Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா விரைகிறார் அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர்

Featured Replies

சிறிலங்கா விரைகிறார் அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர்

 

Jeffrey Feltmanஅரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் இதனைத் தெரிவித்தார்.

நாளை மறுநாள்,( மார்ச் 09) சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன், எதிர்வரும் 11ஆம் நாள் வரை அங்கு தங்கியிருப்பார் என்றும் அவர் கூறினார்.

இதன்போது, சிறிலங்கா அதிபர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களையும் மூத்த அதிகாரிகளையும் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் அவர் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

சிறிலங்காவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையிலும், அவசரகாலச்சட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், ஐ.நா உதவிச்செயலரின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

எனினும், இந்தப் பயணம், அவசரகாலச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னரே திட்டமிடப்பட்டது என்றும், சிறிலங்காவுக்கும் ஐ.நாவுக்கும் இடையில் தொடருகின்ற ஒத்துழைப்புகளை அடிப்படையாகக் கொண்டது என்றும்,ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவிருக்கும் மூன்றாவது பயணம் இதுவாகும்.

இவர் ஏற்கனவே, 2015இலும், 2017 பெப்ரவரியிலும், சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2018/03/07/news/29565

  • தொடங்கியவர்

குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோருகிறது ஐ.நா

 

sri-lanka-accountability-un-300x200.jpgசிறிலங்காவில் வெடித்துள்ள இன வன்முறைகள் குறித்து கவலை வெளியிட்டுள்ள ஐ.நா அமைப்பு, இந்த வன்முறைகளுக்குக் காரணமான குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்தைக் கோரியுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைவாக இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் சிறிலங்கா அரசாங்கத்திடம் ஐ.நா கோரியுள்ளது.

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலை தொடர்பாக, கொழும்பில் உள்ள ஐ.நா பணியகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் மேலும், அண்மைய இன வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஐ.நா கவலையடைந்துள்ளது. இந்தச் செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கிறது.

சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதை உறுதி செய்யுமாறும், மனித உரிமைகளைப் பாதுகாக்குமாறும், அனைவரதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும், அதிகாரிகளையும், அனைத்து இலங்கையர்களையும் ஐ.நா கோருகிறது.” என்று கூறப்பட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2018/03/07/news/29594

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.