Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்­முடன் சேர்ந்து இயங்க மஹிந்த முன்­வ­ர­வேண்டும் : சம்பந்தன் அதிரடி அறிவிப்பு

Featured Replies

  •  
  • சேர்ந்து செயற்­ப­டத் தயார் – சம்­பந்­தன்!!
 
sampa-720x480-720x400-720x400.jpg

சேர்ந்து செயற்­ப­டத் தயார் – சம்­பந்­தன்!!

 

பல­மான ஆட்சி அமைப்­ப­தற்கு மற்­ற­வர்­க­ளு­டன் சேர்ந்து இயங்­க­ வேண்­டி­யி­ருந்­தால் அதற்கு நாங்­கள் தயார். ஆனால் எந்­தக் கட்­சி­யு­டன் கூட்­டுச் சேர்­வது என்­பது தொடர்­பில் ஆலோ­சித்தே செயற்­ப­டு­வோம்.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார். அவர் தெரி­வித்­த­தா­வது-,

பல­மான ஆட்சி அமைப்­ப­தற்கு மற்­ற­வர்­க­ளு­டன் சேர்ந்து இயங்க வேண்­டி­யி­ருந்­தால் அதற்கு நாங்­கள் பின்­னிற்க மாட்­டோம். மக்­கள் நலன்­க­ருதி மக்­க­ளுக்கு ஆற்ற வேண்­டிய சேவை கருதி, ஒற்­று­மையை நாங்­கள் ஊக்­கு­வித்து, அதி­கா­ரம் உள்ள ஆட்­சியை அமைப்­ப­தற்கு எடுக்க வேண்­டிய நட­வ­டிக்­கைக்கு பின்­நிற்க மாட்­டோம்.

ஆனால் எந்­தக் கட்­சி­யு­டன் கூட்­டுச் சேர்­வது என்­பது பற்றி நாங்­கள் கவ­ன­மாக ஆலோ­சிப்­போம். எமது கொள்­கைக்கு மாறான கட்­சி­யாக அது இல்­லா­மல் இருக்­க­வேண்­டும் – என்­றார்.

http://newuthayan.com/story/68443.html

 
 
 
 
 
Sampanthan-60000-1-640x400.jpg

அர­ச­மைப்பு முயற்­சியை அரசு தொடர வேண்­டும்!!

மகிந்தவை ஒத்­து­ழைக்க கோருகிறார் சம்­பந்­தன்

 

கூட்டு அரசு ஆரம்­பிக்­கப்­பட்­ட­தன் நோக்­கம் நிறை­வ­டை­ய­வேண்­டும். புதிய அர­ச­மைப்பு உரு­வாக்க முயற்­சி­யில் கணி­ச­மான தூரம் பய­ணம் செய்­தி­ருக்­கின்­றோம். அது முடி­வ­டை­ய­வேண்­டும். அதில் எந்த மாற்­ற­மும் இருக்க முடி­யாது.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும்,  எதிர்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார். திரு­கோ­ண­ம­லை­யில் அவ­ரது வீட்­டில் உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் வெற்றி பெற்ற பிர­தி­நி­தி­க­ளு­டன் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லி­லேயே இவ்­வாறு தெரி­வித்­தார்.
அவர் தெரி­வித்­த­தா­வது-,

கூட்டு அரசு மகிந்த ராஜ­பக்­ச­வின் அனு­ம­தி­யைப் பெற்று ஆரம்­பிக்­கப்­ப­ட­வில்லை. மகிந்­த­வின் வெற்றி கூட்டு அர­சைப் பாதிக்­காது. கூட்டு அர­சின் கொள்­கைக்­கும், மகிந்­த­வின் கொள்­கைக்­கும் இடை­யில் எது­வித சம்­பந்­த­மும் இல்லை. கூட்டு அரசு நிறு­வப்­பட்­ட­தன் பணி­க­ளைத் தொட­ர­வேண்­டும். குறிப்­பாக புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண்­டும்.

இந்­தப் பணி­யில் கணி­ச­மான தூரம் முன்­னே­றி­யி­ருக்­கின்­றோம். அது முடி­வ­டை­ய­வேண்­டும். அதில் எந்த மாற்­ற­மும் இருக்க முடி­யாது. மகிந்த ராஜ­பக்­சவை எதி­ரி­யா­கக் கரு­த­வில்லை. அவ­ரும் ஒத்­து­ழைப்பு வழங்­க­வேண்­டும்.

 
 

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் அவர் பெற்­றுக் கொண்­டுள்ள வெற்றி அவ­ரது கரத்தை மேலும் பலப்­ப­டுத்­து­கின்­றது. அவர் தனது ஒற்­று­மை­யைக் காட்­ட­வேண்­டும். புதிய அர­ச­மைப்பு முயற்­சிக்கு அவ­ரது ஒத்­து­ழைப்பை நான் பல தட­வை­கள் கோரி­யி­ருக்­கின்­றேன்.

தேசிய இனப் பிரச்­சினை தீர்க்­கப்­பட வேண்­டும். இத­னைத் தீர்த்து வைப்­ப­தாக அவர் பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்­கும் வாக்­கு­றுதி கொடுத்­துள்­ளார். அதனை நிறை­வேற்ற வேண்­டும் – என்­றார்.

http://newuthayan.com/story/68438.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

எம்­முடன் சேர்ந்து இயங்க மஹிந்த முன்­வ­ர­வேண்டும் : சம்பந்தன் அதிரடி அறிவிப்பு

 

 

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை நாம் வர­வேற் கின்றோம். அவரை எம்­முடன் சேர்ந்து இயங்கும் படி அழைப்பு விடு­க்கின்றோம். அவரை நாம் எதி­ரி­யாக எப்­பொ­ழுதும் கரு­தி­யது இல்லை. அவர் மதிப்பு பெற்ற தலைவன். ஒரு நல்ல கரு­மத்தை நாட்டில் நிறை­வேற்­று­வ­தற்கு அவ­ரது ஒத்­து­ழைப்பு தேவை. இந்த ஒத்­து­ழைப்பை அவர் நல்­க­வேண்டும்  என்று,  தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன்  தெரி­வித்தார். 

sampanthan-mahinda.jpg

உள்­ளூ­ராட்சி தேர்தல் முடி­வு­களை தொடர்ந்து வெற்றி பெற்ற  வேட்­பா­ளர்கள் மற்றும் ஏனைய வேட்­பா­ளர்கள் ஆத­ர­வா­ளர்கள் ஆகி­யோரை அழைத்து தனது இல்­லத்தில்  நேற்று  கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன்  கலந்­து­ரை­யா­டினார்.  இதன்­போது ஊடா­க­வி­ய­லாளர் ஒருவர் எழுப்­பிய கேள்­விக்கு பதில் அளிக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். 

அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது தேசிய அர­சாங்­கத்­திற்கும், முன்னாள் ஜனா­தி­பதி ராப­க்ஷ­வுக்கும் எவ்­வி­த­மான சம்­பந்­தமும் இல்லை. தேசிய அர­சாங்­க­மா­னது தனது கொள்­கையின் அடிப்­ப­டையில் ஆரம்­பிக்­கப்­பட்ட பணி­களை தொடர வேண்டும் என்­பதே எமது எதிர்­பார்ப்­பாகும்.

 குறிப்­பாக புதிய அர­சியல் சாசன உரு­வாக்­கத்தை  தேசிய அர­சாங்கம் தொடர்ந்து முன்­னெ­டுக்க வேண்டும். ராஜ­ப­க்ஷவின்  அனு­ம­தியை பெற்று தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­ப­ட­வில்லை. இந்த  அர­சாங்கம் ஆனது கணி­ச­மான தூரம் பயணம் செய்­துள்­ளது. அது முடி­வ­டையும் வரையில் எவ்­வித மாற்­றமும் ஏற்­பட முடி­யாது.

முன்னாள் ஜனா­தி­பதி ராஜ­ப­க்ஷவை நாம் வர­வேற்­கின்றோம். அவரை  எம்­முடன் சேர்ந்து இயங்கும் படி அழைப்பு விடு­கின்றோம். அவரை நாம் எதி­ரி­யாக எப்­பொ­ழுதும் கரு­தி­யது இல்லை. ஏலவே நான் பாரா­ளு­மன்­றத்தில் பல­த­ட­வைகள் இதனைக்   கூறி­யி­ருக்­கின்றேன். நீங்கள் மதிப்பு பெற்ற தலைவன் என்றும், ஒரு நல்ல கரு­மத்தை நாட்டில் நிறை­வேற்­று­வ­தற்கு உங்கள் ஒத்­து­ழைப்பு தேவை என்றும், அந்த ஒத்­து­ழைப்பை நல்க வேண்டும் என்றும், கேட்டுக் கொள்­ளு­கின்றேன்.  

கரங்­களைப் பலப்­ப­டுத்­தி­யுள்­ளது

உள்­ளூ­ராட்சி சபை தேர்­தலில் வட­கி­ழக்கில் நாங்கள் அடைந்த வெற்றி எங்கள் கரங்­க­ளைப பலப்­ப­டுத்­தி­யுள்­ளது. உங்கள் ஒத்­து­ழைப்பை நீங்கள் நல்­க­வேண்டும். தேசிய பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­ட­வேண்டும். தேசிய பிரச்­சி­னையை தீர்ப்பேன் என்று அன்று வாக்­கு­றுதி அளித்­தீர்கள். சர்­வ­தே­சத்­திற்கும், சர்­வ­தேச தலை­வர்­க­ளுக்கும், ஐக்­கிய நாடுகள் சபையின் செய­லாளர் நாய­கத்­திற்கும் அந்த வாக்­கு­று­தி­களை நீங்கள் நல்­கி­னீர்கள் ஆனால் அவை நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. அவ்­வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற இனி­ய­வது நீங்கள் ஒத்­து­ழைப்பு நல்­க­வேண்டும் என்று கேட்டுக் கொள்­ளு­கின்றேன். 

ஒற்­று­மையை பலப்­ப­டுத்த வேண்டும்

வட­கி­ழக்கில் பல­மான ஆட்­சியும் அதி­கா­ரமும் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மாயின் ஏனை­ய­வர்­க­ளு­டனும், நாம் சேர்ந்து இயங்க வேண்டும். அவ்­வாறு இயங்­கு­வ­தற்கு நான் ஒரு­போதும் பிற் நிற்­க­மாட்டேன். மக்கள் நலன் கரு­தியும், சேவை கரு­தியும் ஒற்­று­மையை நாங்கள் பலப்­ப­டுத்த வேண்டும். அதி­கா­ர­முள்ள ஒரு ஆட்­சியை அமைப்­ப­தற்கு நாம் எடுக்­க­வேண்­டிய நட­வ­டிக்­கையை எடுக்க நான் பின்­நிற்க மாட்டேன். ஆனால் வட­கி­ழக்கில் உள்ள உள்­ளூ­ராட்சி சபை­களில்  எந்தக் கட்­சி­யுடன் நாங்கள் கூட்டுச் சேர்ந்து ஆட்­சி­ய­மைக்­க­வேண்டும் என்­பதை கவ­ன­மாக கலந்து ஆலோ­சிக்க வேண்டும்.  எமது கொள்­கைக்கு மாறாத கட்­சி­க­ளாக அவை இருக்­க­வேண்டும். 

நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி தேர்­தலில் மகிந்­தவின் பொது­ஜன பெர­முன கூடு­த­லான ஆச­னங்­களைப் பெற்­றுள்­ளது. அவரை எதிர்த்த ஐக்­கிய தேசியக் கட்சி 32வீதம் வாக்­கு­க­ளையும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பு, சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி 13வீதம் வாக்­கு­களை பெற்­றுள்­ளன. ஐக்­கிய தேசியக் கட்சி உட்­பட மகிந்­த­விற்கு எதி­ரான கட்­சிகள் 45 வீதம் வாக்­கு­களை பெற்­றுள்­ளன. ஜே.வி.பி 5வீதம் வாக்­கு­களை பெற்­றுள்­ளது. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு அகில இலங்கை ரீதியில் 3வீதம் வாக்­கு­களைப் பெற்­றுள்­ளது. ஒப்­பீட்டுப் பார்க்­கையில் கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி.சேன  அவர்கள் 51வீதத்­திற்கு மேற்­பட்ட வாக்­கு­களைப் பெற்­றி­ருந்தார். மகிந்த ராஜ­பக்ஷ‘ ஜனா­தி­பதி தேர்­தலில் பெற்ற வாக்­கு­க­ளை­விட நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி தேர்­தலில் குறைந்­த­ளவு வீதத்­தையே பெற்­றுள்ளார். 

தேசிய பிரச்­சி­னைக்கு ஒரு தீர்வு காணப்­பட வேண்­டு­மாயின் அர­சியல் சாசனம் உரு­வாக்­கப்­பட வேண்டும். அம்­மு­யற்­சியில் நாம் ஈடு­பட்டு வரு­கின்றோம். தேர்தல் முடிந்­ததும் தாமதம் இல்­லாமல் அர­சியல் சாசன முன்­னெ­டுப்­புக்கள் நடை­பெற வேண்டும் என  நாம் எதிர்­பார்க்­கின்றோம். குறிப்­பாக இவ்­வ­ருட முடி­வுக்குள் அது நிறைவு பெற வேண்டும் என்­பதே எமது எதிர்­பார்ப்பும் கோரிக்­கையும் ஆகும். இதற்கு இலங்­கையில் உள்ள எல்லாக் கட்­சி­களும், எல்லாத் தலை­வர்­களும், பூர­ண­மான ஒத்­து­ழைப்­புக்­களை வழங்க  வேண்டும்.  நியா­ய­மான நிரந்­த­ர­மான தீர்வு ஏற்­ப­டு­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ ஆகிய மூவரும் ஒத்­து­ழைக்க வேண்டும் என வேண்­டு­கின்றோம். பிரிப்­ப­டாத நாட்­டுக்குள், ஒன்­றுப்­பட்ட தேசத்­திற்குள், அந்த தீர்வு அதி­காரப் பலன் கொண்­ட­தாக இருக்­க­வேண்டும் என்­பதே எமது எதிர்­பார்ப்­பாகும். இதற்கு எல்­லோரும் ஒத்­து­ழைக்க வேண்டும். 

தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்பை பொறுத்­த­ளவில் எவ­ரையும் நாம் அர­சியல் எதி­ரி­க­ளாக பார்க்­க­வில்லை. எல்­லோ­ரையும் நாட்டின் தலை­வர்­க­ளாக மதிக்­கின்றோம். அவர்கள் உள்­ளக சுய நிர்­ணய அடிப்­ப­டை­யி­லான ஒரு­மித்த நாட்­டுக்குள் சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான தீர்வை நல்­க­வேண்டும் என்றே தமிழ் மக்கள் கோரு­கின்­றார்கள். அவ்­வா­றான ஒரு தீர்­வா­னது அர்த்­த­புஷ்டி உள்ள தீர்­வாக இருக்க வேண்டும். இக்­க­ருத்­துக்­களை எலவே நாட்­டி­லுள்ள தலை­வர்கள் ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

தமிழ்­தே­சியக் கூட்­ட­மைப்­பா­னது இத்­தேர்­தலில் பெருந்­தொ­கை­யான இடங்­களில் போட்­டி­யிட்­டது அனே­க­மான சபை­களில் கூடு­த­லான ஆச­னங்­களைப் பெற்­றுள்­ளது. பெரும்­பான்மை பெறாத சபை­களில் கூட குறிப்­பாக வட­மா­கா­ணத்தில் ஏனைய கட்­சி­க­ளுடன் சேர்ந்து ஆட்­சி­ய­மைக்கும் வாய்ப்பு கிடைத்­துள்­ளது. தமிழ் பேசும் மக்­களை பொறுத்­த­வ­ரையில் சமஷ்டி முறை­யி­லான தீர்வை எதிர்­பார்க்­கின்­றார்கள். அதையே அவர்கள் நீண்­ட­கா­ல­மாக கோரி வந்­தி­ருக்­கி­றார்கள். ஏனைய கட்­சி­களை ஆத­ரித்த மக்கள் கூட இக்­கோ­ரிக்­கையே ஆத­ரிக்­கின்­றார்கள் என்­பதே அறி­யப்­பட்ட விடயம். ஆகையால் அர்த்­த­புஷ்டி உள்ள ஒரு அர­சியல் தீர்வை அரசு விரைவில் தர­வேண்டும் என வட­கி­ழக்கு மக்கள் எதிர்­பார்க்­கின்­றார்கள். 

திருக்­கோ­ண­மலை நக­ர­ச­பையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு 9 ஆச­னங்­களை பெற்­றுள்­ளது. அதே போல் நக­ரமும் சூழலும் பிர­தேச சபையில் 7 ஆச­னங்­களை பெற்­றுள்­ளது. இவ்­விரு சபை­க­ளிலும் அதிக ஆச­னங்­களை பெற்ற ஒரே கட்சி தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பாகும். அதே போன்றே வெருகல் பிர­தேச சபையில் 6 ஆச­னங்­களை பெற்­றுள்­ளது. மூதூர் பிர­தேச சபையில் 5 உறுப்­பி­னர்­க­ளையும் குச்­ச­வெளி பிர­தேச சபையில் 3 ஆச­னங்­களைப் பெற்று இரண்டாம் இடத்­திலும், தம்­ப­ல­காமம் பிர­தே­சத்தில் 2 ஆச­னங்­க­ளையும், முத­லிக்­குளம் பிரதேசத்தில் 1 ஆசனமும், கிண்ணியா நகரசபையில் 1 ஆசனமும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கிடைத்துள்ளது. 

திருக்கோணமலை மாவட்டத்தில் 10 பிரதேச சபைகளில் நாம் போட்டியிட்ட போதும் 9 பிரதேச சபைகளில் நாங்கள் உறுப்பினர்களை பெற்றுள்ளோம். கந்தளாய் பிரதேச சபையில் அவ்வாறான ஒரு வாய்ப்பு எமக்கு கிடைக்கவில்லை. திருக்கோணமலை மாவட்டத்தில் 3 சபைகளில் ஆட்சியமைக்கும் பலத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றது மாத்திரமன்றி அதிகூடிய உறுப்பினர்களை பெற்ற ஒரே கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பதை இத்தேர்தல் நிரூபித்திருக்கின்றது என்றார். . 

இக்கலந்துரையாடலுக்கு முன்னாள் கிழக்கு கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி தலைமை தாங்க வெற்றி பெற்ற மற்றும் ஏனைய உறுப்பினர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். 

http://www.virakesari.lk/article/30556

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.