Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவை சேனாதிராஜாவை முதலமைச்சராக்கிவிட்டு விக்கியை தேசிய அரசியலுக்குள் கொண்டுவரவேண்டும் சிறிதரன் எம்.பி. தெரிவிப்பு ; ஐ.நா.விவகாரங்கள் விக்கியிடம் ஒப்படைக்கப்படவேண்டும் என்கிறார்

Featured Replies

மாவை சேனாதிராஜாவை முதலமைச்சராக்கிவிட்டு விக்கியை தேசிய அரசியலுக்குள் கொண்டுவரவேண்டும்

 

சிறிதரன் எம்.பி. தெரிவிப்பு ; ஐ.நா.விவகாரங்கள் விக்கியிடம் ஒப்படைக்கப்படவேண்டும் என்கிறார்

 

எதிர்­வரும் மாகாண சபை தேர்­தலில் இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ரா­ஜாவை வடக்கு முத­லமைச் சராக்­கி­விட்டு சி.வி.விக்­கி­னேஸ்­வ­ரனை தேசிய அர­சி­ய­லுக்குள் கொண்­டு­வ­ர­வேண்டும். அவரை தேசியத் தலை­வ­ராக்கி சர்­வ­தேச விட­யங்­களை கையாள இட­ம­ளிக்­க­வேண்டும் என்று கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­ஞா னம் சிறி­தரன் தெரி­வித்தார். ஐ.நா. மனித உரிமை பேர­வையின் கூட்டத் தொடரில் கலந்­து­கொள்­வ­தற்­காக ஜெனிவா வந்­  துள்ள சிறி­தரன் எம்.பி. மாவை கேச­ரிக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.  

அவர் அதில் மேலும் குறிப்­பி­டு­கையில்

எதிர்­வரும் மாகாண சபை தேர்­தலில் இலங்கை தமி­ழ­ரசு கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ரா­ஜாவை முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக கள­மி­றக்கி அவரை வடக்கு முத­ல­மைச்­ச­ராக்­கி­வி­ட­வேண்டும். மாவை சேனா­தி­ராஜா மூத்த தலைவர். கடந்த முறை சி.வி. விக்­கி­னேஸ்­வ­ரனை முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக கள­மி­றக்க முன்னர் மாவை சேனா­தி­ரா­ஜாவே போட்­டி­யி­ட­வி­ருந்தார். பின்னர் மாவை சேனா­தி­ராஜா அதனை விட்­டுக்­கொ­டுத்தார். அப்­போது தாங்கள் இரு­வரும் போட்­டி­யிட்டு முத­ல­மைச்சர் பத­வியை பகிர்ந்­து­கொள்­வ­தாக ஆரம்­பத்தில் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் குறிப்­பிட்­டி­ருந்தார்.

எவ்­வா­றெ­னினும் தற்­போ­தைய நிலை­மையில் எதிர்­வரும் மாகாண சபை தேர்­தலில் இலங்கை தமி­ழ­ரசு கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ரா­ஜாவை முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக கள­மி­றக்­க­வேண்டும்.அத்­துடன் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ரனை தேசிய அர­சி­ய­லுக்கு கொண்­டு­வ­ர­வேண்டும். அவரை தேசிய தலை­வ­ராக்கி சர்­வ­தேச விட­யங்­களை கையாள இட­ம­ளிக்­க­வேண்டும். அவரை தேசிய அர­சி­ய­லுக்குள் கொண்டு வந்து தேசிய தலை­வ­ராக்­கி­வி­ட­வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச விடயங்கள் பாதிக்கப்பட்ட மக்களின் விடயங்கள் போன்றவற்றை கையாள்வதற்கான பொறுப்பை விக்கினேஸ்வரனுக்கு வழங்கவேண்டும் என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-03-17#page-1

  • கருத்துக்கள உறவுகள்

சிறிதரன் ஒரே கல்லில் பல மாங்காய்கள் விழுத்தப் பார்க்கிறார். அவர் மாவையில் கரிசனம் கொண்டு இதைச் சொல்லவில்லை.விக்கினேஸ்வரனை அடுத்த முதலமைச்சராக வரவிடக்கூடாது என்பதில் சுமத்திரன் உறுதியாக இருக்கிறார்.சுமத்திரனைக் குளிர்விக்க வேண்டும் அதே நேரம் முதலமைச்சரையும் பகைக்காமல்அடுத்த தேர்தலில் விக்கினேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக வேறு தமி;க்கட்சிகளின் சார்பில் நிறுத்தப்டக்கூடாது என்னும் நிகழ்ச்சி நிரலில் செயற்படுகிறார்.முதலமைச்சர் பதவியில் இருக்கம் போதே அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்த தமிழரசுக்கட்சி அவரை த் தேசிய அரசிலலுக்குள் உள்வாங்காது என்பது. சின்னக் குழந்தைக்கும் தெரியும்.முதலமைச்சர் பதவி இருந்தால் விக்கி தனக்கு வாக்களித்த மக்களுக்கு உண்ழமயாகச் செயற்பட வெண்டும் என்று உழைப்பார். சுத்துமாத்து அரசியலுக்கு ஒத்து வரமாட்டார்.பதவி இல்லாவிட்டால் அரசியலிருந்து ஒதுய்கிவிடுவார். என்னும் நோக்கத்திலான காய்நகர்த்தலே இது.சிறதரன் தான் ஒரு மதில் மேல் பூனை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்

On 3/17/2018 at 10:30 AM, நவீனன் said:

மாவை சேனாதிராஜாவை முதலமைச்சராக்கிவிட்டு விக்கியை தேசிய அரசியலுக்குள் கொண்டுவரவேண்டும்

சிறிதரன் எம்.பி. தெரிவிப்பு ; ஐ.நா.விவகாரங்கள் விக்கியிடம் ஒப்படைக்கப்படவேண்டும் என்கிறார்

தமிழினத்தை கவிழ்ப்பதில் / அழிப்பதில் இது அடுத்த கட்டமாக முன்வைக்கப்படும் சதித்திட்டம்.
இவர் பெற்றுக்கொண்ட இலஞ்சங்களா இவரை இப்படி கதைக்க வைக்கிறது?
அடுத்த தேர்தலில் இவர் வெல்வதே கடினம் என்ற சூழல் ஏற்பட்டு வருகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.