Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறு­பான்­மை­யினர் மீதான வன்­மு­றை­களை தடுப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்

Featured Replies

சிறு­பான்­மை­யினர் மீதான வன்­மு­றை­களை தடுப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்

 

சிறு­பான்­மை­யி­னரை இலக்­கு­வைத்து நடத்­தப்­படும் வன்­மு­றை­களை கட்­டுப்­ப­டுத்­து­வதன் அவ­சியம் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. எமது நாட்டின் வர­லாற்றை எடுத்­துக்­கொண்டால் மாறி­மாறி எந்­தக்­கட்சி ஆட்சி செய்­தாலும் ஏதோ ஒரு­வ­கையில் சிறு­பான்­மை­யின மக்கள் மீதான வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­படும் நிலைமை தொடர்ந்து வரு­கின்­றது.

கடந்த வாரம் அம்­பா­றையில் முஸ்லிம் பள்­ளி­வாசல் மற்றும் உண­வ­கங்கள் மீது திட்­ட­மிட்­ட­வ­கையில் பெரும்­பான்­மை­யினக் குழு­வி­னரால் தாக்­குதல் நடத்­தப்­பட்­ட­துடன் வாக­னங்­களும் எரி­யூட்­டப்­பட்­டன. கிழக்கில் முஸ்லிம் மக்­களின் இத­யப்­ப­கு­தி­யாகக் கரு­தப்­படும் அம்­பா­றையில் திட்­ட­மிட்­ட­வ­கையில் இன­வன்­முறை அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளது. முஸ்லிம் தமிழ் மக்­களை இலக்­கு­வைத்து பெரும்­பான்­மை­யி­னக்­கு­ழுக்கள் வன்­மு­றை­களில் ஈடு­ப­டு­வதும் பின்னர் அது­குறித்த விசா­ர­ணைகள் இடம்­பெ­று­வதும் குற்­ற­வா­ளி­க­ளுக்கு உரிய தண்­ட­னைகள் வழங்­கப்­ப­டாது அவர்கள் தப்­பித்­து­விடும் செயல்­முறையும் தொடர்ந்து இடம்­பெற்றே வரு­கின்­றது.

அம்­பா­றை­யிலும் உண­வகம் ஒன்றில் ஏற்­பட்ட முரண்­பாட்டை சாட்­டாக வைத்து பள்­ளி­வாசல் மற்றும் உண­வ­கங்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ள­துடன் வாக­னங்கள் எரி­யூட்­டப்­பட்­டன. பஸ் ஒன்­றிலும் மோட்டார் சைக்­கிள்­க­ளிலும் 200க்கும் மேற்­பட்­ட­வர்கள் வருகை தந்து ஒன்­றரை மணி­நேரம் தாக்­குதல் நடத்­தி­யுள்­ளனர். இவ்­வாறு தாக்­குதல் நடத்­தி­ய­போ­திலும் சம்­பவ இடத்­திற்கு 500 மீற்றர் தூரத்தில் உள்ள பொலிஸார் வரு­கை ­த­ர­வில்லை. தாக்­குதல் சம்­ப­வத்தை தடுப்­ப­தற்கு பொலிஸார் தவ­றி­யுள்­ள­மையும் திட்­ட­மிட்­ட­வ­கை­யி­லேயே இந்த தாக்­குதல் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளமை நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளன. இந்த சம்­பவம் தொடர்பில் விசா­ரணை நடத்­தப்­பட்­ட­தா­கவும் ஐந்­து பேர் கைது­செய்­யப்­பட்­ட­தா­கவும் பொலிஸ் தரப்பில் தெரி­விக்­கப்­பட்­டது. ஆனாலும் கைது செய்­யப்­பட்ட ஐவரும் மறுநாள் நீதி­மன்­றத்­தினால் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர். இந்த சந்­தேக நபர்­களை பிணையில் விடு­விப்­ப­தற்கு பொலிஸார் எதிர்ப்பு எத­னையும் தெரி­விக்­க­வில்லை.

அம்­பா­றையில் முஸ்லிம் மக்­களை இலக்­கு­வைத்து நடத்­தப்­பட்ட வன்­முறைச் சம்­பவம் தொடர்பில் உரிய விசா­ர­ணைகள் நடத்­தப்­படும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் உறுதி வழங்­கி­யுள்­ளனர். இந்த சம்­பவம் தொடர்பில் பிர­த­மரும் சட்டம் ஒழுங்கு அமைச்­ச­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரிஷாத் பதி­யுதீன் ஆகியோர் நேற்று முன்­தினம் சந்­தித்து பேசி­யுள்­ளனர். இந்த சந்­திப்பில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான கபீர் காசிம், கிழக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட், பொலிஸ் மா அதிபர் பூஜித ்ஜய­சுந்­தர ஆகி­யோரும் கலந்து கொண்­டனர்.

இந்த சந்­திப்பில் அம்­பா­றையில் பள்­ளி­வாசல் மீதும் முஸ்­லிம்­களின் சொத்­துக்கள் மீதும் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் தொடர்­பு­பட்ட சந்­தேக நபர்­க­ளுக்கு பொலிஸார் பிணை வழங்க உடந்­தை­ யாக இருந்­தமை மற்றும் அவர்­களின் பார­ பட்ச நட­வ­டிக்­கைகள் குறித்தும் அமைச்­சர்கள் பிர­த­மரின் கவ­னத்­திற்கு கொண்­டு­வந்­தனர்.

இதன்­போது இந்தக் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் விசா­ரணை மேற்­கொண்டு அம்­பாறை பொலிஸார் மீது உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று பிர­தமர் உறு­தி­ய­ளித்­துள்ளார்.

சட்­டத்தை பாது­காக்­க­வேண்­டிய பொலிஸார் சட்­டத்­திலே வேண்­டு­மென்றே ஓட்­டை­களை ஏற்­ப­டுத்தி குற்­ற­வா­ளி­களை தப்­பிக்கச் செய்­துள்­ள­தாக சுட்­டிக்­காட்­டிய அமைச்­சர்கள் இந்த நிலை நீடித்தால் சட்டம் மற்றும் ஒழுங்கு கேலிக்­கூத்­தா­கி­விடும் என்று பிர­த­ம­ரிடம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்ட இந்த சதி­கார செயல்­க­ளுக்கு அம்­பாறை பொலிஸார் பக்­க­ப­ல­மாக இருந்­தது மாத்­தி­ர­மன்றி முஸ்­லிம்­களை பார­பட்­ச­மாக நடத்­தி­யுள்­ளனர். பொலிஸார் மீது இப்­போது சிறு­பான்மை சமூகம் நம்­பிக்கை இழந்து வரு­கின்­றது. இது நல்­ல­தல்ல என்றும் இந்த சந்­திப்­பின்­போது முஸ்லிம் அமைச்­சர்கள் பிர­த­ம­ரிடம் எடுத்­துக்­கூ­றி­யுள்­ளனர்.

இந்த நிலையில் அம்­பாறை சம்­பவம் குறித்து ஆராய்­வ­தற்­காக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அங்கு நேர­டி­யாக விஜயம் செய்­ய­வுள்­ள­தா­கவும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதே­வேளை வன்­முறை சம்­ப­வங்கள் தொடர்பில் ஜனா­தி­ப­தியும் பாது­காப்பு அமைச்­ச­ரு­மான மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் தனது கவ­லையை வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார்.

மட்­டக்­க­ளப்­பிற்கு நேற்­று­முன்­தினம் விஜயம் செய்­தி­ருந்த ஜனா­தி­பதி அங்கு இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் உரை­யாற்­றி­ய­போது அம்­பா­றையில் நடை­பெற்ற சம்­பவம் மிகவும் கவ­லைக்­கு­ரி­ய­தாகும். மதஸ்­த­லங்கள் மீது தாக்­குதல் நடத்­து­வது மிகவும் தவ­றான விட­ய­மாகும். இவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ப­வர்­க­ளுக்கு எதி­ராக இன, மத பேதம் இன்றி நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும். இல்­லா­து­போனால் இந்த நாட்டு மக்கள் மத்­தியில் ஒற்­று­மை­யீனம் ஏற்­ப­டலாம். எனவே நாம் எல்­லோரும் ஒற்­று­மையை ஏற்­ப­டுத்த அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­ட­வேண்டும்.

இந்த நாட்டில் வாழும் அனைத்­தின மக்­களும் ஒற்­று­மை­யு­டனும் சக­வாழ்­வு­டனும் வாழ­வேண்டும். அதுவே நாம் காணும் கன­வாகும். அந்த கனவை நன­வாக்க முடி­யா­விட்டால் இந்த நாடே அழிந்­து­விடும். எல்­லாப்­ப­கு­தி­க­ளிலும் கடும்­போக்­கா­ளர்கள் இருக்­கின்­றார்கள் என்­பதை மறந்­து­வி­டக்­கூ­டாது என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

மார்ச் மாதம் மற்றும் செப்­டெம்பர் மாதங்களில் ஜெனி­வாவில் இலங்கை தொடர்பில் பேசப்­ப­டு­கின்­றது. அந்த மாதங்கள் நெருங்­கு­கையில் நாட்டு மக்கள் மத்­தியில் அமைதியின்­மையை ஏற்­ப­டுத்தும் நட­வ­டிக்­கைகள் திட்­ட­மிட்­ட­வ­கையில் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. இவை கடும்­போக்­கா­ளர்கள் மற்றும் தீவி­ர­வா­தி­களின் செயற்­பா­டாகும். அமை­தி­யின்­மையை ஏற்­ப­டுத்தி நாட்டை இத்­த­கை­ய­வர்கள் சீர­ழித்து வரு­கின்­றனர். அதனால் நாடு அழிந்து போகின்­றது. இதனால் உல­கத்தில் எங்­களை ஏற்­றுக்­கொள்ளும் தன்மை குறை­வ­டை­கின்­றது என்றும் ஜனா­தி­பதி சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

திட்­ட­மிட்ட வன்­மு­றை­களில் எவர் ஈடு­பட்­டாலும் உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும் என்ற நிலைப்­பாட்­டி­லேயே ஜனா­தி­பதி உள்­ளமை வர­வேற்­கத்­தக்க விட­ய­மாகும். சிறு­பான்­மை­யின மக்கள் மீது திட்­ட­மிட்­ட­வ­கையில் அரங்­கேற்­றப்­படும் வன்­மு­றை­களை தடுக்க வேண்­டி­யது இன்­றி­ய­மை­யா­த­தாக உள்­ளது. இந்த விட­யத்தில் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் ஒன்­றி­ணைந்து சுய­நல அர­சியல் பேதங்­களை கடந்து நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வேண்­டி­யது அவசியமான­தாக உள்ளது.

கடந்த அர­சாங்க காலத்தில் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக திட்­ட­மிட்ட வகையில் வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டன. பொது­ப­ல­சேனா, சிங்­கள ராவய, ராவணா பலய என பல அமைப்­புக்கள் ஆரம்­பிக்­கப்­பட்டு வன்­மு­றைகள் அரங்­கேற்­றப்­பட்­டன. பள்­ளி­வா­சல்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டது. முஸ்லிம் மக்­களின் சொத்­துக்­க­ளுக்கு பெரும் சேதம் விளை­விக்­கப்­பட்­டது. முஸ்லிம் மக்கள் இன­ரீ­தி­யா­கவும் மத ரீதி­யா­கவும் அடக்கி ஒடுக்­கப்­பட்­டனர்.

இவ்­வா­றான நிலை­யில்தான் நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­றது. புதிய அர­சாங்கம் பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து திட்­ட­மிட்ட வன்­மு­றைகள், மிகவும் குறை­வ­டைந்­தி­ருந்­தது. ஆனால் தற்­போது மீண்டும் அத்­த­கைய வன்­மு­றைகள் அரங்­கேற்­றப்­பட்­டு­வ­ரு­வ­துடன் இந்த வன்­மு­றை­களில் ஈடு­பட்­ட­வர்­களும் சட்­டத்­தின்முன் நிறுத்­தப்­ப­டாத சூழ்­நிலை தொடர்ந்து வரு­கின்­றது.

 அம்­பாறை வன்­மு­றைச்­சம்­பவம் இடம்­பெற்­ற­தை­ய­டுத்து அங்கு சம­ாதானக் கூட்டம் இடம்­பெற்­றது. இந்­தக்­கூட்­டத்தில் கலந்­து­கொண்ட பௌத்த தேரர்கள் சம்­ப­வத்­திற்கு கண்­டனம் தெரி­வித்­த­துடன் வன்­மு­றையில் ஈடு­பட்­ட­வர்கள் மீது நட­வ­டிக்கை எடுத்தால் அது மேலும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் சமாதானமாக செல்ல வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனர். ஆனாலும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் இந்தக் கோரிக்கைக்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. தற்போது இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக கூறப்படுகின்றபோதிலும். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இன்னமும் முழுமையாக கைதுசெய்யப்படவில்லை.

எனவே எதிர்காலத்தில் இத்தகைய வன்முறைகளை தடுக்க வேண்டுமானால் அம்பாறை சம்பவத்தை மேற்கொண்டவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும். இந்த செயலுக்கு காரணமாக இருந்த சூத்திரதாரிகள் யார் என்று கண்டுபிடிக்கப்பட்டு அவர்களும் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும். அவ்வாறு நடைபெற்றால் தான் எதிர்காலத்தில் மீண்டுமொரு திட்டமிட்ட வன்முறையைச் செய்வதற்கு அஞ்சும் நிலைமை உருவாகும். இதனை உணர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டியது இன்றியமையாதது என்பதை வலியுறுத்துகின்றோம்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-03-05#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.