Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுன்னாகம் வாழைக்குலை சந்தைப்பகுதி வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு தாரைவார்க்கப்படுகிறதா?

Featured Replies

சுன்னாகம் வாழைக்குலை சந்தைப்பகுதி வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு தாரைவார்க்கப்படுகிறதா?

 
 20180410_055543.jpg?resize=450%2C800
 
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வர்த்தக நகரான சுன்னாகத்தின் சந்தைப்பகுதியில் ஒருபகுதியை வெளிமாவட்ட வர்த்தகர்களுக்கு தாரைவார்க்கும் செயல்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக பிரதேச வர்த்தகர்களினால் கவலை வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந் நடவடிக்கையை முற்றாகக் கைவிடேவண்டுமென சுன்னாகம் மத்திய சந்தை உட்புற வியாபாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
இது தொடர்பில் ஊடக அறிக்கையொன்றை குறித்த வியாபாரிகள் சங்கம் வெளியிடப்பட்டுள்ளது.
 
அதில், சுன்னாகம் மத்திய சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் நாம் வெளிமாவட்ட வர்த்தகர்களின் எமது பிரதேசம் நோக்கிய படையெடுப்பினால் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பாரியபிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றோம்.  கடந்த ஒரு தசாப்த காலமாக வெளிமாவட்ட வர்த்தகர்களின் யாழ்ப்பாணம் நோக்கிய படையெடுப்பு அதிகரித்துள்ளது. அதிலும் யாழ்ப்பாணத்தின் வர்த்தக நகரமாக விளங்கும் சுன்னாகம் நோக்கி அதிகமான வெளிமாவட்ட வர்த்த்தகர்கள் வருகைதந்து பாரியளவில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் எமது பிரதேச மக்கள்தொகைக்கு தேவையான அளவுக்கு அதிகமான வர்தக நிலையங்கள் உருவாக்கப்பட்டு பிரதேச வர்த்தகர்களின் வியாபார நடவடிக்கைகள் பாரிய வீழ்ச்சியை அடையும் துர்ப்பாக்கிய நிலையை தோற்றுவித்துள்ளது.
 
இதன்காரணமாக பலவர்த்தகர்கள் தமது பாரம்பரிய தொழில்களையே கைவிட்டு எந்தவொரு மாற்றுவழியையும் ஏற்படுத்த முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இன்னும் பல வர்த்தகர்கள் தொழில் நட்டத்தால் கடனாளிகள் ஆக்கப்பட்டுள்ளனர். *அத்துடன் கடன் நிறுவனங்களிடமிருந்து கடன்பெற்று முதலீட்டை மேற்கொள்ளும் பிரதேச வர்த்தகர்கள் மேற்படி நிலைமையால் தொழில் இடம்பெறாது கடனை அடைக்கமுடியாத நிலையில் அல்லாடி வருகின்றனர். பலர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
 
இதுதவிர மேற்படி வெளிமாவட்ட வர்த்தகர்களினால் பல்வேறு சமூகப்பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டி வருவதோடு சந்தேகத்துக்கிடமான நடவடிக்கைகளையும் கண்காணித்துள்ளோம்.
 
எனவே இவ்வாறான பிரச்சினைகளை தீர்க்கும்பொருட்டு வெளிமாவட்ட வர்த்தகர்களை எமது பிரதேசசபை அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யுமாறு ஏற்கனவே பலதடவை கோரியிருந்தோம். முன்னைய பிரதேச சபை தவிசாளரிடமும் இதுபற்றி முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எமது கோரிக்கையை அலட்சியப்படுத்திவிட்டனர்.
 
தற்போதைய புதிய தவிசாளரிடமும் இதுபற்றி கோரிக்கை முன்வைத்தோம் ஆனால் அதை எவ்விதத்திலும் கருத்திலெடுக்காது விட்டுள்ளனர். தற்போது சுன்னாகம் சந்தையில் வாழைக்குலைச் சந்தைப்பகுதிக்குள் வெளிமாவட்ட வர்ர்த்தகர்களுக்கென பிரத்தியேகமாக கடைகள் அமைக்க பிரதேசசபையால் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிகின்றோம். இது எவ்விதத்திலும் நியாயமற்ற செயலாகும். எமது கோரிக்கைக்கு முற்றிலும் எதிரான நடவடிகாகை ஆகும்.
 
இது தொடர்பில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தாத்தன் அவர்களை கடந்த 08.04.2018 அன்று சந்தித்து எமது கோரிக்கை தொடர்பில் விளக்கியிருந்தோம். அவர் தவிசாளருடன் மீண்டும் எம்மை பேசும்படியும் அவ்வாறு சாதகமான பதில் கிடைக்காதவிடத்து தம்மை மீண்டும் சந்திக்கவருமாறும் கூறியுள்ளார்.
 
நெல்லியடி உள்ளிட்ட பல இடங்களில் வெளிமாவட்ட வர்த்தகர்களை தடை செய்துள்ள நிலையில் ஏன் எமது பிரதேசத்தில் இதை நடைமுறைப்படுத்த பின்நிற்கின்றனர் எனத் தெரியவில்லை. அதற்கும் மேலாக வெளி மாவட்ட வர்த்தகர்களுக்கு சந்தையை தாரைவார்த்துக் கொடுக்க விளைகின்றனர்.
 
எனினும்   பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்   எமக்கு தகுந்த தீர்வைப்பெற உதவுவார் என எதிர்பார்க்கின்றோம். தொடர்ந்தும் இந்நிலை நீடிப்பின் பிரதேசசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்த தீர்மானித்துள்ளோம் என்பதையும் தெரிவித்து நிற்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

http://globaltamilnews.net/2018/74420/

  • கருத்துக்கள உறவுகள்

காக்கா பிரியாணி சாப்பிட்டால் காக்கா குரல்தான் வரும் உன்னிசிருஸ்ணன் குரலா வரும்

கூட்டமைப்புக்கு வாக்களிச்சு உள்ளூராட்சிகளை ஒப்படைத்தால் இப்படித்தான் நடக்கும்

 

  • தொடங்கியவர்

சுன்னாகம் மற்றும் மருதனார் மடம் உள்ளிட்ட வலிதெற்கின் எல்லையினுள் உள்ள சந்தைகளில் வெளி வியாபாரிகளுக்கு தடை

marutanarmadam.jpg?resize=800%2C598

சுன்னாகம் மற்றும் மருதனார் மடம் உள்ளிட்ட வலிதெற்கின் எல்லையினுள் உள்ள சந்தைகளில் வெளி வியாபாரிகளுக்கு இடம் வழங்குவதனையும் இவ் எல்லையினுள் நடைபாதை வியாபார நடவடிக்கையினையும் தடை செய்யவேண்டும் என்ற தமிழ்த்தேசிய மக்கள் முண்ணனி உறுப்பினர்களினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை நீண்ட வாதபிரதிவாதங்களின் பின்னர் அனைவரின் ஒத்துழைப்புடன் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் முதலாவதமர்வு இன்று (11.04.2018) புதன்கிழமை சுன்னாகம் பிரதேச சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது. அதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களால் குறித்த பிரேரணை சபையில் சமர்ப்பிக்கப்பட்டு சபை உறுப்பினர்கள் அனைவரினதும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது,

குறித்த பிரேரணையின் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

சுன்னாகம் சந்தைப்பகுதியில் நடமாடும் வியாபாரிகளுக்கு இடம் வழங்குவது தொடர்பானது

எமது மக்களின் தற்சார்பு பொருளாதாரத்தின் அங்கமாக வாழைச்செய்கை உள்ளது. அதனடிப்படையில் வாழைப்பொத்தி, இலை, குழை, மடல் என அனைத்தையும் விற்று சந்தைப்படுத்தும் இடத்தினை வேறு ஒரு தேவைக்குப் பயன்படுத்துவது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றில்லை.

கடந்த காலங்களில் இந்தச் சந்தையில் பிரதான ஏற்றுமதிப் பொருளாக வாழைசார் உற்பத்தி இருந்தன. எனினும் சில காரணங்களினால் சந்தைப்படுத்தலுக்குரிய வாய்ப்புக்கள் அற்ற நிலையில் இது பின்தங்கிய நிலையில் காணப்படுகிறது. இதனை ஆரம்பகாலத்தில் காணப்பட்டதை விட மேலும் சிறந்தமுறையில் வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்தி அதன் மூலம் எமது பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்த வேண்டுமே தவிர, இந்த இடத்தினை வேறு தேவைக்குப் பயன்படுத்துவது பொருத்தமானதல்ல. பொலித்தீன் பாவனை நிறுத்தப்பட்டு வருகின்ற ஒரு சூழ்நிலையில் வாழை உற்பத்திப் பொருட்களின் மதிப்பு உயர்வடைந்து வருகின்றது. குறிப்பாக இலை, தடல், மடல் என்பவற்றின் மதிப்பு உயர இருக்கின்றது. இதற்கு தொழில்நுட்ப மதிப்பைக் கொடுத்து உயர்த்த வேண்டுமே தவிர, இதனை இல்லாமல் செய்யும் நிலைக்கு கொண்டு செல்லக்கூடாது.

மேலும் தைப்பொங்கல், சித்திரைப்புத்தாண்டு போன்ற விசேட காலங்களில் சந்தைப்படுத்தி அதிக வருமானத்தினையும் பெறலாம். வாழைப்பழம், இலை, பொத்தி என்பன உடனடியாகவே சந்தைப்படுத்த வேண்டும். இல்லையென்றால் பழுதடைந்து விடும். எனவே இதனால் எமது விவசாயிகளுக்கு நட்டத்தை ஏற்படுத்தும். இதனால் பல்வேறு விளைவுகளும் ஏற்படும்.

மேலும் தற்காலிக நடைபாதை வியாபாரிகளுக்கு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குறித்த இந்த சந்தையினை வழங்குவதற்குரிய நடவடிக்கையினை இந்தப் பிரதேசசபையின் ஊடாக மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகின்றது.

இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் வாழைசார் உற்பத்தியாளர்கள், வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் நிரந்தர வியாபாரிகளுக்கு பெரும் நட்டத்தினையும் ஏற்படுத்தும். அதாவது விசேட தினத்தினை முன்னிட்டு கடன்களைப் பெற்று கொள்வனவு செய்த பொருட்களை சந்தைப்படுத்த முடியாமலும் விசேடமாக வேலைக்கு அமர்த்தியவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் கடனாளியாக மாற்றுவதாகவே அமையும்.  எனவே மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நாம் எமது மக்களின் பொருளாதாரத்தினை சீர்குலைக்கும் எந்த நடவடிக்கைக்கும் இடமளிக்க முடியாது.

எனவே பிரதேசசபையின் பிரிவுக்குட்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை பாதிக்கும் இந்த விடயத்தினை தற்காலிகமாக உடன் நிறுத்தப்பட்டு எமது மக்களின் பொருளாதாரம் உறுதிப்படுத்தப்படும் வரை தற்காலிகமாக வேறு வியாபார நடவடிக்கைகளுக்கு அனுமதியை வழங்காது இந்த விடயம் தொடர்பாக இந்த சபையில் வாத பிரதிவாதங்களின் கருத்தின் அடிப்படையில் ஓர் சிறந்த தீர்மானத்தினை மேற்கொண்டு எமது மக்களின் வாழ்வாதாரத்தினை உறுதிப்படுத்துமாறு இந்த சபையிடம் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் மனுவினை சபையில் முன்வைக்கின்றோம்.

http://globaltamilnews.net/2018/74674/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.