Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரைச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளில் ஆட்சியமைக்க சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு பரீசீலனை :

Featured Replies

கரைச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளில் ஆட்சியமைக்க சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு பரீசீலனை :

Chandrakumar_7462.jpg?resize=788%2C488
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி கரைச்சி , பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச சபைகளில் ஆட்சியமைப்பதற்கு சமத்துவம் சமூகநீதிக்கான மக்கள் அமைப்பின் சுயேட்சைக்குழு பரீசீலனை செய்துகொண்டிருப்பதாக அதன் அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்

இன்று(15) கிளிநொச்சியிலுள்ள அமைப்பின் பணிமனையில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார். அங்கு அவா் மேலும் தெரிவிக்கையில்

கரைச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளில் எம்மை ஆட்சிபொறுப்பேற்குமாறு கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த இரண்டு பிரதேச சபைகளிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை விட கூடுதலான உறுப்பினர்கள் வெளியே இருப்பதாலும் கூட்டமைப்புக்கு அளிக்கப்பட்ட வாக்குகளை விட கூடுதலான வாக்குகள் எதிர்தரப்பினர்களுகே அளிக்கப்பட்டதாலும் கூட்டமைப்பு அல்லாதவர்களே ஆட்சியமைக்க வேண்டும் என சுட்டிக்காட்டி இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

அத்துடன் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் இந்த சபைகளை வினைத்திறனுடன் சிறப்பான முறையில் நிர்வகிக்க கூடிய ஆற்றல் எமக்கே உள்ளது எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். எனினும் இது தொடர்பாக நாம் உடனடியாக தீர்மானிக்க முடியாது. ஆட்சியமைப்பதாக இருந்தால் எந்தக் கட்சிகளுடனும் வெளிப்படையாக மக்களுடைய அறிவுறுத்தல்களின் படியே ; தீர்மானிக்க முடியும் எனவும் தெரிவித்தார்

இலங்கையில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற ஒரே சுயேச்சைக் குழு நாங்களே. மொத்தமாக 19 ஆசனங்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் ததேகூட்டமைப்பு 77 வீத வாக்குக்களை பெற்றிருந்தது. அதில் எனக்கு 13 வீத வாக்குகளே கிடைந்திருந்தன. ஆனால் இந்த உள்ளுராட்சி தேர்தலில் ததேகூட்டமைப்புக்கு 47 வீதமான வாக்குகளும் எங்களது சுயேட்சைக் குழுவுக்கு 30 வீதமான வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளது.

அரசியலில் நாங்கள் சிறப்பாக அடையாளம் காணப்பட்ட சக்தியாக இருக்கிறோம். கிளிநொச்சியில் நாம் எதையும் தீர்மானிக்கக் கூடியவர்களாக உள்ளோம் என அவர் தெரிவித்தார். கூட்டமைப்போடு நாங்கள் சேர்ந்து ஆட்சியை அமைப்பதைக் குறித்துச் சிந்திக்கவில்லை. ஆனால் அவர்கள் எம்முடன் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள். தேர்தல் காலத்தில் அவர்களுடைய மக்கள் நலனுக்குப் புறம்பான விடயங்களை நாம் விமர்சித்திருக்கிறோம்.

அதிலிருந்து அவர்கள் மாற்றங்களை உருவாக்கினால் அதை மக்கள் ஏற்று அங்கீகரித்தால் மட்டுமே இதைக் குறித்து நாம் பரிசீலிக்க முடியும். ஆகவே தற்போதைக்கு எந்த உடன்படிக்கையும் கிடையாது என்பதுடன் வேறு எந்தக் கட்சிகளுடனும் எவ்வித உடன்பாடும் இல்லையெனவும் அவர் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/2018/66991/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.