Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்து மைந்தர்களின் சமரில் ஆதிக்கம் செலுத்தும் யாழ் இந்துக் கல்லூரி

Featured Replies

stx-cricket-615x400-615x400.jpg

யாழ். இந்து 37 ஓட்டங்களுடன் களத்தில்

 

இந்துக்களின் போர் என வர்ணிக்கப்படும் மாபெரும் துடுப்பாட்டப்போட்டி யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.

முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு, பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி 165 ஓட்டங்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

தற்போது யாழ். இந்துக் கல்லூரி விக்கெட் எதுவும் இழக்காத நிலையில் 37 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடிவருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

http://newuthayan.com/story/74794.html

28795081_1231609713636438_8124547643343140193_n.png?oh=5435161c56f37ad720d728ae46921c2d%26oe=5B0222A0&key=817cc96b53857af74533b591b6b3c612613fd175fcc6c5ce6f368c50444d6162

 

 

 

 

இந்து மைந்தர்களின் சமரில் ஆதிக்கம் செலுத்தும் யாழ் இந்துக் கல்லூரி

jkl_-696x464.jpg

இந்து மைந்தர்களின் சமர் என அழைக்கப்படும் கொழும்பு (பம்பலபிட்டி) இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டி (BIG MATCH) இன்று (9) 9ஆவது தடவையாக யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது.

கடந்த ஆண்டு கொழும்பில் இடம்பெற்ற இரண்டு அணிகளுக்குமிடையிலான ஆண்டுச் சமர் (8ஆவது) சமநிலை முடிவை எட்டியிருந்ததை அடுத்து, இம்முறை வெற்றி எதிர்பார்ப்புக்களுடன் இரண்டு அணிகளும் களமிறங்கியிருந்தன.

இரண்டு நாட்கள் இடம்பெறும் (9,10) போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு இந்துக் கல்லூரி அணியின் தலைவர் சரண் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமது அணிக்காக தெரிவு செய்து கொண்டார்.

 

இதன்படி, பிரவீன் குமார் மற்றும் கெனிஷன் ஆகியோருடன் கொழும்பு  இந்துக் கல்லூரி தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்திருந்தது. ஆரம்ப வீரர்களில் ஒருவரான பிரவீன் குமாரின் விக்கெட்டினை 8 ஓட்டங்களுடன் ஆடுகளத்துக்குச் சொந்தக்காரர்களான யாழ் இந்துக் கல்லூரி அணியினர் சந்துருவின் ஓவரில் கைப்பற்றியிருந்தனர்.

இதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கெனிஷனையும் சந்துரு 17 ஓட்டங்களுடன் ஓய்வறை அனுப்பினார்.

தொடர்ந்து கொழும்பு இந்துக் கல்லூரியின் துடுப்பாட்ட இன்னிங்சை களத்தில் நின்ற தினேஷ் மற்றும், புதிய துடுப்பாட்ட வீரராக வந்திருந்த ஷேவாக் ஆகியோர் முன்னெடுத்துச் சென்றனர்.

இரண்டு வீரர்களினதும் சிறந்த ஆட்டத்தினால் கொழும்பு பாடசாலைக்கு மூன்றாம் விக்கெட் இணைப்பாட்டமாக 65 ஓட்டங்கள் கிடைத்திருந்தது. தொடர்ந்து, ஷேவாக் 24 ஓட்டங்களுடன் கொழும்பு இந்துக் கல்லூரியின் மூன்றாம் விக்கெட்டாக மைதானத்தை விட்டு வெளியேறியிருந்தார்.

எனினும், தினேஷ் பெற்றுக் கொண்ட அரைச்சதம் மூலம் கொழும்பு இந்துக் கல்லூரி வலுப் பெற்றுக் கொண்டது. தினேஷின் விக்கெட்டை அடுத்து சடுதியான முறையில் துடுப்பாட்ட வீரர்களை இழந்த கொழும்பு இந்துக் கல்லூரி அணியினர் 45.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 165 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டனர்.

கொழும்பு இந்துக் கல்லூரியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக தினேஷ் 65 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கலாக 66 ஓட்டங்களினை குவித்திருந்தார். இதேவேளை, யாழ்ப்பாண இந்துக் கல்லூரியின் பந்துவீச்சில் சிவலுனன் வெறும் 49 ஓட்டங்களை விட்டுத் தந்து 5 விக்கெட்டுக்களையும், கோபிராம் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை யாழ் இந்துக் கல்லூரி ஆரம்பித்திருந்தது. யாழ் இந்துக் கல்லூரி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான G. சந்தோஷ் 32 ஓட்டங்களுடன் அணிக்கு பெறுமதி சேர்ந்திருந்தார்.

சந்தோஷூக்கு கைகொடுத்த ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான U. மிலுக்ஷன் அரைச்சதம் கடக்க கொழும்பு இந்துக் கல்லூரியின் முதல் இன்னிங்ஸ் மொத்த ஓட்டங்களை இலகுவாக யாழ்ப்பாண வீரர்கள் தாண்டினர்.

மிலுஷனின் விக்கெட் கொழும்பு இந்துக்கல்லூரி வீரர் கெனிஷனின் பந்துவீச்சில் பறிபோயிருந்தது. ஆட்டமிழக்கும் போது மிலுஷன் 120 பந்துகளுக்கு 10 பெளண்டரிகள்  2 சிக்ஸர்கள் அடங்கலாக 71 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.

 

தொடர்ந்து வந்த வீரர்களில், Y. விருஷனும் அரைச்சசதம் ஒன்றுடன் உதவ போட்டியின் முதல் நாள் முடிவில் யாழ். இந்துக் கல்லூரியானது முதல் இன்னிங்சுக்காக 4 விக்கெட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களை குவித்து வலுப்பெற்றிருந்தது.

அரைச்சதம் ஒன்றினை தாண்டிய நிலையில் (50*) விருஷனும், R. கஜனநாத் 33 ஓட்டங்களுடனும் களத்தில் நிற்கின்றனர்.

கொழும்பு இந்துக் கல்லுரியின் இன்றைய பந்துவீச்சு சார்பாக கெனிஷன் இரண்டு விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு இந்துக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 165 (45.4) – தினேஷ் 66, ஷேவாக் 24, சிவலுனன் 49/5, கோபிராம் 17/3, சந்துரு 38/2

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 212/4 (42) – U. மிலுக்ஷன் 71, Y. விருஷன் 50*

போட்டியின் இரண்டாம் மற்றும் இறுதி நாள் ஆட்டம் நாளை தொடரும்

 

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
  • வெற்றி வாய்ப்புடன் – யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி!!
IMG_7972-738x430.jpg

வெற்றி வாய்ப்புடன் – யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி!!

 

இந்­துக்­க­ளின் போர் என்று வர்­ணிக்­கப்­ப­டும் யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூ­ரிக்­கும் கொழும்பு இந்­துக் கல்­லூ­ரிக்­கும் இடை­யி­லான துடுப்­பாட்­டத்­தில் முத­லா­வது இன்­னிங்­ஸில் முன்­னிலை பெற்­றது யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல் லூரி அணி.

யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூ­ரி­யின் மைதா­னத்­தில் நேற்று இந்த ஆட்­டம் ஆரம்­ப­மா­னது.

முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய கொழும்பு இந்­துக் கல்­லூரி அணிக்கு ஆரம்ப வீரர்­க­ளாக பிர­வீன்­கு­மார் மற்­றும் கேணி­சன். 8 ஓட்­டங்­க­ளு­டன் ஆட்­ட­மி­ழந்­தார் பிர­வீன்­கு­மார். பிர­ வீன்­கு­மாரை வெளி­யேற்­றிய சந்­துரு கேணி­ச­னை­யும் வெளி­யேற்­றி­னார்.

டினேஸ் நிலைத்து நின்­றார் அவ­ரு­டன் இணைந்து சிறந்த ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­தி­னார் சேவாக். 24 ஓட்­டங்­க­ளு­டன் சேவாக்கை வீழ்த்­தி­னார் சிவ­லக்­சன். அரைச்­ச­தம் கடந்­தார் டினேஸ் அவர் 66 ஓட்­டங் க­ளு­டன் ஆட்­ட­மி­ழந்­தார். பின் வ­ரி­சை­யில் எவ­ரும் பெரி­ய­ள­வில் பிர­கா­சிக்­க­வில்லை. முடி­வில் 165 ஓட்­டங்­க­ளில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்­தது கொழும்பு இந்­துக் கல்­லூரி அணி.

 

பந்­து­வீச்­சில் சிவ­லக்­சன் 5 இலக்­கு­க­ளை­யும், கோபி­ராம் 3 இலக்­கு­க­ளை­யும் சந்­துரு 2 இலக்­கு­க­ளை­யும் கைப்­பற்­றி­னர். பதி­லுக்­குக் கள­மி­றங்­கிய யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி அணிக்கு ஆரம்­பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளாக சந்­தோஸ் மற்­றும் மிலக்­சன். 38 ஓட்­டங்­க­ளு­டன் ஆட்­ட­மி­ழந்­தார் சந்­தோஸ். தனு­ஜன் 10 ஓட்­டங்­க­ளு­ட­னும் நரேஸ் 5 ஓட்­டங்­க­ளு­ட­னும் ஏமாற்­றி­ னர்.

மறு­மு­னை­யில் அரைச்­ச­தம் கடந்­தார் மிலக்­சன். அவர் 71 ஓட்­டங்­க­ளைப் பெற்று வீழ்ந்­தார். நாள் முடி­வில் யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி அணி 4 இலக்­கு­களை இழந்து 213 ஓட்­டங்­க­ளைப் பெற்­றுள்­ளது. விது­சன் 50 ஓட்­டங்­க­ளு­ட­னும் கஜா­னன் 33 ஓட்­டங் களு­ட­னும் களத்­தில் உள்­ள­னர்.

IMG_8038-300x109.jpg

IMG_8065-300x272.jpg

IMG_8027-300x275.jpg

IMG_7977-300x200.jpg

IMG_8016-213x300.jpg

http://newuthayan.com/story/74938.html

  • தொடங்கியவர்

இந்த ஆண்டுக்கான இந்து மைந்தர்களின் சமர் சமநிலையில்

ukuk-696x464.jpg

9ஆவது தடவையாக நடைபெற்று முடிந்திருக்கும் இந்து மைந்தர்களின் சமர் என அழைக்கப்படும் கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி (BIG MATCH) இம்முறை சமநிலையில் முடிவுற்றது.

இரண்டு நாட்கள் கொண்ட இந்தப் போட்டி நேற்றைய தினம் (9) யாழ் இந்துக் கல்லூரியின் சொந்த மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது.

போட்டியின் முதல் நாளான நேற்று (9) முதலில் துடுப்பாடியிருந்த கொழும்பு (பம்பலபிட்டி) இந்துக் கல்லூரி அணியானது 165 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் முதல் இன்னிங்சில் பறிகொடுத்திருந்தது. இதனை அடுத்து தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடியிருந்த யாழ் இந்துக் கல்லூரி அணியானது முதல் நாள் முடிவில் 212 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து வலுவான நிலையொன்றில் காணப்பட்டிருந்தது. களத்தில் விருஷன் 50 ஓட்டங்களுடனும், கஜநாத் 33 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது நின்றிருந்தனர்.

 

 

 

போட்டியின் இரண்டாவதும் மற்றும் இறுதியுமான இன்றைய நாளில் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை எதிரணியினை விட 47 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு தொடர்ந்த யாழ் இந்துக் கல்லூரி அணியினர் சிறந்த மத்திய வரிசைத் துடுப்பாட்ட வீரர்களின் துணையோடு 68.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 333 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.

யாழ் இந்துக் கல்லூரியின் துடுப்பாட்டத்தில், அரைச்சதம் தாண்டிய R. கஜநாத் 53 ஓட்டங்களையும் அதிரடி காட்டிய கோமைந்தன் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 39 பந்துகளுக்கு 43 ஓட்டங்களையும் குவித்திருந்தனர்.

கொழும்பு இந்துக் கல்லூரியின் பந்துவீச்சு சார்பாக கெனிஷன் 82 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், ஆகாஷ் 2 விக்கெட்டுக்களையும் சுருட்டியிருந்தனர்.

இதனையடுத்து 168 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் கொழும்பு இந்துக் கல்லூரி அணியானது தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்தது.

இந்த முறைக்கான கொழும்பு இந்துக் கல்லூரியின் துடுப்பாட்ட இன்னிங்சில் தினேஷ் மற்றும் அணித் தலைவர் சரோன் ஆகியோர் அரைச்சசதம் தாண்டியிருந்தனர்.

இவர்களின் உதவியோடு யாழ் இந்துக் கல்லூரி அணியின் முதல் இன்னிங்ஸ் முன்னிலையை (168) தாண்டிய கொழும்பு இந்துக் கல்லூரி வீரர்கள் 74 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 223 ஓட்டங்களைக் குவித்திருந்த போது இரண்டாம் நாளுக்கான ஆட்ட நேரம் முடிவுக்கு வர இந்த ஆண்டுக்கான இந்து மைந்தர்களின் சமர் சமநிலை அடைந்தது.

 

 

கொழும்பு இந்துக் கல்லூரியின் துடுப்பாட்டத்தில் இரண்டாவது தடவையாக பெற்ற அரைச்சதத்துடன் தினேஷ் 80 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இதேவேளை, S. சரோனினாலும் 56 ஒட்டங்கள் பெறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

யாழ் இந்துக் கல்லூரியின் பந்துவீச்சு சார்பாக சிவலக்ஷன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு முடிவோடு, இந்து மைந்தர்களின் மாபெரும் கிரிக்கெட் சமர் கடந்த இரண்டு வருடங்களிலும் சமநிலையே அடைந்திருக்கின்றது. 2016 ஆம் ஆண்டு நடைபெற்றிருந்த தொடரில் கொழும்பு இந்துக் கல்லூரியானது வெற்றியைச் சுவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு இந்துக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 165 (45.4) – தினேஷ் 66, ஷேவாக் 24, சிவலுக்ஷன் 49/5,கோபிராம் 17/3, சந்துரு 38/2

யாழ் இந்துக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 333 (68.5) – U. மிலுக்ஷன் 71, கஜநாத் 53, விருஷன் 50, கோமைந்தன் 43, கெனிஷன் 82/3

கொழும்பு இந்துக் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 223/6 (74) – தினேஷ் 80, S. சரோன் 56, சிவலுக்ஷன் 100/3

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.

இந்த ஆண்டுக்கான சமரின் விருதுகள்

சிறந்த களத்தடுப்பாளர் – S. சரோன் (கொழும்பு இந்துக் கல்லூரி)

சிறந்த துடுப்பாட்ட வீரர் – U. மிலுக்ஷன் (யாழ் இந்துக் கல்லூரி)

சிறந்த பந்துவீச்சாளர் – L. சிவலுக்ஷன் (யாழ் இந்துக் கல்லூரி)

போட்டியின் ஆட்ட நாயகன் – G. தினேஷ் (கொழும்பு இந்துக் கல்லூரி)

http://www.thepapare.com

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.