Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியினால் சு.க அமைச்சர்கள் அவசரமாக கொழும்புக்கு அழைப்பு

Featured Replies

ஜனாதிபதியினால் சு.க அமைச்சர்கள் அவசரமாக கொழும்புக்கு அழைப்பு

 

ஜனாதிபதியினால் சு.க அமைச்சர்கள் அவசரமாக கொழும்புக்கு அழைப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களை அவசரமாக கொழும்புக்கு அழைத்துள்ளார்.
உள்ளூராட்சி சபைகள் தேர்தல் முடிவுகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கே அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நாடு பூராகவும் பாரிய பின்னடைவை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3)

http://www.samakalam.com/செய்திகள்/ஜனாதிபதியினால்-சு-க-அமைச/

  • தொடங்கியவர்

சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை

slfp-Maithripala.jpg?resize=300%2C177
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இவ்வாறு சந்திப்பு நடத்துகின்றனர். உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வரலாறு காணாத தோல்வியைத் தழுவியுள்ளது. எனவே அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இவ்வாறு சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டு வருகின்றது. மீளவும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டுமென சில தரப்பினர் ஆலோசனை முன்வைத்துள்ளனர். இதேவேளை வேறும் சிலர், மஹிந்த ராஜபக்சவிற்கு சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை வழங்க வேண்டுமென கோரியுள்ளனர்.

http://globaltamilnews.net/2018/66404/

  • தொடங்கியவர்

அடுத்த சில நாட்களில் இலங்கையில் ஒரு மாற்றம்…

maithru-ranil.jpg?resize=640%2C400

தேர்தல் முடிவுகளின் பிரகாரம் அடுத்த சில நாட்களில் நாட்டில் ஒரு மாற்றம் ஏற்படுத்தப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று (11.02.18) நடைபெற்ற ஸ்ரீ.ல.சு.க. அமைச்சர்கள் கூட்டத்தின் போதே இவ்வாறு கூறியதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/2018/66431/

  • தொடங்கியவர்

சில தினங்­களில் பாரிய மாற்­றங்கள்

 

 

வெளி­வந்­துள்ள  உள்­ளூ­ராட்­சி­மன்ற   தேர்தல் முடி­வு­களை அடுத்து ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன  நேற்று அவ­ச­ர­மாக    சுதந்­திரக் கட்­சியின்  முக்­கிய அமைச்­சர்­களை சந்­தித்து  பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­துடன்   தேர்தல் முடி­வு­க­ளுக்கு அமைய  சில தினங்­களில் பாரிய மாற்­றங்­களை செய்­யப்­போ­வ­தாக அறி­வித்­தி­ருக்­கின்றார். 

maithri-pala-srisena.jpg

நேற்­றைய தினம் வெளி மாவட்­டங்­க­ளில் இருந்த சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின்  பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை  கொழும்­புக்கு வர­ழைத்த ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன    தேர்தல் முடி­வுகள்   மற்றும்  அதற்கு அடுத்­தக்­கட்ட நகர்­வுகள்   எதிர்­கால  திட்­டங்கள் குறித்து  விரி­வாக பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார். 

ஜனா­தி­ப­தியின்   இல்­லத்தில் நடை­பெற்ற இந்த சந்­திப்பில் அமைச்­சர்­க­ளான   சுசில் பிரேம்­ஜ­யந்த  அனர பிரி­ய­தர்­ஷன யாப்பா  நிமால் சிறி­பால டி. சில்வா ஜோன் சென­வி­ரட்ன உள்­ளிட்ட பலரும்  கலந்­து­கொண்­டி­ருந்த நிலையில்  பல்­வேறு   வாதப்­பி­ர­தி­வா­தங்கள்   இடம்­பெற்­ற­தா­கவும்  தெரி­விக்­கப்­பட்­டது. 

குறிப்­பாக  இதன்­போது உள்­ளூ­ராட்­சி­மன்ற  தேர்தல் முடி­வு­க­ளுக்கு அமைய சில   நாட்­களில்  பாரிய மாற்­றங்­களை  மேற்­கொள்ள நட­வ­டிக்கை எடுப்­ப­தாக   ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன     குறிப்­பிட்­ட­தாக  கூட்­டத்தில் கலந்­து­கொண்ட   அமைச்சர் சுசில் பிரேம்­ஜ­யந்த  தெரி­வித்­துள்ளார். 

இதன்­போது ஒரு சில எம்.பி.  சுதந்­திரக் கட்சி   தொடர்ந்தும் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து பய­ணிக்­க­வேண்டும் என்று கூறி­ய­துடன்   மேலும் சில எம்.பி. க்கள்    சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­னவை  இணைத்­துக்­கொண்டு பய­ணிக்­க­வேண்டும் என்று குறிப்­பிட்­டுள்­ளனர்.    அத்­துடன் முன்னாள் ஜனா­தி­பதி    மஹிந்த ராஜ­ப­க்ஷவை   பிர­த­ம­ராக நிய­மிக்­க­வேண்டும் என்றும்    இந்தக் கூட்­டத்­தின்­போது  ஒரு சிலர் குறிப்­பிட்­டுள்­ளனர். 

எவ்­வா­றெ­னினும் தேர்தல் முடி­வு­க­ளுக்கு அமைய    சில தினங்­களில் பாரிய மாற்­றங்­களை செய்­வ­தற்­கான  நட­வ­டிக்­கை­களை  முன்­னெ­டுப்­ப­தற்கு  ஜனா­தி­பதி எதிர்­பார்ப்­ப­தாக    ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின்  பொதுச் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான மஹிந்த அம­ர­வீர  குறிப்­பிட்­டுள்ளார். 

நடந்து முடிந்த  உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­தலில்    முன்னாள் ஜனா­தி­பதி  மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான   சிறி­லங்கா பொது­ஜன பெர­முன    அமோக வெற்­றி­யீட்­டி­ய­துடன்    ஐக்­கிய தேசிய கட்­சியும்     சிறி­லங்கா சுதந்திரக் கட்சியும்   தோல்வியை சந்தித்துள்ளன. 

சுதந்திரக் கட்சியானது நடந்து முடிந்த  உள்ளூராட்சிமன்ற தேர்தலில் கடும்   தோல்வியை  சந்தித்துள்ளதையடுத்தே  நேற்று ஜனாதிபதி   அவசரமாக    சுதந்திரக் கட்சி அமைச்சர்களை சந்தித்து  கலந்துரையாடியுள்ளார். 

http://www.virakesari.lk/article/30527

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதே மகிந்தவின் கட்சிக்கு தாவ(துண்டைப்போட) பலர் முனையலாம் என்பதே மைத்திரியின் ஆதங்கமாக இருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.