Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்டியில் தற்போதைய நிலைமை என்ன ? தீயில் கருகி இளைஞர் பலி

Featured Replies

கண்டியில் தற்போதைய நிலைமை என்ன ? தீயில் கருகி இளைஞர் பலி

 

 

கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தையடுத்து தற்போது நிலைமை வழமைக்குத் திரும்புவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

kandy4.jpg

இதேவேளை, வன்முறைச் சம்பவத்தையடுத்து அங்கு ஏற்பட்ட தீயில் சிக்கி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சனநடமாட்டம் குறிப்பிட்டளவில் இருப்பதாகவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

28536443_10209141249683079_2039993300_n.

நேற்று நண்பகலில் இருந்து மெதுவாக ஆரம்பித்த வன்முறைச் சம்பவங்கள் மாலையாகும் போது பலத்த வன்முறையாக மாறியதாகவும் பின்னர் அங்கு பெய்த கடும் மழையையடுத்த ஓரளவு தணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

28576775_1970699213142770_18489207595932

இந்நிலையில் நேற்றிரவு சிறு சிறு கல்வீச்சுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

28721614_10209141249443073_112903336_n.j

நேற்று அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று காலை 6 மணியளவில் தளர்த்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 10 க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களும் 100 க்கும் மேற்பட்ட கடைகளும் உடைக்கப்பட்டுள்ளன.

28721772_10209146317769778_553146795_n.j

இந்நிலையில் சம்பவம் இடம்பெற்ற பகுதியை அமைச்சர்கள் நேரில் வந்து பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/31313

  • தொடங்கியவர்

கண்டி, திகன சம்பவத்தின் முழு விபரம் உள்ளே.!

 

(எம்.எப்.எம்.பஸீர்)

கண்டி -– தெல்தெனிய, திகன   பகுதிகளில் நேற்று இடம்பெற்ற வன்முறை சம்பவங்களில்  இரண்டு முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகள், வர்த்தக நிலையங்கள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன.பெரும்பான்மை இன குழுவினரின் இந்த நடவடிக்கை காரணமாக திகன மஜ்ஜித்துல் நூர் ஜும் ஆப் பள்ளிவாசல் மற்றும் கெங்கல்ல ஜும்ஆ பள்ளிவாசல் என்பன பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ளன.

முஸ்லிம்களின் பல வர்த்தக நிலையங்கள், குடியிருப்புக்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஐந்திற்கும் மேற்பட்ட வீடுகள், ஆறு கடைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இந்த வன்முறைகளையடுத்து கண்டி நிர்வாக மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து பிரதேசங்களிலும்  நேற்று பிற்பகல் 3.15 முதல் இன்று காலை 6 மணி வரையிலான காலப்பகுதிக்கு பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வன்முறைகள் பரவாமல் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் நோக்கிலேயே ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் ஒன்றினை மையப்படுத்தி, தெல்தெனிய பொலிஸ் பிரிவில் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதாக கூறிய அவர், அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, கலகமடக்கும் பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் களத்தில் இறக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியதுடன் பிரதேசத்தின் பதற்ற நிலையை நீக்கி வன்முறைகள் பரவுவதை தவிர்த்து அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவை அமுல் செய்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பொலிஸ் கலகமடக்கும் பிரிவினரையும்,  பொலிஸ் விசேட அதிரடிப் படையினரையும் மீறி திகன, கெங்கல்ல மற்றும் தெல்தெனியவில் வன்முறைகள் பரவிய நிலையில், கண்டி மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஏக்கநாயக்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க ஆகியோரின் ஆலோசனைக்கமைய இராணுவத்தை உதவிக்கு அழைத்த நிலையில் தற்போது இராணுவமும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.  மத்திய மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஆர்.எச். டயஸின் நேரடி வழி நடத்தலில் நேற்று மாலை சுமார் 100 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும்  மேலதிக துருப்பினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து கேசரியிடம் தெரிவித்தார்.

 கண்டி – தெல்தெனிய, திகன பகுதிகளில் நேற்று இடம்பெற்ற வன்முறைகள் காரணமாக நகர பகுதியில் வர்த்தக நிலையங்களும் தாக்குதலுக்குள்ளாகின.  திகன மஜ்ஜித்துல் நூர் ஜும்ஆப் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. கெங்கல்ல பள்ளிவாசல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

  வன்முறைகளையடுத்து நேற்று பிற்பகல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த போதும், குடியிருப்பு பகுதிகளை நோக்கி வன்முறைகள் மெல்ல நகர்ந்ததாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

 

 நடந்தது என்ன?

 கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி லொறி ஒன்று பின்னோக்கி செலுத்தப்பட்டபோது  பின்னால் நின்ற முச்சக்கர வண்டியின் பக்கக் கண்ணாடியில் மோதி சிறு சேதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் சம்பவத்தின்போதே லொறி சாரதியினால் முச்சக்கர வண்டியில் இருந்தோரிடம் நட்ட ஈடாக குறிப்பிட்ட தொகை பணம் செலுத்தப்பட்டதாகவும் அறிய முடிகின்றது.

 எனினும் குறித்த லொறி சாரதி (பெரும்பான்மை இளைஞன்) அம்பால பகுதியில் உள்ள தனது வீடு நோக்கி சென்றுகொண்டிருக்கையில், அவரை பின்தொடர்ந்து  முஸ்லிம் இளைஞர்கள் குழுவொன்று சென்றுள்ளது. அவர்கள்  கண்டி - திகன பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றின் அருகில் வைத்து லொறியை மடக்கி குறித்த சாரதியை லொறியில் இருந்து இறக்கி அவரை தாக்கியுள்ளனர். தலைக்கவசங்கள், எரிபொருள் நிரப்பு நிலையம் அருகில் இருந்த கதிரைகள் உள்ளிட்டவற்றால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் குறித்த சாரதி படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த சாரதி கண்டி போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

 இந் நிலையில் சம்பவம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸார் சாரதியைத் தாக்கியதாக கூறப்படும் 4 முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து தெல்தெனிய நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர். குறித்த நால்வரும் எதிர்வரும் 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தி யட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சிகிச்சை பலனின்றி சாரதி உயிரிழப்பு

 இதனிடையே கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த எம்.ஜி.குமாரசிங்க  (41 வயது)  என்ற லொறி சாரதி கடந்த 3 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 குறித்த சாரதி உயிரிழந்தமை தொடர்பிலான தகவல் பிரதேசமெங்கும் அதற்கான காரணத்துடன் பரவவே, பெரும்பான்மை இன குழுவினர் ஆத்திரமடைந்திருந்தனர். இந்த தகவலை சமூக வலைத்தளங்களூடாக இனவாத நோக்குடன் குறிப்பிட்ட குழுக்கள் பரப்பியுள்ளன.

வன்முறைகள் ஆரம்பம்

 இந் நிலையில் மூன்றாம் திகதி சனிக்கிழமை முதல்  திகன நகரில் பதற்றமான சூழல்  நிலவிய நிலையில் நேற்று முன்தினம் 4 ஆம் திகதி ஞாயிறன்று அந்த பதற்ற சூழல் வன்முறையாக வெடித்தது.

 

 முஸ்லிம் வர்த்தக நிலையம் தீக்கிரை 

அதன் பிரதிபலனாக  மத்திய கண்டி எனக் கூறப்படும் திகன, - மொரகஹமுல்ல சந்தியில் உள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான பலசரக்கு கடைக்கு நேற்று முன்தினம் இரவு ஒன்பது மணியளவில் பெரும்பான்மை இனக்கும்பல் ஒன்று தீ வைத்துள்ளது. இதனால் குறித்த கடை முற்றாக சேதமடைந்துள்ளது.

 உடன் செயற்பட்ட பொலிஸார்

 இந் நிலையில் இந்த விடயம் தொடர்பில் உடனடியாக செயற்பட்ட பொலிஸார்  முஸ்லிம்களுக்கு சொந்தமான குறித்த வர்த்தக நிலையம் மீது தீ வைத்த பெரும்பான்மை இனக் கும்பலைச் சேர்ந்த 24 பேரை நேற்று --- முன்தினம் இரவோடிரவாக கைது செய்தனர்.

கைது செய்தோரை விடுவிக்கக் கோரி பொலிஸாருக்கு அழுத்தம்

 இந் நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த 24 இளைஞர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று தெல்தெனிய நகரில் பெரும்பான்மை இனத்தவர்கள் ஒன்று கூடினர்.

இறுதி நிகழ்வும், நீதிமன்ற தடையும்

 இதனிடையே உயிரிழந்த பெரும்பான்மை இன இளைஞரின் இறுதிக் கிரியைகள் நேற்று இடம்பெற்ற நிலையில், அந்த இறுதி ஊர்வலத்தின் போது வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்தது.

பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

 மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க, கண்டி பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஏக்கநாயக்க ஆகியோரின் உத்தரவு, நேரடி மேற்பார்வைக்கு அமைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமாரவின் நேரடி கட்டுப்பாட்டில் விசேட பாதுகாப்பு நிலைமைகள் அமுல் செய்யப்பட்டன. பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்கவும் திகன நகருக்குள் பூதவுடலை ஊர்வலமாக கொண்டுவருவதை தடுக்கவும் நீதிமன்ற உத்தரவை யும் பொலிஸார் பெற்றனர்.

 வன்முறை சந்தேகநபர்களை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

  எவ்வாறாயினும் நீதிமன்ற உத்தரவையும் மீறி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் உள்ளிட்ட 50 இற்கும் அதிகமான தேரர்கள் மற்றும் பெரும்பான்மை இனத்தவர்கள் தெல்தெனிய பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டும் திகன நகருக்குள் நுழைந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 குறிப்பாக தெல்தெனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கடை எரிப்பு சந்தேகநபர்கள் 24 பேரையும் விடுவிக்கக் கோரி அவர்கள் இந்த முற்றுகை நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

இரு நாட்களாக போக்குவரத்து பாதிப்பு

 இதனிடையே திகன பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை காரணமாக கடந்த இரு நாட்களாக கண்டி – - மஹியங்கனை பிரதான வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக கிழக்கில் இருந்து மஹியங்கனை, கண்டி ஊடாக கொழும்பு நோக்கிய போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. பொது பயணிகள் பஸ் சேவைகள் பலவும் இந்த பதற்ற நிலைமை காரணமாக இரத்துச்செய்யப்பட்டன.

கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம்

 நேற்று பெரும்பான்மை இனக்குழுவினர் தெல் தெனிய பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டும் திகன நகரிலும் வன்முறையை தூண்டும் வண்ணம் நடந்துகொண்ட நிலையில் அவர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுத் தாக்குதல், நீர்த்தாரை பிரயோகத்தை பயன்படுத்தினர்.

திகன நகரில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல்; பள்ளிவாசலுக்கும் தீ வைப்பு

 இந் நிலையில் நகரின் பாதுகாப்பை உறுதி செய்ய பொலிஸார் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகத்தை முன்னெடுக்கவே, திகன நகரில் உள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான பல வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் திகன ஜும்ஆ பள்ளிவாசல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதன் வளாகத்திலும் தீவைக்கப்பட்டது. அத்துடன் கெங்கல்ல பள்ளி வாசல் மீதும் சில குடியிருப்புக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திகனயில் ஐந்து கடைகளும் கெங்கல்லயில் ஒரு கடையும் தாக்குதலுக்குள்ளானதாக அறிய முடிகிறது.

கலவரம் பரவுவதை தடுக்க ஊரடங்கு

 இந் நிலையில் வன்முறைகள் திகனைக்கு அப்பாலும் பரவும் அபாயம் காணப்பட்ட நிலையில், மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக உடனடியாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. நேற்று  பிற்பகல் 3.15 முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று காலை 6 மணி வரையிலான காலப்பகுதிக்கு அமுலில் இருக்கும் வண்ணம் இந்த ஊரடங்கு அமுல் செய்யப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

குறித்த வன்முறைகள் ஏனைய பகுதிகளை நோக்கி பரவுவதை தடுக்கும் முகமாக, கண்டி நிர்வாக மாவட்டம் முழுவதற்கும் செல்லுபடியாகும் வண்ணம் இந்த ஊரடங்கு அமுல் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 ஊரடங்கின் போதும் தாக்குதல்கள்

 நேற்று பிற்பகல் 3.15 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போதும் நகர பகுதி தவிர்த்து, குடியிருப்பு பகுதிகளில் பல தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். ஊரடங்கை தொடர்ந்து,  நகரில் இருந்து உட்பகுதியில் அமைந்துள்ள பல முஸ்லிம் குடியிருப்புக்கள் மீது கல்வீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பலரும் கேசரிக்கு தெரிவித்தனர்.

எனினும் நேற்று மாலை ஆறு மணி ஆகும் போது தெல்தெனிய திகன, கெங்கல்ல உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் முற்றாக பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் இருந்ததுடன் வன்முறைகளும் தவிர்க்கப்பட்டு அமைதி நிலைமை நிலவியது.

http://www.virakesari.lk/article/31307

  • தொடங்கியவர்
Capture-75.jpg

கண்டி கலவரத்தில் 160 கடைகளுக்குத் தீ

 

கண்டியில் முஸ்லிம் பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறையில் இதுவரை 160 முஸ்லிம் கடைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் பகுதிகளில் உள்ள 10 பள்ளிவாசல்களும் சேதம் ஏற்பட்டு சில பள்ளிவாசல்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பல நூறு கோடி ரூபா பெறுமதியான முஸ்லிம்களின் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

http://newuthayan.com/story/73874.html

 

 

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை வழிநடத்திய பௌத்த பிக்குகள்

 

 

monks-led violence (1)கண்டியில் வன்முறைகள் வெடித்ததன் பின்னணியில் பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரரும், மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரருமே இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இவர்கள் இருவரும், நேற்றுமுன்தினம் தெல்தெனியவுக்குச் சென்றதை அடுத்தே, அங்கு அமைதியற்ற நிலை தோன்றியதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, திகண, தெல்தெனிய உள்ளிட்ட கண்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறைகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடந்த பகுதிகளில் பௌத்த பிக்குகள் பலரையும் காண முடிந்தது.

முஸ்லிம் இளைஞர்களின் தாக்குதலினால் காயமடைந்து மரணமான சிங்கள சாரதியின் வீட்டுக்கு நேற்றுமுன்தினம் இரவு பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் சென்றிருந்தார்.

இதற்குப் பின்னரே, திகணவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தீவிரமடைந்தன.

monks-led violence (1)

monks-led violence (2)

deldeniya-tention

அதேவேளை, இந்த வன்முறைகளில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 24 சிங்களவர்களை விடுவிக்கக் கோரி, தெல்தெமனிய காவல் நிலையத்தை முற்றுகையிட்டு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரரே தலைமை தாங்கியிருந்தார்.

மரணமான பாரஊர்தி சாரதி, அம்பிட்டியே சுமணரத்ன தேரரின் உறவினர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை, வன்முறையில் ஈடுபட்ட குழுவினரை பௌத்த பிக்குகள் சிலர் வழிநடத்துகின்ற, காட்சிகளும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

வன்முறைகள் இடம்பெற்ற பகுதிகளில் காவியுடையுடன் பௌத்த பிக்குகள் காணப்படும் நிலையில், இந்தச் சம்பவங்களை பௌமத்த பிக்குகள் சிலரே தூண்டிவிட்டுள்ளதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன.

அதேவேளை, வன்முறைகளைத் தூண்டி விட்ட பௌத்த பிக்குகளை கைது செய்யுமாறு அமைச்சர் ரிசாத் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/03/06/news/29518

http://www.puthinappalakai.net/2018/03/06/news/29518

  • தொடங்கியவர்

கண்டியில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்.

 

கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தெனிய மற்றும் பல்லேகல பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்குமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

http://www.virakesari.lk/article/31314

கண்டியில் வன்முறைகளைத் தடுக்க சிறிலங்கா இராணுவமும் களமிறக்கம்

 

kandy-fireகண்டியில் நேற்று வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து, சிறிலங்கா இராணுவமும் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் திகண மற்றும் தெல்தெனிய பகுதிகளில் நேற்று வன்முறைகள் வெடித்தன.

சிறப்பு அதிரடிப்படையினரும், காவல்துறையினரும், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதில் தோல்வியடைந்தனர்.

kandy-fire

இதையடுத்து நேற்று பிற்பகல் 3 மணியளவில் சிறிலங்கா இராணுவத்தின் உதவி கோரப்பட்டது.

காவல்துறையினால் உதவி கோரப்பட்டதை அடுத்து உடனடியாக சிறிலங்கா இராணுவத்தினரை அங்கு அனுப்பி வைத்ததாக, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

“திகண பகுதியில் வன்முறைகளில் ஈடுபட்ட குழுவினரை கட்டுப்படுத்த முற்பட்ட காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து சிறிலங்கா இராணுவத்தின் உதவி கோரப்பட்டது.

திகண பகுதியில் உள்ள சிங்கப் படைப்பிரிவின் முகாமில் இருந்து 200 படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 100 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஏனைய 100 பேர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்“” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை வன்முறைகள் வெடித்துள்ள பகுதிகளில் 1000 சிறிலங்கா காவல்துறையினரும், 200 சிறப்பு அதிரடிப்படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.puthinappalakai.net/2018/03/06/news/29502

  • தொடங்கியவர்
திகனயில் இருவரின் சடலங்கள் மீட்பு
 

திகன நகரிலிருந்து இரு ஆண்களின் சடலங்களை, பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர். 27 வயதுடைய இளைஞர் ஒருவர் உட்பட இருவரின் சடலங்களே, இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

http://www.tamilmirror.lk/மலையகம்/திகனயில்-இருவரின்-சடலங்கள்-மீட்பு/76-212328

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.