Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய கீரிகட்டு அணியின் திருவிளையாடல்

Featured Replies

  • தொடங்கியவர்

சச்சின் மனைவி: மார்க்கெட்டுக்கு சென்று காய்கறிகள் வாங்கி வாருங்களேன்...

சச்சின்: சூழ்நிலை சரியில்லை... இப்போ போக முடியாதே...

சச்சின் மனைவி: சேலை அணிந்து கொண்டு போனீங்கன்னா... உங்களை யாரும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது...

(அதன்படியே கடைக்கு போய் காய்கறி வாங்குகிறார்... அங்கு ஒரு பெண்மணி மட்டும் அவரை அடையாளம் கண்டு பிடித்துவிடுகிறார்...)

சச்சின்: எப்படி என்னை கண்டு பிடித்தீர்கள்...?

அந்த பெண்: இது ரொம்ப ஈஸி... நான் வேறு யாருமல்ல... டிராவிட்தான்...

=======================

டிராவிட் : பங்காளி இப்ப இங்க இன்னொரு கொலை

விழப்போகுது.

இன்சமாம் : போட்டுத் தள்ளு பங்காளி இன்னும்

உயிரோட இருந்து என்னத்த பண்ணப் போறாய்ங்க.....?

சேப்பல் : அடப்பாவிங்களா ! இவிங்க

" கப்பு "

வாங்காட்டி நமக்கு

" ஆப்பா "...........

கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா.....

_________________

பாப் வுல்மர் கொலையில் புதிய திருப்பம்..

புன்னகை மன்னன் படத்தில் வருவது போல தற்கொலை முடிவெடுத்த அவரது நண்பர் பின்வாங்கியது ஏன்..?

கிரேக் சாப்பலிடம் விசாரணை தீவிரம்..! :lol::unsure:

=============================

f_72381732eb4m_aa859a8.jpg

  • தொடங்கியவர்
f_001m_ba2cf5c.jpg
  • தொடங்கியவர்

விமான நிலையத்தில் இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கிடையே கடும் மோதல்.

விமானத்தில் சன்னலோர இருக்கைக்குதான். :P

------------------

சூப்பர் ஸ்டார் தத்துவம்

அதிகமா தோத்தவனும், ஒன்னுமே விளையாடத்தெரியாதவனும்

கப் வாங்கினதா சரித்திரமே கிடையாது

குணா கமல்

மனிதர் பார்த்து உணர்ந்து கொள்ள இது கிரிக்கெட்டே அல்ல

அதையும் தாண்டி கேவலமானது.... கேவலமானது

சூர்யா கஜினி

எல்லாரும் நல்லா விளையாடி ஜெயிச்சி கப் வாங்கனும்னு நினைக்கிறது தன்னம்பிக்கை

ஒருத்தனுக்குமே விளையாடத்தெரியாம கப் வாங்கனும்னு நினைக்குறது முட்டாள்த்தனம்

டி.ராஜேந்தர்

இந்தியா சரியா விளையாடல கிரிக்கெட்டு

அதனால அங்களுக்கு போயிருச்சி மார்க்கெட்டு

இனிமே வரமாட்டங்க சரிப்பட்டு

அவனுங்களை பொழந்துகட்டு

ஏய் டண்டனக்கா ஏய் டனக்குனக்கா

-----------------------

  • கருத்துக்கள உறவுகள்

உச்ச்ச் அப்பாடா தனியா உக்காந்து யோசிப்பாங்களோ!!----தாங்க முடியல்ல, கண்ணஇருட்டுது.

எல்லாம் கெகலிய விட்ட அம்புகள் கனக்கால்ல கிடக்கு!!!!! :):unsure:

  • தொடங்கியவர்

இந்திய வீரர்கள் இனி என்ன செய்வார்கள்f_SportsL1m_31840be.jpg

  • தொடங்கியவர்

worldcupvadivelu1np4.jpg

:o :P :o:rolleyes:

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலியக் கேப்டனுக்கு வவுறு சரி இல்லையாம். எனவே அவரால் அதிகம் விளையாட முடியாது. அதனைக் கண்டு இலங்கை அணியினருக்கு மயக்கம் வரலாம். மயக்கம் வந்த இலங்கை அணியினரால் வெற்றி பெற முடியாது.

இவர்கள் எல்லாம் நலிந்த நிலையில் இருப்பதால் இந்தியாவை கிரிக்கெட் போர்டு அழைக்கும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.

அய்யோ பாவம், நம்ம நிலைமை இப்படியா ஆகனும்?

_________________

பங்களா தேஷ் அணியினருக்கு கொடுத்த சமோசாவினை கடுகு எண்ணெயில் தாளிக்கவில்லை என்று காரணத்தால், அவர்கள் உலக கோப்பையிலிருந்து வெளியேறினார்கள்.

அதனால் இந்தியாவுக்கு அதிரடியான வாய்ப்பு.

_________________

இந்திய அணிக்கு இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசியே தலைமையேற்று நடத்த இருப்பதால் மீண்டும் ஒரு முறை வாய்ப்பு தந்து சூப்பர் 8ஐ சூப்பர் 9ஆக மாற்ற ஐ.சி.சி முடிவு!

_________________

உலக கோப்பையில் ரன் எண்ணுவதில் (ஓட்டு எண்ணுவது போல) தவறு நடந்துவிட்டதால் மீண்டும் இலங்கையுடன் மறு போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

_________________

  • தொடங்கியவர்

இந்திய அணி முதலில் மட்டை பிடித்தால் அடுத்து ஆடும் அணி 25 ஓவர்களிலேயே அந்த இலக்கை எட்டவும், இந்திய அணி முதலில் பந்து வீசினால் எதிரணி எடுக்கும் ஓட்டங்களை 20 விக்கெட்டுகள் கொண்டு எட்டவும் ஒரு " கிச்சான் வொர்த்& அழுகுனி லூயிஸ் வழி முறை உடனடியாகக் கண்டுபிடிக்கப் பட வேண்டும்

இந்திய அணி மட்டை வீரம் காட்டும்போது பின்னாலிருந்து தாக்கும் கோழை விக்கெட் கீப்பர் அகற்றப்பட வேண்டும்.. தடைக் கற்களான ஸ்டம்புகள் இருக்கவே கூடாது.. களத்தடுப்பாளர்கள் கை கால்கள் விலங்கிடப் பட வேண்டும்..

பந்து வீச்சாளர் பெவிலியனில் இருந்து பந்து வீச வேண்டும்.. ஆனால் ரன்னுக்காக மட்டையாளர் ஓடிக்கடக்கும் பிட்ச் இடை வெளி மட்டும் 3 அடியாக இருக்க வேண்டும்.

இன்னொரு வழி.. இரு மட்டையாளர்கள் எடுக்கும் ஓட்டங்களும் தனித் தனியாகக் கணக்கிடப் படவேண்டும். அதாவது, கங்கூலி ஒரு ரன் எடுத்தால், அவருக்கு ஒன்று, எதிரில் இருக்கும் உத்தப்பாவுக்கு ஒன்று.. ஆக மொத்தம் இரண்டு.

இருவரும் தானே ஓடுகிறார்கள்.. [இந்திய அணிக்கு மட்டும் இந்தச் சலுகை..] :lol: :P :(

  • தொடங்கியவர்

பால் காவடி...

பேட் காவடி...

ஸ்டெம்ப் காவடி...

பைல்ஸ் காவடி...

ச்சும்மா எல்.ஆரு.ஈசுவரி கணக்கா பாடுறேன்னு நெனைச்சுக்காதீங்க. நெசமாவே இத்தனை விதமா காவடி எடுத்துருக்கேன். எல்லாம் இந்திய கிரிக்கெட்டு டீமுக்காத்தான். "கிருஷ்ணவேணி'ங்கிற என் பேரைக் கூட "கிரிக்கெட்'வேணின்னு அதிகாரப்பூர்வமா மாத்தி வைச்சிக்கட்டவ நானு!

திங்கக்கிழம -சச்சினுக்காக சோமவார விரதம்,

செவ்வாக்கிழம -அம்மன் கோயில்ல டிராவிட் பேர்ல அர்ச்சனை, புதனன்னிக்கி -புதுப் பையன் உத்தப்பாக்காக முருகர் கோயில்ல அடிப் பிரதட்சணம்,

வியாழன் -கும்ளேக்காக தக்ஷாணாமூர்த்தி பூசை,

வெள்ளிக்கிழம -பல சோதனைகளைக் கடந்து டீமுக்குத் திரும்பி வந்துருக்குற கங்குலிக்காக நெய்விளக்கு,

சனிக்கிழம கல்யாணமாகாத தினேஷ் கார்த்திக்குக்காக ஆஞ்சநேயருக்குத் துளசி மாலை,

ஞாயிறன்னிக்கு சர்ச்சுக்குப் போயி மொத்த டீமுக்காகவும் கூட்டுப் பிரார்த்தனை.

இப்படி கடந்த ஒரு மாசமா இந்தியா உலகக் கோப்பையைச் செயிக்கணும்னு எக்கச்சக்கச்சக்கமா வேண்டிக்கிட்டவதான் நானு!

ஆனா என்னிக்கு இந்த எடுபட்டப் பயலுக, வேர்ல்டு கப்புல டாஸ் போட்ட காசை எடுத்து நெத்தியில ஒட்டி வெச்சிக்கிட்டு திரும்பி வந்தாங்களோ, அந்த நிமிஷத்துல இருந்து கிரிக்கெட்னாலே எனக்கு வெறி கண்டமேனிக்கி ஏறுது.

சொன்னா நம்ப மாட்டீங்க... பத்து வருசத்துக்கு முன்னாடி எனக்கு கிரிக்கெட்டுக்கும் ஹாக்கிக்கும் கூட வித்தியாசம் தெரியாது. அப்பல்லாம், கிரிக்கெட் மேட்சை டீவில பாக்குறப்போ, ஏன் ரெண்டு பேரு மட்டும் கையில மட்டைய வெச்சிருக்காங்க, மத்தவங்களுக்கெல்லாம் மட்டை இல்ல போல, அதான் கோலே போட மாட்டீங்கறாங்களோன்னு யோசிப்பேன்.

ஹாக்கி மேட்சைப் பாக்குறப்போ, துட்டுள்ளவங்க போல, அதான் ஆளுக்கொரு மட்டை வைச்சிருக்காங்கான்னு நினைச்சுக்குவேன். இந்த ஸ்டெம்புக்கு மேலே வைக்குற "பைல்ஸ் விழுந்துருச்சு'ன்னு யாராவது சொன்னாக்கூட, வெளையாடுற ஆளுக்கு நான் "மூல வியாதி முத்திருச்சு'ன்னு நினைச்சுகிட்டு இருந்திருக்கேன்.

புத்தருக்கு பொசுக்குன்னு போதி மரத்துல ஞானம் வந்த மாதிரி, எனக்கு 96 வேர்ல்டு கப்புல என் பையன் மூலம் கிரிக்கெட் புத்தி வந்துச்சு. அவன்தான் எனக்கு கிரிக்கெட்டுல வாத்தியாரு. ஒரு மண்ணும் தெரியாத எனக்கு ரன்னு முதற்கொண்டு எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்தான். போகப் போக, டீவியில கிரவுண்டை அவுட் ஆஃப் போக்கஸ்ல காண்பிச்சாலே, பிட்ச் ரிப்போர்ட்டே சொல்லுற அளவுக்கு மேதாவி ஆகிட்டேன்.

என் புருஷனையும் சொல்லணும். ரொம்ப சாது. நல்லவரு. கிரிக்கெட் மேல அவருக்கு அம்புட்டு பாசம். வேர்ல்டு கப்புக்கு வேர்ல்டு கப், மெடிக்கல் லீவு போட்டு, மேட்சு பார்ப்பாரு. அவ்வளவு ஏன், "கிரிக்கெட்'னு ஒரு பேப்பர்ல எழுதி அவரு முன்னாடி தொங்கவிட்டாக்கூடப் போதும். அதையே மேட்ச் ஹைலைட்ஸ் பாக்குற மாதிரி விசிலடிச்சுக் கைதட்டிப் பார்ப்பாரு.

சச்சினு மேல அம்புட்டுப் பிரியம். "சச்சின்'னு பேரு வைச்சதாலயே அந்த விசய் படத்தைப் போயி ஏழெட்டு தடவை பார்த்தாரு.

என்னிக்காவது சச்சின் டக்-அவுட் ஆயிட்டாப் போதும். ரூமுக்குள்ள போயி கதவைச் சாத்திக்கிட்டு தேம்பித் தேம்பி அழுவாரு. என்னிக்காவது சச்சின் செஞ்சுரி போட்டுட்டாலும் வாசல்ல போய் ஒக்காந்து சந்தோசத்துல தேம்பித் தேம்பி அழுவாரு. அப்படிப்பட்ட மனுசன், அந்த சச்சினு இலங்கை மேட்சுல அவுட்டானதில இருந்து மௌன சாமியாராகிட்டாரு. சச்சினுக்குப் பின்னால கழண்ட ஸ்டெம்பு மாதிரியே மறை கழண்டு அலையறாரு. யாராவது மணி என்ன்னு கேட்டாக் கூட ஒன் எய்ட்டி ஃபைவ் ஃபார் ஆல் அவுட்டுன்னு விட்டத்தைப் பார்த்து விரக்தியாப் பேசுறாரு.

இந்தப் பாழாப்போன கிரிக்கெட்டுக்காக நாங்க என்னென்னல்லாம் பண்ணிருக்கோம்னு தெரியுமா!

ஒரு தடவ இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் மேட்சு. சார்ஜான்னு நெனைக்குறேன். அப்ப எங்க வீட்டுக்கு உசிலம்பட்டில இருந்து கன்னையா சித்தப்பு வந்திருக்காரு. இந்தியா முத பேட்டிங். ஓப்பனிங் விக்கெட்டு ரெண்டு கழண்டுருச்சு. சேருல காலு மேல காலு போட்டு, வக்கணையா ஒக்காந்துட்டு மேட்சு பார்த்துட்டிருந்த சித்தப்பு, டாய்லெட்டுக்குள்ள போனாரு. அப்ப சச்சின் விளாசு விளாசுன்னா விளாச ஆரம்பிச்சது.

எங்களுக்கு சென்டிமெண்ட் எகிறிடுச்சு. எங்க சித்தப்பு வெளியே வந்தா, சச்சினு அவுட் ஆகி வெளியே போயிருமேன்னு பயந்து, டாய்லெட்டுக்கு வெளியே தாழ்ப்பாளைப் போட்டுட்டோம். மேட்சு நல்லாவே போச்சுது. சித்தப்பு உள்ள இருந்து கத்துறாரு, கெஞ்சுறாரு, கதறுறாரு... ம்ஹூம், நாங்க அசரவே இல்லை. சச்சினு நூறடிச்சதுக்கு அப்புறம்தான் சித்தப்புவை ரிலீஸ் பண்ணுனோம்.

அப்பாவி அப்புசாமி

(அதுக்குள்ள சித்தப்பூ நாறடிச்சுட்டாரான்னு கேட்டா எனக்கு மூக்கு மேல கோவம் வந்துரும் ஆமா)

சித்தப்பு கொஞ்சம் கோவப்பட்டாரு. சமாதானப்படுத்தினோம். மத்தியானம் பாகிஸ்தான் பேட்டு புடிக்க ஆரம்பிச்சுது. சித்தப்பு திடீர்னு தும்மல் போட்டாரு. அந்த பந்துலேயே முத விக்கெட் எகிறிடுச்சு. விடுவோமா சென்டிமெண்ட்டை! எம் பையன் டக்குன்னு கடைக்குப் போயி மூக்குப் பொடி வாங்கியாந்தான். நாங்க எல்லாரும் மூக்குல துணியைக் கட்டிக்கிட்டோம். பொடியை அப்படியே காத்துல தூவி விட்டோம். சித்தப்பு ஒரு ஹேட்ரிக் தும்மலு போட, இன்ஸமாமு விக்கெட்டு காலி. அப்படியே அடுத்த எட்டு விக்கெட்டு காலியாகுறதுக்குள்ள, தும்மல் போட்டு, சித்தப்பு தொண்டை சிவந்துருச்சு. மூக்கு பழுத்துருச்சு.

அன்னிக்கு நைட்டே சித்தப்பு பொட்டியைக் கட்டுனாரு. நாங்க விடுவோமா என்ன! "இன்னும் ரெண்டு மேட்சு இருக்கு சித்தப்பு. நல்லா "இருந்து' தும்மி ஜெயிக்க வைச்சுட்டுப் போங்க'ன்னு மிரட்டலாக் கெஞ்சுனோம். சரின்னு சொல்லிப்புட்டு, நைட்டோட நைட்டா நாங்க தூங்கறப்ப எஸ்கேப் ஆயிட்டாரு.

இப்படி மேட்சுக்கு மேட்ச் சென்டிமெண்ட்டோட வாழ்ந்திருக்கோம்.

நான் மஞ்ச சேலை கட்டிருக்கப்போ இந்தியா தோத்துப் போச்சுன்னா, அடுத்தடுத்த மேட்சு அன்னிக்கு வேற சேலை கட்டிக்குவேன்.

இப்படித்தான் ஒரு சீரிஸ்ல நியுசிலாந்து கூட இந்தியா விளையாடுறப்போ, என் வீட்டுக்காரரு பச்சைச் சட்டை போட்டிருந்தாரு. இந்தியா தோத்துருச்சு.

அடுத்த மேட்ச் ஆஸ்திரேலியா கூட. அப்ப வெள்ளைல கருப்பு கோடு சட்டை போட்டிருந்தாரு. அதுலயும் இந்தியா தோத்துருச்சு.

அடுத்த மேட்சு திரும்பவும் நியுசிலாந்து கூட. அப்ப ரோஸ்ல பூப்போட்ட சட்டை போட்டிருந்தாரு. அதுலயும் இந்தியா தோத்துருச்சு.

அவர்கிட்ட மொத்தமே மூணு சட்டைதான் உண்டு. அடுத்த மேட்சுலயும் இந்தியா தோத்துடக் கூடாதேன்னு பயந்து, மனுசன் வேட்டி, சட்டை எதுவும் போடாம, வெறும் கோவணத்தோடே குத்த வெச்சு மேட்சு பார்த்தாரு. அவ்ளோ பாசம். சென்டிமெண்ட்.

ஏங்க நானும் தெரியாமத்தேன் கேக்குறேன். "பத்து மீட்டர் இடைவெளி விட்டு வரவும்'ணு பஸ்சுலதான் எழுதிருப்பாங்க.

ஆனா நம்மாளுங்க ஏன் பந்துக்குப் பின்னாடி எப்பவும் பத்து மீட்டர் இடைவெளி விட்டு ஓடுறானுங்க.

விளம்பரத்துல இறங்கி அடிக்கானுங்க, ஏறி அடிக்கானுங்க, படுத்துட்டே கூட சிக்ஸ் அடிக்கானுங்க. ஆனா கிரவுண்டுல மட்டும் ஒரே மாதிரி கேட்ச் கொடுத்து அவுட் ஆகுறாங்களே, அது ஏன்?

நம்ம பவுலருங்க பவுலிங் போடறப்ப மட்டும் பந்து, ஸ்டெம்பத் தொட்டா தீட்டுங்குற மாதிரி விலகி விலகியே போகுதே, அது என்ன எளவுன்னுதான் புரியமாட்டீங்குது?

ரொம்ப புலம்புறேனோ?

என்னத்த செய்ய... கையும் ஓட மாட்டீங்குது...

காலும் ஓட மாட்டீங்குது..

நடு பிட்ச்சுல குழம்பிப் போய் நின்னு ரன் அவுட் ஆன பேட்ஸ்மேன் மாதிரி முழிக்கிறேன்.

பிபீ வேற ஏகத்துக்கும் எகிறுது. மவனே...

இன்னமும் இந்த லொட்டை டீமை வெச்சுக்கிட்டு

மாரடிக்கணும்னு நெனைச்சீங்க... நான் பத்ரகாளி ஆகிருவேன்.

அப்பாவி அப்புசாமி

(இப்பவே பாதி பொம்மனாட்டிங்க பத்துற காளியா மாறிட்டாங்களாமே)

இந்தியா மட்டும் வேர்ல்டு கப்பு ஜெயிச்சா, அறுபடை வீட்டுக்கும் போயி, எம் புருசனுக்கும் மொட்டை அடிக்கிறதா வேண்டிக்கிட்டேன்.

ம்ஹூம்... இப்ப முடிவை மாத்திக்கிட்டேன். நீளமா முடி வளர்த்துக்கிட்டிருக்கான࠯? அந்த தோனி பய, அவன் மட்டும் என் கையில கிடைச்சான்னு வெச்சிக்கோங்க... மவனே... சிக்ஸ் அடிக்காம ஏமாத்துன அவனுக்கு சிக்ஸ் மொட்டை அடிச்சு... டேய்ய்ய்ய்...

நன்றி: தினமணிக்கதிர்.

  • தொடங்கியவர்

உலக கோப்பையில் மரண அடி வாங்கி, மீசை, முதுகு உடல் முழுவதும் மண் ஒட்டி, ஓடி ஒளிந்துக் கொண்ட இந்திய அணிக்கு நம்ம ஜனாதிபதி பாராட்டு தெரிவித்ததாக இரவு கழுகார் என்னிடம் தெரிவித்தார்.

ஏன் பாராட்டினார் என்று நீங்க சொல்லுங்களேன், பார்ப்போம்.!

- ரகசிய பூனையார்

f_pg25cwq7m_24ed4bd.jpg

f_pg25drh6m_846be02.jpg

  • தொடங்கியவர்

04_04_2007_002_007.jpg

newgames.jpg

இந்திய கிரிக்கெட் அணிக்கு 5 ஆண்டு தடைவிதிக்கவும், பாரம்பரிய விளையாட்டான கபடி, சிலம்பாட்டம், கத்தி விளையாட்டுக்களை ஊக்குவிக்க கோரியும் சென்னையில் பா.ம.க. நடத்திய விழிப்புணர்வு பிரச்சாரம்.

நன்றி : தினகரன்

  • தொடங்கியவர்

dhoni-part2.jpg

agarkar-schwag-part2.jpg

ganguly-par2.jpg

sachi-part2.jpg

:lol: :P :lol::D

  • தொடங்கியவர்

உத்தப்பா

uthappa-part2.jpg

யுவராஜ்

yuvraj-part2.jpg

zaheer-part2.jpg

bhajan-part2.jpg

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

norunnopay.jpg

இதை வேற அடிக்கடி காமிச்சி பயமுறுத்திறாங்கப்பா.

amtrecliam.jpg

ரசிகர்கள் எல்லாரும் அணி போட்டியில தோற்றுவிட்டால் பணத்தை திரும்பகேட்பாங்களாம்

gonnaoutsoon.jpg

அண்ணாத்தே எப்படியும் 10-15 ரன் தான் எடுக்கபோறீங்க. அதனால குறஞ்ச சம்பளம் தான் கிடைக்கும். 0 லயே அவுட் ஆகிடுங்க உங்களுக்கு முழுச்சம்பளமும் நான் தாரேன்.

  • தொடங்கியவர்

catchelseuoout.jpg

டேய் எப்படியாவது அந்த கேட்சை பிடிச்சிரு. இல்லை உன் சம்பளத்துள 15ஆயிரம் கட் ஆகிடும்

resigncap.jpg

நான் என்னோட அணித்தலைவர் பதவியை ராஜினாம செய்யப்போறேன். டாஸில் தோற்றால்கூட சம்பளம் கிடையாதாம்.

getVRS.jpg

VRS எடுத்துட்டு நானும் உங்களை மாதிரி அம்பயர் ஆகிடலாம்னு இருக்கேன். நல்ல சம்பளம் கிடைக்கும்.

  • தொடங்கியவர்

குங்குமம், இந்த வாரம்.......

அடுத்த வேல்டுகப் நமக்குத்தான், டிராவிட் ஒரு நகைச்சுவை பேட்டி....

குழந்தைகளுடன் தான் நான் விளையாடுவேனா? சேவாக் ஆவேசப்பேட்டி....

பிரியாணிக்காக உல்மரை கொலை செய்தேனா? இன்சமாம் கண்ணீர் பேட்டி...(இதற்காக நண்பர்கள் மன்னிக்கவும். இது சிரிக்க மட்டுமே. உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் இதை மட்டும் நீக்கிவிடலாம்)

அத்துடன் இந்திய கிரிகெட் ரசிகர்கள் அனைவருக்கும் நாமக்கட்டி இலவசம்...

கேட்டு வாங்குங்கள் .........குங்குமம்.....

  • தொடங்கியவர்

தாத்தா: போய் 50 பைசாவுக்கு வெத்தலை பாக்கு வாங்கிட்டுவா.

பேரன்: சரி தாத்தா

தாத்தா: அங்க இங்கன்னு சுத்தாம இந்திய டீம் மாதிரி போனோமா, வந்தோமான்னு இருக்கனும். புரியுதா!!!

  • தொடங்கியவர்

கோர்ட்டில் விவாகரத்தான தம்பதியினரின் குழந்தையைப் பார்த்து நீதிபதி கேட்கிறார்.

நீதிபதி: நீ உனது அம்மாவுடன் செல்கிறாயா?

குழந்தை: இல்லை. அம்மா என்னை `அடிப்பாள்'.

நீதிபதி: உனது அப்பாவுடன் செல்கிறாயா?

குழந்தை: இல்லை. எனது அப்பாவும் என்னை `அடிப்பார்'.

நீதிபதி: பிறகு யாருடன்தான் செல்ல விருப்பப்படுகிறாய்?

குழந்தை: நான் `இந்தியா டீமோ'டதான் போவேன். அவங்கதான் எப்பவுமே `அடிக்க' மாட்டாங்களே!

நீதிபதி: ???

  • தொடங்கியவர்

சச்சின் டெண்டுல்கருக்கு போன் வருகிறது.

இந்திய அணியின் மேனேஜர் போனை எடுக்கிறார்.

மேனேஜர்: ஹலோ

எதிர்முனை: சச்சினுடன் பேச முடியுமா? நான் அவரது மனைவி பேசுகிறேன்.

மேனேஜர்: மேடம் மன்னிக்கவும். அவர் இப்போதுதான் பேட்டிங் செய்ய களம் இறங்கி இருக்கிறார்.

எதிர்முனை: பரவாயில்லை. நான் லைனிலேயே காத்திருக்கிறேன்.

மேனேஜர்: ???? :P

எங்க இந்திய கிறிகெட் வீரர்களைவிட உங்கள் சிங்கள கிறிகெட் வீரர்கள் மிகச்சிறப்பாக செயல்படுகின்றானர். சிங்களர்களின் கடுமையான உழைப்பையும் உரிதியையும் புத்திசாலிதனத்தையும் நினைத்து வியந்து போகிறேன்.

  • தொடங்கியவர்

எங்க இந்திய கிறிகெட் வீரர்களைவிட உங்கள் சிங்கள கிறிகெட் வீரர்கள் மிகச்சிறப்பாக செயல்படுகின்றானர். சிங்களர்களின் கடுமையான உழைப்பையும் உரிதியையும் புத்திசாலிதனத்தையும் நினைத்து வியந்து போகிறேன்.

அவர்களை பாராட்டனும் என்றால் நேரா போய் பாரட்ட வேண்டியதுதானே :unsure:

அவர்களை பாராட்டனும் என்றால் நேரா போய் பாரட்ட வேண்டியதுதானே :unsure:

பாராட்டுகளை நேரில்தான் கூறவேண்டும் என்று இல்லை. சென்னை கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக புகழ்ந்து பேசுபவர்கள் இலங்கை கிரிகெட் வீரர்கள்.

.

  • தொடங்கியவர்

சொல்லிட்டு போங்கோ எங்களுக்கு என்ன

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.