Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்றாம் உலகப் போர்... முரசு கொட்டும் வடகொரியா!- 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்? (

Featured Replies

மூன்றாம் உலகப் போர்... முரசு கொட்டும் வடகொரியா!- 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்? ( பகுதி-1)

 
 

KIM_JONG_1_13236.jpg

போரின் வலி என்னவென்பது அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். இரண்டாம் உலகப்போரின் எச்சங்களாகவும், அதன் கொடூரத்தை உணர்த்தும் சாட்சியங்களாகவும் உள்ள ஹிரோசிமாவும், நாகசாகியும் இன்றும் உலகுக்குப் போரின் வலி குறித்து பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றன.  சமீப காலங்களில் ஆப்கானிஸ்தான், ஈரான், இலங்கை, சிரியா போன்ற நாடுகளில் நடந்த  போர்களின்போது இடம்பெற்ற மோதல்களும் தாக்குதல்களும் அந்தந்த நாடுகளில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன என்பதை நாம் கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறோம். 

 

இத்தகைய சூழலில்தான் நாஸ்ட்ரடாமஸ் சொன்ன ஜோதிடத்தின் படி  2018 ல் மூன்றாவது உலகப்போர் மூண்டுவிடுமோ, அதற்கான தீயை  'ஆசியாவின் ஹிட்லர்' என்று பிறநாட்டு தலைவர்களால் அழைக்கப்படும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மூட்டிவிடுவாரோ என  உலக நாடுகள் பதை பதைப்புடன் பார்த்துக் கொண்டிருக்கின்றன.  வடகொரியாவிலும் அமெரிக்காவிலும் அதிபர் பதவியில் இருக்கும் இரு தலைவர்களின் முதிர்ச்சியற்ற பேச்சுகள் மற்றும் நடவடிக்கைளைப் பார்க்கும்போது, " நான்தான் அப்பவே சொன்னேன்ல...பாருங்க என்ன நடக்கப்போகுதுன்னு..." என்று  நாஸ்டர்டாம் தனது கல்லறைக்குள் இருந்து கெக்கலிப்புடன் சொல்வது போன்றே இருக்கிறது. 

இருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த இரண்டாம் போருக்கு ஹிட்லர்தான் முக்கிய காரணம் என்று எப்படி குற்றம் சாட்டப்பட்டாரோ அதேப்போன்றுதான் இந்த இருபத்தோராம் நூற்றாண்டின் ஆசிய ஹிட்லராக பார்க்கப்படுகிறார் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்.

kim_jong_600_13009.jpg

அமெரிக்காவை அலறவைக்கும் ஏவுகணைச் சோதனை

பகை நாடான தென்கொரியாவுக்கு ஆதரவளிப்பதால், அமெரிக்கா மீது விரோதம் கொண்டுள்ள வடகொரியா, சர்வதேச நாடுகளின் கண்டனம், ஐ.நாவின் தடைகள் என எதையும் பொருட்படுத்தாமல், தொடர்ந்து அணு ஏவுகணைச் சோதனைகளை நடத்தி வருகிறது. குறிப்பாக ஜப்பான் மற்றும் அமெரிக்காவை குறிவைத்து அந்த நாடு இந்த அணு ஏவுகணைச் சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியாவின் மிரட்டலுக்குப் பதிலடி கொடுப்பதற்காக கடந்த  ஆண்டு மத்தியில் தென் கொரியாவுடன் கடல் பகுதியில் அமெரிக்க ராணுவம் கூட்டாக போர் பயிற்சி மேற்கொண்டது. இது வட கொரியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ஆகஸ்ட் மாதம்  இறுதியில், வடகொரியா மீண்டும் ஏவுகணைச் சோதனை மேற்கொண்டது. இந்த ஏவுகணை ஜப்பான் நாட்டின் வடக்கில் உள்ள ஹோக்கைடோ பகுதி வானில் சுமார் 14 நிமிடங்கள் பறந்தது.

ஜப்பான் கடல் பகுதியில் இருந்து 1,180 கி.மீ தூரம் கடந்து சென்று பசுபிக் கடலில் விழுந்தது. விழுவதற்கு முன்பாக ஏவுகணை மூன்று பாகங்களாக வெடித்து சிதறியது. இந்த ஏவுகணை அமெரிக்காவின் குயாம் தீவை எளிதில் சென்று தாக்கும் திறன் படைத்தது. அதனைத் தொடர்ந்து நவம்பர் இறுதிவாக்கில் அமெரிக்காவின் எந்தவொரு நகரத்தையும் தாக்குகிற ஆற்றல் வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ஹவாசாங்-15 ரகம்) ஏவி சோதித்தது வடகொரியா.

NK_missile_test_13497.jpg

அந்த நாடு இதுவரை ஏவி சோதித்த அத்தனை ஏவுகணைகளையும் மிஞ்சுகிற விதத்தில் இந்த ஏவுகணை, 4 ஆயிரத்து 475 கி.மீ. உயரத்துக்கு செங்குத்தாக பாய்ந்து, 53 நிமிடங்களில் 960 கி.மீ. தொலைவுக்கு பறந்து, ஜப்பான் கடலில் விழுந்தது. இதனையடுத்து மாபெரும் வெற்றிக் கொண்டாட்டத்தை வடகொரியா நடத்த, அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகள் அதிர்ந்துபோயின. நிலைமை இதேரீதியில் போனால் என்ன செய்வது என்று ஐ.நா. சபையும் செய்வதறியாது கையைப் பிசைந்துகொண்டு நின்றது.  
இந்த நிலையில் வடகொரியாவின் ஏவுகணைச் சோதனைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதிக்கும் தீர்மானத்தை அமெரிக்க உருவாக்கியது. 

ஐ.நா. தடையும் அணு ஆயுத பட்டன் மிரட்டலும்

இந்த தீர்மானத்தின்மீது கடந்த டிசம்பரில் ஐ.நா. வாக்கெடுப்பு நடத்தியது. இதற்கு வடகொரியாவின் நேச நாடுகளான சீனா, ரஷ்யா உள்ளிட்ட ஐ.நா. உறுப்பு நாடுகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்து வாக்களித்தன. இந்த வாக்கெடுப்பின்மூலம் வடகொரியாவுக்கு 90 சதவிகித பெட்ரோல் இறக்குமதி குறைக்கப்படுகிறது. இதனையடுத்து, தங்கள் நாட்டின் மீதான ஐ.நா.வின் பொருளாதார தடைகள் போருக்கான நடவடிக்கையாகவே இருக்கும் என்று கூறிய கிம் ஜாங், இந்த பொருளாதாரத் தடை கொண்டுவரப்படுவதற்கு காரணமாக அமைந்த அமெரிக்கா மீது கடும் ஆத்திரத்தை வெளிப்படுத்தினார். 

புத்தாண்டு அன்று, "எனது மேஜையின் மீது இருக்கும் அணு ஆயுத பட்டனை அமுத்தினால் அமெரிக்கா க்ளோஸ்..." என கிம் ஜாங்  மிரட்டல் விடுக்க, பதிலுக்கு அமெரிக்க அதிபர் டொனா;டு ட்ரம்பும், " எங்கள் கை என்ன புளியங்காய் பறித்துக் கொண்டிருக்குமா...? எனது மேஜையிலும்தான் அணு ஆயுத பட்டன் உள்ளது. அழுத்தினால் வடகொரியா இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும்...' என பதிலடி கொடுக்க, " அடக் கஷ்டக் காலமே...!' என அன்றிலிருந்தே அமெரிக்க மற்றும் வடகொரிய மக்கள் மட்டுமல்லாது உலக நாடுகளே  தலையில் கை வைத்தபடி, இன்னும் என்னென்ன மிரட்டல்களெல்லாம் இந்த இரு தலைவர்களிடமிருந்து வரப்போகிறதோ என்று பார்க்கத் தொடங்கினர்.

trump_-_kim_600_13477.jpg

இந்த நிலையில்தான்  அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ, " அணு ஆயுதம் மூலம் அமெரிக்கா மீது வட கொரியா இன்னும் சில மாதங்களில் தாக்குதல் நடத்தக்கூடும்鋳 என கவலை தெரிவித்து அந்த நாட்டு அதிபர் ட்ரம்ப்புக்கு  'நோட்' போட்டுள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல், அமெரிக்கர்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது. ஏனெனில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் கேரக்டர் அப்படி. கடந்த காலங்களில் மட்டுமல்லாது இப்பொழுதும் அவ்வப்போது அவர் விடுக்கும் கோக்குமாக்குத் தனமான மிரட்டல்கள், அவர் ஸ்திரமான மன நிலையில்தான் உள்ளாரா என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு உள்ளது என்பதால், இந்த மனுஷன் வில்லங்கமாக ஏதாவது செய்து தொலைத்தால் என்னாவது என்ற அச்சம் அமெரிக்காவை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. 

அமெரிக்கா ஒருபுறம் இப்படி கவலைப்பட்டுக் கொண்டிருக்க, கிம் ஜாங், அமெரிக்கா மீது ஏவுகணையை ஏவும் அதே சமயத்தில் ஏற்கெனவே எதிரிகளாக பார்த்துக் கொண்டிருக்கும் தங்கள் மீதும் ஏவ சாத்தியம் உள்ளதே என வடகொரியாவின் அண்டை நாடுகளான தென்கொரியாவும் ஜப்பானும் மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறன. அதே சமயம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பதில் தாக்குதலோ அல்லது முன்கூட்டியே தற்காப்பு தாக்குதலோ நடத்தினால் தங்கள் கதி என்னவாது என ஏற்கெனவே கிம் ஜாங்கின் கிறுகிறுக்க வைக்கும் நடவடிக்கைகளால் நொந்து நூலாகித் தவிக்கும் வடகொரிய மக்களும் கடவுளை வேண்டியபடி கதறிக் கொண்டிருக்கிறார்கள். 

மூன்றாம் உலகப் போர்... அபாய சங்கை ஊதிய அமெரிக்க உளவுத் துறை

"வடகொரியா அச்சுறுத்தலை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்காமல் ராணுவ நடவடிக்கை எடுத்தால் எவ்விதமான பிரச்னைகள் ஏற்படும் என்பதை அதிபர் ட்ரம்ப்புக்குத் தெரிவித்துள்ளோம். வடகொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுத்தால், கொரிய தீபகற்ப பகுதியில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் மனித இழப்புகள் மிக மோசமான அளவில் இருக்கும். 

அதிபர் கிம்மை பதவியில் இருந்து அகற்றினாலோ அல்லது அமெரிக்கா மீது அணுஆயுதம் ஏவும் திறனை கட்டுபடுத்தினாலோ என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். இன்னும் சில மாதங்களில் அமெரிக்கா மீது அணு ஆயுதம் மூலம் வடகொரியா தாக்குதல் நடத்தலாம். இது கவலை அளிக்கிறது. வடகொரிய அதிபர் பற்றி கடுமையான வார்த்தைகளை அதிபர் டிரம்ப் உபயோகிக்கிறார். ஆனால் அது வடகொரியாவின் காதில் விழவில்லை.  இந்த வார்த்தைகள் மூலம் அமெரிக்கா மிகவும் கோபமாக உள்ளது என்பதை கிம் ஜாங் உன் புரிந்து கொள்ள வேண்டும்" என அமெரிக்க உளவுத் துறைத் தலைவர் மைக் பாம்பியோ அளித்துள்ள பேட்டி நிலைமை எந்த அளவுக்கு சீரியஸாக உள்ளது என்பதை உணர்த்துகிறது. 

korea_missile_fire_13342.jpg

ஏற்கெனவே சீனா, வடகொரியாவுக்கு ஆதரவாகத்தான் நடந்து கொள்கிறது. இந்த நிலையில் பல ஆண்டு காலமாக அடங்கியிருந்த ரஷ்யா - அமெரிக்கா இடையேயான பனிப்போர் தற்போது வெளிப்படையாகவே மோதலாக வெடிக்க ஆரம்பித்துள்ளது.  இந்த நிலையில், வடகொரியாவுக்கு எதிரான பொருளாதார தடைக்கு ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்தபோதிலும், மறைமுக அவ்விரு நாடுகளும் வடகொரியாவை ஆதரித்துக் கொண்டுதான் உள்ளன. 

இந்த நிலையில், அமெரிக்க உளவுத் துறை கவலை தெரிவித்துள்ளபடி வடகொரியா - அமெரிக்கா இடையே போர் மூண்டால் அதனால் ஏற்படுகிற பாதிப்புகள் அவ்விரு நாடுகளுடன் மட்டும் நிற்காது. வடகொரியாவுக்கு ஆதரவாக ரஷ்யா, சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவிக்கும். அதேபோன்று அமெரிக்காவுக்கு ஆதரவாக ஜப்பான், தென்கொரியா மற்றும் அமெரிக்காவின் இதர நேச நாடுகளும் களம் இறங்கும்பட்சத்தில் அது நிச்சயம் மூன்றாவது உலகப்போருக்கு வித்திடும்.  

இந்த நிலையில் இந்த அளவுக்கு அமெரிக்காவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிக்கொண்டு, அதன்மூலம் பிற உலக நாடுகளுக்கும் மூன்றாம் உலகப் போருக்கான அச்சத்தை காட்டிக்கொண்டிருக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறார், இருபத்தோராம் நூற்றாண்டின் ஆசிய ஹிட்லர் என்று அழைக்கப்படும் அளவுக்கு கிம் ஜாங் ஹிட்லரின் குணாதிசியங்களுடன் ஒத்துப்போகிறாரா, அவரின் ஜாதகம் என்ன, அவர் அதிபரானது எப்படி, வடகொரியாவின் கடந்த கால வரலாறு , தென்கொரியாவுடன் என்ன பிரச்னை,  இரண்டு கொரிய நாடுகளும் பிரிந்தது ஏன், அமெரிக்கா - வடகொரியா இடையே எதனால் மோதல் தொடங்கியது,போர் மூண்டால் அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் பற்றியும், தனது அரசியல் எதிரிகளையும் ராஜ துரோகக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களையும் கிம் ஜாங் எத்தகைய சித்ரவதைக்கு உள்ளாக்குவார் அல்லது கொடூரமாகக் கொல்வார் என்பதை அருகிலிருந்து பார்த்த முன்னாள் சிறை அதிகாரிகள் சொல்லும் மரண முகாம்கள் குறித்த பகீர் தகவல்களையும், உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகளையும் மீறி வடகொரியா எப்படி பொருளாதார ரீதியில் தாக்குப்பிடித்துக் கொண்டிருக்கிறது என்பதையும், சீனா ஏன் வடகொரியாவுக்கு ஆதரவாக உள்ளது, இந்த இரண்டு நாடுகளுடன் ரஷ்யாவும் கைகோத்தால் அது அமெரிக்காவுக்கு வருங்காலத்தில் எத்தகைய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் வரும் அத்தியாயங்களில் ஒவ்வொன்றாக பார்க்கலாம்....

============================================================================

நடுங்க வைக்கும் நாஸ்ட்ரடாமஸ் ஆருடங்கள்...


பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்ட்ரடாமஸ், கி.பி.3797 வரை உலகில் என்னவெல்லாம் நடக்கப் போகிறது  என்பதைக் கூறியுள்ள அபூர்வ ஜோதிடர். அவரை ஜோதிடர் என்று கூறுவதை விட 'தீர்க்கதரிசி' என்றே சொல்லலாம்  போல. அந்த அளவுக்கு அவர் கூறிய ஆருடங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வருவது உலகை  திகைப்புக்குள்ளாக்கி இருக்கிறது. 

14-12-1503 ல் பிறந்து, 2-7-1566ல் மறைந்த இவர் வெளியிட்ட ' நூற்றாண்டுகள்' என்ற நூலில்தான் சுமார் 3,000  பலன்களை இவர் கூறியுள்ளார். இந்த நூல் 942 செய்யுள்களைக் கொண்டது. ஒவ்வொரு செய்யுளிலும் நான்கு  வரிகள் உள்ளன. இவைகள் காண்டமாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு காண்டத்திலும் நூறு பாடல்கள் உள்ளன. இவர் கூறிய ஆருடங்கள் பெரும்பாலும் அழிவையும் விபத்துகளையும் கொலைகளையும் சுட்டிக் காட்டுவதால்,  இவரது அந்த 'நூற்றாண்டுகள்' நூலை சற்று திகிலுடன்தான் புரட்டுகிறார்கள். லண்டனில் ஏற்பட்ட மாபெரும் தீ விபத்து, பிரெஞ்சுப் புரட்சி, ஹிட்லரின் எழுச்சியும் வீழ்ச்சியும், கென்னடியின்  கொலை போன்றவை இவரால் முன்கூட்டியே துல்லியமாக கணிக்கப்பட்டவை. 

nostradamus_13272.jpg

இந்தியத் தலைவர்கள் பற்றியும் நாஸ்ட்ரடாமஸ் கூறிய ஆரூடங்கள் திகைக்க வைக்கிறன. அவரது ஆறாம்  காண்டத்தில் 74ம் பாடலில்,"மூன்று புறம் கடல் சூழ்ந்த நாட்டில் பெரும் அதிகாரம் கொண்ட பெண்மணி எதிர்கட்சிகள் ஒற்றுமை இன்றி  இருப்பதால் அதிகாரத்தை மீண்டும் பெறுவார். தனது சொந்த மெய்காப்பாளர்களாலேயே அவர் 67ம் வயதில்  கொல்லப்படுவார். இது நூற்றாண்டு முடிய 16 ஆண்டுகள் இருக்கும்போது நடக்கும்" என  இந்திரா காந்தி கொலை செய்யப்படுவதைக் கணித்துக் கூறியுள்ளார். 

எமர்ஜென்ஸியினால் தேர்தலில் தோற்றுப்போன இந்திரா காந்தி எதிர்கட்சிகள் ஒற்றுமை இல்லாமல் தமக்குள்  சண்டை போட்டுக் கொண்டதால் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதையும், 1984 ல் அவர் சொந்த  மெய்காப்பாளர்களால் சுடப்பட்டதும் உலகம் அறிந்த நிகழ்வு. 

இதே போல ராஜீவ் காந்தி கொலை செய்யப்படுவதையும் அவர் ஒன்பதாம் காண்டத்தில் 53ம் பாடலில்  தெரிவித்துள்ளார்.

அதேப்போன்று அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதல் பற்றி,"ஒன்பதாம் மாதம் பதினொன்றாம் நாளில்  இரண்டு இரும்புப் பறவைகள் பெரிய சிலைகள் மீது மோதும்" என்று அவர் குறிப்பிடுகிறார். ஆனால் இதை விட  துல்லியமாக 10ம் காண்டம் 72ம் பாடலில்,  "1999ல் ஒன்பதாம் மாதம் வானிலிருந்து ஒரு பெரிய அரக்கன்  தோன்றுவான்!" என்ற  அவரது கணிப்பு அமெரிக்கர்கள் உள்ளிட்ட உலக மக்கள் அனைவரையும்  திகைக்க  வைத்தது!

2018- ல் என்ன நடக்கும்?

 * ஒரு பெரிய யுத்தம் தொடங்கி அனைத்து ஐரோப்பிய நாடுகளும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும். இந்த யுத்தம்  நீண்ட நாள் நீடித்து அனைவரையும் பீதிக்குள்ளாக்கும். இறுதியில் அமைதி ஏற்படும். அதே சமயம் அந்த அமைதியை  வெகு சிலரே அனுபவிப்பார்கள். 

* ஒரு சக்திவாய்ந்த நில நடுக்கம், குறிப்பாக அமெரிக்காவின் மேற்கு பகுதியில் ஏற்படும். அதன் வீச்சு  என்னவென்பதை உலகம் முழுவதும் உள்ள நாடுகள் உணர்ந்துகொள்ளும்.


* கடும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும். ( இயற்கைச் சீற்றங்கள் மற்றும் மூன்றாவது உலகப் போர் காரணமாக இந்த  வீழ்ச்சி ஏற்படலாம் என இதற்கு விளக்கம் சொல்லுகிறார்கள் நாஸ்டர்டாமஸின் ஆருடத்தை அலசி ஆராய்பவர்கள். 

* நவீன மருந்துகளின் கண்டுபிடிப்பால் மனிதர்களின் ஆயுட்காலம் நீடிக்கும். குறைந்தபட்சம் 200 ஆண்டு காலமாவது  வாழ்வார்கள். 80 வயதுடைய நபர் 50 வயதுடைய தோற்றத்துடன் காணப்படுவார்... என்று போகிறது 2018-க்கான  நாஸ்ட்ரடாமஸின் ஆருடங்கள். 

==========================================================================================

https://www.vikatan.com/news/world/115268-could-north-korea-be-an-unexpected-start-of-world-war-iii-series-part-1.html

தொடரும்...

  • தொடங்கியவர்

வடகொரியா Vs தென்கொரியா: பிரிந்தது எப்படி? - 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்? பகுதி- 2

 
 

thani_oruvan_2_12436.jpg

 

 

 

லக நாடுகளின் கண்டனங்கள், எதிர்ப்புகள் போன்ற எதையும் கண்டுகொள்ளாமல், தொடர்ந்து அமெரிக்காவைக் குறிவைத்து அணு ஆயுத ஏவுகணைச் சோதனைகளை நடத்தி வரும் வடகொரியாவால் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கின்றன. இந்த நிலையில்தான் வடகொரியாவை அடக்கிவைக்க அமெரிக்கா அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால், அது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுத்து விடும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. இந்த நிலையில், அமெரிக்கா மீது வடகொரியாவுக்கு ஏன் இந்தத் தீராப் பகை என்பதற்கான ஃப்ளாஷ்பேக்கிற்குப் போவதற்கு முன்னர், கொரிய தீபகற்பம் ஏன் பிளவுபட்டது, வடகொரியா - தென்கொரியா போர் எதனால் ஏற்பட்டது எனத் தெரிந்துகொண்டால்தான், அதற்கான விடைக்குள் செல்ல முடியும்.

kim_red_600_12148.jpg

கொரிய தீபகற்பத்தை ஆண்டு வந்த கார்வியோ வம்சத்தின் ஆட்சி கவிழ்ந்த பின்னர், 1932-லிருந்து ஜோஸியான் வம்ச ஆட்சிதான் சுமார் 50 ஆண்டு காலம் ஆண்டு வந்தது. 1910-ல் கொரியாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி அந்த நாட்டைத் தனது ஆளுமையின் கீழ் இணைத்துக்கொண்டது ஜப்பான். அதனைத் தொடர்ந்து 1910 முதல் 1945 வரை சுமார் 35 ஆண்டு காலம், ஜப்பானின் கொடூரமான காலனி ஆதிக்கத்தில்தான் கொரியா இருந்து வந்தது. இந்தக் காலகட்டங்களில் கொரிய மக்கள் தங்கள் கலாசாரத்தையும் மொழியையும் பாதுகாக்க மிகவும் போராடினர். பள்ளிகளில் குழந்தைகளுக்குக் கொரிய மொழியோ அல்லது வரலாறோ பயிற்றுவிக்க அனுமதிக்கப்படவில்லை. மக்கள் தங்கள் பெயர்களை ஜப்பானிய பெயர்களாக மாற்றிக்கொள்ளுமாறும், ஜப்பானிய மொழியைக் கற்றுக்கொள்ளுமாறும் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். அதுமட்டுமல்லாது கொரியா வரலாறு தொடர்பான ஏராளமான முக்கிய ஆவணங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. விவசாய நிலங்களில் ஜப்பானியத் தேவைக்கான பயிர்கள் என்னவோ அவைதான் பயிரிடப்பட்டன.

இந்தச் சூழ்நிலையில்தான் இரண்டாம்  போர் வெடித்து, அதில் ஜப்பான் தோற்கடிக்கப்பட்டதும் கொரிய மக்கள் விடுதலைக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கினார்கள். ஆனால், பாவம் அப்போது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை, அடுத்து எந்த மாதிரி பாதிக்கப்படப் போகிறோம் என்று.

2-ம் உலகப்போரும் ஜப்பானின் சரணாகதியும்

இந்தக் கட்டத்தில்தான் கொரிய தீபகற்பம் ஏன் பிளவுபட்டது, அதற்கு யார் காரணம் என்ற கேள்விகள் வருகின்றன. இரண்டாம் உலகப் போரின் முடிவில், 1945-ம் ஆண்டு ஜப்பான், நேச நாடுகளிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து, அப்போதைய சோவியத் யூனியன் அரசு அதிரடியாக கொரியாவின் வட பகுதிக்குள் புகுந்து, ஜப்பான் வீரர்களை விரட்டியடித்துவிட்டு அதனைக் கைப்பற்றத் தொடங்கியது. அதே சமயம் இதே எண்ணத்துடன் இருந்த அமெரிக்காவின் துருப்புகள், கொரிய தீபகற்பத்திலிருந்து சுமார் 500 மைல் தொலைவில் இருந்ததாலும், ஜப்பான் இத்தனை சீக்கிரம் சரணடைந்துவிடும் என்று எதிர்பார்க்காததாலும், நடப்பதைத் திகைப்புடன் பார்த்தபடியே, " ஐயோ... விட்டால் ஒட்டுமொத்த கொரியப் பகுதியையும் சோவியத் ரஷ்யா ஸ்வாகா செய்துவிடும்" என அலறியபடியே, சோவியத் ரஷ்யாவுடன் ஓர் உடன்பாட்டுக்கு வந்தது. 

japan_surrender_to_US_12246.jpg

விடுதலையில் முளைத்த கொரியப் பிரிவினை...

இரண்டாம் உலகப்போரில் ஜப்பானைச் சரணடையச் செய்ததில் இரண்டு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட்டதால், 'வடக்குப் பகுதி எனக்கு... தெற்கு பகுதி உனக்கு' என ரஷ்யாவும் அமெரிக்காவும் உடன்படிக்கை செய்துகொண்டு கொரியாவைப் பிரித்துக்கொண்டன. 38-வது அட்சயக் கோட்டின் வடகொரியா என்றும் தென்புறம் தென்கொரியா என்றும் இரு நாடுகளாக ஆனது.

இந்த நிலையில், வெவ்வேறு அரசியல் சித்தாந்தங்களும் அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா ஆகிய இரண்டு வல்லரசு நாடுகளின் ஆதிக்கமும் சேர்ந்து கொரியாவை ஆட்டிப்படைக்க, 1947-ல் ஐ.நா. தலையிட்டு, அதன் மேற்பார்வையில் வடகொரியா மற்றும் தென்கொரியா ஆகிய இரண்டுக்கும் ஒரே ஜனநாயக அரசை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் நம்பிக்கையின்மை மற்றும் நன்கு திட்டமிடாதது போன்ற காரணங்களால் அத்தேர்தலை வெற்றிகரமாக நடத்த முடியாமல் போனது. வடகொரியாவில் தேர்தலை நடத்தவிடாதவாறு சோவியத் ரஷ்யா தடுத்ததோடு, முன்னாள் ஜப்பானிய கெரில்லா எதிர்ப்பாளரும் கம்யூனிஸ ஆர்வலருமான, Kim Il-sung ஐ, கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு பிரதமராக நியமித்தது. 1947-ம் ஆண்டு, அக்டோபர் மாதம், Kim Il-sung -ன் அரசுதான் கொரியாவின் இரண்டு பாகங்கள் மீதும் அதிகாரம் உள்ள அரசு என்று சோவியத் ரஷ்யா அறிவித்தது. தென்கொரியாவிலும் அதே கதைதான். அமெரிக்காவின் ஆதரவுடன், இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக, கம்யூனிஸ எதிர்ப்பாளரான Syngman Rhee, புதிதாக அறிவிக்கப்பட்ட குடியரசின் முதல் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றார். Syngman Rhee -ன் அரசை, சட்டபூர்வமான அரசாங்கம் என்று ஐ.நா அறிவித்தது.

38_th_parallel_12598.jpg

3 ஆண்டுகள்... முற்றுப்பெறாத போர்

இந்த நிலையில், இரு தலைவர்களும் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொரியாவை ஒருங்கிணைக்க முற்பட்டனர். இதனால் அவ்வப்போது எல்லை தாண்டி இலேசாக மோதிக் கொண்டிருந்த நிலையில்தான், தென் கொரியாவின் ராணுவ ஆதரவு கோரிக்கையை, அமெரிக்கா மறுத்தது. அதே சமயத்தில், வட கொரியாவின் ராணுவத்தை சோவியத் ஒன்றியம் வலுப்படுத்தியது.

இதனையடுத்து உற்சாகமடைந்த வடகொரியா, ஜூன் 25, 1950-ல் தென் கொரியா மீது படையெடுத்தது. அந்தக் கொரியப் போர்தான் முதல் பெரிய மோதல். அந்தப் போர், 1953 ஜுலை வரைத் தொடர்ந்தது. அந்தச் சமயத்தில், சோவியத் ஒன்றியம் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தைப் புறக்கணித்தது. இந்த நிலையில், போர் தொடங்கிய நான்கு மாதங்களுக்குள்ளாகவே ஒட்டு மொத்த கொரியாவின் 90 சதவிகித பகுதிகளை வடகொரிய துருப்புகள் பிடித்தன. இனியும் தாமதித்தால், வட கொரியாவின் சக்தி வாய்ந்த படைகள், கொரியாவை ஒன்றுபடுத்தி விடுவார்கள் என்பது தெரிந்ததும், ஐ.நா ஒரு உள்நாட்டுப் போரில் தலையீடு செய்தது. சோவியத் யூனியன் மற்றும் சீனா ஆகிய நாடுகள் வட கொரியாவை ஆதரித்தது. வட கொரியா மற்றும் தென் கொரியா ஆகிய இரு பகுதிகளிலும் பொதுமக்கள் அழிவின் விளிம்பில் தள்ளப்பட்டனர்.

north_korean_fight_600_12095.jpg

அதே சமயம் ஐ.நா. தலையிட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட பதினாறு நாட்டுப் படைகள் சென்று, வட கொரியா மற்றும் ரஷ்யாவின் பிடியிலிருந்து தென்கொரியாவை விடுவித்து, ஒரு வழியாக இருநாடுகளும் போர் நிறுத்தம் செய்தன. மூன்று ஆண்டுகளாக நடந்த போரில் பலத்த சேதங்கள். ஒரு இனமாக, மொழியாக ஒன்றுபட்டிருந்த கொரிய மக்கள் சுமார் 12 லட்சம் பேர் இந்தப் போரினால் உயிரிழந்தனர். அமெரிக்க ராணுவத் தரப்பிலும் சுமார் 36,000 வீரர்கள் பலியாயினர். பல ஆயிரக்கணக்கான சீனத் துருப்புகளும் இந்தப் போரினால் உயிரிழக்க நேரிட்டது. இவ்வளவு இழப்புகளுக்குப் பின்னர், இரு நாடுகளின் எல்லையில் ராணுவமயமற்ற வலயம் ஒன்றும் அமைக்கப்பட்டது. அதே சமயம் இரு நாடுகளுக்கும் இடையேயான சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்படாததால், தொழில்நுட்பரீதியாக அங்கு இன்னும் போர் நிறுத்தம் அமலில் இல்லை. இது குத்துமதிப்பான யுத்த நிறுத்தமாகத்தான் இருந்தது. முழுமையான யுத்த நிறுத்தம் ஒன்று அமைதி உடன்படிக்கைக்குப் பின் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சொல்லப்பட்ட அந்த 'அமைதி உடன்படிக்கை' அரை நூற்றாண்டைக் கடந்து இன்னும் ஏற்படவில்லை.

வடகொரியா Vs தென்கொரியா: வேறுபாடுகள் என்ன? 

* தென்கொரியாவைத் தனது ஆளுமையின் கீழ் கொண்டுவந்து ஒன்றுபட்ட கொரியாவை உருவாக்கிவிட வேண்டும் என்ற தனது மூதாதையர்களின் ஆசையை நிறைவேற்றும் விதமாகத்தான், தற்போதைய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தொடர்ந்து அணு ஆயுதச் சோதனையை நடத்தியும், எல்லையில் தாக்குதல் நடத்தியும் ராணுவ வலிமை மூலம் ஒன்றுபட்ட கொரியாவை உருவாக்கிவிட வேண்டும் எனத் துடியாய் துடிக்கிறார்.

* தென்கொரியாவுக்கு ஒன்றுபட்ட கொரியாவாக ஒன்றிணைய வேண்டுமென்ற விருப்பம் இல்லையா என்றால், இருக்கிறது, ஆனால் அதை ஜனநாயக மற்றும் முதலாளித்துவ முறைகளில் ஒன்றிணைக்க வேண்டும் என விரும்புகிறது. ஆனால் வடகொரியாவோ தனது முதல் கம்யூனிஸ ஆட்சியாளரான Kim Il-sung -ன் Juche சித்தாந்தத்தின்படி ஒன்றிணைய வேண்டும் என விரும்புகிறது.

ஒன்றுபட்ட கொரியாவின் தலைவரை ஜனநாயக முறையில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் எனத் தென்கொரியா விரும்புகிறது. ஆனால் வடகொரியாவோ தற்போதைய அதிபர் கிம் ஜாங்கும், அவரது வாரிசுகளும் கொரியாவை ஆள வேண்டும் என விரும்புகிறது.

* முதலாளித்துவ கொள்கைதான் தனது பொருளாதாரத்துக்கு ஆதாரமானது என்று தென்கொரியா கருதுகிறது. ஆனால் வடகொரியாவோ கம்யூனிஸ கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளது.

* வடகொரியா ஒரு முழுமையான ராணுவ மயமாக்கப்பட்ட தேசமாக உள்ளது. ஆனால், தென்கொரியாவோ ராணுவத்துக்கு முக்கியத்துவம் அளித்தாலும், ராணுவயிசத்தைத் தேசியக் கொள்கையாக ஏற்றுக்கொள்ள முடியாது என்ற கருத்தைக் கொண்டுள்ளது.

kimjong_with_missile_600_12137.jpg

வடகொரியா ஒரு சர்வாதிகாரியின் ( கிம் ஜாங் உன் ) கீழ் கம்யூனிஸ பாணி அரசாங்கத்தால் ஆளப்படுகிறது. அனைத்துத் துறைகளும் அரசாங்கத்தால்தான் நடத்தப்படுகின்றன. பழைமையான அதே சமயம் மிகவும் பலம் வாய்ந்த ராணுவத்தைக் கொண்டுள்ளது வடகொரியா. அந்த நாட்டின் தற்போதைய ஒரே ஆதரவாளர் சீனா மட்டுமே.

* தென்கொரியா மேற்குலக நாடுகளைப் போன்று ஜனநாயக அரசாங்கத்தைக் கொண்டிருக்கிறது. வடகொரியாவுடன் ஒப்பிடுகையில் அதனைக் காட்டிலும் நல்ல வளர்ச்சியை எட்டியுள்ளதோடு, ஏனைய உலக சமுதாயத்தினருக்கும் தனது நாட்டில் இடமளித்துள்ளது.

* தென்கொரியா மேற்குலக நாடுகளைப் போன்று ஜனநாயக அரசாங்கத்தைக் கொண்டிருக்கிறது. வடகொரியாவுடன் ஒப்பிடுகையில் அதனைக் காட்டிலும் நல்ல வளர்ச்சியை எட்டியுள்ளதோடு, ஏனைய உலக சமுதாயத்தினருக்கும் தனது நாட்டில் இடமளித்துள்ளது.

தென்கொரியாவிடம் அணு ஆயுதங்கள் ஏதும் கிடையாது; ஆனால் வடகொரியாவைக் காட்டிலும் அமெரிக்க ஆதரவுடன் நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய ராணுவத்தைக் கொண்டுள்ளது. இதனால், தென்கொரியா ராணுவ ரீதியில் பலம் பெற்றுவிடக் கூடாது என்பதற்காகத்தான் அணு ஆயுத பலத்தைப் பெருக்கிக்கொண்டு வருகிறது வடகொரியா.


=================================================================

ஒலிபெருக்கிக் கட்டி தெருச் சண்டை!


ம்ம ஊரில் தண்ணீர் பிடிக்கும் இடங்களில் குழாயடிச் சண்டை எப்படிச் சில நேரங்களில் சுவாரஸ்யமாக இருக்குமோ அதேபோன்றுதான் வடகொரியாவும் தென்கொரியாவும் தங்கள் எல்லைப் பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் திட்டித் தீர்க்கும் சண்டையிலும் ஈடுபட்டு வந்தன. இரு நாடுகளுக்கும் இடையிலான இந்தத் தெருச்சண்டை இன்று நேற்று ஆரம்பமானதல்ல. இரண்டாவது உலகப் போரோடு ஆரம்பமான வரலாற்றுப் பெருமைகொண்டது. கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாக நடந்து வந்தது. இடையில் சில வருடங்கள் இல்லாமலிருந்தாலும் அவ்வப்போது இது தொடரத்தான் செய்கிறது.

NS_korea_border_12228.jpg

தென்கொரியா, தனது வட கொரிய எல்லையில் ஒலிபெருக்கிகளைப் பெருத்தும். அந்த ஒலிபெருக்கிகளைச் சத்தமாகப் போட்டு, வட கொரிய எல்லையில் இருப்பவர்களுக்குக் கேட்கும்படி, அந்த நாட்டை கன்னாபின்னவென்று திட்டித் தீர்க்கும். மேலும் தென் கொரியாவை புகழ்ந்துபாடும். சர்வதேச செய்திகளையெல்லாம் வடகொரியாவை வெறுப்பேத்தும். பதிலுக்கு வட கொரியாவும் தனது எல்லையில் ஒலிபெருக்கியைப் பொருத்தி, தென் கொரியாவை திட்டித் தீர்க்கும் என்றாலும் வட கொரியா, தனது உத்தமத் தலைவர் கிம் ஜாங் உன்னை திட்டினால் பொறுத்துக்கொண்டிருக்காது. எனவே உசுப்பேற்றும் வகையில் தென் கொரியாவும் அதனையே செய்யும்.

தென் கொரியா இப்படி ஒலிபெருக்கிக் கொண்டு திட்டுவதோடு நிற்காது. பலூன்களில் துண்டுப் பிரசுரங்களைக் கட்டி அதனை வடகொரியாவை நோக்கிப் பறக்க விட்டு வசைபாடும். இப்படி பலூன் பறக்கவிட்டதால் கோபமடைந்த வடகொரியா, தென் கொரியாவை நோக்கி கண்மூடித்தனமாகச் சுடும். மேலும் இரு நாடுகளும் அடுத்த நாட்டுக்குத் தெரியும்படி ராட்சஷ பதாகைகளைச் செய்து அதன் மூலம் எதிரி நாட்டை திட்டித் தீர்க்கும். பொதுவாக வடகொரியா கம்யூனிஸ்ட் நாடு என்பதால் அங்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் இடம்பெறுவதில்லை. எனவே அப்படியான நாள்களில், தென்கொரியா தனது வடகொரிய எல்லையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களைப் பெரிதாக நடத்தி வட கொரியாவைச் செம்மையாக வெறுப்பேத்தும்.

=================================================================

கிம் ஜாங் இன்னும் மிரட்டுவார்...

https://www.vikatan.com/news/world/115744-why-north-korea-and-south-korea-are-separated.html

  • தொடங்கியவர்

வடகொரியா Vs அமெரிக்கா: பகையும் வெறுப்பும் ஏன்? (21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம்ஜாங்?) மினி தொடர் - 3

 
 

கிம் ஜாங்

 

" எங்கள் ஊரில் அமெரிக்க திரைப்படம் என்றால் மக்களுக்கு அவ்வளவு பிடிக்கும்.  அதிலும் குறிப்பாக ஜேம்ஸ்பாண்ட் படங்கள் திரையிடப்பட்டால் தியேட்டர்களில் கூட்டம்   அள்ளும். சப் டைட்டில் இல்லாமாலேயே கூட அந்தப் படங்களை நாங்கள் பார்ப்போம்.  ஏனென்றால், இத்தகைய படங்களில் காட்டப்படும் உயர் தொழில்நுட்ப உபகரணங்களும், டச்  ஸ்கிரீனும் எங்களை பிரமிக்க வைக்கும். 

மேலும் அமெரிக்க திரைப்படங்களின் கதாபாத்திரங்களும் எங்களுக்கு மிகவும் பிடிக்கும். அதன்  கதாநாயகர்களும், கதாநாயகிகளும் பெரும்பாலும் தங்கள் நகரையோ அல்லது இந்த  உலகத்தையோ வில்லன்களிடமிருந்து காப்பாற்றுவதாகவே சித்திரிக்கப்பட்டிருக்கும்.  வடகொரியா அரசும் தனது மக்களுக்கு 'நாட்டை யார் பாதுகாக்கிறார்களோ அவர்களே  உண்மையான ஹீரோ' என்று உபதேசித்திருப்பதால், அதுபோன்ற குணாதிசயங்களுடன் கூடிய  அமெரிக்க படங்கள் எங்களுக்கு மிகவும் பிடிக்கிறது." 

- 'அமெரிக்காதான் எங்களது முதல் எதிரி' என்று கூறி அதற்கேற்ப எண்ணற்ற ஏவுகணை சோதனைகளை நடத்தி வரும் வடகொரியாவின் தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன், கூடவே தன் நாட்டு மக்களிடையேயும் அதற்கான பிரசாரத்தை முன்னெடுத்து, அவர்களை மூளைச் சலவை செய்யும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் நிலையில், அமெரிக்கா குறித்து வடகொரிய மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து ஜீ சன் லீ என்கிற வடகொரிய பத்திரிகையாளர் முன்வைக்கும் கருத்துகளில் ஒன்றாக இருக்கிறது இது. 

கிம் ஜாங்

ஒருபக்கம் அமெரிக்க எதிர்ப்பு பிரசாரம், மறுபக்கம் தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன், அவரது தந்தை கிம் ஜாங் இல், அவருக்கும் முந்தைய  அதிபர்களான கிம் ஜாங் - சக் மற்றும் கிம் இல் - சங் ஆகியோரைப் போற்றி துதிக்க வேண்டும்  என்பதையும் தவறாமல் வலியுறுத்தி வருகிறது வடகொரிய அரசு. சுருக்கமாக சொல்வதென்றால், 'அரசு தலைமையை துதி...அமெரிக்காவை வெறு!' என்பதுதான்  வடகொரியா மக்களுக்கு இடைவிடாது  செய்யப்பட்டு வரும் மூளைச் சலவை பிரசாரம்.  கூடவே கொரியாவை தனது காலனி நாடாக அடிமைப்படுத்தி வைத்திருந்த ஜப்பான் மற்றும்  கொரியப் போரின்போது கொரிய மக்களைப் பல்வேறு கொடூரங்களுக்கு உட்படுத்திய  அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் மறக்காமல் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்  என்பதையும்  மக்களிடம் பிரசாரம் செய்து வருகிறது கிம் ஜாங் தலைமையிலான வடகொரிய  அரசு. 

அமெரிக்காவை வெறுப்பது ஏன்? 

ஆனால், இந்த பிரசாரம் வடகொரியா மக்களிடம் எந்த அளவுக்கு எடுபட்டுள்ளது என்பதை  பார்ப்பதற்கு முன்னர், வடகொரிய ஆட்சியாளர்கள் தொடர்ந்து ஆண்டாண்டு காலமாக  அமெரிக்காவை தங்களின் முதல் எதிரியாக ஏன் முன் நிறுத்தி வருகிறார்கள் என்பதைப்  பார்த்துவிடலாம். 

அமெரிக்கா மீதான வெறுப்புக்கு வடகொரியா முக்கியமாக கருதுவது அதன்  நில ஆக்கிரமிப்புக் குணம், தென்கொரியாவுக்கு ஆதரவளிப்பதாக கூறித் தொடர்ந்து தங்களுக்கு  அச்சுறுத்தலாக இருப்பதாக எண்ணுவது, இருதரப்பிலும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர்  கொண்டுள்ள தவறான அனுமானங்கள், ஒருதலைபட்சமான கருத்துகள், பழைய வரலாற்று  நிகழ்வுகளின் கசப்பான நினைவுகள் என பல்வேறு காரணங்களை அடுக்கலாம்.  அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே தூதரக உறவுகள் ஏதுமில்லை. சில  மாதஙளுக்கு முன்னர் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், அமெரிக்கர்களின் விருப்பமான  நாடுகள் பட்டியலில் வடகொரியாவுக்கு கடைசி இடம் அளிக்கப்பட்டிருந்ததோடு,  அமெரிக்காவுக்கு ராணுவ அச்சுறுத்தல் மிக்க நாடாகவும் வடகொரியா இருப்பதாக  தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த அளவுக்கு பரஸ்பரம் இரு நாடுகளும் ஒன்றின் மீது  மற்றொன்று வெறுப்பு மனோபாவத்தைக் கொண்டிருக்கின்றன. 

ட்ரம்ப்

இதில் வடகொரியாவுக்கு அமெரிக்கா மீது எத்தகைய எண்ணம் இருக்கிறது என்பதைப்  பார்க்கலாம். இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து  கொரியாவில் ஜப்பானின் காலனி ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. ஜப்பான் படைகளை  சரணடையச் செய்த சோவியத் ரஷ்யாவும் அமெரிக்காவும்  கொரியாவில் தாங்கள்  ஆக்கிரமித்தப் பகுதிகளை வடகொரியா, தென்கொரியா என பரஸ்பரம் பிரித்துக் கொள்வது  எனத் தற்காலிக ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டன. ஒன்றுபட்ட கொரியாவில்  சுதந்திரமான அரசாங்கத்தை ஏற்படுத்த உதவ வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்தத்  தற்காலிக ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. ஆனால், ஒப்பந்தத்தில் கூறியபடி நடக்க  இவ்விரு நாடுகளும் தவறிவிட்டன. இதன் விளைவாகத்தான் கொரியாவின் வடக்கிலும்  தெற்கிலும் இரு அரசாங்கங்கள் ஏற்படுத்தப்பட்டன. 1948-ம் ஆண்டு கொரியாவின் வடக்குப்  பகுதியில் ( தற்போதைய வடகொரியா) கம்யூனிஸ அரசு ஏற்படுத்தப்பட்ட அதேவேளை,  தெற்கு பகுதியில் ( தற்போதைய தென்கொரியா) மேற்குலக நாடுகளுக்கு ஆதரவான ஜனநாயக  அரசு ஒன்று ஏற்படுத்தப்பட்டன. சோவியத் ரஷ்யா மற்றும் அமெரிக்கா என இரு  வல்லரசுகளின் பின்புலத்தில் இந்த இரு கொரிய நாடுகளும் சுதந்திரமாக செயல்படத்  தொடங்கின. இந்த நிகழ்வுகள்தான் கம்யூனிஸ வடகொரியாவில் அமெரிக்காவுக்கு எதிரான  உணர்வுகள் துளிர்விட அடிப்படைக் காரணமாக அமைந்தது. 

அதன்பின்னர் அவ்வப்போது சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், அதில் மிகச்  சிறிய முன்னேற்றமே காணப்பட்டது. ஒரு அடி முன்னேறினால் இரண்டு அடி சறுக்கிய  கதைதான் நிகழ்ந்தது. 

கம்யூனிஸம்... கட்டுப்பாடுகள்

இந்த நிலையில் வடகொரியாவின் கம்யூனிஸ அரசு கருத்து சுதந்திரத்துக்கு விதித்தக்  கட்டுப்பாடுகள், தகவல்களைத் தெரிந்துகொள்வதில் காட்டப்பட்ட கெடுபிடிகள், அதாவது  ஊடகச் சுதந்திரமின்மை போன்றவை, ' அமெரிக்கா ஒரு ஏகாதிபத்திய, முதலாளித்துவ மற்றும் பிற நாடுகளை அடிமைப்படுத்தி அவற்றை தனது சுய நலனுக்கு காலனி நாடாக்கும் நீண்ட  நெடிய வரலாறு கொண்ட நாடு' என்ற அமெரிக்க எதிர்ப்பு பிரசாரத்துக்கு மேலும் தீ  மூட்டுவதாக இருந்தது. நாட்டின் நிர்வாகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும்,  சீராக நடத்திச் செல்லவும் வடகொரிய அதிகாரிகள் இந்த அமெரிக்க எதிர்ப்பு பிரசாரத்தை இடைவிடாமல் செய்து வந்தனர். ஆட்சியாளர்களின் இந்த அமெரிக்க எதிர்ப்பு செயல் திட்டம்  வடகொரிய மக்களிடையே நன்றாகவே வேலை செய்தது. ஆக்கிரமிப்புக் குணம் கொண்ட  அமெரிக்காவிடமிருந்து வடகொரிய ஆட்சியாளர்கள்தான் நம்மையும் நாட்டையும் பாதுகாக்க  முடியும் என்ற எண்ணம் மக்களிடையே ஏற்பட்டது. 

சீனா, ஜப்பான், சோவியத் ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கொரிய தீபகற்பத்தை  ஆக்கிரமித்த நாடுகள். இதனாலேயே வடகொரியாவுக்கு அன்னிய சக்திகள் மீது அளவுகடந்த  சீற்றம் உண்டு. அதிலும் அமெரிக்கா மீது அப்படி ஒரு காட்டம். இத்தனைக்கும் ஜப்பானின்  ஏகாதிபத்திய ஆட்சியிலிருந்து கொரியாவை மீட்டதில் அமெரிக்காவுக்கும் முக்கிய பங்கு உண்டு.  ஆனால் கொரிய பிரிவினைக்குப் பின்னர் சோவியத் ரஷ்யாவின் அளித்த ஆதரவு மற்றும்  அதுபோட்ட தூபம் ஆகியவை காரணமாக அமெரிக்காவை ஜப்பான் இடத்தில் வைத்து பார்த்து,  அந்த நாடு ஒரு ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ நாடு என்றும், கம்யூனிஸ கொள்கைகளுக்கு முரணான நாடு என்றும் வடகொரியா கருதியது. 

வடகொரியா

வெறுப்பை வளர்த்த கொரியப் போர்

அதிலும் 1950 ல் தென்கொரியா மீது வடகொரியா மேற்கொண்ட படையெடுப்புக்குப் பின்னர்  நிலைமை இன்னும் மோசமாகியது. தென்கொரியாவையும் சேர்த்து ஒன்றுபட்ட கொரியாவை  கம்யூனிஸ அரசின் கீழ் கொண்டுவந்துவிட வேண்டும் என்ற வடகொரியாவின் ஆசைக்கு,  தென்கொரியாவுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா முட்டுக்கட்டைப் போட்டது. மேலும்  போரின்போது அமெரிக்கா, வடகொரியாவுக்கு எதிராக கொடூரமான போர் வன்முறைகளை  நிகழ்த்தியதாகவும், தங்களிடம் பிடிபட்ட வடகொரியர்களைக் கடும் சித்ரவதைக்குப் பின்னர்  கொன்று குவித்ததாகவும், அமெரிக்கா நடத்திய பாரிய குண்டு வீச்சு தாக்குதலில் கிட்டத்தட்ட  வடகொரிய ஜனத்தொகையில் சுமார் 10 சதவீதம் பேர் கொல்லப்பட்டதாகவும் வடகொரியா  ஆட்சியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

மேலும் தென்கொரியாவுடன் அமெரிக்கா தோழமையுடன் இருப்பது ஒன்றுபட்ட கொரிய  தேசத்தை உருவாக்குவதற்கு இடையூறாக இருப்பதாகவும், தென்கொரியாவில் அமெரிக்க  ராணுவம் இருப்பது அது கொரிய தேசத்தை ஆக்கிரமித்துள்ளது போன்ற எண்ணத்தையே  தங்களுக்கு ஏற்படுத்துவதாகவும் வடகொரியா கூறுகிறது. 

அதிலும் அமெரிக்காவின் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் இணையதளம் 2014 நவம்பர் மாதம்   'அமைதியின் பாதுகாவலர்கள்' என்ற பெயரிலான சிலரால் 'ஹேக்' செய்யப்பட்டு, அந்த  நிறுவனத்தின் ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் பற்றிய விவரங்கள், புகைப்படங்கள்,  ஊழியர்களின் இமெயில்கள், அந்த நிறுவனத்தின் அதிகாரிகளின் சம்பள விவரங்கள், சோனி  பிக்சர்ஸ் நிறுவனத்தினால் ரிலீஸ் செய்யப்படாத திரைப்படங்களின் பிரதிகள் போன்றவை  வெளியிடப்பட்டன.  

வடகொரியா போர்

மேலும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னை படுகொலை செய்வதற்கான சதித்திட்டத்தை  மைய கருவாக வைத்து தயாரிக்கப்பட்ட ' The Interview' என்ற நகைச்சுவை  திரைப்படத்தை சோனி பிக்சர்ஸ் திரையிடுவதாக இருந்தது. ஆனால், அந்தத் திரைப்படத்தைத்  திரையிடக் கூடாது என்றும், மீறி திரையிட்டால் அந்தத் திரையரங்குகளில் தாக்குதல்  நடத்தப்படும் என்றும் அந்த 'அமைதியின் பாதுகாவலர்கள் குழு' மிரட்டல் விடுத்தது.  இதனையடுத்து அமெரிக்க அரசின் வேண்டுகோளை ஏற்று அந்தத் திரைப்படத்தைத்  திரையிடாமல் சோனி பிக்சர்ஸ் தவிர்த்தது. 

இந்த நிலையில், இந்த சைபர் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட மென்பொருள், தொழில்நுட்பம்  போன்றவற்றை  அலசி ஆராய்ந்த அமெரிக்க உளவுத் துறை அதிகாரிகள், வடகொரியாதான்  இந்த தாக்குதல் கும்பலின் பின்னணியில் இருப்பதாக குற்றம் சாட்டியது. ஆனால்,  வடகொரியா அதனை அப்போது மறுத்தது. 

இருப்பினும் பதிலடி கொடுத்தே தீருவது என முடிவு செய்த அமெரிக்கா, வடகொரியாவின்  இணையதள சேவையை அவ்வபோது முடக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இதுவும்  வடகொரியாவின் அமெரிக்க வெறுப்பு  தீயில் மேலும் எண்ணெய் வார்ப்பதாக இருந்தது. 

அமெரிக்க எதிர்ப்பு... வடகொரிய மக்கள் நினைப்பது என்ன? 

இந்த அளவுக்கு வடகொரிய அரசு தரப்பில் அமெரிக்க எதிர்ப்பு பிரசாரம்  முன்னெடுக்கப்பட்டாலும், கிம் ஜாங் உன் அரசு உருவகப்படுத்தும் அளவுக்கு தங்கள் நாட்டு  மக்களிடையே அமெரிக்க எதிர்ப்பு காணப்படவில்லை என்கிறார் வடகொரிய பத்திரிகை ஒன்றுக்காக சிங்கப்பூரில் பணியாற்றும் வடகொரிய பத்திரிகையாளர் ஜீ சன் லீ. " எங்கள் ஊரில் நான் உட்பட ஜப்பானியர்களை வெறுக்கும் அளவுக்கு  அமெரிக்கர்களை வெறுக்கவில்லை. கொரிய போரின் நிகழ்வுகளை அனுபவித்த  எங்கள் தாத்தா பாட்டிகள், ' வடகொரிய  ஆட்சியாளர்கள் சொல்லும் அளவுக்கு அமெரிக்கர்கள் மோசமான போர் குற்றங்களில்  ஈடுபடவில்லை. அப்படி ஒரு நிகழ்வை நாங்கள் பார்க்கவே இல்லை' என்றுதான்  சொல்கிறார்கள். 'அப்பாவி கொரிய பெண்களின் வயிற்றைக் கிழித்து கர்ப்பப்பையை அமெரிக்க  வீரர்கள் வெளியே எடுத்து போட்டதாகவும், அப்பாவி மக்களின் கண்களைத்  தோண்டியெடுத்ததாகவும், மூக்கு மற்றும் உதடுகளை அறுத்தெறிந்து அவர்களை மரத்தில்  தூக்கில் தொங்கவிட்டதாகவும் வடகொரிய ஆட்சியாளர்கள் பிரசாரம் செய்கின்றனர். ஆனால்,  நான் இந்தக் கதையை நம்பவில்லை. எங்கள் ஊரிலுள்ள வயதானவர்கள் சொல்வது வேறாக  இருக்கிறது. வடகொரிய குழந்தைகள் மீது அமெரிக்க வீரர்கள் பாசத்தைப் பொழிந்ததாகவும்,  அவர்களுக்கு சாக்லேட், சுவிங்கம் போன்றவற்றைக் கொடுத்து மகிழ்வித்ததாகவும் கூறுகிறார்கள். 

வடகொரியா போர்

அதே சமயம் உலக நாடுகளின் கண்டனங்களைப் பொருட்படுத்தாமல் வடகொரிய அரசு அவ்வப்போது மேற்கொள்ளும் அணு ஆயுத சோதனைகள் குறித்து வடகொரியர்கள் பெருமிதம் கொள்கிறார்கள். நான் வடகொரியாவில் இருக்கும்போது அரசு அணு ஆயுத சோதனைகள் மேற்கொண்டால், நாங்கள் டவுன் ஹாலில் கூடி அதுபற்றி பெருமையாகப் பேசிக்கொள்வோம். 'இனிமேல் அமெரிக்கா நம்மை அச்சுறுத்த முடியாது'  என நாங்கள் கூறிக்கொள்வோம். அதே சமயம் வடகொரிய அரசு மேற்கொள்ளும் இந்த அணு ஆயுத சோதனைகள் குறித்து உலகின் பிற நாடுகள் எள்ளி நகையாடுவதையும், இவ்வாறு ஏவுகணை சோதனைகளுக்கு அதிக நிதி செலவிடப்படுவதால்தான் நாடு ஏழையாக இருக்கிறது என்பதையும் நாங்கள் அறிவோம். 

ஏவுகணை சோதனைக்கு அடுத்தபடியாக வடகொரிய அரசு அதிகம் செலவிடப்படும் துறைகளில் ஒன்றாக கல்வித் துறை விளங்குகிறது. குறிப்பாக வடகொரியாவில் இருந்த ஜப்பானிய ஏகாதிபத்திய ஆட்சி, அதன் கொடுமைகள், அதனைத் தொடர்ந்து  கிடைத்த சுதந்திரம் போன்ற வரலாற்று சம்பவங்களை பள்ளிப் பாடங்களிலும், கல்லூரிப் பாடங்களிலும் கற்றுக் கொடுப்பதில் வடகொரிய அரசு மிகக் கவனமாக உள்ளது. 

போர்

மழலையர் பள்ளிகள், ஆரம்ப பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்பட அதன் கட்டடங்களிலும் சுவர்களிலும் தீட்டப்படும் சித்திரங்கள் அனைத்தும் ஜப்பானியர்களும் அமெரிக்கர்களும் வடகொரிய மக்களுக்கு எவ்வளவு கொடூரங்களை நிகழ்த்தினார்கள் என்பதை விளக்கும் விதமாகவே இருக்கும். கூடவே, இதன் காரணமாகத்தான் நமக்கு அணு ஆயுத பாதுகாப்புத் தேவை என்று ஏவுகணை சோதனையை நியாயப்படுத்தும் கருத்துகளும் இடம்பெற்றிருக்கும். இப்படி பள்ளியில் தொடங்கி அலுவலகம் வரைக்கும் அமெரிக்க எதிர்ப்பு கருத்துகளை உள்வாங்கி வளரும் வடகொரியர்கள், அமெரிக்கா மீதான பழைய குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ ஏவுகணைச் சோதனை நியாயமானது, நமது பாதுகாப்புக்குத் தேவையானதுதான் என்ற கருத்தையே கொண்டிருக்கின்றனர்" என்கிறார் லீ மேலும்.   

இரு நாடுகளுக்கு இடையே பகை இருப்பது என்பது உலகம் முழுவதும் பரவலாக காணப்படும்  சமாசாரம்தான். ஆனால், அந்தப் பகை நாடுகள்  பெரும்பாலும் அண்டை நாடுகளாக இருக்கும்.  ஆனால் பூகோள ரீதியாக வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான தூரத்தைக்  கணக்கிட்டால், இவ்விரு நாடுகளுக்கு இடையேயான பகை என்பது 
சற்று வித்தியாசமான ஒன்றாகத்தான் உள்ளது. 

ஒருவேளை எதிர்காலத்தில் இருநாடுகளிலும் தலைமைப் பொறுப்புக்கு வரும்  ஆட்சியாளர்களிடம் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால்தான் இந்தப் பகை முடிவுக்கு வருமோ  என்னவோ? 

கிம் ஜிங் இன்னும் மிரட்டுவார்...

https://www.vikatan.com/news/world/116048-why-north-korea-hates-the-us-series-3.html

  • தொடங்கியவர்

வடகொரியா: 'பட்டத்து ராஜா'வின் பகீர் பக்கங்கள்..! - 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்? ( பகுதி-4)

 
 

Kim_4_16100.jpg

 

தவிக்கு வருவதற்காகவும், கிடைத்த பதவியை தக்கவைத்துக்கொள்வதற்காகவும் சொந்த உறவுகளையும்,   தனக்கு விசுவாசமாக இருக்க மாட்டார் என்று சந்தேகப்படுபவர்களையும்  சிறையிலடைத்து  சித்ரவதை செய்வதும், உயிரைப் பறிப்பதும் மன்னர் காலத்திலிருந்து  உலகம் கண்டுவந்த ஒன்றுதான் என்றாலும், வடகொரியா இதில் தனிரகம். மறைந்த ஹிட்லரை நினைவுபடுத்துவது போன்று இந்த நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன், தனக்கோ அல்லது தனது அரசுக்கோ அச்சுறுத்துலாக இருப்பவர்களையும் விசுவாசமாக இல்லை என்று 
கருதுபவர்களையும் கொல்லும் முறைகள் குறித்து அவ்வப்போது வெளியாகும் விதவிதமான செய்திகள் அனைத்தும் பகீர் ரகம்! 

 

 

பொதுவாக சீனா போன்று வடகொரியாவும் இரும்புத்திரை கொண்ட நாடுதான். சீனா குறித்தாவது ஓரளவுக்குத்  தகவல்களையும் செய்திகளையும் அறிந்துகொள்ள முடியும். ஆனால், வடகொரியா குறித்து அரசுத் தரப்பில் ஏதாவது வெளியிடப்பட்டால்தான் உண்டு. அப்படி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் தகவல்கள் அனைத்தும் நாடு குறித்த பெருமிதச் செய்திகளும், அதிபர் கிம் ஜாங்  புகழ்பாடும் தகவல்களுமாகவே இருக்கும். உள்ளுக்குள் நடக்கும் ரகசிய விவகாரங்கள் பெரும்பாலும் வெளிநாட்டு  ஊடகங்களால், குறிப்பாக தென்கொரிய உளவு ஏஜென்சிகள் மூலம்தான் உலகுக்குத் தெரிய வரும். 

அப்படித்தான்  வடகொரியாவில் அவ்வப்போது நிறைவேற்றப்படும் மரணதண்டனை குறித்த தகவல்களும்  வெளிவரும். ஆனால், வெளிவரும் ஒவ்வொரு தகவல்களும் பீதியைக் கிளப்பும் வகையறாவாகவே இருக்கும். 

நாய்க்கு இரையாக்கப்பட்ட மாமா

கடந்த டிசம்பரில், அதிபர் கிம் ஜாங்கின் வலதுகரமாகவும், வடகொரிய துணை ராணுவத் தலைவராகவும் திகழ்ந்த  ஹ்வாங் பியாங்-ஸோ மர்மமான முறையில் காணாமல் போய்விட்டதாக ஒரு தகவல் வெளியானது. இதுகுறித்துப்  பரபரப்பாகப் பேசப்பட்ட நிலையில்,  லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரிலேயே பியாங்-ஸோ, வடகொரியாவின் மரண தண்டனை நிறைவேற்றும் படையினரால் கொல்லப்பட்டதாக மேலும் ஓர் அதிர்ச்சித் தகவலை உள்ளூர்  ஊடகம் ஒன்று வெளியிட்டது. 

தென்கொரிய செய்தி ஏஜென்சியான யான்ஹாப், பியாங்-ஸோவும், அவரது உதவியாளர் கிம் வோன் ஹாங்கும்  ராணுவத்திலிருந்து வெளியேற்றப்பட்டு தண்டிக்கப்பட்டதாக தென்கொரிய உளவு ஏஜென்சியை மேற்கோள்காட்டி  தகவல் வெளியிட்டது. அடுத்த சில நாள்களிலேயே கிம் வோன் சிறையிலடைக்கப்பட்டதாகவும், பியாங்-ஸோ,  அதிபர் கிம் ஜாங் உத்தரவின் பேரில் கொல்லப்பட்டதாகவும் யான்ஹாப்  தெரிவித்தது.  அதிபர் கிம் ஜாங் தனது எதிரிகளையும் துரோகிகளையும் இதற்கு முன்னர் பல்வேறு குரூரமான முறைகளில் கொன்றுள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்த நிலையில், தற்போது பியாங்-ஸோ எப்படிக் கொல்லப்பட்டார் என்பது  குறித்த தகவல் அநேகமாக இன்னும் சில மாதங்கள் கழித்து வெளியாகக்கூடும்.  

ஜாங் மாமா சாங் ஸாங் தேக்  கைதானபோது...

அதே சமயம் வடகொரியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஹ்வோன் யொங் சோல், அதிபர் கிம் ஜாங் உன்னின் மாமா ஜங் சாங் தேக், ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜாங் நாம் போன்றோர்கள் கொல்லப்பட்ட விதம் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு விதம். 

ஹ்வோன் யொங் சோல், அதிபர் கிம் ஜாங்குக்கு  விசுவாசமற்ற வகையில் நடந்துகொண்டார் என்பதற்காக  அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தென் கொரிய நாடாளுமன்றத்தில் அந்த நாட்டு உளவு  ஏஜென்சியான என்.ஐ.எஸ் (National Intelligence Service -NIS) தெரிவித்திருந்தது. அதே சமயம்  தென்கொரிய செய்தி ஏஜென்சியான யான்ஹப், "வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கலந்துகொண்ட ஒரு பொது நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ஹ்வோன் தூங்கிவிட்டார் என்பதற்காகவே, அவர் பொதுமக்கள் முன்பு விமான  எதிர்ப்பு பீரங்கிக் குண்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்டு நிரந்தரமாகத் தூங்கவைக்கப்பட்டார்" என்று செய்தி வெளியிட்டிருந்தது. 

தந்தை மறைவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கிம் ஜாங் உன்னுக்கு அனைத்து விதத்திலும் உதவியாக இருந்து ஆட்சியை ஸ்திரப்படுத்தியவர் அவரது மாமா  சாங் ஸாங் தேக்.    

கிம் ஜாங் யில்லின் சகோதரியை மணந்த 67 வயதான இவர் ஜாங்-யில் ஆட்சியிலும், கிம் ஜாங் உன் ஆட்சியிலும் நம்பர் டூ வாக திகழ்ந்தவர். அவர்மீது ஆட்சியைக் கைப்பற்ற சதி திட்டம் தீட்டியதாகக் கூறி கைது செய்தார் அதிபர் கிம். அதிபரின் நம்பிக்கைக்கு உரிய நபராக இருந்துகொண்டு, அதிபருக்கு எதிராக ஆட்களைத் தூண்டி ஆட்சியைக் கைப்பற்றத் திட்டமிட்டார் என்றும், மேலும் கட்சியின் பணத்தில் வெளிநாடுகளுக்குச் சென்று உல்லாசமாகப் பொழுதுபோக்கினார் என்றும் அவர்மேல் குற்றம் சாட்டப்பட்டது.

2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம், தனி ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு  சாங் ஸாங் தேக்குக்குத்  தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், ஸாங் தேக்  தூக்கில் போடப்படவில்லை என்றும், பட்டினி போடப்பட்ட நாய்கள் அடைக்கப்பட்ட கூண்டில் வீசப்பட்டார் என்றும் அப்போது வெளியான தகவல்கள் உலக நாடுகளை அதிரச் செய்தன. 
 

kim_salute_16275.jpg

அதே சமயம் இந்தச் செய்தியில் எந்த அளவுக்கு உண்மையிருக்கிறது என்றும் தெரியவில்லை. இரும்புத்திரை  போட்டு எதையும் ரகசியமாக வைத்திருக்கும் வட கொரியாவிலிருந்து வரும் எந்தச் செய்திகளுமே  உறுதிப்படுத்த  முடியாதவையாகவே இருப்பதால் அந்த நாடாக எதையும் சொன்னால்தான் உண்டு. 

ஏனெனில் சில மரண தண்டனை குறித்த செய்திகள் இட்டுக்கட்டி புனையப்பட்டவையாக இருக்கலாம் என்பதற்கு ஹ்யோன் சோங் வோல் என்ற பெண்ணின் மரண தண்டனை குறித்த செய்தியை உதாரணமாகக் கூறலாம்.  ஹ்யோனுடன் சேர்ந்து 11 இசைக் கலைஞர்களும் ஒரு பாலியல் ஒளி நாடாவை உருவாக்கியதாகவும்,  இதற்காக அவர்கள் பிடிக்கப்பட்டு இயந்திரத் துப்பாக்கிகள் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டதாக தென்கொரிய  ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், அதனை வடகொரியா மறுத்தது. செய்தி வெளியான அடுத்த  ஆண்டிலேயே ஹ்யோன், அரசுத் தொலைக்காட்சியில் தோன்றி, தாம் நலமாக இருப்பதை வெளிப்படுத்தினார். ஆனால்,  மரண தண்டனை விதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் எல்லாருமே இப்படிப் பிழைத்திருப்பார்கள் என்று சொல்லிவிட  முடியாது. 

தேடி வந்த பதவி வாய்ப்பு

கிம் ஜாங் உன் 2011-ல் பதவியேற்றதிலிருந்து இதுவரை நூற்றுக்கும் அதிகமானோர் மரண தண்டனை விதிக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று தென் கொரிய உளவு நிறுவனத்தை மேற்கோள் காட்டி யோன்ஹாப் செய்தி நிறுவனம்  கூறுகிறது. இப்படித் தனக்கு நெருக்கமான உறவுகளையும் நம்பகமான தளபதிகளையுமே எதிரிகளாகப் பாவித்து, அவர்களைத்  தீர்த்துக்கட்டுகிற அளவுக்கு கிம் ஜாங் இருப்பதற்கு, அதிகாரம் கையைவிட்டுப்போய்விடுமோ என்ற அச்சமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுமே காரணம். அதனால்தான் அவர் தனது பிறந்த தினத்தைக்கூட பகிரங்கமாக அறிவிக்காமல் மர்மாக வைத்துள்ளார். ஆனாலும், அவர் 1983 அல்லது 1984 -ல்  பிறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கிம் ஜாங்கின் தந்தை கிம் ஜாங் இல் ஆட்சிக் காலத்திலும் வடகொரியா  இரும்புத்திரை கொண்ட நாடாகத் திகழ்ந்தாலும் அவர் மக்களின் "அன்புக்குரிய தலைவர்" ஆகப் பார்க்கப்பட்டார். 2011  டிசம்பரில் அவர் இறந்ததும், கிம் ஜாங் உன் கட்சி, நாடு மற்றும் ராணுவத்தின் தலைவராக அறிவிக்கப்பட்டு  உடனடியாக பதவிக்கு வந்தார். 

இத்தனைக்கும் கிம் ஜாங் இல் உயிருடன் இருந்தபோது அவரது விருப்பத்திற்குரிய வாரிசாக கிம் ஜாங் உன்  இருந்ததில்லை. இல்லின் இன்னொரு மனைவிக்குப் பிறந்த கிம் ஜாங் நாம் மற்றும்  கிம் ஜாங்கின் இன்னொரு  சகோதரர் கிம் ஜாங் சோல் ஆகிய இருவரில் ஒருவர்தான் அடுத்த வாரிசாக வருவார்கள் என வடகொரிய அரசியல்  வல்லுநர்கள் கூறினார்கள். ஆனால், எதிர்பார்ப்புகள் அத்தனையையும் முறியடித்துவிட்டு, தனது தந்தை இறந்த  உடனேயே கிம் ஜாங் ஜம்மென்று அதிபர் பதவியில் வந்து அமர்ந்துகொண்டார். அவர் வந்து அமர்ந்து கொண்டார்  என்று சொல்வதைவிட வாய்ப்பு அவரைத் தேடிவந்தது என்று சொல்லும் அளவுக்கு சந்தர்ப்பங்கள்  அமைந்தன.  

கிம் ஜாங் தந்தை கிம் ஜாங் யில்...

கிம் ஜாங் உன்னின் தந்தையான கிம் ஜாங் யில் மறைவுக்குப் பின் நியாயமாகப் பார்த்தால் மூத்த மகன் கிம் ஜாங்  நாம் பதவி ஏற்றிருக்க வேண்டும். ஆனால்  2001-ல் கிம் ஜாங் நாம், ஜப்பானில் போலி பாஸ்போர்ட்டுடன் மகன்  மற்றும் அடையாளம் தெரியாத இரண்டு பெண்களுடன் பிடிபட்டார். இதனையடுத்து அவர் அங்கிருந்து  வெளியேற்றப்பட்டார். இச்சம்பவம் அவரது அரசியல் எதிர்காலத்தை சூனியமாக்கியது.  இதனால் நாடு திரும்பாமல் சீனாவுக்குச் சென்று, அங்குள்ள மக்காவ் என்ற இடத்தில் வசித்தார். 

இன்னொரு சகோதரர் கிம் ஜாங் சோல் அரசியலில் ஆர்வமில்லாமல் இருந்ததால், கிம் ஜாங் உன்னுக்கு அது  மிகவும் வசதியாகப் போய்விட்டது. 

கிம் ஜாங் உன் தனது சகோதரர்களைப்போல சுவிட்சர்லாந்தில் பள்ளிப்படிப்பை படித்தவர்தான் என்றாலும், மேற்கத்திய கலாசார தாக்கத்தில் சிக்கிவிடாமல், சொந்த நாட்டுக்கே திரும்பினார். நாடு திரும்பியதும் ராணுவப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பில் சேர்ந்தார். கிம் ஜாங்கின் தாயார், கிம் ஜாங் இல்லுக்கு மூன்றாவது மனைவி என்றபோதிலும், அவருக்கு மிகவும் பிடித்த மனைவியாக இருந்ததால், தனது மகன் கிம் ஜாங்கை அதிகாரப் பதவியை நோக்கி நகர்த்துவது சுலபமாக  அமைந்தது. மேலும் கிம் ஜாங்கை அவர் 'விடிவெள்ளி ராஜா' ( Morning Star King ) என்று பெருமையுடன் கூப்பிடுவாராம். 

2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிம் ஜாங் யில் சீனா சென்றபோது அவருடன் கிம் ஜாங்கும் சென்றார். அப்போதிருந்தே வடகொரியாவின் அடுத்த 'பட்டத்து ராஜா' தான்தான் என்பதை ஊருக்கும் உலகுக்கும் எடுத்துச்  சொல்லும்விதமாகவே தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கினார். இப்படியான நடவடிக்கைகளும்  அடித்தளமுமே, கிம் ஜாங் யில் டிசம்பரில் உடல் நலக்குறைவால் இறந்ததும் உடனடியாக கிம் ஜாங்கை அடுத்த  அதிபராக பதவியேற்க பாதை அமைத்துக் கொடுத்தன. 

ராணுவ அமைச்சர்கள் மீதும் சந்தேகம்

2011-லேயே அதிபராகிவிட்டாலும், கிம் ஜாங் முதன்முதலில் பொது இடத்தில் தனது உரையை நிகழ்த்தியது  வடகொரியாவைத் தோற்றுவித்த கிம்  ஜாங்கின் நூற்றாண்டு பிறந்த  தினமான 2012 ஏப்ரல் 15-ல் தான்.  அப்போதுதான் ராணுவத்துக்கே தமது அரசு முன்னுரிமை அளிக்கும் என்றும், இதுநாள் வரை வடகொரியாவுக்கு  இருந்துவந்த அச்சுறுத்தல் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், ராணுவ உயர் தொழில்நுட்பம் இனிமேல் ஏகாதிபத்திய  நாடுகளுக்கு மட்டுமே ஏகபோக உரிமையாக இருக்காது என்றும், வடகொரிய ராணுவத்தை பலப்படுத்துவதற்கான  அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்து, அப்போதிருந்தே வடகொரியாவை  ராணுவ ரீதியில் பலப்படுத்துவதற்காக நவீன ஏவுகணைச் சோதனைகளுக்குத் திட்டமிட்டு, அதனைச் செயல்படுத்த  தொடங்கினார் கிம் ஜாங். 

மனைவியுடன் கிம் ஜாங்....

இதன் உச்சமாகத்தான் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலையில் அமெரிக்காவின் மேற்கு பகுதியைத் தாக்கவல்ல இரண்டு  அதி நவீன ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தி, அமெரிக்காவையும் அதன் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பையும்  பதறவைத்து, அதன் பலனாக ஐ.நா-வின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டார். 

உலக அரசியலைப் பொறுத்தவரையில் கிம் ஜாங் உன் சர்வாதிகாரியாகவும் சில நாடுகளால் கோமாளியாகவும்  பார்க்கப்படுகின்றபோதிலும், அவரது உண்மையான திறன் என்ன என்பது மற்ற உலக நாடுகளால் இன்னமும்  துல்லியமாக எடைபோட முடியாததாகத்தான் உள்ளது. ஏனெனில் வடகொரிய அதிபராக பதவியேற்ற பின்னர் கிம்  ஜாங், எந்த ஒரு வெளிநாட்டுக்கும் பயணம் மேற்கொண்டதில்லை. ஆனால், அவரது தந்தையோ  ஆட்சியிலிருந்தபோது சீனாவுக்குப் பலமுறை பயணம் மேற்கொண்டிருக்கிறார். 

உள்நாட்டைப் பொறுத்தமட்டில் இரும்புத்திரை நிர்வாகத்தைத்தான் நடத்தி வருகிறார் கிம் ஜாங். யாரையும் அவர்  நீண்ட காலத்துக்கு நம்புவதில்லை. அதிபராகப் பதவியேற்ற 2011-லிருந்து இதுவரை ஆறுமுறை  பாதுகாப்புத்  துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டவர்களை மாற்றியுள்ளார். அந்த அளவுக்கு அவர் ஆயுதப்படை மீது  நம்பிக்கையற்று இருப்பதையே இது உணர்த்துவதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். 

சகோதரனுக்கும் மன்னிப்புக் கிடையாது 

இந்த அவநம்பிக்கை மற்றும் சந்தேகத்தின் உச்சமாகத்தான் தனக்கு எதிராக சதி செய்வதாகக் கூறி தனது மாமா சாங்  ஸாங் தேக்கையே குடும்பத்துடன் தீர்த்துக் கட்டினார். அதுமட்டுமல்லாது கடந்த ஆண்டு பிப்ரவரியில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து கிம் ஜாங்-கின் ஒன்றுவிட்ட  சகோதரர் கிம் ஜாங் நாம் இரண்டு மாடலிங் பெண்களால் ரசயான ஸ்பிரே அடித்துக் கொல்லப்பட்டதுகூட இவரது  உத்தரவின்பேரிலேயே நடந்ததாகச்  சொல்லப்படுகிறது. அந்த அளவுக்குச் சர்வாதிகார மனப்பான்மை கொண்டவர்  கிம் ஜாங். தனக்கு ஆட்சி செய்யத் தெரியவில்லை என்றும் வடகொரியாவைக் கட்டுப்படுத்தும் அளவுக்குத் தனக்கு வயது போதாது என்றும் ஜாங் நாம் விமர்சித்ததாக உளவுத்துறை மூலம் தகவல் அறிந்த கிம் ஜாங், மிகுந்த ஆத்திரமடைந்தார். இதனையடுத்தே அவரது உத்தரவின் பேரில் கிம் ஜாங் நம்மைத் தீர்த்துக்கட்ட ஒரு குழு அவரைப் பின் தொடர்ந்துள்ளது. எந்தச் சந்தேகமும் வராமல் தீர்த்துக் கட்ட அவர்கள் பயன்படுத்திய ஆயுதம்தான் வி.எக்ஸ். ரசாயனம். உலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட ரசாயனம். இந்த ரசாயனத்தைதான் இரு மாடலிங் பெண்களை ஏற்பாடு செய்து, அவர்களிடம் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக அடையாளம் தெரியாத ஆள் மீது அடிக்க வேண்டும் என்று கூறி, ஜாங் நாம் மீது அடிக்கச் செய்யவைத்துக் கொன்றது வடகொரிய உளவுத் துறை.  

சொந்த சகோதரருக்கே இந்தக் கதி என்றால், ராணுவத்திலும் அதிகார மட்டத்திலும் பொதுமக்கள் தரப்பிலும் கிம்  ஜாங்குக்கு எதிராக சதி செய்வதாக சந்தேகிக்கப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களின் கதி  என்னவாக இருக்கும்? கேட்டாலே ரத்தத்தை சில்லிட வைக்கக்கூடிய அளவுக்கு, சிறையிலிருந்து தப்பி வந்தவர்கள்  சொல்லும் அந்த பகீர் திகீர் தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில்...

======================================================

கிம் ஜாங்... பர்சனல் பக்கம் 

கிம் ஜாங்கின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்கள் எதுவும் பெரிதாக வெளியிடப்படவில்லை. 1996 முதல் 2000-ம் ஆண்டு வரை கிம் ஜாங், சுவிட்சர்லாந்தில் உள்ள பள்ளி ஒன்றில், வடகொரிய தூதரின் மகன் என்ற போர்வையிலேயே படிக்க வைக்கப்பட்டார். பாடங்கள் ஜெர்மன் மொழியில் கற்பிக்கப்பட்டதால், அவற்றைக் கற்றுக்கொள்வதில் அவர் சிரமப்பட்டாராம். " நாங்கள் மோசமான மாணவர்கள் இல்லையென்றபோதிலும் ரேங்க் வாங்குகிற அளவுக்கு இருந்ததில்லை. கிம் ஜாங், தனது டீன் ஏஜில் ஜேம்ஸ் பாண்ட் படங்களை விரும்பி பார்ப்பார்.அதேபோன்று கூடைப்பந்து விளையாட்டிலும் அவர் மிகுந்த ஆர்வம் காட்டினார். ஆடம்பரமான விளையாட்டுப் பொருள்களையும் உபகரணங்களையும் வைத்திருந்தார். அவருக்கு சேவை செய்வதற்கென்றே தனிப்பட்ட கார் டிரைவரும் சமையல்காரரும் இருந்தனர். ஸ்பெஷலாக டியூஷன் வாத்தியாரும் வைத்துக்கொண்டார். 

kim_with_school_friends_16165.jpg

ஒருமுறை அவர், தன்னுடைய சமையல்காரரை சரியாக சமைக்கவில்லை என்று மிகுந்த கோபத்துடன் திட்டியதை அவரது வீட்டுக்குச் சென்றபோது பார்த்துள்ளேன். அப்போதுதான் தான் யார் என்பதை கிம் ஜாங் என்னிடம் சொன்னார். ஆனால், அப்போது நாங்கள் அதனை நம்பவில்லை" என்று கிம் ஜாங்குடன் படித்த அவரது வகுப்புத் தோழர் ஜாவோ மிக்கேலோ என்பவர் இங்கிலாந்து ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். 

2012 ஜூலை  மாதம் வடகொரிய அரசு ஊடகம், ரி சோல்-ஜு என்ற பெண்ணை கிம் ஜாங் திருமணம் செய்துகொண்டதாக ஒரு  தகவலை வெளியிட்டது. சோல்-ஜி-யின் ஸ்டைலான தோற்றத்தை வைத்து அவர் ஒரு மேல்தட்டுக் குடும்பப்  பெண்ணாக இருக்கலாம் என்று வடகொரிய அரசியல் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர். மேலும் அவர்  பாடகியாக இருக்கலாம் என்றும், ஏதாவதொரு இசை நிகழ்ச்சியில் அவரைப் பார்த்து ஈர்ப்பு ஏற்பட்டு, கிம் ஜாங்  அவரைத் திருமணம் செய்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். இந்தத் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை  உள்ளதாகவும் தகவல்.

கிம் ஜாங்கின் சகோதரி கிம் யோ- ஜாங், வடகொரியாவின் தொழிலாளர்கள் கட்சியில் உயர் பதவி வகிக்கிறார்.  மூத்த சகோதரர் கிம் ஜாங் சோல், அரசு பதவியில் ஏதும் இருக்கிறாரா என்பது குறித்த தகவல் இல்லை

=========================================================================

கிம் ஜாங் இன்னும் மிரட்டுவார்....

https://www.vikatan.com/news/world/116494-kim-jongun-killed-uncle-and-brother-in-coup-plot.html

  • தொடங்கியவர்

மசாஜ்... பாலியல் சேவை... உல்லாசம்: அதிபரால் நாசமாக்கப்படும் பள்ளி மாணவிகள்!- 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்? ( பகுதி-5)

 
 

 Kim_5_12281.jpg

 

காட்சி 1: 

 

வடகொரிய தலைநகர் பியோங்யாங்கில் அமைந்திருக்கும் பள்ளி அது.  காலை வேளை பாட  வகுப்புத் தொடங்கி மாணவர்கள், ஆசிரியர் நடத்தும் பாடத்தைக் கவனித்துக்கொண்டிருக்கின்றனர். பள்ளி மைதானத்தில்  சில வகுப்பு மாணவர்கள் எதற்காகவோ குழுமியிருக்கின்றனர். 

ஓர் உயர் நிலைபள்ளிக்கே  உரிய கலகலப்பும் சத்தமுமாக பள்ளி இயங்கிக்கொண்டிருக்கையில், திடீரென பள்ளியின் கதவை உடைத்துக்  கொண்டு வருவதுபோன்ற வேகத்தில் சர்... சர்ரென நான்கைந்து ராணுவ வாகனங்கள் பள்ளிக்குள் நுழைகின்றன. அடுத்தகணமே பள்ளி ஸ்தம்பித்துப் போகிறது. மயான அமைதி. மாணவர்களும் ஆசிரியர்களும் திகைப்புடன்  பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ராணுவ வாகனத்திலிருந்து திபு திபுவென இறங்கும் அதிகாரிகள், ஒவ்வொரு  வகுப்பறைக்குள்ளும் நுழைந்து, "எல்லோரும் உங்கள் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு வேகமாக வந்து வாகனங்களில்  ஏறுங்கள்... ம்... சீக்கிரம்" என உத்தரவிடுகிறார்கள். 

வடகொரியா பள்ளி ஒன்றின் வகுப்பறை....

 

அடுத்த நிமிடமே மாணவ, மாணவிகள் வரிசையாக வகுப்பிலிருந்து வெளியேறி மைதானத்தில் நிறுத்தப்பட்டிருக்கும்  வாகனங்களில் ஏறுகின்றனர். கூடவே ஆசிரியர்களும். அவர்களை ஏற்றிக்கொண்டு அந்த வாகனங்கள் வேகமாக வெளியேறி, நகருக்கு வெளியே இருக்கும் ஒரு திறந்தவெளி மைதானத்துக்குச் செல்கின்றன. அங்கே ஏற்கெனவே திரண்டிருக்கும் பல ஆயிரக்கணக்கானோருடன் இவர்களும் நிற்க வைக்கப்படுகின்றனர். அப்படி நிற்கவைக்கப்படும் மாணவர்களில் ஹீ யியான் லிம் என்ற மாணவியும் ஒருவர். 

அப்போது ஓர் இசைக்குழுவைச் சேர்ந்த 11 வடகொரியர்கள் மைதானத்தின் மத்தியப் பகுதிக்குக் கொண்டுவரப்படுகின்றனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டு 'நீலப்படம்' தயாரித்தது. அவர்கள் மீதான குற்றத்தை அதிகாரி ஒருவர் சத்தமாக மைக்கில் அறிவித்து, அவர்களுக்கான தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடுகிறார். 

குற்றம் சுமத்தப்பட்ட 11 பேரின் முகங்களும் கறுப்புத் துணியால் மூடப்பட்டுள்ளன. அவர்களது கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டுள்ளன. வாயிலும் துணி திணிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் " இரக்கம் காட்டுங்கள்..." என்றோ  அல்லது தண்டனை நிறைவேற்றப்படும்போது வலி பொறுக்க முடியாமல் கத்தவோ முடியாது. 

தண்டனைக் கைதிகள்...

அவர்கள் ஒவ்வொருவரும் விமான எதிர்ப்பு பீரங்கியின் முனையில் கட்டித் தொங்கவிடப்பட்டதும் தண்டனையை  நிறைவேற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படுவதோடு, அங்குள்ள மக்கள் அனைவரும் அதனைப் பார்க்குமாறும் கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. அடுத்த நொடி பீரங்கி வெடித்து, அங்கிருப்பவர்களின் காதைச் செவிடாக்கும் அளவுக்கு சத்தத்தை எழுப்புகிறது. இப்படி ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து சத்தம் வந்துகொண்டே இருக்க, அந்த இசைக்குழுவைச் சேர்ந்த ஒவ்வொருவரும் காணாமல் போகின்றனர். அவர்களது சடலங்கள் சில அடி தூரத்தில் சதைகளும், எலும்புகளுமாக தரையில் சிதறிக்கிடக்கின்றன. அந்த இடமே ரத்த சகதியாகக் காட்சி தருகிறது. 

நடப்பது அத்தனையும் சுமார் 200 அடி தூரத்திலிருந்து அடி வயிறு கலங்க மற்ற மாணவர்களைப் போன்ற அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருக்கிறார் மாணவி ஹீ யியான் லிம்.

விமான எதிர்ப்பு பீரங்கி...

அதற்கு அடுத்து நடந்ததுதான் கொடூரத்தின் உச்சம். கொல்லப்பட்டு மைதானத்தில் கிடந்தவர்களின் சதைகள் மற்றும்  எலும்புகள் மீது அந்த பீரங்கிகள் ஓட்டப்பட்டு, அவை மண்ணோடு மண்ணாக்கப்படுகின்றன. 

" இதுபோன்ற சம்பவத்தை நான் பார்த்தது அதுதான் முதன்முறை. அதைப் பார்த்ததிலிருந்து என் மனமும் உடலும்  மிகவும் பாதிக்கப்பட்டன. நடந்த சம்பவம் எனது நினைவுக்குள் வந்து வந்து சென்று எனது அடிவயிற்றையே  கலங்கியது. என்னால் தொடர்ந்து 3 நாள்களுக்குச் சாப்பிட முடியாமல் போய்விட்டது" என்று அந்தச் சம்பவத்தை  நினைவு கூர்கிறார்  ஹீ யியான்.

காட்சி-2: 

இன்னொரு நாள். அதே பள்ளிக்கூடம். அதே நேரம். அதேபோன்று ராணுவ வாகனத்தில் வந்த அதிகாரிகள்,  மாணவிகள் அனைவரையும் பள்ளி மைதானத்துக்கு வருமாறு உத்தரவிட்டனர். அதன்படி மாணவிகள் வந்து  வரிசையாக நின்றனர். அவர்களை ஒவ்வொருவராக பார்த்த அதிகாரிகள், பார்க்க அழகாக, 5.5 அடி உயரத்துடன், நேரான, நீண்ட  கால்களுடைய மாணவிகளை மட்டும் தங்களுடன் அழைத்துச் சென்றனர். இந்த அதிகாரிகள் அதிபருக்காக ஸ்பெஷலாக இயங்கும் ' உல்லாசப் படை'யைச் ( Pleasure Squad) சேர்ந்தவர்கள்.

" இந்த மாணவிகள் அனைவரும் அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு 'செக்ஸ் அடிமை'யாக இருக்கவே அழைத்துச்  செல்லப்பட்டனர் என்பது எனக்குப் பின்னர்தான் தெரியவந்தது. அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு தலைநகர்  பியோங்யாங்கில் எத்தனை அரண்மனைகள் உள்ளன என்பது யாருக்குமே தெரியாது. எந்த வீட்டில் எப்பொழுது  இருப்பார் என்பதும் தெரியாது. அவ்வளவு ரகசியமாகவே இருக்கும் அவரது அந்தப்புர வாழ்க்கை. கிம் ஜாங்குக்குத்  திருமணம் ஆகி மனைவியும் குழந்தைகளும் ( சிலர் மூன்று குழந்தைகள் என்கின்றனர்; சிலர் ஒரு குழந்தை  என்கின்றனர்)  உள்ளனர். ஆனால், அவர் ப்ளேபாய் போன்றுதான் நடந்துகொள்கிறார். அதிபரின் உல்லாசப் படையினரால் பள்ளிகளிலிருந்து இவ்வாறு  அழைத்துச் செல்லப்படும் அழகான மாணவிகள் அனைவரும் பெரும்பாலும் 13 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் அனைவரும் மருத்துவ, குறிப்பாக 'கன்னித்தன்மை' உடையவர்களாக இருக்கிறார்களா எனப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.  

டீன் ஏஜ் பெண்களைக் கொண்ட ரகசிய அணி

பின்னர் அவர்கள் அதிபருக்கு பாலியல் சேவை, மசாஜ் சேவை மற்றும் ஆடிப் பாடி மகிழ்விக்கும் சேவை செய்யவென மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுவார்கள். இவர்களுக்கு அதிபருக்கு பிடித்தமான  உணவுகளை எவ்வாறு பரிமாற வேண்டும், எவ்வாறு மசாஜ் செய்வது, எவ்வாறு அவரது செக்ஸ் அடிமையாக நடந்துகொள்ள வேண்டும் என்பன போன்றவை கற்றுத்தரப்படும். 

ஆமாம்! அவர்கள் கிம் ஜாங்குடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். அதே சமயம் அவருக்குப் பிடித்தமான  முறையில் நடந்துகொள்ளாவிட்டாலோ அல்லது தவறிழைத்தாலோ அல்லது ஆட்சேபணை ஏதும் தெரிவித்தாலோ  அவ்வளவுதான்... அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் காணாமல் போய்விடுவார்கள். 

இவ்வாறு அதிபருக்காகக் கொண்டுவரப்படும் மாணவிகள், மீண்டும் அவர்கள் குடும்பத்தினரை அல்லது உறவினர்களைச் சந்திக்கவோ, தொடர்புகொள்ளவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். 'இந்த மாணவிகள் அரசாங்கத்தின் முக்கிய திட்டப்பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்' என்றே அவர்களது குடும்பத்தினருக்குத் தெரியப்படுத்தப்படும். 

ராணுவ வீரர்கள்

இதுபோன்ற சுமார் 2,000 டீன் ஏஜ் பெண்களைக் கொண்ட ரகசிய அணி ஒன்று அதிபருக்குச் சேவை செய்வதற்காகவும் அவரை மகிழ்விப்பதற்காகவும் உள்ளது. இப்படி ஒரு குழு செயல்படுவதே பெரும்பாலான வடகொரிய மக்களுக்குத் தெரியாது.

அதிபரின் விருப்பப்படி நடந்துகொண்டால், அவர் அனுபவித்து சலித்துப்போன பின்னர் அம்மாணவிகள் அயலுறவு விவகாரங்களைக் கையாளும் ராணுவ மூத்த அதிகாரிகளுக்குத்  திருமணம் செய்து வைக்கப்பட்டு, வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். சில பெண்கள் தாங்களாகவே ராணுவத்தில் சேர்ந்துவிடுவார்கள். 

2 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், அதிபர் கிம்மோ நீச்சல்குளம்,  அழகான தோட்டங்கள், நீரூற்றுகள் கொண்ட ஆடம்பர பங்களாக்களில் ஆடம்பரமான உணவுகளை ருசித்துக்கொண்டு  ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறார்" என கிம் ஜாங் உன்னின் உள்ளார்ந்த வாழ்க்கை ரகசியங்களைப் புட்டு  புட்டு வைத்துள்ளார் ஹீ யியான்.

லஞ்சம் வாங்கும் ராணுவத்தினர்

 ஹீ யியானின் குடும்பம், அதிபர் கிம் ஜாங்குக்கு உறவு வட்டத்தில் இருக்கும் குடும்பம் என்பதால், அவரின் தந்தை  ராணுவத்தில் அதிகாரியாகப் பணியாற்றினார். இதனால் நகரில் முக்கிய நபர்கள் இருக்குமிடத்திலேயே இவர்களுக்கு  வீடு கொடுக்கப்பட்டிருந்தது.  

" அதிபர்  நடத்தும்  ஏவுகணைச் சோதனையால்  நாட்டில் அவ்வப்போது ஒருவித பதற்றம் இருந்துகொண்டே  இருக்கும்.இதனால் எனது தந்தை இரவில்கூட போருக்குத் தயாராக இருக்க வேண்டும் என்பதுபோல ராணுவச்  சீருடையுடன்தான் தூங்குவார். ராணுவத்தில் முக்கியமான அதிகாரி என்ற முறையில், அவரது பணி காரணமாக கிம்  ஜாங்கின் ஆட்சி அவலங்களை எங்களால் மிக நெருக்கமாகப் பார்க்க முடிந்தது"  என்று கூறும் லிம்மின் தந்தை  அவரது 51-வது வயதில் மரணமடைந்தார். 

" என் தந்தை ராணுவத்தில் அதிகாரி அந்தஸ்தில் பணியாற்றினார் என்றாலும் அவருக்குச் சம்பளம் ஒன்றும்  சொல்லிக்கொள்ளும்படி இல்லை. எல்லா ராணுவ அதிகாரிகளுக்கும் இதே கதைதான். அதைவிட கொடுமை கீழ்  நிலை ராணுவ வீரர்களுக்கு. அவர்களுக்குச் சம்பளம் என்ற ஒன்று கொடுக்கப்படுகிறதா என்று சொல்ல முடியாத  அளவுக்கு மிக மிகக் குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது. இதர அரசு ஊழியர்களுக்கும் இப்படித்தான் குறைந்த  சம்பளம். 

வடகொரிய ராணுவ வீரர்

அதே சமயம் என் தந்தை ராணுவத்தில் உயரதிகாரி என்பதால், பதவியை வைத்து அவர் லஞ்சம் வாங்கி நிறைய  சம்பாதித்தார். அதனால் நாங்கள் பணக்கஷ்டம் இல்லாமல் வளர்ந்தோம். அதே சமயம் எங்கள் தந்தை வீட்டுக்கு  வந்தால், ராணுவ விவகாரங்கள் குறித்தோ அல்லது அதிபர் கிம் ஜாங் குறித்தோ எங்களிடம்  ஒரு வார்த்தைகூட  பேசமாட்டார். ஏனெனில் வீட்டைச் சுற்றி மட்டுமல்ல. அங்கிங்கெனாதபடி எங்கும் ராணுவ வீரர்கள் சுற்றி  வந்துகொண்டுதான் இருப்பார்கள். எனவே, ஒரு வார்த்தை அதிபரைக் குறித்து தவறாகப் பேசிவிட முடியாது. அப்படிப்  பேசினால் பேசியவரின் குடும்பமே கொல்லப்படும்" என்று சொல்லும் லிம், அவரின் தந்தை மறைவுக்குப் பின்னர்  இனிமேலும் இங்கிருக்க முடியாது என நினைத்து, தனது தாயார், ஒரு சகோதரி மற்றும் ஒரு தம்பியுடன் மிக  ரகசியமான முறையில் தென்கொரியாவுக்குத் தப்பி வந்துள்ளார். அவரது தந்தையுடன் பணிபுரிந்த ஓர் அதிகாரியின்  உதவியுடன், வழியெல்லாம் ஆங்காங்கே மறிக்கும் ராணுவத்தினருக்கு லஞ்சம் கொடுத்து லஞ்சம் கொடுத்தே  எல்லையைக் கடந்து தப்பியுள்ளார். மிகக்குறைந்த சம்பளம்தான் கிடைக்கிறது என்பதால், ராணுவத்தினரும் லஞ்சம்  வாங்கிக்கொண்டு இவ்வாறு வடகொரியாவிலிருந்து ரகசியமாகத் தப்பிக்க நினைப்பவர்களுக்கு உதவுகின்றனர்.   

இவ்வாறு தென்கொரியாவுக்குத் தப்பி வந்த லிம், இங்கிலாந்திலிருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு  அளித்த பேட்டியில்தான் மேற்கண்ட தகவல்களை வெளியிட்டுள்ளார். 

சிறை முகாமல்ல... வதை முகாம்

லிம்மைப் போன்று தப்பி வந்த வேறு சிலர், வடகொரியாவின் கொடூர சிறை முகாம்களில் நடக்கும் விதவிதமான  கொடுமைகள் குறித்தும், நெஞ்சைப் பதறவைக்கும் சிறை அதிகாரிகளின் அட்டகாசங்கள் குறித்தும் பல்வேறு  தகவல்களை வெளியிட்டுள்ளனர். 

கிறிஸ்தவர்கள், அரசியல் கைதிகள், அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டியதாகக்  குற்றம்சாட்டப்பட்டவர்கள் எனச் சுமார் 80,000 முதல் ஒன்றேகால் லட்சம் பேர் வரை இந்த வதை முகாம்களில்  அடைக்கப்பட்டிருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். 

பாதுகாப்பு

" இந்தச் சிறை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் அடிமைத் தொழிலாளிகளாக நடத்தப்படுகின்றனர்.  நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு சிறை அதிகாரிகளால் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்படும்  கைதிகளின் உடல்களை, சக கைதிகளையே அருகில் உள்ள மலை உச்சிக்குச் சுமந்து செல்ல சிறை அதிகாரிகள்  கட்டாயப்படுத்துவார்கள். சரியான உணவு எதுவும் கொடுக்கப்படாமல் தேகம் மெலிந்து பலவீனமாகக் காணப்படும்  அந்தக் கைதிகள் சடலத்தை மிகவும் கஷ்டப்பட்டு மலை உச்சிக்குக் கொண்டு செல்வார்கள். அவ்வாறு கொண்டு  செல்லப்படும் சடலங்களின் முகங்கள் எலிகளால் கடித்துக் குதறப்பட்டு, பார்க்கவே மிகவும் கொடூரமாக இருக்கும்.  அவ்வாறு மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்படும் சடலங்கள் எரிக்கப்பட்டு, அவற்றின் சாம்பலை வயல்களுக்கு  உரமாகப் பயன்படுத்த அதிகாரிகள் எடுத்துச் செல்வார்கள். 

 

ராணுவ அதகாரிகளுடன் கிம் ஜாங்

சித்ரவதைகள், போதிய உணவு கொடுக்காமல் பட்டினி போடுவது, மருத்துவ சிகிச்சை அளிக்க மறுப்பது, பாலியல்  பலாத்காரம் என இன்னும் பல்வேறு கொடுமைகளை அந்த வதை முகாம்களில் சிறைக் கைதிகள் அனுபவித்து  வருகின்றனர். நாய் மற்றும் பன்றிகளை விட கேவலமான வாழ்க்கையை அவர்கள் வாழ்கிறார்கள். இதற்கு செத்துப்போவதே மேல். 

அதிபர் கிம் ஜாங்கை விமர்சித்து சிறை முகாமுக்குப் போகும் யாரும் உயிருடன் திரும்ப முடியாது. வடகொரிய  சமூகத்தில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், கிம்மையோ அல்லது அவரது குடும்பத்தினரை  மட்டும் நீங்கள் விமர்சித்துவிடக் கூடாது. மீறி விமர்சித்து பிடிபட்டால், உங்களிடம் எவ்வளவு பணம் இருந்தாலும்  நீங்கள் உயிர் பிழைக்க முடியாது. அப்படி ஒரு பயங்கரமான அரசு அமைப்பு அங்கு இருக்கிறது" என்று  வடகொரியாவிலிருந்து தப்பி வந்த யேங் கீ என்பவர் ஐ.நா. விசாரணைக் குழுவிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில்  கூறியுள்ளார். 

ஐ.நா விடுத்த எச்சரிக்கை 

வடகொரியாவில், குறிப்பாக சிறைமுகாம்களில் நடக்கும் சித்ரவதைகள், பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட மனித  உரிமை மீறல்கள் தொடர்பாகப் புலனாய்வு செய்து அறிக்கை அளிக்க குழு ஒன்றை ஐ.நா. அமைத்தது. இந்தக்  குழுவினர் வடகொரியாவிலிருந்து தப்பி வந்து தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில்  தஞ்சமடைந்தவர்களிடம் நடத்திய விசாரணைகள் மற்றும் அவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள்,  வடகொரியாவுக்குச் சென்று நடத்திய விசாரணைகள், வடகொரிய சிறை முகாம்களில் அடைக்கப்பட்டு  தப்பிப்பிழைத்தவர்கள் போன்றவர்களிடம் நடத்திய விசாரணைகள் மற்றும் வாக்கு மூலங்கள் அடிப்படையில் 400 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை தயாரித்தது. 

இந்த அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்து பேசிய அந்தக் குழுவின் தலைவர்  மிக்கேல் கிர்பய்,  பிணங்களைப் பானையில் வைத்து மலை உச்சிக்குக் கொண்டு செல்லுமாறு கைதிகளைக்  கட்டாயப்படுத்தியது போன்ற சித்ரவதைகளெல்லாம் ஹிட்லரின் நாஜிப் படைகள் செய்த கொடூரங்களை  நினைவூட்டுகிறது என்று கூறினார். மேலும் மனித உரிமைகளுக்கு எதிராக, மனிதத்தன்மை கொஞ்சமும் இல்லாமல்  வடகொரியாவில் நிகழ்த்தப்படும் கொடுமைகளுக்கு ராணுவத் தலைமை தளபதி என்ற முறையில் நீங்கள்தான்  பொறுப்பேற்க வேண்டும் என்றும், செய்யும் அனைத்துக் குற்றங்களுக்கும் நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டிய  சூழல் வரும் என்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு, தான் எழுதிய கடிதத்தையும் அப்போது கிர்பய் வெளியிட்டிருந்தார். 

ஐ.நா மனித உரிமை ஆணையம்

ஆனால், ஐ.நா விசாரணைக் குழு தாக்கல் செய்த இந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளையெல்லாம்  மறுத்த வடகொரியா,  'மனித உரிமைகள் பாதுகாப்பு' என்ற பெயரில் அதிபர் கிம் ஜாங்கின் ஆட்சியைக்  கவிழ்ப்பதற்கான சதி இது என அதனை அலட்சியப்படுத்திவிட்டது. 

இந்த நிலையில், " வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளைப் பற்றி மட்டுமே உலக நாடுகள் பேசவும் கவலை  வெளியிடவும் செய்கின்றன. ஆனால், வடகொரியா விஷயத்தில் அதையும் தாண்டி கவனம் செலுத்த வேறு  விஷயங்களும் இருக்கின்றன என்பதை இந்த உலகுக்குக் காட்டுவதாக உள்ளது இந்த அறிக்கை. உலக நாடுகள்  இனியேனும் இந்தக் கொடுமைகளுக்கு முடிவுகட்ட முன்வர வேண்டும்" என்று மனித உரிமைகள் ஆணையத்தின்  செய்தித் தொடர்பாளர் ஜுலி ரிவேரோ கூறியிருந்தார். 

அவர் அவ்வாறு கூறி ஆண்டுகள் மூன்று ஓடிவிட்டன. நிலைமையில் எவ்வித மாற்றமுமில்லை!  
=======================================================

சிறை முகாம்கள்: உயிர் பிழைத்தவர்களின் உறைய வைக்கும் வாக்குமூலங்கள்

கிம் ஜோ இல் ( முன்னாள் ராணுவ அதிகாரி)  

" பொது இடத்தில் மரணதண்டனை நிறைவேற்றப்படுவதை முதன்முதலில் நான் பார்த்தது எனது வகுப்புத்  தோழனின் மைத்துனர் கொல்லப்பட்டபோதுதான். முதல் குண்டு பட்டதிலேயே அவரது மண்டையிலிருந்து மூளை  சிதறி ரத்தம் தெறித்தது. அதனைப் பார்த்த மக்கள் அதிர்ச்சியில் கத்தினார்கள். அப்படி ஒரு நிகழ்வைப் பார்த்த  பின்னால் உங்களால் இரவில் தூங்க முடியாது" 

யங் சூன் ( 9 ஆண்டுகள் வடகொரியவின் 'யோடோக்' என்ற சிறை முகாமில் இருந்தவர்) 

" என்ன குற்றம் என்று தெரியாமலேயே என் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற ஆறு பேரும் என்னுடன் சிறைக்குக்  கட்டாயப்படுத்தி அனுப்பப்பட்டார்கள். 70 வயதுக்கும் மேலான என் தாய் தந்தையர், என் 9 வயது மகள் மற்றும் 7  வயது, 4 வயது மற்றும் ஒரு வயது கொண்ட என் மூன்று மகன்கள் சிறையிலடைக்கப்பட்டனர். என் பெற்றோர்  பட்டினியாலேயே உயிரிழந்து போனார்கள். அவர்களை அடக்கம் செய்ய என்னால் சவப்பெட்டிகூட வாங்க  முடியாமல் போய்விட்டது." 

ஷின் டாங் ( சிறை முகாமில் பிறந்து தையல் மெஷின் ஒன்றைக் கீழே போட்டதற்காகத் தண்டிக்கப்பட்டவர்) 

" எனக்குத் தண்டனையாக என் இரண்டு கரங்களுமே மணிக்கட்டுக்குக் கீழே வெட்டப்படப்போவதாகத்தான் நான்  எண்ணினேன். ஆனால், நல்லவேளையாக எனது கைவிரல்கள் மட்டுமே துண்டிக்கப்பட்டன."

ஜீ ஹியான் ( என்ன குற்றம் செய்தார் என்பதைச் சொல்லாமலேயே சிறை முகாமுக்கு 1999-ம் ஆண்டுக்கு  அனுப்பப்பட்டவர்) 

" ஒரு சிறைக் காவலர், சிறை முகாமில் உள்ள ஒரு குழந்தையின் தாயாரிடம் ' உன் குழந்தையைத் தலைகீழாகப்  பிடித்து வாளியில் உள்ள தண்ணீரில் அமிழ்த்து' எனத் துப்பாக்கி முனையில் மிரட்டினார். 'என் குழந்தையை  விட்டுவிடுங்கள்...!' என அந்தப் பெண் எவ்வளவோ கெஞ்சியும் அவர் இரக்கம் காட்டவில்லை. கடைசியில் அந்தப்  பெண் கைகள் நடுங்க, தன் குழந்தையைத் தலைகீழாகத் தூக்கி வாளித் தண்ணீரில் அமிழ்த்தினார். சில  நிமிடங்களிலேயே அந்த வாளித்தண்ணீரிலிருந்து குமிழ்கள் வெளிவரத் தொடங்கி, அந்தக் குழந்தை இறந்துபோனது." 

=============================================================

கிம் ஜாங் இன்னும் மிரட்டுவார்...

https://www.vikatan.com/news/world/116863-north-korea-kim-jong-un-keeps-teenage-sex-slaves.html?artfrm=read_please

  • தொடங்கியவர்

வடகொரியா வீசிய அழகு அஸ்திரம்... அமைதியைக் கொண்டுவந்த ஒலிம்பிக் போட்டி! -21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்? (பகுதி-6)

 
 

Kim__6_13578.jpg

ளீர் வெண்மை... சின்ன உதடுகளில் கச்சிதமாக பூசப்பட்ட சிவப்பு நிற லிப்ஸ்டிக்... மேலே சிவப்பு நிற கோட் அணிந்தபடி அந்த பெண்கள் குழு, தென்கொரியாவின் கேங்னியங் நகரில் அமைந்திருக்கும் அந்த ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் நுழைந்தபோது, அங்கு குழுமியிருந்த தென்கொரிய பார்வையாளர்களிடமிருந்து கிளம்பிய கரகோஷமும் உற்சாக குரல் எழுப்பலும் அப்பகுதியையே அதிரச் செய்தது. அடுத்தச் சில நிமிடங்களிலேயே பார்வையாளர்களில் பலரும் தங்களது மொபைல் கேமராவை ஆன் செய்து அங்கே அணி வகுத்த  வடகொரிய அழகு மங்கைகளை விதவிதமாக படமெடுக்கத் தொடங்கினர். இன்னொரு பக்கம் ஊடக கேமராமேன்களின் ப்ளாஷ் மழையும் அந்த அழகு மங்கைகளின் படை மீது பொழிந்தது. இவர்கள் விமான நிலையத்தில் வந்திறங்கியபோதும் இதே கதைதான்!

 

ஆம், அவர்கள் தென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் கொரிய வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக அனுப்பிவைக்கப்பட்ட ஊக்கமளிக்கும் குழுவைச் சேர்ந்த ( Cheer Leaders) இளம்பெண்கள். இவர்களை 'army of beauties' என்றும் அழைக்கிறார்கள். 

தங்களை வளைத்து வளைத்து புகைப்படங்களாக விழுங்கும் கேமராக்களை ஒரு புன்சிரிப்புடன் பார்த்தவாறே, அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் வந்து அமரத் தொடங்கினர். அதனைத் தொடர்ந்து அவர்களைச் சுற்றிக் குழுமிய தென்கொரிய ரசிகர்கள், பல்வேறு விதமான கேள்விக் கணைகளை வீசத் தொடங்கினர். ஒன்றுக்காவது பதிலளிக்க வேண்டுமே... ம்ஹும்... வெறும் புன்னகை மட்டுமே அவர்களது பதில்களாக இருந்தன. இதனால் சோர்ந்துபோன அந்த ரசிகர் பட்டாளம் அவர்களுடன் சேர்ந்து ஒரு செல்ஃபியாவாது எடுத்துக்கொள்வோம் என்ற ஆறுதலுடன் அந்த அழகு பெண்களுடன் படமெடுத்துக் கொள்கிறது. 

தென்கொரியா வந்திறங்கும் Cheer leaders குழு...

வடகொரியாவின் திடீர் மனமாற்றம்

கடந்த மாத தொடக்கத்தில்தான், தனது மேஜையில் அணு ஆயுத பட்டன் இருப்பதாக தென்கொரியாவையும் அமெரிக்காவையும் ஒரு சேர மிரட்டிக் கொண்டிருந்தார் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன். இந்த நிலையில்தான் ஒரு மாதத்துக்குள் இந்த தலைகீழ் மாற்றம்!

ஆம்! தென்கொரியாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்ற பிப்ரவரி 9-ம் தேதியன்றுதான் மேற்கூறிய நிகழ்வுகள்.  

 

வடகொரியாவின் தொடர் அணு ஆயுத சோதனைகள் காரணமாக அந்த நாட்டுக்கும் தென்கொரியாவுக்கும் இடையே பதற்றம் நிலவி வந்த நிலையில், உலக அளவில் பல்வேறு மட்டங்களிலிருந்து வந்த தொடர் அழுத்தங்கள் காரணமாகவோ என்னவோ, அந்த மிரட்டல் உரையைத் தொடர்ந்து " கொரிய தீபகற்பத்தின் ஐக்கிய கொரியக் கொடி அணிவகுப்பின் கீழ் தென்கொரியாவில் நடக்கவுள்ள போட்டிகளில் நாங்களும் பங்கேற்க விரும்புகிறோம்" என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் பேசியது, இரு நாடுகளுக்கும் இடையே உள்ள இறுக்கம் தளர்வதற்கான அறிகுறியாகப் பார்க்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தென்கொரியாவும் அதற்கு சம்மதம் தெரிவிக்க, இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, தென்கொரியாவின் பியங்சங்கில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் இரு நாடுகளும் 'ஐக்கியக் கொரிய' தீபகற்பக் கொடியுடன் ஒரே அணியாக ஐஸ் ஹாக்கி போட்டியில் பங்கேற்பது என்றும், இப்போட்டிக்கு தென்கொரியாவுடன் ஒரே அணியாக இணைந்து விளையாட வடகொரியா சார்பில் 12 வீராங்கனைகள் அனுப்பப்படுவார்கள் என்றும் முடிவெடுக்கப்பட்டது. 

கிம் ஜாங் சகோதரியை வரவேற்கும் தென்கொரிய் அதிபர் மூன் ஜே இன்

இது குறித்த முடிவு முறைப்படி சர்வதேச ஒலிம்பிக் குழுவுக்குத் தெரியப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அக்குழுவும் அதனை ஏற்றுக்கொண்டு, வடகொரியாவின் 12 வீராங்கனைகள் 23 உறுப்பினர்களைக்கொண்ட தென்கொரிய அணியின் அங்கமாகக் கருதப்படுவார்கள் என்று அறிவித்தது.  

இதனையடுத்து இன்னொரு திருப்பமாகவும், தென்கொரியாவுடனான உறவில் மேலும் நெகிழ்வை ஏற்படுத்தும் விதமாகவும் வடகொரியா வீராங்கனைகளுடன் ஊக்கமளிக்கும் குழு ( Cheer Leaders ) பெண்கள் 229 பேர், இசைக் கலைஞர்கள் குழுவைச் சேர்ந்த 140 பேர் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் இளைய சகோதரி கிம் யோ ஜங் தலைமையிலான குழு தென்கொரியா சென்றது. 

கிம் யோ ஜங்கை தென்கொரியா எதிர்பார்க்கவில்லை. ஆனால், " என்னை தவறாக விமர்சித்து தொடர்ந்து ஊடகங்களில் செய்தி வருவதன் காரணமாகவே எனது சகோதரியை அனுப்ப முடிவு செய்தேன்" என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் விளக்கம் அளித்திருந்தார். 

ஒலிம்பிக் தொடக்க விழாவில் பங்கேற்ற அவர்களை தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் வரவேற்றார். அவரது மனைவியும் வடகொரிய விருந்தினர்களை சிரித்த முகத்தோடு வரவேற்றார். கடந்த 1953-ம் ஆண்டு நடந்த கொரிய போருக்குப் பின்னர் தென்கொரியா சென்றுள்ள வடகொரிய அதிபரின் முதல் குடும்ப உறுப்பினர் கிம் யோ ஜங் என்பது குறிப்பிடத்தக்கது. 

எதிர்ப்பும்... ஆதரவும்

இந்த நிலையில் தென்கொரியா வந்த வடகொரிய குழுவுக்கு, சுமார் 2.64 மில்லியன் டாலர் செலவில் அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் தலைநகர் சியோலில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் செய்யப்பட்டிருந்தன. 

வடகொரியா வீரர்கள் வருகைக்கு எதிரான போராட்டம்...

இதுகுறித்த தகவல் ஊடகங்களில் வரவும், எப்பொழுதும் அணு ஆயுதங்களைக் காட்டி தென்கொரியாவை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வடகொரியாவுடன் இணைந்து ஒலிம்பிக் போட்டியில் ஒரே அணியாக பங்கேற்பதற்கும், அவர்களை நாட்டுக்குள் அனுமதித்ததற்கும் எதிராக மக்களில் பெரும்பாலானோர் தலைநகர் சியோலில் ஆங்காங்கே போராட்டங்களிலும் ஈடுபட்டனர். ஆனாலும் இப்போராட்டங்களையும் தாண்டி தென்கொரிய மக்களில் பலர் வடகொரிய குழுவினரின் வருகைக்கு, குறிப்பாக அந்த உற்சாகக் குழு மங்கைகளுக்கு ரொம்பவே விருப்பம் தெரிவித்து வரவேற்பு தெரிவித்தனர். 

1950 முதல் 1953 வரை நடந்த கொரிய யுத்தத்துக்குப் பின்னர், தென்கொரிய மக்கள் பலருக்கும் வடகொரிய நாட்டைச் சேர்ந்தவர்களை இந்த அளவுக்கு நெருக்கமாக, முகத்துக்கு நேராக பார்ப்பது இதுதான் முதன்முறை என்பதால், அவர்கள் மத்தியில் அவ்வளவு உற்சாகம். ஏதோ நீண்ட நாட்கள் பிரிந்த உறவுகளைப் பார்ப்பதுபோல் இருந்தது அவர்களின் நடவடிக்கைகள்.

கொரிய வீரர்களை உற்சாகப்படுத்தும் Cheer Leaders  பெண்கள்...

குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் இரண்டாவது விளையாட்டாக நடந்த மகளிர் ஹாக்கி போட்டியில், சுவீடன் அணியை எதிர்த்து ஐக்கிய கொரிய மகளிர் ஹாக்கி குழு களமிறங்கியபோது, கேலரியில் 6 தனிக்குழுக்களாக அமர்ந்திருந்த வடகொரிய ஊக்கமளிக்கும் குழுவைச் ( Cheer Leaders) சேர்ந்த 200 க்கும் அதிகமான அந்த இளம்பெண்கள், ஒன்றாக உற்சாக குரல் எழுப்பி அவர்களை ஊக்கப்படுத்தினர். ஆட்டத்தின் ஒவ்வொரு சாதகமான நகர்வின்போதும் கைகளை அசைத்தும், கைகளைத் தட்டியும், கைகளிலிருந்த கொடிகளை அசைத்தும் உற்சாகப்படுத்தினர். அந்தத் தருணங்களில் பார்வையாளர்களின் ஒட்டுமொத்த கவனமும், ஆடுகளத்தில் நின்ற வீராங்கனைகளைக் காட்டிலும் இவர்கள் மீதுதான் அதிகமாக திரும்பியது. ஆனால் தங்கள் மீது மொய்க்கும் பார்வைகளைப் புறம்தள்ளிவிட்டு, கொரிய வீராங்கனைகளை உற்சாகப்படுத்துவதிலேயே அவர்கள் முழுக் கவனமும் செலுத்தினர். 

மனதைக் கொள்ளைக் கொண்ட Cheer Leaders

இன்னொருபுறம் வெள்ளை நிற டி சர்ட், பிங்  நிற பேன்ட் அணிந்திருந்த Cheer Leaders இசைக் குழுவைச் சேர்ந்த பெண்கள் பாடல்களைப் பாடியும், கையில் விசிறியை வைத்தபடி நடனமாடியும் தங்கள் பங்குக்கு கொரிய வீராங்கனைகளை உற்சாகப்படுத்தினர். இன்னொரு புறம் கண்களைப்பறிக்கும் சிவப்பு நிற உடையுடன் இசைக் கருவிகளை வாசிக்கும் கலைஞர்கள்... 

இத்தனை உற்சாகமூட்டல்களுக்கிடையேயும் கொரிய மகளிர் ஹாக்கி அணி, ஸ்வீடன் அணியிடம் தோற்றுபோய்விட்டாலும், வடகொரியா மீதான தென்கொரியர்களின் இறுக்கமான உணர்வைத் தளர்த்தியதில் Cheer Leaders பெண்கள் வெற்றிபெற்றுவிட்டதாகத்தான்  கூறவேண்டும்.  

இசைக் கருவிகளை இசைத்து உற்சாகப்படுத்தும் Cheer Leaders குழு

இந்த Cheer leaders பெண்கள் இங்கே அனுப்பி வைக்கப்பட்டது கொரிய வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக என்றபோதிலும், வடகொரியாவின் 'சுயச் சார்பு' கோஷத்தையும், 'நாம் அனைவரும் ஒன்று' என்ற கோஷத்தையும் பிரபலபடுத்துவதுதான் அவர்களது முக்கிய நோக்கம். வீரர்களை உற்சாகப்படுத்த ஆடிப்பாடும் இந்த cheer Leaders பெண்களை வெளியாட்கள் யாரும், நெருங்கிவிட முடியாது. ரசிகர்களின் அன்புதொல்லைகளிலிருந்து பாதுகாக்க தென்கொரிய போலீஸ் ஒருபுறம் வளையம் அமைத்து கண்காணித்தாலும், இவர்களை யாரும் நெருங்கிப் பேசிவிடாமல் அல்லது இந்த Cheer Leaders  பெண்கள் வேறு யாரிடமும் பேசிவிடக்கூடாது என்பதற்காக வடகொரியாவிலிருந்து இவர்கள் கூடவே வந்த அதிபர் கிம் ஜாங் உன்னின் கண்காணிப்புக் குழு ஒன்றும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டே இருந்தது. 

" மகிழ்ச்சிப்படுத்துங்கள்; ஆனால் நீங்கள் மயங்கி விடாதீர்கள். வெளிநாடுகளுக்குச் செல்லும்போது முதலாளித்துவ நாடுகளைச் சேர்ந்தவர்கள் உங்களுக்குப் பலவிதமான ஆசைகளைக் காட்டி மயக்க முயல்வார்கள். ஆனால், அந்த வலையில் வீழ்ந்துவிடாமல் எச்சரிக்கையுடன், எதிரியின் இதயத்துக்குள் ஊடுருவப் பாருங்கள்.தாய் நாட்டை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்" என்பதுதான் என்பது எங்களுக்குக் கொடுக்கப்படும் கடுமையான அறிவுறுத்தல்" என்கிறார் இதுபோன்று குழுவில் இடம்பெற்ற முன்னாள் cheer leader ஹான் சியோ ஹீ.   

army_beauties2_13092.jpg

"20 வயதுக்கு உட்பட்டு இருக்கும் இந்த பெண்கள் பெரும்பாலும் கல்லூரிப் பெண்கள். வடகொரியாவின் உயர் வகுப்பு குடும்பங்களைச் சேர்ந்த பெண்களைத்தான் இந்த  Cheer Leaders குழுவுக்குத் தேர்ந்தெடுப்பார்கள். வடகொரியாவின் பொதுத் தூதர்களாக செயல்பட வேண்டும் என்பதுதான் இவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பணி. எந்த ஒரு வெளிநாட்டுக்கு இதுபோன்று பொதுத் தூதர்களாக சென்று திரும்பினாலும், அதுகுறித்த அனுபவங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ளக் கூடாது என எச்சரிக்கப்படுவோம்" என்கிறார் ஹான் சியோ ஹீ மேலும். 

திசைத் திருப்பும் தந்திரமா? 

முன்னதாக இந்த வடகொரிய ஊக்கமளிக்கும் பெண்கள் குழுவைப் பார்த்த தென்கொரிய மக்கள், வியப்பு, கேலி, கிண்டல், கோபம், பரிதாபம் எனப் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தினர். 

இந்த விளையாட்டைப் பார்ப்பதற்கென்றே வந்த 28 வயதான லீ சூ ரா என்ற நர்ஸ் ஒருவர், இவர்கள் குறித்துக் கூறும்போது," இந்தப் பெண்களை இங்கே பார்க்கும்போது எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. வடகொரிய மக்களுடன் நான் மிகவும் நெருக்கமாக இருப்பதைப்போன்ற உணர்வை இவர்கள் எனக்குத் தருகிறார்கள்" என்றார். 

இந்த cheerleaders அமர்ந்திருந்த இருக்கைக்கு அடுத்து அமர்ந்திருந்த் ஹான் சன் வூ என்ற 25 வயது இளைஞர்," இது மிகவும் பழைய ஃபேஷனாகத் தெரிகிறது. 70 கள் ( Seventies) எப்படி இருந்தது என்ற அனுபவம் எனக்கு இல்லை; ஆனால், இவர்களைப் பார்க்கும்போது அதனை கற்பனை செய்துகொள்கிறேன். 

இவர்களுக்காக நான் இரக்கப்படுகிறேன்.இதைத்தான் இவர்கள் உலகுக்குக் காட்ட விரும்பினார்கள் என்றால், அங்கு 
( வடகொரியா) இருக்கும் மற்ற மக்களின் நிலைமை இன்னும் எந்த அளவுக்கு பின்தங்கி இருப்பார்கள் என்பதை என்னால் உணர முடிகிறது" என்றார். 

Cheer leaders பெண்களுடம் செல்ஃபி எடுக்கும் தென்கொரிய தம்பதி...

வயதானவர்களோ, "இவர்கள் இந்த விளையாட்டுக்காக நாட்டைவிட்டு வெளியே அனுப்பப்பட்டாலும்,  உலகின் கொடூர ஆட்சி நடக்கும் அந்த தேசத்து ( வடகொரியா) கைதிகளாகத்தான் இந்தப் பெண்களும் ( Cheer Leades) இருக்கிறார்கள். வடகொரியாவின் சிறை முகாம்கள், அங்கு நடக்கும் மோசமான சித்ரவதைகள், பொது இடங்களில் நிறைவேற்றப்படும் மரண தண்டனைகள் போன்றவற்றிலிருந்து உலக நாடுகளைத் திசை திருப்புவதற்காகவே இந்தப் பெண்களை வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அனுப்பி உள்ளார்" என்று காட்டமாகக் கூறினர். 

" பொருளாதாரத்தடை, தனிமைப்படுத்தல் போன்ற உலக நாடுகளின் பல்வேறு அழுத்தங்களைச் சமாளிக்க முடியாமல், அவற்றிலிருந்து வெளிவந்து உலகுக்கு வேறொரு முகத்தைக் காட்டுவதற்கு இந்த ஒலிம்பிக் போட்டியை வடகொரியா பயன்படுத்திக் கொண்டுள்ளது. 

மேலும் தென்கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவில் பிளவை ஏற்படுத்துவதற்கான முயற்சியாகவும் வடகொரியா இந்த ஒலிம்பிக் விளையாட்டை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறதோ என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது" என்கிறார் ஹியாங் லீ என்ற தென்கொரிய பத்திரிகையாளர். 

அமைதியை விரும்பும் தென்கொரிய அதிபர்

ஆனால், தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்-க்கு வடகொரியாவுடன் சமாதானமாக இருக்க வேண்டும் என்ற விருப்பம் இருப்பது தெரிகிறது. அதனால்தான், உள்நாட்டில் கணிசமாக இருக்கும் எதிர்ப்பையும் மீறி வடகொரிய வீராங்கனைகளுடன் இணைந்து தென்கொரிய வீராங்கனைகள் ஐக்கிய கொரிய கொடியின் கீழ் விளையாட ஒப்புக்கொண்டார். 

அவரது இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒலிம்பிக் வளாகத்துக்கு வெளியே மக்கள் வடகொரிய அதிபரின் படங்களைக் கிழித்தும், தென்கொரிய - அமெரிக்க கொடிகளை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பியும் போராடிக்கொண்டிருந்தனர். மேலும் அரசு அதிகாரிகள் மத்தியிலும் தென்கொரிய அதிபரின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு காணப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த நாட்டு ஊடகம் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னின் செல்வாக்கு 67 சதவீதம் சரிந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 

ஒலிம்பிக் மைதானத்தில் ஐக்கிய கொரிய கொடியுடன் வரும் வீரர்கள்...

குறிப்பாக, தென்கொரிய இளைஞர்களிடையேதான் அதிபர் மூன் ஜே இன் மீதான கோபம் அதிகமாக காணப்படுகிறது. வடகொரிய விளையாட்டு வீரர்களுக்கும் அவர்களுடன் வந்த குழுவினருக்கும் இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா என்ற கேள்வியும் கோபமும் அவர்கள் மத்தியில் காணப்படுகிறது. ஆனால் தென்கொரிய மூத்த தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் அச்சமூட்டும் நடவடிக்கைகளுக்காக அந்த நாட்டு மக்களையோ அல்லது வீராங்கனைகளையோ வெறுக்க வேண்டிய அவசியம் இல்லை. அதிலும், குறிப்பாக விளையாட்டு வீரர்களிடம் அந்த வெறுப்பைக் காண்பிக்க வேண்டாம் என்று கூறுகின்றனர். 

முறுக்கிக் கொண்ட அமெரிக்கா

" வடகொரியாவுடன் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கத்தை வைத்துக்கொண்டு, குளிர்கால ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்தவுடன் அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தையை நடத்த வைக்க முடியும் என்று தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் நம்புகிறார். ஆனால், அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும், ஒலிம்பிக் போட்டி முடிவடைந்துவிட்டால் தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து கூட்டாக மேற்கொள்ளும் ராணுவ பயிற்சி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கிவிடும். அப்படி இருக்கையில் மேற்கூறிய பேச்சுவார்த்தைக்கு சாத்தியமில்லை. மேலும்  தென்கொரியாவே  விரும்பினாலும், ஒன்றுபட்ட கொரிய தேசம் உருவாவதை அமெரிக்கா விரும்பாது. அப்படி நடக்கவும் விடாது" என்கிறார் சியோல் தேசிய பல்கலைக்கழகத்தின் அரசியல் பேராசிரியரான டாங்- ஜூன். 

கிம் யோ ஜோங்கை கண்டுகொள்ளாத அமெரிக்க துணை ஜனாதிபதி...

அவர் சொல்வது உண்மை என்பதுபோன்றுதான் ஒலிம்பிக் விளையாட்டு வளாகத்தில் சில நிகழ்வுகள் நடந்தேறின. ஒலிம்பிக் போட்டிக்கு அமெரிக்கா சார்பில் வந்த குழுவுக்குத் தலைமையேற்று வந்த  அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், வடகொரிய நாட்டினருடன் எவ்வித நட்பும் பாராட்டவில்லை. வடகொரிய அதிபரின் தங்கை கிம் யோ ஜோங் அமர்ந்திருந்த வரிசைக்கு, முன் வரிசையிலேயே பென்ஸ் உட்கார வைக்கப்பட்டிருந்தார். அப்போது அங்கு அமர்ந்திருந்த பலரும் கைகுலுக்கிக் கொண்டபோது கிம் யோ ஜோங்கை முகத்துக்கு நேராக பார்ப்பதையே தவிர்த்துவிட்டார்  பென்ஸ். அதேப்போன்று இன்னொரு சம்பவம். ஒலிம்பிக் விழாவுக்கு வந்திருந்த அரசியல் தலைவர்களுக்கு இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், வடகொரியாவிலிருந்து வந்திருந்த சுப்ரீம் பீப்புள்ஸ் அசெம்ப்ளியின் தலைவர் கிம் யோங் நம்முக்கு அருகில், அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸுக்கு இருக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தத் தகவல் தெரிந்ததால், அவர் இரவு விருந்தில் கலந்துகொள்ளாமல் சென்றுவிட்டார். 

ஆனால், தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கிம் யோ ஜோன் உடன் கைகுலுக்கினார்கள். இந்த நிலையில், "நீண்டகால அடிப்படையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், வடகொரியாவும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தைக்கு முன்வர வாய்ப்புள்ளது" என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார் பேராசிரியர் டாங்- ஜூன்.   
 
எது எப்படியோ  ஒரு ஒலிம்பிக் போட்டி இரு கொரிய நாடுகளிடையே நிலவி வந்த பதற்றத்தைத் தணிய வைத்து, அமைதியைக் கொண்டு வந்துள்ளது. கூடவே தென்கொரியா, அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையேயான போர் பதற்றத்தையும் அது தணித்துள்ளது என்று சொல்லலாம்! 

ஜின்பிங் இன்னும் மிரட்டுவார்...

https://www.vikatan.com/news/world/117488-north-korean-cheerleaders-army-of-beauties-invade-south-for-the-winter-olympics.html

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

வடகொரியா: ட்ரம்ப் முடிவு... எச்சரிக்கும் அமெரிக்க அதிகாரிகள்! - 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்? (பகுதி-7)

 
 

கிம் ஜாங், kim jong

தென்கொரியாவில், கடந்த பிப்ரவரி மாதம் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் தென்கொரியாவும் வடகொரியாவும் ஒரே அணியாக இணைந்து விளையாடியதைத் தொடர்ந்து, இரு நாடுகளிடையே நிலவிவந்த பதற்றம் தணிந்தது, இதனால், தென்கொரியா முயற்சியின் பேரில் வடகொரியா - அமெரிக்கா இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா, மீண்டும் வருகிற ஏப்ரல் மாதத்திலிருந்து போர் பயிற்சியைத் தொடங்கவிருப்பது வடகொரியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அமைதிப் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்காவிடம் கெஞ்சமாட்டோம் என வடகொரியா அறிவித்திருப்பது, கொரிய தீபகற்பத்தில் அமைதி திரும்புவதற்கான வாய்ப்பை மங்கச் செய்துள்ளது.

 

தென்கொரியாவும் வடகொரியாவும் இணக்கமாக இருப்பதை அமெரிக்கா விரும்பவில்லை என்றும், அதன் காரணமாகவே அமைதிச் சூழலை சீர்குலைக்கும் விதமான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்கிறது என்ற குற்றச்சாட்டை வடகொரியா முன்வைத்துள்ளது. 

வடகொரியா, northkorea

" ஒருபுறம் வடகொரியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்துக்கொண்டே, மறுபுறம் தென்கொரியாவுடன் இணைந்து போர் பயிற்சியிலும் ஈடுபடுவதை வடகொரியா வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அதற்கான வடகொரியாவின் எதிர்வினைகளைச் சந்தித்துதான் ஆக வேண்டும். இதனால் ஏற்படப்போகும் விளைவுகளுக்கு அமெரிக்காவே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும்" என்று வடகொரிய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாக அந்த நாட்டு அரசு செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது. 

பேச்சுவார்த்தைக்கு அமெரிக்காவின் நிபந்தனை

தென்கொரியாவில், பிப்ரவரியில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் தென்கொரியாவுடன் இணைந்து 'ஐக்கியக் கொரிய' தீபகற்பக் கொடியுடன் ஒரே அணியாக ஐஸ் ஹாக்கிப் போட்டியில் பங்கேற்க வடகொரியா விருப்பம் தெரிவித்ததும், அதனைத் தொடந்து ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தனது இளைய சகோதரி கிம் யோ ஜாங்-கை அனுப்பி வைத்ததும் இரண்டு கொரிய நாடுகளிடையே நிலவி வந்த இறுக்கத்தை தளரச் செய்தது. அத்துடன் வடகொரியா வருமாறு கிம் யோ ஜாங், தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னுக்கு விடுத்த அழைப்பும், அதன்பின்னர் வடகொரியாவின் சிறப்புத் தூதராக தென்கொரியா சென்ற வடகொரியா முன்னாள் உளவுத்துறைத் தலைவரும் ராணுவத் தளபதியுமான கிம் யாங் -சோல், அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த தங்கள் நாடு தயாராக இருப்பதாகக் கூறியதும் நல்ல முன்னேற்றமாகக் கருதப்பட்டது. 

தென்கொரொய அதிபர் மூன் ஜே இன் உடன் ட்ரம்ப்

இதனையடுத்து, "இரு கொரிய நாட்டுத் தலைவர்களும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டுள்ளதாகவும், தென்கொரியா சார்பில் சிறப்புத் தூதர் ஒருவரை வடகொரியாவுக்கு அனுப்ப இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் தகவல் தெரிவித்தார். ஆனால், இதனை ட்ரம்ப் எந்த அளவுக்கு ரசித்தார் என்று தெரியவில்லை. 

 

இதனையடுத்து வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும், ஆனால் அதற்கு முன், இனிமேல் அணு ஆயுத ஏவுகணைச் சோதனையை நடத்த மாட்டோம் என்று வடகொரியா உறுதியளிக்க வேண்டும் என்றும், அவ்வாறு அல்லாமல் தொடர்ந்து ஏவுகணைச் சோதனையில் ஈடுபட்டால் வடகொரியா மீது தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் அமெரிக்கா தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டது. கூடவே ஜப்பானுடன் இணைந்து கொரிய தீபகற்பத்தில் வடகொரிய கப்பற்படைக்கு எதிராக முற்றுகை நடவடிக்கையை மேற்கொள்ள அமெரிக்கா பரிசீலித்து வருவதாகவும் கூறப்பட்டது. 

 

'அமெரிக்காவிடம் வடகொரியா கெஞ்சாது'

இந்த நிலையில்தான் அமெரிக்காவின் இந்த நிபந்தனையை வடகொரியா நிராகரித்துவிட்டது. "அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். ஆனால், அதற்காக முன் நிபந்தனை எதையும் ஏற்க இயலாது. அமைதிப் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்காவிடம் நாங்கள் ஒருபோதும் கெஞ்சப்போவதுமில்லை, ராணுவ நடவடிக்கையைத் தவிர்க்கப் போவதுமில்லை" என்று வடகொரிய அயலுறவுத் துறை அமைச்சகப் பேச்சாளர் கூறியதாக அந்த நாட்டு அரசு செய்தி ஏஜென்சியான கே.சி.என்.ஏ, கடந்த சனிக்கிழமையன்று, அதாவது மார்ச் 3-ம் தேதியன்று தெரிவித்தது. 

இந்த நிலையில், அமெரிக்காவை முழுமையாகத் தாக்கும் அளவுக்கான அணு ஆயுத ஏவுகணையை வடகொரியா தயாரித்துவிட்டால், அது அமெரிக்காவுக்கு மிகவும் ஆபத்தானதாக மாறிவிடும் என்றும், எனவே வடகொரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை மேற்கொள்வது கட்டாயம் என்றும் ட்ரம்ப் நிர்வாகம் கருதுகிறது. 

வடகொரியா, north korea

வடகொரியா முழு அணு ஆயுத வல்லமை கொண்ட நாடாக உருவெடுத்துவிட்டால், அது இரான், லிபியா உள்ளிட்ட அணு ஆயுத ஏவுகணைச் சோதனை தொழில்நுட்பம் அறிந்திராத நாடுகளுக்கும் அந்தத் தொழில்நுட்பத்தை வடகொரியா வழங்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என்றும், அப்படி நிகழ்ந்தால் அது அமெரிக்காவுக்கு மட்டுமல்லாமல்,  பிறநாடுகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தி விடும் என்றும் அமெரிக்கக் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தெற்கு கரோலினாவின் செனேட்டர் லிண்ட்ஸே கிரஹாம், சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 

 

ட்ரம்ப்பை எச்சரித்த அமெரிக்க அதிகாரிகள்

இதனிடையே, வடகொரியாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை தொடர்பாக அமெரிக்க ராணுவத் தலைவர் மார்க் மில்லே, ராணுவச் சிறப்பு நடவடிக்கைகளுக்கான கமாண்டர் ரேமண்ட் தாமஸ் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த வியாழக்கிழமை, அதாவது மார்ச் 1-ம் தேதியன்று ஆலோசனை நடத்தியதாகவும், அப்போது வடகொரியா மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால் அமெரிக்க ராணுவத் தரப்பிலும் சிவிலியன்கள் தரப்பிலும் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து அதிகாரிகள் ட்ரம்ப்புக்கு எடுத்துரைத்ததாகவும் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

ராணுவ உயரதிகாரிகளுடன்  ஆலோசனை நடத்தும் ட்ரம்ப்...

" வடகொரியா மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தினால், முதல் சில நாள்களிலேயே அமெரிக்கா தரப்பில் சுமார் 10,000 வீரர்கள் உயிரிழக்க நேரிடும். இது இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகள் மீது தாக்குதல் நடந்தபோது தொடக்க நிலையில் ஏற்பட்ட வீரர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை சுமார் மூவாயிரம் என்ற நிலையைக் காட்டிலும் மிக அதிகமாக இருக்கும். அதேபோன்று சிவிலியன்கள் தரப்பிலும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழக்க நேரிடும். 

 

 

தென்கொரியாவில் தற்போது சுமார் 28,500 அமெரிக்க வீரர்கள் உள்ளனர். போர் வெடித்தால் வடகொரியா ஏவுகணை தாக்குதலுக்கு தென்கொரியா, குறிப்பாக தலைநகர் சியோல் எளிதில் இலக்காக நேரிடும். அப்படி ஒன்று நிகழ்ந்தால் உயிரிழப்பு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும். அதேபோன்று தற்போதைய அமெரிக்க வீரர்கள் யாரும் சந்தித்திராத கொடூரங்களையும் அமெரிக்க வீரர்கள் எதிர்கொள்ள நேரிடும். 

 

எனவே, ராணுவத் தாக்குதல் என்பதை வேறு வழியே இல்லை என்ற தீவிரமான நிலை ஏற்பட்டாலொழிய தேர்வு செய்ய வேண்டாம். கூடியவரைக்கும் பல்வேறு அழுத்தங்கள் மூலம் வடகொரியாவை பேச்சுவார்த்தை மேஜைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளுக்கே முக்கியத்துவம் அளியுங்கள்" என அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஹெச்.ஆர். மெக்மாஸ்டர் மற்றும் அமெரிக்க ராணுவத் தலைவர் மார்க் மில்லே ஆகியோர் ட்ரம்ப்பை எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

போர் பயிற்சியில் அமெரிக்க வீரர்கள்...

இதேபோன்று குடியரசுக் கட்சி செனேட்டர் ஸென்.ஜேம்ஸ் ரிஸ்ச் மற்றும் வெள்ளை மாளிகையின் பல்வேறு உயரதிகாரிகளும் வடகொரியாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை வேண்டாம் என்று எச்சரித்ததாகவும் வாஷிங்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 

ஆக மொத்தத்தில் நிலைமையின் அடிப்படை உண்மைகளை உணர்ந்து அமெரிக்க அதிபர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். அதேபோன்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் தென்கொரியாவை வடகொரியாவின் ஆளுகையின் கீழ் கொண்டு வந்து ஐக்கிய கொரியாவை ஆள வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டு, அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப ஒப்புக்கொள்ள வேண்டும். வீராவேசமாகப் பேசினாலும்  இனிமேலும் சர்வதேசப் பொருளாதார தடைகளைத் தாங்கும் சக்தி வடகொரியாவுக்கு இல்லை என்ற யதார்த்த நிலையை கிம் ஜாங் உன்னும் உணர்ந்திருப்பதால் அவருக்கு அதைத்தவிர வேறு வழியில்லை! 

 

இத்தொடர் இத்துடன் நிறைவுபெற்றது.  

https://www.vikatan.com/news/world/118318-war-with-north-korea-us-military-warns-trump.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.