Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிற்போக்கான சிந்தனை!!

Featured Replies

பிற்போக்கான சிந்தனை!!

 

 

வடமா­காண மட்ட கால்­பந்­தாட்­டத் தொட­ரில், யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இரவு நடை­பெ­ற­வி­ருந்த 20வயது பெண்­கள் பிரிவு இறு­தி­யாட்­டத்­தில் பண்­டத்­த­ரிப்பு பெண்­கள் உயர்­த­ரப் பாட­சாலை அணி சமுகம் தந்­தி­ருக்­க­வில்லை. மாகா­ண­மட்டத் தொட­ரொன்­றின் இறு­தி­யாட்­டத்தைத் தவ­ற­வி­டும் அள­வுக்கு, அதன் கன­தித் தன்­மையை உண­ராத அள­வுக்கு அந்­தப் பாட­சா­லை­யின் நிர்­வா­கம் அமைந்­துள்­ளமை காலக்­கொ­டு­மையே தவிர வேறொன்­று­மில்லை.

பண்­டத்­த­ரிப்பு பெண்­கள் பாட­சாலை அணி இறு­தி­யாட்­டத்­தில் கள­மி­றங்­கா­தமை அதிர்­வ­லை­க­ளைத் தோற்­று­வித்­துள்­ளது. விட­யம் பர­ப­ரப்­பா­கி­யுள்­ளது. மாண­வி­க­ளின் கல்­வி­மட்­டம் வீழ்ச்­சி­யைப் பதி­வு­செய்­துள்­ளதை அடுத்­தும், கால்­பந்­தாட்­டம் பெண்­க­ளுக்கு உரிய விளை­யாட்டு அல்ல என்ற ஆணா­திக்க சிந்­த­னை­யின் அடிப்­ப­டை­யி­லுமே குறித்த அணிக்கு பாட­சாலை நிர்­வா­கத்­தால் தடை விதிக்­கப்­பட் டுள்­ளது என்­ற­வா­றாக அறி­ய­மு­டி­கி­றது.

பண்­டத்­த­ரிப்பு பெண்­கள் உயர்­த­ரப் பாட­சா­லை­யின் கால்­பந்­தாட்ட அணி தேசி­யத்­தில் சிறந்த பெறு­பே­று­களை வைத்­துள்­ளது. யாழ்ப்­பா­ணம் விளை­யாட்­டுச் சங்­கம் நடத்­திய இந்­தத் தொட­ரி­லும், அந்த அணி லீக் ஆட்­டங்­கள், காலி­றுதி, அரை­யி­றுதி என்று அபார திற­மையை வெளிப்­ப­டுத்­தியே இறு­திக்­குத் தகு­தி­பெற்­றது.

இவ்­வா­றான படி­நி­லை­க­ளைக் கடந்­து­வ­ரும் வரை­யில் கால்­பந்­தாட்­டம் பெண்­க­ளுக்கு உரிய விளை­ யாட்­டுத்­தான் என்ற முடி­வில் இருந்த அதி­கார வர்க்­கங் களுக்கு, இறு­தி­யாட்­டத்­துக்கு முன்­ன­தாக அது பெண்­க­ளுக்கு உரித்­தான விளை­யாட்­டாக அல்­லா­மல் போனது ஏன். நிர்­வா­கத்­தின் இந்த முடிவு, ‘நாங்­கள்­தான் மாகா­ணச் சம்­பி­யன்­கள்’ என்ற நிலைப்­பாட்­டில் இருந்த வீராங்­க­னை­க­ளுக்கு எவ்­வா­றான மன­ அழுத்­தத்­தைக் கொடுத்­தி­ருக்­கும். இந்த மன­ அழுத்­தம், வீராங்­க­னை­க­ளின் கடின உழைப்பு, ஒறுத்­தல், அர்ப் பணிப்பு ஆகி­ய­வற்­றுக்கு பொறுப்­பேற்­கப் போவது யார்?.

 

ஆண்­க­ளுக்கு நிக­ராக பெண்­கள் சாதித்­துக் கொண்­டி­ருக்­கும் கால­மிது. அதி­லும் வட­மா­காண விளை­யாட்­டுத் துறை­யைப் பொறுத்த வரை­யில், வீரர்­க­ளுக்கு மேலாக வீராங்­க­னை­கள் சாதித்­துக் கொண்­டி­ருக்­கின்­ற­னர் என்­றும்­கூடச் சொல்­லிக் கொள்­ள­லாம். குறிப்­பாக கோலூன்­றிப் பாய்­தல், பளு­தூக்­கல், கால்­பந்­தாட்­டம் உள்­ளிட்ட வெளி­யக விளை­யாட்­டுக் களில் வீராங்­க­னை­கள் கடல்­க­டந்து ஜொலித்­துக் கொண்­டி­ருக்­கின்­ற­னர்.

தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூ­ரி­யின் முன்­னாள் மாண­வி­யான ஜெக­தீஸ்­வ­ரன் அனித்தா கோலூன்­றிப் பாய்­த­லில் தேசி­யச் சாத­னை­யா­ளராக உள்­ளார். அவ­ரால் வடக்­குக்குக் கிடைத்த பதக்­கங்­கள் ஒன்­றல்ல, இரண்­டல்ல, விரல் விட்டு எண்­ண­மு­டி­யா­தவை. சுண்­டுக்­குழி மக­ளிர் கல்­லூரி மாணவி விஜ­ய­பாஸ்­கர் ஆசிகா, பளு­தூக்­கல் தொட­ரில் மிகப்­பெ­ரும் வீராங்­க­னை­யாக உரு­வெ­டுத்து வரு­கி­றார். இலங்­கை­யில் மட்­டு­மல்­லாது ஆசிய ரீதி­யி­லான பதக்­கங்­க­ளை­யும் அவர் கைப்­பற்­றி­யுள்­ளார்.

பாசை­யூர் சென். அன்­ர­னிஸ் பெண்­கள் பாட­சா­லை­யின் வீராங்­க­னை­கள் ஒவ்­வொரு வரு­ட­மும் பளு­தூக்­க­லில் கணி­ச­மான அளவு பதக்­கங்­க­ளைப் பெற்று வரு­கின்­ற­னர். இவ்­வா­றாக பெரு விளை­யாட்­டுக் களி­லும் போசணை மட்­டம் அதி­கம் தேவைப்­ப­டும் விளை­யாட்­டுக்­க­ளி­லும் வீரர்­க­ளின் மூல­மாக அல்­லா­மல், வீராங் கனை­க­ள் மூல­மாக வடக்­குக்கு கிடைத்­துள்ள பதக்­கங்­களே மிக­வும் அதி­கம். இதுவே உண்மை. புள்ளி விவ­ரங்­க­ளும் இதனையே எடுத்­தி­யும்­பு­கின்­றன.

இத்­த­கைய பின்­ன­ணி­யில், கால்­பந்­தாட்­டத் தொட­ரின் இறு­தி­யாட்­டத்­தில் விளை­யா­டு­வ­தற்கு பண்­டத்­த­ரிப்பு பெண்­கள் உயர்­த­ரப் பாட­சாலை அணி அனு­ம­திக்­கப்­ப­டா­மையை என்­ன­வென்று சொல்­வது. ஆணா­திக்கச் சிந்­த­னை­கள் அறுத்­தெ­றி­யப்­பட வேண்­டிய கால­மிது. இவ்­வா­றி­ருக்க, கல்­விப் புலத்­தில் இவ்­வா­றான எதிர்­மறைச் சிந்­த­னை­கள், எண்­ண­வோட்­டங்­கள் வெளிப்­ப­டு­வ­தென்­பது நியா­ய­மற்­றது.

ஏற்­கத்­த­கா­த­தும்­ கூட. கல்­லூரி நிர்­வா­க­மும், அதற்கு மேல் உள்ள ஏனைய நிர்­வாக அல­கு­க­ளும் இந்த விட­யத்­தில் கூடு­தல் கரி­சனை காட்ட வேண்­டும். தமது முடிவை மறு­ப­ரி­சீ­ல­னைக்கு உட்­ப­டுத்த வேண்­டும்.

‘ஏட்­டை­யும் பெண்­கள் தொடு­வது தீதென்று எண்­ணி­யி­ருந்­த­வர் மாண்­டு­விட்­டார், வீட்­டுக்­குள்ளே பெண்­ணைப் பூட்­டி­வைப்­போம் என்ற விந்தை மனி­தர் தலை­கு­னிந்­தார்’ என்று பாடி­விட்­டுச் சென்­றுள்ள பாரதி படு­தோல்­வி­ய­டைந்­து­விட்­டான் என்­பது மட்­டும் உறுதி.

http://newuthayan.com/story/70328.html

வட மாகாணத்தில் மகாஜனா சம்பியன்

  • தொடங்கியவர்
  • பாடசாலை நிர்வாகத்தால் வீராங்கனைகளின் பெற்றோருக்கு பதில் வழங்கப்படவில்லை
 
football-world-rankings-germany-end-2014

பாடசாலை நிர்வாகத்தால் வீராங்கனைகளின் பெற்றோருக்கு பதில் வழங்கப்படவில்லை

இறுதியாட்டத்துக்கு அனுமதி மறுத்த விவகாரம்

 

 

பண்டத்­த­ரிப்பு பெண்­கள் உயர்­த­ரப் பாட­சாலை பெண்­கள் அணியை வட­மா­காண ரீதி­யி­லான கால்­பந்­தாட்­டத் தொட­ரின் இறு­தி­யாட்­டத்­தில் கள­மி­றங்­காமை தொடர்­பாக நேற்­றைய தினத்­துக்­குள் பதில் வழங்க வேண்­டும் என்று வீராங்­க­னை­ க­ளின் பெற்­றோர் அறி­வு­றுத்­தி­யி­ருந்த நிலை­யில், எந்­தப் பதி­லும் நேற்று மாலை வரை அவர்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வில்லை.

இதை­ய­டுத்து நாளை­ம­று­தி­னம் பாட­சாலை நிர்­வா­கத்தை மீண்­டும் சந்­திக்­கத் திட்­ட­மிட்­டுள்­ள­தாக வீராங்­க­னை­ க­ளின் பெற்­றோர் உத­ய­னுக்­குத் தெரி­வித்­த­னர்.
யாழ்ப்­பாண மாவட்ட பாட­சா­லை­கள் கால்­பந்­தாட்­டச் சங்­கம் நடத்­திய மாகாண மட்ட கால்­பந்­தாட்­டத் தொட­ரின் இறு­தி­யாட்­டத்­தில் பண்­டத்­த­ரிப்பு பெண்­கள் உயர்­தரப் பாட­சாலை அணியை எதிர்த்து தெல்­லிப்­பளை மகா­ஜ­னக் கல்­லூரி அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் மோத­வி­ருந்­தது.

ஆனால் இறு­தி­யாட்­டத்­தில் பண்­டத்­த­ரிப்பு பெண்­கள் உயர்­த­ரப் பாட­சா­லை­யின் அணி பங்கு பற்­று­வ­தற்கு பாட­சாலை நிர்­வா­கம் தடை விதித்­தது. இது தொடர்­பில் பாட­சாலை நிர்­வா­கத்­தி­டம் பெற் றோர் கேள்வி எழுப்­பிய போது தடை விதிக்­கப்­பட்­ட­மைக்­கான கார­ணம் எது­வும் அறி­விக்­கப்­ப­டா­மல் வெள்­ளிக்­கி­ழமை (நேற்று) தங்­க­ளுக்­கான சாத­க­மான முடிவு அறி­விக்­கப்­ப­டும் என­வும் தெரி­வித்­த­தாக பெற்­றோர் உத­ய­னுக்­குத் தெரி­வித்­தி­ருந்­த­னர்.

ஆனால் நேற்று வரைக்­கும் எந்த முடி­வும் பெற்­றோ­ருக்கு வழங்­கப்­ப­ட­வில்லை. இதை­ய­டுத்து நிர்­வா­கத் தி­டம் திங்­கட்­கி­ழமை விளக்­கம் கோர­ வுள்­ள­தாக பெற்­றோர் உத­ய­னுக்­குத் தெரி­வித்­த­னர்.

 

தமக்கு திங்­கட்கி­ழமை சாத­க­மான பதில் தரா­த­வி­டுத்து வட­மா­காண கல்வி பண்­பாட்டு அலு­வல்­கள் விளை­யாட்­டுத்துறை இளை­ ஞர் விவ­கார அமைச்­சர் க.சர்­வேஸ்­வ­ர­னி­டம் முறை­யி­ட­வுள்­ள­தா­க­வும் அவர்­கள் தெரி­வித்­த­னர். இந்த விவ­ கா­ரத்­தில் விரை­வில் விசா­ரணை நடத்­தப்­ப­டும் என்று அமைச்­சர் சர்­வேஸ்வ­ரன் உத­ய­னுக்­குத் தெரி­வித் தமை குறிப்­பி­டத்தக்­கது.

http://newuthayan.com/story/71228.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.