Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படிப்பினைகளை வாரி வழங்கிய உள்ளூராட்சித் தேர்தல் !!

Featured Replies

  • படிப்பினைகளை வாரி வழங்கிய உள்ளூராட்சித் தேர்தல் !!
 
srilanka-election11.jpg

படிப்பினைகளை வாரி வழங்கிய உள்ளூராட்சித் தேர்தல் !!

 

இடம் பெற்று முடிந்த உள்­ளூ­ராட்­சிச் சபைத் தேர்­தல் அர­சி­யல் தலை­வர்­க­ளுக்­கும், மக்­க­ளுக்­கும் பல்­வேறு படிப்­பி­னை­களை எடுத்­துக் கூறி­ யுள்­ளது. தெற்­கில் மகிந்த ராஜ­பக்ச மீள் எழுச்சி பெற்­றுள்­ளார். ஐக்­கிய தேசி­யக் கட்சி இரண்­டா­வது இடத்­தைப் பிடித்த அதே­வேளை மைத்­திரி தலை­மை­யி­லான சிறிலங்கா சுதந்­தி­ரக் கட்சி மூன்­றா­வது இடத்­துக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ளது.

வடக்­குக் கிழக்­கைப் பொறுத்­த­வ­ரை­யில் தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்பு சிறிய சறுக்­கல்­க­ளு­டன் மீண்­டு­மொரு தடவை தனது பலத்தை நிரூ­பித்­துள்­ளது. வௌியில் இருந்த நெருக்­க­டி­கள் மட்­டு­மல்­லாது உட்­கட்­சிப் பூசல்­க­ளும் கூட்­ட­மைப்­புக்கு அழுத்­தங்­க­ளைக் கொடுத்­துள்­ளன.

கூட்­ட­மைப்­புக்கு எதி­ரா­கப் பல
தரப்­புக்­கள் செயற்­பட்­டன

சில ஊட­கங்­கள் கூட்­ட­மைப்­புக்கு எதி­ராக வௌிப்­ப­டை­யா­கவே கீழ்த் த­ர­மான வகை­யில் பரப்­பு­ரை­களை மேற்­கொண்­டி­ருந்­தன. இதை­விட கூட்­ட­ மைப்­புக்கு எதி­ரா­ன­வர்­கள் அணி­தி­ரண்டு அதை வீழ்த்­து­வ­தையே தமது முக்­கிய பணி­யா­கக் கொண்­டி­ருந்­த­னர். ஈபி. ஆர். எல். எப் .கட்சியின் தலை­வ­ரான சுரேஸ், கூட்­ட­மைப்­பி­ லி­ருந்து கழன்று சென்று ஆனந்­த­சங்­க­ரி­யி­டம் தஞ்­சம் புகுந்­தி­ ருந்­தார். சங்­கரி தலை­மை­யி­லான தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் உதய சூரி­யன் சின்­னத்­தில் அவ­ரது கட்­சி­யி­னர் போட்­டி­யிட்­ட­னர். கஜேந்­தி­ர­கு­மார், தலை­மை­யி­லான தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி தமிழ் காங்­கி­ர­சின் சைக்­கிள் சின்­னத்­தில் தனித்­துப் போட்­டி­யிட்­டது.

 
 

வடக்­கைப் பொறுத்­த­வ­ரை­யில் கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான வியூ­கங்­கள் அனைத்­தை­யும் புறம் தள்­ளி­விட்டு மக்­கள் அதற்­குத் தமது அமோ­க­மான ஆத­ர­வைத் தெரி­வித்­துள்­ள­னர்.உட்­கட்­சிப் பூசல் கார­ண­மாக பருத்­தித்­துறை மற்­றும் சாவ­கச்­சேரி நக­ர­ச­பை­க­ளில் கூட்­ட­மைப்பு பின்­ன­டை­வைச் சந்­தித்­தது. தேர்­த­லுக்கு முன்­பா­கவே கூட்­ட­ மைப்­பின் தலை­வர்­கள் இவற்­றைச் சரி செய்­தி­ருக்க வேண்­டும்.

ஆனால் அதில் அவர்­கள் தவ­றி­விட்­டார்­கள்.வல்­வெட்­டித்­துறை நக­ர­ச­பை­யி­லும் கூட்­ட­மைப்பு பின்­ன­டை­வைச் சந்­திக்­கு­மென எதிர்வு கூறப்­பட்­டது. ஆனால் இதைப் புறம் தள்ளி விட்­டுக் கூட்­ட­மைப்பு அங்­கும் பெரு வெற்­றியை ஈட்­டி­யுள்­ளது. மற்­றப்­படி யாழ்.மாந­கர சபை உட்­பட அநே­க­மான பிர­தேச சபை­க­ளில் கூட்­ட­மைப்பே தனது ஆதிக்­கத்தை நிலை­நி­றுத்­தி­யுள்­ளது.

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில்
கூட்­ட­மைப்­பின் வெற்றி திருப்­தி­க­ர­மா­னதா?

ஆனால் பெரு­மை­யும், திருப்­தி­யும் அடை­யக் கூ­டிய வகை­யில் கூட்­ட­மைப்­பின் வெற்றி அமைந்­துள்­ளதா? என்ற கேள்­வி­யும் எழா­ம­லில்லை. ஏனென்­றால், கூட்­ட­மைப்பு தனிப்­பட்ட வெற்­றி­யைப் பெற்­றுள்ள போதி­லும் பல இடங்­க­ளில் அறு­திப் பெரும்­பான்­மை­யைப் பெறத் தவ­றி­விட்­டதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. இத­னால் தனித்து ஆட்சி அமைக்க முடி­யாத நிலை தோன்­றி­வி­டும்.

ஒரு வகை­யில் இந்­தத் தேர்­தல் முடி­வு­கள் கூட்­ட­மைப்­புக்கு ஓர் அபாய அறி­விப்­பா­கவே அமைந்து விட்­டுள்­ளது. அந்த அமைப்­பின் தலை­வர்­கள் எதிர் காலத்­தில் ஆழ­மா­கச் சிந்­திக்க வேண்­டி­ய­தன் அவ­சி­யத்­தை­யும் உணர்த்தி விட்­டது. கூட்­ட­மைப்­புக்கு எதி­ரா­கப் பல சக்­தி­கள் இணைந்து செய­லாற்­று­வ­தைக் காணக்­கூ­டி­ய­தா­க­வி­ருந்­தது.

அர­சி­யல்­வா­தி­கள் மட்­டு­மல்­லாது சில ஊட­கங்­க­ளும் இதில் உள்­ள­டங்­கி­யி­ருக்­கின்­றன. உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான சக்­தி­கள் யாவும் ஒரு தலை­மை­யின் கீழ் ஒன்­றாக இணைந்து போட்­டி­யிட்­டி­ருந்­தால் இன்­ன­மும் சிறப்­பான வெற்­றி­க­ளைப் பெற்­றி­ருக்க முடி­யு­ மென்­பது அர­சி­யல் அவ­தா­னி­க­ளின் கருத்­தா­க­வுள்­ளது. இனி­வ­ரும் தேர்­தல்­க­ளில் இது சாத்­தி­யப்­பட்­டால் அதில் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்கு இட­மில்லை.

தேர்­தல் முடி­வு­களை அடிப்­ப­டை­யா­கக்
கொண்டு கூட்­ட­மைப்பு தனது எதிர்­கா­ல
செயற்­பா­டு­களை தீர்­மா­னித்­தல் வேண்­டும்

ஆகவே கூட்­ட­மைப்பு பல்­வேறு கொள்­கை­க­ளில் தனது பார்­வை­யைச் செலுத்த வேண்­டும். மக்­கள் அதி­ருப்தி அடைந்­தி­ருக்­கின்ற விட­யங்­க­ளுக்கு முன்­னு­ரிமை கொடுத்து உட­ன­டி­யா­கச் செயற்­பட வேண்­டும். இவர்­க­ளின் பிரச்சினை­க­ளுக்­குத் தீர்வு காண்­ப­தற்கு முழு­ம­ன­து­டன் முயற்­சி­களை மேற்­கொள்ள வேண்­டும். இவற்­றுக்கு முன்­ப­தாக மக்­க­ளின் மன­தில் நம்­பிக்­கையை வளர்க்க வேண்­டும்.

இவற்­றின் மூல­மாக கூட்­ட­மைப்­புத் தொடர்­பாக மக்­கள் மத்­தி­யில் நில­வு­கின்ற தப்­ப­பிப்­பி­ரா­யத்­தைப் போக்­கிக் கொள்ள முடி­யும்.
கூட்­ட­மைப்­பின் சின்­ன­மா­கிய வீடு தமிழ் அரசுக்­கட்­சிக்­கு­ரி­யது. வய­தில் மூத்­த­வர்­க­ளுக்கு தந்தை செல்வா காலத்­தி­லி­ருந்தே வீடு பரிச்­ச­ய­மான சின்­ன­மா­கி­விட்­டது.

ஆனால் இளைய சமூ­கத்­தி­ன­ருக்கு பழைய வர­லாறு எது­வுமே தெரி­யாது. அவர்­கள் தற்­கால நில­வ­ரங்­களை மட்­டுமே புரிந்து வைத்­தி­ருக்­கி­றார்­கள். ஆகவே அவர்­க­ளைக் கவர்ந்து கூட்­ட­மைப்­பின் பால் ஈர்க்­கும் வகை­யில் செய­ல­ரங்­கு­கள் ஒழுங்கு செய்­யப்­ப­டல் வேண்­டும். இளை­ஞர்­க­ளின் மனங்­க­ளில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்த வேண்­டும். இதன் மூல­மா­கக் கூட்­ட­மைப்­பின் வாக்கு வங்­கியை அதி­க­ரித்­துக் கொள்ள முடி­யும்.
இன்று சாதா­ரண தர மக்­கள் பொரு­ளா­தார ரீதி­யில் பெரும் கஷ்­டங்­களை எதிர்­கொண்டு வரு­கின்­ற­னர்.

இவர்­கள் அர­சி­யல்­வா­தி­க­ளி­ட­மி­ருந்து தமது சிர­மங்­க­ளுக்கு ஏதா­வது பரி­கா­ரம் கிடைக்­கு­மா­ வென எதிர்­பார்த்­துக் காத்­தி­ருக்­கின்­ற­னர். இவர்­கள் பொரு­ளா­தார ரீதி­யில் நிரந்­த­ர­மா­கப் பயன் பெறு­வ­தற்­கு­ரிய உத­வி­களை கூட்­ட­மைப்­பின் அர­சி­யல்­வா­தி­கள் வழங்க வேண்­டும்.

முதல் வேலை­யாக கூட்­ட­மைப்­புக்­குள் இருந்து கொண்டு அதற்­குக் குழி பறிப்­ப­வர்­களை உட­ன­டி­யா­கத் தூக்­கி­யெ­றிய வேண்­டும். எதி­ரி­களை விட இவர்­கள் பயங்­க­ர­மா­ன­வர்­கள்.

எதிர்­வ­ரும் காலம் தமிழ் மக்­க­ளது அர­சி­யல் அபி­லா­சை­கள் சிறப்­பாக அமைய வேண்­டு­மென்­றால் ஒழுக்­க­மும், நேர்­மை­யும், திற­மை­யும் உள்­ள­வர்­களை மட்­டுமே தேர்­தல்­க­ளின் கூட்­ட­மைப்­பின் சார்­பில் நிறுத்த வேண்­டும். இத­னால் பாத­க­மான விளை­வு­கள் ஏற்­ப­டு­வ­தைத் தடுக்க முடி­யும்.

http://newuthayan.com/story/68501.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.