Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத்திய கிழக்கு நாடுகள் இலங்கை மீது அதி­ருப்தி

Featured Replies

மத்திய கிழக்கு நாடுகள் இலங்கை மீது அதி­ருப்தி

03-dfa153a70410a9659558a50751c9a71bb31e65f9.jpg

 

(இரா­ஜ­துரை ஹஷான்)

தமி­ழர்கள் மீது 1983ஆம் ஆண்டு மேற்­கொள்­ளப்­பட்ட வன்­முறை தாக்­கு­தல்கள் தொடர்பில் அப்­போ­தைய அர­சாங்கம் மௌனம் காத்­தது.

 இதன் தொடர்ச்­சியை நல்­லாட்சி அர­சாங்­கமும் பின்­பற்றி வரு­கின்­றது. 2015 தொடக்கம் இடம்­பெற்­றுள்ள வன்­முறை சம்­ப­வங்­க­ளுக்கு அர­சாங்­கமே பொறுப்பு கூற வேண்டும் என கூட்டு எதிர்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பிணர் பந்­துல குண­வர்­தன குற்­றம்­சு­மத்­தி­யுள்ளார்

 கண்­டியில் கடந்த தினங்­களில் இடம் பெற்ற வன்­முறை சம்­ப­வங்கள் கார­ண­மாக நாட்டின் அந்­நிய செலா­வணி பெரு­ம­ளவில் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. பல பில்­லியன் டொலர்­களை முத­லீடு செய்ய இலங்­கைக்கு வந்த வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்கள் திரும்பி சென்­ற­மையின் கார­ண­மாக நாட்டின் தேசிய பொரு­ளா­தாரம் குறு­கிய தினங்­களில் சடு­தி­யாக வீழ்ச்சிக் கண்­டுள்­ளது என்றும் அவர் குறிப்­பிட்டார். 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்.

இன வன்­மு­றைகள் நாடு­களில் தோற்றம் பெறு­வது இயல்­பான விட­ய­மா­கவே காணப்­ப­டு­கின்­றது. இலங்கை பல்­லின இனங்­களை கொண்ட நாடு என்ற கார­ணத்­தினால் ஆரம்ப காலம் தொடக்கம் இன­வன்­மு­றைகள் இடம்­பெற்­றுள்­ளதை காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. இன­வன்­மு­றை­களின் போது அர­சாங்­கமே முறை­யான உத்­தி­களை கையாள வேண்டும். அம்­பாறை மற்றும் கண்­டியில் இடம்­பெற்ற வன்­மு­றைகள் தீவி­ர­ம­டைய அர­சாங்­கத்தின் பொறுப்­பற்ற தன்­மையே பிர­தான கார­ணி­யாக காணப்­ப­டு­கின்­றது.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சியை சீர்­கு­லைக்க முயற்­சித்­த­வர்­களின் வெளிப்­பா­டா­கவே அளுத்­கம இன­க­ல­வரம் காணப்­பட்­டது. அன்று அர­சாங்­கத்தில் முக்­கிய பொறுப்பில் காணப்­பட்­ட­வரே அளுத்­கமை வன்­மு­றைக்கு பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யாக இருந்தார். அவரே இன்று நல்­லாட்சி அர­சாங்­கத்­திலும் அர­சியல் விவ­கா­ரங்­களில் ஜனா­தி­ப­தியை விட ஆதிக்கம் செலுத்தி வரு­கின்றார்.

இனக் கல­வ­ரங்­களின் போது அர­சாங்­கமும், சட்டம் ஒழுங்கு அமைச்சும் பொறுப்­பற்ற வித­மா­கவே செயற்­பட்­டது. 2014ஆம் ஆண்டு அளுத்­கமை கல­வ­ரத்தின் போது மஹிந்த ராஜ­பக்ஷ வெளி­நாட்டு விஜ­யத்­தினை மேற்­கொண்­டி­ருந்தார். நாடு திரும்­பி­ய­வுடன் நேர­டி­யாக அளுத்­கமை நக­ருக்கு சென்று பிரச்­சி­னை­களை சுமு­க­மான முறையில் தீர்த்து வைத்தார். கண்டி கல­வ­ரத்­தினை போன்று இழுத்­த­டிக்­க­வில்லை.

 

அம்­பாறை மற்றும் கண்டி கல­வ­ரங்­களின் கார­ண­மாக நாட்­டுக்கு தேசிய மட்­டத்தில் மாத்­தி­ர­மன்றி சர்­வ­தேச மட்­டத்­திலும் பாதிப்­புக்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இலங்கை இன்று மத்திய கிழக்கு நாடுகளின் வெறுப்புக்களை பெற்றுள்ளமயின் காரணமாக பாரிய பொருளாதார பின்னடைவினை எதிர்கொள்ள வேண்டியதாகவுள்ளது. அரசாங்கத்தின் பொறுப்பற்ற நிர்வாகமும், மந்தகரமான செயலொழுங்கும் கலவரத்தினை உக்கிரப்படுத்த பிரதான காரணங்கள் என தெரிவித்தார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-03-13#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.