Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதால் அவிழ்க்க வேண்டிய முடிச்சுக்கள்

Featured Replies

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதால் அவிழ்க்க வேண்டிய முடிச்சுக்கள்

 

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அங்கத்துவ நாடொன்று விலகுவதற்கான சட்ட அரசியல் ஏற்பாடுகள் ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தில் பிரிவு 50 இல் கூறப்பட்டுள்ளது. அங்கத்துவ நாடொன்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான உரிமை உள்ளது. பிரிவு 50 இன் ஏற்பாடுகளுக்கமையவும் அந்த நாட்டின் அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கு அமையவும் விரும்பினால் விலகமுடியும். என பிரிவு 50 கூறுகிறது. விலக தீர்மானித்த திகதியிலிருந்து இரண்டு வருட காலத்திற்குள் விலகல் தொடர்பான சட்ட அரசியல் தொடர் நடவடிக்கைகளை பூர்த்தி செய்தலும் விலகியதன் பின்னர் உடனடிக்காலமான் இடைமாறு காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளும் பிரிவு 50 இல் கூறப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் பிரிட்டன் 23.6.2016 ஆம் திகதிய சர்வசனவாக்கெடுப்பின் மூலம் விலகுவதற்கான ஆணையை மக்களிடமிருந்து பெற்றது. விலகுவதற்கான திகதியாக 29 பங்குனி 2017 ஏற்றுக் கொள்ளப்பட்டது. இரண்டு வருட காலம் அதாவது 29 பங்குனி 2019 விலகுவதற்கான தவணைக்காலம் ஆகும். தற்போதைய பிரிட்டன் பிரதமர் திரேசாமே முன்னர் டேவிட் கமரூன் பிரதமராக ஆட்சி செய்தபோது உள்நாட்டலுவல்கள் அமைச்சராக பதவி வகித்தார். பிரிட்டன் சர்வசனவாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகவேண்டும் என்ற தீர்மானம் வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் டேவிட் கமரூன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். பழமை வாத கட்சியை சேர்ந்த டேவிட் கமரூன் ராஜினாமா செய்ததால் கட்சி உள்நாட்டலுவல்கள் அமைச்சரான திரேசா மேயை பிரதமராக்க தீர்மானம் மேற்கொண்டது. பிரதமர் திரேசா மே இன்னும் மூன்று வருடம் பிரதமராக தொடர்ந்திருக்கலாம். ஆனால் மே 2017 சித்திரை 17 இல் பாராளுமன்றத்தை கலைத்து பொது தேர்தல் நடத்தினார். 650 பாராளுமன்ற ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் மேயின் கட்சிக்கு 318 ஆசனங்கள் கிடைத்தன. அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பல சவால்கள் இவர்முன் உள்ளன. இவற்றில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் நடைமுறைகளை கையாள்தல். விலகியதன் பின்னர் பொருளாதாரத்திற்கு ஏற்படும் தளம்பல்களை செம்மைப்படுத்தல் பிரதானமான சவால்கள் எனக் கருதப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியம் உருவாவதற்கு முன்னர் ஐரோப்பிய சமுதாயங்கள் என்ற அமைப்பு இயங்கி வந்தன. இதுவே பின்னர் ஐரோப்பிய ஒன்றியம் எனப் பெயர் மாற்றம் பெற்றது. 1973 இல் பிரிட்டன் ஐரோப்பிய சமுதாயங்கள் அமைப்பில் இணைந்தது. பிரிட்டனில் 1975 இல நடைபெற்ற் சர்வஜனவாக்கெடுப்பில் 1973 இணைவு உறுதிப்படுத்தப்பட்டது. பிரிட்டனில் சட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. 1972 இல் ஐரோப்பிய சமுதாயங்கள் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இதற்கமையவே பிரிட்டன் ஐரோப்பிய சமுதாயங்கள் அமைப்பில் இணைந்தது. பிரதமர் திரேசா மே ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதை திறம்பட செயலாற்ற புதிய திணைக்களம் ஒன்றினை தாபித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் திணைக்களம் என பெயரிடப்பட்டு பொறுப்பான அமைச்சராக விலகலுக்கு தீவிரமாக குரல் கொடுத்த டேவிட் டேவிசை நியமித்துள்ளார். விலகுதல் தொடர்பான நடைமுறைப் பேச்சுவார்த்தைகளை அமைச்சரின் தலைமையில் ஐரோப்பிய ஒன்றிய அதிகார சபைகளுடன் ஆனி 2017 இல் ஆரம்பிக்கப்பட்டன. விலகுதல் தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் விலகியதன் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் தனிச்சந்தை அமைப்பில் நிரந்தர அங்கத்துவம் பிரிட்டன் கோரமாட்டாது எனவும் அறிவித்துள்ளார். அத்துடன் 1972 இல் ஐரோப்பிய சமூகங்கள் அமைப்பில் இணையும் போது உருவாக்கிய சட்டத்தை நீக்குவதற்கும் அதற்கு பதிலாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான சட்டத்தை உள்வாங்குமாறும் உத்தரவிட்டுள்ளார். பிரிட்டனுக்கு பாதகமான பொருளாதார தாக்கம் ஏற்படும் என பொருளாதார அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். பிரிட்டனின் தேசிய வருமானம் குறைவடையும் எனவும் பிரிட்டன் மக்களின் தலா வருமானம் வீழ்ச்சியடையும் எனவும் கூறியுள்ளனர். அத்துடன் ஐரோப்பிய நாடுகளிலிருந்து உயர்கல்விக்கும், ஆராய்ச்சிகட்கும் வருபவர்களின் எண்ணிக்கை குறைவடையலாம் எனவும் கூறியுள்ளனர். பிரிட்டன் உத்தியோகபூர்வமாக ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவ நாடாக இயங்கிய காலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கடப்பாடுகளுக்கு அமைய செலுத்தவேண்டிய கொடுப்பனவுகள் யாவற்றையும் விலகல் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் காலத்தில் கொடுப்பனவு செய்து தீர்க்கப்பட வேண்டும். இது விலகல் கட்டணம் அல்லது திருமண முறிவு கட்டணம் என ஊடகங்களில் பிரஸ்தாபிக்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியம் 28 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட அரசியல் பொருளாதார ஒருங்கிணைப்பு ஆகும். ஐரோப்பிய ஒன்றியம் சட்டங்கள் ஏற்படுத்தி ஐரோப்பிய உள்ளக தனி சந்தையை அமைத்துள்ளது அங்கத்துவ நாடுகள் இச்சட்டங்களுக்கு கட்டுப்பட்டவையாகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகளின் படி தனிசந்தையில் ஒரே நாட்டுக்குள் பொருட்கள், சேவைகள், நிதி எவ்வாறு அசைகின்றதோ அதே போல ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளும் ஒரே நாடு போல் அசைவுக்கான சுதந்திரம் உண்டு. உள்நாட்டு விவகாரங்களிலும், வர்த்தகத்திலும், விவசாயத்திலும், மீன்பிடித்துறையிலும் பிரதேச அபிவிருத்தியிலும் சட்டங்கள் உருவாக்குகின்றது. செங்கன் பிரதேசம் என்ற ஒரு முறையினால் கடவுச் சீட்டுக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. நாணய சபை உருவாக்கப்பட்டு 2002இல் இருந்து யூரோ பொதுவான நாணயமாக 19 ஐரோப்பிய நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. உலகிலுள்ள வேறு பொருளாதார கூட்டமைப்புக்களும் ஒப்பிடுகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த உற்பத்தி அதிகமானதாகும். ஐ.நா அபிவிருத்தி சுட்டிகளின் பிரகாரம் 27 நாடுகள் உயர்ந்த மானிட அபிவிருத்தியை கொண்டதாகும். 2012 இல் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு நோபல் பரிசு கிடைத்தது. ஐ.ஒன்றியத்தின் வெளிவிவகாரங்கள் பாதுகாப்பு ஆகியவற்றில் உலக மட்டத்தில் பிரதானமான அமைப்பாக திகழ்கிறது. தனி அங்கத்துவ நாடுகளைப் போல உலகம் முழுவதும் ஐரோப்பிய ஒன்றிய தூதரகங்கள் வைத்திருக்கின்றது. ஐ.நா சபை WTO G7, G20 ஆகியவற்றில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதித்துவம் உண்டு. ஐரோப்பிய ஒன்றியம் முன்னேறிவரும் அதிகார சக்தியாக வளர்ச்சி அடைந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் தீர்மான ங்கள் மேற்கொள்வதில் கலப்பு முறை ஒன்றை கையாள்கிறது. இக் கொள்கை அங்கத்துவ நாடுகளில் அமுல்படுத்தப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானம் அதிகாரம் 7 சபைகளுக்கு உண்டு.  

ஐரோப்பிய கவுன்சில் நாடுகளின் தலைவர்கள் பங்குபற்றும் உச்சி மகாநாடுகளில் பொதுவான அரசியல் தீர்மானங்கள் எடுக்கப்படும். ஐரோப்பிய ஆணைக்குழு - இது ஒரு நிர்வாகச் செயலகம் ஆகும். ஐரோப்பிய சபை - அமைச்சர்களைக் கொண்ட சபையாகும். சட்டங்கள் உருவாக்கப்படுவதற்கும் இச்சபையின் அங்கீகாரம் வேண்டும். 

ஐரோப்பிய பாராளுமன்றம் - 751 அங்கத்தவரகளைக் கொண்ட சபையாகும். இதற்கு சட்டங்களை ஆக்கும் அதிகாரம் உண்டு. ஐரோப்பிய நீதிமன்றம் - ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டத்தை சீராக அமுல்படுத்துவது இதன் கடமையாகும். அங்கத்துவ நாடுகள் மத்தியில் தகராறு ஏற்படும் போது நீதிமன்றம் தீர்த்துவைக்கும். 

ஐரோப்பிய மத்திய வங்கி - யூரோ நாணய ஸ்திரத்திற்கு பொறுப்பானது. ஐரோப்பிய கணக்காய்வு மன்றம் - நிதி தொடர்பான விடயங்களை முகாமைப்படுத்தல் இதன் கடமையாகும். ஐரோப்பிய ஒன்றியத்திலருந்து சர்வஜன வாக்கெடுப்புத் தீர்மானத்துடன் பிரிட்டன் விலகுதல் என்பது மிகப்பெரிய நடைமுறையுடன் சம்பந்தப்பட்டது என்பது பலருக்கும் தெரியாத விடயமாகும். 2017 இலிருந்து 2019 வரை விலகல் பேச்சுவார்த்தை நடைபெறும் என்பதிலிருந்து தொடர்ச்சியான நடைமுறை விடயங்கள் பேச்சுவார்த்தையினூடாக தீர்மானிக்கப்பட வேண்டும் என்பது ஊகிக்கப்படக்கூடியது. இரு தரப்பினரும் அதாவது ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகார பீடங்களும் பிரித்தானிய அரச பிரதிநிதிகளும் பேசி தீர்ப்பதற்கு பிரதானமாக ஏழு விடயங்கள் அடக்கப்பட்டுள்ளன. சுங்க யூனியன், வடஅயர்லாந்து - அயர்லாந்து எல்லை, இடைமாறு காலம், பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரஜைகளின் உரிமைகள், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரித்தானியாவுக்குமிடையில் கைச்சாத்தாகவுள்ள எதிர்கால வர்த்தக உடன்படிக்கைகள் பிரித் தானியாவுக்கும் ஏனைய சர்வ தேச நாடுகளுக்குமிடையில் எதிர்கா லத்தில் கைச்சாத்தாகவுள்ள வர்த் தக உடன்படிக்கைகள், நிதிச்சேவை கள் சுங்க யூனியன், தனிச்சந்தை ஆகிய விடயங்களே தீர்வுகாணப் படவேண்டியவை ஆகும்.  தனிச்சந்தை தனிச்சந்தை என்பது ஒரே நாட்டுக்குள் பொருட்கள், சேவைகள், நிதி எவ்வாறு  அசைகின்றதோ அதே போல ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளும் ஒரே நாடு போல் அசைவுக்கான சுதந்திரம் உண்டு. வேலைவாய்ப்பு உருவாக்கம், வர்த்தக அதிகரிப்பு, பண்டங்கள் சேவைகளின் விலை குறைப்பு ஆகியனவையே தனிச் சந்தையின் பிரதான நோக்கங்கள் ஆகும். பொதுச்சந்தை என்கின்ற பதத்தை தனிச்சந்தை என்ற பதத்துடன் சம்பந்தப்படுத்த முடியாது. பொதுச்சந்தை என்பது சுதந்திர வர்த்தகத்துடன் தொடர்புடையது. சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள நாடுகள் தமக்கிடையில் சுங்க வரி, இறக்குமதி தீர்வை, ஏற்றுமதி வரி மற்றும் வேறு கட்டணங்களிலிருந்து விலக்களிக்கப்பட்டவை பொதுச்சந்தை என்பது சுதந்திர வர்த்தகத்தை நாடுகளுக்கிடையில் அதிகரிப்பதே நோக்கமாகும்.  

சுங்க யூனியன்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒரு நாடு போன்று சகல நாடுகளிலும் சுங்க வரி எல்லைகள் அற்ற முறையில் வர்த்தகத்தை, ஆட்கள் அசைவதை இயைபுபடுத்தக் கூடியது. பிரித்தானியா விலகியதன் பின்னரும் சுங்க யூனியனில் தொடர்ந்தும் அங்கத்துவம் வகிப்பதா? இல்லையா என்பது பேச்சுவார்த்தைகளில் தீர்மானிக்ப்பட வேண்டிய விடயமாகும்.

ஐரோப்பிய நாட்டு பிரஜைகளின் உரிமைகள்

ஐரோப்பிய நாட்டு பிரஜைகள் 3.2 மில்லியன் வரை பிரித்தானியாவில் தொழில் செய்கின்றார்கள், வாழ்கின்றார்கள். அதே போன்று பிரித்தானியர்களும் ஐராப்பிய நாடுகளில் வாழ்கின்றார்கள், அவர்களின் உரிமைகள் பிரித்தானிய சட்டங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அவர்களுக்கான சுகாதார வசதிகளும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.வெட்டுத்தினமாகிய (உத்தியோகபூர்வ விலகல் தினம்) 19.03.2019 க்குப் பின்னர் இவர்களின் நிலை என்ன என்பது பேசித் தீர்க்கவேண்டிய விடயமாகும். வெட்டுத் தினத்திற்குப் பிறகு பிறக்கும் குழந்தைகளுக்கும் பிரித்தானியாவில் வாழ உரிமையுண்டு. வெட்டுத்துண்டு தினத்திற்கு முன்னர் ஐந்தாண்டு காலம் பிரிட்டனில் வாழ்ந்தவர்களுக்கு அங்கு நிரந்தரக் குடியுரிமைக்கு உரித்துண்டு. பேச்சுவார்த்தைகளின் போதும் இடைமாறு காலத்தின் போதும் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படவேண்டியதாகும். பிரித்தானியப் பிரதமர் திரேசா மே குடிவரவுக் கொள்கையில் ஓரளவு இறுக்கமான கொள்கையைக் கடைப்பிடிக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒப்பந்தங்கள்

பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரஜைகளின் உரிமைகள், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரித்தானியாவுக்குமிடையில் கைச்சாத் தாகவுள்ள எதிர்கால வர்த்தக உடன்படிக் கைகள் பிரித்தானியாவுக்கும் ஏனைய சர்வதேச நாடுகளான சீனா, இந்தியா, கனடா போன்ற பல நாடுகளுடனும் வெட்டுத் தினத்திற்குப் பின்னர் கைச்சாத்தாகவுள்ள ஒப்பந்தங்கள் பற்றியும் பேச்சுவார்த்தையில தீர்மானம் எட்டப்பட வேண்டும்.  

வட அயர்லாந்து, அயர்லாந்து எல்லை

ஐரோப்பிய ஒன்றியம் எல்லைகளற்ற கொள்கை வெட்டுத்தினத்துடன் முடிவுக்கு வர அயர்லாந்து, அயர்லாந்து எல்லைகளின் நிலை தீர்மானிகப்பட வேண்டியதாகும்.

நிதிச்சேவைகள்

தனிச்சந்தை முறைமையில் கட்டுப்பாடற்ற முறையில் நிதி வங்திச் சேவைகள் நிகழ்கின்றன. விலகலுக்குப் பின்னர் அதாவது வெட்டுத்தினத்திற்குப் பின்னர் நிதிச் சேவைகள் எவ்வாறு நடைபெற வேண்டும் என்பதை பேச்சுவார்த்தைகளில் தீர்மானிப்பட வேண்டும். பிரித்தானியாவில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டாலும் எவ்வாறு விலகுவது என்பதில் இரண்டு விதமான கருத்துக்கள் பழமைபேண் கட்சி, தொழிற்கட்சி, ஏனைய கட்சிகளிடையே காணப்படுகின்றது. கடுமையான விலகல் கொள்கை என்றும் மிருதுவான விலகல் கொள்கை என்றும் இவை வர்ணிக்கப்படுகின்றன. கடுமையான கொள்கை வாதிகள் பிரித்தானியா விலகியதன் பின்னர் சுங்க யூனியனில் தொடர்வதோ தனிச்சந்தை என எதுவும் தேவையில்லை என வாதிடுகின்றார்கள். மிருதுவான கொள்கைவாதிகள் தொடர்ந்தும் சுஙக யூனியன், தனிச்சந்தை ஆகியவற்றில் இயங்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கொடுக்க வேண்டிய கட்டணங்களைச் செலுத்தி தொடர்வதற்கான சாத்தியங்களை பேச்சுவார்த்தை மூலம் பெறவேண்டும் என வாதிடுகின்றனர்.

சில பத்திரிகைகள் இரண்டாவது சர்வஜன வாக்கெடுப்பை நிகழ்த்தி பிரித்தானியா விலகலை மீள்பரிசீலனை செய்தால் என்ன என்ற கருத்துக்களை தெரிவிக்கின்றன. மக்களின் ஆணை விலகுதலுக்குப் பெறப்பட்டது. மக்கள் தந்த ஆணையை மீறுதல் ஜனநாயகத்திற்கு அழகாகாது என்ற கருத்து சகல கட்சி களிடையே நிலவுவதால் இரண்டாவது சர்வஜன வாக்கெடுப்பு சாத்தியமாகாது.

இலங்கையைப் பொறுத்தமட்டில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதால் பாதகமான நிலை ஏற்படுமா என்ற வாதப் பிரதிவாதங்கள் நடைபெறுகின்றது. ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகை ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு மீள வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியா இலங்கையின் ஏற்றுமதி நாடுகளில் பிரதானமானது. உத்தியோகபூர்வமான வெட்டுத்தினம் 2019.03.19 வரை பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றிய நாடாக தொடர்ந்திருப்பதால் அக்காலம் வரை எந்தப் பிரச்சனையும் ஏற்படப் போவதில்லை. விலகியதன் பின்னர் இலங்கை பிரித்தானியாவுடன் இருதரப்பு ஒப்பந்தங்களை அல்லது சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை உருவாக்கி வர்த்தகத்தை மேம்படுத்த முடியும் என பொருளியல் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 

 

ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம்    
(இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.)

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-02-24#page-5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.