Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி

Featured Replies

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி

 
அ-அ+

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. #PAKvWI #KarachiT20I

 
 
 
 
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி
 
கராச்சி:

பாகிஸ்தான் சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அங்கு சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றதால் மைதானத்தில் கூட்டம் அலைமோதியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

201804020210300184_1_pakvwi0104 - Copy._L_styvpf.jpg

இதையடுத்து பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பக்கர் ஜமான், பாபர் அசாம் ஆகியோர் களமிறங்கினர். பாபர் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜமான் உடன் ஹுசைன் தலாட் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். ஜமான் 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதைத்தொடர்ந்து தலாட் உடன் கேப்டன் சர்பிராஸ் அகமது ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தார். தலாட் 41 ரன்களிலும், சர்பராஸ் 38 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் ஷோயிப் மாலிக், பஹீம் அஷ்ரப் ஆகியோர் இணைந்து அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர். பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. மாலிக் 14 பந்துகளில் 37 ரன்களுடனும், பஹீம் 9 பந்துகளில் 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதையடுத்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாட்விக் வால்டன், அண்ட்ரே பிளெட்சர் ஆகியோர் களமிறங்கினர். பிளெட்சர் டக் அவுட் ஆனார். அவரைத்தொடர்ந்து வால்டன் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்தவர்கள் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 13.4 ஓவரில் 60 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் மார்லன் சாமுவேல்ஸ் அதிகபட்சமாக 18 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் மொகமது நவாஸ், மொகமது ஆமிர், ஷோயிப் மாலிக் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

பாகிஸ்தான் அணியின் ஹுசைன் தலாட் ஆட்டநாயகன் விருது பெற்றார். நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. #PAKvWI #KarachiT20I

https://www.maalaimalar.com/News/Sports/2018/04/02021030/1154463/Pakistan-demolish-West-Indies-by-143-runs.vpf

  • தொடங்கியவர்

பாகிஸ்தானுக்கு எதிரான டி 20 ஆட்டத்தில் 60 ரன்களில் சுருண்டது மேற்கிந்தியத் தீவுகள் அணி

 

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி 20 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கராச்சி நகரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. ஹூசைன் தலாத் 41, பகர் ஸமான் 39, கேப்டன் சர்ப்ராஸ் அகமது 38, ஷோயிப் மாலிக் 37 ரன்கள் சேர்த்தனர். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கீமோ பால், ரேயட் எம்ரிட், ரோவன் பொவல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

204 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 13.4 ஓவர்களில் 60 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. டி 20 போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் குறைந்த பட்ச ஸ்கோராக இது அமைந்தது. இதற்கு முன்னர் 2010-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 7 விக்கெட்க்ள் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்திருந்தது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மார்லன் சாமுவேல்ஸ் 18, கீமோ பால் 10, எம்ரிட் 11 ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். இவர்களை தவிர வால்டன் 6, ரோவன் பொவல் 5, சாமுவேல் பத்ரி 7 ரன்கள் எடுத்தனர். பிளெட்சர், ஜேசன் முகமது, தினேஷ் ரம்தின், கேசரிக் வில்லியம்ஸ் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

மிகப்பெரிய வெற்றி

இது டி 20 வரலாற்றில் மிகப்பெரிய அளவிலான 2-வது வெற்றியாக அமைந்தது. இதற்கு முன்னர் 2007-ம் ஆண்டு கென்யா அணிக்கு எதிராக இலங்கை அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே இந்த வகையான சாதனையில் முதலிடம் வகிக்கிறது. இதற்கு முன்னர் அந்த அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியிருந்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது நவாஸ், முகமது அமிர், ஷோயிப் மாலிக் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். இந்த வெற்றியால் பாகிஸ்தான் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

http://tamil.thehindu.com/sports/article23421519.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.