Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமகால சவால்

Featured Replies

சமகால சவால்

 

இலங்­கையர் என்ற அடை­யா­ளத்தின் கீழ் வாழும் அனை­வ­ரையும் ஒன்­றி­ணைப்­பதன் மூலம் நிலை­யான அமை­தி­யையும் நல்­லி­ணக்­கத்­தையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டாலும் அம்­மு­யற்­சிகள் சவா­லுக்­குட்­ப­டுத்­தப்­ப­டு­வதை காண முடி­கி­றது.

மாறாத மாற்­றத்­துடன் கட்சி அர­சி­யலும், இன, மத சித்­தாந்­தங்­களும் தொடர்ச்­சி­யாக பின்­பற்­றப்­பட்டு அவை முக்­கி­யத்­துவம் பெறு­வ­தனால் நல்­லி­ணக்கம் என்­பது எட்­டாக்­க­னி­யா­க­வுள்­ளது. பெரும்­பான்மை என்ற மேலா­திக்க சிந்­தனை இனங்­க­ளுக்­கி­டை­யி­லான முரண்­பா­டு­களை உரு­வாக்­கு­வ­தோடு, அடக்­கு ­மு­றைக்கும் வழி­வ­குப்­பது மாத்­தி­ர­மின்றி, பழி­தீர்க்கும் பட­லத்­தையும் அர­ங்­கேற்றி வரு­கி­றது. இந் ­நாட்டை நான்கு நூற்­றாண்­டு­க­ளுக்கு மேலாக ஆட்சி செய்த மேற்­குலக ஏகா­தி­பத்­திய ­வா­திகள் விதைத்து விட்டு சென்ற இன­வா­தமும், மத­வா­தமும் சந்­ததி வழி­யாக கடத்­தப்­பட்டு நாட்டை அழி­வின்பால் நகர்த்­து­வ­தற்கு கார­ண­மா­யிற்று.

அந்­நிய ஏகா­தி­பத்­தி­ய ­வா­திகள் விதைத்­து­ விட்டு சென்ற இன­வாத, மத­வாத சிந்­த­னை­ கொண்­டோ­ரினால் உரு­வான அமைப்­பு­க­ளி­னதும், அர­சியல் கட்­சி­க­ளி­னதும் செயற்­பா­டுகள் நல்­லி­ணக்க முயற்­சி­க­ளுக்கு தொட­ராக தடை­யாக அமை­வ­துடன் இந் ­நாட்டில் வாழும் சிறு­பான்மை மக்­களின் நிம்­ம­திக்கு குந்­தகம் விளை­வித்து வரு­வ­தையும் வர­லாற்று நெடு­கிலும் அவ­தா­னிக்க முடி­கி­றது. ஒரு ஜன­நா­யக தேசத்தில் வாழும் பல்­லின சமூ­கத்­தி­லுள்ள ஒவ்­வொரு சமூ­கத்­திற்கும் அச்­ச­மூகம் சார்ந்த அடிப்­படை உரி­மை­க­ளையும், சுதந்­தி­ரத்­தையும் ஏனைய சமூ­கங்­களின் உரி­மை­களை பாதிக்­காத வகையில் அனு­ப­விப்­ப­தற்கு இந் ­நாட்டின் அர­சி­யல­மைப்பில் இட­ம­ளிக்­கப்­பட்­டுள்ள போதிலும், இந் ­நாட்டின் சிறு­பான்மை சமூ­க­மான முஸ்­லிம்கள் அனு­ப­விக்­கின்ற அர­சியல் உரி­மை­க­ளையும், மத உரி­மை­க­ளையும் பாதிக்கும் வகையில் இன­வா­தி­களும், மத­வா­தி­களும் பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­களை பெரும்­பான்மை சமூ­கத்தின் மத்­தியில் முன்­வைத்து வரு­வதன் மூலம் நல்­லி­ணக்கம் இந் ­நாட்டில் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­வது என்­பது சம­கால சவால்­க­ளுக்கு உட்­பட்­ட­தா­கவே காணப்­ப­டு­கி­றது .அது­ மாத்தி­ர­மின்றி, இத்­த­கை­ய­வர்­களின் செயற்­பா­டுகள் நாட்டின் அமை­திக்கும். வளர்ச்­சிக்கும், பங்கம் ஏற்­ப­டுத்­தி­ வ­ரு­வ­தோடு, சர்­வ­தேசம் இலங்கை மீது அழுத்­தத்தை பிர­யோ­கிக்­கும் ­ப­டி­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளவும் வழி வகுக்­கி­றது.

மறைந்த ஜனா­தி­பதி ஜே.ஆர் ஜயவர்­த­ன­வினால் 1943 ஆம் ஆண்டு இலங்கை அர­சாங்க சபையில் தனி சிங்­களம் அரச கரும மொழி­யாக ஆக்­கப்­பட வேண்­டு­மென முன்­மொ­ழி­யப்­பட்­ட ­போது, அதை எதிர்த்து வா­திட்ட மறைந்த முன்னாள் பிர­தமர் எஸ்.டப்­ளியு. ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்க பின்னர் தனது சுய அர­சி­ய­லுக்­கா­க­வும்,பௌத்த சிங்­கள மக்கள் மத்­தியில் தனக்­கான செல்­வாக்கை மேலோங்கச்செய்­வ­தற்­கா­கவும் 1956ஆம் ஆண்டு தனி சிங்­கள சட்­டத்தை முன்­மொ­ழிந்து நிறை­வேற்­றினார். அந்­நா­டுகளி­லி­ருந்து பௌத்த சிங்­கள இன­வாத சிந்­த­னை­யா­ளர்­களின் சிறு­பான்மை இனங்­க­ளுக்­கெ­தி­ரான செயற்­பா­டுகள் பல்­வேறு தளங்­க­ளி­லி­ருந்தும் முன்­னெ­டுக்­கப்­பட தொடங்­கி­யது.

வர­லாற்று தவறு

பௌத்த சிந்­த­னை ­வாதத்­தினால் ஏற்­பட்ட வர­லாற்று தவறின் எதி­ரொ­லி­யா­னது வள­மான இலங்­கையை சுடு­கா­டாக மாற்­றி­யது. அர­சியல், சமூக, பொரு­ளா­தா­ரத்தில் இந்­ நாட்டை நலி­வ­டைய செய்­த­துடன் பல்­லா­யி­ரக்­காண அப்­பா­வி­களின் உயிர்­களை காவு ­கொண்­டும், இந் ­நாட்டின் அபி­வி­ருத்­திக்கு பங்­க­ளிப்பு செய்­யக் கூ­டிய பெறு­ம­தி­மிக்க மனி­த­ வ­ளத்தை ஊன­மாக்­கியும், கடல் கடந்து வாழவும் செய்­தி­ருக்­கி­றது.

குறிப்­பாக வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்­களின் சமூக, பொரு­ளா­தார, அர­சியல், கல்வி, கலா­சார கட்­ட­மைப்­புகள் திட்­ட­மிட்டு சிதைக்­கப்­பட்­டன. 30 வருட கால யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் வலி­க­ளுக்கு இன்னும் முறை­யான நிவா­ர­ணங்கள் வழங்­கப்­ப­டாத நிலையில், அவ்­வ­லி­களின் குரல்கள் தேசி­யத்­திலும் சர்­வ­தே­சத்­திலும் ஒலித்து கொண்­டி­ருக்கும் சூழ்­நி­லையில், முஸ்­லிம்­களை நோக்கி இன­வாதம் அதன் சுடரை விரி­ய ­விட்­டி­ருப்­பதை அண்­மைய வன்­மு­றைகள் பறை­ சாட்­டு­கின்­றன. அளுத்­கம முதல் அம்­பாறை வரையும், காலி கிந்­தோட்டை முதல் கண்டி கட்­டு­கஸ்­தோட்டை வரையும் இன­வா­தத்தின் தீப்­பொறி அப்­பாவி முஸ்­லிம்­களின் பொரு­ளா­தா­ரத்தை அழித்­தொ­ழித்­தி­ருப்­பது மாத்­தி­ர­மின்றி, இந் ­நாடு முஸ்­லிம்கள் வாழ்­வ­தற்கு பாது­காப்­பற்­றது என்­ப­தையும் சர்­வ­தே­சத்­திடம் அடை­யா­ளப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

பௌத்த மத எழுச்­சிக்­காக செயற்­ப­டு­கின்றோம் என்று கூறிக் ­கொள்ளும் பல­சே­னாக்­களும், பல­கா­யக்­களும் பௌத்த தர்­மங்­களை பற்றி பேசாமல் சிறு­பான்மை சமூ­கங்­களின் மத, கலா­சார விட­யங்­க­ளுக்கு மாசு கற்­பித்து கொண்டும், போலி குற்­றச்­சாட்­டுக்­க­ளையும், வெறுப்பு பேச்­சு­க­ளையும் நல்­லெண்ணம் கொண்ட பௌத்த சிங்­கள மக்கள் மத்­தியில் முன்­வைத்தும் வரு­வது மாத்­தி­ர­மின்றி, கடந்த பல வரு­டங்­க­ளாக இஸ்­லாத்­தையும் முஸ்­லிம்­க­ளையும் கொச்­சைப்­ப­டுத்­தி கொண்டி­ருக்­கி­றார்கள்.

அகிம்­சையை வலி­யு­றுத்தும் பௌத்த தர்­மத்தை ஏற்­றுள்ள அர­சி­யல் ­வா­தி­களும், கடும் ­போக்­கா­ளர்­களும், ஏனைய இனத்­தி­ன­ரது மனங்­களை புண்படுத்தும் வகையில் கருத்­து­க்களை ெவளியி­டு­வதும், அநீ­தி­யான நட­வ­டிக்­கை­க­ளையும், வன்­மு­றை­க­ளையும் கட்­ட­விழ்த்து விடு­வதும் என்ற செயற்­பா­டுகள் எவ்­வாறு பௌத்த மதத்தின் எழுச்­சிக்கு அவர்­களால் புரி­யப்­படும் உப­கா­ரமா அமையும் என்ற கேள்­வியும் எழுப்­பப்­ப­டு­கி­றது. சுதந்­திர தேச­மொன்றில் வாழும் ஒரு இனத்­தையும் இவ்­வி­னத்­தினர் பின்­பற்றும் மதத்­தி­னையும் நிந்­தனை செய்­வ­து தான் பௌத்த மதத்தை காப்­பாற்றும் செயல் என்றால் நற்­காட்சி, நல்­லெண்ணம், நன்­மொழி, நற்­செய்கை, நன்­வாழ்க்கை, நன்­மு­யற்சி, நற்­க­டைப்­பிடி, நற்­தி­யானம் என்ற பௌத்த மதம் போதிக்கும் எட்டு நெறி­மு­றை­களை இத்­த­கைய இன­வாத சிந்­த­னை­கொண்டோர் கடைப்­பி­டிக்க தேவை­யில்­லையா?

பௌத்த மதம் பெரும்­பாலும், நற்­செய்­கை­களை செய்­தல்,கெட்ட செயல்­களை விலக்­குதல், பொறாமை கொள்­ளா­தி­ருத்தல், சிறு உயிரை கூட துன்­பு­றுத்­தா­தி­ருத்தல், மற்­ற­வர்­க­ளுக்கு தீங்­கி­ழைக்­கா­தி­ருத்தல் போன்ற உயர்ந்த தத்­து­வங்­களை கொண்­டி­ருக்­கி­றது. இவ்­வா­றான பௌத்த மதத்தின் உயர்ந்த தத்­து­வங்­களை புறந்­தள்­ளி­ விட்டு பௌத்த மதத்தை வளர்ப்­ப­தா­கவும், பாது­காப்­ப­தா­கவும் கூறிக் ­கொண்டு சிறு­பான்மை மக்­களை நெருக்­க­டிக்குள் தள்ளும் செயற்­பாட்டில் சில பௌத்த துற­வி­களே ஈடு­பட்டு வரு­கின்­றனர். ஆனால். இத்­த­கைய பௌத்த தே­ரர்­க­ளுக்கு எதி­ராக சட்டம் அதன் கட­மையை முறை­யாக செய்­யா­த­தனால் இன்றும் அவர்கள் சுதந்­தி­ர­மாக நட­மாடி கொண்­டி­ருக்­கி­றார்கள் என்­பதை சுட்­டிக்­காட்ட வேண்டும்.

இவ்­வாறு செயற்­ப­டு­கின்­ற­வர்­களால் எவ்­வாறு பௌத்த மதம் பாதுகாக்­கப்­படும். இவர்­களால் பௌத்த மதம் வளர்க்­கப்­ப­டு­வ­தற்கு பதி­லாக அவை சிதைக்­கப்­ப­டு­கி­றது என்றே கூற வேண்டும். பௌத்த மதத்தை பாது­காக்­கிறோம் என்று கூறிக் ­கொண்டு இன­வாத விஷத்தை கக்கும் இத்­த­கைய கடும் ­போக்­கா­ளர்­களின் செயற்­பா­டு­களில் எவ்­வித உண்­மை ­தன்­மை­யு­மில்லை என்­பதை பல பௌத்த சிங்­கள மக்கள் புரிந்­தி­ருக்­கி­றார்கள். அது­மாத்­தி­ர­மின்றி, நல்­லி­ணக்­கத்­தையும், சக­வாழ்­வை­யும், இன ஒற்­ற­ுமையும் விரும்­பு­கின்ற ஏரா­ள­மான பௌத்த சிங்­கள மக்­க­ளுக்கு இத்­த­கை­ய­வர்­களின் இன­வாத மற்றும் மத­வாத செயற்­பா­டுகள் தலை­கு­னிவை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. அத்­தோடு, இன­வா­தத்­திற்கு எதி­ரா­கவும், இன நல்­லி­ணக்­கத்தை வலி­யு­றுத்­தியும் பௌத்த சிங்­கள மக்கள் மத்­தி­யி­லுள்ள பலர் குரல் எழுப்பி கொண்டும் அவற்­றுக்­காக களத்தில் இறங்­கியும் செயற்­பட்­டு ­கொண்டி­ருக்­கி­றார்கள் என்­பது சுட்­டிக்­காட்­டப்­பட வேண்­டி­யது.

கரு­ணைக்கு கௌரவம்

போலி ­குற்­றச்­சாட்­டுக்­க­ளையும், தனி­நபர் பிரச்­சி­னை­க­ளையும் இன அடக்­கு ­மு­றைக்­கான கார­ணி­களாக கொண்டு மிக ­திட்­ட­மிட்ட அடிப்­ப­டையில், அர­சியல் சக்­தி­க­ளி­னது பின்­பு­லத்­து­டனும், கடும் ­போக்கு மத ­வா­தி­களின் ஆசிர்­வா­தத்­து­டனும், சமூக ஊடக வலைப்­பின்­னல்­களின் பங்­க­ளிப்­பு­டனும் அம்­பா­றை­யிலும், கண்டி மாவட்ட பிர­தே­சங்கள் உள்­ளிட்ட ஏனைய முஸ்­லிம்கள் வாழும் பிர­தே­சங்­க­ளிலும் மேற்­கொள்­ளப்­பட்ட இன­வாத வன்­மு­றை­களின் போது முஸ்­லிம்­களின் வீடு­களும், வர்த்­தக நிலை­யங்­களும் பள்­ளி­வா­சல்­களும் ஏன் முஸ்­லிம்­களின் உயிர்­களும் பௌத்த சிங்­கள மக்கள் மத்­தி­யி­லுள்ள மனி­தா­பி­மா­னுள்ள பௌத்த தேரர்­க­ளி­னாலும், பொது­மக்­க­ளி­னாலும் பாது­காக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இன­வா­தி­களின் தாக்­குதல் அச்­சத்­தினால், தெல்­தெ­னிய கோம­கொட கிரா­மத்தை ேசர்ந்த முஸ்லிம் குடும்­பங்­களை ேசர்ந்த பலர் கோம­கொட விகா­ரையை நோக்கி ஓடி சென்­ற­ வேளை அவர்­க­ளுக்கு அபயமளித்திருக்கிறார். அவ்­ வி­கா­ரையின் விகா­ரா­தி­பதி கஹ­கல தம்­மா­னந்த தேரர். அக்­கு­டும்­பங்­க­ளுக்கு பாது­காப்பு வழங்­கி­யது மாத்­தி­ர­மின்றி அப்பி­ர­தேச பௌத்த சிங்­கள மக்­க­ளுடன் இணைந்து அப்­பி­ரதேசத்­தி­லுள்ள பள்­ளி­வா­சல்­க­ளையும், முஸ்­லிம்­களின் வீடு­களை இத்­தேரர் காப்­பாற்­றி­யி­ருக்­கிறார்.

அதேபோன்று, இன­வெ­றி­யர்­களின் இன­வெ­றி­யாட்டம் அரங்­கேற்­றப்­பட்ட கடந்த 5ஆம் திகதி கண்டி உடு­நு­வர பிர­ேத­சத்­தி­லுள்ள சிறிய முஸ்லிம் கிரா­ம­மான மீவ­ல­தெ­னி­யவை ேசர்ந்த முஸ்­லிம்கள் அச்­சத்­துடன் உள்­ளனர் என கேள்வி­யுற்ற கபு­ரா­தெ­னிய டிகிரி போக­ஹ­கொட ஸ்ரீ சங்­க­ராய பிரி­வெனா விகா­ரையின் பிர­தம தேரர் மீவ­துர வஜி­ர­ நா­யக்க நாஹிமி தேரர் மீவ­ல­தெ­னிய முஸ்­லிம்­களை அழைத்து அவர்­க­ளுக்கு பாது­காப்பு வழங்­கி­யுள்ளார்.

அவ்­வாறு, கண்டி மாவட்­டத்தின் தெஹி­கம, முறுத்­த­லாவ, குரு­கம ஆகிய பிர­தே­சங்­களில் வாழும் முஸ்­லிம்கள் அச்­சத்­து­ட­னும் ஈ பயத்­து­டனும் கடந்த 8ஆம் திகதி ெவள்ளிக்­கி­ழமை ஜும்ஆ தொழு­கையில் ஈடு­பட்­டி­ருந்­த ­போது முஸ்­லிம்­களின் வீடு­க­ளுக்கும், வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கும் பாது­காப்பு வழங்கும் நட­வ­டிக்­கை­களில் அப்­பி­ர­தேச பௌத்த தேரர்கள் சிங்­கள இளை­ஞர்­க­ள் ஆகியோரை இணைத்­து கொண்டு அப்பி­ர­தேச பௌத்த மத்­திய நிலை­யத்தின் ஸ்தாபகத்தேரர் பாது­காப்பில் ஈடு­பட்­டி­ருக்­கிறார்.

இப்­ பி­ர­தே­சங்­களில் மாத்­தி­ர­மின்றி வன்­மு­றைகள் நிகழ்ந்த பல பிர­தே­சங்­க­ளி­லுள்ள முஸ்­லிம்­களின் சொத்­து­ட­மை­களை தே­ரர்­களும் பௌத்த மக்­களும் காப்­பாற்­றி­யி­ருக்­கி­றார்கள் என்­பது அப்­பி­ர­தே­சங்­களில் வாழ்ந்த முஸ்­லிம்கள் இன,மத, பிர­தேச வேறு­பா­டின்றி சகோ­த­ர­ வாஞ்­சை­யுடன் பௌத்த சிங்­கள மக்­க­ளு­டனும் பௌத்த தேரர்­க­ளு­டனும் வாழ்ந்­தி­ருக்­கி­றார்கள் என்­பதை பறை­ சாட்­டு­கின்­றன. அது­ த­விர, ஆன­ம­டுவ நகரில் அமைந்­தி­ருந்த முஸ்லிம் வர்த்­த­க­ருக்கு சொந்­த­மான ஹோட்டல் இன­வெ­றி­யர்­க­ளினால் தாக்­கி­ய­ழிக்­கப்­பட்­ட ­போ­திலும், அதனை சிங்­கள, முஸ்லிம் அர­சி­யல் ­வா­திகள், பிர­தேச பொலிஸார் மற்றும் சிங்­கள, தமிழ் முஸ்லிம் வர்த்­த­கர்கள், பொது­மக்கள் என அப்­பி­ர­தே­சத்­தி­லுள்ள அனை­வரும் இணைந்து ஒரு நாளைக்குள் அவ் ஹோட்­டலை புன­ர­மைத்து திறந்து வைத்­தமை இன­வா­தத்­திற்கும் மத­வா­தத்­திற்கும் வழங்­கிய சாட்­டை­யடி என்றே கூற வேண்டும்.

பௌத்த சிங்­கள மக்கள் இவ்­வாறு செயற்­பட்­டமை இந் ­நாட்டில் இன ஒற்­று­மை­யுடன் அனைத்து இனங்­களும் வாழ வேண்டும் என்­பதை புடம் ­போட்­டி­ருக்­கி­றது. இருப்­பினும், ஏறக்­கு­றைய ஒரு கோடி ஐம்­பது இலட்சம் பௌத்த சிங்­கள மக்கள் மத்­தியில் புறக்­க­ணிக்­கத்தக்க எண்­ணிக்கை கொண்ட இன­வாத சிந்­த­னை­யு­டை­யோரின் செயற்­பாட்­டுக்கு ஒரு சில அர­சி­யல் ­வா­தி­களும், பௌத்த தேரர்­களும், சில ஊட­கங்­களும் ஒத்­தாசை வழங்கி அவர்­களின் செயற்­பா­டு­க­ளுக்கு ஊக்­க­ம­ளித்து வரு­வ­தா­னது நல்­லெண்ணம் கொண்­டவர்களின் இன நல்­லி­ணக்க முயற்­சிக்கு தடை­யா­க­வுள்­ளது என்­ப­தையும் சுட்­டிக்­காட்ட வேண்டும்.

இருப்­பினும், சிறு­பான்­மை­யினர் பக்கம் உள்ள நியா­யங்கள் பெரும்­பா­லான பௌத்த சிங்­கள மக்­களை முழு­மை­யாக சென்­ற­டை­ய­வில்லை என்­பது வலியு­றுத்தி கூறப்­பட வேண்­டிய­தொன்­றாகும். இதற்கு காரணம் தமிழ் ­பேசும் சமூ­கத்­தி­லுள்ள சிங்­கள மற்றும் ஆங்­கில மொழி ­பு­ல­மை­யு­டைய ஊட­க­வி­ய­லா­ளர்­களும், எழுத்­தா­ளர்­களும் தங்­க­ளது மொழி ஆளு­மையை முறை­யா­க ­ப­யன்­ப­டுத்­த­வில்லை அல்­லது அதற்­கான பொறி­மு­றையை இன்னும் கண்­டு­ கொள்­ள­வில்­லை­யென கரு­த­ வேண்­டி­யுள்­ளது.

இன­வாத சிந்­த­னை­யுடன் செயற்­ப­டு­வோ­ரி­னதும் அவர்­க­ளுக்கு உத­வி ­பு­ரி­வோ­ரி­னதும் நட­வ­டிக்­கை­களை மழுங்­க­டித்து இந் ­நாட்டில் நிலை­யான சமா­தா­னத்­தையும், சக­வாழ்­வையும் கட்­டி­யெ­ழுப்ப வேண்­டு­மாயின் இன ஒற்­று­மையையும், நல்­லி­ணக்­கத்­தையும் விரும்பும், அதற்­காக செயற்­படும் அனைத்து பௌத்த சிங்­கள மக்­களை இணைத்­து கொண்டு இன­வா­தி­களின் இன­வாத செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக செயற்­பட வேண்­டி­யது சிறு­பான்மை சமூ­கங்­க­ளான தமி­ழர்­க­ளி­னதும், முஸ்­லிம்­க­ளி­னதும் தார்­மீக பொறுப்பும் காலத்தின் கடப்­பா­டா­க­வு­முள்­ளது என சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது.

காலத்தின் தேவையில் ஐக்­கியம்

இன­வா­தத்­துக்­கெ­தி­ரான இன ஒற்­று­மையில் தமிழ், முஸ்லிம் மக்­களின் ஒற்­று­மை­யா­னது காலத்தின் தேவை­யா­க­வுள்­ளது. குறிப்­பாக 1990களின் பின்னர் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் தமிழ், - முஸ்லிம் மக்­க­ளி­டையே காணப்­படும் இன ஒற்­று­மையை சீர்­கு­லைப்­ப­தற்­கான சதித்­ ­திட்­டங்கள் ஆங்­காங்கே இடம்­பெ­று­வதை காண முடி­கி­றது. அத்­த­கை­ய­வர்­க­ளினால் சமூக வலைத்­த­ளங்­களில் பதி­வேற்­றப்­படும் இன­வாத கருத்­துக்கள் அவற்றை தெட்­டத் ­ெதளி­வாக புலப்­ப­டுத்­து­கி­றது. தமிழ், முஸ்லிம் சிறு­பான்மை இனங்­களின் இன உறவு சீர்­கு­லையு­மாயின் இன­வாத சிந்­த­னை­ கொண்­டோரின் செயற்­பா­டு­களை மிக இல­கு­வாக முன்­ந­கர்த்­து­வ­தற்கும் அவர்­களின் இலக்­கு­களை அடைந்து கொள்­வ­தற்­கு­மான கத­வுகள் இல­கு­வாக திறந்து கொள்­ளப்­படும் என்­பதை இரு சிறு­பான்மை இனங்­களும் புரிந்து செயற்­ப­டு­வது அவ­சி­ய­மாகும். ஒற்றுமை என்­பது ஒரு பேரா­யுதம். எந்­த­வொரு சமூ­கமோ அல்­லது சமூ­கங்­களோ ஒற்­று­மை­யுடன் தங்கள் தங்கள் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கின்­ற­ போ­து தான் எதையும் சாதித்­திட முடியும். அந்த ஒற்­று­மையின் ெவளிப்­பாடு கடந்த 2015 ஜனா­தி­பதி ேதர்தலில் ெவளிப்­ப­டுத்­தப்­பட்­டது. ஆட்சி மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. ஆனால், அந்த மாற்றம் ஏமாற்­ற­மாகி விட்­டதா என்ற கேள்­வியும் ஒரு­ பு­ற­முள்­ளது. இலங்­கையை பல நூற்­றாண்­டு­க­ளுக்கு மேலாக ஆட்சி செய்த மேற்­குலக ஆட்­சி­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்து மீட்டு, இந்­நாட்டு மக்கள் சுதந்­திர காற்றை சுவா­சித்­திட செய்த இந் ­நாட்­டு பற்றாளர்கள் இன, மத, மொழி பேத­மின்றி ஒற்­று­மை­யுடன் செயற்­பட்டு சுதந்­தி­ரத்­துக்­காக போரா­டி­யதன் பய­னா­கவே இந் ­நாடு சுதந்­திரம் பெற்­றது. சுதந்­திர இலங்கை உரு­வா­கு­வ­தற்கும் ஒற்­று­மையே பேரா­யு­த­மாக அன்று பயன்­ப­டுத்­தப்­பட்­டது.

இந் ­நாட்டில் வாழும் சிறு­பான்மை சமூ­க­மான தமிழ் பேசும் சமூ­கங்கள் தங்­க­ளது உரி­மை­களை தாங்கள் சுதந்­தி­ர­மாக அனு­ப­விக்க வேண்டும் என்று அன்று கோரி­ய ­போது, அவற்றை வழங்க மறுத்த அன்­றைய சிங்­கள ஆட்­சி­யா­ளரின் விரும்­பத் ­த­காத நட­வ­டிக்கைகள் ஆயு­த போ­ராட்­டத்தை நோக்கி நகர செய்த வர­லாறு நம்முன் உள்­ளது. சிறு­பான்­மை­யி­ன­மான தமிழ் சமூ­கத்தின் உரிமை போராட்­டத்­துக்கு முறை­யான தீர்வு இன்னும் கிடைக்­கப் ­பெ­றாத நிலையில், இந் ­நாட்டில் வாழும் இன்­னு­மொரு சிறு­பான்மை சமூ­க­மான முஸ்லிம் சமூ­கத்தின் மீதும் இன­வா­தத்தின் கழுகுப் பார்வை திசை திருப்­பப்­பட்டு பல­கோடி ரூபா பொரு­ளா­தார அழி­வு­களை ஏற்­ப­டுத்தி கொண்­டி­ருக்­கி­றது.

இச்­ சூழ்­நி­லை­யில் தான் சிறு­பான்மை சமூ­கங்­க­ளுக்­கி­டையே ஒற்­று­மையின் அவ­சியம் உண­ரப்­ப­ட ­வேண்­டி­ய­தொன்­றாக நோக்­கப்­ப­டு­கி­றது. எதிர்­கால சிறு­பான்மை சமூ­கத்தின் இருப்பு ஆரோக்­கி­ய­மா­ன­தாக அமைய வேண்­டு­மாயின் இரு சமூ­கத்­திற்கும் பொது­வான விட­யங்­களில் இரு சமூக அர­சியல் தலை­வர்­களும், பிர­மு­க­ர்­களும், சிவில் அமைப்­புகளும் வேஷம் போடு­வதை நிறுத்தி, வஞ்சம் தீர்ப்­பதை மறந்து ஒரு சமூகம் மற்­றொரு சமூ­கத்தின் நலனை நிறை­வேற்­று­வ­தற்கும், இன­வா­தத்­திற்கு எதி­ராக செயற்­ப­டு­வ­தற்­கு­மான மனப்­பாங்கை ஏற்­ப­டுத்தி ஒற்­று­மைப்­ப­டு­வது அவ­சி­ய­மா­க­வுள்­ளது.

தமிழ் ­பேசும் மக்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் பிர­தே­சங்­களில் தமிழ்­பேசும் மக்­க­ளுக்கு நன்மை கிடைக்கும் விட­யத்தில் குறை கண்டு அவற்றை விமர்­சனம் செய்து, வெற்­றுக்­கோ­ஷங்கள் கொண்ட ஊடக அறிக்­கை­களை விட்டு இரு இனங்­க­ளுக்­கி­டை­யிலும் சந்­தே­கங்­களை உரு­வாக்கி சுய­நல அர­சியல் வியா­பாரம் செய்யும் இரு இனத்­தி­னதும் அர­சி­யல் ­வா­தி­களின் பின்னால் மக்கள் செல்­வதை தவிர்ப்­பதும் அவ­சி­ய­மா­க­வுள்­ளது. இந்த அவ­சி­யத்­திற்­கான மாற்றம் இரு சமூ­கங்­க­ளிலும் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும். ஒரு ஆட்சி மாற்­றத்­திற்­காக வாக்­கு­களை பயன்­ப­டுத்­திய தமிழ் பேசும் சமூ­கங்கள், சிறு­பான்மை சமூ­கங்­க­ளுக்கு எதி­ராக முன்­ந­கர்த்­தப்­படும் இன­வாத செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ரா­கவும் ஒன்­று­பட்டு செயற்­பட வேண்­டிய தேவையை அவசரமாக உணர வேண்டியுள்ளது. அத்தோடு, தங்களுக்குள்ள பொதுவான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்ள விட்டுக்கொடுப்புடனும், புரிந்துணர்வுடனும் செயற்படுவதற்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதும் சமகாலத் தேவையாக கருதப்படுதல் வேண்டும்.

ஒரு தேசிய இனத்தின் இனத்துவ அடையாளங்களை அழிப்பதற்கு, அல்லது அந்த இனம் தமது தனித்துவ அடையாளங்களை ெவளிக்காட்டக் கூடாது என அச்சுறுத்துவதற்கு யாருக்கும் உரிமையில்லாத போது, கடும் போக்காளர்கள் ஒரு தேசிய இனத்தின் இனத்துவத்துக்கெதிராக தொடர்ச்சியான நெருக்கு வாரங்களையும், அடாவடித்தனங்களையும் புரிந்து கொண்டு வருவதை சட்டம் சும்மா பார்த்து கொண்டு இருக்க முடியாது. சட்டத்தை நிறைவேற்றுவதில் காலம் தாழ்த்தப்படுவது பல அழிவுகளை சந்திக்க வைக்கும் சட்டத்தின் காலதாமதமான நடவடிக்கை தான் அம்பாறையிலும், திகனையிலும் முஸ்லிம்களை அழிவுக்கு இட்டு சென்றிருப்பதாக முஸ்லிம் அரசியல் தலைமைகள் பாராளுமன்றத்திலும் அதற்கு ெவளியிலும் கூறி வருகிறார்கள்.

சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக இந் நாட்டில் இடம்பெற்று வரும் செயற்பாடுகள் சர்வதேசத்தின் பார்வையை ஈர்த்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 37ஆவது அமர்வில் ஒலிக்கும் ஆதரவு குரல்கள் இவற்றை பறை சாட்டுகின்றன. இந்த நிலையை உருவாகுவதற்கு குற்றம் இழைத்தவர்களுக்கு எதிராக சட்டம் அதன் கடமையை உரிய நேரத்தில் செய்ய தவறிமையே காரணம் என்று கூறுவதில் தவறிருக்காது.

இந் நாட்டில் இனவுறவுடன் நிம்மதியாக அனைத்து இனங்களும் வாழ வேண்டுமாயின் இனவாதத்திற்கு எதிரான இன ஒற்றுமை அவசியமாகவுள்ளது. அத்தோடு இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளவர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கும், குறித்த நபர்களுக்கு எதிராக சட்டம் அதன் கடமையை முறையாக செய்வதற்கும் இன ஒற்றுமையினூடாக உரிய தரப்புகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டியதும் காலத்தின் கட்டாயமாகும். அதுமாத்திரமின்றி இனவாதத்திற்கு எதிராக செயற்படுகின்ற பௌத்த சிங்கள மக்களுடன் கைகோர்த்து தமிழ் பேசும் சிறுபான்மையினரும் செயற்படும் போது தான் சமூகங்களின் நல்லிணக்கத்திற்கு ஏற்பட்டுள்ள சவாலை முறியடித்து இந் நாட்டின் எதிர்கால சந்ததியினர் ஒருவரையொருவர் புரிந்து வாழும் நிலை உருவாக்கப்படும். இல்லையேல் இந்ந ாட்டின் எதிர்காலம் கேள்விக்குறி தான்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-03-24#page-5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.