Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''நாப்கினை மறைக்கத் தேவையில்லை!'' - பாலிவுட்டில் பரபரக்கும் பேட்மேன் சேலஞ்ச் #PadManChallenge

Featured Replies

''நாப்கினை மறைக்கத் தேவையில்லை!'' - பாலிவுட்டில் பரபரக்கும் பேட்மேன் சேலஞ்ச் #PadManChallenge

 

பேட்மேன்

பாலிவுட்டில் ’பத்மாவத்’ திரைப்படத்துக்கு அடுத்து பரபரப்பாகப் பேசப்படும் திரைப்படம், ‘பேட்மேன்’. பாலிவுட்டின் ஆக்‌ஷன் கிங் அக்‌ஷய் குமார், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் நடித்துள்ள இந்தத் திரைப்படம் பிப்ரவரி 9-ம் தேதி வெளியாகிறது. பெண்களுக்குக் குறைந்த செலவில் நாப்கின்கள் தயாரித்த கோயம்பத்தூரைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவரின் வாழ்க்கைக் கதையைப் பேசுகிறது இந்தத் திரைப்படம். 

 

பேட்மேன்''இந்தப் படம் மாதவிடாய் குறித்து சமூகத்தில் நிலவும் பல கற்பிதங்களை உடைக்கும் வகையில் இருக்கும்'' என்று அக்‌ஷய் குமார் தெரிவித்திருக்கிறார். திரைப்படத்தைப் பல வகையில் விளம்பரப்படுத்தி வருகிறார்கள். அதில் ஒன்றாக #PadManChallenge அறிமுகப்படுத்தியிருக்கிறார் அக்‌ஷய். சமூக வலைதளங்களில் இது பிரபலமாகி வருகிறது. ஒரு நல்ல விஷயத்துக்கோ, பொழுதுபோக்குக்கோ ஒருவர், நண்பர்களுக்கு இதுபோன்ற சவால்களைக் கூறுவார்கள். இதற்குமுன், #IceBucketChallenge #100HappyDaysChallenge போன்ற சாவல்கள் வைரலாகின. அந்த வரிசையில், சானிட்டரி நாப்கினை கையில் வைத்தபடி பிரபலங்கள் போஸ் கொடுக்க வேண்டும் என்பதுதான் #PadManChallenge. இந்தச் சவாலை முதலில் தொடங்கிவைத்தவர், அருணாச்சலம் முருகானந்தம். அக்‌ஷய் குமார் மற்றும் திரைப்படத்தின் தயாரிப்பாளரும் அக்‌ஷய் குமாரின் மனைவியுமான டிவிங்கிள் கண்ணாவுக்குச் சவாலை ஏற்றுக்கொள்ளுமாறு பதிவிட்டார். 

 

அந்தச் சவாலை ஏற்ற டிவிங்கிள் கண்ணா, நடிகர் அமீர் கான், நடிகை ஷாபனா ஆஸ்மி மற்றும் தொழிலதிபர் ஹார்ஷ் கோயிங்காவுக்கு இந்தச் சவாலை எடுத்துக்கொள்ளுமாறு செய்தார். நடிகர் அக்‌ஷய் குமார், நடிகை அலியா பட், தீபிகா படுகோன், விராட் கோலிக்கு சவால்விட்டார். ‘ஆம்! என் கையில் ’பேட்’ இருக்கிறது. இதற்காக நான் வெட்கப்படவில்லை. இது இயல்பான ஒன்று!’ என்ற உறுதிமொழியுடன் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

பேட்மேன்

நடிகை அலியா பட் இந்தச் சவாலை ஏற்று தன் ட்விட்டர் பக்கத்தில், ஜிம்மில் தலைகீழாகத் தொங்கியவாறு, சானிட்டரி நாப்கினை கையில் பிடித்து போஸ் கொடுத்துள்ளார். அமீர் கானும், சானிட்டரி நாப்கினை கையில் பிடித்தபடி புகைப்படத்தை வெளியிட்டு, ஷாரூ கான், அமிதாப் பச்சனுக்குச் சவாலை ஏற்றுக்கொள்ளுமாறு ட்விட்டியிருந்தார். இப்போது, சமூக வலைதளத்தில் இருக்கும் பலரும் இந்தச் சவாலை ஏற்று, சானிட்டரி நாப்கினுடன் புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார்கள். 

யூ-ட்யூப் பிரபலமான ஆரண்யா ஜோஹருடன் (Aranya Johar) இணைந்து ஒரு பாடலையும் பாடியிருக்கிறார் அக்‌ஷய் குமார். அது, #BleedingRani என்ற ஹேஷ்டேக்குடன் வெளியிடப்பட்டுள்ளது. ”மாதவிடாய் சமயத்திலும் எங்களால் திறமையாக வேலை செய்ய முடியும். ஃபேஸ்புக்கில் முற்போக்காக இருப்பதுபோல் இருக்கிறோம். ஆனால், உண்மையில் அப்படி இருப்பதில்லை’ என்பது போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. 

இந்தத் திரைப்படத்துக்கு இந்தியா முழுவதும் வரிவிலக்கு அளிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு, இந்தியாவில் போதிய கழிப்பறைகள் இல்லாததால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து அக்‌ஷய் குமார் நடித்து வெளியான ‘ஏக் டாய்லெட் கி பிரேம் காதா’ படத்துக்கு உத்திரப்பிரதேச மாநிலத்தில் வரிவிலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது, இதுபோன்ற சமூக அக்கறைகொண்ட திரைப்படங்களுக்கு இந்தியா முழுவதும் வரிவிலக்கு அளித்தால், மேலும் பல சமூக அக்கறையான திரைப்படங்கள் நிச்சயம் உருவாகும். ‘பேட்மேன்’ திரைப்படம் மூலம் மாதவிடாய் பற்றி விழிப்புஉணர்வு ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

உங்களில் யாராவது இந்த #PadManChallenge ஏற்க ரெடியா?

https://www.vikatan.com/news/india/115357-bollywood-celebrities-takes-up-padman-challenge.html

  • தொடங்கியவர்

‘PadMan Challenge’ என்ற பெயரில் அருணாசலம் முருகானந்தம் விடுத்த சவாலை ஏற்ற பொலிவுட் பிரபலங்கள்…

 

 

சனிடரி நப்கினுடன் புகைப்படம்: 

மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் சனிடரி நப்கின் குறித்து சமூகத்துக்கு இருக்கும் அசௌகரிய உணர்ச்சியை போக்கும் நோக்கத்துடன், சனிடரி நப்கினுடன் உங்களால் சனிடரி நப்கினோடு ஒரு புகைப்படம் எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பகிர முடியுமா என்று தமிழர் ஒருவர் விடுத்த சவாலுலை பாலிவுட்டின் பிரபல இந்தி நட்சத்திரங்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

sonamakapoor படத்தின் காப்புரிமைHTTPS://TWITTER.COM/SONAMAKAPOOR

அமீர்கான், அட்சய் குமார், சோனம் கபூர், ராதிகா ஆப்தே, ட்விங்கிள் கண்ணா உள்ளிட்டோர் சனிடரி நப்கினுடன் போஸ் கொடுக்கம் தங்கள் படங்களை ருவிட்டரில் பகிர்ந்துள்ளனர். இந்த சவாலை விடுத்த தமிழர் பெயர் அருணாசலம் முருகானந்தம். கோவையை சேர்ந்த இவர், மலிவு விலையில் சனிட்டரி நப்கின் தயாரிப்பதற்கான இயந்திரத்தை வடிவமைத்த இவரை சமூகத் தொழில் முனைவோர் என்று ஊடகங்கள் அழைக்கின்றன. இவரது வாழ்க்கை வரலாற்றைக் கொண்டு PadMan என்ற பெயரில் ஒரு திரைப்படம் தயாராகிவருகிறது.

@aamir_khan

 

Thank you @mrsfunnybones
Yes, that’s a Pad in my hand & there’s nothing to be ashamed about. It’s natural! Period. #PadManChallenge. Copy, Paste this & Challenge your friends to take a photo with a Pad. Here I am Challenging @SrBachchan , @iamsrk & @BeingSalmanKhan

 

‘PadMan Challenge’ என்ற பெயரில் அருணாசலம் முருகானந்தம் விடுத்த இந்த சமூக வலைத்தள சவாலை ஏற்றுக்கொண்ட பொலிவுட் பிரபலங்கள் மற்றவர்களுக்கும் அதேபோன்ற சவாலை விடுத்தனர். இதையடுத்து, பலரும் சனிடரி நப்கினுடன் படமெடுத்து ருவிட்டரில் பகிர்ந்து இதனை புதிய ட்ரெண்டாக மாற்றியுள்ளனர்.

யார் இவர்?

கோவை அருகேயுள்ள பாப்பநாயக்கன் புதூரில் 1962ம் ஆண்டு முருகானந்தம் பிறந்தார். பழைய துணிகளை தன்னுடைய மனைவி பத்திரப்படுத்தி வைப்பதை பார்த்து, மாவிடாய் காலத்தில் அவர் பயன்படுத்துவதற்கு மலிவு விலையிலான சனிட்டரி நேப்கின் செய்வதற்கு முயற்சி செய்து, அதில் வெற்றியும் பெற்று இன்று உலகளவில் மதிக்கப்படும் மனிதராகியுள்ளார்.

 @akshaykumar

 

Thank you for tagging me @murugaofficial
Yes, that’s a Pad in my hand & there’s nothing to be ashamed about. It’s natural! Period. #PadManChallenge

Copy, Paste this & Challenge your friends to take a photo with a Pad!

Here I am Challenging @deepikapadukone @imVkohli @aliaa08

 

 @sonamakapoor

 

Thank you @murugaofficial for the #PadManChallenge ! Yes that’s a Pad in my hand & I don’t feel weird. It’s natural, Period!
Copy, Paste this & Challenge your friends to take a photo with a Pad!
Here I am Challenging @ReallySwara @Asli_Jacqueline @arjunk26

 
 

 

“பாட் மான்” (Pad Man) திரைப்படம்

“பாட் மான்” (Pad Man) என்கிற திரைப்படம் ஆர். பால்கியால் எழுதி இயக்கப்பட்டுள்ள வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும்.

 @murugaofficial

 

@akshaykumar ji is the first super star in the world to talk about menstrual hygiene and taboos surround it. I’m happy that he is portraying my story as #Padman @mrsfunnybones @sonamakapoor @PadManTheFilm

 முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @murugaofficial

அக்ஷய் குமார், சோனம் கபூர் மற்றும் ராதிகா ஆப்தே முன்னிலை பாத்திரங்களில் நடித்துள்ள இந்த திரைப்படம், டுவிங்கிள் கண்ணா எழுதிய ‘த லெஜன்ட் ஆப் லக்ஷிமி பிரசாத்’ என்ற புத்தகத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டதாகும். இது தமிழ்நாட்டில் கோயம்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த, இந்திய மற்றும் உலகளவில் ஏழை பெண்களின் சுகாதாரத்திற்கு பங்காற்றிய முருகானத்தின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட புத்தகம். 2018 ஜனவரி 25ம் தேதி வெளியிடப்பட இருந்த இந்த திரைப்படம் இப்போது பிப்ரவரி 9ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

@murugaofficial

 

#PadManChallenge

Yes that’s a Pad in my hand & there’s nothing to be ashamed about. It’s natural! Period. #StandByHer

Copy, Paste this & Challenge your friends to take a photo with a Pad!

Here I am Challenging @akshaykumar @mrsfunnybones @sonamakapoor @radhika_apte

புகழின் உச்சி

சாதாரணமாக வாழ்க்கையை தொடங்கிய முருகானந்தத்தை, சுகாதார நப்கின்களை தயாரிக்க மேற்கொண்ட முயற்சிகளின் தொடக்கத்தில் பெரிதளவில் கண்டுக்கொள்ளப்படவில்லை. பன்னாட்டு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் மாதவிடாய்க்கால நேப்கின்களை வாங்க முடியாத ஏழை பெண்களுக்காக எளிய வழிகளை கண்டறிந்ததோடு, அவற்றை தயாரிக்க சிறப்பு எந்திரத்தையும் வடிவமைத்து அதற்கு காப்புரிமை பெற்றது, இவரை சாதனை மனிதருக்கான இடத்தை அடைய செய்தது.

நப்கின் உற்பத்தி செய்யும் இயந்திரத்தின் விலை சுமார் 3.5 கோடி ரூபாய்  என்றிருந்த நிலையில்,  65 ஆயிரத்திற்கு எந்திரம் வடிவமைத்து நப்கின் உற்பத்தியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினரர்.

2016ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது அளித்து இவரை இந்திய அரசு கௌரவித்த பின்னர், மிகவும் பிரபலம் அடைந்தார்,

 @mrsfunnybones

 

Thank you for tagging me @murugaofficial
Yes, that’s a Pad in my hand & there’s nothing to be ashamed about. It’s natural! Period. #PadManChallenge

Copy, Paste this & Challenge your friends to take a photo with a Pad!

Here I am Challenging @aamir_khan @AzmiShabana @hvgoenka

 

 

முருகானந்த்தத்தின் வாழ்க்கை திரைப்படம் விரைவில் வெளியாக இருப்பது, அவரது புகழை உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.

பாலிவுட் நடிகர்களுக்கு சவால்

மாவிடாய் காலத்தில் பெண்கள் அணிகின்ற நேப்கின்களை வெளிப்படையாக கொண்டு செல்வது சமூக அளவில் இதுவரை ஏற்றுக்கொள்ளப்படாத வழங்கமாகவே இந்தியாவில் காணப்படுகிறது.

 @radhika_apte

 

Yes, that’s a Pad in my hand & there’s nothing to be ashamed about. It’s natural! Period. #PadManChallenge Copy, Paste this & Challenge your friends to take a photo with a Pad! Here I am Challenging @ayushmannk @kalkikanmani @aditiraohydari

 
 

@radhika_apte

கடைகளுக்கு சென்று வாங்கினால், இந்த நேப்கின்களை மட்டும் யாருக்கும் தெரியாமல் பிளாஸ்டிக் பையில் பொதித்து கொடுப்பதையும், வெளிப்படையாக காட்டிக்கொள்ளாமல் வீட்டுக்கு கொண்டு செல்வதையும் இன்றும் பார்க்க முடியும்.

 @hvgoenka

 

Thank you for tagging me @mrsfunnybones
Yes, that’s a Pad in my hand & there’s nothing to be ashamed. It’s natural! Period. #PadManChallenge

Copy, Paste this & Challenge your friends to take a photo with a Pad!

Here I am Challenging @hcmariwala @punitgoenka @RonnieScrewvala

எவ்வித நியாயமான அடிப்படைகளுமின்றி செய்யக்கூடாதவை என்று சமூகம் விலக்கிய ஒன்று குறித்த தயக்கத்தை உடைப்பதற்கு நேப்கின்களை விளம்பரப்படுத்தி சுகாதார விழிப்புணர்வை மேற்கொண்ட முருகானத்தின் வாழ்க்கையே ஓர் எடுத்துக்காட்டாக இருப்பதாகப் புகழப்படுகிறது.

இந்நிலையில், தன்னுடைய வாழ்க்கை பற்றிய திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் நேப்கினை கையில் வைத்து புகைப்படம் எடுத்து பகிர முடியுமா? என்று பாலிவுட் திரையுலக நடிகர்களுக்கு முருகானத்தாம் சவால் விடுத்தார்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @sonalkalra

 

Here we go. Was never ashamed of holding this, then and now. Proud to take the #PadmanChallange. @akshaykumar @LifeCoachSharat

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @sonalkalra

பொலிவுட்டில் கிடைத்துள்ள ஆதரவு

முருகானந்திற்கு பாலிவுட்டில் கிடைத்துள்ள ஆதரவு பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

 @Sophie_Choudry

 

Challenge accepted & done @aliaa08 .. Hanging out in the gym with my girls & some pads..No big deal. Period?? Now challenging @bipsluvurself @humasqureshi @MasabaG #PadManChallenge @akshaykumar

 
 padman-challenge-alia-bahatt.png?resize=padman-challenge-alia.jpg?resize=800%2C4padman-challenge.jpg?resize=759%2C422
மூலம் பிபிசி…
 

http://globaltamilnews.net/2018/65045/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.