Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிர­சன்ன நாண­யக்­கார சி.ஐ.டி.யினரால் கைது

Featured Replies

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிர­சன்ன நாண­யக்­கார சி.ஐ.டி.யினரால் கைது

2-be427c644c166e34576b2defff75cdf4f3c16f52.jpg

 

கோத்­தாவின் ஆலோ­ச­னைக்கு அமைய சாட்­சிகள் மாற்­றப்­பட்­டமை தொடர்பில் விசா­ர­ணையில் தகவல்  

 (எம்.எப்.எம்.பஸீர்)

சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்க படு கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் குறித்த சாட்­சி­களை மறைத்­தமை, பொய்­யான சாட்­சி­களை உரு­வாக்­கி­யமை தொடர்பில் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிர­சன்ன நாண­யக்­கார குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்டு எதிர்­வரும் 16 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­ரி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார். 

நேற்று முன் தினம் பிற்­பகல் 1.00 மணி முதல் சுமார் 10 மணி நேர சிறப்பு விசா­ர­ணை­களின் பின்னர் குற்றப் புல­னா­யவுப் பிரிவின் அதி­கா­ரி­களால் அவர் இவ்­வாறு அன்­றைய தினம் நள்­ளி­ரவு 11 மணிக்கு கைது செய்­யப்­பட்டு நேற்று மாலை கல்­கிசை நீதிவான் மொஹம்மட் சஹாப்தீன் முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்தே அவர் இவ்­வாறு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

 இந் நிலையில் இது தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வரும் விசா­ர­ணை­களில், லசந்த கொலை தொடர்­பி­லான முக்­கிய சாட்­சி­யங்கள் முன்னாள் பாது­காப்பு செயலர் கோத்­தா­ப­யவின் உத்­த­ர­வுக்கு அமை­வாக கைதா­கி­யுள்ள சந்­தேக நபர்கள் உள்­ளிட்ட தரப்பால் இவ்­வாறு மாற்­றப்­பட்டு உள்­ள­தாக வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் அது தொடர்பில் தொடர் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ள­தா­கவும், லசந்த கொலை விசா­ரணை அதி­கா­ரி­யான பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்வா நீதி­வா­னுக்கு அறி­வித்தார்.

அத்­துடன் பிர­தா­ன­மாக, லசந்­தவை கொல்ல கொலை­யா­ளிகள் வந்த மோட்டார் சைக்­கிள்கள் இரண்டின் இலக்­கங்கள், தனது கள குறிப்புப் புத்­த­கத்தில் இருந்த நிலையில் அது தொடர்பில் பொலிஸ் பதிவுப் புத்­த­கத்தில் இடப்­பட்ட உண்மைப் பதி­வு­களில் இருந்து தாம் பெற்­றுக்­கொண்­டுள்­ள­தா­கவும், அந்த உண்மைப் பதி­வுகள் பின்னர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிர­சன்ன நாண்­யக்­கா­ரவின் உத்­த­ர­வுக்கு அமை­வாக கிழித்து எடுக்­கப்­பட்டு போலி பதி­வுகள் இடப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் நீதி­வா­னுக்கு தெரி­வித்தார். 

அத்­துடன் இந்த கொலையை விடு­தலை புலிகள் செய்­த­தாக நம்­ப­வைக்கும் முக­மாக, இரு தமி­ழர்கள் அனு­ரா­த­புரம் பகு­தியில் வைத்து கடத்­தப்ப்ட்டு அவர்கள் கை, கால் கட்­டப்ப்ட்டு சுட்டும் எரித்தும் கொல்­லப்­பட்­டுள்­ள­தா­கவும், அதன் பின்னர் அவர்கள் பய­ணித்த மோட்டார் சைக்­கிளை லசந்த கொலை­யுடன் தொடர்­பு­ப­டுத்தி சாட்­சி­களை உரு­வாக்­கி­யுள்­ள­தா­கவும் அவர் நீதி­வானின் கவ­னத்­துக்கு கொண்­டு­வந்தார்.

லசந்த படு கொலை விவ­கா­ரத்தில் சாட்­சி­களை மறைத்­தமை தொடர்பில் முன்னாள் கல்­கிசை குற்­ற­வியல் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் திஸ்ஸ சுகந்­த­பால கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் உள்ள நிலையில் நேற்று மற்­றொரு சந்­தேக நப­ராக, கொலை இடம்­பெற்ற போது மேல் மாகா­ணத்தின் தெற்கு பகு­திக்கு பொறுப்­பாக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதி­பரும் பின்னர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ராக ஓய்­வு­பெற்ற பிர­சன்ன நாண­யக்­கார கல்­கிசை நீதிவான் முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்டார்.

குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சமூக கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்­வாவும், பொலிஸ் பரி­சோ­தகர் சுதத் குமா­ரவும் சந்­தேக நபரை மன்றில் ஆஜர் செய்து விசா­ரணை தொடர்பில் மன்றில் கருத்­துக்­களை முன்­வைத்­தனர்.

கனம் நீதிவான் அவர்­களே, இந்த கொலை சம்­பவம் தொடர்பில் முதலில் விசா­ரணை செய்த கல்­கிசை பொலி­ஸாரும் பின்னர் விசா­ரணை செய்த பயங்­க­ர­வாத புல­ன­யவுப் பிரி­வி­னரும் கொலை­யா­ளி­களை கண்­டு­பி­டிக்கும் முக­மாக விசா­ரணை செய்­யாமல் அதனை மூடி மறைக்க விசா­ர­ணை­களை செய்­துள்­ளமை எமது விசா­ர­ணை­களில் அவ­தா­னிக்­கப்­பட்­டது.

அதற்­காக பல முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. அதன்­படி லசந்த கொலை­யுடன் தொடர்­பு­டை­யது எனக் கூறி அத்­தி­டிய கால்­வாயில் இருந்து மோட்டார் சைக்கிள் ஒன்று மீட்­கப்­பட்­டது. 2009.01.26 ஆம் திகதி அப்­போ­தைய பொலிஸ் மா அதி­ப­ருக்கு கிடைத்த தகவல் ஒன்­றுக்கு அமை­வாக இந்த மோட்டார் சைக்கிள் கல்­கிசை பொலி­ஸாரால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. அந்த தக­வலை அர­விந்தன் என்­ப­வரே பொலிஸ் மா அதி­ப­ருக்கு வழங்­கி­யுள்ளார்.

எனினும் இந்த மோட்டார் சைக்­கிளை கால்­வாயில் இருந்து மீட்க, ஏற்­க­னவே கைதான பொலிஸ் பரி­சோ­தகர் சுகந்­த­பால, 2009.01.25 ஆம் திக­தியே நீச்சல் தெரிந்த நபர்­களை தயார்ச் செய்­துள்ளார். இது தொடர்பில் மோட்டார் சைக்­கிளை மீட்­டோரின் வாக்கு மூலம் உள்­ளது. எனினும் 27 ஆம் திக­தியே இரு நாள் தேடு­தலின் பின்னர் அந்த மோட்டார் சைக்கிள் கைப்­பற்­றப்­பட்­டது. இந்த மோட்டார் சைக்கிள் மீட்பு பாரிய சந்­தே­கங்­களை எமக்கு ஏற்­ப­டுத்­து­கி­றது. 26 ஆம் திக­தியே பொலிஸ் மா அதி­ப­ருக்கு தகவல் வழங்­கப்­படும் நிலையில் 25 ஆம் திகதி எவ்­வாறு பொலிஸ் பரி­சோ­தகர் மோட்டார் சைக்­கிளை மீட்க ஆட்­களை தயார் செய்ய முடியும்.

இவ்­வாறு மீட்­கப்­பட்ட இந்த மோட்டார் சைக்கிள் விஷ்னு குமார் என்­ப­வ­ருக்கு சொந்­த­மா­னது. அந்த மோட்டார் சைக்­கிளின் முதல் உரி­மை­யாளர் நட­ராஜா என்­பவர். இதனை வைத்து பொலிஸ் பரி­சோ­தகர் சுகந்­த­பால, நட­ரா­ஜாவை கைது செய்து தடுத்து வைத்து விசா­ரணை செய்­துள்ளார். அந்த தடுப்புக் காவ­லுக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிர­சன்ன நாண்­யக்­கா­ரவே கையொப்­ப­மிட்­டுள்ளார். 

எனினும் மோட்டார் சைக்கி8ள் உரி­மை­யாளர் விஸ்­னு­குமார் கடந்த 2009.01.18 ஆம் திகதி அனு­ரா­த­புரம் பகு­தியில் கடத்­தப்­பட்­டுள்ளார். அவ­ருடன் வந்த பால்ராஜ் என்­ப­வரும் சேர்த்தே கடத்­தப்­பட்­டுள்ளார். ஜீப்பில் வந்தோர் அவரைக் கடத்­தி­ய­தாக கண்­கண்ட சாட்­சி­யங்கள் உள்­ளன. செட்­டிக்­குளம் வீதித் தடையில் ஆவ­ணங்­களை பரி­சீ­லனைச் செய்யும் போது, அந்த இவ்­வி­ரு­வரும் மோட்டார் சைக்­கிளில் வருகை தந்­த­தற்­கான பதிவு மட்­டுமே உள்­ளது. திரும்பி சென்­ற­தாக எந்த பதிவும் இல்லை. இந் நிலையில் 8 வரு­டங்­களின் பின்னர் இவ்­வி­ரு­வரும் கொல்­லப்­பட்­டுள்ள விட­யத்தை நான் கண்­டு­பி­டித்தேன். கொலை இடம்­பெற்ற இடத்தில் அப்­போது பொலிஸார் எடுத்த புகைப்­ப­டங்­களை ஆராயும் போது, அவ்­வி­ரு­வரும் கைகால்கள் கட்­டப்­பட்டு சுட்­டுக்­கொல்­லப்­பட்ட பின்னர் எரிக்­கப்­பட்­டுள்­ளதை எம்மால் அவ­த­னைக்க முடிந்­தது. இந் நிலையில் அவர்கள் பய­ணித்த மோட்டார் சைக்­கிளே அத்­தி­டிய கால்­வாயில் இருந்து மீட்­கப்­பட்­டது. அப்­ப­டி­யானால், இந்த இரட்டை கொலையை, லசந்­தவை கொன்­ற­வர்கள் புலிகள் என நம்­ப­வைக்க சாட்­சி­யத்தை உரு­வாக்கும் நோக்கில் முன்­னெ­டுத்­துள்­ளனர்.

இத­னை­விட லசந்த கொல்­லப்­பட்ட இடத்தில் இருந்த அவ­ரது காருக்குள் இருந்த அவ­ரது கள குறிப்புப் புத்­த­கத்தை உப பொலிஸ் பரி­சோ­தகர் வீர­சிங்க சாட்­சி­யாக எடுத்து கல்­கிசை பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­துள்ளார். அதனை மையப்­ப­டுத்தி அப்­போது கல்­கிசை குற்­ற­வியல் பொறுப்­ப­தி­கா­ரி­யாக இருந்த, ஏற்­க­னவே கைது செய்­யப்­பட்­டுள்ள பொலிஸ் பரி­சோ­தகர் சுகந்­த­பால விசா­ர­ணை­க­ளையும் செய்­துள்ளார். அந்த குறிப்புப் புத்­த­கத்தில் லசந்­தவை கொல்­ல­வந்­த­வர்கள் வந்த மோட்டார் சைக்­கிள்கள் இரண்டில் இலக்­கங்கள் இருந்­துள்­ளன. 

 அந்த இரு இலக்­கங்­க­ளையும் சுகந்­த­பால, மோட்டார் பதிவுத் திணைக்­க­ளத்தில் கொடுத்து தகவல் பெற்­றுள்ளார். ஒன்று நுகே­கொடை பகு­தியில் பதிவு செய்­யப்ப்ட்­டுள்­ள­துடன் மற்­றை­யது ஜா எல - கொட்­டு­கொட பகுதி பதிவைக் கொண்­டது.

 இந்த விட­யத்தை அவர் அப்­போது கல்­கிசை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­ராக இருந்த ஹேமந்த அதி­கா­ரி­யிடம் கூறி­யுள்ளார். பொலிஸ் பரி­சோ­தகர் சுகந்­த­பா­ல­வையும், சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ஹேமந்த அதி­கா­ரி­யையும், பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாண­யக்­கார கடந்த 2009.01.16 ஆம் திகதி மிரி­ஹா­னையில் உள்ள தனது அலு­வ­ல­கத்­துக்கு அழைத்­துள்ளார். இதன்­போது லசந்­தவின் கள குறிப்புப் புத்­த­கத்­தையும், பொலிஸ் பதிவுப் புத்­த­கத்­தையும் எடுத்­து­வ­ரு­மாறு கூறி­யுள்ளார்.

அவ்­வாறு சென்ற போது, பொலிஸ் பதிவுப் புத்­த­கத்தில் விசா­ர­ணை­களில் வெளி­பப்­டுத்­தப்­பட்ட சாட்­சி­யங்கள் அடங்­கிய பதி­வுகள் அடங்­கிய பக்­கங்­களை கிழித்து தனக்கு தரு­மாறும் அது தொடர்பில் போலி பக்­கங்­களை அதில் உள் நுழைக்­கவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாண­யக்­கார, பொலிஸ் பரி­சோ­தகர் சுகந்­த­பா­ல­வுக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார். இதனை பொலிஸ் பரி­சோ­தகர் சுகந்­த­பா­லவும், சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ஹேமந்த அதி­கா­ரியும் குற்றப் புல­ன­யவுப் பிரி­வுக்கு வழங்­கிய வாக்கு மூலங்­களில் உறுதி செய்­கின்­றனர். அவர்­களின் வாக்கு மூலங்­களின் படி, இந்த சாட்­சிகள் மாற்­றப்­ப­டு­வ­தற்கு முன்னாள் பாது­காப்பு செய­லரின் உத்­த­ரவு அடிப்­ப­டை­யாக அமைந்­துள்­ளமை தொடர்பில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. பிரதிப் பொலிஸ் மா அதி­பரின் யோச­னைக்கு சுகந்­த­பால எதிர்ப்பு தெரி­வித்­த­போது,' நீ என்ன அநி­யா­ய­மாக அவர்கள் கையால் சாகப் போகி­றாயா' என பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாண­யக்­கார அவ­ரிடம் விவ­வி­ய­தாக அவரின் வாக்கு மூலத்தில் மேலும் கூறி­யுள்ளார். 

 இந் நிலை­யி­லேயே 2009.01.16 அன்று பொலிஸ் பதிவுப் புத்­த­கத்தின் குறித்த பக்­கங்கள் கிழிக்­கப்­பட்டு, புதுப் பக்­கங்கள் அதற்கு பதி­லாக ஒட்­டப்­பட்­டுள்­ளன. அதில் போலி­யான தக­வல்கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. கிழிக்­கப்­பட்ட பக்­கங்­களை பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாண­யக்­கார தம்­மிடம் ஒப்­ப­டைக்க கூறிய நிலையில், எப்­போ­தா­வது தேவைப்­படும் என நினைத்து பொலிஸ் பரி­சோ­தகர் சுகந்­த­பால காண்ஸ்­டபிள் ஒருவர் ஊடாக பிரதி எடுத்­துள்ளார். இதன்­போது சுகந்­த­பால முக்­கி­ய­மா­னவை முக்­கி­ய­மா­னவை என அழுத்திச் சொன்­னதில் சந்­தேகம் கொண்­டுள்ள கான்ஸ்­டபிள் அவ­ருக்கும் ஒரு பிர­தியை எடுத்­துக்­கொண்­டுள்ளார். அந்த பிர­தி­களை நாம் தற்­போது கைப்­பற்றி அதில் உள்ள உண்மை தக­வல்­களை மையப்­ப­டுத்தி விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்ளோம். லசந்­தவின் கள குறிப்புப் புத்­த­கத்தை, பொலிஸ் மா அதி­ப­ரிடம் கைய­ளிக்க வேண்டும் எனக் கூறி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாண்­யக்­கா­ரவே உடன் வைத்­துக்­கொண்­டுள்ளார்.

இவை­ய­னைத்தும் உண்மை குற்­ற­வா­ளி­களை காப்­பாற்ற முன்­னெ­டுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­க­ளாகும். இந் நிலையில் உண்மை குர்­ற­வா­ளி­களை பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாண­யக்­கார மிகத் தெளி­வாக அறிந்து வைத்­தி­ருந்­துள்ளார் என்­பதே எமது அனு­மானம். ஏனெனில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாண­யக்­கா­ரவின் இந்த செயல்கள் முன்னாள் பாது­காப்பு செய­லா­ளரால் முன்­னெ­டுக்­கப்­பட்­டவை என்ற முடி­வுக்கு வந்­தி­ருந்­த­தாக பொலிஸ் பரி­சோ­தகர் சுகந்­த­பா­லவின் வாக்கு மூலத்தில் அவர் கூறி­யுள்ளார். அப்­போ­தைய கல்­கிசை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ஹேமந்த அதி­கா­ரியின் வாககு மூலம் ஊடா­கவும் அது உறு­தி­யா­கி­றது.

 இந்த கொலை தொடர்பில் தேடு­வ­தற்கு , கல்­கிசை பொலி­ஸாரின் பின்னர் குற்றப் புல­ன­யவுப் பிரி­வுக்கு பாரப்­ப­டுத்­தப்­பட்­டது. அப்­போது குற்றப் புல­னா­யவுப் பிரி­வினர் 5 தொலை­பேசி இலக்­கங்­களைக் கண்­ட­றிந்­தனர். இவை லசந்த, கீத் நொயார், உபாலி தென்­னகோன் ஆகிய ஊட­க­வி­ய­லா­ளர்கள் மீதான கொலை, தாக­குதல் சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­டை­யவை என்­பதை புல­னா­யவுப் பிரி­வினர் கண்­ட­றிந்­தனர். மறு­கணம் இம்­முன்று சம்­பவ விசா­ர­ணை­களும் அப்­போ­தைய பொலிஸ் மா அதிபர் மஹிந்த பால­சூ­ரி­ய­வினால் பயங்­க­ர­வாத புல­னா­யவுப் பிரிவின் பிர­தானி வாகிஷ்­ட­விடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. அந்த விசா­ரணை தொடர்ந்­தி­ருந்தால் இன்று உண்மை தெரிந்­தி­ருக்கும். குற்றப் புல­னா­யவுப் பிரி­வுக்கு வேலை அதிகம் என்று கூறியே அந்த விசா­ர­ணைகள் மாற்­றப்­பட்­டன. எனவே இந்த கொலையின் சந்­தேக நபர்­களை காப்­பாற்­றவும் சாட்­சி­களை மாற்­றவும் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் முயற்­சிகள் பல்­வேறு மட்­டத்தில் எடுக்­கப்ப்ட்­டுள்­ளன.

 பொலிஸ் அதி­கா­ரி­களின் செயல் குறித்து வெட்­க­ம­டை­கின்றேன். ஒவ்­வொ­ரு­வரின் கட்­ட­ளைக்கு அமை­வா­கவும், விசா­ர­ணை­களை திசை திருப்­பி­யுள்­ளனர். என்றார்.

 இத­னை­ய­டுத்து சந்­தேக நபர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிர­சன்ன நாண­யக்­கார சார்பில் மன்றில் ஆஜ­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அனுர மெத்­த­கொட, சந்­தேக நபர் நோயாளி எனவும், குற்­றச்­சாட்­டுக்கள் பிணை வழங்க முடி­யு­மா­னவை எனவும் சுட்­டிக்­காட்டி பிணை கோரினார்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாண்­யக்­கா­ர­வுக்கு எதி­ராக தண்­டனை சட்டக் கோவையின் 174, 193 ஆவது அத்தியாயத்தின் கீழ் குற்றம் சுமத்தப்ப்ட்டிருந்த நிலையிலேயே அவர் இதனைக் கோரினார்.

 எனினும் பாதிக்கப்ப்ட்ட தரப்பு சட்டத்தரணி அத்துல எஸ். ரணகலவும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் அதற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டனர்.

 தண்டனை சட்டக் கோவையின் 112 ஆவது அத்தியாயத்துக்கு அமைவாக, சாட்சிகள் மறைக்கப்படும் போது, அந்த குற்றம் கொலை ஒன்றுடன் தொடர்புபட்டிருப்பின் கொலை தொடர்பில் வழங்கப்படும் தண்டனையைப் பெறத் தக்கது என் தெளிவாக கூறப்பட்டுள்ளது என அவர்கள் சுட்டிக்காட்டினர்.

 இதனையடுத்து பிணை சட்டத்தின் 14 (1) ஏ, 2 ஆம் அத்தியாயத்துக்கு அமைவாக நீதிவானுக்கு உள்ள அதிகாரத்தின் படி, சந்தேக நபரானமுன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாணயக்காரவை எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

 அத்துடன் அவரிடம் சிறையில் வாக்கு மூலம் பெற குற்றப் புலனாயவுப் பிரிவுக்கு அனுமதியளித்த நீதிவான் மொஹம்மட் மிஹால், அவரை சிறையில் தனியாக பாதுகாப்புடன் வைக்கவும், தனியாகவே நீதிமன்றுக்கு அழைத்து வரவும் ஏற்கனவே சிறையில் உள்ள சந்தேக நபரான சுகந்தபாலவுடன் எவ்வித தொடர்பிலும் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளவும் உத்தரவு பிறப்பித்தார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-02-15#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.