Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

'தமிழ் தொன்மையானது' என மோடி கூறியது உண்மையே: வடமாநில பேராசிரியர்களுக்கு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆதாரத்துடன் விளக்கம்

1jpg

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை வட இந்தியப் பல்கலைகழகப் பேராசிரியர்கள் ஏற்க மறுத்தனர். இவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் சு.ராசவேலு ஆதாரங்களுடன் பதில் அளித்துள்ளார்.

சமீபத்தில் மாணவர்களிடம் பேசிய பிரதமர் மோடி, சமஸ்கிருதத்தை விட தமிழ் தொன்மையான மொழி எனக் கருத்து கூறி இருந்தார். இந்நிலையில், தாய்மொழி தினத்தை முன்னிட்டு 'தி இந்து' சார்பில் வட இந்தியாவின் மத்திய பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் சிலரிடம் கருத்து கேட்டு வெளியிடப்பட்டிருந்தது. அதில் அவர்கள், 'பிரதமர் கூறுவதை ஏற்க முடியாது எனவும், அது அரசியல் ஆதாயத்திற்காக கூறப்பட்டிருக்கலாம்' என்றும் தெரிவித்திருந்தனர்.

இவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து 'தி இந்து'விடம் தொல்லியல் துறை பேராசிரியர் சு.ராசவேலு அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது:

'மொழி என்பது பல்லாயிரம் காலம் மக்களால் பேசப்பட்டு வந்தாலும், அதற்கான சான்றுகள் கிடைத்தால் தான் அதன் காலத்தை அறிய முடியும். வட இந்தியாவில் கிடைத்த முதன்மையான கல்வெட்டுகளான அசோகன் கல்வெட்டுகளின் மொழி சமஸ்கிருதம் அல்ல. அவை மகதப் பகுதியில் வழக்கிலிருந்த 'பாகதம்' என்று சொல்லக்கூடிய 'பிராகிருத மொழி' ஆகும். இதை மகதப்பகுதி மொழி வழக்கு என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவர்.

வேதங்கள் என்பது ஒரு குறிப்பிட்ட மக்களின் குடும்ப மொழியால் பாடல்களாகப் பாடப்பட்டவை. காலத்திற்கு ஏற்ப அவை திருத்தம் பெற்றவை. எனவே வேதங்கள் சமஸ்கிருதத்தில் பாடப்பெற்றவை என்பது சான்றுகள் அற்ற வாதங்கள். இந்தியாவில் முதன்முதலாக சமஸ்கிருத வழக்கின் கல்வெட்டு கி.மு 1-ம் நூற்றாண்டில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஹத்திபாடாவில் கிடைத்தது. அதே காலத்தின் மற்றொரு சமஸ்கிருத கல்வெட்டு குஜராத்தின் ஜுனாகரில் கிடைத்தது. அதில், அசோகர் காலத்தில் இருந்த நீர் அணையை அவருக்குப் பின் வந்த ருத்ரதாமன் என்பவர் புதுப்பித்த செய்தி சொல்லப்பட்டுள்ளது. இந்த ஜுனாகரில் இந்த நீர் அணை அசோகர் காலத்தில் கட்டப்பட்டதாக பிராகிருத மொழிக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதில் இருந்து அசோகர் காலத்து பிராகிருதம் அடுத்த 200 ஆண்டுகளில் ருத்ரதாமன் காலத்தில் சமஸ்கிருத மொழியில் எழுதத் தொடங்கி இருப்பதை உணரலாம்.

கி.மு.500-க்கு முற்பட்ட தமிழி

தமிழகத்தில் கிடைத்த பானை ஓடுகளிலும், இறந்தவர்களுக்காக எடுக்கப்பட்ட நடுகற்களிலும் எழுதப்பட்டவை, 'தமிழி' எனப்படும் 'தமிழ்-பிராமி' எழுத்துகள் ஆகும். கொடுமணல் மற்றும் பொருந்தல் அகழாய்வுகளில் கிடைத்த தமிழி எழுத்துகள் கி.மு. 500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என அறிவியல் காலக் கணிப்பு முறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது அசோகனுடைய காலத்திற்கும் 200 ஆண்டுகள் முற்பட்டது.

600 மட்கலன்களில் தமிழ் பிராமி

தமிழகத்தில் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் ஊர்களில் அகழாய்வு செய்யப்பட்டதில் அங்கு வாழ்ந்த மக்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதை அவர்கள் பயன்படுத்திய மட்கலன்களில் தங்களின் பெயரை எழுதியுள்ளன. அண்மையில் நடைபெற்ற கீழடி அகழாய்விலும் கொற்கை கொடுமணல், அரிக்கமேடு, காஞ்சிபுரம், உறையூர். கருவூர் போன்ற ஊர்களில் மட்கலன்களில் தமிழ் பிராமியில் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளன. கொடுமணல் அகழாய்வில் மட்டுமே 600 மட்கலன்களில் தமிழ் பிராமி எழுத்துகளில் எழுதப்பட்ட தமிழ்ப் பெயர்கள் உள்ளன.

 

2jpg

கொடுமணல் அகழாய்வில் மக்கள் பயன்படுத்திய மட்கலத்தில் எழுத்துப் பொறிப்பு

 

மட்கலப் பொறிப்புகளில் சமஸ்கிருதம் இல்லை

வட இந்தியாவில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட இடங்களில் இதுவரை அகழாய்வுகள் நடந்துள்ளன. குறிப்பாக மகாபாரதம், ராமாயணத்தில் குறிப்பிடப்படும் குருஷேத்திரம், ஹஸ்தினாபுரம், அயோத்தி போன்ற இடங்களிலும் நடந்தன. பிரயாகை, கௌசாம்பி, உஜ்ஜயினி போன்ற வரலாற்றுப் புகழ் பெற்ற இடங்களிலும் புத்த, சமணத் தொடர்புடைய இடங்களிலும் அகழாய்வுகள் செய்யப்பட்டன. இந்த அகழாய்வுகளில் எதிலும் வட இந்திய பிராமியில் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட மட்கலப் பொறிப்புகள் இதுவரை கிடைக்கவில்லை.

தமிழில் உருவான சமஸ்கிருதம்

மக்கள் வழக்கில் இல்லாத மொழி எவ்வாறு பழமை வாய்ந்ததாக இருக்க முடியும். அசோகனுக்குப் பின் பிராகிருத மொழி இலக்கிய மொழியாக மாற்றப்படும் பொழுது பிற மொழிகளிலிருந்து குறிப்பாக தமிழ் மொழியின் பல சொற்களைப் பெற்று சமஸ்கிருதம் உருவாக்கப்படுகிறது. கி.பி. 300-ம் ஆண்டுகளில் சமஸ்கிருதம் குப்தர்களால் வளர்ச்சி பெறுகிறது. சமஸ்கிருதத்தின் தொடக்க நிலையே கி.மு. 1-ம் நூற்றாண்டில் குப்தர்கள் காலத்தில்தான் அது வளர்ச்சி அடைந்து அரசு மொழியாக மாற்றப்படுகிறது. சமஸ்கிருதம் என்றாலே 'செய்யப்பட்ட மொழி' என்று பொருள்.

தலையான மொழி தமிழ் - ஐரோப்பிய அறிஞர்கள்

தமிழ் உலக மொழிகளுக்கு எல்லாம் தலையான மொழி என்பதை பல ஐரோப்பிய அறிஞர்களே சுட்டிக்காட்டி உள்ளனர். எனவே பிரதமருக்கு மொழியில் அரசியல் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. அரசியல் செய்வதற்கு எத்தனையோ வழிகள் அரசாங்கத்தில் உள்ளது. அவர் உண்மையைக் கூறி இருப்பது வட இந்தியப் பேராசிரியர்களுக்கு உறுத்தியுள்ளது. உறுதியான அகழாய்வு கல்வெட்டுச் சான்றுகள், இலக்கியச் சான்றுகள் தமிழின் தொன்மையை பறைசாற்றுகின்றன. உலக அளவில் இலக்கிய வளமும் மொழி வளமும் எழுத்து வளமும் பெற்ற தொன்மை மொழி தமிழ் மட்டுமே. எனவே தான், மத்திய அரசு தமிழை செம்மொழி என முதன்முதலில் அறிவித்தது. அதன் பிறகே சமஸ்கிருதமும் பிற இந்திய மொழிகளும் அத்தகுதியை அரசியல் அழுத்தத்தின் காரணமாக குறைந்த கால அளவை கணக்கில் கொண்டு செம்மொழிப் பட்டியலில் இடம்பெற்றன.'

இவ்வாறு பேராசிரியர் ராசவேலு தெரிவித்துள்ளார்.

 

தி இந்து

 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மழையும் குறைய சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடங்கள் அகற்றம் நடவடிக்கையும் ஓய்ந்து விடும் - அடுத்த மாரிகாலம் வரும் வரை 
    • எதுவாக இருந்தாலும் உண்மை வெளிவரட்டும். தமிழ் தலைவர்கள் அநேகமாக அனைவர் மீதும் போடப்பட்ட இந்த கறுத்த சாக்கில் இருந்து தமிழர்கள் மீள் வேண்டும். இல்லையெனில் அனைத்து பிரதிநிதிகளையும் சிங்கத்துக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டு இறுதியில் உண்மை தெரியவர கச்சையும் இன்றி புலம்பவேண்டியது தான்.
    • அரசுடமையாக்கி தரமான சரக்கை தயாரித்து நியாய விலைக்கு விற்கவேண்டும்.
    • உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் : சாட்சியங்களை ஆராயுமாறு கூறுகின்றார் ஸ்ரீநேசன் எம்.பி December 6, 2024   உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்  தொடர்பில்  ஆசாத்  மௌலானா  என்பவர் தெரிவித்த சாட்சியங்கள்  ஆராயப்படுமானால்   உண்மைக் குற்றவாளிகளை,சூத்திரதாரிகளை  கண்டுகொள்ள  முடியும் எனத் தெரிவித்த  இலங்கைத் தமிழரசுக் கட்சியின்  மட்டக்களப்பு  மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர்  ஸ்ரீநேசன்,  மயிலந்தனை, மாதவனையில்  அத்துமீறிய  குடியேற்றங்கள்  தொடர்பில்  நீதிமன்றம்  3 தடவைகள் அளித்த தீர்ப்புகள் அமுல்படுத்தப்படாத நிலையில் இந்த ஆட்சியில் அங்கு சட்டவாட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில்   வியாழக்கிழமை (05)  இடம்பெற்ற கணக்கு வாக்குப்பதிவு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் உரையாற்றுகையில், ஜனாதிபதி தனது கொள்கைப் பிரகடன  உரையில்  சட்டவாட்சியை  பலப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். ஆகவே சட்டவாட்சி இங்கு பலவீனமாக இருக்கிறது என்பதனை  அவர் உணர்ந்துள்ளார்.  சட்டவாட்சி  பலவீனமாக  இருந்த  காரணத்தினால்  பல குற்றச்செயல்கள்  நடந்துள்ளன உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் கூட சட்டவாட்சியின் பலவீனத்தினால்தான் நடந்தது. கடந்த காலத்தை எடுத்துக்கொண்டால் அதாவது மஹிந்த ராஜபக்ச ஆட்சி செய்த 2005 க்கும் 2015 க்கும் இடைப்பட்ட காலத்தை எடுத்துக்கொண்டால் அக்காலத்திற்குள் நடந்த படுகொலைகளைப்பற்றி சொல்லுவதாக இருந்தால் ஒருநாள் போதாது. 40 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள். தமிழ் தேசியக்கூட்டமைப்பை அழிப்பதற்காக ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைசெய்யப்பட்டார் ரவிராஜ், சந்திரநேரு சிவநேசன் போன்ற எமது எம்.பி.க்கள் படுகொலைசெய்யப்பட்டனர். கிழக்குப்பல்கலைக்கழக உபவேந்தரான் ரவீந்திரநாத்  படுகொலைசெய்யப்பட்டார் சிவராம் நடேசன்  ஏக்னலிகொட, லசந்த  என்ற   ஊடகவியலார்கள் படுகொலை செய்யப்பட்டனர் . ஆனால் இவற்றுடன் தொடர்புபட்ட குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. தண்டனைவழங்கப்படவில்லை. இதனால் நாட்டில் ஜனநாயகம் இருக்கின்றதா என்ற கேள்வி காணப்பட்டது. பணநாயகமே நாட்டை ஆட்சி செய்த்து. வீதிகள் எல்லாம் பிணங்கள் குவிந்து காணப்பட்டன. எனவே   பாரிய குற்றங்களை இழைத்து விட்டு கௌரவர்களாக ,தண்டிக்கப்படாதவர்களாக உலாவிவந்த அந்தக் குற்றவாளிகள் இந்த ஆட்சியில் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும். அவர்களுக்கு முறையான தண்டனைகள் வழங்கப்படுவதன் மூலம் சட்டவாட்சியையோ பலப்படுத்த வேண்டும் .இவ்வாறு குற்றங்கள் புரிந்தவர்கள் ஒரு காலத்தில் இந்த பாராளுமன்றத்தைக்கூட அலங்கரித்திருந்தனர். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பாக ஆசாத் மௌலானா என்பவர் மிகவும் விபரமாக பல சாட்சியங்களை கூறியுள்ளார். அந்த சாட்சியங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அது சரியாக ஆராயப்படுமாக இருந்தால் குண்டுத்தாக்குதலுக்குரிய சூத்திரதாரிகள்  யார் என்பதனை கண்டுகொள்ள  முடியும். மயிலத்தமனை ,மாதவனை போன்ற  பிரதேசங்களில் அத்துமீறிய குடியேற்றங்கள் காணப்படுகின்றன ,மாவட்டம் கடந்து அவர்கள் குடியேறியுள்ளனர். அத்துமீறிகுடியேறிய  அந்தக் குடியேறிகளை , காணிகளை  ஆக்கிரமித்தவர்களை வெளியேற்றுமாறு    நீதிமன்றம்  3 தடவைகள்  தீர்ப்பளித்துள்ளது ,ஆனால் கடந்த ஆட்சியாளர்கள் அந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த ஆட்சியில் சட்டவாட்சி அங்கு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றார்.   https://www.ilakku.org/உயிர்த்த-ஞாயிறு-தாக்குத-33/
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.