Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொறுப்புக் கூற­லுக்கு நம்­ப­கத்­தன்மை வேண்டும்

Featured Replies

பொறுப்புக் கூற­லுக்கு நம்­ப­கத்­தன்மை வேண்டும்

 

தற்­போது ஐ.நா.வின் மனித உரிமைப் பேர­வையில் 37ஆவது கூட்­டத்­தொடர் நிகழ்ந்து கொண்­டி­ருக்­கி­றது. வழ­மை­யா­கவே பயங்­க­ர­வா­தி­க­ளு­ட­னான தார்­மீக யுத்தம் எனக் கூறி­வந்த அரசு இப்­போது அவ்­விதம் கூற­மு­டி­யாத நிலையில் இருக்­கி­றது.

காரணம் அகிம்­சை­யோடு நிரா­யு­த­பா­ணி­க­ளாக அண்டி, ஒன்­றா­கக்­க­லந்து வாழும் சிறு­பான்மை முஸ்­லிம்கள் பயங்­க­ர­வா­தி­க­ளாகக் கணிக்­கப்­பட்டுத் தாக்­கப்­பட்­டிருக்கிறார்கள். மகிந்­தவின் ஆட்­சிக்­கால இறு­தியில் ஆரம்­பிக்­கப்­பட்ட இச்­செய்கை, மைத்­திரி ஆட்­சிக்கு வந்­தது முதல் இற்­றை­வரை நிகழ்ந்து கொண்டே இருக்­கி­றது. எந்த பாது­காப்பும் இல்லை.

போர்க்­குற்­றத்தை ஏற்­றுக்­கொண்டு பொறுப்­புக்­கூ­ற­லையும் ஒப்­புக்­கொண்டு இணை அனு­ச­ர­ணை­யையும் பெற்­றுக்­கொண்டு 30/1 தீர்­மா­னத்­தையும் பெற்ற இலங்கை இம்­முறை தனது நம்­ப­கத்­தன்­மையை எப்­படி நிரூ­பிக்கப் போகி­றது. இறை­மைக்கும் சுய­நிர்­ண­யத்­துக்கும் அடிப்­படை உரி­மை­க­ளுக்கும் இரு இனங்கள் கடு­மை­யாக முரண்­படும் நிலையில் எந்த தீர்­வையும் இல­கு­வாக அமுல்­ப­டுத்­தப்­ப­டு­வது சிர­ம­மாகும்.

பல்­லின அர­சா­கவோ இரு அர­சு­க­ளா­கவோ ஆக்­க­மு­டி­யுமா? இந்­நி­லையில் உலக நாடுகள் சமஷ்டி முறை­யையே கையா­ளு­கின்­றன. இதற்கு சிறந்த உதா­ர­ண­மாக கன­டாவின் கியூபெக் மாகாணம் காணப்­ப­டு­கி­றது. கன­டாவில் ஆங்­கி­லே­யரும் பிரான்­சி­யரும் சமஷ்­டி­யோடு தனித்­த­னி­யாக ஆளு­கி­றார்கள். இதையே சம்­பந்தன் உள்­ளக சுய­நிர்­ணய உரிமை என்­கிறார்.

இது இலங்­கைக்குப் புதி­ய­தல்ல. 60 ஆண்­டு­க­ளுக்கு முன்பே பிர­தமர் எஸ்.டபி­ள்யு. ஆர்.டி.பண்­டா­ர­நா­யக்­கவும் தந்தை செல்­வாவும் ஏற்­றுக்­கொண்டு உடன்­ப­டிக்கை செய்­த­தாகும். எனினும் இது அமு­லுக்குக் கொண்­டு­வ­ரப்­ப­ட­வில்லை. சுய­வி­ருப்­போடு பல நாட்கள் சிர­மப்­பட்டு ஏற்­றுக்­கொண்டே பண்­டா­ர­நா­யக்க ஒப்­ப­மிட்­டி­ருக்­கிறார். சிங்­களப் பேரி­ன­வா­தி­களின் கடும் அழுத்­தங்­க­ளி­னா­லேயே அதைக் கிழித்­தெ­றிந்­தி­ருக்­கிறார். 1965 ஆம் ஆண்டு டட்லி சேனா­நா­யக்­கவும் தந்தை செல்­வா­வோடு ஒப்­பந்தம் செய்து தனது அர­சிலும் இணைந்து முரு­கேசு திருச்­செல்­வத்­துக்கு அமைச்சு பத­வி­யையும் வழங்­கி­யி­ருந்தார். தற்­போ­தைய மைத்­திரி – ரணில் அர­சிலும் கூட சம்­பந்தன் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக இருக்­கிறார். இவர் உயர் நீதி­மன்­றத்தில் பிரி­வினை கோர மாட்டேன் என சத்­தி­யமும் செய்­தி­ருக்­கிறார். சமஷ்­டி­முறை யாப்­புக்கு முர­ணா­ன­தல்ல என உயர் நீதி­மன்றம் தீர்ப்பும் வழங்­கி­யி­ருக்­கி­றது. சிங்கக் கொடி­யையும் தூக்­கி­யி­ருந்தார். யாப்பின்படி உள்­ளூ­ராட்சித் தேர்­த­லிலும் பங்­க­ளிக்­கிறார். பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யிட்டு எதிர்க்­கட்சித் தலை­வ­ரா­கவும் ஆகி­யி­ருக்­கிறார். பிற­கென்ன?

சர்­வ­தேச ரீதியில் இவர் தனது சமஷ்டி எனும் உள்­ளக சுய­நிர்­ணய உரி­மையை நோக்­கியே நக­ரு­கிறார் என நினைக்­கிறேன். சமஷ்டி யாப்­புக்கு முர­ணல்ல என உயர் நீதி­மன்­றத்தின் தீர்ப்பைப் பெற்­றுக்­கொண்­டதன் மூலமும், நான் பிரி­வினை கோர­மாட்டேன் என அங்கு சத்­தியம் செய்­ததன் மூலமும், சிங்கக் கொடியைத் தூக்­கி­யதன் மூலமும் சமஷ்­டியை மீற­மு­டி­யாத நிலைக்கு அரசைக் கொண்டு வந்­தி­ருக்­கிறார். இத்­த­கைய உள்­ளக சுய நிர்­ணய உரி­மையைத் தரா­விட்டால் சர்­வ­தே­சத்தின் மூலம் வெளி­யக சுய நிர்­ணய உரி­மையைக் கோர­வேண்டியேற்­படும் என அர­சிடம் முடி­வாகக் கூறு­கிறார்.

வெளி­யக சுய நிர்­ணய உரி­மைக்­கான உத்­த­ர­வைக் கடு­மை­யாக சர்­வ­தேசம் வழங்­கு­மாயின் அரசால் அதை மீற முடி­யாமற் போய்­விடும். அந்த நிலையில் சமஷ்டி சரி­யா­னது என அரசு திடீர் விளக்­க­ம­ளித்து அமு­லாக்க முய­லு­மாயின் பாரிய விளை­வு­க­ளையே சந்­திக்க வேண்டி ஏற்­படும். முடிவில் இதன் விளைவு வெளி­யக சுய­நிர்­ணய உரி­மைக்கே வழி­யா­கி­விடும். ஏனெனில் இத்­த­கைய தீர்வு சர்­வ­தேச விதி­மு­றைக்கு உட்­பட்­ட­தாகும். இதைத் தனித்து இலங்­கையால் மீற­மு­டி­யாது.

எனவே இலங்­கை­யி­லுள்ள சர்வ கட்­சி­ களும் இணைந்து உள்­ளக சுய­நிர்­ணய உரிமை முறையில் இதற்­கு­ரிய தீர்வைக் கண்­டு­கொள்ள வேண்டும். சர்­வ­தேசத் தலை­யீடு ஏற்­பட இட­ம­ளிக்­கக்­கூ­டாது. ஏனெனில் சர்­வ­தேச வெளி­யக சுய­நிர்­ணய உரிமைத் தீர்வு சர்­வ­தேச விதி­மு­றையே என்­றாலும் கூட இலங்­கைக்குப் பொருத்­த­மா­ன­தாக அமை­யாது.

இது வலுக்­கட்­டா­ய­மாகத் திணிக்­கப்­ப­டு­வதால் பல்­வேறு விளை­வு­களும் ஏற்­பட வழி­யுண்டு பல்­வேறு பாதிப்­பு­களும் அழி­வு­களும் கூட ஏற்­பட வாய்ப்பு உண்டு. சமஷ்டி வழங்­கினால், இரு­நா­டுகள் என்­பது தவறு. இது தனி­நாடோ அல்ல. இந்த சமஷ்­டி­முறை யாப்­புக்கு முர­ணா­ன­தல்ல என உயர் நீதி மன்­றமும் தீர்ப்­ப­ளித்­தி­ருக்­கி­றது. நான் பிரி­வினை கோர மாட்டேன் என சம்­பந்­தனும் உயர் நீதி­மன்­றத்தில் சத்­தியம் செய்­தி­ருக்­கிறார். இதே யாப்­பின்­படி நிகழ்ந்த தேர்­தலில் போட்­டி­யிட்டு எதிர்­க்கட்­சித்­த­லை­வ­ரா­கவும் பதவி வகிக்­கிறார்

எனினும் இவ­ரது உள்­ளக சுய நிர்­ண­ய­கோ­ரிக்­கை­யா­னது சமஷ்­டியை பிரி­வினை, தனி­நாடு என்­றெல்லாம் கூறிக் கொண்டு இது­வரை அரசு எந்த உத்­த­ர­வா­தத்­தையும் அளிக்­க­வில்லை. காரணம் சமஷ்­டியை பிரி­வினை எனவும் தனி­நாடு எனவும் பெரும்­பான்மை சிங்­கள மக்கள் கரு­து­வ­தே­யாகும். இலங்­கையின் சனத்­தொ­கையில் 74 வீத­மானோர் சிங்­கள மக்­க­ளாவர். எனவே அதி­கா­ரத்­தி­லுள்ள அரசு சமஷ்­டியை அங்­கீ­க­ரிக்­கு­மாயின் தனது இருப்­புக்கு ஆபத்து என அது அஞ்­சு­வதே இதற்குக் கார­ண­மாகும்.

ஆக இந்த நடை­முறை நிலைப்­பாட்டைத் தெரிந்து கொண்­டுதான் சம்­பந்தன் சர்­வ­தே­சத்­திடம் தனது கோரிக்­கையை முன் வைத்­தி­ருக்­கிறார். இதற்கு சர்­வ­தேச அழுத்தம் உத­வுமா என்­பதே இவ­ரது எதிர்­பார்ப்­பாக இருக்­கி­றது. இதற்­கான அழுத்­தத்தை முன்­வைக்­கையில் அவர் கூறு­வது என்ன தெரி­யுமா? சர்­வ­தேச சட்­டப்­படி எமது உரித்து மற்றும் உரி­மை­யோடு சிவில், அர­சியல் உரி­மை­க­ளுக்­கு­ரி­ய­து­மான ஒப்­பந்­தமும் உண்டு. அதுபோல் பொரு­ளா­தார, சமூக, கலா­சார விட­யங்­க­ளுக்­கு­ரிய ஒப்­பந்­தமும் உண்டு. இவை சர்­வ­தேச சட்­டங்­க­ளாகும். இவற்றின் அடிப்­ப­டையில் ஒரு மக்கள் குழா­முக்கு உள்­ளக சுய­நிர்­ணய உரித்­துண்டு. இதை எவரும் மறுக்க முடி­யாது. இத்­த­கைய உள்­ளக சுய நிர்­ணய உரி­மையை அந்த குழா­முக்கு வழங்காவிட்டால் வெளி­யக சுய­நிர்­ணய உரிமை அதற்­குண்டு. இதையே நாம் சர்­வ­தே­சத்­திடம் கேட்­கிறோம் என சம்­பந்தன் கூறி­யுள்ளார்.

உரித்து உரிமை, சிவில் அர­சியல் உரி­மைகள் ஆகி­யவை ஒரு சொல்லைப் போல் தெரிந்­தாலும் அர்த்­தங்­களில் வித்­தி­யா­சங்கள் உண்டு. உரித்து என இறை­மை­யையும் உரிமை என சுய­நிர்­ண­யத்­தையும் சிவில் அர­சியல் உரி­மைகள் என அடிப்­படை உரி­மை­க­ளை­யுமே இங்கு குறிக்­கப்­ப­டு­கின்­றன என நினைக்­கிறேன்.

ஒரு நாட்­டுக்குள் மத, இன, மொழி, கலை, கலா­சாரம் பிர­தேச வர­லாறு ஆகி­ய­வற்றைக் கொண்ட ஒரு சமூகம் இருக்­கு­மாயின் அதுவே குழு அல்­லது குழா­மாகும். தனி­யாக அதற்­கென இறைமை, சுய­நிர்­ணய அடிப்­படை உரி­மைகள் யாவும் உண்டு.

இந்த சர்­வ­தேச சட்­ட­வி­தி­க­ளையே சம்­பந்தன் இங்கு எடுத்­துக்­காட்­டு­கிறார். இத்­த­கைய உள்­ளக சுய நிர்­ணய உரிமை வழங்­கப்­ப­டா­விட்டால் வெளி­யக சுய நிர்­ணய உரி­மைக்கு உரித்­துண்டு. இதையே நாம் சர்­வ­தே­சத்­திடம் கேட்­கிறோம் எனவும் அவர் கூறு­கி­றாரே என்ன அர்த்தம்?

உள்­ளக சுய­நிர்­ணய உரிமை என்றால் சமஷ்­டி­யாகும். வெளி­யக சுய நிர்­ணய உரிமை என்றால் சுயாட்­சி­யாகும். அதா­வது நீங்கள் இணங்­கினால் சமஷ்­டி­யோடு வாழுவோம். நீங்கள் சமஷ்­டியைத் தர இணங்­கா­விட்டால் சர்­வ­தேச ரீதியில் சுயாட்­சி­யோடு வாழும் உரிமை எமக்­குண்டு அதையே சர்­வ­தே­சத்­திடம் கோரு­கிறோம் என்­கிறார். எனினும் இவ­ரது சமஷ்டி, சுயாட்சி எனும் வார்த்­தைகள் பேரி­ன­வா­தி­களால் பிரி­வினை, தனி­நாடு என்றே அர்த்தம் கற்­பிக்­கப்­ப­டு­கின்­றன. உள்­ளக சுய­நிர்­ணய கோரிக்கை மூலம் இவர் சமஷ்­டி­யையே முன்­வைக்­கின்றார். ஒரு­மித்த பிள­வு­ப­டுத்­தப்­பட முடி­யாத நாட்­டுக்குள் உள்­ளக சுய­நிர்­ணய உரிமை மற்றும் இறை­யாண்மை ஆகி­ய­வற்றின் அடிப்­ப­டை­களில் நாம் அதி­யுச்ச அதி­காரப் பகிர்வை சரித்­திர ரீதி­யாக வாழ்ந்த பிர­தே­சங்­களில் வழங்க வேண்டும். இதுவே எமது கோரிக்கை. இதுவே எமது கொள்­கையும் நிலைப்­பா­டு­மாகும். இதை மறுக்­காமல் எமது மக்கள் முழு­மை­யாக ஏற்­றுக்­கொள்­கி­றார்கள்.

முன்பு தமி­ழீ­ழத்தை நிலைப்­பா­டாகக் கொண்­டோரும் கூட தற்­போது இதை ஏற்றுக் கொள்­கி­றார்கள். எனவே நாம் உள்­ளக சுய­நிர்­ணய உரிமைக் கோரிக்­கையை முன்­னெ­டுக்க வேண்டும். எமது மத்­தியில் போட்­டி­யி­ருந்தால் இது சாத்­தி­யப்­ப­டாது. எனவே சர்­வ­தேச ஆத­ரவு முழு­மை­யாக எமக்குக் கிடைத்­தி­ருக்கும் இச்­சந்­தர்ப்­பத்தில் இத்­த­கைய போட்டி எதிர்ப்பு தவிர்­க்கப்­பட வேண்டும்.

மஹிந்த ஆட்­சியில் 2012 ஆம் 2013 ஆம் 2014 ஆம் ஆண்­டு­களில் ஐ.நா.வில் தீர்­மா­னங்கள் நிறை­வேற்றப்பட்­டன. எனினும் அவற்றை 2015 ஆம் ஆண்டு பத­வி­யேற்ற மைத்­திரி ஆட்­சியே முழு­மை­யாக ஏற்றுக் கொண்­டது.

 2017 ஆம் ஆண்டு அவற்றை ஐ.நா. மீண்டும் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கி­றது. எமக்­கு­ரிய சகல விட­யங்­களும் இவற்றில் உள்­ள­டங்கி இருப்­பதால் நாம் விழிப்­பா­கவும் உறு­தி­யா­கவும் இருக்­க­வேண்டும்.

அவை எமக்குக் கிடைக்க 2019 ஆம் ஆண்டு வரை காலக்­கெடு இருக்­கி­றது. இது தவறும் பட்­சத்தில் சர்­வ­தேசம் பதில் கூறி­யாக வேண்டும். அதில் என்ன நிக­ழு­கி­றது என்­பதை நாம் அறிய வேண்டும். எமது மக்­களை சர்­வ­தேச சமூ­கத்தால் கைவிட்டு விட­மு­டி­யாது.

நாம் கேட்ட ஈழத்தைக் கைவிட்டு விட்டோம். 30 ஆண்­டு­க­ளாக எமது இளை­ஞர்கள் ஈடு­பட்ட ஆயுதப் போராட்டம் இப்­போது முடி­வுக்கு வந்து விட்­டது. மனித உரி­மைக்­கான சர்­வ­தேச பிர­க­ட­னத்­தின்­படி எம்மை ஆளு­வ­தற்கு எமது சம்­ம­தத்­து­ட­னான இணக்­கப்­பாடு இருக்க வேண்டும்.

அந்த வகையில் தான் 1936 ஆம் ஆண்டு முதல் இற்றை வரை எம்­மையும் சார்ந்த ஆட்­சி­முறை வேண்டும் எனக் கேட்­கிறோம். எமது மக்­களின் பிரச்­சி­னைக்கு தீர்வு தேவை. இவர்கள் பல்­வேறு துய­ரங்­க­ளையும் அனு­ப­விக்­கி­றார்கள். காணாமல் போனோர், காணி அப­க­ரிப்பு, சிறை பிடிப்பு என்­ப­ன­வற்றில் ஓர­ளவு தீர்வைத் தவிர முழு­மை­யாகக் கிடைக்­க­வில்லை. இவை பற்றி அரசு சிங்­கள மக்­க­ளுக்கு விளக்­க­மாகக் கூற­வேண்டும். தமிழ் மக்­க­ளுக்கு நியாயம் வழங்க வேண்­டி­யது எமது கடமை என்­ப­தையும் இதில் தவ­ற­மு­டி­யாது என்­ப­தையும் கூற­வேண்டும் என்­கிறார்.

ஜெனி­வாவில் இலங்கை ஏற்­றுக்­கொண்டு நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தில் 36 விட­யங்கள் இருப்­ப­தா­கவும் அவற்றில் 3 பொறுப்­புக்­கூறல் சம்­பந்­தப்­பட்­டவை எனவும் ஏனைய 33 விட­யங்­களும் மிக முக்­கி­ய­­மா­னவை அவற்றில் பல­வற்றை இலங்கை ஏற்­றுக்­கொண்­டுள்­ளது என சுமந்­திரன் அண்­மையில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

பொறுப்­புக்­கூறல் சம்­பந்­தப்­பட்ட மூன்றும் எவை? ஏனைய முக்­கி­ய­மான 33 விட­யங்­களும் எவை? அவற்றில் இலங்கை ஏற்ற பல விட­யங்கள் எவை? ஏற்­காத சில விட­யங்கள் எவை? இவற்றை பகி­ரங்­க­மாகக் கூறினால் உட­ன­டி­யாக இரு­த­ரப்பு எதிர்ப்­பு­களும் கிளம்­பி­விடும் என்­ப­தற்­கா­கத்தான் இது­வரை அவை வெளிப்­ப­டுத்­தப்­ப­டாமல் இருக்­கின்­ற­னவோ? சில விட­யங்­களை இல­கு­வாக நடை­மு­றைப்­­­ப­டுத்­து­வ­தற்­காக விவே­கத்­து­ட­னேயே இத்­த­கைய அணு­கு­முறை கையா­ளப்­ப­டு­கி­றது என்­பதை மறுப்­ப­தற்­கில்லை. ஒரு சில தமிழ்த் தரப்­பினர் மட்­டுமே ஐ.நா. வுக்குப் போய் முழு தமிழ் சமூ­கத்­தி­னதும் தலை­யெ­ழுத்தை அங்கு நிர்­ண­யிக்­கப்­பார்க்­கி­றார்கள் எனும் குற்­றச்­சாட்டு எழா­ம­லில்லை.

அங்கு கிடைக்­கின்ற அடை­வு­க­ளை­யெல்லாம் பகி­ரங்­கப்­ப­டுத்­தினால் பெரும்­பான்மைச் சமூ­கத்தின் மத்­தி­யி­லி­ருந்து அர­சுக்கு எதிர்ப்புக் கிளம்பி அரசு சங்­க­டத்­துக்­குள்­ளாகி பின்­வாங்கும் நிலைமை ஏற்­பட்­டு ­வி­டாதா? என்­ப­தையும் சிந்­தித்துப் பார்க்க வேண்டும்.

தீர்­வுக்­கான ஐ.நா. வின் மத்­தி­யஸ்தம் என்று வந்து விட்டால் சிங்­க­ளத்­த­ரப்போ? தமிழ்த் ­தரப்போ? தத்­த­மக்கு சார்­பா­கவே தீர்வு இருக்க வேண்டும் என எதிர்­பார்க்க முடி­யாது. அரசு ஏற்­ற­வற்­றையும் ஏற்­கா­த­வற்­றையும் ஐ.நா. அனு­மா­னிக்கும். அதுபோல் தமிழ்த் தரப்பு ஏற்­ற­வற்­றையும் ஏற்­கா­த­வற்­றையும் அனு­மா­னிக்கும். இவற்றின் அடிப்­ப­டை­யி­லேயே தீர்வை முன்­வைக்கும்.

இந்­நி­லையில் சேதா­ர­மில்­லாத விட்­டுக்­கொ­டுப்­புக்கே இரு தரப்பும் முயற்சிக்க வேண்டும். சிங்கள மக்கள் அரசுக்கும் வடக்கு, கிழக்கு தமிழ்மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இதற்கான அனுமதியை வழங்கியிருக்கிறார்களா? என்பதே கேள்வியாகும். இலங்கை ஐ.நா.வில் உறுப்புரிமை பெற்றிருக்கும் நாடு என்பதாலும் இலங்கைக்குள்ளேயே இப் பிரச்சினை தீர்த்துக் கொள்ளப்படாது பாரிய அழிவுகள் ஏற்பட்டிருப்பதாலும் ஐ.நா. இதில் தலையிட்டிருக்கிறது.

இலங்கையின் இறைமைக்குள் வேறு நாடுகள் தலையிட முடியாது. ஒற்றை­யாட்சி­யைப் பிளவுபடுத்த முடியாது என்றெல்­லாம் மஹிந்த ஆட்சியில் கூறிக் கொண்டிருந் தார்கள். இலங்கையின் இறைமை பெரும்­பான்மைச் சமூகத்துக்கு மட்டுமான இறைமையா? இலங்கையின் ஒற்றையாட்சி பெரும்­­பான்மை சமூகத்துக்கு மட்டுமே உரித்தான ஒற்றையாட்சியா? இலங்கையில் சுயநிர்ணய உரிமை பெரும் பான்மை சமூகத்துக்கு மட்டும்தானா? இருக்கிறது.

பல்லினம் வாழும் நாட்டில் பெரும்பான்­மைச் சமூகம் இத்தகைய எண்ணப்பாடுகளைக் கொண்டிருந்தால் மற்ற சமூகங்களும் இவை போன்று கோரும் தார்மீக உரிமையைப் பெற்றுவிடும். ஏனெனில் ஒரு பிரஜையின் அடிப்படை உரிமையை மற்ற பிரஜை அழித்து விட முடியாது. பிரஜைகள் மத்தியில் ஏற்றத் தாழ்வு இருப்பதும் மனித தர்மம் அல்ல. அந்த வகையில் தான் ஐ.நா. மனித உரிமைப் பேரவை இதில் தலையிட்டிருக்கிறது. 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-03-26#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.