Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெய்லர் சதம், லாதம் 79-க்குப் பின் சாண்ட்னரின் எதிர்பாரா அதிரடியில் நியூஸி. வெற்றி

Featured Replies

டெய்லர் சதம், லாதம் 79-க்குப் பின் சாண்ட்னரின் எதிர்பாரா அதிரடியில் நியூஸி. வெற்றி

 

 
ross%20taylor

சதமெடுத்த ராஸ் டெய்லர்.   -  படம். | ஏ.எஃப்.பி.

ஹாமில்டனில் இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி இங்கிலாந்து அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்ய இங்கிலாந்து அணிக்கு மீண்டும் உற்சாகமாகத் திரும்பியுள்ள அதிரரி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 12 ரன்களில் சாண்ட்னரிடம் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, ரூட்- 71 பட்லர் அதிரடி 79 ஆகியவற்றுடன் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணி 9.3 ஓவர்களில் வோக்ஸ், வில்லே ஆகியோரிடம் கப்தில், வில்லியம்சன், மன்ரோ ஆகியோர் விக்கெட்டுகளை இழந்து 27/3 என்று கடும் நெருக்கடிக்குள்ளானது. அப்போதுதான் சத நாயகன் ராஸ் டெய்லர் (113), டாம் லேதம் (79) இணைந்து 4-வது விக்கெட்டுக்காக 178 ரன்களை சுமார் 30 ஒவர்களில் சேர்த்தனர். மீண்டும் விக்கெட்டுகள் சரிய 215/6 என்றும் 244/7 என்றும் ஆனது, ஆனால் மிட்செல் சாண்ட்னர் இன்று வேறு ஒரு மூடில் இறங்கினார். 27 பந்துகளில் 2 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 45 ரன்கள் விளாச 49.2 ஓவர்களில் 287/7 என்று அபார வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட பிறகு டிம் சவுதி, டிரெண்ட் போல்ட் ஆகியோர் பாராட்டத்தக்கக் கட்டுக்கோப்புடன் வீசினார்கள். முதல் 10 ஒவர்களில் இங்கிலாந்து வழக்கமாக எழும்பும், ஆனால் இன்று அடக்கப்பட்டது. இதில் ஜானி பேர்ஸ்டோ 4 ரன்களில் போல்ட்டிடம் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஜேசன் ராய் (49, 5 பவுண்டரி, 1 சிக்ஸ்), ஜோ ரூட் (71) ஆகியோர் முதிர்ச்சியுடன் ஆடி 2வது விக்கெட்டுக்காக 79 ரன்களைச் சேர்த்தனர். அப்போது 49 ரன்களில் ஜேசன் ராய், சாண்ட்னரின் அருமையான பந்துக்கு லெக் ஸ்டம்பை இழந்தார். பிறகு இயன் மோர்கனும் இஷ் சோதியின் கூக்ளியில் சவுதியிடம் கேட்ச் ஆகி 8 ரன்களில் வெளியேற, பலத்த எதிர்பார்ப்புடன் இறங்கிய பென் ஸ்டோக்ஸ் 12 ரன்களில் சாண்ட்னரிடம் வீழ்ந்தார். ரூட் 71 ரன்களில் கொலின் மன்ரோ (1/31) வெளியேறினார். இஷ் சோதியை ஜோஸ் பட்லர் (79, 5 சிக்ஸ், 5 பவுண்டரி) தொடர்ச்சியாக 3 சிக்சர்கள் விளாசினார். மொயின் அலி 4 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 28 ரன்கள் எடுத்து சோதியிடம் வீழ்ந்தார். சவுதி, போல்ட் இறுதி ஓவர்களில் பட்லரை வெறுப்பேற்றினர், இதனால் இங்கிலாந்து 300 ரன்களை எட்ட முடியாமல் 284/8 என்று ஆனது.

ராஸ் டெய்லர், லாதம் முக்கியக் கூட்டணி!

நியூஸிலாந்து சரியான தொடக்கம் காணவில்லை, அதிரடி மன்ரோவை கிறிஸ் வோக்ஸ் காலி செய்தார். இது வோக்ஸின் 100வது ஒருநாள் விக்கெட்டாகும். உடனேயே மார்டின் கப்தில் வோக்ஸ் பந்தை நேராக கவரில் ஸ்டோக்ஸ் கையில் கொடுத்து கேட்ச் ஆனார். டேவிட் வில்லே, கேன் வில்லியம்சனையும் வீழ்த்த 27/3 என்று தடுமாறியது நியூஸிலாந்து.

அப்போது கூட்டணி சேர்ந்த ராஸ் டெய்லர், டாம் லாதம் அனுவத்துடன் ஆடி பிறகு ரன் விகிதத்தையும் உயர்த்தினர். ராஸ் டெய்லர் 116 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 113 ரன்களை எடுத்தார், 178 ரன்கள் கூட்டணிக்குப் பிறகு 79 ரன்கள் எடுத்த லாதமை ஸ்டோக்ஸ் வீழ்த்தினார். நிகோல்ஸ் ரன் எடுக்காமல் கரனிடம் ஆட்டமிழந்தார். கொலின் டி கிராண்ட் ஹோமையும் பென் ஸ்டோக்ஸ் வீழ்த்த 215/6 என்று ஆனது நியூஸிலாந்து, இங்கிலாந்துக்கு இன்னமும் வாய்ப்பு இருந்தது. ஆனால் 46வது ஓவரில் ராஸ் டெய்லர் ரஷீத்திடம் ஸ்டம்ப்டு ஆனார். 244/7 என்று ஆனது நியூஸிலாந்து, ஆனால் சாண்ட்னர் இருந்தார்.

சாண்ட்னரின் எதிர்பாரா அதிரடி!

santenrjpg

சாண்ட்னர் வின்னிங் ஷாட்.   -  படம். | ஏ.பி.

 

சாண்ட்னர் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசி ஆட்டத்தை நியூஸிலாந்து பக்கம் திருப்பினார். மொத்தம் 4 சிக்சர்களுடன் 2 பவுண்டரிகளில் ஒரு அதிர்ஷ்ட மட்டை உள்விளிம்பு பவுண்டரியுடன் சாண்ட்னர் ஆட கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. கடைசியில் வெற்றிக்குத் தேவையான ரன்களை ஸ்கொயர்லெக் திசையில் மிகப்பெரிய ஷாட்டுடன் முடித்தார் சாண்ட்னர்.

ஆட்ட நாயகனாக ராஸ் டெய்லர் தேர்வு செய்யப்பட்டார். உண்மையில் சாண்ட்னர் வீழ்த்திய 2 விக்கெட்டுகளும் கடைசியில் கைவிடப்பட்ட நிலையில் விளாசிய 45 ரன்களும்தான் வெற்றியைபெற்றுத் தந்தது.

அடுத்த ஒருநாள் போட்டி மவுண்ட் மாங்குனியில் நடைபெறுகிறது.

http://tamil.thehindu.com/sports/article22850192.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.