப்­போகின்றேன் என்று ஜனா­தி­பதி தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

அந்­த­வ­கையில் ஜனா­தி­பதி இந்­நாட்­களில் பங்­கேற்று உரை­யாற்றும் அனைத்­துக்­கூட்­டங்­க­ளிலும் இவ்­வாறு மிகவும் கார­சா­ர­மான கருத்­துக்­களை முன்­வைத்து வரு­கின்றார். ஊழ­லுக்கு எதி­ரான ஒரு காவ­ல­னா­கவே ஜனா­தி­பதி தன்னை வெளிப்­ப­டுத்­திக்­கொண்­டி­ருக்­கின்றார். ஊழல் மோச­டிக்கு எதி­ராக ஜனா­தி­பதி இவ்­வாறு உரை­யாற்­று­வதும் அதற்கு எதி­ராக கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­போ­வ­தாக கூறு­வதும் வர­வேற்­கத்­தக்க விட­யங்­க­ளாகும். அவ்­வாறு ஊழல் மோச­டி­களை துடைத்­தெ­றிந்து நாட்டை சிறந்த முறையில் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கா­கவே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு மக்கள் கட்சி, இன பேதம் பாராமல் ஆத­ரவு வழங்கி அரி­யா­ச­னத்தில் அம­ர­வைத்­தனர். எனவே, மக்கள் வழங்­கிய இந்த மிக விசே­ட­மான ஆணையின் பிர­காரம் நாட்டின் ஊழல் மோச­டி­களை ஒழித்து வள­மான சமூ­கத்தை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டி­யது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­யாய கட­மை­யாகும். காரணம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னைய ஆட்­சியில் இடம்­பெற்ற ஊழல் மோச­டி­க­ளுக்கு முடிவைக் கொண்­டு­வ­ரு­வ­தாக கூறியே தேர்தல் காலத்தில் மக்கள் முன் வாக்­கு­று­தி­களை வழங்­கினார். அந்த வாக்­கு­று­தி­களை நம்­பியே ஜனா­தி­ப­திக்கு தமது ஆத­ரவை தெரி­வித்­தனர்.

எனவே, அதற்­கேற்­ற­வ­கையில் நட­வ­டிக்­கை­க­ளையும் வேலைத்­திட்­டங்­க­ளையும் எடுக்­க­வேண்­டி­யது ஜனா­தி­ப­தியின் கட­மை­யாகும். எனினும் கடந்த மூன்று வரு­டங்­க­ளாக நாட்டில் என்ன நடந்­தது என்­பது விவாதத்­திற்கு உட்­ப­டுத்­த­வேண்­டிய விட­ய­மாகும். கடந்த மூன்று வரு­ட­கா­லத்தில் நாட்டில் ஊழல் மோச­டி­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டதா அல்­லது ஊழல் மோச­டி­களை தடுக்க உரிய ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­னவா? கடந்த மூன்­று­வ­ரு­ட­கா­லத்தில் நாட்டில் எவ்­வி­த­மான ஊழல் மோச­டி­களும் இடம்­பெற­வில்­லையா என்ற கேள்­விகள் மக்கள் மத்­தியில் எழு­கின்­றன. அவற்­றுக்கு ஜனா­தி­ப­தியும் அர­சாங்­கமும் பதில் கூற­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கி­றது. அதா­வது கடந்த காலத்தில் ஊழல் மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ள­தாக எதிர்க்­கட்­சி­க­ளினால் கடும் குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

குறிப்­பாக மத்­திய வங்­கியில் இடம்­பெற்­றுள்­ள­தாக கூறப்­படும் பிணை முறி மோச­டியை சுட்­டிக்­காட்­டலாம். இந்த விட­யத்தில் தற்­போது ஜனா­தி­ப­திக்கும் ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்­சி­யி­ன­ருக்­கு­மி­டையில் முறுகல் ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்ள போதிலும் இது தொடர்பில் சரி­யான நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வேண்­டி­யது ஜனா­தி­ப­தியின் பொறுப்­பாகும். எந்­தக்­கா­ரணம் கொண்டும் இந்த ஊழல் மோச­டி­களை வெறு­மனே விட்­டு­வி­டக்­கூ­டாது.

அந்­த­வ­கையில் கடந்த மூன்று வரு­ட­கா­லத்தில் ஊழல் மோச­டி­க­ளுக்கு எதி­ராக சரி­யான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­ட­னவா என்ற கேள்வி அனைவர் மத்­தி­யிலும் எழு­கின்­றது. எனவே, ஜனா­தி­பதி தலை­மை­யி­லான அர­சாங்கம் இந்த விட­யத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கும் அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யாக இன்னும் இரண்டு ஆண்­டுகள் பதவியில் இருக்க முடியும். இந்த இரண்டு ஆண்டுகளிலாவது ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மக்கள் திருப்தியடையும் வகையில் ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். கடந்த ஆட்சியின் போது பாரிய ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது தொடர்பில் மக்கள் மத்தியில் விவாதிக்கப்படும் ஒரு விடயமாக மாறியிருக்கின்றது.

எனவே, அதற்கு தொடர்ந்தும் இடமளிக்கக்கூடாது. விரைந்து ஊழல் மோசடிகளை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் கடந்த காலங்களில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பிலும் உரிய நகர்வுகளை மேற்கொள்ளவேண்டியது அவசியமாகும்.

இந்த விடயத்தில் தொடர்ந்தும் மக்கள் மத்தியில் விசனம் ஏற்படும் வகையில் அரசாங்கம் செயற்படக்கூடாது. ஜனாதிபதி மேடைகளில் கடும் தொனியில் உரையாற்றுவது போன்று செயற்பாட்டு ரீதியாகவும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென வலியுறுத்துகின்றோம்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-23#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.