Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எப்போது அவிழும் இந்த அரசியல் புதிர்?

Featured Replies

எப்போது அவிழும் இந்த அரசியல் புதிர்?

 

ரொபட் அன்­டனி

பெப்­ர­வரி மாதம் 10 ஆம் திக­தியின் பின்னர் நாட்டில் ஏற்­பட்ட அர­சியல் நெருக்­கடி நிலை தொடர்ந்­து­கொண்­டுதான் இருக்­கின்­றது. இன்னும் இந்த நெருக்­க­டிக்கு தீர்வு கிடைத்­த­பா­டில்லை. பெப்­ர­வரி மாதம் 10 ஆம் திக­திக்கு பின்னர் ஏற்­பட்ட இந்த அர­சியல் நெருக்­கடி கார­ண­மாக தேசிய அர­சி­யலில் ஸ்திர­மற்ற நிலைமை தோன்­றி­ய­துடன் நாட்டின் அன்­றாட செயற்­பாட்டு கட்­ட­மைப்­பிலும் பல சிக்­கல்கள் தோன்­றி­யி­ருக்­கின்­றன.

நல்­லாட்சி அர­சாங்கம் அடுத்த ஒன்­றரை வரு­ட­கா­லத்­திற்கும் தொடரும் என்ற நம்­பிக்கை மேலெ­ழுந்­த­வா­ரி­யாக காணப்­ப­டு­கின்ற போதிலும் இது­வரை உறு­தி­யான முடிவு எட்­டப்­ப­டாத நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது. புதிய அமைச்­ச­ரவை நிய­மிக்­கப்­படும் என ஜனா­தி­ப­தி­யால் அறி­விக்­கப்­பட்ட போதிலும் அந்த செயற்­பாடு இன்னும் முழு­மை­ய­டை­ய­வில்லை. அமைச்­சர்­க­ளுக்­கான இலா­காக்கள் விஞ்­ஞான ரீதியில் ஒதுக்­கப்­படும் என அறி­விக்­கப்­பட்ட போதிலும் இது­வரை அதற்­கான முடிவும் எட்­டப்­ப­டாமல் இருக்­கின்­றது.

தேசிய அர­சாங்­கத்தில் சுதந்­தி­ரக்­கட்­சியின் 23 எம்.பி.க்கள் தொட­ர்­வார்கள் என்று அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலை­யிலும் புதிய அமைச்­ச­ரவை பத­வி­யேற்­க­வில்லை. அத்­துடன் அர­சியல் ஸ்திர­மற்ற நிலைமை நீடிக்கும் ஒரு தோற்­றப்­பாடே தொடர்ந்து கொண்டிருக்­கின்­றது. அத்­துடன் கடந்த மூன்று வரு­ட­கா­ல­மாக மிகவும் ஆர்­வ­மாக முன்­னெ­டுக்­கப்­பட்ட புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் செயற்­பா­டுகள் ஸ்தம்­பி­த­ம­டைந்­துள்­ளன.

 பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்­டு­வ­தற்­கான செயற்­பா­டுகள் இன்னும் ஆரம்­பிக்­கப்­ப­ட­வில்லை. அது­மட்­டு­மன்றி சர்­வ­தேச ரீதியில் இலங்கை அர­சாங்கம் ஸ்திர­மாக இருக்­கின்­றது என்ற செய்தி பெப்­ர­வரி மாதம் 10 ஆம் ­தி­க­திக்கு பின்னர் இன்னும் உரிய முறையில் செல்­ல­வில்லை. இவ்­வாறு பெப்­ர­வரி 10 தேர்தல் முடிவின் பின்னர் நெருக்­கடி நிலைக்குள்­ளான இலங்­கையின் அர­சியல் நிலை­மை­யா­னது இன்னும் தீர்ந்­த­பா­டில்­லா­ம­லேயே இருக்­கின்­றது.

2015ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் உரு­வாக்­கப்­பட்ட ஐக்­கிய தேசி­யக்­கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­க­ளுக்­கி­டை­யி­லான தேசிய அர­சாங்கம் கடந்­த­மூன்று வரு­டங்­க­ளாக சவால்­க­ளுக்கு மத்­தியில் அர­சியல் ஸ்திரத்­துடன் பய­ணித்­தது. பாரா­ளு­மன்­றத்­திற்கு மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பலம் இருந்­தது. பல்­வேறு வேலைத்­திட்­டங்கள் நம்­பிக்­கை­யான முறையில் முன்­னெ­டுக்­கப்­பட்ட­ன. குறிப்­பாக புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் செயற்­பா­டுகள் மிகவும் நம்­பிக்­கை­யாக முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

எனினும் பெப்­ர­வரி மாதம் 10ஆம் திகதி உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்தல் நடந்­ததன் பின்னர் நாட்டின் தேசிய அர­சாங்­கத்தின் நிலை­மை­யா­னது தலை­கீ­ழாக மாறி­யது. தேர்­தலில் எதிர்­பா­ராத வித­மாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­முன 44 வீத­மான வாக்­கு­களைப் பெற்று வெற்­றி­யீட்­டி­யது. ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி பல்­வேறு சின்­னங்­களில் போட்­டி­யிட்டு 14 வீத­மான வாக்­கு­க­ளையே பெற்­றது.

தேசிய அர­சாங்­கத்தின் பிர­தான அர­சியல் கட்­சி­யான ஐக்­கிய தேசி­யக்­கட்சி 30 வீத­மான வாக்­கு­க­ளையே பெற்­றது. இதன் பின்னர் தேசிய அர­சியல் நெருக்­க­டிக்­குள்­ளா­கி­யது. குறிப்­பாக ஸ்ரீ­லங்கா பெர­முன கட்­சி­யா­னது மக்கள் தம்மை ஆத­ரித்­துள்­ள­தாக தெரி­வித்­த­துடன் பொது­த்தேர்­தலை நடத்­து­மாறும் கோரிக்கை விடுத்­தது. அது­மட்­டு­மன்றி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பதவி விலகி விட்டு ஐக்­கிய தேசி­யக்­கட்­சியைச் சேர்ந்த வேறொ­ரு­வ­ருக்கு பிர­தமர் பத­வியை வழங்­கு­மாறு கோரினார். அதனை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க முற்­றாக மறுத்­து­விட்டார். அது­மட்­டு­மன்றி தான் பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து வில­க­மாட்டேன் என்று அறி­வித்­தி­ருந்தார்.

இச் சூழலில் தேசிய அர­சாங்கம் நீடிக்கும் என்று அறி­வித்­தி­ருந்­தது. ஆனால் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் பக்­கத்­தி­லி­ருந்து சில அதி­ருப்­தி­யா­ளர்கள் பிர­தமர் ரணி­லுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையைக் கொண்­டு­வ­ரு­வது குறித்து கருத்து வெளி­யிட்­டி­ருந்­தனர். இத­னை­ய­டுத்து உட­ன­டி­யா­கவே கூட்டு எதி­ரணி பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையைக் கொண்­டு­வந்­தது. அதன் பின்னர் தேசிய அர­சாங்­கத்தின் நெருக்­கடி நிலைமை தீவி­ர­ம­டைய ஆரம்­பித்­தது.

தொடர்ந்து நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தொடர்­பான காய்­ந­கர்த்­தல்கள் இடம்­பெற்­றன. எவ்­வா­றெ­னினும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை தோற்­க­டித்து வெற்­றி­யீட்­டினார். அவ்­வாறு நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தோற்­க­டித்த பின்­னரும் கூட தேசிய அர­சாங்­கத்தில் ஏற்­பட்­டி­ருந்த நெருக்­கடி நிலை தீர­வில்லை.

காரணம் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பின் போது ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் 16 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பிர­த­ம­ருக்கு எதி­ராக வாக்­க­ளித்­தனர். இதனால் தேசிய அர­சாங்கம் மீண்டும் நெருக்­க­டிக்­குள்­ளா­கி­யது. அதே­போன்று குறித்த சுதந்­தி­ரக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் நல்­லாட்­சியில் வகித்த அனைத்து பத­வி­க­ளையும் இரா­ஜி­னாமா செய்­தனர். இதனால் தேசிய அர­சாங்கம் தொட­ருமா என்ற சந்­தேகம் மீண்டும் ஏற்­பட்­டது.

எவ்­வா­றெ­னினும் பொது­ந­ல­வாய மாநாட்டில் கலந்­து­கொள்ள லண்டன் சென்­றி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாடு­தி­ரும்­பி­யதும் சுதந்­தி­ரக்­கட்­சியின் மத்­தி­யக்­குழு கூட்டம் நடந்­ததும் அதில் சுதந்­தி­ரக்­கட்­சியின் 23 பேரும் தேசிய அர­சாங்­கத்தில் நீடிப்­பார்கள் என்றும் பிர­த­மரை எதிர்த்து வாக்­க­ளித்த 16 பேரும் எதி­ர­ணியில் அம­ரலாம் என்றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

இந்­நி­லையில் தற்­போது தேசிய அர­சாங்கம் தொடர்­வது உறு­தி­யா­கி­யி­ருக்­கி­றது. ஆனால் புதிய அமைச்­ச­ரவை இன்னும் பத­வி­யேற்­க­வில்லை. அது­மட்­டு­மன்றி சுதந்­தி­ரக்­கட்­சியின் 16 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் எதிர்க்­கட்­சியில் அம­ரப்­போ­கின்­றனர். அந்­த­வ­கையில் இது­வரை பெப்­ர­வரி மாதம் 10ஆம் திகதி ஏற்­பட்ட அர­சியல் நெருக்­க­டிக்கு தீர்வு கிடைக்­காத நிலையே நீடித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைப் பொறுத்­த­வ­ரையில் அவர் நாட்டின் ஜனா­தி­பதி என்ற ரீதியில் தேசிய அர­சாங்கம் நீடித்தால் நல்­லது என்று கரு­து­கின்றார். ஆனால் தேசிய அர­சாங்கம் நீடிப்­பதன் ஊடாக சுதந்­தி­ரக்­கட்­சியின் அர­சியல் எதிர்­கா­லத்­திற்கு ஏற்­படும் ஆபத்து தொடர்­பிலும் சுதந்­தி­ரக்­கட்­சியின் தலைவர் என்ற ரீதியில் அவர் அவ­தானம் செலுத்­தி­யி­ருக்­கின்றார்.

இந் நிலையில் பல்­வேறு சவால்களுக்கும் சிக்­கல்­க­ளுக்கும் மத்­தியில் தேசிய அர­சாங்கம் நீடிக்கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. ஐக்­கிய தேசி­யக்­கட்­சியைப் பொறுத்­த­வ­ரையில் அக்­கட்­சியின் தலைவர் தேசிய அர­சாங்கம் நீடிக்­க­வேண்டும் என்று விரும்­பி­னாலும் அக்­கட்­சியின் பெரும்­பா­லான உறுப்­பி­னர்கள் தனித்து அர­சாங்கம் அமைக்­க­வேண்டும் என்­ப­தையே விரும்­பு­கின்­றனர். இம்­முறை இந்த அர­சியல் நெருக்­கடி ஏற்­பட்­ட­போது எப்­ப­டி­யா­வது தனித்து அர­சாங்­கத்தை அமைத்­து­வி­ட­வேண்டும் என்­பதில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் முழு­மூச்­சுடன் ஈடு­பட்­டனர். ஆனால் அந்த முயற்சி தற்­போ­தைய நிலை­மையில் வெற்­றி­ய­டை­ய­வில்லை.

மாறாக தேசிய அர­சாங்­கமே நீடிக்கும் என்று எதிர்பார்க்­கப்படுகின்­றது. ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யா­னது எந்­த­வொரு நிலை­மைக்கும் முகம் கொடுக்கத் தயா­ரா­கவே இருக்­கி­றது. அதா­வது சுதந்­தி­ரக்­கட்சி தேசிய அர­சாங்­கத்­தி­லி­ருந்து வில­கினால் தனித்து அர­சாங்கம் அமைப்­ப­தற்கும் தயா­ரா­கவே ஐக்­கிய தேசி­யக்­கட்சி இருக்­கி­றது. அத்­துடன் கடந்த தேர்­தலில் பின்­ன­டைவை சந்­தித்ததால் ஐக்­கிய தேசி­யக்­கட்சி தற்­போது கிராம மட்­டத்தில் தமது கட்­சியை பலப்­ப­டுத்தும் முயற்­சி­களில் ஈடு­பட்டு வரு­கின்­றது.

அதே­போன்று சுதந்­தி­ரக்­கட்­சியின் ரணில் எதிர்ப்­புக்­கு­ழுவின் 16 பேரும் எப்­ப­டி­யா­வது சுதந்­தி­ரக்­கட்­சியை அர­சாங்­கத்­தி­லி­ருந்து அகற்­ற­வேண்டும் என்ற முயற்­சியில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். அதற்­கான தீவிர நகர்­வு­களில் இந்த 16 பேரும் ஈடு­பட்­டுள்­ளனர். எவ்­வா­றெ­னினும் தற்­போது சுதந்­தி­ரக்­கட்­சியின் 23 பேர் தேசிய அர­சாங்­கத்தில் நீடிக்­கின்ற நிலையில் அவர்­களை இன்னும் ஆறு மாத­கா­லத்தில் எப்­ப­டி­யா­வது வெளியே எடுக்­க­வேண்டும் என்ற இலக்­கி­லேயே ரணில் எதிர்ப்­புக்­குழு செயற்­பட்டு வரு­கின்­றது. இதற்­காக அவ்­வப்­போ­து­பல இடங்­களில் சந்­திப்­புக்கள் இடம்­பெற்று வரு­கின்­றன.

 இது இவ்­வா­றி­ருக்க பெப்­ர­வரி 10 தேர்­தலின் பின்­ன­ரி­லி­ருந்து பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பு வரை பர­ப­ரப்­பாக செயற்­பட்ட முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தற்­போது சற்று மௌன­மாக இருப்­பதைக் காண­மு­டி­கின்­றது. அதா­வது தேர்தலூடாக தேசிய அர­சாங்­கத்தில் பிரச்­சினை ஏற்­பட்­டுள்ள நிலையில் அடுத்து எவ்­வா­றான நகர்­வுகள் இடம்­பெ­றப்­போ­கின்­றன என்­பதை மஹிந்த ராஜ­பக் ஷ பார்த்­துக்­கொண்­டி­ருக்­கின்றார்.

அத்­துடன் கூட்டு எதிர்க்­கட்­சி­யா­னது தற்­போது எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான பாரிய முயற்­சியில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றது. ஆனால் கூட்டு எதிர்க்­கட்­சி­யுடன் இணைந்து செயற்­ப­டு­வார்கள் என எதிர்­பார்க்­கப்­படும் ரணில் எதிர்ப்­புக்­கு­ழுவின் 16 பேரும் எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை குறி­வைக்­க­வில்லை. எதிர்க்­கட்சித் தலை­வ­ராக சம்­பந்தன் இருந்­து­விட்­டுப்­போ­கட்டும் என்ற நிலைப்­பாட்­டி­லேயே சுதந்­தி­ரக்­கட்­சியின் ரணில் எதிர்ப்­புக்­கு­ழுவின் 16 பேரும் இருக்­கின்­றனர்.

இச் சூழ­லி­லேயே பெப்­ர­வரி மாதம் 10ஆம் திகதி நடை­பெற்ற உள்­ளூ­ராட்சித் தேர்­தலின் பின்­ன­ரான நெருக்­கடி நிலைமை இன்னும் முடி­வுக்கு வராமல் நீடித்­துக்­கொண்­டி­ருக்­கி­றது. ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் தேசிய அர­சாங்­கத்தில் இணக்­கத்­துடன் செயற்­பட்­டுக்­கொண்டு இருப்­ப­தாக வெளிக்­காட்­டிக்­கொண்­டி­ருக்­கின்ற போதிலும் இரு­வ­ருக்­கு­மி­டை­யி­லான முரண்­பா­டுகள் பாரிய அளவில் அதி­க­ரித்­துள்­ள­துடன் மிக வலு­வான ஒரு பனிப்போர் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருப்­பதையும் அவ­தா­னிக்க முடி­கின்­றது.

எந்­தக்­கா­ரணம் கொண்டும் இரு­வ­ருக்­கு­மி­டை­யி­லான இப் பனிப்போர் எதிர்­வரும் ஒரு­வ­ருட காலத்தில் இயல்­பான நிலை­மைக்கு திரும்பும் என எதிர்­பார்க்க முடி­யாது. மாறாக அடுத்த ஜனா­தி­பதி தேர்தல் நெருங்க–நெருங்க இரு தலை­வர்­க­ளுக்­கு­மி­டை­யி­லான முரண்­பா­டு­களும் தொடர்ந்து அதி­க­ரித்­துக்­கொண்டே செல்லும். எனவே தற்­போது தற்­கா­லி­க­மாக தேசிய அர­சாங்­க­த்தில் ஏற்­பட்­டி­ருந்த நிலைமை தீர்­வு­களை நோக்கி சென்­றி­ருப்­ப­தாக தெரி­கின்ற போதிலும் பிரச்­சி­னைகள் உள்­ளூர வெடித்­துக்­கொண்­டி­ருப்­பதை காணலாம்.

எனவே ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் 2015ஆம் ஆண்டு நடை­பெற்ற இரு பிர­தான தேர்­தல்­களில் மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­க­ளுக்கு என்ன நடக்­கப்­போ­கின்­றது என்­பது நிச்­ச­ய­மாக ஒரு­கேள்­விக்­கு­றி­யான விட­ய­மா­கவே காணப்­ப­டு­கின்­றது. முக்­கி­ய­மாக இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வுத்­திட்­டத்­துடன் புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வ­ரு­வ­தாக இரு தலை­வர்­களும் கடந்த தேர்­தல்­களில் வாக்­கு­றுதி அளித்­தனர். ஆனால் தற்­போது அந்த செயற்­பா­டுகள் அனைத்தும் ஸ்தம்­பி­த­ம­டைந்­து­விட்­டன. மாறாக இரு தலை­வர்­களும் தமது கட்­சி­க­ளுக்கு கடந்த உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் ஏற்­பட்ட பின்­ன­டை­வு­களை சரி­செய்யும் பாரிய முயற்­சி­களில் ஈடு­பட்­டுள்­ளனர்.

அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் தமது இருப்பை நீடிப்­ப­தற்கும் ஸ்திரப்­ப­டுத்­து­வ­தற்கும் முயற்­சிக்­கின்­றதே தவிர மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­திகள் குறித்து சிந்­திப்­ப­தாக தெரி­ய­வில்லை. கடந்த மூன்று மாத­கா­ல­மாக நாட்டில் நில­வி­வரும் தேசிய அர­சியல் நெருக்­கடி கார­ண­மாக ஏற்­பட்­டுள்ள விளை­வுகள் தொடர்பில் இரு பிரதான கட்சிகளும் கவனம் செலுத்த வேண்டும். நாடொன்றில் அரசியல் ஸ்திரதன்மை சரியாக காணப்படும் பட்சத்திலேயே அனைத்து விடயங்களும் ஒழுங்கமைப்புடன் காணப்படும். இல்லாவிடின் நாடு பாரிய பாதகமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை ஜனாதிபதியும் பிரதமரும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஐக்கிய தேசியக்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் முதல் தடவையாகவே தேசிய அரசாங்கம் என்ற பலப்பரீட்சையில் இறங்கின. அதில் சாதகமான விடயங்களும் பாதகமான விடயங்களும் ஏற்பட்டிருக்கின்றன. தற்போது இரு பிரதான கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைத்துள்ளதால் மிக இலகுவாக தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என்றும் புதிய அரசியலமைப்பை கொண்டுவர முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேசிய அரசாங்கத்தினூடாக எதிர்பார்க்கப்பட்டிருந்த விடயம் நிறைவேறுமா என்பது தற்போது கேள்விக்குறியாக மாறிவிட்டது.

எனவே அதிகாரத்தில் இருப்போர் தாம் ஏன் அதிகாரத்திற்கு வந்தோம் என்றும் எதற்காக மக்களின் ஆணை கிடைத்தது என்றும் சிந்திக்கவேண்டியது அவசியமாகும். மக்களின் பிரச்சினைகள் நீடித்துக்கொண்டிருக்கின்றன. அரசியல் நெருக்கடியும் தொடர்கின்றது. ஆனால் மக்களின் எதிர்பார்ப்புக்கள் மழுங்கடிக்கப்படுவதாகவே தெரிகின்றது. அதனால் இந்த நிலைமை தொடராமல் இருக்கவும் அரசியல் நெருக்கடிக்கு முடிவுகண்டு நாட்டை ஸ்திரமான பாதையில் கொண்டுசெல்லவும் தலைவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியமாகின்றது. எப்போது தீரும் இந்த அரசியல் புதிர் என்பதே அனைவரதும் கேள்வியாக உள்ளது. அதற்கு விடைகாணவேண்டியது பிரதான கட்சிகளின் பொறுப்பாகும்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-04-28#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.