Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் நிலையை கண்டிக்கும் கிரிக்கெட் வீரர்கள்

Featured Replies

இலங்கையின் நிலையை கண்டிக்கும் கிரிக்கெட் வீரர்கள்
 

image_4df7013462.jpgஇலங்கையின் தற்போதைய நிலைத் தொடர்பில் இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர்களான மஹேல, சங்கக்கார மற்றும் சனத் ஜயசூரிய ஆகியோர் தமது கருத்துக்களை டுவிட்டர் வலைத்தளம் மூலம் பதிவிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் வெறுப்படைவதாக சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இதனை தான் வன்மையாக கண்டிப்பதாகவும், இதுதொடர்பில் தேவையான சட்டநடவடிக்கையை எடுக்குமாறும் ,இலங்கை மக்கள் இந்த சந்தர்ப்பத்தில் பொறுப்புடனும், புத்திசாதூரியத்துடனும் செயற்படுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை, மதம், இனம் என்ற காரணத்தால், பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும், நாம் ஒரே நாடு, ஒரே இனம் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அத்துடன், தற்போதைய அசாதாரண சூழ்நிலையை வன்மையாக கண்டிப்பதாகவும், தான் 25 வருடமாக யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் பிறந்து வளர்ந்துள்ள போதிலும், புதிய சந்ததியினர் அவ்வாறான நிலையின் கீழ் வாழவேண்டிய அவசியமில்லை என்றும் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன பதிவிட்டுள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/இலங்கையின்-நிலையை-கண்டிக்கும்-கிரிக்கெட்-வீரர்கள்/175-212405

  • தொடங்கியவர்

சங்கா, மஹேல நாட்டு மக்களுக்கு விடுக்கும் விசேட செய்தி !

 

 

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையையடுத்து இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களாகிய குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியார் தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் நாட்டு மக்களுக்கு விசேட செய்தியொன்றை பதிவிட்டுள்ளனர்.

இந்நிலையில் குமார் சங்கக்கார தனது டுவிட்டர் பக்கத்தில் 

kumar.PNG

மதத்தை காரணம் காட்டி நீங்கள் எவரும் மற்றவருக்கு தீங்கு ஏற்படுத்தவோ பாதகம் விளைவிக்கவோ முடியாது. 

நாம் எல்லோரும் ஒரே நாட்டு மக்கள். அன்பு , நம்பிக்கை மற்றும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை எம் மக்களின் பழக்கவழக்கங்களாக இருக்க வேண்டும்.

நாம் அனைவரும் இனவாதம் மற்றும் வன்முறைக்கு  ஏதிராக ஒன்றிணைவோம் என அவரது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மஹேல ஜயவர்தன தனது டுவிட்டர் பக்கத்தில்,

mahela.PNG

நாட்டில் இடம்பெற்றுவரும் செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கின்றேன் . இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்ட வேண்டும். 

நான் கடந்த 25 வருடகாலமாக உள்நாட்டு யுத்த சூழலில் வளர்ந்தேன். எமது அடுத்த தலைமுறையாவது இந்த நிலைமையை காணாது உருவாக அனைவரும் ஒத்துழைப்போம் என மஹேல தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

http://www.virakesari.lk/article/31371

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.