Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை : கூட்­ட­மைப்பின் நிலைப்­பாட்டை பாரா­ளு­மன்­றக்­குழு தீர்­மா­னிக்கும்

Featured Replies

பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை : கூட்­ட­மைப்பின் நிலைப்­பாட்டை பாரா­ளு­மன்­றக்­குழு தீர்­மா­னிக்கும்

4-de12d8497b30eac6864d43148dc3607ff4079e50.jpg

 

திரு­கோ­ண­மலை நகர்,

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக பாரா­ளு­மன்­றத்தில் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­ப­டு­மா­க­வி­ருந்தால் இதில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் நிலைப்­பாடு மற்றும் தீர்­மானம் என்­ன­வென்­பதை எமது பாரா­ளு­மன்­றக்­குழு கூடி ஒரு­மித்த தீர்­மானம் மேற்­கொள்ளும். இது தொடர்பில் எதிர்­வரும் செவ்­வாய்க்­கி­ழமை கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்­றக்­குழு கூட­வுள்­ளது என்று எதிர்க்­கட்­சித்­ த­லைவர் இரா. சம்­பந்தன் தெரி­வித்தார் 

சமூ­க­சே­வை­யா­ளரும் பிர­பல வாத்­த­க­ரு­மான அமரர் கந்­தையா துரை­ரா­சாவின் புத்­திரர் அமரர் விஜ­ய­குமார் (மயூரன்) ஆகி­யோரின் ஞாப­கார்த்­த­மாக உப்­பு­வெ­ளியில் அமைக்­கப்­ப­ட­வுள்ள முதியோர் இல்­லத்­துக்­கான அடிக்கல் நாட்டு வைபவம் நேற்­றைய தினம் நடை­பெற்­றது. இதன்­போது இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போது ஊட­க­வி­ய­லாளர் எழுப்­பிய வினா­வுக்கு பதில் அளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரி­விக்­கையில்;.

நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை வரு­வது வரா­தது பார­ளு­மன்றின் நடை­மு­றையில் சாதா­ரண விட­ய­மாகும். பிர­தமர் ரணில் விக்­கி­ரம சிங்­க­வுக்கு எதி­ராக பாரா­ளு­மன்றில் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ளது என வதந்­திகள் வரு­கி­றதே தவிர அது இன்னும் ஊர்­ஜி­தப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இதற்கு கூட்டு எதி­ர­ணி­யி­னரும் சில அதி­ருப்­தி­யா­ளர்­களும் முயற்­சிக்­கி­றார்­க­ளென அறி­ய­மு­டி­கி­றது.

அவ்­வாறு கொண்­டு­வ­ரப்­ப­டு­மானால் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பி­ன­ரா­கிய நாம் என்ன முடிவு எடுக்­க­வேண்­டு­மென்­பதை பாரா­ளு­ம­னற குழு கூடியே ஒரு கூட்­டுத்­தீர்­மானம் மேற்­கொள்வோம். நம்­பிக்­கை­யில்­லாத்­தீர்­மானம்

தொடர்பில் நாம் என்ன தீர்­மானம் எடுக்­க­வேண்­டு­மென்­பதை எமது பாராளு மன்ற குழு கூடி முடி­வு­களை மேற்­கொள்ளும்.

எமது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வ­ருக்கும் எதிர்­வரும் செவ்­வாய்க்­கி­ழமை பாராளு மன்றில் கூடும்­படி அழைப்பு விடுத்­துள்ளோம். அப்­போது கூடும் நாம் பிர­த­ம­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாப்­பி­ரே­ரணை வந்தால் என்­ன­செய்­ய­வேண்டும் என ஒத்­த­மு­டி­வாக எடுப்போம். எம்­மைப்­பொ­று­த­த­வரை இன்­றைய ஆட்சி தொட­ர­வேண்டும் என்­பதே எமது எதிர்­பார்ப்­பாகும்.

 இந்த அரசு இரண்­டரை வரு­டங்கள் ஆடசி நடாத்­தி­யுள்­ளது. தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு தொடர்பில் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் சில­மு­யற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. அம்­மு­யற்­சிகள் இல­கு­வா­ன­தா­க­வி­ருக்­க­வில்லை. ஆனால் அம்­மு­யற்­சிகள் தொட­ரப்­ப­டு­கின்­றன. தொட­ரப்­பட்ட வேளை­யில்தான் உள்­ளு­ரா­டசித் தேர்தல் வந்­தது. இந்த அர­சாங்கம் தொட­ர­வேண்­டு­மென்­பது எமது எதிர்­பார்ப்­பாகும். ஆனால. எதிர்­கா­லத்தில் என்ன நடை­பெ­றும என்­பதை எம்மால் திட்­ட­வட்­ட­மாக கூற­மு­டி­யாது. ஆனால் அர­சியல் தீர்வு முயற்­சிகள் தொட­ர­வேண்டும். தொடர்­வ­தன்­மூலம் நாட்டில் ஒரு அர­சியல் சாசனம் கொண்­டு­வ­ரப்­ப­ட­வேண்டும். அது பாரா­ளு­மன்றில் நிறை­வேற்­றப்­பட்டு அமு­லுக்கு வர­வேண்டும்.

 தீர்­வைப்­பெறும் விட­யங்­களில் தமிழ் மக்கள் கூடு­த­லான ஆர்­வத்­துடன் இருக்­கி­றார்கள் என்­பதே உண்மை நியா­ய­மான தீர்வு கொண்டு வரப்­ப­ட­வேண்டும் என்­பதில் நாம் ஆர்­வ­மா­கவும் கவ­ன­மா­கவும் இருக்­கிறோம். தேசி­யப்­பி­ரச்­சனை தீர்த்து வைக்­கப்­ப­ட­வேண்டும். தீர்த்து வைக்­கப்­ப­டாமல் நாட்­டி­லுள்ள எப்­பி­ரச்­ச­னைக்கும் நல்ல முடிவு காண­மு­டி­யாது. ரணிலின் அர­சாங்­க­மா­வி­ருக்­கலாம் ஜனா­தி­ப­தியின் ஆட­சி­யாக இருக்­கலாம் இல்லை மஹிந்த ஆட­சி­யாக விருக்­கலாம் இதுதான் உண்மை நிலை. தீர்­கப்­ப­டாத நிலையில் எந்த அரசும் நிலைத்­தி­ருக்­கு­மு­டி­யாது.

  இந்த அரசின் மீது தமிழ் மக்­க­ளுக்கு அவ நம்­பிக்கை ஏற்­ப­டு­வ­தற்கு பல கார­ணங்­க­ளுண்டு. இருந்த போதிலும் ஒரு கட்­சி­யென்ற வகையில் நாம் எதையும் தூக்கி எறிந்­து­வி­ட­மு­டி­யாது. எமது நோக்­கங்­க­ளையும் கரு­மங்­க­ளையும் முன்­னெ­டுத்துச் செல்ல பல வழி­க­ளையும் தந்­தி­ரோ­பா­யங்­க­ளையும் கையாண்டு முடி­வைக்­காண நாம் தொடாந்து ,ஈடு­ப­ட­வேண்டும். எமது முயற்சி தோல்வி அடையும் வெற்­றி­பெ­றும என்ற முடி­வுக்கு நாம் இப்­பொ­ழுது வர­மு­டி­யாது. தமிழ் மக்கள் தீவி­ர­மா­கவும் பக்­கு­வ­மா­கவும் நேர்­மை­யா­கவும் செயற்­பட்­டார்கள் என்ற உயர்ந்த அபிப்­பி­ரா­யத்தை சர்­வ­தேச சமூகம் எடுக்­க­வேண்டும். தமி­ழர்கள் தமக்கு கிடைத்த சந்­தர்ப்­பத்­தையும் வாய்ப்­ப­பையும் கெடுத்­து­விட்­டார்கள் என்ற முடி­வுக்கு சாவ­தேசம் வர நாம் இட­ம­ளி­கக்­கூ­டாது. வெற்றி காண்­ப­தற்­கு­ரிய அத்­தனை முயற்­சி­க­ளையும் தொடர்ந்து மேற்­கொள்வோம்.

 நடந்து முடிந்த உள்­ளு­ரா­டசி மன்ற தேர்தல் முடி­வுகள் 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­த­லின்­போதும் பொது தேர்­த­லின்­போதும் மக்கள் வழங்­கிய ஆணையை எந்த விதத்­திலும் பாதிக்­க­வு­மில்லை நீக்­க­வு­மில்லை. மக்கள் இன்­றைய அர­சுக்கு வழங்­கிய ஆணை தொட­ரு­கி­றது. 2015 ஆம் ஆண்டு மஹிந்­த­ரா­ஜ­ப­க்ஷ­மீண்டும் ஜனா­தி­ப­தி­யாக வர தீவிர முயற்சி எடுத்தார். அதில் அவர் தோல்வி கண்டார். உள்­ளு­ரா­டசி தேர்தல் முடி­வு­க­ளா­னது அர­சாங்­கத்­தின்­மீது மக்­க­ளுக்கு ஏற்­பட்ட அதி­ருப்­தியே தவிர மஹிந்த ராஜ­ப­க்ஷவின் மீது கொண்ட பிர­யத்­த­ன­லல்ல. மஹிந்­தவின் எந்த செய­லுக்­கா­கவும் உள்­ளு­ரா­டசி தேர்­தலில் மக்கள் அவ­ருக்கு வாக்­க­ளிக்­க­வில்லை.

அர­சாங்­கத்தின் மீது கொண்ட அதி­ருப்­தியே அதற்கு காரணம் வாழ்க்­கைச்­செ­லவு விஷம்பொல் அதி­க­ரித்துச் சென்­றமை முன்­னைய கால ஊழல்கள் தற்­போ­தைய ஊழல்கள் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டாமை போன்ற கார­ணங்­களே உள்­ளு­ராட்­சித்­தேர்­தலில் மக்கள் அர­சாங்­கத்தின் மீது அதி­ருப்தி கொண்­ட­மைக்­கான கார­ணங்கள்.

 மக்கள் அந்த அர­சாங்­கத்­துக்கு ஒரு­வ­லு­வான ஆணையை 2015 ஆண்டு வழங்­கி­யுள்­ளனர் . அந்த ஆணை தொட­ர­வேண்டும் அந்த ஆணையின் பலத்தின் அடிப்­ப­டையில் தேசி­யப்­பி­ரச்­ச­னைக்கு தீர்வு காணப்­ப­ட­வேண்­டு­மென எதிர் பார்க்­கிறோம்;.

 தற்­போது ஐ. நா. மனி­த­வு­ரி­மைப்­பே­ர­வையின் கூட்­டத்­தொடர் ஆர­ம­பிக்­கப்­பட்­டுள்­ளது. 2012_ முதல் 2017 வரை தீர்­மா­னங்கள் நிறை­வெற்­றப்­பட்­டன. 2015 ஆம் ஆண்டு பேர­வையும் இலங்கை அரசும் இணைந்து கூட்டுத் தீர்­மா­னங்­களை நிறை­வேற்­றி­யி­ருந்­தன. அதில் உண்மை அறி­யப்­ப­ட­வேண்டும் நீதி­வ­ழங்­கப்­ப­ட­வேண்டும். நீதியின் அடிப்­ப­டையில் அடிப்­ப­டையில் பொறுப்பு கூறல் இடம்­பெ­ற­வேண்டும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு பரி­காரம் காணப்­ப­ட­வேண்டும் எல்­லா­வற்­றுக்கும் மேலாக நாட்டில் உண்­மை­யான நல்­லி­ணக்­கமும் சமா­தா­னமும் ஏற்­ப­ட­வேண்­டு­மாயின் தேசி­யப்­பி­ரச்­ச­னைக்கு நீதி­யான நியா­ய­மான சமத்­து­வ­மான அர­சியல் தீர்வு காணப்­ப­ட­வேண்­டு­மென்று வலி­யு­றுத்­தப்­பட்­டது. இதில் எந்­த­வொரு கரு­ம­மும்­மு­றை­யாக நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. சில விட­யங்­க­ளில்­முன்­னேற்றம் காணப்­ப­டு­கி­றது. காணி­வி­டு­விப்பு காணாமல் ஆக்­கப்­பட்டோர் அலு­வ­லகம் மீள்­கு­டி­யேற்றம் சிறைக்­கை­திகள் விவ­கா­ர­மென சில முன்­னேற்­றங்கள் காணப்­பட்­ட­போ­துமம் அதில் முழுமை நிலை அடை­யப்­பெ­ற­வில்லை.

 இத்­த­கைய முன்­னேற்ற நிலைகள் காணப்­ப­டு­கி­ற­போதும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் கடு­மை­யான

எதிர்ப்­பி­ரச்­சா­ரங்கள் நில­மை­களை மோச­மாக்­கி­வ­ரு­கின்­றன. நாட்­டி­னு­டைய பாது­காப்பு பல­வீ­னப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது;. பயங்­க­ர­வா­திகள் இந்த அர­சாங்­கத்தால் விடு­தலை செய்­யப்­ப­டு­கி­றார்கள். காணிகள் விடு­விக்­கப்­ப­டு­வதால் இரா­ணுவ முகாங்கள் அகற்­றப்­ப­டு­கின்­றன;. இது நாட்­டுக்கு ஆபத்தைக் கொண்­டு­வ­ரப்­போ­கி­ற­தென மிக கடு­மை­யான பிரச்­சா­ரங்­களை மேற்­கொள்­வ­தனால் அர­சாங்கம் எடுக்கும் முயற்­சி­க­ளுக்கு தடை­யா­க­வுள்­ளது. இருந்­தா­லுங்­கூட தமிழ் மக்கள் எதிர்­பார்க்கும் அள­வுக்கு திருப்தி அடை­யக்­கூ­டிய அள­வுக்கு அரசின் முன்­னெ­டுப்­புக்கள் போது­மா­ன­தா­க­வில்­லை­யென்­பது உண்­மை­யே­யாகும்.

 அர­சுக்கு மனி­த­வு­ரி­மைப்­பே­ர­வை­யினால் 2019 ஆம ஆண்டு மார்ச்­வரை கால அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ளது;. அக்­கா­லத்­துக்குள் வாக்­கு­று­திகள் பூர­ண­மாக நிறை­வேற்­றப்­ப­ட­வேண்­டு­மென்­பது எமது எதிர்­பார்ப்­பாகும். இதற்­கான அழுத்­தங்­களை நாமும் கொடுத்­துக்­கொண்­டி­ருக்­கிறோம். ஆனால் எமக்கு திருப்தி அளிக்­கி­ற­தெ­னக்­கூ­ற­மு­டி­யாது. வழங்­கப்­பட்ட காலத்­துக்குள்

இலங்கை அர­சாங்­கத்தால் அளிக்­கப்­பட்ட வாக்­கு­று­திகள் நிறைவேற்றப்படவில்லையாயின் எதிர்காலத்தில் பாரதூரமான விளைவுகளைச்சந்திக்கவேண்டிவரும். நான் சந்திக்கும் ராஜதந்திரிகளாக இருக்கலாம் உலகத்தலைவாகளாகவிருக்கலாம் இதனை

தெளிவாகவிளக்கிவருகிறேன். விளக்கியுள்ளேன்.

 காணமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது அது விரைவில் செயல்படுமென நம்புகிறேன் அதற்கு பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் அவர்கள் திறன்கொண்டவாகள் நீதியாகவும் ஞாயமாவும் செயல் படுவார்கள் என நம்புகின்றேன்.

காணாமல் ஆக்கப்படடோர் அலுவலகம் செயற்படத்தொடங்குமாகவிருந்தால் போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படும் எமது இராணுவத்தினர் மீது போர்க்குற்றம் சுமத்தப்படும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என மஹிந்தராஜபக்ஷ கடுமையான பிரச்சாரங்களை மேற்கொண்டுவருகிறார் இதன்காரணமாக சிங்கள மக்கள் மத்தியில் குழப்பமும் கொந்தளிப்பும் ஏற்படுமென்பதற்காகவே காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் திறப்பதில் சில கால தாமதங்கள் ஏற்பட்டன. அதற்கு இப்பொழுது முடிவுகாணப்பட்டுள்ளது. அவ்வலுவகத்தை வடகிழக்கிலும் நிறுவும்படி கோரியுள்ளோம்அது நடைபெறுமென தெர்பார்க்கிறோமென எதரிக்கட்சித்தலைவர் தெரிவித்தார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-03-05#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.