Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனது சகோதரரை முகமாலைக்கு அனுப்பினார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

Featured Replies

தனது சகோதரரை முகமாலைக்கு அனுப்பினார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

 

Prince_Miredகண்ணிவெடிகளைத் தடைசெய்யும் பிரகடனத்தின் சிறப்புத் தூதுவரான ஜோர்தான் இளவரசர் மிரெட்  அல் ஹுசேன் நேற்று சிறிலங்காவை வந்தடைந்தார்.

நான்கு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக கொழும்பு வந்த அவர், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளைப் பார்வையிடுவதற்காக, நாளை முகமாலைக்குச் செல்லவுள்ளார்.

அத்துடன், வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளையும், கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்டவர்களையும் இளவரசர் மிரெட் அல் ஹுசேன் சந்திக்கவுள்ளார்.

கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் பிரகடனத்தில் சிறிலங்கா அரசாங்கம், 163 ஆவது நாடாக இணைந்து கொண்டுள்ளதை அடுத்து, இளவரசரின் இந்தப் பயணம் இடம்பெறுகிறது.

இளவரசர் மிரெட் அல் ஹுசேன், தற்போது ஐ.நா மனித உரிமை ஆணையாளராக பணியாற்றும் செய்ட் அல் ஹுசேனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2018/03/05/news/29477

  • தொடங்கியவர்

அரசியல் தலைவர்களை சந்திக்கும் மிரெட் அல் ஹுஸைன் வடக்கிற்கான விஜயத்தையும் மேற்கொள்வார்

 

 

 

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஆளணி எதிர் கண்ணிவெடிகளை தடை செய்வதற்கான சாசனத்தின் விஷேட தூதுவர் இளவரசர் மிரெட் அல் ஹூஸைன், ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோரை சந்திக்கவுள்ளதுடன் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதனுடன் இணைந்து வட மாகாணத்திற்கான கள விஜயமொன்றை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளார்.

Prince-Mired-Raad-Zeid-Al-Hussein.jpg

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஆளணி எதிர் கண்ணிவெடிகளை தடை செய்வதற்கான சாசனத்தின் விஷேட தூதுவரான ஜோர்தானைச் சேர்ந்த இளவரசர் மிரெட் ராட் அல் ஹூஸைன் எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு உததியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

2017 டிசம்பர் 13 ஆம் திகதி ஆளணி எதிர் கண்ணிவெடிகளை தடை செய்வதற்கான சாசனத்தில் 163 ஆவது அரச தரப்பாக இலங்கை இணைந்து கொண்டமையின் விளைவாக இந்த விஜயமானது தனிப்பட்டவகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது. 

பொதுவாக “ஒட்டாவா சாசனம்” அல்லது “கண்ணிவெடிகளை தடை செய்வதற்கான உடன்படிக்கை” என்று அறியப்படும் “ஆளணி எதிர் கண்ணிவெடிகளின் பாவனை மற்றும் கையிருப்பு, உற்பத்தி மற்றும் கைமாற்றல் மீதான தடை மற்றும் அவற்றின் அகற்றல் தொடர்பான சாசனமானது” உலகளாவிய ரீதியில் ஆளணி எதிர் கண்ணிவெடிகளின் பாவனையை முடிவுறுத்துவதனை எதிர்பார்க்கின்றது. இது 1997 டிசம்பர் 3 ஆம் திகதி கையொப்பத்தினை இடுவதற்காக திறக்கப்பட்டதுடன், 1999 மார்ச் முதலாம் திகதி நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்பொழுது இந்த சாசனத்தில் 164 அரச தரப்புக்கள் இணைந்து கொண்டுள்ளன.

இலங்கைக்கான  விஜயத்தின் போது, விஷேட தூதுவர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோரை சந்திக்கவுள்ளார். 

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதனுடன் இணைந்து வட மாகாணத்திற்கான கள விஜயமொன்றை மேற்கொளவதற்கும் அவர் மேலும் திட்டமிட்டுள்ளதுடன், குறித்த விஜயத்திபோது அங்கே முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான செயற்பாடுகளை முதலாவதாக கண்டறியவுள்ளதுடன், கண்ணிவெடிகளை அகற்றும் செயற்பாடுகளில்  ஈடுபடும் முகவர்களையும், கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்டவர்களையும் சந்திக்கவுள்ளார்.

விஷேட தூதுவரின் விஜயமானது கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான செயற்பாடுகளில் இலங்கையினால் தற்பொழுது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள விடயங்களை நிரூபிப்பதற்கான ஒரு சந்தரப்பமாக அமைவதுடன், 2020ஆம் ஆண்டில் கண்ணிவெடிகளற்ற நாடாக இலங்கையை மாற்றுவதற்கான திட்டத்தினை முன்னெடுப்பதற்கும் வழிவகுக்கும். இந்த அடிப்படையில், ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான குழுவினர், சிவில் சமூகத்தினர் மற்றும் ஏனைய பங்குதாரர்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு, இலங்கையில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காகவும், கண்ணிவெடிகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் மேலும் உதவிகளை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு விஷேட தூதுவர் எதிர்பார்த்துள்ளார்.

மார்ச் 6 ஆம் திகதி மாலை 5.30 மணியளவில், சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய கற்கைகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தில் “ஆளணி எதிர் கண்ணிவெடிகளின் மீதான ஒட்டாவா சாசனம்: ஆசியாவின் சந்தர்ப்பங்களும், சவால்களும்” எனும் தலைப்பில் விஷேட தூதுவர் விரிவுரையொன்றை வழங்கவுள்ளார்.

2004 ஆம் ஆண்டிலிருந்து, இளவரசர் மிரெட் ராட் அல் ஹூஸைன் ஜோர்தானின் கண்ணிவெடிகளை அகற்றுதல் மற்றும் புனர்வாழ்வுக்கான தேசிய குழுவின் தலைவராக செயற்பட்டு வருகின்றார். ஆளணி எதிர் கண்ணிவெடிகளை தடை செய்வதற்கான சாசனத்தின் விஷேட தூதுவராக 2009 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டதன் பின்னர், உலகளாவிய ரீதியில் ஆளணி எதிர் கண்ணிவெடிகளின் தடையை மேம்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் தாபனம் மற்றும் அதன் உறுப்பு நாடுகளுடன் இணைந்து பரந்த அளவில் செயற்பட்டு வருகின்றார்.

http://www.virakesari.lk/article/31275

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.