Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்­லாட்சி அர­சாங்கம் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­படும் சு.க.வேண்­டு­மானால் பெரும்­பான்மையை நிரூ­பிக்­கட்டும் ரணில் தெரிவிப்பு; மோடியையும் உதாரணம் காட்டினார்

Featured Replies

நல்­லாட்சி அர­சாங்கம் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­படும் சு.க.வேண்­டு­மானால் பெரும்­பான்மையை நிரூ­பிக்­கட்டும்

 

ரணில் தெரிவிப்பு; மோடியையும் உதாரணம் காட்டினார்

(எம்.எம்.மின்ஹாஜ்)

எமது நல்­லாட்சி அர­சாங்கம் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­படும். எமக்­குள்ள பெரும்­பான்­மை­யினை நாம் தற்­போது காண்­பிக்­கத்­தே­வை­யில்லை. சுதந்­திரக் கட்­சி­யினர் தமக்கு 113 உறுப்­பி­னர்­களின் ஆத­ரவு இருப்­ப­தாக கரு­தினால் அவர்கள் அதனை நிரூ­பிக்­கட்டும். அவ்­வா­றான நிலை ஏற்­பாட்டால் நாம் எமது பெரும்பான்­மை­யினை நிரூ­பிக்­கலாம் என்று  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.  

இந்­தி­யாவில் பிர­தமர் மோடி தலை­மை­யி­லான பா.ஜ.க. பல பிராந்­தி­யங்­களில் தோல்வி கண்­டுள்­ளது. இந்த நிலையில் பிர­தமர் மோடி பதவி வில­க­வில்லை இதே போன்றே இங்கும் உள்­ளூ­ராட்சி தேர்தல் முடி­வு­களை வெ ளியா­கி­யுள்­ளன. இதற்­காக நான் பதவி விலக வேண்­டிய அவ­சி­ய­மில்லை. என்றும் பிர­தரம் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் அல­ரி­மா­ளி­கையில் ஐக்­கிய தேசிய முன்­னணி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளது கூட்டம் நேற்று இரவு நடை­பெற்­றது. இந்த கூட்­டத்தில் கருத்து தெரி­வித்த போதே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இவ்­வாறு கூறி­யுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரி­வித்­துள்ள பிர­தமர்,

ஜனா­தி­ப­தியை நானும் சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரி­யவும் சந்­தித்து பேச்சு வார்த்தை நடத்­தினோம். இந்த சந்­திப்பின் போது இன்­றைய பாரா­ளு­மன்ற அமர்வை நடத்­து­வது குறித்து கலந்­து­ரை­யாடல் நடத்­தப்­பட்­டது.

நாம் தற்­போது அர­சாங்­கத்தை முன்­கொண்டு செல்­கிறோம். நல்­லாட்சி அர­சாங்கம் தொடரும் இந்த நிலையில் சுதந்­தி­ரக்­கட்சி பாரா­ளு­மன்­றத்தில் பெறும்­பான்­மையை இருப்­ப­தாகக் கரு­தினால் அவர்கள் அதனை நிரூ­பித்­துக்­காட்ட வேண்டும். பாரா­ளு­மன்­றத்தில் எவ­ரா­வது வாக்­கெ­டுப்பை கோரினால் பெரும்­பான்­மையை காண்­பிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்க முடியும்.

 

இந்த வாரத்தில் அமைச்­ச­ர­வையில் மாற்றும் செய்­யப்­படும் சுதந்திரக்கட்சியின் கடும்போக்காளர்கள் எதிர்க்கட்சின் பக்கம் செல்லவேண்டியதில்லை ஜனாதிபதி நாம் பலவீனப்படுத்தக்கூடாது அதற்கேற்ற வகையில் நாம் செயற்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார். 
 

 

 

 

பேச்­ச­ள­வி­லேயே தனித்த அர­சாங்க விடயம் உள்­ளது

2-a5d52d0b1461f02d3b423d3d3dd74b9050509f66.jpg

 

(ஆர்.யசி)

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தனி அர­சாங்கம் ஒன்றை அமைப்­பது குறித்து பேச்­சு­வார்த்தை மட்­டத்தில் நகர்­வுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. உறு­தி­யான  தீர்­மானம் ஒன்றை இன்னும் எட்­ட­வில்லை என ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் அமைச்சர் தயா­சிறி ஜெய­சே­கர தெரி­வித்தார்.  

தேசிய அர­சாங்­கதின் புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் ஒன்றை நீடிப்­பது குறித்தும் தீர்­மானம் எடுக்­க­வில்லை எனவும் அவர் அவர் குறிப்­பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தனி அர­சாங்கம் ஒன்றை அமைப்­பது குறித்து கட்­சிக்குள் பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் நிலையில் கட்­சி­யாக முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள தீர்­மா­னங்கள் மற்றும் தேசிய அர­சாங்­கத்தில் இரண்டு கட்­சி­களும் செய்­துள்ள புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்கை தொடர்­வது குறித்தும் வின­விய போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். 

அவர் மேலும் கூறு­கையில்,

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தனி அர­சாங்கம் அமைக்­கப்­ப­டு­வது குறித்து தொடர்ந்தும் பேச்­சு­வார்த்தை மட்­டத்­தி­லேயே நகர்­வுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அடுத்த இரண்டு ஆண்­டு­களில் எவ்­வா­றான பய­ணத்தை நாம் முன்­னெ­டுப்­பது என்­பது குறித்து உறு­தி­யான தீர்­மா­னங்கள் எதையும் தனிப்­பட்ட ரீதியில் நாம் முன்­னெ­டுக்­க­வில்லை. தேசிய அர­சாங்கம் ஒன்றை முன்­னெ­டுக்க வேண்டும் என்ற மக்கள் ஆணை மீறப்­படக் கூடாது, கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் 62 இலட்சம் மக்கள் தேசிய அர­சாங்­கத்தை ஆத­ரித்­துள்ள நிலையில் மக்கள் கட்­ட­ளை­யினை மீறிய வகையில் செயற்­படக் கூடாது.

எனினும் தேசிய அர­சாங்­கத்தில் ஏற்­படும் குழப்­ப­கர செயற்­பா­டுகள் குறித்து நாம் வேடிக்கை பார்க்­கவும் முடி­யாது. கடந்த மூன்று ஆண்­டு­களில் ஏற்­பட்­டுள்ள குள­று­ப­டிகள், நெருக்­க­டிகள் என்­ப­வற்றை நாம் கருத்தில் கொண்டு அவற்­றினை நிவர்த்தி செய்யும் செயற்­பா­டு­களை கையாள வேண்டும். கடந்த மூன்று ஆண்­டு­களில் அர­சாங்­க­மாக முக்­கிய நகர்­வு­களை சரி­யாக முன்­னெ­டுக்க முடி­யாத கார­ணத்­தி­னா­லேயே கடந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் மக்கள் தீர்ப்பு எமக்கு எதி­ராக அமைந்­தது. எனவே அவற்­றினை கருத்தில் கொண்டு நாம் எமது வேலைத்­திட்­டங்­களை சரி­யாக முன்­னெ­டுக்க வேண்டும்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் உறுப்­பி­னர்­க­ளா­கிய நாம் தொடர்ச்­சி­யாக பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். சுமூ­க­மான நிலைப்­பா­டு­களை எட்டி நாட்டின் ஆட்­சி­யினை அமை­தி­யான முறையில் கொண்டு நடத்தும் செயற்­பா­டுகள் அவ­சி­ய­மா­கின்­றது. ஆகவே அவற்­றையும் கருத்தில் கொண்டே நாம் செயற்­பட்டு வரு­கின்றோம். இதில் அனைத்து தரப்­பி­னதும் ஆத­ரவை பெற்­றுக்­கொண்டு பய­ணிக்க நாம் தயா­ராக உள்ளோம். குற்­ற­வா­ளி­களை ஊழல் வாதி­களை நிரா­க­ரித்து தூய்­மை­யான அர­சாங்­கத்தை முன்­னெ­டுத்து செல்ல சகல தரப்­பையும் நாம் இணைத்­துக்­கொள்ள தயார். அதற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

மேலும் தேசிய அர­சாங்­கதின் புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்கை நீட்­டிக்­கப்­ப­டு­வது குறித்து பிர­தான கட்­சிகள் இன்னும் தீர்­மானம் ஒன்­றினை எட்­ட­வில்லை. இப்போதுள்ள அரசியல் குழப்ப நிலைமைகளில் நாம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுப்பது குறித்து ஆராய முடியாதுள்ளது. தொடர்ச்சியாக ஜனாதிபதியுடன் சந்திப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் நம் விரைவில் இவற்றை தீர்க்கும் நடவடிக்கைகளை கையாள்வோம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

 

 

சபையில் பெரும்­பான்­மையை நிரூ­பிக்க ஐ.தே.க. தயார்

5-738fb90ad30e3b25afed26bb0bb1ab1e43e6ff1d.jpg

 

எந்த சவாலையும் எதிர்கொள்வோம்

(எம்.எம்.மின்ஹாஜ்)

இன்­றைய பாரா­ளு­மன்­றத்தில் புதிய பிர­தமர் ஒருவர் தோற்றம் பெற முடி­யாது. எவ­ரா­வது பிர­த­ம­ராக வர  நினைப்­பவர் பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்­மையை நிரூ­பித்து காட்ட வேண்டும். ஆகவே இன்­றைய பாரா­ளு­மன்­றத்தில் ஏதா­வது நெருக்­க­டிகள், சர்ச்­சைகள் ஏற்­பட்டால் அங்கு அதனை தீர்த்து பெரும்­பான்­மையை காண்­பித்து தொடர்ந்து ஆட்­சியை கொண்டு செல்வோம் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான கபீர் ஹாஷிம் தெரி­வித்தார். 

அத்­துடன் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு எதி­ராக வேறு எவ­ரா­வ­தற்கு ஆட்சி அமைக்க முடி­யு­மாயின் ஆட்சி அமைத்து காட்­டட்டும். என்றும் அவர் குறிப்­பிட்டார்.  பிட்ட கோட்­டேயில் அமைந்­துள்ள ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­கத்தில் நேற்று நடை­பெற்ற விசேட கூட்­டத்தின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அவர் மேலும் கருத்து வெளி­யி­டு­கையில்,

ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு எதி­ராக வேறு எவ­ரா­வ­தற்கு ஆட்சி அமைக்க முடி­யு­மாயின் ஆட்சி அமைத்து காட்ட வேண்டும். ஆகவே தற்­போது எம்­மிடம் ஆட்சி உள்­ளது. ஆகவே நாம் ஆட்­சியை தொடர்ந்து கொண்டு செல்­வதில் எந்­த­வொரு பிரச்­சி­னையும் இல்லை.

பிர­த­மரை நீக்­கு­வ­தற்கு ஜனா­தி­பதி சட்ட ஆலோ­சனை பெற்­றாரா? இல்­லையா? என்­பது தொடர்பில் எமக்கு எதுவும் தெரி­யாது. அவ்­வாறு ஜனா­தி­பதி கூறி­ய­தாக எமக்கு தக­வல்கள் இல்லை. ஊட­கங்­களின் ஊடாக அதனை நாம் அறிந்­து­கொண்டோம். சட்­டத்தின் பிர­கா­ரமும் மக்கள் ஆணை பிர­கா­ரமும் நல்­லாட்சி தொடர்ந்து பய­ணிக்கும்.

புதிய பிர­தமர் இன்­றைய பாரா­ளு­மன்­றத்தில் உரு­வாக முடி­யாது. தற்­போது பிர­த­ம­ராக ரணில் விக்­கி­ர­ம­சிங்க இருக்கும் போது எதற்கு புதிய பிர­தமர்? எவ­ரா­வது பிர­த­ம­ராக வருகை தர இருந்தால் பிர­த­ம­ராக வர நினைப்­பவர் தனது பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்­மையை காண்­பிக்க வேண்டும்.

ஐக்­கிய தேசியக் கட்­சியில் எந்­த­வொரு கருத்து வேறு­பா­டு­களும் இல்லை. நாம் ஒற்­று­மை­யாக உள்ளோம். ஏனை­யோ­ருக்கு பிரச்­சினை இருப்­ப­தா­கவே தெரி­கின்­றது. அவர்கள் தமது நெருக்­க­டியை கூறி ஜன­நா­யக முறையில் ஆட்சி அமைக்க முடியும். எனினும் எம்­மிடம் பெரும்­பான்மை பலம் உள்­ளது.

இதன்­படி இன்­றைய தினம் பாரா­ளு­மன்றம் கூடு­கின்­றது. பாரா­ளு­மன்­றத்தில் ஏதா­வது நெருக்­க­டிகள், சர்ச்­சைகள் ஏற்பட்டால் அங்கு அதனை தீர்க்க நடவடிக்கை எடுப்போம். பெரும்பான்மையை நாம் காண்பித்து தொடர்ந்து ஆட்சியை கொண்டு செல்வோம்.

ஆகவே நல்லாட்சி அரசாங்கம் ஸ்திரமானது. அதுவே தொடர்ந்தும் பயணிக்கும்.

 

 

 

ஜனா­தி­ப­தியின் பதி­லுக்­காக காத்­தி­ருக்­கின்றோம்

6-3c79314b223773851bcbeb8b5b1bd89879799afb.jpg

 

(ரொபட் அன்­டனி)

ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்சி தனித்து ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு எந்­த­வி­த­மான பத­வி­க­ளையும் பெறாமல் ஆத­ரவு வழங்­கு­வ­தற்கு கூட்டு எதி­ரணி தயா­ராக உள்­ளது. இது  தொடர்­பான எமது நிலைப்­பாட்டை ஜனா­தி­ப­திக்கு அறி­வித்­துள்ளோம். தற்­போது ஜனா­தி­ப­தியின் பதி­லுக்­காக காத்­தி­ருக்­கின்றோம் என்று கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும் சிறி­லங்கா பொது­ஜன பெர­முவின் பிர­தி­நி­தி­யு­மான பஷில் ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.  

சுதந்­திரக் கட்­சி­யுடன் இணைந்து கூட்டு எதி­ரணி ஆட்­சி­ய­மைக்­குமா என்று வின­வி­ய­போதே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் இது தொடர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில் தற்­போ­தைய ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் தலை­மை­யி­லான அர­சாங்கம் பத­வியில் இருக்க முடி­யாது என்ற செய்­தி­யையே மக்கள் நடந்து முடிந்த உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தலில் வழங்­கி­யுள்­ளனர். அந்த முடிவை அனை­வரும் ஏற்­க­வேண்டும்.  

குறிப்பா ஐக்­கிய தேசிய கட்சி இந்த நாட்டை ஆட்சி செய்­யக்­கூ­டாது என்­பதில் மக்கள் உறு­தி­யாக உள்­ளனர். இந்­நி­லையில் ஐக்­கிய தேசிய கட்சி இல்­லாத அர­சாங்கம் ஒன்றை சுதந்­திரக் கட்சி அமைக்­கு­மாயின் அதற்கு முழு­மை­யான ஆத­ரவை வழங்க கூட்டு எதி­ரணி தயா­ராக இருக்­கின்­றது.

அதா­வது சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி தனித்து ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு எந்­த­வி­த­மான பத­வி­க­ளையும் பெறாமல் ஆத­ரவு வழங்­கு­வ­தற்கு கூட்டு எதி­ரணி தயா­ராக உள்­ளது. இது தொடர்­பான எமது நிலைப்­பாட்டை ஜனா­தி­ப­திக்கு அறி­வித்­துள்ளோம். தற்­போது ஜனா­தி­ப­தியின் பக்கம் இருந்து எவ்­வா­றான பதில் வரும் என்­ப­தற்­காக காத்­தி­ருக்­கின்றோம்.

 தற்­போது சுதந்­திரக் கட்சி தலை­மை­யி­லான அர­சாங்­கத்­துக்கும் நாங்கள் ஆத­ரவு வழங்க முடி­யாது. ஆனால் இரண்டு பேய்­களில் எது நல்ல பேய் என்­ப­தனை கண்டு அதில் ஒரு பேய் ஆட்­சி­ய­மைக்க உத­வு­கின்றோம். ஆனால் பல நிபந்­த­னைகள் உள்­ளன. குறிப்­பாக நாட்டின் வளங்­களை வெ ளிநா­டு­க­ளுக்கு விற்க முடி­யாது. இது­போன்ற நாட்டின் நலன்களை கருத்திற்கொண்டே சதந்திரக் கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளோம். ஆனால் பதவிகளை பெறாமல் வெ ளியில் இருந்து ஆதரவு வழங்கவே தீர்மானித்துள்ளோம் என்றார்.  

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-02-19#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.