Jump to content

இன்று மகா சிவராத்திரி


Recommended Posts

பதியப்பட்டது
இன்று மகா சிவராத்திரி
 

image_35637daf90.jpgஉலக வாழ் இந்துக்களால் இன்று மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

 


பல மகிமைகளைக் கொண்ட மகா சிவராத்திரி விரதமானது ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதி இரவில் அனுஷ்டிக்கப்படுகின்றது.

 

இன்றைய தினத்தில் இலங்கையில் அமைந்துள்ள சிவாலயங்கள் மற்றும் ஏனைய ஆலயங்களிலும் விசேட பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவது சிறப்பம்சமாகும்.

 இதேவேளை , ஐம்பொறிகளின் வழியே மனதை அலையவிடாது அதனை ஐக்கியப்படுத்தி, இறைசிந்தனையுடன் இந்துக்களால் அனுஸ்டிக்கப்படும் விரதங்களுள் மகா சிவராத்திரி விரதம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தினத்தில் உலகெங்கும் சமாதானம் ஏற்பட வேண்டும் என பிரார்திப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை, இன, மத பேதமின்றி ஒவ்வொருவரினதும் கலாசார, மத விழுமியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது சிவராத்திரி வாழ்த்துச் செய்தியில்  குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/இன்று-மகா-சிவராத்திரி/175-211475

ஈறேழு லோகங்களையும் பெறத்தக்க பெருமை தரும் சிவராத்திரி நான்குகால பூஜைகள்! #MahaSivarathiri

 
 

விரதங்களிலெல்லாம் மேலான விரதம் சிவராத்திரி. இந்த விரதமிருந்து தேவாதிதேவர்களும், முனிவர்களும், மனிதர்களும் ஏன் விலங்கினங்கள் கூட மிகப்பெரிய வரங்களைப் பெற்றார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. அன்னை பார்வதி சாபம் நீங்கியது, இந்திரன் பதவி பெற்றது, கணபதி கணங்களின் முதல்வரானது, ஸ்ரீராமபிரான் தோஷம் நீங்கியது, முசுகுந்த சக்கரவர்த்தி குரங்கு வடிவிலிருந்து மீண்டு மிகப்பெரிய அரசரானது என எல்லாமே இந்த சிவராத்திரி விரதத்தினால்தான் நடைபெற்றது. சிவராத்திரி அன்று கண்விழித்து நான்கு கால பூஜை செய்வோர் எவருக்கும் இனி பிறப்பே இல்லை என்பதும் சகல பாவங்களையும் ஒழித்து முக்தி பெறுவார்கள் என்பதும் புராணங்கள் சொல்லும் நம்பிக்கை. ஈ, எறும்பு தொடங்கி திருமால் வரை இந்த சிவராத்திரியின் மகிமையை உணர்ந்தே பல்வேறு ஆலயங்களில் சிவபூஜையினை இந்த நாளில் மேற்கொண்டார்கள். அப்படி ஒரு சிறப்பான மகா சிவராத்திரி நாளில் அறியாமல்தான் செய்த பூஜையின் பலனால் வேடன் ஒருவன் பெருமைபெற்ற விதம் சுவாரஸ்யமானது. 

மகா சிவராத்திரி

 

அயோத்தியை தசரத சக்கரவர்த்தி ஆட்சி செய்துகொண்டிருந்த காலமது. அயோத்தியின் எல்லையிலிருந்த அடர்ந்த வனத்தில் வாழ்ந்து கொண்டிருந்தான் வியாதன் என்ற வேடன். ஒருநாள் பகல்வேளையில் தொடங்கிய அவனது வேட்டை இருட்டிய பிறகும்கூட முடிவடையவில்லை. ஒரு சின்னஞ்சிறு முயல் கூட அன்று அவனுக்குக் கிடைக்கவில்லை. பசித்திருக்கும் தனது குடும்பத்தை எண்ண எண்ண அவனுக்கு ஆத்திரம் மிகுதியானது. கண்சிமிட்டும் நேரத்துக்குள் ஒரு சிறுத்தையைக்கூட தைத்து விடும் அவனது வில்லாற்றலுக்கு அந்த நாள் சவால் விடுவதைப்போல இருந்தது. சூரியன் மயங்கி மேற்கு திசையில் விழுந்துவிட்டான். வியாதனின் கண்கள் பிரகாசமாகி விலங்குகளை நோக்கிச் சென்றன. எதிரே இருந்தால் விலங்குகள் ஓடிவிடும் என்று எண்ணி தாகம் தீர்க்க ஒரு குடுவையில் நீரை எடுத்துக்கொண்டு ஒரு வில்வ மரத்தின் மீது ஏறி அமர்ந்துகொண்டான். சற்று நேரத்துக்குப் பிறகு சலசலக்கும் ஒலிக்கிடையே ஒரு மானைக் கண்டுவிட்டான் வியாதன். ஆர்வம் பெருகி அதை நோக்கி அம்பை குறிவைக்கும் நேரத்தில் அந்த மான் அவனிடம் கெஞ்சிப்பேசத் தொடங்கியது. 'அய்யா குட்டி ஈன்ற என் மனைவிக்கு உணவு எடுத்துச்செல்ல வந்துள்ளேன், தயவு செய்து என் இருப்பிடம் சென்று இந்தத் தழைகளைக் கொடுத்துவிட்டு வரும்வரை என்னைக் கொல்லாதீர்கள்' என்று மன்றாடியது.  

சிவராத்திரி

மானின் கெஞ்சலுக்கு மனமிரங்கிய வேடன்,  மானை சீக்கிரம் வரச்சொல்லி விட்டுவிட்டான். அப்போது அவன் அசைவால் நீர் கீழே சிந்தி மரத்தின் இலைகளும் சில உதிர்ந்தன. அவை மரத்தின் கீழே இருந்த சிவலிங்கத்திருமேனியின் மீது பட்டு தானாக அபிஷேகம் நடந்தது. சிறிது நேரம் கழித்து மீண்டும் சலசலக்கும் ஓசை கேட்க,  அப்போது ஒரு பெண் மானைக் கண்டான் வேடன். அதுவும் தன் இணையான ஆண் மானை தேடி வந்ததாகவும், கருவுற்றிருக்கும் தனது மூத்தாளை கண்டுவிட்டு உடனே வந்துவிடுவதாகவும் கெஞ்சியது. வேடனும் அதையும் சீக்கிரம் வந்துவிடுமாறுச் சொல்லிவிடுவித்தான். அப்போதும் நீர் சிந்தி வில்வ இலைகள் உதிர்ந்து சிவலிங்கத்துக்கு அபிஷேகம் நடந்தது. அடுத்து வயதான ஓர் ஆண் மான் எதிர்ப்பட, அதுவும் குட்டியை ஈன்றிருக்கும் தங்களது மகளைப் பார்த்துவிட்டு வந்துவிடுவதாகச் சொல்லிச் சென்றது. மூன்றாவது முறையாக அபிஷேகமும் நடந்தது. இறுதியாக இரு மான்குட்டிகள் எதிர்ப்பட, அவையும் தங்களது பெற்றோர்களைப் பார்த்து சொல்லிவிட்டு வருவதாகச் சென்றன. தாய், தந்தை, தாத்தா, பாட்டி என எல்லா மான்களிடமும் குட்டிகள் தாங்கள் செய்த சத்தியத்தைக் கூறி, வேடனை நோக்கி வந்தன. அவற்றோடு எல்லா மான்களும் சொன்ன சொல்லைக் காப்பாற்ற வந்தன. 

மகா சிவராத்திரி நாளின் நான்கு கால பூஜைகளைப்பற்றி அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்..

மான் கூட்டத்தினைக் கண்ட வேடன் குறிவைக்க தயாராக,  நான்காம் ஜாம வேளை நெருங்கியது. சொன்ன சொல்லை மீறாத அந்த மான்களின் செயலால் மனம் நெகிழ்ந்த வேடன் அவற்றை வணங்கி, தருமத்தை மீறாத உங்கள் செயல் என்னை மகிழ்விக்கிறது. என் குடும்பமே பட்டினியால் கிடந்தாலும் சரி, உங்களைக் கொல்லமாட்டேன் என்று வாழ்த்தினான். அப்போது உண்டான அசைவால் நீர் சிந்தி ஈசனை குளிப்பாட்டியது. வில்வ இலைகள் விழுந்து ஈசனை அர்ச்சித்தன. வேடன் இரவெல்லாம் கண்விழித்து மானுக்குக் காத்திருந்த நாள் மகாசிவராத்திரி திருநாள். நான்கு ஜாமத்திலும் தற்செயலாக நடந்த அந்த பூஜையால் ஈசன் மகிழ்ந்து உடனே அங்கு தோன்றினார். ஒளிப்பிழம்பாக விடையேறிய பெருமானாய்த் தோன்றிய ஈசனை மான்களும், வேடனும் வணங்கித் துதித்தார்கள். 'சொன்ன சொல்லை மீறாத மான்களே உங்களைப் பெருமைப்படுத்தும் விதமாக இனி மான் ஏந்தியே காட்சி தருவேன் என்று ஈசன் வாக்களித்தார். மேலும் வேடனை நோக்கி 'வேட்டையாடுவது உன்னுடைய தொழில் என்றாலும், மான்களுக்காக மனமிரங்கி அவற்றைக்காத்த வியாதனே, நீ அறியாமல் செய்தாலும், மகாசிவராத்திரியன்று நீ செய்த நான்கு கால பூஜைகளையும் மனமுவந்து ஏற்றுக்கொண்டோம். மகாசிவராத்திரி அன்று செய்யப்படும் பூஜை ஈரேழு லோகங்களையும் பெறத்தக்க பெருமைகளை அளிக்கவல்லது. எனவே நீ செய்த பூஜைக்கு ஈடாக வேண்டுவனக்கேள்' என்றார் ஈசன். 

சிவராத்திரி

தங்களையே நேரிடையாகக் கண்ட பிறகுதான் வேண்டுவது ஒன்றுமில்லை எனக்கூறி இனிக் கொல்லாவிரதம் ஏற்று நடப்பேன் என்றும் உறுதிகூறினான். அவனது பணிவுக்கு மகிழ்ந்த ஈசன், "சிவராத்திரி விரதம் மேற்கொண்ட ஒருவருக்கு வரமளிக்காமல் இருப்பது எனக்கு வழக்கமில்லை" என்று கூறி "இனி நீ வியாதனில்லை, குகன் என்று அழைக்கப்படுவாய். ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமான ஸ்ரீராமர் இந்தக் காட்டுக்கு வரும்போது அவரை நீ சந்திப்பாய், அதுமட்டுமல்ல, அவருக்கே தம்பியாகும் பாக்கியத்தையும் நீ பெறுவாய்' என்று வாழ்த்தி மறைந்தார். சிவராத்திரி விரத மகிமையால் ஒரு சாமானிய மனிதன் குகன் என்று மாறி ஸ்ரீராமர் வாயால் சகோதரன் என்றும் அழைக்கப்பட்டார். அறியாமல் செய்த சிவராத்திரி பூஜையே தெய்வ நிலையைத் தருமென்றால் இந்த நாளின் மகத்துவத்தை என்னவென்று சொல்வது?

https://www.vikatan.com/news/spirituality/116191-the-glory-of-mahashivaratri.html

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஹிந்தியும் படித்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் ...என்பது எனது கருத்து ...பிராந்திய வல்லரசின் ஆட்சி மொழி தெரிந்திருந்தால் அதனுடாக‌ தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்  ...சிறிலங்கா இறையாண்மை உள்ள நாடு (ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் தான்)  இந்திய அரசுடன்  அடிக்கடி மீன்பிடி பிரச்சனை வருகின்றது ... சிறிலங்கன் கடற்படையினர் இந்திய‌ மீனவர்களை கைது செய்கின்றனர் ...வடக்கு கிழக்கில் அமைச்சராக இருப்பவர்கள் நிச்சயமாக ஹிந்தி படிக்கவேண்டும்...வடக்கு மாகாண‌ ஆளுனர் நாலு மொழிகளில் திறைமையுடையவராக இருந்தால்   ....பிராந்திய வல்லரசை இலகுவாக சமாளிக்க  முடியும்..மீனவர் பிரச்சனையும் .. அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை 
    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.