Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

த.தே.கூ.தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டும்: நாடு கடந்த தமிழீழ அரச பிரதிநிதிகள் சிறிதரனிடம் வலியுறுத்தல்

Featured Replies

த.தே.கூ.தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டும்: நாடு கடந்த தமிழீழ அரச பிரதிநிதிகள் சிறிதரனிடம் வலியுறுத்தல் 

 

 

(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

இலங்கை  தொடர்பான ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் கடந்த மூன்று வருடங்களில் எதனையும் செய்யவில்லை. இலங்கைக்கான கால அவகாசம்  முடிவடைவதற்கு   இன்னும் ஒரு வருடமே எஞ்சியுள்ள நிலையில்   அரசாங்கம்  எதனையும் செய்யாது என்பது புரிகின்றது. 

sritharan.jpg

எனவே     இந்த கட்டத்தில்   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  தீர்க்கமான    தீர்மானம் ஒன்றை எடுக்கவேண்டும் என்று   நாடு கடந்த  தமிழீழ அரசாங்கம்  தெரிவித்துள்ளது. 

ஜெனிவா கூட்டத்  தொடரில் பங்கேற்கும் நோக்கில் ஜெனிவா வந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற  உறுப்பினர்  சிறிதரனை நேற்று வௌ்ளிக்கிழமை  ஜெனிவா வளாகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய   நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்  பிரதிநிதிகளான  மாணிக்கவாசகர் மற்றும்  மணிவண்ணன் ஆகியோர் இந்த  விடயத்தை  வலியுறுத்தியுள்ளனர். 

இந்த சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட   நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்  பிரதிநிதிகள் குறிப்பிடுகையில், 

2019 ஆம் ஆண்டுடன்  ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்த  வழங்கப்பட்ட கால அவகாசம்  முடிவுக்கு வந்துவிடும்.    இந்நிலையில் கடந்த  மூன்று வருடங்களில் எதனையும் செய்யாத அரசாங்கம்   எதிர்வரும்  ஒரு வருட காலத்தில்      பொறுப்புக்கூறலை  முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே  அரசாங்கம்  எதனையும் செய்யப்போவதில்லை என்பது    தெளிவாகிவிட்டது.   அந்தவகையில்   தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  ஒரு தீர்க்கமான  தீர்மானத்தை எடுத்து அறிவிக்கவேண்டும். நாங்கள்   இலங்கை விவகாரம்  தொடர்பில் சர்வதேச நாடுகளுடன்  பேச்சு நடத்தும்போது  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றதே என்று  எம்மிடம் சர்வதேச நாடுகள் கேள்வியெழுப்புகின்றன.   தற்போது  இலங்கை  விவகாரம்  சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்படவேண்டும் என்று     புலம்பெயர் அமைப்புக்கள் வலியுறுத்துகின்றன.  இவ்வாறு   அழுத்தம் பிரயோகிப்பதன் மூலமே   தமிழர்கள் தீர்வைப் பெறலாம் என்றார். 

இந்த சந்திப்பில் தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்   சிறிதரன் குறிப்பிடும்போது   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  இன்னும் ஒரு வருடம்  பொறுமைகாக்கவே விரும்புகின்றது என்றும்   அதன் பின்னர்  சர்வதேசத்துடன் இணைந்து எவ்வாறான திட்டத்தை   முன்னெடுக்கலாம் என்பதனை  ஆராய்வோம் என்றும் குறிப்பிட்டார்.  

அத்துடன் இலங்கை விவகாரத்தை  சர்வதேச நீதிமன்றத்துக்கு எவ்வாறு கொண்டு செல்வது என்பது குறித்த வழிவகைகளை  கூறவேண்டும்.    நாம் பொறுமை காக்கின்றோம். முடியாத பட்சத்தில்   சர்வதேசத்துடன் இணைந்து  செயற்படுவோம் என்றார். 

http://www.virakesari.lk/article/31723

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.