Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாவில் திங்கள் இடம்பெறுகிறது இலங்கை குறித்த முதலாவது விவாதம் ; 2 ஆவது விவாதம் புதன்கிழமை

Featured Replies

ஜெனிவாவில் திங்கள் இடம்பெறுகிறது இலங்கை குறித்த முதலாவது  விவாதம் ;  2 ஆவது விவாதம் புதன்கிழமை 

 

 
 

(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

இலங்கை தொடர்பான பூகோள காலக்கிரம மீளாய்வு விவாதம் எதிர்வரும் திங்கட்கிழமை ஜெனிவா மனித உரிமை பேரவையில் நடைப்பெறவுள்ளது. 

37th-session-of-the-Human-Rights-Council

இந்த விவாத்தில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுவதற்காக வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் விசேட கருத்திட்டங்கள் அமைச்சர் சரத் அமுனுகம உள்ளிட்ட உயர் மட்ட தூதுக்குழுவினர் திங்கட்கிழமை ஜெனிவாவிற்கு வரவுள்ளனர். 

அத்துடன் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள் பாதிக்கப்பட்டோர் புலம்பெயர் அமைப்புகளின் பிரதிநிதிகள் சர்வதேச நாடுகளின் தூதுவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த விவாதத்தில் பங்கேற்க உள்ளனர். 

எவ்வாறாயினும் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இக் காலக்கிரம மீளாய்விற்கு  உட்பட்ட நாட்டின் பிரதிநிதி மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் மாத்திரமே இந்த விவாதத்தில் உரையாற்ற முடியும். 

இதன்போது ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற இலங்கை தொடர்பான காலக்கிரம மீளாய்வு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அறிக்கையின் பரிந்துரைகள் விரைவாக அமுல்படுத்தப்பட வேண்டும் என சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் வலியுறுத்த உள்ளனர். 

இதேவேளை குறித்த பரிந்துரைகளை எவ்வாறு அமுல்படுத்துவோம் என்பது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இலங்கையின் சார்பில் இந்த விவாத்தில் உரையாற்ற உள்ளார். 

ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெறவிருந்த இந்த விவாதம் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் அதிகாரிகள் மேற்கொண்ட வேலைநிறுத்தம் காரணமாகவே 19 ஆம் திகதி திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

இதேவேளை 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பாக ஜெனிவா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டு பின்னர் 2017 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை இலங்கை அரசாங்கம் எவ்வாறு அமுல்படுத்தியது என்பது குறித்து ஆராயும் விவாதம் எதிர்வரும் புதன் கிழமை ஜெனிவாவில் நடைப்பெறவுள்ளது. 

இந்த விவாத்திலும் இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார். இந்த விவாத்தின் போது ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர்  செயிட் அல் ஹுசைன் இலங்கை தொடர்பான இடைக்கால அறிக்கையினை வெளியிட உள்ளார்.  

செயிட் அல் ஹசைனின் அறிக்கை ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில் அதன் சாரம்சத்தையே புதன்கிழமை முன்வைப்பார். இந்த விவாத்தில் ஐ. நா. மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டு உரையாற்றவுள்ளனர். 

http://www.virakesari.lk/article/31722

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.