Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவில் கடும் காற்றுடன் கடற்கொந்தளிப்பு

Featured Replies

முல்லைத்தீவில் கடும் காற்றுடன் கடற்கொந்தளிப்பு

 

முல்லைத்தீவு, நாயாறு பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களை காணவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். அப்பகுதியில் கடும் காற்று வீசுவதாகவும் இதனால் மீனவர்களை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு கடற்பகுதியில் இன்று ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் கரையோரப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் தற்பொழுது காற்று பலமாக வீசிக்கொண்டிருப்பதுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.(15)

http://www.samakalam.com/செய்திகள்/முல்லைத்தீவில்-கடும்-காற/

யாழ்ப்பாணத்தில் காற்றுடன் கூடிய மழை

 

யாழ்ப்பாணத்தில் காற்றுடன் கூடிய மழை

கடும் வறட்சியின் பின்னர் யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் நேற்று பரவலபக பெருமழை மழை பெய்துவருகின்றமையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நேற்று காலை முதல் யாழ் மாவட்டத்தின் அநேக பகுதிகளில் அதிக காற்றுடன் மழை பெய்தவருகின்றது.

இதனிடையே இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்ட ஒரு அலைபோன்ற தளம்பல் நிலை ஒரு தாழமுக்கப் பரப்பாக தீவிரமடைந்துள்ளதுடன் அது மேலும் வலுவடையுமென இலங்கையின் காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது(15)

http://www.samakalam.com/செய்திகள்/யாழ்ப்பாணத்தில்-காற்றுட/

  • தொடங்கியவர்

மீன்பிடிக்கச் சென்ற  மீனவர்கள் மூவர் மாயம்

முல்லைத்தீவில் சம்பவம்

முல்லைத்தீவு, நாயாறு பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற  மீனவர்கள் மூவரைக் காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போயுள்ளவர்கள் சிலாபம், பங்கதெனிய பிரதேசங்களை சேர்ந்த 50, 48 மற்றும் 24 வயதானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்பகுதியில் கடும் காற்று வீசுவதாகவும் இதனால் மீனவர்களை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த  நிலையில் முல்லைத்தீவு கடற்பகுதியில் இன்று ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் கரையோரப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் தற்பொழுது காற்று பலமாக வீசிக்கொண்டிருப்பதுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடற்படையின் உதவியுடன் காணாமல் போயுள்ள மீனவர்களை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

http://newuthayan.com/story/75858.html

  • தொடங்கியவர்
‘மீனவர்களை, முப்படையினரும் தேடி வருகின்றனர்’
 

முல்லைத்தீவு நாயாற்று பகுதியில், தொழிலுக்கு சென்று காணாமற்போன 3 மீனவர்களையும் கடற்படையினர், இராணுவ அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் இணைந்து தேடி வருவதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 12ஆம் திகதி அதிகாலை நாயாற்று பகுதியில், தொழிலுக்குச் சென்ற சிலாபத்தைச் சேர்ந்த மில்ராஜ் மிரண்டா (வயது 51), இமானுவேல் மிரண்டா (வயது 48), மிதுறதன் மிரண்டா (வயது 24) ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் காணாமல் போயிருந்தனர்.

நாயாற்று பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் சென்று தேடுதல் நடாத்தியபோதும், குறித்த மூவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து, குறித்த மீனவர்களை மீட்க கடற்படையினர் உதவி புரிய வேண்டும் என நாயாற்று பகுதி மீனவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்நிலையில், குறித்த மீனவர்களை கடற்படையினர், இராணுவ அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் இணைந்து தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, வான் படையினரின் உதவியையும் கோரியிருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

http://www.tamilmirror.lk/வன்னி/மீனவர்களை-முப்படையினரும்-தேடி-வருகின்றனர்/72-212671

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.