Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணம் எடுத்து வரப்பட்ட ரூபா 80 இலட்சம் பணம் மாயம்!!

Featured Replies

  • யாழ்ப்பாணம் எடுத்து வரப்பட்ட ரூபா 80 இலட்சம் பணம் மாயம்!!
money-600x444-600x430.jpg

யாழ்ப்பாணம் எடுத்து வரப்பட்ட ரூபா 80 இலட்சம் பணம் மாயம்!!

 

அநு­ரா­த­பு­ரத்­தி­லி­ருந்து யாழ்ப்­பா­ணத்துக்கு எடுத்து வரப்­பட்ட 80 இலட்­சம் ரூபா பணம் திரைப்­ப­டப் பாணி­யில் திரு­டப்­பட்­டது. அரச வங்கி ஒன்­றுக்­காக நேற்­று­முன்­தி­னம் வாக­னத்­தில் இர­க­சி­ய­மாக எடுத்து வரப்­பட்­ட­போதே பணம் காணா­மற்­போ­யுள்­ளது.

திருட்­டுத் தொடர்­பான சந்­தே­கத்­தில் பணத்தை எடுத்து வந்த வங்கி ஊழி­யர்­கள் மூவ­ரும் அவர்­க­ளுக்­குக் காவ­லுக்­குச் சென்ற ஒரு­வ­ரு­மாக நால்­வர் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­ட­னர். பய­ணத்­தின் இடை­யில் தேநீர் குடிப்­ப­தற்­கா­கக் கடை ஒன்­றுக்­குள் சென்று திரும்­பு­வ­தற்­கி­டை­யில் பணம் காணா­மற்­போ­யி­ருந்­தது என்று இந்த நால்­வ­ரும் தமது வங்கி அதி­கா­ரி­க­ளி­டம் முறை­யிட்­டி­ருந்­த­னர். இது குறித்த விசா­ர­ணை­க­ளைக் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வுப் பொலி­ஸார் ஆரம்­பித்­துள்­ள­னர்.

வங்கி ஊழி­யர்­கள் மற்­றும் பாது­கா­வ­லரே பணத்­தைத் திரு­டி­விட்டு நாட­க­மா­டு­கி­றார்­கள் என்­கிற சந்­தே­கத்­தின் பேரி­லேயே பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்டனர். எனி­னும் அவர்­க­ளி­டம் இருந்து இது­வ­ரை­யில் பணம் மீட்­கப்­ப­ட­வில்லை. விசா­ர­ணை­கள் தொடர்­கின்­றன.

வங்­கித் தேவைக்கு அவ்­வப்­போது இப்­படி வாக­னத்­தில் பணம் எடுத்து வரப்­ப­டு­வது வழமை. அது­போன்றே அன்­றும் அநு­ரா­த­பு­ரத்­தில் இருந்து 80 லட்­சம் ரூபா பணத்­து­டன் வாக­னம் யாழ்ப்­பா­ணம் நோக்­கிப் புறப்­பட்­டது. வாக­னத்­தில் வங்­கிப் பணி­யா­ளர்­கள் மூவ­ரும் அவர்­க­ளுக்­குப் பாது­காப்­பாக ஆயு­தம் தாங்­கிய காவ­லர் ஒரு­வ­ரும் இருந்­த­னர்.

 

இடை­யில் தேநீர் அருந்­து­வ­தற்­கா­கக் கடை ஒன்­றின் முன்­பாக வாக­னத்தை நிறுத்­தி­விட்­டுத் தாம் உள்ளே சென்று திரும்பி வந்து பார்த்­தால் வாக­னத்­தில் இருந்த பணம் மாய­மாகி இருந்­தது என்று வங்கி ஊழி­யர்­கள் தெரி­விக்­கின்­ற­னர் என்று பொலி­ஸார் கூறி­னர். அவர்­கள் தேநீர் அருந்த எங்கு இறங்­கி­னர் என்­கிற தக­வ­லைத் தெரி­விக்­கப் பொலி­ஸார் மறுத்­து­விட்­ட­னர்.

பணம் மாய­மா­னதை அடுத்து ஊழி­யர்­கள் உட­ன­டி­யாக யாழ்ப்­பா­ணத்­தில் உள்ள வங்கி முகா­மை­யா­ள­ருக்கு அது தொடர்­பில் தக­வல் தந்­த­னர். அவர் யாழ்ப்­பா­ணம் பொலிஸ் நிலை­யத்­தில் உட­ன­டி­யாக முறைப்­பாடு செய்­தார். துரி­த­மாக விசா­ர­ணை­களை ஆரம்­பித்த பொலி­ஸார் பணத்­து­டன் வந்த ஊழி­யர்­கள் மற்­றும் காவ­லரை விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தி­னர்.

அவர்­களே பணத்­தைத் திரு­டி­விட்டு நாட­க­மா­டக்­கூ­டும் என்ற கோணத்­தில் பொலிஸ் சந்­தே­கிக்­கின்­றது. பெருந் தொகைப் பணம் திரு­டப்­பட்­டி­ருப்­ப­தால் இது குறித்­துக் குற்ற விசா­ர­ணைப் பிரி­வுப் பொலி­ஸா­ரும் தமது விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­னர். கைது செய்­யப்­பட்­ட­வர்­களை நீதி­மன்­றில் முற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கையை பொலி­ஸார் மேற்­கொண்­டுள்­ள­னர்.

http://newuthayan.com/story/75194.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.