Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனி அம்மாவும் இல்ல நீங்களாவது எங்களோடு இருங்க அப்பா – சங்கீதா மனதை உருக்கிய கேள்வியும் காட்சியும்

Featured Replies

இனி அம்மாவும் இல்ல நீங்களாவது எங்களோடு இருங்க அப்பா – சங்கீதா மனதை உருக்கிய கேள்வியும் காட்சியும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – மு.தமிழ்ச்செல்வன் –

Sangeetha-_8964.jpg?resize=800%2C533

 

 

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்                  – மு.தமிழ்ச்செல்வன் –

இனி அம்மாவும் இல்ல நீங்களாவது எங்களோடு இருங்க அப்பா – சங்கீதா

‘இனி அம்மாவும் இல்ல நீங்களாவது எங்களோடு இருங்க அப்பா’  கட்டாயப்படுத்தி சிறைச்சாலை பேரூந்திலிருந்து சங்கீதா பொலீஸாரால் கீழே இறக்கப்படும் போது தந்தையிடம் அவள் கெஞ்சிக் கேட்டுக்கொண்டது இவ்வாறுதான்.தாய் இன்றி நிர்க்கதியான தனது மகள் தன்னை தன்னோடு இருங்கள் என்று ஏக்கத்தோடு கெஞ்சிய போது ஆனந்தசுதாகரின் உணர்வுகள் எப்படியிருந்திருக்கும்! வார்த்தைகளால் அதனை எழுதமுடியவில்லை.  மகளின் இந்தக் கேள்விக்கு கண்ணீரை மட்டும் பதிலாக வழங்கிவிட்டு தலையை குனிந்து கொண்டார் அந்த தந்தை. இந்தக்காட்சிகள் அங்கிருந்த பலரின்  கண்களையும் கலங்கவைத்தது.

Sangeetha-_8947.jpg?resize=800%2C533

2008 ஆம் ஆண்டு பிலியந்தலை பேரூந்து  குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அரசியல் கைதியாக இருந்த சச்சிதானந்தம் ஆனந்தசுதாகருக்கு கடந்த வருடம் கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

எனவே சங்கீதா பிறந்தது முதல் தனது தந்தையின் அரவணைப்பை இழந்தாள்.பத்து வயது வரை தாய் யோகராணியுடன் வாழ்ந்த சங்கீதா தனது அப்பாவை  பற்றி கேட்கும்போதெல்லாம்அப்பா கொழும்பில் இருகின்றார் வருவார் வருவார் என இதுவரை   ஆறுதல் சொல்லி வந்த அம்மாவும் இல்லை,

எனவேதான் கொழும்பிலிருந்து வந்த அப்பா என்றாலும் தங்களோடு இருக்க வேண்டும் என்பதே  சங்கீதாவின் விருப்பம். ஆனாலும் பத்து வயதேயான சங்கீதாவுக்கு தனது தந்தையின் நிலைமைகள் புரியவில்லை. ஆயுள் தண்டனையின் விளக்கம் அவளுக்கு தெரிந்திருக்கவில்லை இதனால்தான்  நீங்களாவது எங்களோடு இருங்கள் அப்பா, நாளான்றைக்கு (நாளை மறுதினம்) வருவீங்கள்தானே என்ற கேள்விகள் எழுகின்றன.

Sangeetha-_8936.jpg?resize=800%2C533

2008 ஆம் ஆண்டு ஆனந்தசுதாகர் கைது செய்யப்படும் போது சங்கீதா தாயின் கருவில் எட்டு மாத சிசு, சங்கீதாவின் அண்ணன் கனிதரனுக்கு இரண்டு வயது,  இருவரும் விபரம் தெரிந்த நாள் முதல்  தந்தையை சிறைக்குள்ளேயே பார்த்திருக்கின்றனர்.

 தனது குழந்தைகளை ஆரத்தழுவி உச்சிமுகர்ந்து நெற்றியில் முத்தமிட்டு பாசத்தை பரிமாற இடையில் இருந்த கம்பிகள் ஆனந்தசுதாகருக்கு தடையாகவே இருந்து வந்தன. ஏனைய பிள்ளைகள் போன்று தாங்களும் அப்பாவுடன் செல்லமாக சண்டை பிடிக்க வேண்டும், கடைக்கும் கடற்கரைக்கும் செல்ல வேண்டும், கோயில் திருவிழாவுக்கு  போகவேண்டும், அங்கு அப்பாவுடன் சண்டையிட்டு விளையாட்டுப் பொருட்களை வாங்கவேண்டும், அப்பா அம்மா என எல்லோருடன் சேர்ந்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட வேண்டும், பண்டிகை காலத்தில் முற்றத்தில்  அப்பாவுடன் வெடி கொளுத்தி விளையாட வேண்டும்.அப்பாவின் தோளில் முதுகில் ஏறி சுற்றவேண்டும், அப்பாவின் மடியிலிருந்து சாப்பிட வேண்டும் போன்ற எல்லா ஆசைகளும் இப் பிஞ்சுகளிடமும் இருந்ன ஆனால் அரசியல் கைதி என்ற ஒரு சொல் அதனை அப்படியே குழி தோண்டி புதைத்துவிட்டது.

சங்கீதாவின் அம்மம்மா சொன்னார் பாடசாலைக்கு ஏனைய குழந்தைகள் தங்களது அப்பாக்களுடன் வரும் போது கனிதரனும் சங்கீதாவும் ஒரு வித ஏக்கத்தோடு பார்பார்கள் என்றும் அந்த பார்வை தாங்களும் இவ்வாறு அப்பாவோடு பாடசாலைக்கு வரவேண்டும் என்பதாகவே இருக்கும் என்றும் சொன்னார். இப்படி  இந்தக் குழந்தைகளிடம் எண்ணற்ற ஏக்கங்கள்.

Sangeetha-_8961.jpg?resize=800%2C533

கடந்த 15 ஆம் திகதி  தாய் இறந்த பின்பு தந்தையை  அழைத்து வருவதற்கான முயற்சிகள் இடம்பெற்றுது. அதன் போது அப்பா வருவார் என்ற செய்தி அவர்களிடத்தில் கூறப்பட்ட போது தாயின் பிரிவு துயரிற்குள்ளும் குழுந்தைகளின் முகங்களில் மலர்ச்சி ஏற்பட்டதாக உறவினர்கள் சொன்னார்கள். அப்பா வரும் போது அம்மாவும் இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று   அந்தப் பிஞ்சுக் குழந்தைகள் எண்ணியிருக்கலாம்?

முதல் முதலாக  தனது குழந்தைகளை ஆரத் தழுவி கட்டியணைத்துக்கொள்ளும் சந்தர்ப்பம் தனது மனைவின்  மரணத்தில்தான் இடம்பெறும் என்று ஆனந்தசுதாகர் ஒரு போதும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. தாயின் இறுதி நிகழ்வில் குழந்தைகள் இருவரும் தாயின் உடலை பார்த்த தருணங்களை விட தந்தையின் முகத்தை பார்த்த தருணங்களே அதிகம்.

மரணச்சடங்கு நடந்துகொண்டிருக்கும் போது அடிக்கடி தந்தையுடன் சென்று ஒட்டிக்கொள்ளும் காட்சிகள் குழந்தைகளின்  தந்தை மீதான ஏக்கத்தை வெளிப்படையாகவே  காட்டி நின்றது

இறுதி ஊர்வலம் கனிதரன் கொள்ளிக்குடத்துடன் சுடுகாடு நோக்கி  நடக்கின்றான். அப்போது அவனின் எண்ணங்கள் தான் திரும்பி வரும் போது அப்பா வீட்டில்  இருக்க வேண்டும் என்பதே, கடவுளே நான் சுடலைக்கு சென்று திரும்பி வரும்வரை அப்பாவை வீட்டில் வைத்திரு என்று வேண்டிக்கொண்டு சென்றதாக  சொன்னான்.

Sangeetha-8941.jpg?resize=800%2C533

ஆனாலும்  அவனது வேண்டுதல்கள் நிறைவேறவில்லை, அவன் வீடு வந்த போது தந்தை மீண்டும் சிறைச்சாலை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். இது அவனது மனதை வெகுவாக பாதித்திருக்கிறது. சுடுகாட்டுக்குச் சென்று ஆவலோடு திரும்பியவன் முதலில் கேட்டது அப்பா எங்கே  என்றுதான். இது ஒருபுறமிருக்க

தாயின் உடல் சுடலையை நோக்கிச் சென்றுக்கொண்டிருக்க தந்தையின் சிறைச்சாலை பேரூந்து கொழும்பு மகசீன் நோக்கி செல்ல தயாரான போது அதற்கிடையில் கிடைத்த சிறிது நேரத்தில்  ஆனந்தசுதாகர் தனது மகளை அரவணைந்து மடியில் வைத்துக்கொள்கின்றார்.

முதன் முதலாக அப்பாவின் மடியில் அமர்ந்து கொள்வதற்கான வாய்ப்பு சங்கீதாவுக்கு அம்மாவின் மரணத்தில் கிடைக்கிறது. தனது மனைவியின் மரணத்தில் தனது மகளை பத்து வயதில் மடியில் இருத்திக்கொள்கின்றார் ஆனந்தசுதாகர். அப்பாவின் மடியில் இருந்துகொண்டே அவரின் முகத்தை ஏக்கத்தோடு பார்க்கின்றாள் சங்கீதா. அவளின் பார்வை அப்பாவின் மடியில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்பதன் வெளிப்பாடாகவே காணப்பட்டது.

அம்மா இல்லா வீட்டில்  இருப்பதனை விட அப்பாவுடன் சிறைசாலையில்  இருப்பது மகிழ்ச்சியாய் இருக்கும் என்று எண்ணியிருப்பாளோ என்னவோ ஆனந்தசுதாகர் சிறைச்சாலை பேரூந்தில் ஏற்றப்பட்ட போது சங்கீதாவும் அவருடன் பின்தொடர்ந்து அந்த பேரூந்தில் ஏறிய காட்சி உணர்வுகளின்  உச்சக் கட்டமாக இருந்தது.

இந்தக் காட்சி அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது. தந்தையை பிரிய மனமில்லாத அந்தப் பிஞ்சுக்கு தாயில்லாத இந்த வெளி உலகத்தை விட  தந்தையிருக்கும் சிறைச்சாலை தனக்கு மகிழ்ச்சியை தரும் என எண்ணியமை கல் மனதையும் கசிய வைத்த சம்பவமாகவே  காணப்பட்டது.

Sangeetha-8951.jpg?resize=800%2C533

எல்லோரும் கண்கலங்கி நிற்க எதையும் அலட்டிக்கொள்ளாதவளாக சிறைச்சாலை பேரூந்துக்குள் ஏறிவிட்டாள் சங்கீதா. சற்றும் இதனை எதிர்பார்த்திராத காவல் கடமையில்  இருந்த பொலீஸாருக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலையில் தங்களை சுதாகரித்துக்கொண்டு சங்கீதாவை சிறைச்சாலை பேரூந்திலிருந்து  கட்டாயமாக இறக்கிவிடுகின்றனர்.

சங்கீதா இறக்கப்படுகின்ற போது  தந்தையிடம் அப்பா  இனி அம்மாவும் இல்லை, நீங்களாவது எங்களோடு இருங்கள் எனவும் நாளான்டைக்கு வருவீங்கள்தானே எனவும் கேட்கும் அந்த தருணம் வேதனையின் உச்சக் கட்டமாக இருந்தது. ஆனந்தசுதாகர் மகளின் இந்தக் கேள்விக்கு கண்ணீரை மட்டும்  பதிலாக  வழங்கி விட்டு தலையை குணிந்துகொள்கின்றார்.  பேரூந்து புறப்பட்டுச் செல்கின்ற போது சங்கீதா விரக்தியாய் வெறுமையாய் தெருவில் நின்றாள்.

தனது கணவருக்கு கடந்த வருடம் ஆயுள் தண்டனை வழங்க முன்  அரசின் உதவி மூலம் கிடைத்த வீட்டுத்திட்டத்தை தானும் ஒரு கூலியாளாக நின்று துவிச் சக்கர வண்டியில் சீமெந்து பைக்கற்றுக்களை சுமந்து சென்று மிகவும் கடினமாக உழைத்து வீட்டை கட்டியிருக்கின்றார் யோகராணி  வீடு கட்டும் போதெல்லாம் அவர் அடிக்கடி சொல்வது கணவர் சிறையில் இருந்து வந்தவுடன்  அவருக்கு எந்த வேலைகளும் வைக்க கூடாது அவர் வந்து உழைத்து பிள்ளைகளை நன்றாக பார்க்க வேண்டும் என்றே. ஆனால் கடந்த வருடம் கணவருக்கு ஆயுள் தண்டை தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் யோகராணி முற்றிலும் உடைந்து விடுகின்றார்.  அவரிடம் இருந்த தன்னம்பிகையும் தகர்ந்து விடுகிறது இந்த சூழலில் நோய் அவரை பலமாக தொற்றிக்கொள்கிறது. இறுதியில் கடந்த 15-03-2018 அன்று  இ்நத உலகத்தை விட்டே சென்றுவிடுகின்றார்.

இப்பொழுது அந்த இரண்டு குழந்தைகளும் நிர்க்கதியாய் உள்ளனர். வயோதிக அம்மம்மாவுடன்  அவர்களின் வாழ்க்கை பயணம் ஆரம்பிக்கிறது.

Sangeetha-_8954.jpg?resize=800%2C533

 சுமார் 12 ஆயிரம் முன்னாள் போராளிகள் யுத்தத்தின் பின்னர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்தில் இணைப்பட்டுள்ளனர்.  ஆனால் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட பலர் இன்றும் சிறைசாலைகளில் அரசியல் கைதிகளாக வாடுகின்றனர். அவர்களின் குடும்பங்களோ சொல்ல முடியாத அளவுக்கு நெருக்கடிகளை அனுபவித்து வருகின்றனர். எனவே இந்த அரசியல் கைதிகளின் விடயத்தில் ஒரு இறுதி தீர்மானத்திற்கு அரசு வரவேண்டும்  அதற்கான அழுதத்தை  தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஏற்படுத்த வேண்டும், இல்லை எனில்  வருங்காலத்தில் இன்னும் பல சங்கீதாக்களும், பல கனிதரன்களும், பல யோகராணிகளும் உருவாகலாம்

Sangeetha-_8965.jpg?resize=800%2C533

சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரன்

பிறப்பு – 1981-02-27

முகவரி- D4  மருதநகர் கிளிநொச்சி

கைது – 2008 ஆம் ஆண்டு

சம்பவம் – 2008 ஆம் ஆண்டு பிலியந்தலை  பேரூந்து குண்டு வெடிப்பு சம்பவத்தில் சந்தேகத்தின் பெயரில் பயங்கரவாத தடைச் சட்டத்தின்  கீழ்

தீர்ப்பு – 2017 -11-08, கொழும்பு மேல் நீதிமன்றினால், 93 குற்றச் சாட்டுக்கள், ஆயுள் தண்டனை

 

மனைவி – ஆனந்தசுதாதகர் யோகராணி( வாணி)

முகவரி-  D4  மருதநகர் கிளிநொச்சி  மருதநகர் கிளிநொச்சி

பிறப்பு – 1981-03-02

இறப்பு – 2018-03-15

காரணம் -ஆஸ்த்துமா

 

பிள்ளைகள் – மகன் – ஆனந்தசுதாகர் கனிதரன் வயது 12,தரம் 07 இல் கல்வி கற்கின்றார்

மகள் – ஆனந்தசுதாகர் சங்கீதா வயது 10, தரம் 05  இல் கல்வி கற்கின்றார்

இருவரும் – கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கின்றனர்

 

 

http://globaltamilnews.net/2018/72102/

  • தொடங்கியவர்
  • அம்மா கடவுளிடம் ; அப்பா சிறைக்குள்- பிள்ளைகள்……!!
 
 

அம்மா கடவுளிடம் ; அப்பா சிறைக்குள்- பிள்ளைகள்……!!

 

அன்­டைக்கு ஒரு புதன்­கி­ழமை. காலமை 11.42 மணி­யி­ருக்­கும்! கொழும்பு 7ஆம் இலக்க உயர் நீதி மன்­றத்­திலை வைச்­சுத் தீர்ப்பு. 94குற்­றச்­சாட்­டுக்­கள் என்­மீது. அதில் 93குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு ஆயுள்­தண்­ட­னை­கள். 94ஆவது குற்­றச் சாட்­டுக்­குப் பத்து வரு­டச் சிறை. ஆக, ஆயி­ரத்­திச் சொச்ச வரு­சங்­கள் சிறை என்று தீர்ப்­புச் சொன்­னார்­கள். வெளியே என்ன நம்பி இருக்­கின்ற மனைவி, பிள்­ளை­க­ளின் நிலை? அவர்­க­ளோடு சேர்ந்து வாழ­லாம் எண்ட நம்­பிக்­கை­யோட காத்­தி­ருந்து, அவ்­வ­ளவு கால­மும் தண்­ட­னை­யத் தூசாக அனு­ப­விச்­சனே…?’

2008ஆம் ஆண்­டி­லி­ருந்து சிறை வாழ்க்கை. கிட்­டத்­தட்ட பத்து வரு­டங்­கள் கழித்து வெளி­வந்த தீர்ப்பு அவ­னைப் பொசுக்­கியே விட்­டது. அவன் சாகும் வரை மட்­டு­மல்ல இனி எத்­தனை பிற­வி­க­ளெ­டுத்­தா­லும் சிறையே தயவு என்­றி­ருக்­கி­றது சட்­டத்­தின் தீர்ப்பு. ஆனால் இதை­வி­ட­வும் பல கொடுந்­து­யர்­கள் தன்­னைக் குறி­பார்த்­துக் காத்­தி­ருந்­ததை அவன் அறி­ய­வில்லை.

‘மக­சின் சிறைச்­சா­லை­தான். அண்­டைக்­குக் காலமை பத்து மணி­யி­ருக்­கும். எஸ்.எம். பிராஞ்­சிலை இருந்து இன்ஞ்­சார்ச் ஒருத்­தர் வந்­தார். யோக­ரா­ணின்ர மனி­சன் ஆரு? எண்டு கேட்­டார். நான் தான் எண்டு சொன்­னன். நேற்­றைய தினம் உங்­கட மனைவி கால­மா­கி­விட்­டார். கிளி­நெச்சி பொலிஸ் ஸ்ரெச­னிலை இருந்து பக்ஸ் வந்­தி­ருக்கு’ என்று சொல்லி முடிச்­சார். தீர்ப்பை நினைச்சு நினைச்சு அழுது முடிக்­கேல்லை. எனது மனை­வி­யும்…? (அழு­கை­யைத் தவிர அவ­ரி­டம் வேறு எது­வும் இல்­லைத்­தானே).

‘மனைவி மக்­க­ளோடு சேர­லாம் என்­றி­ருந்த எனக்கு இப்­போது என் மனை­வி­யும் இல்லை. அவ­ளைக் கைபி­டித்­தது முதல்… (அழுகை அதி­க­மா­கி­யது). அவ­ளோடு வாழக் கிடைக்­கா­மல் உயிர் வாழ­வேண்­டி­யி­ருக்­கி­றதே. அழு­வ­தற்கு நேரம் தேடு­வதா? மடி­யில் வந்து அமர்ந்து எனது தயவை வேண்­டிப் பரி­த­விக்­கும் என்ர பிள்­ளைக்­குப் பதில் சொல்­லு­றதா?’

ஒரு மனி­தன் எத்­தனை துய­ரங்­க­ளைத்­தான் தாங்­கு­வது? அவ­னைத் துண்டு துண்­டாக வெட்­டிப் ‘பங்கு’ போட்­டுக்­கொண்­டி­ருக்க அதை அவனே பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றான். அவ­னி­லி­ருந்து கிழித்­தெ­ டுக்­கப்­ப­டும் தசை­க­ளில் உயிர்த்­து­டிப்­பும், குரு­திச் சூடும் இன்­ன­மும் இருந்­து­கொண்டே இருக்­கி­றது. துர­திஷ்­ட­சா­லி ­யான அவன் தான் சதைத் துண்­டு­க­ளாக்­கப்­ப­டும் வலியை மறந்து மனை­வியை இழந்து, மக­ளின் பரி­த­விப்­புக்­கும் பதில் சொல்ல முடி­யா­மல் நட்­டாற்­றில் நிற்­கி­றான்.

இதுவே அர­சி­யல் கைதி­யாக்­கப்­பட்­டி­ருக்­கும் ஆனந்­த­சு­தா­க­ரின் நிலை. பெய­ரில் மட்­டும் மகிழ்ச்சி ஒட்­டிக்­கொண்­டி­ருக்­கி­றது. ஆனால் மலை­போல் இறு­மாப்­பு­டன் உயர்ந்து நிற்­கின்­றன அவ­னைச் சூழ்ந்து கௌவிக்­கொள்­ளப்­போ­கின்ற கொடுந்­து­யர்­கள். ‘2017ஆம் ஆண்டு நவம்­பர் மாசம் 8ஆம் திகதி. அண்­டைக்­குத்­தான் என்­னிலை சுமத்­தப்­பட்ட குற்­றங்­க­ளுக்­கான அந்­தத் தீர்ப்­பைச் சொன்­னார்­கள். கேட்ட உட­னேயே நான் இடிஞ்சு பேனன்… மனிசி, பிள்­ளை­ய­ளைப்­போய்ப் பாக்­க­லாம் எண்­டால்…’

2008ஆம் ஆண்டு 4ஆம் மாதம்; 25ஆம் திகதி. இரவு 9.15அள­வில் தேல்ன்­தற எனு­மி­டத்­தில் வைத்­துப் பிலி­யந்­த­லைப் பொலி­ஸா­ரால் அவர் கைது செய்­யப்­பட்­ட­போது ஒன்­றன்­மேல் ஒன்­றாக அடுத்­த­டுத்­துத் தன்னை ஆட்­கொள்­ளப்­போ­கும் இத்­த­கைய ரணங்­க­ளைப் பற்­றிச் சுதா­கர் அறிந்­தி­ருக்க வாய்ப்­பில்­லைத் தான்.

‘நாங்­கள் பேசித்­தான் கலி­ய­ணம் முடிச்­ச­னாங்­கள். வரு­மா­னம் குறை­வெண்­டா­லும் வாழ்க்கை பரு­வா­யில்­லா­மல் சந்­தோ­ச­மாப் போய்க் கொண்­டி­ருந்­துது. நல்­ல­தொரு மனிசி எனக்­குக் கிடைச்­சாள். கஸ்ர, துன்­பம் பாக்­காது தானும் உழைக்­கக் கூடி­ய­வள். கனி பிறந்து (கனி­த­ரன்) அவ­னுக்கு ஒரு வயது நடந்­து­கொண்­டி­ருக்­க­ வே­ணும். சகி அப்ப கைக்­கு­ழந்தை(சங்­கீதா). அவள் பிறந்த அதே மாதம்­ தான். பிறந்து ஒரு ரெண்டு கிழமை கழிச்சு என்னைப் பிடிச்­சது. அதிலை இருந்து சிறை வாழ்க்கை தான். கல்­கி­சைச் சிறை­யிலை இருக்­கேக்க வாணி(யோக­ராணி), சகி­யை­யும் தூக்­கிக் கொண்டு என்­னப் பாக்க வருவா…. என்ர பிள்­ளை­யளை இப்­பிடி இருந்­திட்டு இருந்­திட்­டுப் பாக்­கேக்க சரி­யான சந்­தோ­சமா இருக்­கும்.

விசா­ர­ணை­யும் சிறைக்­குள்ள இருக்­கி­ற­துமா வாழ்க்கை ஓடிச்­சுது. ஆனா இடை­யிலை ஒரு சம்­ப­வம் நடந்­தது. 2008ஆம் ஆண்டு. என்­னைப் பிடிச்­சுக் கொஞ்ச நாள் கழிய. ஜுலை மாசம். 19ஆம் திகதி இரவு ஏழு மணி­யி­ருக்­கும். ஒரு 120பக்­கம் வரை­யில இருக்­கிற ஒற்­றை­யில கையெ­ழுத்து வாங்­கிச்­சி­னம். 21ஆம் திகதி றிமைன் பண்­ணு­ற­தாச் சொல்­லிச்­சி­னம். பிற­கு­தான் கோட்­சிலை நீதி­பதி சொன்­னார். இந்­தக் குற்­றத்தை நிரூ­பிக்­கக் கூடிய வலு­வான சாட்­சி­கள் இல்­லாத பட்­சத்­தில் என்­னு­டைய குற்ற ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லத்தை வைச்சு எனக்­குத் தண்­டனை அளிப்­ப­தாக…? நான் வரு­வன், வரு­வன் என்று பாத்­துக்­கொண்­டி­ருந்த வாணிக்கு நான் என்­னத்­தச் சொல்­லு­றது…? அவ­ளுக்கு இதைப் பற்றி எதை­யுமே நான் சொல்­லேல்லை… நான் ஜெயி­லுக்க வந்த காலத்­திலை இருந்து அவள் வருத்­தக்­கா­றி­யாப் போயிற்­றாள்.

எத்­தி­னை­யோ­த­ரம் ஹொஸ்­பி­ரல்ல அவ­சர சிகிச்­சைப் பிரி­விலை கிடந்­தாள். இப்­பிடி இடிஞ்சு போயி­ருக்­கிற அவ­ளுக்கு எப்­பிடி இந்­தத் தண்­ட­ணை­யைப் பற்­றிச் சொல்­லு­றது…? சொன்­னால் அவள் தாங்க மாட்­டாள் எண்­டு­றது எனக்கு நிச்­ச­ய­மாத் தெரி­யும். மறைச்சு மறைச்­சுக் கட­சியா அவ­ளுக்கு அது தெரிஞ்­சு­போச்­சுது… சாகி­ற­துக்கு இரு­பது நாளுக்கு முதல்­தான் எனக்­குத் தீர்ப்­பா­கின விச­யம் தெரிஞ்­சி­ருக்கு… அவள் அண்­டைக்கே செத்­துப்­போ­யிற்­றாள்…’

‘15ஆம்­தி­கிதி… 16ஆம் திக­தி­தான் வந்து சொன்­னார்­கள்… 17ஆம் திகதி இர­வு­போலை மக­சி­னி­லை­யி­ருந்து கொண்­டு ­போய்ச்­சி­னம். யாழ்ப்­பா­ணம் சிறைச்­சா­ லைக்கு… 18ஆம் திகதி வீட்டை கூட்­டிக் கொண்­டு­போய்ச்­சி­னம்… நான் வரு­வன் வரு­வன் எண்டு பாத்­துக் காத்­தி­ருந்த மனிசி கண்­ணுக்கு முன்­னால செத்­துப்­ போய்க்­கி­டக்கு… கையா­லா­காத பாவி­யான என்­னால என்ன செய்ய முடி­யும்…? ஏரா­ளம் சடங்­கு­கள் செய்­திச்­சி­னம். என்­னை­யும் செய்­யச் சொல்­லிச்­சி­னம். மகன்­தான் எல்­லா­மும் செய்­தான். நான் பாவி­யா­கப் பாத்­துக்­கொண்­டி­ருந்­தன். மகள் வந்து மடி­யிலை ஏறி இருந்­திற்­றாள். அம்மா இல்­லை­யெண்டு கவ­லைப் படக்­கூ­டாது அப்பா இருக்­கி­றன் எண்டு எப்­பி­டிப் பிள்­ளைக்­குச் சொல்­லு­றது…? மக­ளோடை என்­னத்­தைக் கதைக்­கி­றது…? மூண்டு மணித்­தி­யா­ல­யம் கழிஞ்­சி­ருக்­கும்…! கூட்­டிக்­கொண்டு வந்த பொலிஸ்­கா­ரர் வாக­னத்­திலை ஏறச்­சொல்­லிச்­சி­னம்.

மக­ளும் பின்­னாலை வந்து ஏறிற்­றாள். அவ­ளைக் கட்­டி­ய­ணைச்­சுக் கொஞ்­சி­னன். அப்பா திரும்பி வந்­தி­ரு­வன் குழப்­படி செய்­யா­மப் படிக்­க­வே­ணும். அம்மா இல்­லை­யெண்டு கவ­லைப்­ப­டக்­கூ­டாது எண்டு சொல்லி அவளை இறக்கி விட்­டிட்டு வந்­தன். அம்­மம்மா, அப்­பம்­மாக்­க­ளிட்டை என்ர பிள்­ளை­ய­ளைக் கவ­ன­மாப் பாருங்கோ எண்­டும் சொல்­லிப்­போட்டு வந்­தன்…’

இப்­போது நான்கு சுவர்­க­ளுக்கு நடு­வில் சுதா­கர்… என்ன செய்­து­கொண்டு…? சிந்­த­னை­கள் எப்­ப­டி­யி­ருக்­கும்…? கற்­ப­னைக்­கும் எட்­டாத அந்த வலி­க­ளின் குவி­யலை எப்­ப­டித்­தான் எம்­மால் சொல்ல முடி­யும்…?

தனது தந்­தை­யின் பெயரை அழுத்­த­மாக எழு­திக்­காட்­டி­னாள் சங்­கீதா. ‘உங்­க­ளுக்கு அப்­பாவை எப்­போது தெரி­யும்?’ எனக் கேட்­ட­தும் துரு துரு­வென வீட்­டுக்­குள் ஓடிய அந்­தப் பிஞ்சு சென்ற வேகத்­தி­லேயே ஒரு போட்­டோ­வைத் தூக்­கிக் கொண்டு திரும்பி வந்­தது.

அதில் ஆனந்­த­சு­தா­க­ரும் மனைவி யோக­ரா­ணி­யும் நின்­றி­ருந்­தார்­கள். அவர்­க­ளு­டைய திரு­மண நிகழ்­வு­க­ளின் பிற்­பா­டு­க­ளில் எடுக்­கப்­பட்ட ஒளிப்­ப­டம்­போல் தெரிந்­தது. அதைக் காட்­டிய பிள்ளை, ‘இந்­தப் படத்­திலை தான் அப்­பாவை அம்மா முதல் முத­லில் எனக்­குக் காட்­டி­னவா. அது­வ­ரைக்­கும் எனக்கு அப்­பா­வைத் தெரி­யாது. அப்பா எப்­பி­டி­யி­ருப்­பார்? எண்டு அம்­மாட்­டக் கேட்ட, அவர் நல்ல வெள்­ளையா இருப்­பார், வடி­வான அப்பா எண்டு சொல்­லுவா, பிறகு சிறைச்­சா­லை­யி­லை­யும், நீதி­மன்­றத்­தி­லை­யும் போகேக்­க­தான் அப்­பா­வக் கண்­ட­னான்.

அப்­பா­வுக்­குப் புட்­டும் நெத்­த­லிக் கரு­வ­டும் எண்­டால் சரி­யான விருப்­பம்… பாக்­கப்­போ­கேக்க அம்மா செய்­து­கொண்டு வருவா, இப்ப அம்­மா­வும் இல்ல… அப்­பா­வும் வந்­திற்­றுப் போட்­டார்’ என்று ஒரே மூச்­சில் சொல்லி முடித்­தது அந்­தப் பிஞ்சு. அம்­மம்­மா­வின் அரு­கில்­போய் அண்­ணன் தஞ்­ச­மை­டைந்­தி­ருக்க சங்­கீ­தா­வும் அவர் அரு­கில் போய் நின்று கொண்­டாள். கொழுந்து விட்­டெ­ரி­யும் வெயில் கனன்­று­கொண்­டி­ருந்­தது. விழுந்­தொ­ழும்­பிச் செல்­லும் வாக­னங்­க­ளின் போக்­கில் எழுந்த தூசிப்­ப­ட­ லங்­கள் அந்த வீதி­யெங்­கும் தொங்­க­வி­டப்­பட்­டி­ருந்த வாணி­யின் உரு­வப்­ப­டத்­தில் படிந்து கவலை காட்­டின.

கண­வ­னைக் கைது சென்று கொண்டு சென்­ற­தி­லி­ருந்து பெரும் சிர­மங்­க ­ளுக்கு மத்­தி­யி­லும் தனி ஒரு பெண்­ணா­கத் தனது குடும்­பத்­தைப் தாங்கி நின்று அவள் நிகழ்த்­திய போராட்­டங்­கள் அவ­ளு­டைய மூச்­ச­டங்­கிப்­போ­யும்­கூட அவ­ளுக்கு நிம்­ம­தி­யைக் கொடுக்­க­வில்லை. வாணி­யைப்­போன்ற இன்­னும் பல பெண்­க­ளு­டைய உயிர்­கள் கரு­கிக் கொண்­டி­ருக்­கும் வாச­னை­க­ளை­யும் காற்­றுச் சுமக்­க­வேண்­டி­யி­ருக்­கி­றது. அப்­போது காற்­றுக் கன­ம­டைந்து கண்­ணீர்­கூ­டச் சிந்­த­லாம்… அம்மா கட­வு­ளி­டம் சென்­று­விட, அப்பா அர­சின் கைக­ளில் இறு­ கிப்­போ­யி­ருக்க, பரந்­து­கி­டக்­கின்ற கால வெளியை வெறித்­துப் பார்த்­த­படி நிற்­கி­றார்­கள் அண்­ண­னும் தங்­கை­யும்.

http://newuthayan.com/story/78593.html

  • தொடங்கியவர்

பிஞ்சுக் குழந்தைக்காக கருணை காட்டுவாரா ஜனாதிபதி…?

 

 
 

பிஞ்சுக் குழந்தைக்காக கருணை காட்டுவாரா ஜனாதிபதி…?

நரேன்-

ஆட்சி மாற்றத்தின் மூலமாக தமிழ் மக்கள் எதிர்நோக்கியிருக்கும் அரசியல் தீர்வு உள்ளிட்ட அனைத்து விடயங்களும் தீர்க்கப்பட்டு விடும் என்ற நம்பிக்கையில் தமிழ் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். இந்த எதிர்பார்ப்பை முதலீடாகக் கொண்டு அதனை பிரச்சாரப்படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரியை ஆதரிக்குமாறும் பொதுத் தேர்தலில் தங்களை ஆதரிக்குமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தது. மக்களும் அந்த வேண்டுகோளுக்கு செவிசாய்திருந்தனர்.

ana 1இதுவரைகாலமும் இந்த நாட்டை ஆட்சி புரிந்தவர்கள் இனவாதத்தை வளர்த்ததன் காரணமாகவே நாடு சர்வதேச நெருக்கடிக்கு முகம் கொடுத்திருந்ததுடன், தொழில் துறையிலும், பொருளாதார ரீதியிலும், அபிவிருத்தியிலும் பாரிய பின்னடைவை சந்தித்து இருக்கின்றது என்று புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட ஜனாதிபதியும், பிரதமரும் தெரிவித்திருந்தனர். இந்த ஆட்சி மாற்றத்திற்கு முதுகெலும்பாக திகழ்ந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரும் தான் ஒரு சிங்களவராக இருப்பதையிட்டு வெட்கப்படுவதாகவும், நடந்தவைகளுக்கு மன்னிப்பு கோருவதாகவும் கூறியிருந்தார். இவைகள் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்திருந்தது.

2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் தீபாவளிப் பண்டிகையை தங்கள் குடும்பத்தினருடன் கழிப்பதற்கு புதிய அரசாங்கம் வழிவகுக்க வேண்டும் என்று கோரி அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து இருந்தனர். அதன்போது எதிர்கட்சித்தலைவர் இரா.சம்மந்தனின் ஊடாக ஜனாதிபதி அவர்கள், அரசியல் கைதிகளின் கோரிக்கைக்கு 6 மாதத்திற்குள் சாதகமான பதிலை வழங்குவதாகவும் தெரிவித்து இருந்தார். அதன் பின்னர் அரசியல் கைதிகளினாலும், அவர்களது உறவினர்களினாலும், அரசியல் கட்சிகளினாலும், பொது அமைப்புக்களினாலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று விட்டன. இன்று வரை தீர்வு தான் கிட்டவில்லை. அரசியல் கைதிகளை பொறுத்தவரை அவர்கள் தம்மை விடுதலை செய்யுமாறு அல்லது தம்மீதான வழக்குளை துரிதப்படுத்தி அதற்கான தீர்ப்பினையே வழங்குமாறு கோருகின்றனர். நேரடியாக யுத்தகளத்தில் இருந்த சுமார் 12 ஆயிரம் வரையிலான முன்னாள் போராளிகள் புனர்வாழ்வின் பின் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டார்கள் அல்லது அவர்களுக்கு உதவி புரிந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் பலருக்கும் வழக்கு தாக்கல்கள் கூட செய்யப்படாது 10, 15 வருடங்களாக சிறைக் கூண்டில் இருக்கின்றார்கள். இன்னும் சிலருக்கு பதிய வழக்குகள் கூட ஆண்டுகள் பல கடந்த நிலையில் பதிவு செய்யப்படுகின்றது. இன்னும் சிலருக்கு அவர்கள் அனுபவித்து வரும் தண்டனை காலம் முடிவடையும் தருவாயில் புதிய வழக்குகள் போடப்படுகின்றன. இவைகளை பார்க்கின்ற போது அரசியல் கைதிகள் உயிருடன் வெளிவந்து தமது குடும்பத்துடனும், சமூகத்துடனும் இணைவார்களா என்ற கேள்வி பலமாக எழுகிறது.

ana 2அரசியல் கைதிகள் தொடர்பில் சிறப்பு நீதிமன்றம் அமைப்பதாக அரசாங்கம் உறுதிமொழி வழங்கி அந்த நீதிமன்றம் அமைப்பதிலும் இழுபறி நிலை நீடிக்கிறது. அரசியல் கைதிகளின் விவகாரத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் உரிய வகையில் செயற்படவில்லை என்ற காரணம் காட்டி சட்டமா அதிபர்களும் மாற்றப்பட்ட வரலாறும் இந்த நல்லாட்சியில் பதிவாகியுள்ளது. இதே காரணத்திற்காக நீதி அமைச்சரும் கூட மாற்றப்பட்டிருந்தார். இவைகள் அனைத்தையும் ஒருமுகப்படுத்தி நோக்குகையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் கைதிகளும் அரசியல் நோக்கங்களுக்காகவே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற சந்தேகத்தை வலுவாக்குவதற்கு சான்றுகளாக அமைகின்றன.

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தை அரசியல் ரீதியாக அணுக வேண்டும். இதற்குள் நீதித்துறையும், சட்டத்துறையும் தலையீடு செய்வதால், அவர்களின் விடுதலையை விரைவுபடுத்தும் வகையில் இந்த சிக்கல்கள் களையப்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்திருந்தனர். கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்மந்தன் கூட இந்த விவகாரத்தை ஒத்திவைப்பு பிரேரணை மூலம் பாராளுமன்றத்திற்கு எடுத்துரைத்து இருந்தார். எதிர்கட்சித் தலைவரினுடைய குரல்களுக்கு கூட பாராளுமன்றத்தில் மதிப்பளிக்கப்படாத நிலை இன்று வரை தொடர்கிறது. இந்தப் பின்னனியில் தங்கள் வழக்குகளை துரிதப்படுத்தி தண்டனை வழங்கவோ அல்லது விடுதலை செய்யவோ வலியுறுத்தி போராடிய சிலர் ஏற்கனவே மரணத்தை தழுவியுள்ளனர். இதன் நீட்சியாக கடந்த 15 ஆம் திகதி வவுனியாவை வதிவிடமாகக் கொண்ட சண்முகநாதன் தேவகன் என்ற அரசியல் கைதி, தனது வயது முதிர்ந்த காலத்தில் மனஉளைச்சலுக்கு உள்ளாகியும், உடல் ஆரோக்கியம் குன்றியும் மரணமடைந்திருந்தார். இவர் மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற சமூகத்தில் மிகவும் மதிப்பு மிக்க பதவிகளை வகித்து வந்தவர். அவரது துணைவியார் இளைய சமுதாயத்தை செதுக்குகின்ற சிற்பியாக பல்கலைக்கழங்களிலும், தொழில்நுட்ப கல்லூரிகளிலும் விரிவுரையாளராக பணியாற்றியவர். ஒரு மனிதாபிமான அடிப்படையில் செய்த உதவி அவரை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியது. விடுதலைப்புலிகளுக்கு வாகனம் எடுத்துக்கொடுத்தார் என்ற சந்தேகத்தில் 2008 ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதி 60 வயதில் கைது செய்யப்பட்டடு கடந்த 10 ஆண்டுகளாக அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டு, வழக்குகளுக்கு பிரசன்னமாகியிருந்த நிலையில் 2 வருடங்கள் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டு வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தனது தண்டனைக்காலம் முடிவடைவதாக சந்தோசமாக இருந்த நிலையில் புதிய வழக்கொன்று பதிவு செய்யப்பட்ட நிலையிலேயே மரணமடைந்தார். தனது வயது முதிர்ந்த காலத்தில் கூட தனது குடும்பத்துடன் இணைந்து வாழ முடியவில்லையே என்ற ஏக்கமும், சிறைவாயில் இருந்து மீளப்போகின்றோம் என்ற மகிழ்ச்சியில் விழுந்த பேரிடியும் அவரை உள ரீதியாக பெரிதும் பாதித்து இருந்தது. தடுப்பில் அனுபவித்த துயரங்கள் அவரை உடல் ரீதியாக பாதிப்படைந்திருந்தது. அத்துடன் அவருடைய வயதும் இணைந்து கொண்டது. இவை அனைத்தும் சேர்ந்து தன்னுடைய ஆசைகள் எல்லாமே நிராசையாகி போக சமூகத்தின் சிறந்த அந்தஸ்தில் வாழ வேண்டிய ஒருவரின் உயிரை பறித்து விட்டது.

ana 3இதேநாளில் கணவர் ஆயுட் கைதியாக தண்டனை விதிக்கப்பட்டதை எண்ணி எண்ணி பிஞ்சுக் குழந்தைகளை எப்படி ஒரு ஆண் துணையின்றியும், குடும்பத் தலைவனின் துணையின்றியும் வளர்த்து எடுக்கப் போகிறோம் என்ற ஏக்கத்தில் செய்வதறியாது குழம்பிய நிலையில் நோய்வாய்ப்பட்டு அரசியல் கைதி ஆனந்த சுதாகரின் மனைவி யோகராணி என்ற இளம் யுவதி மரணத்தை தழுவினார். பால் மனம் மாறாத பிஞ்சுக் குழந்தைகள் இரண்டை நிர்கதியாக்கிவிட்டு தாய் மரணத்தை தழுவிக் கொள்ள தந்தை சிறைக் கூண்டிற்குள் முடங்கிப் போனார். குடும்ப சூழலை சற்றும் கணக்கில் எடுக்காத அரச நிர்வாகம் மனைவியின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதற்கு மூன்று மணிநேரம் மட்டுமே ஒதுக்கிக் கொடுத்து அழகுபார்த்திருந்தது. தனையன் தாயின் சிதைக்கு கொள்ளி வைப்பதற்காக இடுகாடு செல்கையில், தந்தை சிறைக்கூடம் செல்வதற்கு வாகனம் ஏறுகிறார். பாலகி செய்வதறியாது தந்தையின் காலடி தடம் பற்றி அதே சிறைச்சாலை வாகனத்தில் ஏறுகின்றார். கண்டவர்கள் ஒரு கணம் செய்வதறியாது விக்கித்து நிற்க காவல் துறையினர் உட்பட அனைவரது நெஞ்சங்களும் மனசாட்சியை உலுப்பி எடுக்க, தங்களை அறியாமலேயே தங்கள் கடமையை மறந்து கண்ணீர் சிந்திய காணொளி வலம் வந்துகொண்டிருக்கின்றது. இந்த சம்பவம் அனைவரது மனத்திலும் ஈரத்தை ஏற்படுத்தியுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை ஆகியவற்றுக்கு தீர்வு காணும் வகையில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற தமிழ் சமூகம் அதில் இருந்து ஒரு படி கீழ் இறங்கி இரண்டு பிஞ்சுக் குழந்தைகளின் அவலநிலையைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதிக்கு கருணை மனுக்களை அனுப்பி வைக்கும் செயலில் இறங்கியுள்ளது. இதற்கு அணிசேர்க்கும் வகையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனும், வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் தனித்தனியே ஜனாதிபதிக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளனர்.

தன்னை கொல்ல வந்தவருக்கே மனிப்பு வழங்கி விடுதலை செய்த ஜனாதிபதி இரண்டு பிஞ்சுக் குழற்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு குறைந்த பட்சம் மனிதநேயத்துடன் அரசியல் கைதி ஆனந்த சுதாகரணை விடுதலை செய்ய வேண்டும் என்று ஒரு அரசியல் கைதியின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து இயக்கங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ana 5நேரடிச் சமரில் ஈடுபட்டவர்களை சரணடையச் சொல்லி பல்லாயிரக்கணக்கானவர்களை தங்களுக்குரிய வகையில் புனர்வாழ்வளித்து வெளியில் விட்ட அரசாங்கத்திற்கு அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவி புரிந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை விடுவிக்க மனமில்லாமல் இருப்பது விந்தையாகவே இருக்கிறது. அது புரியாத புதிராகவே இருக்கிறது.

இந்தநிலையில் அனைத்து விடயங்களுக்கும் தீர்வு காணப்படும் என்று நம்பிய தமிழ் சமூகத்திற்கு இந்த அரசியல் கைதிகளைக் கூட விடுவிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் ஏமாற்றமாக மாறி தங்கள் மீது கோபம் அடையச் செய்திருக்கிறது. வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்தவர்களும் அவர்கள் அரியணை ஏறுவதற்கு தமிழ் மக்களின் ஆதரைவப் பெற்றுக் கொடுத்தவர்களும் தம்மை ஏமாற்றி விட்டதாகவே ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் எண்ணுகின்றது. இந்தநிலையில் ஏனைய விடயங்கள் எவ்வாறு நிறைவேறப் போகின்றன என்ற கேள்வியும் அவர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சனை, காணிகள் விடுவிப்பு, அரசியல் தீர்வு போன்ற விடயங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது காத்திரமான பங்களிப்பை செய்யவில்லை என்ற ஆதங்கமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இனியாவது அரசாங்கம் விழித்துக் கொண்டு தன்னுடைய இறுக்கமான மனோபாவத்தில் இருந்து விடுபட்டு இதசுத்தியுடனான நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.

ana 6

http://www.samakalam.com/செய்திகள்/பிஞ்சுக்-குழந்தைக்காக-கர/

  • தொடங்கியவர்
  • தமது தந்தையின் விடுதலையை வேண்டி நிற்கும் சகீயும் கனியும்
 
 

தமது தந்தையின் விடுதலையை வேண்டி நிற்கும் சகீயும் கனியும்

 

IMG_1520.jpg

“ஒரு மென்­பொ­ருள் பொறி­ யிய­லா­ள­னாக வர வேண்டும் என்­பதே எனது இலக்கு.” “எனது இலக்கு ஒரு வைத்­தி­யர் ஆவது’’ என்­கின்­ற­னர் அர­சி­யல் கைதி­யாக இருந்து, ஆயுள்­தண்­டனை தீர்ப்­ப­ளிக்­கப்பட்டு தற்­போது சிறை­யில் காலத்தைக் கழிக்­கும் ஆனந்­த­ சு­தா­க­ர­னின் பிள்­ளை­கள்.

யாழ்ப்­பா­ணம் கண்டி நெடுஞ்சா­லை­யில், கிளி­நொச்சி கந்­த­ சு­வாமி கோவி­லுக்கு அரு­கி­லி­ருந்து பிரிந்து செல்­லும் குன்­றும் குழி­யு­மான மண்வீதி ஊடாக சுமார் ஒரு கிலோ­மீற்­றர் தூரம் சென்­றால், மரு­த­ந­கர் எனும் அழ­கிய ஊரைச் சென்­ற­டை­ய­லாம்.

மரு­த­ம­ரங்­க­ளின் நிழ­லும், வாய்க்­கா­லில் ஓடும் தண்­ணீ­ரும் அந்த ஊருக்கு அழகை மட்­டும் கொடுக்­க­வில்லை.

பசு­மை­யை­யும் குளிர்­மை­யை­யும் கொடுக்­கின்­றன. ஊருக்குச் செல்­லும் வழி­யில் இயற்­கைப் பசுமை மாத்­தி­ரம் மன­துக்கு இதம் அளிக்­க­வில்லை. செயற்கையாகவே பச்சை வர்ண மும் ஆங்காங்கே தெரிகின்றன.

இரா­ணு­வத்­தி­ன­ரது இருப்­பின் எச்­சங்­கள் இன்னமும் மரு­த­ந­க­ரில்

பச்சை நிற வர்ணப் பூச்­சுக்­கள் பூசிய மதில்­கள், வீடு­கள் என எங்­கும் செயற்கைப் பசுமையும் பூத்­தி­ ருந்­தது. அவை இரா­ணுவ முகாம்­க­ளாக பயன்­ப­டுத்­தப்­பட்­டுப் பின்­னர் பொது­மக்­க­ளி­டம் மீளக் கைய­ளிக்­கப்­பட்ட பி।ர­தே­சம் என்­பது புல­னா­கி­றது.

இருந்த போதி­லும், இன்­ன­மும்­கூட சில வீடு­களை இரா­ணு­வத்­தி­னர் தம் வசம் வைத்­துள்­ளார்­கள்.

அந்த வீதி ஊடா­கச் சென்று, மரு­த­ந­கர் பிள்­ளை­யார் கோவி­ல­டி­யில் “அந்த அர­சி­யல் கைதி­யின் மனை­வி­யின் வீடு எங்கே இருக்கிறது?” எனக் கேட்­ட­தும் “யார் அந்த உடுப்புக்கள் தைத்துக் கொடுத்து வந்த பிள்­ளையின் வீடா?” என்ற பதில் கேள்­வி­யு­டன் குறித்த வீட்டை அடை­யா­ளம் காட்­டி­னார்­கள்.

“நல்ல பிள்ளை, அநி­யா­ய­மா­கப் போட்­டுது … அந்தா, அந்­தச் சந்­தி­யில் அந்­தப் பிள்­ளை­யின் பெயர் போட்ட ‘பனர்’ தான் கட்டி இருக்கு. அந்­தப் பாதை­யால் போங்கோ’’ எனப் பாதை காட்டி விட்­டார்­கள்.

குண்டும் குழி­யு­மாக, தார் என்­றால் என்ன என்றே தெரி­யாத வீதி­யாக அந்த வீதி காணப்­பட்­டது. அந்த வீதி­யில் மரு­த­ந­கர் D /4 பகு­தி­யில் அமைந்­துள்­ளது உயி­ரி­ழந்த யோக­ரா­ணி­யின் வீடு.

நாம் சென்­ற­வேளை, அந்த வீட்­டில் ஒரு சில உற­வி­னர்­கள் மாத்­தி­ரமே நின்­ற­னர். அதுவரை­யில் அந்த வீட்­டில் ஆனந்­த­சு­தா­க­ர­னின் மனைவி யோக­ரா­ணி­யும், அவர்­க­ளது பிள்­ளை­க­ளும், யோக­ரா­ணி­யின் தாயுமே வசித்து வந்­துள்­ள­னர்.

யோக­ரா­ணி­யின் ஆண் சகோ­தர்­கள் சில­வேளை­களில் வீட்­டுக்கு வந்து செல்­வ­துண்டு எனக் கூறப்­பட்­டது.

யோக­ராணி கிளி­நொச்­சி­யில் வைத்து 2005ஆம் ஆண்­டுக் காலப் பகு­தி­யில் சச்­சி­தா­னந்­தம் ஆனந்­த­சு­தா­க­ரன் என்­ப­வரைத் திரு­ம­ணம் செய்துகொண்டார்.

அவர்­க­ளின் இல்­லற வாழ்க்கை இரண்டு வருட காலத்­துக்கு மிகுந்த சந்­தோ­ஷத்­து­டன் கழிந்­தது.

மூத்த மகன் கனி­ர­தன் பிறந்­தான். இரண்­டா­வது பிள்ளையாக, மகள், சங்­கீதா பிறப்­ப­தற்கு இரண்டு மாதங்­க­ளுக்கு முன்­னர், கொழும்­புக்கு வேலை விட­ய­மா­கச் சென்ற ஆனந்தசுதா­க­ரன் அங்கு கைது செய்­யப்­பட்­டார்.

ஆனந்த சுதா­க­ரன் மீதான விதி­யின் விளை­யாட்டு

கொழும்பு, பிலி­யந்­தலைப் பகு­தி­யில் கடந்த 2007ஆம் ஆண்டு ஏப்­ரல் மாதம் இடம்­பெற்ற பஸ் குண்டு வெடிப்­பில், ஆனந்­த­சு­தா­க­ர­னின் பங்­க­ளிப்பு இருந்­த­தா­கத் தெரி­வித்­துப் பொலி­ஸா­ரால் கொழும்­பில் வைத்து ஆனந்­த­சு­தா­க­ரன் கைது செய்­யப்­பட்­டார்.

அதனைத் தொடர்ந்து நடை­பெற்ற பொலிஸ் விசா­ர­ணை­களை யடுத்து, பஸ் குண்டு வெடிப்­பு­டன் தொடர்­பு­டை­ய­வர் எனக் குற்­றம் சாட்­டப்­பட்டு நீதி­மன்­றில் வழக்கு விசா­ர­ணை­கள் நடை­பெற்று, கடந்த 2017ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் 08ஆம் திகதி கொழும்பு மேல் நீதி­மன்­றால் ஆனந்­த­சு­தா­க­ரன் குற்­ற­வா­ளி­யாகக் காணப்­பட்­டார்.

அத­னால் அவ­ருக்கு ஆயுள் தண்­டனை விதித்து கொழும்பு மேல் நீதி­மன்று தீர்ப்­ப­ளித்­தது.

மனம் தள­ராது தன்னைச் சுதாக­ரித்­துக்­கொண்ட யோக­ராணி

கண­வன் சிறை­யில் இருந்த காலத்­தில், யோக­ரா­ணியே தனது இரு பிள்­ளை­க­ளை­யும் வளர்த்து வந்­தார். ஒரு பெண்­ணாக, தனது குடும்­பச் சுமை­யைத் தனியே தாங்­கி­னார்.

வீட்­டில் இருந்து ஆடை­கள் தைத்­துக் கொடுப்­ப­தன் மூல­மும் வீட்­டில் வளர்த்த ஆடு மற்­றும் கோழி­கள் ஊடாக வரும் வரு­மா­னத்­தை­யும் வைத்து தனது தாயா­ரு­டன் இருந்து இரு பிள்­ளை­க­ளை­யும் பாட­சா­லைக்கு அனுப்­பிக் கல்வி கற்க வைப்­பித்­தார்.

அவர்­க­ளது மூத்த மக­னான கனி­த­ரன், கிளி­நொச்சி கனிஷ்ட வித்­தி­யா­ல­யத்­தில் தரம் 7இல் கல்வி கற்று வரு­கின்­றார். இரண்­டா­வது பிள்ளையான மகள் சங்­கீதா, தரம் 5இல் கல்வி கற்று வரு­கின்­றார்.

இந்த வரு­டம் புல­மைப் பரி­சில் பரீட்­சை­யில் அதி கூடிய புள்­ளி­க­ளைப் பெற வேண்­டும் என்ற ஆர்­வத்­து­டன் அவர் கற்று வரு­கின்­றார்.

தனது இரு பிள்­ளை­க­ளை­யும் யோக­ ராணி காலை­யில் தனது சைக் கி­ளில் ஏற்­றிக்­கொண்டு சென்று பாட­சா­லை­யில் இறக்கி விட்டு வீட்­டுக்­குத் தேவை­யான பொருள்­களை வாங்கி வந்து பகல் உணவு தயா­ரிப்­ப­து­டன் வீட்­டில் இருந்­த­வாறே தையல் வேலை­க­ளி­லும் ஈடு­பட்டு வந்­துள்­ளார்.

அவர்­க­ளுக்­கான வீட்­டுத் திட்­டம் கிடைக்கப்பெற்று, வீட்டை நிர்­மா­ணித்தபோது, இந்­தப் புது வீட்­டில் நான் எனது கண­வர் பிள்­ளை­க­ளு ­டன் சந்­தோ­ஷ­மான புது வாழ்க்­கையை வாழ்­வேன் என்ற பலத்த எதிர்­பார்ப்­பு­டன் தான் வீட்­டைக் கட்டி முடித்­தார்.

எதிர்­பார்ப்­புத் தகர்ந்­த­தால் விரக்தி நிலைக்கு உட்­பட்ட யோக­ராணி

ஆனால், அவ­ரது அந்த எதிர்­பார்ப்பு கடந்த 2017ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் 08ஆம் திக­தி­யன்று தகர்ந்­தது. ஆனந்­த­சு­தா­க­ர­னுக்கு ஆயுள் தண்­டனை விதித்து கொழும்பு மேல் நீதி­மன்று தீர்ப்­ப­ளித்­தது.

அன்­று­டன் யோக­ரா­ணி­யின் எதிர்ப்­பார்ப்­பு­கள் தகர்ந்­த­து­டன் சிறு­வ­ய­தில் இருந்தே ஆஸ்த்மா நோயி­னால் பாதிக்­கப்­பட்டு இருந்த அவர், கண­வ­ருக்கு எதி­ராக வழங்­கப்­பட்ட தீர்ப்பை அடுத்து தனது உடல் நலத்­தில் அக்­கறை கொள்­ளாது உண­வைத் தவிர்த்து மனக் குழப்­பத்­துக்கு உள்­ளா­னார்.

சில வேளை­க­ளில் உண­வைத் தட்­டில் நிரப்­பிக் கதி­ரை­யில் இருந்து சிறிது உணவை உண்ட பின்­னர், உண­வுத் தட்­டு­டன் வெற்­று­ச் சு­வரை நோக்கி ஆழ்ந்த யோச­னை­யில் இருப்­பார். அவ­ரது தாயார் வந்து குரல் கொடுத்த பின்­னரே யோச­னை­யில் இருந்து மீண்டும் சுயத்துக்கு வரு­வார்.

இவ்­வி­தம் தமது உடல் நலத்­தில் அக்­கறை கொள்­ளாது அடிக்­கடி ஆழ்ந்த யோச­னை­க­ளில் ஈடுபட்டது டன் உண­வையும் தவிர்த்து வந்­த­மை­யால் நோயின் தீவிர தாக்­கத்­துக்கு யோகராணி இலக்­கா­னார். அந்த நிலை­யில் கடந்த 15ஆம் திகதி அவர் நோய் காரணமாக உயி­ரி­ழந்­தார்.

புதி­தாகக் கட்­டிய வீட்­டில் கண­வர் பிள்­ளை­க­ளு­டன் சேர்ந்து வாழ ஆசை­ப்பட்ட யோக­ரா­ணி­யின் உடல், அந்­தப் புதிய வீட்­டில் வைக்­கப்­பட்டு இருந்­தது. அதற்கு அஞ்­சலி செலுத்­தவே அவ­ரது கண­வர் ஆனந்த சுதா­க­ர­னைச் சிறைச்­சாலை அதி­கா­ரி­கள் அழைத்து வந்­த­னர்.

தந்தை கைது செய்­யப்­ப­டும்போது மூத்த மகன் கனி­த­ரன் ஒரு வயதுக் குழந்தை. இரண்­டா­வது பிள்­ளை­யான சங்­கீதா தாயின் வயிற்­றில் எட்­டு­மா­தச் சிசு­வாக இருந்­தார்.

வீட்­டுக்கு வந்த தந்­தையை மகன் கண்ட போதி­லும் தந்­தை­யு­டன் சேர்ந்து இருக்­கவோ, அவ­ரு­டன் கதைக்­கவோ முடி­யாத நிலை­யில் மூத்த மகன் கனி­த­ரன் தாயின் இறுதிக் கிரியைகள் நிகழ்­வில் ஈடு­பட்டு இருந்­தான்.

பிறந்­தது முதல் பத்து வயது வரை தந்­தை­யைச் சந்­தித்­தி­ராத அப­லைக் குழந்தை சங்­கீதா

மகள் சங்கீதா தந்­தை­யின் மடி­யில் ஏறி உட்­கார்ந்து கொண்­டாள். பிறந்­த­தில் இருந்தே தந்­தை­யின் அர­வ­ணைப்பை அனு­ப­விக்­காத சங்­கீதா, அன்று முதன்முத­லாக தனது பத்து வய­தில், தந்­தை­யின் மடி­யில் ஏறி உட்­கார்ந்து கொண்­டாள்.

மகள் பிறந்­த­தில் இருந்தே அவ­ளைத் தூக்கி அர­வ­ணைக்க முடி­யாத நிலை­யில் இருந்த தந்­தை­யும், அன்­றைய தினமே மக­ளைத் தூக்­கித் தமது மடி­யில் இருத்தி வைத்­தி­ருந்­தார். தந்­தை­யும் மக­ளும் என்ன பேசு­வது எனத் தெரி­யாத நிலை­யில் பார்­வை­யாலேயே சில நிமி­டங்­கள் பேசிக்­கொண்­டார்­கள்.

மனை­வி­யின் இறுதி நிகழ்­வில் வெறும் மூன்று மணி நேரமே ஆனந்­தசு­தா­க­ர­னால் கலந்து கொள்ள முடிந்­தது. யோக­ரா­ணி­யின் இறு­திக் கிரி­யை­கள் முடி­வ­டைந்து, தக­னத்துக்காக பூதவுடலை சுடு­காட்­டுக்கு எடுத்து செல்­லும் போது, அவ­ரது மகன் சுடு­காடு நோக்கி தாயின் பூத­வு­ட­லு­ டன் சென்று விட, தந்­தையை அழைத்து வந்த சிறைச்­சாலை அதி­கா­ரி­கள் மீளவும் தந்­தையை சிறைக்கு அழைத்து செல்ல முயன்றபோது, பத்து வருட கால­மாகத் தந்­தை­யின் அர­வ­ணைப்பு இல்­லாது வாழ்ந்த சங்­கீ­தா­வும் தந்­தை­யு­டன் சிறைக்­குச் செல்ல சிறைச்­சாலை வாக­னத்­தில் ஏறி­னாள்.

“நான் விரை­வில் வெளியே வரு­வேன். நீங்க நல்லா படி­யுங்க, அண்­ணா­வு­டன் இருங்க” என ஆறு­தல் வார்த்தை கூறி, தந்தை சிறைச்­சாலை வாக­னத்­தில் மீண்­டும் சிறைச்சா­லைக்­குப் பய­ண­மா­னார்.

அன்­று­மு­தல் தந்­தை­யின் வரு­கையை எதிர்­பார்த்துக் காத்திருக்கி றாள் சங்­கீதா. தந்­தையை விடு­தலை செய்­யக் கோரி அரச தலைவர், அரச தலைவரின் மகள் ஆகி­யோ­ருக்கு கடி­த­மும் எழு­தி­யுள்­ள­னர் அந்­தப் பிஞ்­சு­கள் இரண்­டும். அந்த பிஞ்­சு­கள் இரண்­டும் அரச தலைவரை நேரில் சந்­தித்­தும் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

தனது தந்­தையை மன்­னித்து விடு­விக்­கு­மாறு பிள்­ளை­கள் அரச தலை­வ­ரி­டம்
கோரிக்கை முன்­வைப்பு

தற்­போது அவர்­க­ளின் வேண்­டு­தல் எல்­லாம் தந்­தையை விடு­தலை செய்ய வேண்­டும் என்­பதே.

மூத்த மகன் கனி­த­ரன், தான் ஒரு மென்­பொ­ருள் பொறி­யி­ய­லா­ள­னாக வர வேண்­டும் என்­பதே தனது இலக்கு என நம்­பிக்­கை­யு­டன் கூறு­கி­றான். மகள் சங்­கீதா தான் ஒரு வைத்­தி­ய­ராக வேண்­டும் என்­பதே தனது இலக்கு என்­கி­றாள்.

“அம்மா இருக்­கும் வரை அவ தான் எங்­களைச் சைக்­கி­ளில் ஏற்­றிக்­கொண்டுபோய் ஸ்கூலில விடுவா, இர­வில பாடம் சொல்­லித் தருவா, இப்ப அம்மா இல்லை. நாங்­கள் அம்­மம்­மா­வு­டன் தான் இருக்­கி­றோம். அவ­வுக்கு ஏலாது.

இப்ப எங்­களை ஸ்கூலில கொண்­டு­போய்விட எவரும் இல்லை. இர­வில பாடம் சொல்­லித்­த­ர­வும் எவரும் இல்லை. எங்­கடை அப்­பாவை விட்­டால் அவ­ரோட நாங்­கள் ஸ்கூலுக்கு போவோம்.

இர­வில பாடம் சொல்­லித்­த­ரு­வார். எங்­கட அப்­பாவை எங்களோடை விட்டால் நாங்க நல்லாப் படிப்­போம் என்­கி­றார்­கள்” கனி­யும் சகீ­யும்.

“அவள் இருக்­கும் வரை­யில் ஏதோ தைச்­சுக் கொடுத்து உழைச்­சுப், பிள்­ளை­க­ளைப் பார்த்­தாள். இப்ப எனக்­கும் ஏலாது, என்­னெண்டு இந்­தப் பிஞ்­சு­களை ஆளாக்க போறேனோ தெரியாது… இப்ப இர­வில திடீர் திடீ­ரென மூத்­த­வன் எழும்பி தாயின் ஞாப­கத்­தில அழு­வான்.

அவன் அழு­கி­ற­தைப் பார்த்து இவ­ளும் அழத் தொடங்­கி­டு­வாள். இரண்டு பேரை­யும் சமா­தா­ன­ப­டுத்த என்­னால் முடி­யா­மல் இருக்கு. பிள்­ளை­க­ளின்ரை தகப்­பனை விடுவினமென்டால், அவர் தன் பிள்­ளை­களை பார்ப்­பார்’’ எனக் கண்­ணீ­ரு­டன் கூறு­கி­றார் யோக­ரா­ணி­யின் தாய்.

அந்­தப் பிஞ்­சு­கள் தமது இலக்­கு­களை அடைய , அந்­தப் பிஞ்­சு­க­ளின் வேண்­டு­ தல்­க­ளுக்கு அரச இயந் திரம் செவி­சாய்க்­குமா?

http://newuthayan.com/story/80043.html

அப்பாவின் வருகைக்காக சித்திரைப் புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருக்கும் சகீயும் கனியும் – குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மயூரப்பிரியன்.

sakee-_-_1511.jpg?resize=717%2C538

” ஒரு மென்பொருள் பொறியியலானாக வர வேண்டும் என்பதே எனது இலக்கு.” , “எனது இலக்கு ஒரு வைத்தியர் ஆவது. ” என்கின்றார்கள் அரசியல் கைதியாக இருந்து ஆயுதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு தற்போது சிறையில் காலத்தை கழிக்கும் ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள்.

 

கண்டி நெடுஞ்சாலையில் கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு அருகினால் செல்லும் குன்றும் குழியுமான மண் வீதி ஊடாக சுமார் ஒரு கிலோமீற்றர் தூரம் சென்றால் மருதநகர் எனும் அழகிய ஊர் உள்ளது. மருதமர நிழல்களும் வாய்க்கால் தண்ணீரும் அந்த ஊருக்கு அழகினை மட்டும் கொடுக்கவில்லை. பசுமையையும் குளிர்மையையும் கொடுக்கின்றது. ஊருக்கு செல்லும் வழியில் தனியே இயற்கை பசுமையை மாத்திரம் காணவில்லை.

 

 
sakee-_-_1517.jpg?resize=800%2C600

பச்சை உடுப்புக்களுடனும் பச்சை நிற வர்ண பூச்சுக்கள் பூசிய மதில்கள், வீடுகள் என காணப்பட்டன. அவை இராணுவ முகாம்களாக இருந்து பின்னர் பொதுமக்களிடம் மீள கையளிக்கப்பட்டு உள்ளது என்பது புலனாகிறது. இருந்த போதிலும் இன்னும் சில வீடுகளை இராணுவத்தினர் தம் வசம் வைத்துள்ளார்கள்.

அந்த வீதி ஊடாக சென்று, மருதநகர் பிள்ளையார் கோவிலடியில் ” அந்த அரசியல் கைதியின் மனைவி வீடு எங்கே ?” என கேட்டால் ” யார் அந்த தைக்கிற பிள்ளையின் வீடா?” என வீட்டினை அடையாளம் காட்டினார்கள். “நல்ல பிள்ளை அநியாயமாக போட்டுது .. அந்தா அந்த சந்தியில் அந்த பிள்ளையின் பனர் தான் கட்டி இருக்கு அந்த பாதையால் போங்கோ ” என பாதை காட்டி விட்டார்கள்.

குன்றும் குழியுமாக தார் என்றால் என்ன என்றே தெரியாத வீதியாக அந்த வீதி சென்றது. அந்த வீதியால் மருதநகர் D 4 பகுதியில் அமைந்துள்ளது உயிரிழந்த யோகராணியின் வீடு.

அந்த வீட்டில் ஒரு சில உறவினர்கள் மாத்திரமே நின்றனர். அது வரையில் அந்த வீட்டில் ஆனந்தசுதாகரனின் மனைவி யோகராணியும் அவரகளது பிள்ளைகளும், யோகராணியின் தாயுமே வசித்து வந்துள்ளனர். யோகராணியின் ஆண் சகோதர்கள் சிலவேளைகளில் வீட்டுக்கு வந்து செல்வார்கள்.

 

 
sakee-_-_1520.jpg?resize=800%2C600

யோகராணி கிளிநொச்சியில் இருந்த 2005ஆம் ஆண்டு கால பகுதியில் சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரன் என்பவரை திருமணம் முடித்தார். அவர்களின் இல்லற வாழ்க்கை இரண்டு வருட கால பகுதியே மிகுந்த சந்தோஷத்துடன் கழிந்தன. மூத்த மகன் கனிரதன் பிறந்தான். இரண்டாவது மகளான சங்கீதா பிறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் கொழும்புக்கு வேலை விடயமாக சென்ற ஆனந்த சுதாகரன் கைது செய்யப்பட்டார்.

கொழும்பு பிலியந்தலை பகுதியில் கடந்த 2007ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற பஸ் குண்டு வெடிப்பில் ஆனந்தசுதாகரனின் பங்களிப்பு உள்ளதாக பொலிசாரால் கொழும்பில் வைத்து ஆனந்தசுதாகரன் கைது செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற பொலிஸ் விசாரணைகளை அடுத்து பஸ் குண்டு வெடிப்புடன் தொடர்புடையவர் என குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 08ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றால் ஆனந்தசுதாகரன் குற்றவாளியாக காணப்பட்டார். அதனால் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்று தீர்ப்பளித்தது.

 

sakee-_-_1523.jpg?resize=800%2C600

கணவன் சிறையில் இருக்கும் போது யோகராணியே தனது இரு பிள்ளைகளையும் வளர்த்து வந்தார். ஒரு பெண்ணாக தனது குடும்ப சுமையை தனியே தாங்கினார்.

வீட்டில் இருந்து ஆடைகள் தைத்து கொடுப்பதன் ஊடாகவும் வீட்டில் வளர்த்த ஆடு மற்றும் 4 கோழிகள் ஊடாக வரும் வருமானத்தையும் வைத்து தனது தாயாருடன் இருந்து இரு பிள்ளைகளையும் படிப்பித்தார்.

அவர்களின் மூத்த மகனான ஆனந்தசுதாகரன் கனிதரன் கிளிநொச்சி கனிஸ்ட வித்தியாலயத்தில் தரம் 07ஆம் கல்வி கற்று வருகின்றார். இரண்டாவது மகளான ஆனந்தசுதாகரன் சங்கீதா தரம் 05 கல்வி கற்று வருகின்றார். இந்த வருடம் புலமை பரிசு பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளை பெற வேண்டும் என முயற்சியுடன் கற்று வருகின்றார்.

தனது இரு பிள்ளைகளையும் யோகராணி காலையில் தனது சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்று பாடசாலையில் இறக்கி விட்டு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்து மதிய சாப்பாடு செய்வதுடன் வீட்டில் இருந்த வாறே தையல் வேலைகளிலும் ஈடுபடுவார்.

அவர்களுக்கான வீட்டு திட்டம் கிடைக்க பெற்று வீட்டினை கட்டும் போது யோகராணி இந்த புது வீட்டில் நான் எனது கணவர் பிள்ளைகள் என சந்தோஷமான புது வாழ்க்கையை வாழுவோம் என பலத்த எதிர்ப்பார்ப்புடன் தான் வீட்டினை கட்டி முடித்தார்.

ஆனால் அவரின் எதிர்பார்ப்பு கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 08ஆம் திகதி தகர்ந்தது. ஆனந்தசுதகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்று தீர்ப்பளித்து.

 

sakee-_-_1531.jpg?resize=800%2C600

அன்றுடன் யோகராணியின் எதிர்ப்பார்ப்புகள் தகர்ந்ததுடன் சிறுவயதில் இருந்தே ஆஸ்மா நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தவர், கணவருக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பினை அடுத்து தனது உடல் நலத்தில் அக்கறை கொள்ளாது உணவை தவிர்த்து யோசனைகளில் மூழ்கி போனார்.

சில வேளைகளில் உணவை தட்டில் போட்டு கதிரையில் இருந்து சிறிது உணவை உண்ட பின்னர், உணவு தட்டுடன் வெற்றுசுவரை நோக்கி ஆழ்ந்த யோசனையில் இருப்பார். அவரின் தாயார் வந்து கேட்ட பின்னரே யோசனையில் இருந்து மீள வருவார்.

இவ்வாறு உடல் நலத்தில் அக்கறை கொள்ளது ஆழ்ந்த யோசனைகளில் உணவை தவிர்த்து இருந்தமையால் நோயின் தீவிர தாக்கத்திற்கு இலக்கானார். அந்நிலையில் கடந்த 15ஆம் திகதி உயிரிழந்தார்.

புதிதாக கட்டிய வீட்டில் கணவர் பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ ஆசைபட்ட யோகராணியின் உடல் அந்த புது வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது. அதற்கு அஞ்சலி செலுத்தவே கணவரை சிறைச்சாலை அதிகாரிகள் அழைத்து வந்தனர்.

தந்தை கைது செய்யப்படும் போது மூத்த மகன் கனிதரன் ஒரு வயது குழந்தை இரண்டாவது பிள்ளையான சங்கீதா தாயின் வயிற்றில் எட்டுமாத சிசுவாக இருந்தார்.

வீட்டுக்கு வந்த தந்தையை மகன் கண்ட போதிலும் தந்தையுடன் சேர்ந்து இருக்கவோ, அவருடன் கதைக்கவோ முடியாத நிலையில் மூத்த மகன் கனிதரன் தாயின் இறுதி நிகழ்வில் ஈடுபட்டு இருந்தான்.

மகள் தந்தையின் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டாள். பிறந்தததில் இருந்தே தந்தையின் அரவணைப்பை அனுபவிக்காத சங்கீதா அன்று முதல் முதலாக தனது பத்து வயதில் தந்தையின் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டாள்.

மகள் பிறந்ததில் இருந்தே அவளை தூக்கி அரவவனைக்க முடியாத நிலையில் இருந்த தந்தையும் அன்றைய தினமே மகளை தூக்கி மடியில் இருந்தி வைத்திருந்தார். தந்தைக்கும் மகளுக்கும் என்ன பேசுவது என தெரியாத நிலையில் பார்வையாலே சில நிமிடங்கள் பேசிக்கொண்டார்கள்.

 

sakee-_-_1550.jpg?resize=800%2C600

மனைவியின் இறுதி நிகழ்வில் வெறும் மூன்று மணி நேரமே ஆனந்தசுதாகரனால் கலந்து கொள்ள முடிந்தது. யோகராணியின் இறுதி கிரியைகள் முடிவடைந்து உடல் தகனத்திற்காக உடலை சுடுகாட்டிற்கு எடுத்து செல்லும் போது, அவரது மூத்த மகன் சுடுகாடு நோக்கி தாயின் பூதவுடலுடன் சென்று விட , தந்தையை அழைத்து வந்த சிறைச்சாலை அதிகாரிகள் மீள தந்தையை சிறைக்கு அழைத்து செல்ல முயன்ற போது, பத்து வருட காலமாக தந்தையின் அரவணைப்பு இல்லாது வாழ்ந்த சங்கீதாவும் தந்தையுடன் சிறைக்கு செல்ல சிறைச்சாலை வாகனத்தில் ஏறினார்.

” நான் விரைவில் வெளியே வருவேன். நீங்க நல்லா படியுங்க அண்ணாவுடன் இருங்க” என ஆறுதல் வார்த்தை கூறி தந்தை சிறைச்சாலை நோக்கி சென்றார். அன்றில் இருந்து தந்தையின் வருகையை எதிர்பார்த்து இருக்கிறாள் சங்கீதா. தந்தையை விடுதலை செய்ய கோரி ஜனாதிபதி, ஜனாதிபதியின் மகள் ஆகியோருக்கு கடிதமும் எழுதினார்கள். அந்த பிஞ்சுகள் இரண்டும் ஜனாதிபதியை நேரில் சந்தித்தும் கோரிக்கையும் விடுத்தள்ளன.

பிஞ்சுக்களின் கோரிக்கையை செவிமடுத்த ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா அப்பாவின் விடுதலைக்கு நடவடிக்கை எடுப்பேன் என அந்த பிஞ்சுகளுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார்.

தற்போது அவர்களின் வேண்டுதல் எல்லாம் தந்தையை விடுதலை செய்ய வேண்டும் என்பதே.. ஜனாதிபதி கொடுத்த நம்பிக்கையில் புத்தாண்டுக்கு அப்பா வருவார் என எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றார்கள்.

மூத்த மகன் கனிதரன் தான் ஒரு மென்பொருள் பொறியியலாளனாக வர வேண்டும் என்பதே இலக்கு என நம்பிக்கையுடன் கூறுகிறான். இளைய மகள் சங்கீதா தான் ஒரு வைத்தியராக வேண்டும் என்பதே தனது இலக்கு என்கிறாள்.

“அம்மா இருக்கும் வரை அவா தான் எங்களை சைக்கிளில் ஏற்றிக்கொண்டே ஸ்கூலில விடுவா, இரவில பாடம் சொல்லிக்கொடுப்பா, இப்ப அம்மா இல்லை. நாங்கள் அம்மாம்மாவுடன் தான் இருக்கிறோம். அவாக்கு ஏலாது இப்ப எங்களை ஸ்கூலில கொண்டே விட யாரும் இல்லை. இரவில பாடம் சொல்லிக்கொடுக்கவும் யாரும் இல்லை. எங்கட அப்பாவை விட்டால் அவரோட நாங்கள் ஸ்கூலுக்கு போவோம். இரவில பாடம் சொல்லிக்கொடுப்பார். எங்களுக்கு எங்கட அப்பாவை விட்டா நாங்க நல்லா படிப்போம் என்கிறார்கள்” கனியும் சகீயும்.

 

sakee-_1516.jpg?resize=800%2C600
 

“அவள் இருக்கும் வரையில் ஏதோ தைச்சு கொடுத்து உழைச்சு பிள்ளைகளை பார்த்தாள் இப்ப எனக்கும் ஏலாது என்னென்று இந்த பிஞ்சுகளை ஆளாக்க போறேனோ தெரியா .. இப்ப இரவில திடீர் திடீரென மூத்தவன் எழும்பி தாயின் ஞாபகத்தில அழுவான். அவன் அழுகிறதை பார்த்து இவளும் அழ தொடங்கிடுவாள். இரண்டு பேரையும் சமாதானபடுத்த என்னால் முடியாது உள்ளது. பிள்ளைகளில் தகப்பனை விட்டா அவர் தன் பிள்ளைகளை பார்ப்பார். ” என கண்ணீருடன் கூறுகிறார் யோகராணியின் தாய்.

அந்த பிஞ்சுகள் தமது இலக்கினை அடைய, அந்த பிஞ்சுகளின் வேண்டுதல்களுக்கு செவி சாய்க்கப்படுமா ?? மலரவிருக்கின்ற தமிழ் சிங்கள புத்தாண்டில் அந்த பிஞ்சுகள் தந்தையுடன் சேருவார்களா ? ஜனாதிபதி அதற்கு வழிசமைத்து கொடுப்பாரா ?

http://globaltamilnews.net/2018/73109/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.