Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரணில் பக்கம் தாவும் சுதந்திரக் கட்சி அமைச்சர்கள்? – முடிவுக்கு வரும் குழப்பம்

Featured Replies

ரணில் பக்கம் தாவும் சுதந்திரக் கட்சி அமைச்சர்கள்? – முடிவுக்கு வரும் குழப்பம்

 

RANILஉள்ளூராட்சித் தேர்தலை அடுத்து, கொழும்பு அரசியலில் ஏற்பட்ட குழப்ப நிலை தற்போது, மீண்டும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சாதகமான திருப்பத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி நீக்கம் செய்து விட்டு, கூட்டு எதிரணியின் ஆதரவுடன், நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராகக் கொண்ட  அரசாங்கத்தை அமைக்க, சிறிலங்கா சுதந்திரக் கட்சி முற்பட்டதால், நேற்று முன்தினம் கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த இதற்கான நடவடிக்கைகளை, மகிந்த ராஜபக்சவுடன் பேசி முன்னெடுத்திருந்தார்.

இதற்கமைய, கூட்டு எதிரணியின் தலைவர்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து பேச்சு நடத்தி, நிமால் சிறிபால டி சில்வாவின் தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவு அளிக்க இணக்கம் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து,  சிறிலங்கா பிரதமரை பதவி நீக்கம் செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து சட்டமா அதிபர் மற்றும் சட்ட நிபுணர்களுடன் தாம் ஆலோசனை நடத்துவதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்திருந்தார்.

எனினும், சிறிலங்கா பிரதமர் தாம் பதவி விலகப் போவதில்லை என்றும், அரசியலமைப்புக்கு அமைய தமது கடமைகளை முன்னெடுக்கப் போவதாகவும் அறிவித்தார்.

இந்த நிலையில், நிமால் சிறிபால டி சில்வாவைப் பிரதமராக நியமிப்பதற்கு ஆதரவு கோரும் கடிதத்தில், போதிய கையெழுத்துக்களைப் பெற முடியாத நிலையில், இந்த முயற்சி பின்னடைவைச் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐதேகவின் உள்மட்டத்தில் ஏற்பட்ட குழப்பங்களை தீர்த்து, தமக்கான ஆதரவை உறுதிப்படுத்துவதில் வெற்றிபெற்றுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, நேற்று ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராகத் தொடர்வதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆதரவை வெளிப்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக கொண்ட அரசாங்கத்தை அமைக்கும் திட்டத்துக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் ஆதரவளிக்க முன்வராததை அடுத்தே, மைத்திரிபால சிறிசேன அமைச்சரவை மாற்றத்தை ஏற்படுத்தி தற்போதைய அரசாங்கத்தை முன்னெடுக்க இணங்கியுள்ளார் எனக் கூறப்படுகிறது.

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலரும் அமைச்சருமான துமிந்த திசநாயக்க, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலரும் அமைச்சருமான மகிந்த அமரவீர, சரத் அமுனுகம, மகிந்த சமரசிங்க உள்ளிட்ட அமைச்சர்களே இவ்வாறு எதிர் நிலைப்பாட்டில் உள்ளனர்.

அதேவேளை, தம்மை பிரதமராக ஏற்றுக் கொள்ள இணங்கியுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த துமிந்த திசநாயக்க,  மகிந்த அமரவீர, சரத் அமுனுகம, மகிந்த சமரசிங்க, மோகன்லால் கிரேரோ உள்ளிட்ட தலைவர்களுக்கு இன்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இராப்போசன விருந்து வழங்கப்படவுள்ளது.

இதையடுத்து, தற்போதைய அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.puthinappalakai.net/2018/02/18/news/29182

  • தொடங்கியவர்

நெருக்கடிக்கு இவ்வாரம் தீர்க்கமான முடிவு?

 

 

உள்­ளூ­ராட்சித் தேர்­தலைத் தொடர்ந்து இலங்கை அர­சி­யலில் ஏற்­பட்ட நெருக்­க­டி­யான நிலைக்கு இவ்­வா­ரத்தில் தீர்க்­க­மான முடிவு கிட்­டு­மென நம்­பப்­ப­டு­கி­றது. தேசிய அர­சாங்­கத்தின் 2வருட கால ஒப்­பந்தம் காலா­வ­தி­யா­னதைத் தொடர்ந்து அதன் பங்­காளிக் கட்­சி­க­ளான ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் தனித்­த­னி­யாக ஆட்சி அமைப்­ப­தற்­கான பனிப்­போரை ஆரம்­பித்­தன.

இதே­வேளை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பத­வி­யி­லி­ருந்து நீக்­கு­வது தொடர்பில் பல்­வேறு சர்ச்­சை­யான சூழ்­நி­லைகள் காணப்­பட்­டன.  இதன் பின்­ன­ணியில் நாட்டின் அர­சியல் ஸ்திர­நிலை சீர்­கு­லைந்­த­துடன் இலங்­கையின் அர­சி­யலின் அடுத்­த­கட்டம் என்ன? என்­பது குறித்து 

கேள்­விக்­கு­றி­யான நிலை­மையே உரு­வா­கி­யுள்­ளது.

இந்­நி­லையில் தேசிய  அர­சாங்­கத்­தி­லி­ருந்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பதவி நீக்­கு­வது குறித்தும் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் ஆலோ­சனை பெறு­வது குறித்தும் ஆரா­யப்­பட்­டது. மேலும் அர­சாங்­கத்தின் தற்­போது எழுந்­துள்ள சிக்­க­லான நிலைமை குறித்து பல்­வேறு கருத்­து­களை சட்ட வல்­லு­நர்கள் மற்றும் அர­சியல் ஆய்­வா­ளர்கள் முன்­வைத்­துள்­ளனர்.

மேலும்,  ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் தனித்து ஆட்­சி­ய­மைப்­ப­தற்­கான பனிப்­போரில் தொடர்ந்தும் ஈடு­பட்டு வரு­வ­தையே காண­மு­டி­கி­றது. எவ்­வா­றெ­னினும் அர­சி­யலில் ஏற்­பட்­டுள்ள பர­ப­ரப்­பான நிலைக்கு இவ்­வா­ரத்தில் முற்­றுப்­புள்ளி வைக்­கப்­படும் எனப் பர­வ­லாக எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இதே­வேளை, நாட்டில் காணப்­பட்ட அர­சியல் மோதல் நிறை­வுக்கு வந்­துள்­ள­தா­கவும் தானே தொடர்ந்து பிர­த­ம­ராக செயற்­படப் போவ­தா­கவும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.

இளம் உறுப்­பி­னர்­க­ளுடன் நேற்றுக் காலை இடம்­பெற்ற சந்­திப்­பின்­போதே பிர­தமர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முகம்­கொ­டுத்­துள்ள நெருக்­க­டி­களை புரிந்­து­கொண்டு செயற்­ப­டு­மாறு பிர­தமர் குறிப்­பிட்­டுள்ளார்.

சுசில் பிரேம ஜயந்த உட்­பட ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யினர் எதிர்க்­கட்­சிக்கு செல்­வ­தா­கவும் எதிர்­வரும் வியா­ழக்­கி­ழமை புதிய அமைச்­ச­ரவை பத­விப்­பி­ர­மாணம் செய்­யப்­ப­ட­வுள்­ள­தா­கவும் பிர­தமர் கூறி­யுள்ளார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு எதி­ரான நிலைப்­பாட்­டினை கொண்­டி­ருந்த இளம் உறுப்­பி­னர்­களை சமா­தா­னப்­ப­டுத்­திய பிர­தமர் அமைதி நிலைமை தோற்­று­விக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் கூறி­யுள்ளார். 

சம­கால நல்­லாட்சி அர­சாங்­கத்தை தொடர்ந்தும் முன்­னெ­டுத்து செல்ல ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் ஒத்­து­ழைப்பை வழங்­கு­மாறு சில வெளி­நாட்டு தூத­ரங்கள் தொடர்ந்து ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இத­னி­டையே, தாமரை மொட்டின் கீழ் 2020ஆம் ஆண்டில் நாட்டில் முழுமையான ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தனது வியூகத்தை வகுத்து வருகின்றார். இதன் முதல் கட்டமாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிஅந்தஸ்தை பெற்றுக் கொள்வதற்கான அழுத்தத்தை நாளை பாராளுமன்ற அமர்வின்போது கூட்டு எதிர்க்கட்சி கொடுக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

http://www.virakesari.lk/article/30734

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.