Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திசைமாறி தடுமாறும் தமிழர் தரப்பு அரசியல்

Featured Replies

திசைமாறி தடுமாறும் தமிழர் தரப்பு அரசியல்

 

தமிழர் தரப்பு அர­சியல் திசை­மா­றிய பாதையில் பய­ணிக்கத் தொடங்­கி­யி­ருக்­கின்­றதோ என்று எண்ணத் தோன்­றி­யி­ருக்­கின்­றது. தமிழர் தாயகப் பிர­தே­சங்­க­ளா­கிய வடக்­கிலும் கிழக்­கிலும் நில­வு­கின்ற அர­சியல் நிலை­மை­களே இவ்­வாறு சிந்­திக்கச் செய்­தி­ருக்­கின்­றன. அர­சி­யலில் சுய அர­சியல் நலன்­களை மாத்­தி­ரமே முதன்­மைப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்ற போக்கு தலை­யெ­டுத்­தி­ருக்­கின்­றது. குறிப்­பாக யுத்­தத்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் படிப்­ப­டி­யாகத் தலை நிமிர்த்­தி­யுள்ள கட்சி அர­சியல் நலன்­பேணும் தன்மை இதற்கு இந்த சுய அர­சியல் நலன்­சார்ந்த செற்­பா­டு­க­ளுக்கு உத்­வேகம் அளித்­தி­ருப்­பதைக் காண முடி­கின்­றது. 

கட்சி அர­சியல் அர­சோச்­சு­கின்ற கார­ணத்­தி­னா­லேயே தமிழ் மக்­களின் அர­சியல் தலை­மை­யா­கிய தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு செயல் வல்­லமை உள்­ளதோர் அர­சியல் சக்­தி­யாகப் பரி­ண­மிக்க முடி­யாமல் போயுள்­ளது. அது மட்­டு­மல்­லாமல், தமிழ் மக்­களும். தமிழ் அர­சியல் கட்­சி­களும் ஓர­ணியில் பல­மா­னதோர் அர­சியல் சக்­தி­யாக வளர்ச்சி பெற முடி­யா­மைக்கும் கட்சி அர­சி­யலின் ஆதிக்­கமே முக்­கிய கார­ண­மாகும். 

பல்­வேறு படிப்­பி­னை­களைத் தந்­துள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல், தமிழர் தரப்பு அர­சியல் பிற்­போக்­கான நிலையில் சென்று கொண்­டி­ருப்­பதை உணர்த்­து­வ­தா­கவும் அமைந்­தி­ருக்­கின்­றது. அதே­வேளை, தமிழர் தரப்பு அர­சியல் திசை­மா­றிய பாதையில் அடி­யெ­டுத்து வைப்­ப­தற்கும் வழி­கோ­லி­யி­ருக்­கின்­றது. 

பல்­வேறு அர­சியல் கார­ணங்­க­ளுக்­கா­கவே, உள்ளூராட்சி மன்றத் தேர்­தல்கள் பின்­போ­டப்­பட்டு வந்­தன.  ஆட்­சியில் உள்ள அர­சியல் கட்சி அதி­கா­ரத்தை இழப்­ப­தற்கு இந்தத் தேர்­தல்கள் வழி வகுத்­து­வி­டுமோ என்ற அச்­சத்­தி­னா­லேயே உள்ளூராட்சி மன்றத் தேர்­தல்கள் உரிய காலத்தில் நடத்­தப்­ப­டாமல் காலம் தாழ்த்­தப்­பட்­டன. 

இருப்­பினும், உள்ளூராட்சி மன்றத் தேர்­தலைக் கால வரை­ய­றை­யின்றி பிற்­போட்­டதன் மூலம் மக்­க­ளு­டைய அடிப்­படை ஜன­நா­யக உரிமை மறுக்­கப்­பட்­டது என்ற குற்­றச்­சாட்டு பர­வ­லாக எழுத்­தி­ருந்­தது. ஜன­நா­யக அமைப்­புக்­களைச் சார்ந்­தோரும், ஜன­நா­ய­கத்தில் பற்­று­றுதி கொண்ட அர­சி­யல்­வா­தி­க­ளோடு, ஜன­நா­யகம் மற்றும் மனித உரிமைச் செயற்­பாட்­டா­ளர்­களும் இந்த உரிமை மறுப்­புக்கு எதிராகப் போர்க்­கொடி உயர்த்தி இருந்­தார்கள். இந்த அழுத்தம் கார­ண­மா­கவே ஜன­நா­ய­கத்தை நிலை­நி­றுத்தப் போவ­தாக உறு­தி­ய­ளித்து ஆட்சி பீடம் ஏறிய நல்­லாட்சி அர­சாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்­தலை நடத்­து­வ­தற்கு முன்­வந்­தது.

தேர்தல் முறை­களில் மாற்றம் கொண்டு வர­வேண்டும் என்­பது இரு­கட்சி இணைந்த இந்த அர­சாங்­கத்தின் முக்­கிய நோக்­க­மாகும். கட்சி அர­சி­யலை வளர்ப்­ப­தற்கும், தனிக்­கட்சி ஆட்சி அமைப்­ப­தற்கும் விகி­தா­சாரத் தேர்தல் முறை தடை­யாக இருக்­கின்­றது என்ற கசப்­பான அர­சியல் அனு­ப­வமே, நாட்டின் இரண்டு பிர­தான அர­சியல் கட்­சி­க­ளா­கிய ஐக்­கிய தேசிய கட்­சி­யையும், சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சி­யையும் தேர்தல் முறையில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்குத் தூண்டி இருந்­தது.

அது மட்­டு­மல்­லாமல், உள்ளூராட்சி சபை­க­ளுக்கு அர­சியல் அந்­தஸ்தை வழங்கி அவற்றின் தரத்தை உயர்த்­து­வதன் ஊடாக அடி­மட்­டத்தில் இருந்தே கட்சி அர­சியல் நலன்­களை மேம்­ப­டுத்த முடியும் என்ற நோக்­கத்­தையும் இரண்டு கட்­சி­களும் கொண்­டி­ருந்­தன.

அந்த வகையில் தொகுதி அடிப்­ப­டை­யையும், விகி­தா­சார முறை­யையும் கலந்­த­தொரு கலப்புத் தேர்தல் முறைக்­கான திருத்தம் கொண்டு வரப்­பட்­டது. அத்­துடன், புதி­தாக உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள அர­சி­ய­ல­மைப்பில் உள்ளூராட்சி சபை­க­ளுக்கு அர­சியல் அந்­தஸ்தை வழங்­கு­வ­தற்கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்தத் தீர்­மானம் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு முன்­னோ­டி­யாக வெளி­யி­டப்­பட்ட இடைக்­கால அறிக்­கையில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. 

புதிய அர­சி­ய­ல­மைப்பைக் கொண்டு வரு­வ­தற்கு முன்­ன­தா­கவே திருத்தச் சட்­டத்தின் ஊடாக தேர்தல் முறையில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி கலப்புத் தேர்தல் முறை அறி­முகம் செய்­யப்­பட்­டது. இந்த கலப்புத் தேர்தல் முறையின் பரீட்­சார்த்த கள­மா­கவே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடந்து முடிந்­தது. இது கால வரை­யிலும் உள்ளூராட்சி மன்றத் தேர்­த­லிலும், உள்ளூராட்சி சபை­களின் நிர்­வா­கத்­திலும் அர­சியல் கால் ஊன்­றி­யி­ருக்­க­வில்லை. இதனால், உள்ளூராட்சி மன்றத் தேர்­தலில்  அர­சியல் கலந்­தி­ருந்த போதிலும், அது மேலோட்­ட­மா­கவே இருந்­தது. 

ஆனால், அர­சியல் அந்­தஸ்து வழங்கி, உள்­ளூராட்சி சபை­களை அர­சியல் ரீதி­யாக உயர்த்­து­வ­தற்குத் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்த கார­ணத்­தினால், தொகுதி முறையும் விகி­தா­சார முறையும் கலந்த கலப்புத் தேர்­தலில் அர­சியல் ஆழ­மாகக் கால் ஊன்­றி­யி­ருந்­தது. இதன் கார­ண­மா­கவே, கிரா­மங்கள் மற்றும் நக­ரங்கள் பட்­ட­ணங்­களில் அடிமட்ட நிர்­வாகச் செயற்­பா­டு­க­ளுக்குப் பொறுப்­பான உள்ளூராட்சி சபை­க­ளுக்­கான இந்தத் தேர்தல் தேசிய மட்­டத்தில் தேசிய கொள்­கை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­கின்ற அதி முக்­கிய தேர்­தலைப் போன்று முக்­கி­யத்துவம் பெற்­றி­ருந்­தது. அந்த வகை­யி­லேயே தேர்தல் கால பரப்­பு­ரைகள் அமைந்­தி­ருந்­தன. 

அந்த பரப்­பு­ரை­களில் சாதா­ரண சிறிய அர­சியல் கட்­சியின் தலைவர் உள்­ளிட்ட முக்­கி­யஸ்­தர்கள் தொடக்கம் பெரிய அர­சியல் கட்­சிகள் மற்றும் ஜனா­தி­பதி, பிர­தமர், அமைச்­சர்கள் உள்­ளிட்ட அதி­யுயர் அந்­தஸ்தில் உள்­ள­வர்கள் வரை­யி­லான அர­சியல் பிர­மு­கர்கள் இந்த பரப்­பு­ரை­களில் தேசிய மட்­டத்­தி­லான அர­சியல் கருத்­துக்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் அளித்­தி­ருந்­தனர். 

இலங்­கையைப் பொருத்­த­மட்டில், இரண்டு வகை­யான அர­சியல் நிலை­மைகள் நில­வு­கின்­றன. தேசிய மட்­டத்தில் செல்­வாக்கு பெற்­றுள்ள பேரி­ன­வாத அர­சியல் என்­பது ஒன்று. தேசிய சிறு­பான்மை இன மக்­களின் அடிப்­படை உரி­மை ­சார்ந்த அர­சியல் என்­பது இரண்­டா­வது. 

தேசிய மட்ட அர­சியல் பேரி­ன­வாத நலன்­க­ளையும், பெரும்­பான்மை இன மக்­களின் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி நலன்­க­ளையும் அடிப்­ப­டை­யாகக் கொண்­டுள்­ளது. இது, நாட்டின் தேசிய சிறு­பான்மை இன மக்­க­ளு­டைய அடிப்­படை அர­சியல் உரி­மை­களை மீறு­வ­தா­கவும், அவற்றை மறுத்து அந்த இனங்­களை இன, மத ரீதி­யாக அடக்கி ஒடுக்­கு­வ­தையும் உள்­ள­டக்­கி­யி­ருக்­கின்­றது. 

நாடு அந்நி­ய­ரிடம் இருந்து சுதந்­திரம் பெற்ற நாள் முத­லாக அடக்கி ஒடுக்­கப்­பட்டு வந்­துள்ள தேசிய சிறு­பான்மை இன மக்­களின் அடிப்­படை உரி­மை­க­ளுக்­கான அர­சியல், போராட்ட அர­சி­ய­லாகத் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது.

பேரி­ன­வாத அர­சியல் சக்­தி­களின் சுய கட்சி அர­சியல் நலன்­க­ளுக்கு கலப்பு முறை­யி­லான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒரு வாய்ப்­பாகக் கரு­தப்­பட்­டது. ஆனால், உரி­மை­க­ளுக்­கான தேசிய சிறு­பான்மை இன மக்­களின் அர­சி­ய­லுக்கு இது பாத­க­மான நிலை­யையே உரு­வாக்கி இருக்­கின்­றது. இதனை தேசிய சிறு­பான்மை இன அர­சியல் சக்­தி­களும், அர­சியல் கட்­சி­களும் குறிப்­பாக தமிழ் அர­சியல் கட்­சி­களும், தமிழ் அர­சி­யல்­வா­தி­களும் சரி­யான முறையில் உண­ர­வில்லை என்றே கூற வேண்டும். 

ஏனெனில் அர­சியல் கட்சி நலன்­க­ளுக்­கா­கவும், பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்­கா­கவும் செயற்­ப­டு­கின்ற அர­சியல் கட்­சிகள் தங்­க­ளுக்குள் பேதங்­களை வளர்த்து, போட்டி நிலையில் அர­சியல் செய்­யும்­போது அவற்றின் நோக்­கங்கள் பாதிக்­கப்­ப­டு­வ­தில்லை.ஆனால் உரி­மை­க­ளுக்­கான போராட்ட அர­சி­யலில் ஈடு­பட்­டுள்ள அர­சியல் கட்­சி­களும் மக்­களும் ஓர­ணியில் ஒன்று திரண்டு செயற்­பட வேண்­டி­யது அடிப்­ப­டையில் அவ­சியம். இந்த ஓரணி அர­சியல் திரட்சி என்­பது உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­கான பேரம் பேசு­வ­தற்­கு­ரிய அர­சியல் பலத்தின் ஆணிவேர் என்­பதை மறுக்க முடி­யாது.

கலப்பு முறை­யி­லான உள்ளூராட்சி மன்றத் தேர்­த­லா­னது, தமிழ் மக்­களைப் பொறுத்­த­ளவில், அவர்­களின் அர­சியல் தலை­மை­களின் செயல் வல்­ல­மை­யையும் எதிர்­கால அர­சியல் போக்­கையும் சோத­னைக்கு உள்­ளாக்­கிய ஒரு கள­மா­கவே அமைந்­து­விட்­டது. 

தமிழ்த்­ தே­சிய கூட்­ட­மைப்புத் தலை­மையின் அர­சியல் செயற்­பா­டு­களில் ஏற்­பட்ட அதி­ருப்­தியின் கார­ண­மாக புதிய அர­சியல் தலை­மையை உரு­வாக்­கு­வ­தற்­கான நகர்­வுகள் முனைப்புப் பெற்­றி­ருந்த பின்­ன­ணி­யி­லேயே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடை­பெற்­றது. தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் ஸ்தாபகக் கட்­சி­களில் ஒன்­றா­கிய ஈ.பி.­ஆர்­.எல்.எவ். கூட்­ட­மைப்பில் இருந்து பிரிந்து, புதிய அர­சியல் தலை­மையை உரு­வாக்கும் முயற்­சிக்கு இந்தத் தேர்தல் சூழல் ஒரு வாய்ப்­பாக அல்­லது அர­சியல் ரீதி­யான ஒரு சந்­தர்ப்­ப­மாக அமைந்­தி­ருந்­தது. 

முன்­ன­தாக தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பில் இருந்து பிரிந்­தி­ருந்த தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­னணி மற்றும் புதிய அர­சியல் தலை­மையை இலக்­காகக் கொண்டு உரு­வாக்­கப்­பட்­டி­ருந்த தமிழ் மக்கள் பேரவை என்­ப­னவும் இந்த புதிய அர­சியல் தலைமை உரு­வாக்­கத்தில் பங்­கேற்­றி­ருந்­தன.ஆயினும் எதிர்­பார்த்த அளவில், தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­புக்கோ அல்­லது அதன் தலை­மைக்­கட்­சி­யா­கிய தமி­ழ­ரசுக் கட்­சிக்கோ ஈடுகொடுக்­கத்­தக்க வகையில் வலு­வா­னதோர் அர­சியல் தலைமை புதி­தாக உரு­வா­க­வில்லை. 

தமிழ் மக்கள் பேர­வையின் ஆத­ரவுத் தளத்­திலும், தனக்­கென வகுத்­தி­ருந்த அர­சியல் வியூ­கத்­திலும், தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­னணி தனக்கு இசை­வான அர­சியல் சக்­திகள் மற்றும் பொது அமைப்­புக்­களை இணைத்துக் கொண்டு தமிழ்த் தேசியப் பேரவை என்ற புதிய அணியை உரு­வாக்கி தேர்­தலில் கள­மி­றங்­கி­யி­ருந்­தது. 

ஈ.பி.­ஆர்­.எல்.எவ்., தமிழர் விடு­த­லைக்­கூட்­ட­ணியின் தேர்தல் சின்­ன­மா­கிய உத­ய­சூ­ரி­யனின் கீழ் தனக்கு இசை­வான அர­சியல் கட்­சிகள் மற்றும் பொது அமைப்­புக்­க­ளுடன் தமிழ்த் ­தே­சிய விடு­தலைக் கூட்­ட­மைப்பு என்ற பெயரில் தேர்­தலில் குதித்­தி­ருந்­தது.

இது கால வரை­யிலும் உறு­தி­யான கொள்கைப் பிடிப்­போடு தேர்­தல்­க­ளின்­போது பல­மான சச்­தி­யாக வடக்கு, கிழக்கில் பெரு­ம­ளவில் ஒன்று திரண்­டி­ருந்த தமிழ் மக்­களும், தமிழ் அர­சியல் கட்­சி­களைப் போலவே, இந்தத் தேர்­தலில் பிள­வு­பட்ட நிலையில் தமது பிர­தி­நி­தி­களைத் தெரிவு செய்­தி­ருந்­தனர்.தமிழ் அர­சியல் தலை­மை­களின் குறிப்­பாக தமிழ்த் ­தே­சிய கூட்­ட­மைப்­பி­னதும், அதன் தலை­மை­யி­னதும் ஆளுமை இல்­லாத அர­சியல் செயற்­பா­டு­களே இவ்­வாறு மக்கள் பிள­வு­ப­டு­வ­தற்குக் கார­ண­மாக அமைந்­தன. 

யுத்­தத்தின் பின்னர், காணி உரி­மைகள், மீள்­கு­டி­யேற்றம், வாழ்க்கை மேம்­பாடு, அவர்­களின் மனித உரி­மைகள், அடிப்­படை அர­சியல் உரி­மைகள் நிலை­நி­றுத்­தப்­பட்டு. அவர்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளுக்கு நீதி வழங்­கப்­பட வேண்டும் என்று மக்கள் எதிர்­பார்த்­தார்கள். ஆனால், இந்த எதிர்­பார்ப்பு அவர்கள் திருப்தி அடை­யத்­தக்க வகையில் நிறை­வே­ற­வில்லை. தமிழ் அர­சியல் தலை­மை­களின் செயற்­பாட்டின் மூலம் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. ஏமாற்­றமே மிஞ்­சி­யது. அது மட்­டு­மல்­லாமல் யுத்த காலத்து அடக்­கு­மு­றைகள் மென்­போக்கில் வேறு வேறு வடி­வங்­களில் தொடர்­வ­தனால் அவர்கள் மேலும் மேலும் இன்­னல்­க­ளுக்கு உள்­ளாகி வரு­கின்­றார்கள். 

இந்த நிலையில் தமது அர­சியல் தலை­மைகள் மீது நம்­பிக்கை வைப்­பதில் பய­னில்­லையோ என்று சிந்­திக்­கவும், அந்த வகையில் செயற்­ப­டவும் அவர்கள் அர­சியல் ரீதி­யாக நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டுள்­ளார்கள்.உள்ளூராட்சி மன்றத் தேர்­தலில் அது வெளிப்­பட்­டி­ருப்­பதைக் காண முடி­கின்­றது. 

உள்ளூராட்சி மன்றத் தேர்­தல்கள் தேசிய மட்­டத்தில் முக்­கி­யத்­துவம் பெற்ற நிலையில் நடந்து முடி­வுகள் வெளி­யா­கிய பின்னர், தமிழ் அர­சியல் கட்­சிகள் உள்ளூராட்சி சபை­களின் தவி­சாளர் மற்றும் உப தவி­சாளர் பத­வி­க­ளுக்­காக மோதிக்­கொண்ட விதமும், அர­சியல் நோக்­கங்­க­ளுக்­காக அர­சியல் கட்­சிகள் அணி­சேர்ந்த விதமும், அதனால் எழுந்­தி­ருந்த கருத்து மோதல்கள் குறிப்­பாக வவு­னியா நக­ர­சபை பத­விகள் தொடர்பில் எழுந்­தி­ருந்த வெளிப்­ப­டை­யான மோதல்­களும், தமிழ் மக்கள் தமது அர­சியல் தலை­மைகள் மீது மேலும் அதி­ருப்தி அடை­யவும், இந்தத் தலை­மை­களின் அடுத்­த­டுத்த நட­வ­டிக்­கைகள் எவ்­வாறு அமையும் என்று அர­சியல் ரீதி­யாக சஞ்­சலம் அடை­யவும் செய்­தி­ருக்­கின்­றன. 

தமிழ் அர­சியல் தலை­மைகள் ஒன்­றி­ணைந்து தமது உரி­மை­க­ளுக்­காகக் குரல் கொடுத்து பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்­கான வழி வகை­களில் ஈடு­பட வேண்டும் என்ற தமிழ் மக்­களின் நீண்­ட­கால எதிர்­பார்ப்பு படிப்­ப­டி­யாகத் தேய்ந்து உள்ளூராட்சி மன்றத் தேர்­த­லுடன் மோச­ம­டைந்­துள்­ள­தையே அவ­தா­னிக்க முடி­கின்­றது. தமிழர் தரப்பின் இந்த அர­சியல் தேய்­வா­னது தமது அர­சியல் எதிர்­கா­லத்தை சூனி­ய­மாக்­கு­வ­தற்கே வழி வகுக்கும் என்று எண்ணி கவலை அடையத் தொடங்­கி­யி­ருக்­கின்­றார்கள். 

ஆனால் மக்­களின் மன உணர்­வு­களைப் புரிந்து கொள்­ளா­த­வர்­க­ளாக கட்சி அர­சியல் நலன்­க­ளையும், சுய அர­சியல் நலன்­க­ளையும் முதன்­மைப்­ப­டுத்திச் செயற்­ப­டு­வ­தி­லேயே தமிழ் அர­சியல் தலை­மைகள் தொடர்ந்து ஈடு­பட்டு வரு­கின்­றன. 

நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்கி உரு­வாக்­கிய நல்­லாட்சி அர­சாங்­கத்தைத் தொடர்ந்து பத­வியில் நிலைக்கச் செய்­வ­தற்­கான முழு­மை­யான ஆத­ரவை வழங்­கிய தமிழ் மக்­களின் முக்­கிய அர­சியல் சக்­தி­யா­கிய தமிழ்த் ­தே­சிய கூட்­ட­மைப்பு, அர­சாங்­கத்­து­ட­னான அந்த அர­சியல் நல்­லு­றவைப் பயன்­ப­டுத்தி மக்­க­ளுக்கு நன்­மை­களைப் பெற்­றுக்­கொ­டுக்கத் தவ­றி­விட்­டது. 

உள்ளூராட்சி மன்றத் தேர்­தலில் ஆட்டம் கண்ட நல்­லாட்சி அர­சாங்கம், எஞ்­சி­யுள்ள தனது ஆட்­சிக்­கா­ல­மா­கிய சுமார் இரண்டு வரு­டங்­க­ளுக்கும் தாக்குப் பிடிக்­குமா என்­பது தெரி­ய­வில்லை. தள்­ளா­டு­கின்ற நிலையில் உள்ள நாட்டின் அர­சியல் நிலைமை ஸ்திர­ம­டை­வ­தற்­கான அறி­கு­றி­களைக் காண முடி­ய­வில்லை. மோச­ம­டைந்து செல்­கின்ற போக்­கையும், யுத்த மோதல்கள் இல்­லாத நிலை­யிலும் மீண்டும் ஓர் இருண்ட யுகத்­திற்குள் பிர­வே­சித்­து­வி­டுமோ என்ற பொது­வா­னதோர் அர­சியல் அச்­சத்­தை­யுமே உணர முடி­கின்­றது. 

இந்த நிலையில் கட்சி அர­சியல் நலன்­க­ளையும், சுய அர­சியல் நலன்­க­ளையும் முதன்­மைப்­ப­டுத்­திய தமிழ் அர­சியல் கட்­சி­களின் போக்கு எதிர்­பார்த்து அச்­ச­ம­டைந்­துள்ள அர­சியல் நிலை­மை­களில் இருந்து தமிழ் மக்­களை எவ்­வாறு காக்கப் போகின்­றன என்­பது தெரி­ய­வில்லை. 

அர­சாங்­கத்­துக்கு நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்கி, அதன் செயற்­பா­டு­க­ளுக்கு முழு­மை­யான ஒத்­து­ழைப்பை நல்­கிய சூழ­லில்­கூட, தமிழ்த் ­தே­சிய கூட்­ட­மைப்­பி­னாலும், அதன் தலை­மை­யி­னாலும் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண முடி­ய­வில்லை. அர­சாங்­கமே நிலை­கு­லைந்து நாடு மோச­மான அர­சியல் நெருக்­க­டி­களை எதிர்­கொண்­டுள்ள நிலையில் தமிழ் அர­சியல் தலை­மைகள் தங்­க­ளுக்குள் அணி திர­ளாமல் நவக்­கி­ர­கங்­களைப் போன்று ஆளுக்கொரு போக்கும், நேரத்­துக்­கொரு நிலைப்­பாடும் கொண்டு செயற்­ப­டு­வதன் மூலம், அர­சியல் ரீதி­யாகத் திசை­மா­றிய பய­ணத்­தையே கொண்­டி­ருப்­ப­தாக மக்கள் கரு­து­கின்­றார்கள். 

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பா­னா­லும்­சரி, மாற்றுத் தலை­மையை நோக்­கிய பய­ணத்தில் அர­சியல் சார்ந்த உறு­தி­யற்ற நிலையில் உள்ள ஏனைய அர­சியல் கட்­சி­க­ளா­னா­லும் ­சரி, முதலில் ஒரு தீர்க்­க­மான அர­சியல் வேலைத்­திட்­டத்தின் கீழ் தங்­க­ளுக்குள் ஒன்­றி­ணைய வேண்டும். அதன் அடிப்­ப­டையில் மக்கள் மயப்­ப­டுத்­தப்­பட்ட அர­சியல் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து, இரு தரப்­பி­னரும் வலு­வாக அணி திரள வேண்டும். இவை இரண்டும் அடிப்­படை உரிமை சார்ந்த அர­சி­யலைக் கொண்­டுள்ள தேசிய சிறு­பான்மை இன மக்­களின் இருப்­புக்கும், வள­மான எதிர்­கா­லத்தை நோக்­கிய அர­சியல் பய­ணத்­திற்கும் அவ­சியம். 

இவை இரண்­டுமே உள்ளூராட்சி மன்றத் தேர்­தலின் பின்னர் அற்­றுப்­போ­னதோர் அரசியல் சூழலே காணப்படுகின்றது. தமிழ் அரசியலை எழுச்சி பெறச் செய்வதற்கு யுத்தத்தின் பின்னர் மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கீழ் உறுதியாக அணி திரண்டிருந்தார்கள். அந்த அணி திரள்வின் சக்தி கடந்த 2015 ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலிலும், தொடர்ந்து பின்னர் இடம்பெற்ற பொதுத் தேர்தலிலும் அரசியல் வானில் பளிச்சிட்டிருந்தது. 

ஆனால் தற்போதைய நிலைமை அப்படியல்ல.கட்சிகளும் பிளவுண்டு கிடக்கின்றன.மக்களும் பிளவுபட்டு காணப்படுகின்றார்கள்.அரசியல் தலைமைகளும், ஆளுமை குறைபாடுகளை வெளிப்படுத்துவனவாகவே காணப்படுகின்றன.இருக்கின்ற தலைமைகள் சீரடைந்தாலும்சரி, புதிய அரசியல் தலைமைகள் உருவாகினாலும் சரி, இரண்டு தளத்தில் அவைகள் கடுமையாக உழைக்க வேண்டிய கடினமான சூழல் இப்போது உருவாகியிருக்கின்றது.

இருக்கின்ற தலைமகள் தங்களுக்கிடையில் காணப்படுகின்ற அரசியல் கசப்புணர்வுகளை மறந்து பரம வைரிகளாகக் கருதுகின்ற கட்சிகளுடன் ஒன்றிணைந்து ஓர் அணியில் இணைவார்கள் என்று எதிபார்ப்பதற்கில்லை. அந்த வகையிலேயே அவர்கள் கடும் அரசியல் போக்கில் சென்று கொண்டிருக்கின்றார்கள். அதேவேளை, மக்களின் மனங்களை வென்றெடுக்கக் கூடிய புதிய தலைமைகள் உருவாகுவதற்குரிய சமிக்ஞைகளையோ அல்லது அரசியல் அறிகுறிகளையோ காண முடியவில்லை. எனவே, புதிய அரசியல் தலைமைகள் மக்களுடைய நம்பிக்கைக்குரியவையாக எவ்வாறு உருவாகும் என்பதும் தெரியவில்லை. 

இருக்கின்ற தலைமைகள் ஓரணியில் தற்செயலாக ஒன்றிணைந்துவிட்டாலும், அவர்கள் மீது அதிருப்தி அடைந்துள்ள மக்கள் வலுவானதோர் சக்தியாக அவர்களின் பின்னால் அணிதிரள்வார்களா என்பதும் சந்தேகமாகவே உள்ளது. 

இத்தகைய அரசியல் நிலைமையிலேயே தமிழர் தரப்பு அரசியல் சரியான பாதையில் உறுதியான முறையில் பயணத்தைத் தொடராமல் திசைமாறி தடுமாறி நிற்பதைக் காண முடிகின்றது. 

பி.மாணிக்­க­வா­சகம்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-04-21#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.