Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் முடிவில் தங்கியுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை

Featured Replies

கூட்டமைப்பின் முடிவில் தங்கியுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை

 

 தேசிய அர­சாங்கம் என்ற மகு­டத்­தின்கீழ் அல்­லது கூட்டு அர­சாங்­க­மென்ற இணைப்­புடன் இதற்கு முதல் இலங்­கையில் பல கட்­சி­களின் கூட்­டுடன் அல்­லது ஆத­ர­வுடன் அர­சாங்­கங்கள் அமைக்­கப்­பட்டு ஆட்சி நடத்­தப்­பட்­டாலும் அவை தமது முழு­மை­யான காலப்­ப­கு­தியை முடிக்க முடி­யாமல் குலைந்­து­போன, கலைந்து போன சந்­தர்ப்­பங்­கள்தான் இலங்­கை அர­சியல் வர­லா­றாக இருந்­துள்­ளது. அதே­போன்­ற­தொரு நிலைதான் இன்­றைய தேசிய அர­சாங்­கத்­துக்கு ஏற்­பட்­டி­ருப்­ப­துடன் பிர­தமரின் நாற்காலியும் ஆட்­ட­நிலை கண்­டுள்­ளது.

என்­னதான் தேசிய அர­சாங்கம் என்று சிலர் பெரு­மைப்­பட்­டாலும் எதிரும் புதி­ரு­மாக பல பாராளுமன்­றங்­களில் இருந்த கட்­சிகள் ஒன்­றி­ணைந்து தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இது இலங்கை அர­சி­யலில் ஜன­வ­ரிப்­ பு­ரட்­சி­யென்று கூறப்­பட்­டாலும் தேசிய அர­சாங்­கத்தின் மூன்று வரு­ட­கால எல்லை ஓடிப்­போன நிலையில் மீதி இரு வரு­டங்­க­ளிலும் தேசிய அர­சாங்கம் நிலைக்­குமா, நீடிக்­குமா என்ற சந்­தே­கங்­களே நாளுக்கு நாள் அதி­க­ரித்­துக்­கொண்­டி­ருக்­கி­ன்றன.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவுக்­கெ­தி­ரான நம்­பிக்­கை­யில்­லாப்­ பி­ரே­ரணை எதிர்­வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி விவா­தத்­துக்கு எடுத்­துக் ெகாள்­ளப்­பட்டு வாக்­கெ­டுப்­புக்கு விடப்­படும் என்ற அறி­வித்தல் விடுக்­கப்­பட்­டி­ருக்கும் நிலையில் அன்­றைய தினம் நம்­பிக்­கை­யில்­லாப்­ பி­ரே­ரணை தோற்­க­டிக்­கப்­ப­டலாம். சில­வேளை கூட்டு எதிர்க்­கட்­சியின் நோக்கம் வெற்­றி­பெ­றலாம். எது எவ்­வாறு இருந்த போதிலும் தமிழ் மக்கள் இதனால் அடை­யப்­போ­கிற இலாப நஷ்­டங்கள் என்ன? தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு எத்­த­கைய சாதக, பாதக நிலைகள் வரப்­போ­கி­ற­தென்­பதே தமிழ் மக்­க­ளுக்கு மத்­தியில் எழுந்­துள்ள கேள்­வி­யா­கவும் சந்­தே­கங்­க­ளா­கவும் இருக்­கி­ன்றன. ரணி­லுக்­கெ­தி­ரான பிரே­ர­ணையில் கூட்­ட­மைப்பு பிர­த­ம­ருக்கு ஆத­ர­வாக நிற்­கப்­போ­கி­றதா, நடுநிலை வகிக்­கப்­போ­கி­றதா, பிரே­ர­ணைக்கு ஆத­ரவு வழங்கி தேசிய அர­சாங்­கத்தை கவிழ்க்கத் துணை நிற்­கப்­போ­கி­றதா என்ற கேள்­வியும் சந்­தே­கங்­களும் ஒவ்­வொரு தினமும் கேள்­வி­யாக மாறிக்­கொண்­டி­ருக்­கி­ன்றன. தமிழ் மக்­களைப் பொறுத்­த­வரை நம்­பிக்­கை­யில்லா தீர்மானம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஒரு தீர்க்­க­மான முடிவை எடுக்­க­வேண்­டு­மென்­பது புத்­தி­ஜீ­வி­களின் எதிர்­பார்ப்பும் கருத்­து­மாகும். காரணம் மேற்­படி தேசிய அர­சாங்­கத்தை உரு­வாக்­க கூட்­ட­மைப்பு மறை­க­ர­மாக உழைத்த உழைப்பு யாவரும் அறிந்த விடயம்.

இதே­வேளை கடந்த மூன்று வரு­டங்­க­ளாக அடை­ய­மு­டி­யு­மென்று கூறி­வந்த அர­சியல் தீர்­வா­னது கடந்த காலங்­க­ளைப்போல் குறைப்­பி­ர­ச­வ­மாக போய்­வி­டக்­கூ­டாது என்­பது கவ­ன­மாக கையா­ளப்­ப­ட­வேண்­டிய விடயமாகும். பாரா­ளு­மன்றம் அர­சியல் நிர்­ணய சபை­யாக மாற்­றப்­பட்டு வழிப்­ப­டுத்தல் குழு மற்றும் உப­கு­ழுக்கள் நிய­மிக்­கப்­பட்டு இடைக்­கால அறிக்­கையும் வெளி­வந்த நிலையில் இம்­மு­யற்­சி­களின் பின்­ன­ணியில் இருந்­த­வர்களால் அர­சி­யல்­சா­சனம் கொண்­டு­வ­ரப்­பட்டு நீண்­ட­கால அர­சியல் பிரச்­சி­னைக்கு தீர்வு காணப்­பட வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்புமாகும். அம் முயற்­சிக்கு தேசிய அர­சாங்­கத்தின் பலம் அவ­சி­ய­மா­னது என்று நம்­பிக்கை கொடுக்­கப்­பட்ட நிலையில் தேசிய அர­சாங்­கமும் கலைந்து பிர­தமர் பத­வியும் பறி­போ­கு­மாக இருந்தால் அரசியல் தலை­மை­களின் மோசத்­தன்­மையை ஊகித்­துக்­கூட பார்க்­க­மு­டி­யாது.

பிர­தமர் பதவி வில­க­வேண்டும். அவர் அப்­ப­த­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட வேண்டும் என்ற கோஷமும் அழுத்­தங்­களும் பல திசை­க­ளி­லி­ருந்து கொண்­டு­வ­ரப்­ப­டு­கி­றது. தேசிய அர­சாங்­கத்தின் நெருக்­க­டிகள் தீர்க்­கப்­ப­ட­வேண்­டு­மாயின் அர­சாங்­கத்தில் மாற்­றங்கள் கொண்டு­வ­ரப்­ப­ட­ வேண்டும். முதலில் பிர­தமர் பதவி ரணி­லி­ட­மி­ருந்து பறிக்­கப்­பட்டு வேறொ­ரு­வரை பிர­தமர் ஆக்­க­வேண்டும். அப்­பொ­ழு­து­தான் தற்­போ­தைய நெருக்­க­டி­க­ளுக்கு தீர்வு காண­மு­டியும் என ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் சிரேஷ்ட அமைச்­சர்கள் கூறிக் கொண்­டி­ருக்­கி­றார்கள். இவ்­வா­ரமே ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்குள் ேநர்மையான மறு­சீ­ர­மைப்பு உட­ன­டி­யாக செய்­யப்­ப­ட­வேண்டும். இல்­லை­யாயின் நம்­பிக்­கை­யில்­லாப்­ பி­ரே­ரணை வாக்­கெ­டுப்­பின்­போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரா­கவே வாக்­க­ளிப்­போ­மென ஐக்­கிய தேசி­யக்­க­ட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னரும் இராஜாங்க அமைச்­ச­ரு­மான பாலித ரங்கே பண்­டார தெரி­வித்­துள்ளார். கூட்டு எதிர்க்­கட்­சி­யா­னது இத்­த­கைய தக­வல்­க­ளையும் தர­வு­க­ளையும் அவ­தா­னிப்­புக்­க­ளையும் வைத்­துக்­கொண்டே நம்­பிக்­கை­யில்­லாப்­ பி­ரே­ரணை வெற்­றி­பெ­று­வது உறு­தி­யென ஆருடம் கூறிக்­கொண்­டி­ருக்­கி­றது.

இதே­வேளை பிர­த­ம­ருக்கும் ஜனா­தி­ப­திக்கும் ஆரம்ப காலத்­தி­லி­ருந்த நம்­பிக்­கைகளும் புரிந்­து­ணர்­வுகளும் தற்­போது மிக மோச­மான நிலைக்கு சென்­றுள்­ளன என்­ப­தற்கு பல ஆதா­ரங்கள் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­ன்றன. இலங்­கையின் தேசி­யப்­பொ­ரு­ளா­தாரம் கடந்த மூன்று வரு­டங்­களில் மிக மோச­மான நிலையை அடைந்­த­தற்கு பிர­தமரின் ஆளு­மை­யின்­மையும் அவ­தா­னிப்பு குறை­வுமே காரணம் என ஜனா­தி­பதி, பிர­தமர் மீது நேர­டி­யா­கவே குற்றம் சாட்­டி­யுள்ளார். அண்­மையில் நடை­பெற்ற அமைச்சரவைக் ­கூட்­டத்தில் மிகவும் காட்­ட­மாக ஜனா­தி­பதி, பிர­தமரை சாடி­யி­ருப்­பது சக­ல­ரது கவ­னத்­தையும் ஈர்த்­துள்­ளது. பிர­த­மரை ஜனா­தி­பதி சாட­வில்லை.

அமைச்சர் மலிக்­ கு­றித்தே பேசினார் என்று சில அமைச்­சர்கள் சமா­தா­னப்­ப­டுத்தி விட­யங்­களை தீவிரமடை­யாமல் பார்த்துக்கொள்ள நினைத்­தாலும் ஜனா­தி­ப­தியின் அதி­ரடி நட­வ­டிக்­கைகள் பிர­தமருக்கும் ஜனா­தி­ப­திக்­கு­மி­டை­யி­லான முறுகல்நிலையை வெளிப்­ப­டை­யா­கவே எடுத்­துக்­காட்­டு­கின்றது ­என்­ப­தற்கு உதா­ர­ண­மாக 2015 ஆம் ஆண்டின் ஆட்சி மாற்­றத்­தின்பின் மத்­தி­ய­ வங்­கி­யா­னது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கா­வுக்கு கீழி­ருந்த தேசி­ய­ கொள்­கைகள் மற்றும் பொரு­ளா­தார அலு­வல்கள் அமைச்சின் கீழ் கொண்­டு­வ­ரப்­பட்­டது. இணை­யங்கள், பரி­வர்த்­தனை ஆணைக்­கு­ழுவும் பிர­த­ம­ருக்­குக் கீழ் கொண்­டு­வ­ரப்­பட்­டது. அண்­மைய முறுகல் நிலையைத் தொடர்ந்து இலங்கை மத்­தி­ய­ வங்கி மீண்டும் நிதி அமைச்சின் கீழ் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ள­துடன் பிணை­யங்கள் பரி­வர்த்­தனை ஆணைக்­கு­ழுவும் நிதியமைச்சின் கீழ் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது.

இது­தொ­டர்­பான விேசட வர்த்­த­மானி அறி­வித்­தலும் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருப்­ப­துடன் மிக முக்­கிய கடும் நட­வ­டிக்­கை­யாக பொரு­ளா­தாரக் குழுவும் கலைக்­கப்­பட்­டுள்­ளது.

நாட்டில் நிலவும் பர­ப­ரப்­பான சூழ்­நி­லையில் இவ்­வா­றான அதி­ரடி நட­வ­டிக்­கைகளும் அர­சியல் விவ­கா­ரங்களும் தேசிய அர­சாங்­கத்தின் தேரை தொடர்ந்து இழுத்­துச் ­செல்­வ­தி­லுள்ள கஷ்­டத்தை படம்­பி­டித்­துக் ­காட்­டு­கி­ன்றன. இது மாத்­தி­ர­மன்றி பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­ப­ட்டுள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தொடர்பில் சுதந்­தி­ரக்­கட்­சியின் மூத்த உறுப்­பி­னர்­க­ளுடன் ஜனா­தி­பதி அவ­சர ஆலோ­சனை நடத்­தி­யி­ருப்­ப­துடன் சுதந்­தி­ரக்­கட்சி உரிய முடிவை எடுக்கும் என்றும் தெரி­வித்­துள்ளார். பிர­த­ம­ருக்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருக்கும் பிரே­ரணை குறித்து ஜனா­தி­பதி சட்ட வல்­லு­நர்­க­ளுடன் ஆலோ­சனை நடத்­தி­யி­ருப்­ப­தா­கவும் தெரிய வரு­கி­றது.

இதே­வேளை ஐக்­கிய தேசிய கட்சி தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் தமிழ் முற்­போக்கு கூட்­டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், ஜாதிக ஹெல உறு­மய ஆகிய கட்­சி­களின் தலை­வர்­க­ளுடன் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தமக்கெதி­ரான பிரே­ரணை தொடர்பில் தீவி­ரப் ­பேச்சுவார்த்­தை­களை நடத்­தி­வ­ரு­கின்றார் என்ற செய்­தி­களும் கசி­யத்தான் செய்­கி­ன்றன.

பிர­த­ம­ருக்­கெ­தி­ரான பிரே­ரணை தொடர்பில் ஐக்­கிய தேசி­யக் ­கட்சி பயம் கொண்­டுள்­ளதோ என்­னவோ பிர­தமர் ஆடிப்­போ­யுள்ளார் என்­பது தெளி­வா­கவே தெரி­கின்ற விடயம். பிர­த­மரின் இந்த அபத்­த­மான சூழ்­நி­லைக்கு காரணம் நாட்டின் பொரு­ளா­தார மற்றும் அர­சியல் கார­ணங்­கள்தான் என பேசப்­ப­டு­கி­றது. பொரு­ளா­தார காரணம் என்ற பகுப்பில் நாட்டின் பொரு­ளா­தார சுட்­டி­க­ளான விலை­யேற்றம், வாழ்க்­கைத்­தர வீழ்ச்சி, வேலை­யில்­லாப்­ பி­ரச்­சினை, பண­வீக்கம், நேர­டி­யான அபி­வி­ருத்­திகளின்மை போன்ற கார­ணங்கள் கார­ணி­யா­க­வுள்­ள­தாக பொரு­ளா­தார ஆய்­வா­ளர்கள் பேசிக் கொள்­கி­றார்கள்.

இவை ஒருபுற­மி­ருக்க எந்த ஆட்­சி­யின்­மீது ஊழல், இலஞ்சம், கெடு­பிடி, சிறு­பான்மை சமூ­கத்­துக்­கெ­தி­ரான மோசமான நிலைகள் பேசப்­பட்டு அந்த ஆட்சி கவிழ்க்­கப்­பட்­டதோ அதை­விட மோச­மான நிலைகள் தேசிய அர­சாங்­கத்தில் இடம் பெற்று வரு­வ­தாக மாற்றுக் கட்­சி­க­ளான ஜே.வி.பி. போன்ற கட்­சிகள் குற்றஞ்சாட்­டிக் ­கொண்­டி­ருக்­கின்­றன.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை தோற்­க­டித்து அதன் பின்னர் தற்­பொ­ழுது இருப்­ப­தை­விட சிறந்த ஆட்­சி­யொன்றை உரு­வாக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென அமைச்சர் ராஜித தெரி­வித்­துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக செயற்­பட்­டாலும் அவர்­க­ளுடன் பேசி ஆத­ரவைப் பெற்று ஆட்­சியை மீள் அமைப்­போ­மென அவர் மேலும் நம்­பிக்கை தெரி­வித்­துள்ளார்.

இந் நெருக்­க­டி­யான தேசிய அர­சியல் சூழ்­நி­லையில் தமிழ் மக்­களை ஏக பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள பிரே­ரணை தொடர்­பான விவா­தத்­திலும் வாக்­கெ­டுப்­பிலும் எவ்­வகையான தீர்­மா­னங்­களை அல்­லது முடி­வு­களை எடுக்­கப்­போ­கி­றது என்­பது தொடர்பில் புத்­தி­ஜீ­விகள் மற்றும் பொது மக்­களின் கருத்­துக்கள் வெளிப்­ப­டுத்­தப்­ப­டா­விட்­டாலும் இவர்­களின் சமூக மற்றும் குழுக் ­க­லந்­து­ரை­யா­டல்கள் நடந்து கொண்­டே­யி­ருக்­கி­ன்றன. தேசிய அர­சாங்­கத்தின் காலம் கடந்து கொண்­டி­ருக்­கின்ற நிலையில் இருக்­கப்­போ­கின்ற இரு ­வ­ரு­டங்­க­ளுக்குள் ஏதா­வது சார்­பான, சாது­ரி­ய­மான விட­யங்கள் தமிழ் மக்கள் எதிர்பார்ப்­ப­துபோல் நடை­பெ­ற­விட்டால் கடு­மை­யான விமர்­ச­னங்­க­ளுக்கும் மக்­களின் அதி­ருப்­தி­க்கும் கூட்­ட­மைப்பு ஆளாக வேண்­டி­வ­ரு­மென்­பதை அனைத்து தரப்­பி­னரும் உணர்ந்து கொள்­ளா­ம­லு­மில்லை.

கூட்­ட­மைப்பு இது­வரை அளித்து வந்த நம்­பிக்­கையின் அடிப்­ப­டையில் பார்ப்பின் தேசிய அர­சாங்­க­மாக செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்ற ஐக்­கிய தேசி­யக் ­கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­க­ட­்சியும் பல­மு­டை­ய­தா­கவும் கூட்­டு­டமை கொண்­ட­தா­கவும் இருக்கும் பட்­சத்­தி­லேயே தமிழ் மக்­க­ளுக்­கான நிரந்­தர அர­சியல் தீர்வைக் கொண்­டு­வர முடியும். தவறும் பட்­சத்தில் முன்­னைய கால அனு­ப­வங்கள் போலவே தமிழ் மக்கள் ஏமா­ற­வேண்­டிய நிலை ஏற்­ப­டு­மென்­பதை கூட்­ட­மைப்பு தெளி­வா­கவும் திட­மா­கவும் கூறி­வந்­துள்­ளது. இக்­க­ருத்­துக்கு மாற்­றீ­டான கருத்­துக்கள் வைக்­கப்­ப­ட­வு­மில்லை. ஆனால் தற்­பொ­ழுது நாட்டில் எழுந்­துள்ள சூழ்­நி­லை­யானது எல்லா எதிர்­பார்ப்­புக்­க­ளையும் இன்னும் கூறப்­போனால் கன­வு­க­ளையும் தவி­டு­பொடி ஆக்­கி­வி­டுமோ என்ற பீதியும் அவ­நம்­பிக்­கை­யுமே தமிழ் மக்கள் மத்­தியில் மேலோங்கி வரு­கி­ன்றன.

அர­சியல் தீர்வு தொடர்பில் நம்­பிக்கை தந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, மஹிந்த ராஜ­பக் ஷ அணி­சாரும் நிலை­யொன்று உரு­வா­கி­வி­டுமோ என்ற அச்சம் நாளுக்கு நாள் அதி­க­ரித்­துக்­கொண்டே செல்­கி­றது. அதற்கு ஏற்ற சம்­ப­வங்­களும் நடை­பெ­றா­ம­லில்லை. இதே­வேளை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவுக்ெகதி­ராக கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருக்கும் நம்­பிக்­கை­யில்­லாப் ­பி­ரே­ரணை தோற்­க­டிக்­கப்­ப­டலாம். அல்லது கூட்டு எதிர்க்­கட்­சியின் நோக்கம் நிறைவு பெறலாம். எது எப்­ப­டி­யி­ருந்­த­போ­திலும் பிர­த­மரின் எதிர்­கால நகர்­வு­களில் ஜனா­தி­ப­தியின் ஒத்­து­ழைப்பு அல்­லது ஆத­ரவு எவ்­வாறு இருக்­கப்­போ­கி­றது. என்பதும் மீண்டும் அதி­கார வலு­வு­டைய பிர­த­ம­ராக செயற்­ப­ட­க்­கூ­டிய வாய்ப்பு ஏற்­ப­டுமா என்­ப­தெல்லாம் கேள்­விக்­கு­றி­யா­கவே மாறிக்­கொண்­டி­ருக்­கி­றது. இது ஒரு­ப­ற­மி­ருக்க ஏற்கனவே புதிய அர­சியல் சாச­ன­மா­னது தமி­ழீ­ழத்தை உரு­வாக்­கு­வ­தற்­கான சாசனமென்றும் நாடு இதனால் பிளவுபடப்­ேபா­கி­ன்ற­து என்றும் கடு­மை­யான பிர­சா­ரங்­களை மேற்­கொண்டு வரு­கின்ற மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான குழு­வி­ன­ருக்கும் மைத்­திரிபால சிறி­சே­ன­வுக்­கு­மி­டை­யி­லான உடன்­பா­டுகள் ேநர்த்தியாக்­கப்­ப­டு­மா­க­ இருந்தால் நிைல­மைகள் மோச­மா­கலாம். மஹிந்­த­வுடன் ஒத்­துப்­போ­க­வேண்டும். அவரை சுதந்­தி­ரக்­கட்சி உள்­வாங்­க­வேண்டும் என்ற கருத்­துக்கள் கட­சிக்­குள்­ளேயும் வெளியேயும் விஸ்­வரூபம் எடுத்து வரு­கின்ற நிலையில் எதிர்­கா­லத்தில் எதுவும் நடக்­கலாம் என்ற நிைல­மை­களே வளர்ந்து வரு­கி­ன்றன.

இவ்­வா­றான சூழ்­நி­லையில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் ஆத­ர­வின்றி நம்­பிக்­கை­யில்­லாப்­ பி­ரே­ரணை வெற்­றி­பெ­றும் என்ற அசைக்க முடி­யாத நம்­பிக்­கையில் கூட்டு எதிர்க்­கட்­சி­ இருப்­ப­துடன் கூட்­ட­மைப்பு நாட்டு நலன் கரு­தாமல் தமது சுய­ந­ல ­வி­ட­யங்­களை மாத்­திரம் கருத்தில் கொண்டு தேசிய அர­சாங்கம் மேற்­கொள்­கின்ற தவ­றான அர­சியல் கொள்­கை­க­ளுக்கும் ஆத­ரவு வழங்­கி­வ­ரு­கி­றது. நாட்­டைப்­ பி­ரிக்கும் அர­சியலமைப்பை உரு­வாக்­க முயல்­வதென்பது ஒட்டுமொத்த தமிழ் மக்­களின் எதிர்­பார்ப்பு கிடை­யாது. இன விரோ­தத்தை ஏற்­ப­டுத்­தும்­ அ­ர­சியல் அமைப்பு உரு­வாக்­கத்தை கூட்டு எதிர்க்­கட்சி வன்­மை­யாக கண்­டிக்­கி­ன்ற­தென எச்­ச­ரித்­துள்­ளது. ஆனால் கூட்­ட­மைப்பு ரணி­லுக்­கெ­தி­ரான பிரே­ர­ணையில் எதிர்த்தே வாக்­க­ளிக்கும் என்ற உத்­தி­யோகபூர்­வ­மற்ற செய்­தி­களும் வெளி­வந்து கொண்­டி­ருக்­கின்­றன. கூட்­ட­மைப்பின் ஆத­ர­வைப்­பெற பிர­த­மரும் அவர் சார்ந்த ஐக்­கிய தேசி­யக்­ க­ட்சி ஆத­ர­வா­ளர்­களும் தீவிர முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கி­றார்கள் என்ற செய்­தி­களும் வெளி­வ­ரு­கின்­றன.

நாட்­டினுடைய இன்றைய நிைல­மைகள் ஆரோக்­கியம் கொண்­ட­தாக இருக்­க­வில்­லை­யென்­பது இதி­லி­ருந்து தெரிய வரு­கி­றது. இவ்­வா­றான அர­சியல் போக்­குகள் குழம்­பிப்போய் காணப்­ப­டு­கிற நிலையில் தமிழ் மக்­க­ளு­டைய அர­சியல் போக்­கு­களில் மிக முக்­கி­ய­மான தீர்­மா­னங்­களை எடுக்­க­வேண்­டிய காலகட்­டத்தில் நாம் நிற்­கி­ன்றோ­மென்­பது தெளி­வா­கவே வெளிச்­ச­மிட்டுக் காட்­டப்­ப­டு­கி­றது. அரசியல் தீர்வு, மனிதவுரிமை பிரேரணைகள் இவையெல்லாவற்றுக்கும் அப்பால் அரசியல் கைதிகள் விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் நடத்தப்பட்டு வரும் தொடர் போராட்டங்கள், காணி விடுவிப்பு, முன்னாள் போராளிகள் மறுவாழ்வு என்ற ஏகப்பட்ட விவகாரங்கள் தேங்கிப்போய் நிற்கும் ஆபத்தான சூழ்நிலையொன்றே உருவாகிக் கொண்டிருக்கிறது.

முன்னொரு காலத்தில் சொன்னதுபோல் ''பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒட்டுமா?'' என்ற கேள்விக்கேற்ப தேசிய அரசாங்கத்தின் கட்சித் தலைவர்களான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான பனிப்போர் தீவிரம் அடைந்து காணப்படுகிறது. மீண்டும் இவ்விரு தரப்பினரையும் ஒற்றுமையாக்க வேண்டிய பொறுப்பை மேற்கொள்ள கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஆகியோர் மீண்டும் களத்தில் இறங்கவேண்டிய தேவை ஏற்படலாம். மக்கள் வழங்கிய ஆணைக்கமைய தேசிய அரசாங்கம் 2020 ஆம் ஆண்டுவரை நிலைபெறுமென சந்திரிகா கூறியிருந்தபோதிலும் நிைலமைகளின் சார்புத்தன்மை சாதகமாகவில்லையென்பதே உண்மை.

விவாதத்துக்கு வரவிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில்,

கூட்டு அரசை பதவியில் வைத்திருக்கவேண்டிய தேவை எமக்கில்லை. நம்பிக்கையில்லாப் பிரேரணையின் முதல் நகர்வு கூட்டு அரசுதான். பிரதமர் முதலில் இலக்கு வைக்கப்பட்டிருக்கின்றார். அடுத்தது ஜனாதிபதி. கூட்டு அரசு எதுவும் செய்யாமல் பதவியிலிருப்பது பிரயோசனமற்றது. அவர்கள் பதவியிலிருக்க வேண்டுமென்பதற்காக ஆதரவு வழங்கமுடியாது. புதிய அரசியல் அமைப்பு அரைவாசி தூரத்தில் நிற்கிறது. தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. கடந்த மூன்று வருடங்கள் இழுத்தடிக்கப்பட்டுள்ளன.காலம் கடத்துவதற்கு கூட்டு அரசை பதவியில் தொடர அனுமதிக்க முடியாது என சுமந்திரன் கூறிய கருத்தின் அர்த்த நிலையை பிரேரணை விவாதத்தின்போதும் அதன் வாக்கெடுப்பின்போதும் அறியமுடியும்.

 திரு­ம­லை­நவம்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-03-31#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.