Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பகுத்­த­றிவும் பட்­ட­றிவும் இன்றேல் கெட்­ட­றி­வுதான்

Featured Replies

பகுத்­த­றிவும் பட்­ட­றிவும் இன்றேல் கெட்­ட­றி­வுதான்

2-8ab0a7b24365ae9b7a0b13f92d7077d84d08c463.jpg

 

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் தாமரை மொட்டு சின்­னத்தின் செயற்­பாட்­டா­லேயே தமி­ழீழம் கிடைக்­கலாம் எனவும் மஹிந்த ராஜபக் ஷ அப்­பாவி சிங்­கள மக்­களை ஏமாற்றத் தவ­றான பிர­சா­ரங்­களைச் செய்­வ­தா­கவும் சம்­பந்தன் பாரா­ளு­மன்­றத்தில் கூறி­யுள்ளார்.

உள்­ளூ­ராட்சித் தேர்தல் மூலம் யாப்பு இயற்­றப்­பட்டு தமி­ழீழம் வழங்­கப்­ப­ட­வி­ருப்­ப­தா­கவும் அதற்கு இத் தேர்தல் மக்கள் அபிப்­பி­ராய வாக்­கெ­டுப்­பாக நடத்­தப்­ப­டு­வ­தா­கவும் மஹிந்த கூறி­யது தவறு. தனது கட்­சியின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் எங்­குமே பிரி­வி­னைக்­கு­ரிய வார்த்தை இல்லை என்­பதை சம்­பந்தன் சுட்­டிக்­காட்­டினார்.

இவர் உயர் நீதி­மன்­றத்தில் பிரி­வினை கோர மாட்டேன் என சத்­தியம் செய்தே தேர்­தலில் போட்­டி­யிட்டு எதிர்க்­கட்சித் தலை­வ­ரா­கவும் இருக்­கிறார். ஒரு­முறை சிங்­க­முள்ள தேசியக் கொடி­யையும் தாங்கிக் கொண்­டி­ருந்தார். அதி­க­மான சிங்­கள மக்கள் இவற்றை அறி­யா­மலும் சர்­வ­தேச பிடியை உண­ரா­மலும் இருப்­ப­தால்தான் அப்­பா­வி­களை ஏமாற்­றி­ய­தாக சம்­பந்தன் குறிப்­பிட்­டுள்ளார். முன்னாள் ஜனா­தி­பதி என்றும் பாராமல் அவர் விரல் நீட்டிப் பேசி­யது ஒரு வர­லாற்று நிகழ்­வாகும். அர­ச­மைப்பு சபையில் வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­ட­போது அங்கு இன ரீதி­யி­லான அதி­காரப் பர­வலை மஹிந்த தரப்­பினர் ஆத­ரித்­து­விட்டு தேர்­த­லின்­போது தமி­ழீழம் மலரப் போவ­தாகக் கூறு­வது போலிப் பிர­சா­ரமே எனவும் சம்­பந்தன் குறிப்­பிட்டார். இவ­ரது கருத்து உண்­மை­யாகும். தமிழ் மக்­க­ளுக்கு அதி­காரம் வழங்­கு­வ­தாக இந்­தி­யா­விடம் உறுதி கூறியே உதவி பெற்று மஹிந்த புலி­களை அழித்தார். ஜே. ஆரோ விருப்­ப­மின்றி 13 ஆம் ஷரத்தை இந்­தி­யா­வி­ட­மி­ருந்து ஏற்றுக் கொண்டார். மஹிந்த அதையும் தாண்டி வடக்கு, கிழக்கு தமி­ழர்­க­ளுக்கு தேர் டீன் பிளஸ் தரு­வ­தாக இந்­தி­யா­வுக்கு வாக்­க­ளித்­தி­ருந்தார். சர்­வ­கட்சி அங்­கு­ரார்ப்­பணக் கூட்­டத்­திலும் கூட ஆகக்­கூ­டிய அதி­காரப் பகிர்­வுக்குத் தயார் எனக் கூறி­யி­ருந்தார்.

அர­சி­யல்­வா­தி­யாக எவரும் வரலாம். மன­சாட்சி உள்­ள­வனே மகி­மைக்கும் மரி­யா­தைக்கும் உள்­ள­வ­னாவான். ஆட்­சி­களின் காட்­சிகள் மாறும் நிலை­யில்­லாத அதி­கார வேட்­கைக்­காகச் சொன்ன வாக்கை மீறி சத்­தி­யத்­துக்கு எதி­ராக நிற்­பது லௌஹீக சுகத்தைத் தந்­தாலும் தார்­மீக அழி­வுக்கே வித்­திடும். ஆளு­வோ­ருக்கும் இது பொது நிய­தியே ஆகும். ஆக மஹிந்த அதி­கா­ரத்தை மீட்டிக் கொள்ளப் பார்க்­கிறார். மைத்­திரி அதி­கா­ரத்தைத் தக்க வைத்­துக்­கொள்ளப் பார்க்­கிறார். சிங்­கள வாக்கு வங்கி, கூடிய மூல­தனம் என்­ப­தா­லேயே சிறு­பான்­மைகள் உதி­ரி­க­ளாகக் கணிக்­கப்­ப­டு­கி­றார்கள், பற்­றாக்­கு­றையை நிரப்ப மட்­டுமே பயன்­ப­டு­கி­றார்கள். அடம்பன் கொடி திரண்­டால்தான் மிடுக்கு எனும் நிலையே சம்­பந்­தனின் கருத்­தாகும்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தாமரை மொட்டுச் சின்­னத்தின் மூலம் அப்­பாவி சிங்­களப் பெரும்­பான்மை மக்­களை ஏமாற்றும் வகை­யி­லான பேரி­ன­வாத வெறியை அண்­மையில் நிகழ்ந்த உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் முன்­னெ­டுத்­தி­ருந்தார். போர்க்­குற்றம் சாட்­டப்­பட்­டி­ருந்த இவர் போரினால் அழி­வுக்­குள்­ளா­கி­யி­ருந்த தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராகப் பிர­சாரம் செய்ய ஏன் இட­ம­ளிக்­கப்­பட்டார்?.

போர் நிகழ்ந்­ததும் அழி­வுகள் நேர்ந்­ததும் போர்க்­குற்றம் சாட்­டப்­பட்­டதும் நாட்டின் பொரு­ளா­தாரம் வீழ்ச்­சி­யுற்­றதும் பேரி­ன­வா­தத்தால் ஏற்­பட்ட விளை­வுகள் தானே? இவற்­றி­லி­ருந்து மீட்சி பெறத்­தானே இன்­றைய அரசு ஐ.நா. சபையில் மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன் போர்க் குற்­றத்தை ஒப்புக் கொண்டு அழி­வு­களை நிவர்த்­திக்க இணை அனு­ச­ர­ணை­யையும் பெற்றுக் கொண்டு அபி­வி­ருத்­திக்­கென சர்­வ­தேச உத­வி­க­ளையும் பெற்­றி­ருந்­தது.

எனவே, அந்த நிகழ்ச்சி நிரலைப் புறந்­தள்­ளி­விட்டு மைத்­திரி செயற்­பட்­ட­தா­லேயே மஹிந்த மீள் எழுச்சி பெறும் நிலை அண்­மையில் நிகழ்ந்த உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் ஏற்­பட்­டது. 2015 ஆம் ஆண்டின் ஜனா­தி­பதித் தேர்­தலில் 80 வீத சிங்­கள வாக்­கு­களை மஹிந்­தவே பெற்­றி­ருந்தார். அவை தமிழ் மக்­களை அழித்த யுத்­தத்­துக்கு ஆத­ர­வா­கவும் அது போர்க்­குற்­ற­மல்ல எனவும் அதற்கு நிவா­ரணம் வழங்கக் கூடாது எனவும் காணா­மற்­போ­னோரைத் தேட வேண்­டி­ய­தில்லை எனவும் போர்க் கைதி­களை விடு­விக்க வேண்­டி­ய­தில்லை எனவும் காணிகள் விடு­விக்­கப்­பட வேண்­டி­ய­தில்லை எனவும் சூறை­யா­டப்­பட்ட பொருட்கள் மீள கைய­ளிக்­கப்­பட வேண்­டி­ய­தில்லை எனவும் தமிழ் மக்­க­ளுக்கு அர­சியல் தீர்வு வழங்கக் கூடாது எனவும் வழங்­கப்­பட்­ட­வை­யாகும். இவற்­றுக்­கெல்லாம் மாறா­கத்தான் மைத்­திரி மக்கள் ஆணை பெற்­றி­ருந்தார்.

அந்த வகையில் மஹிந்த தனது கட்­சிக்குள் செயற்­ப­டவும் தோல்­வி­யுற்ற அவ­ரது கொள்­கை­யோடு தனிக்­கட்­சி­யாக இயங்­கவும் அதன் மூலம் தான் பெற்ற மக்கள் ஆணையை மிகைத்துச் செல்­லவும் மஹிந்­தவின் நிகழ்ச்சி நிரலை வலுப்­ப­டுத்­தவும் மைத்­திரி இட­ம­ளித்­தி­ருக்கக் கூடாது. அவ­ரையும் சம­மாக வளர இவரே இட­ம­ளித்­து­விட்டு அவர் வலிமை பெற்­றதும் கொள்­கையில் ஒன்­றித்து வெற்­றிக்கும் உத­விய ரணிலை அர­சி­யலில் இவர் நலி­வுற வைத்­தி­ருக்கக் கூடாது.

2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் மைத்­திரி பெற்ற மக்கள் ஆணையை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தாயின் அவர் ரணி­லோடு இணைந்து செயற்­பட்டால் தான் முடியும். மஹிந்­த­வோடு இணைந்து செயற்­பட்டால் இவர்தான் பெற்ற மக்கள் ஆணையை நிறை­வேற்­றா­த­தோடு மக்கள் அனு­ம­திக்­காத செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­த­வரும் ஆகி­வி­டுவார். ஆக மஹிந்­த­வி­னதோ அவ­ரது ஆட்­க­ளி­னதோ மக்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்ட கொள்­கையை முன்­னெ­டுத்தால் மைத்­திரி பத­விக்­கான தார்­மீக உரி­மையை இழந்­து­வி­டுவார்.

மஹிந்­தவின் செயற்­பா­டு­க­ளிலும் மைத்­தி­ரியின் செயற்­பா­டு­க­ளிலும் உயர்வுச் சிக்கல், தாழ்வுச் சிக்கல் எனும் வகை­களில் உள­வியல் தாக்­கங்­களும் ஆளுமை செலுத்­து­கின்­றன. தனக்குக் கிடைத்­தி­ருந்த 80 வீத சிங்­கள வாக்­கு­க­ளுக்­காகவே கொள்­கையை வகுத்துக் கொண்டு அவற்றை மேலும் கூட்­டிக்­கொள்ள மஹிந்த அர­சி­யலைக் கையா­ளு­கிறார். மைத்­தி­ரியின் கணிப்பு அப்­ப­டி­யல்ல. சிறு­பான்­மை­களின் வாக்­கு­களால் வெற்றி பெற்­ற­தாக அவர் கரு­து­வதால் பெரும்­பான்மை சமூ­கத்தின் வாக்­கு­க­ளுக்­காக அவர்­களை மீறாமல் நடந்து கொள்­கிறார். ஆக இரு­வரும் பேரி­ன­வாத நிலைப்­பாட்டில் இருந்தால் ஒரு போதும் உள்­நாட்டு, வெளி­நாட்டு நெருக்­க­டி­க­ளி­லி­ருந்து தப்­பவோ, இனப் பிரச்­சி­னையைத் தீர்க்­கவோ, அதற்­கு­ரிய யாப்பை இயற்­றவோ, பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியை அடை­யவோ முடி­யாது.

2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் தோற்­ற­தி­லி­ருந்தே மஹிந்­தவின் மனம் ஆற­வில்லை. எதிர்­பா­ராத தனது தோல்­விக்கு மைத்­திரி இர­க­சி­ய­மாக ரணி­லோடு இணங்கிப் போட்­டி­யிட்­டதே காரணம் என்­பதால் மைத்­திரி ரணில் கூட்­டாட்­சிக்கு முட்­டுக்­கட்டை போடு­வ­தி­லேயே இத்­தனை காலத்­தையும் கழித்­தி­ருக்­கிறார்.

அவ­ரையும் இரா­ணு­வத்­தையும் ஐ.நா. விட­மி­ருந்து காப்­பாற்­றத்­தானே மைத்­திரி ஆட்சி மாற்­றத்தைக் கொண்டு வந்­த­தாகக் கூறினார். இது எவ்­வ­ளவு பெரிய உதவி? பின் எதற்­காக மஹிந்த, மைத்­தி­ரிக்கு முட்­டுக்­கட்டை போட்டுக் கொண்­டி­ருக்க வேண்டும்? பழியை ஐ.நா. விடம் மைத்­தி­ரியே ஏற்­றுக்­கொண்டு விட்­ட­தாலும் தமி­ழரை சமா­ளிக்கும் பொறுப்பை வகித்துக் கொண்­டி­ருப்­ப­தாலும் அவற்றில் சறுக்­கலை ஏற்­ப­டுத்தி பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­பட்ட ஆட்­சி­யு­ரி­மையை பெறும்­பொருட்டு மீளு­ரு­வாக்கம் பெற மஹிந்த முயல்­கிறார்.

அதி உச்­சத்­தி­லி­ருந்து பாதா­ளத்தில் விழுந்­தது போல் மன இறுக்­கத்தால் அலைக்­கழிந்த மஹிந்த தற்­போது உள்­ளூ­ராட்சித் தேர்­தலின் முடிவால் ஆத்ம சாந்தி அடைந்­தது போல் மௌன­மா­கி­விட்டார். அவ­ரது இந்த வெற்றிக் களிப்பால் பதவி ஏக்கம் தணிந்­த­தோடு பழி உணர்வும் குறைந்­து­விட்­டது. இதனால் சர்­வ­தேச ரீதியில் தன்னைப் பாது­காக்க வந்த மைத்­திரி சிக்கிக் கொள்வார் என்­பது பற்­றியும் இவ­ருக்கு அக்­க­றை­யில்லை.

மைத்­திரி இவ­ரது நட­வ­டிக்­கை­களை ஆரம்­பத்­தி­லி­ருந்தே தடுத்து வந்­தி­ருக்­கலாம். எனினும் தளர்வுப் போக்­கையே கையாண்­டி­ருந்தார். காரணம் மைத்­திரி நெடுங்­காலம் மஹிந்­த­வுக்குக் கட்­டுப்­பட்டுப் பணிந்து நடந்­தவர் என்­ப­தே­யாகும். இதே நிலை இவர் ஜனா­தி­ப­தி­யாக ஆன பிறகும் கூட இருந்­தி­ருக்­கலாம்.

நெடுங்­கா­ல­மாக மஹிந்­த­வோடு இவர் அர­சி­யலில் நெருங்கிச் செயற்­பட்­டி­ருந்த போதும் அக்­கா­லங்­களில் ரணி­லோடு பகை கொண்­டி­ருந்­தவர். ரணிலின் உத­வியால் வென்ற பிறகும் பொது வேட்­பாளர் எனும் நிலையை மறந்து சுதந்­தி­ரக்­கட்­சிக்­காரன் என இவர் தன்னைச் சொல்­லிக்­கொள்ள இதுவே கார­ண­மு­மாகும். இவ­ரது இந்த பல­வீ­னமும் கூட தனது செயற்­பா­டு­களை மஹிந்­த­வுக்கு எதி­ராகக் கையாள்­வதில் இவ­ருக்குத் தடை­யாக அமைந்­து­விட்­டன. ரணி­லோடு இணைந்து ஆட்­சி­ய­மைத்­த­போதும் பகி­ரங்­க­மாக ரணிலை விமர்­சித்­த­தற்கும் இதுவே கார­ண­மாகும்.

19 ஆம் திகதி பெப்­ர­வரி மாதம் தனக்குச் சார்­பான 44 எம்.பி.க்களையும் பாரா­ளு­மன்­றத்­துக்குப் போக­வி­டாது தனது செய­ல­கத்­துக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஏன் அழைத்தார்?. அவர்கள் நீண்ட நேரம் கலந்து என்ன பேசி­னார்கள்? இந்த அவ­சர சந்­திப்பு ஏன் நிகழ்ந்­தது? ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி மட்டும் தனித்து அர­ச­மைக்கும் முயற்­சியைக் கைவிட்டு விட்டு மீண்டும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யு­ட­னேயே முக்­கிய அமைச்­சுக்­களை ஏற்­றுக்­கொண்டு தேசிய அர­சாக நீடிப்போம் என முடிவு செய்து கொள்­வ­தற்­கே­யாகும்.

மூன்று விட­யங்­களை இங்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது 44 எம்.பி.க்களி­டமும் விளக்­க­மாகக் கூறி­யுள்ளார்.

1. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பதவி நீக்­கு­வதில் சட்ட சிக்கல் உள்­ளது.

2. அறுதிப் பெரும்­பான்மை தேவை­யுள்­ளதால் தேசிய அரசு தவிர்க்க முடி­யா­த­தாகும்.

3. சர்­வ­தேச சவால்­களை வெற்றி கொள்ள வேண்­டு­மாயின் தேசிய அரசு கண்­டிப்­பாகத் தேவை­யாகும்.

இந்த கூட்டம் முடிந்த பிறகு நல்­லி­ணக்கம், சமா­தானம், அமைதி என்­ப­வற்­றுக்­காக ஜனா­தி­ப­தியை பலப்­ப­டுத்த முடிவு செய்­த­தாக அமைச்சர் எஸ்.பி. திசா­நா­யக்க வெளியே வந்து கூறி­யி­ருந்தார். இவர் கூறி­ய­துதான் உண்மை கார­ணமா? இவர்கள் தேசிய அரசில் நீடிக்க வேறு கார­ணமும் உண்டா?

அமைச்சுப் பத­வி­க­ளுக்­காகக் கட்சி மாறிப் போவோரைத் தடுக்க முடி­யாமற் போனதும் கார­ணமா? ஏனெனில், அந்த 44 எம்.பி.க்களும் பலர் மஹிந்த தரப்­போடு இணைந்து ஆட்­சி­ய­மைக்க மைத்­தி­ரி­பால சிறி­சேன உடன்­பட்டால் நாம் அதில் இடம் பெற­மாட்டோம் எனக் கூறி­யி­ருந்­தனர். மஹிந்த சம­ர­சிங்க, துமிந்த திஸா­நாயக்க உள்­ளிட்ட 10 பேர் நேர­டி­யாக ஐக்­கிய தேசியக் கட்­சிக்கே போகத் திட்­ட­மிட்­டி­ருந்­தனர். இதனால் வேறு வழி­யின்­றியே குறு­கிய காலத்­துக்­கா­யினும் தேசிய அர­சாக நீடிக்க முடிவு செய்­யப்­பட்­ட­தாகக் கூறப்­படு­கி­றது.

உண்­மையில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி 113 ஆச­னங்­களைப் பெறவே ஒரு­வார காலம் கடு­மை­யாக முயற்­சித்­தது. அதன் முயற்சி நிறை­வே­றி­யி­ருக்­கு­மானால் அதை சாதித்­தி­ருக்கும். அது கைகூ­டா­த­தால் அமைச்­ச­ரவை மாற்­றத்தின் போது பெறு­ம­தி­யான அமைச்­சுக்­களைப் பெறு­வதில் அவ­தானம் செலுத்திக் கொண்­டி­ருக்­கி­றது.

அப்­போதும் கூட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன புதிய பிர­த­மரை நிய­மிக்க உயர் நீதி­மன்­றத்தின் அபிப்­பி­ரா­யத்தைக் கோரி­யுள்­ள­தாக ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி தெரி­வித்­துள்­ளதாம். ரணில் பிர­த­ம­ராக இருக்கும் அரசில் நாம் இருக்­க­மாட்டோம் என மைத்­தி­ரியின் எம்.பி.க்கள் கூறி­விட்­டதால் தான் ஜனா­தி­பதி மைத்­திரி, பிர­தமர் ரணிலை வில­கு­மாறு கோரி­னாராம். 

அதைத் தொடர்ந்தே பிர­தமர் ரணில் பதவி விலக மறுத்­தாராம். அதற்­கென ஜனா­தி­பதி பிர­த­ம­ரையும் சபா­நா­ய­க­ரையும் சந்­தித்தும் பேசி­னாராம். அப்­போது இதே தேசிய அரசை நீடித்துச் செல்ல முடிவு காணப்­பட்ட பின்­பு­தானாம் பிர­த­மரை மாற்ற ஜனா­தி­பதி உயர்­நீ­தி­மன்­றத்­திடம் அபிப்­பி­ராயம் கோரி­னாராம்.

ஆக நடை­பெற்ற உள்­ளூ­ராட்சித் தேர்­த­லி­லும்­கூட இழு­ப­றியே காணப்­ப­டு­கி­றது. உள்­நாட்டு அர­சிலும் கூட இதே நிலைதான் காணப்­ப­டு­கி­றது. உண்­மையில் இறு­தி­வரை தனி­யாட்சி அமைக்க இரு பெருங்­கட்­சி­களும் போரா­டியே இருந்­தன. அதற்­கென பெரும்­பான்­மையை நிரூ­பிக்கும் ஏற்­பாடும் இருக்­கவே செய்­தது.

எம்.பி.க்களிடம் கட்சி வெறுப்பு, விருப்பு எப்­படி இருப்­பினும் தக்க அமைச்­சு­க­ளுக்கும் வசதி வாய்ப்­பு­க­ளுக்கும் உத்­த­ர­வாதம் வழங்­கப்­ப­டு­மாயின் ஆட்சி மாற்­றமும் ஏற்­பட்­டி­ருக்­கலாம். அமெ­ரிக்­காவும் இங்­கி­லாந்தும் இந்­தி­யாவும் ஆட்சி மாற்­றத்தை விரும்­ப­வில்லை. இதற்­கான அழுத்­தத்தைக் கொடுத்­தன. மஹிந்த வலிமை பெறு­வதை சந்­தி­ரி­காவும் சரத் பொன்­சேகாவும் விரும்­ப­வில்லை. ஐ.நா.வின் பிடி மேலும் இறுகும் நிலையே உரு­வா­னது. தமிழ் தரப்பும் நல்­லி­ணக்­கத்­தி­லி­ருந்து விலகி விடும்.

இச் சம­யம்தான் ஒரு நிகழ்வு ரணிலின் அரசை தப்பிப் பிழைக்­க­வைத்­தது. 19 ஆம் திகதி பெப்­ர­வரி மாதம் 2018 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக் ஷ பாரா­ளு­மன்­றத்­துக்கு வருகை தந்­த­போது அவ­ரது எம்.பி.க்கள் அவ­ரோடு பேசினர். சற்று நேரத்தில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அங்கு வந்­ததும் இரு­வரும் கண் ஜாடை­யாகப் பேசிக் கொண்­ட­னராம். பின்பு தினேஷ் குண­வர்­தன மஹிந்­த­வுடன் பேசு­கையில் நடு ஆச­னத்தில் அமர்ந்த ரணில், மஹிந்­த­விடம் சிரித்­த­வாறே ஏதோ கூறி­னாராம். அப்­போது மஹிந்­தவும் சிரித்துக் கொண்டு சைகை காட்டிப் பேசி­னாராம்.

உடனே ஆளும் கட்­சியின் பிர­தம கொர­டாவும் அமைச்­ச­ரு­மான கயந்த கரு­ணா­தி­லக்க ஊட­க­வி­ய­லா­ளரைப் பார்த்து சிரித்­தாராம். மஹிந்­த­வுக்கும் ரணி­லுக்கும் இடையில் 5 நிமி­டங்­க­ளுக்கும் அதி­க­மாகப் பேச்சு இடம்­பெற்­றதாம். பின்னர் ரணில் கட­தாசி துண்டில் ஏதோ எழுதி சம்­பந்­த­னுக்கும் சுமந்­தி­ர­னுக்கும் படைக்­கல சேவிதர் மூலம் ஏதோ அனுப்பி வைத்­தாராம்.

இந்த நிகழ்வு எதைக் கூறு­கி­றது மைத்திரி அங்கும் மஹிந்த இங்கும் வாக்கெடுப்புக்கு விரும்பவில்லை என்பதையா? மைத்திரி அனுப்பியிருப்பாராயின் சம்பந்தன் ரணிலுக்கு ஆதரவளித்து ரணிலைக் காப்பாற்றி இருப்பார் என்பதையா? உண்மையில் இந்த விடயத்தில் சம்பந்தனின் அரசியல் வியூகம் திறமையாக அமைந்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன் சந்தேகமில்லை.

மைத்திரி தனது 44 எம்.பி.மாரையும் ஆட்சி மாற்றத்துக்கான வாக்கெடுப்பு நிகழாதிருக்கும் வகையில் தடுத்து வைத்தது ஏன்? மஹிந்தவும் ரணிலும் 5 நிமிடங்கள் பேசிய பின் ரணில் சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் கடதாசித் துண்டில் எழுதி அனுப்பியது ஏன்?

இது பொலிட்டிக்கல் டிப்லோமெட்டிக் (Political Diplomatic) எனும் வகையைச் சேர்ந்த அண்டர்டேபல் ஸ்பீச் (Under Table Speech) எனும் முறையில் அமைந்த தீர்வாகும். இதன் மூலம் அரசின் தீர்வாயினும் சிங்கள மக்களின் பெரும்பான்மை தீர்மானமாயினும் கூட அவற்றை சர்வதேச அழுத்தம் மாற்றியமைக்கும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது அல்லவா?

மஹிந்த ஜனாதிபதியாக இருக்கையில் 13 க்கும் அதிகமாகக் கொடுப்பேன் எனக் கூறி இந்தியாவின் உதவியைப் பெற்றுப் புலிகளைத் தோற்கடித்த பின் 13 ஆம் ஷரத்தையும் இல்லாமலாக்க முயன்றார். பின்னர் இந்தியாவின் தலையீட்டால் அவர் இதை கைவிட நேர்ந்தது. அதுபோல் தான் மைத்திரியின் முயற்சியையும் சம்பந்தன் கைவிட வைத்திருக்கிறார். அவர் மஹிந்தவைக் கடுமையாக எச்சரித்திருப்பதும் இதையே நிரூபிக்கிறது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-02-26#page-4

தமிழருக்கு 13 ஆவது கொடுப்பேன் எனச் சொல்லித் தான் இந்தியாவின் உதவியைப் பெற்று மகிந்த புலிகளை அழித்தார் எனச் சொல்வதன் மூலம் தமிழினப்படுகொலையின் வடிவமைப்பாளர் இந்தியா என்ற உண்மை இந்தப் பத்தி எழுத்தாளரால் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது.


உண்மையில் மகிந்த இலங்கையின் சனாதிபதியாகப் பொறுப்பேற்கும் போது புலிகளை அழிக்க முடியும் என்று துளியளவும் நம்பவில்லை. தேசியத் தலைவரால் மகிந்த எதார்த்தவாதி எனக் கருதப்படுவதால் அமைதிப் பேச்சிற்கான கதவுகளைத் திறந்து ஒரு வாய்ப்பை மகிந்தவுக்கும் வழங்குவோம் என்ற தன்மையில் மாவீரர் நாள் உரையில் சொல்லப்பட்டது.


பதவியேற்றதும் இந்தியாவிற்கு அழைக்கப்பட்ட மகிந்தவுக்கு அங்கு பல செய்திகள் சொல்லப்பட்டன. புலிகளை அழிப்பதற்கான முழுத் திட்டமிடல்களும் முடிந்தாயிற்று. முழு உலகினையும் இதை நோக்கி இந்தியா ஒருங்கிணைத்துள்ளது. எந்தத் தயக்கமும் இல்லாமல் போரைத் தொடங்கச் சொல்லி மகிந்தவை இந்தியா அனுப்பி வைத்தது.


தொடக்கத்தில் மகிந்த இந்தியாவின் நம்பிக்கைக்குரியவராகவே இருந்தார். எனினும் தமிழரின் போராட்டத்தை ஆயுதரீதியில் நசுக்கிய பின்னர் இந்தியா மகிந்தவை மாட்டி விட்டு உலக அரங்கில் தனது அரசியலைத் தொடருகையில் தான் சினமுற்ற மகிந்த சீனாவை நோக்கி நகரலானார். இப்போது மீண்டும் இந்தியாவை நம்பத் தொடங்கிவிட்டார். இப்பத்தி எழுத்தாளருக்கு இந்திய மாயை அதிகமுள்ளது தெரிகின்றது. இவற்றைப் படித்து அரசியல் கற்றுக் கொண்டால் எமது அடுத்த தலைமுறையும் அரசியல் வரட்சியிலேயே அலையும். என்ன செய்வது?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.