"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 79A [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 79 A / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை அத்தியாயம் 13: இது மகிந்த தேரர் இலங்கைக்கு பறந்து சென்ற மாயாஜால நிகழ்வைப் பற்றியது. இது இலங்கையில் நடந்த எந்த நம்பகமான வரலாற்று நிகழ்வுகளைப் பற்றியதும் அல்ல. இதில் மகிந்த, அசோக மன்னரின் மகன் என்று கூறப்படுகிறது. எனவே அவர் ஒரு மனிதர். எனவே, ஈர்ப்பு விசையை மீறி பறக்கும் திறன் பெற்றிருக்க முடியாது. மகிந்த இலங்கைக்கு பறந்து வந்தது ஒரு புராண கதையாக மட்டுமே இருக்கலாம்? எந்த இந்திய ஆதாரங்களிலும் மகிந்த என்ற, அசோகனின் மகன் பற்றி ஒரு குறிப்பும் இல்லை. அது மட்டும் அல்ல, இவர் பிறந்து வளர்ந்ததாக கூறப்படும் இந்தியாவில், மகிந்த மட்டும் அல்ல, அவரது சகோதரி சங்கமித்தா, அவரது மகன் சுமனா, அவர்களின் தாய் தேவி மற்றும் மூன்றாம் புத்த சபை [Mahinda, his alleged sister Sanghamitta, her son Sumana, their mother Devi, and the Third Buddhist Council] ஆகியவை பற்றி எந்த வரலாற்று அல்லது இலக்கிய ஆவணங்களும் இல்லை. மேலும் அவர்கள் அனைவரும் துறவி எழுத்தாளர்களால் தங்கள் செயல் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக கண்டு பிடிக்கப்பட்ட கற்பனையான கதாபாத்திரங்கள் என்றே தோன்றுகிறது. சங்கமித்தா என்ற பெயருக்கு 'சங்காவின் நண்பர்' என்று பொருள். ஆனால், சங்கமித்தா பிறந்தபோது அசோகர் ஒரு பௌத்தர் அல்ல, அவர் ஒரு இந்து. எனவே அவர் தனது மகளுக்கு அப்படி பெயரிட்டிருக்க முடியாது? மேலும், சங்கமித்தா என்பது பெண்களுக்கான பிரத்யேகப் பெயரும் அல்ல. இது ஒரு பட்டப் பெயர் என்பதுடன், அதே பெயரைக் கொண்ட ஆண் தேரர் ஒருவர் தொலைதூரக் கரையிலிருந்து வந்தார் என மகாவம்சமே கூறுவதைக் காண்க. அத்தியாயம் 37 - 1 முதல் 5 வரை பார்க்கவும். ஜேததீசனுடைய [Jetthatissa] மரணத்துக்குப் பின்னர் அவனுடைய தம்பி மகாசேனன் [MAHÁSENA1] இருபத்தேழு வருட காலம் அரசனுக இருந்தான். அவனை அரசனாகப் பட்டாபிஷேகம் செய்வதற்கு மறு கரையிலிருந்து ச்ங்கமித்திர தேரர் இங்கு வந்தார். பட்டாபிஷேகமும் மற்றும் வேறு பலவிதமான சடங்குகளையும் செய்து முடித்ததும் மகா விஹாரையை அழிக்க விரும்பிய கட்டுப்பாடில்லாத அந்தப் பிக்கு, இவ்வாறு கூறி அரசனைத் தம் வசப்படுத்திக் கொண்டார். "மகா விஹாரையில் வசிப்பவர்கள் உண்மையான வினயத்தைப் போதிப்பது இல்லை. நாங்கள் தான் உண்மையான வினயத்தைப் போதிப்பவர்கள்." இதன்பேரில் அரசன் 'மகா விஹாரையில் வசிக்கும் பிக்குகளுக்கு யார் உணவு அளித்தாலும், அவர்களுக்கு நூறு பணம் அபராதம் விதிக்கப் படும்’ என்று கட்டளை பிறப்பித்தான் என்று கூறுகிறது. மகிந்த இலங்கையை புத்த மதத்திற்கு மாற்றுவார் என்று புத்தர் முன்னறிவித்ததாகக் கூறப்படுகிறது. 13 - 15 முதல் 16 வரை பார்க்கவும். அத்தியாயம் XIII / மகிந்தவின் வருகை: 15. இந்திரன், மிகச் சிறந்தவரான மகிந்த தேரரிடம் வந்து இலங்கையை மாற்றப் புறப்படுங்கள். சம்புத்தராலும் இது ஏற்கனவே உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கும். 16. "அங்கு உங்களுக்கு உதவுபவர்கள் நாங்களாக இருப்போம் ' என்றான். புத்தர் ஒரு மனிதராக இருந்ததால், இந்த முன்னறிவிப்பு ஒரு அப்பட்டமான பொய், மேலும் அவருக்கு எந்த முன்னறிவிப்பு திறனும் இருந்திருக்க முடியாது. இன்னும் ஒன்றையும் கவனியுங்கள். புத்தர், தானே, இலங்கைக்கு மூன்று தடவை பறந்து போய், அங்கு கோடிக்கணக்கானோருக்கு போதித்தது என்னவாச்சு? ஏன் அவர் தான் பிறந்து வளர்ந்து இறந்த இடத்தில் புத்த மதத்தை நிலைநிறுத்த, இப்படியான மாயயால வித்தைகள் செய்யவில்லை? அது மட்டும் அல்ல, முன்பும் புத்தர் தனது மரணப் படுக்கையில் விஜயன் இலங்கைக்கு வருவது குறித்து தீர்க்கதரிசனம் கூறினார். அத்தியாயம் 7 – 3 முதல் 4 வரை பார்க்கவும். அத்தியாயம் 07 விஜயனின் பட்டாபிஷேகம்: "சிம்மபாகுவின் மகன் விஜயன் லால நாட்டிலிருந்து எழுநூறு பேர்களுடன் இலங்கைக்கு வந்திருக்கிறான். தேவர்கள் தலைவனே! இலங்கையில் என்னுடைய மதம் நிலை நிறுத்தப்படுவதற்காக அவனையும் அவனைச் சேர்ந்தவர்களையும் இலங்கையையும் கவனமாகப் பாதுகாத்து வருவாயாக." என்கிறார். ததாகதர் கூறிய இவ் வார்த்தைகளைக் கேட்ட தேவராஜன், அவரிடம் கொண்ட மரியாதை காரணமாக இலங்கையைப் பாதுகாக்கும் பொறுப்பை நீலோற்பலம் மலர் போன்ற மேனி வண்ணம் படைத்த தேவனிடம் ஒப்படைத் தான். [சக்கன் - இந்திரன். விஷ்ணு-நீல வண்ணமுடையவன்.] சக்கனிடமிருந்து பொறுப்பை ஏற்றுக் கொண்டதும் அத்தேவன் விரைந்து இலங்கைக்கு வந்து நாடோடியான துறவிக் கோலத்தில் ஒரு மரத்தடியில் அமர்ந்தார். விஜயனுடன் வந்தவர்கள் யாவரும் அவரிடம் வந்து ஐயனே ! இது என்ன தீவு’ என்று கேட்டனர். "இலங்கைத் தீவு' என்று அவர் பதிலளித்தார். "இங்கு மனிதர் யாரும் கிடையாது. எனவே அபாயம் எதுவும் நேராது' என்றும் அவர் கூறினர். பின்பு தமது கமண்டலத்திலிருந்து நீரையெடுத்து அவர்கள் மீது தெளித்தார். பிறகு அவர்கள் கையில் நூலினுல் காப்புக் கயிறு" கட்டிவிட்டு காற்றிலே கலந்து மறைந்து விட்டார். அங்கே பெண் நாய் உருவில் ஒரு யட்சினி [ யட்சி yakkhini] தோன்றினாள். அவள் குவண்ண [Kuvanna] என்பவளுடைய பரிவாரத்தைச் சேர்ந்தவள். விஜயனைச் சேர்ந்தவர்களில் ஒருவன் இளவரசன் [விஜயன்] தடுத்ததையும் கேளாமல் அவள் பின் தொடர்ந்து சென்றான். அருகில் கிராமம் இருந்தால் தானே நாய் தென்படும்" என்று இளவரசன் அப்பொழுது எண்ணினான். ஒன்றைக் கவனியுங்கள். 'கிராமம் இருந்தால்தானே நாய் தென்படும்', என்ற வரியில், கிராமம் என்றால் என்ன வென்று ஒரு தரம் சிந்தியுங்கள். மனிதர்கள் கூட்டாக வாழும் பொழுதுதான் கிராமம் தோன்றுகிறது. அப்படி என்றால் அங்கு மனிதர்கள் உண்டு என்பதாகிறது. ஆனால், "இங்கு மனிதர் யாரும் கிடையாது' என்று கூறியது எனோ? விஜயனின் நண்பன் சென்ற இடத்தில் நாயுருவில் இருந்த யகூஷிணியின் எஜமானி குவண்ண என்பவள் ஒரு மரத்தடியில் சந்தியாசினியைப் போல் நூல் நூற்றுக் கொண்டு அமர்ந்திருந்தாள். இதில் கட்டாயம் ஒரு உண்மை புலனாகிறது. அதாவது, இலங்கைக்கு புத்த மதம் வரும் முன்பே, மற்றும் சிங்களவர் என்ற ஒரு இனம் பரிணமிக்கும் முன்பே, இலங்கை, சங்க இலக்கியத்தில் கண்ட தென் இந்தியா மாதிரி, நாகரிகம் அடைந்த நாடாகவே காண்கிறோம். உதாரணமாக ஒருவனது அல்லது ஒருவளது உடலை மறைக்கும் உடை ஒன்று இல்லாமல் எவராலும் இன்று ஒரு நாகரிக மனிதனை சிந்திக்க முடியாது. 2500 ஆண்டுகளுக்கு முன்பு விஜயன் நாடு கடத்தப் பட்டு இலங்கைக்கு வந்து இறங்கும் பொழுது, அவன் முதல் குவேனி நூல் நூற்பதை காண்கிறான். பட்டினப் பாலையின் "துணைப் புணர்ந்த மடமங்கையர், பட்டு நீக்கித் துகில் உடுத்து,... " என்ற வரியில் நாம் காணும் நாகரிக மங்கை போல் குவேனியும் தன் அழகிய உடலுக்கு அணிந்து கொள்ள, உடை ஒன்றை பின்னுவதற்க்காக, நூற்பதை காட்டுகிறது. இது அன்று ஒரு முன்னேறிய நாகரிகம் இலங்கையில் இருந்தது என்பதை கட்டாயம் காட்டுகிறது என்றே நம்புகிறேன். குவேனி என்ற சொல், கவினி என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு என்றும், கவினி என்றால் "பேரழகு படைத்தவள்" என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இராமாயண காப்பியத்தில் இலங்கையை ஆண்ட ராவணன் ராட்சதன் என்று கூறப்பட்டது போல, குவேனியையும் ராட்சத குலம் என்று வர்ணிக்கிறது, "மகாவம்சம்" என்பது கவனிக்கத் தக்கது. Part: 79 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Chapter 13: This is about the magical event of Mahinda Thera flying to Lanka and not about any reliable historical events that took place in Lanka. Mahinda is alleged to be the son of the King Asoka. He is therefore a human and could not have had the gravity defying capability of flying. Mahinda came flying to Lanka is a hoax, as described above. There is no mention of Mahinda in any of the Indian sources. Mahinda, his alleged sister Samghamitta, her son Sumana, their mother Devi, and the Third Buddhist Council have no synchronism with any historical or literature documents in India, and they all are fictitious characters invented by the monkish authors to meet their nefarious agenda. The name Samghamitta means ‘friend of Sanga’. Asoka was not a Buddhist when Samghamitta was born, and therefore he would not have named his daughter thus. Furthermore, Samghamitta is not an exclusive name for females, for a Thera with the same name came from the further coast, 37 - 2. It is alleged that the Buddha foretold that Mahinda would convert Lanka to the faith, 13 - 15 to 16. This foretelling is an abject lie as the Buddha was a human, and he could not have had any foretelling capability. The Buddha also prophesied at his deathbed about the arrival of Vijaya to Lanka, 7 – 3 to 4. Lord Buddha was a very good person, but it does not mean that he had the divine power of foretelling mental faculty. Mahinda, however, as per the narrative flew to Lanka and landed on the Missaka mountain. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 79 B தொடரும் / Will follow துளி/DROP: 1967 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 79A] https://www.facebook.com/groups/978753388866632/posts/33091560820492472/?
By
kandiah Thillaivinayagalingam · 15 minutes ago 15 min
Archived
This topic is now archived and is closed to further replies.