Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தேயிலைக்கு மீண்டும் நெருக்கடி: ஏற்றுமதி செய்த தேயிலையை திருப்பி அனுப்ப ஜப்பான் முடிவு

Featured Replies

இலங்கைத் தேயிலைக்கு மீண்டும் நெருக்கடி: ஏற்றுமதி செய்த தேயிலையை திருப்பி அனுப்ப ஜப்பான் முடிவு

18-b85e59fb512ba0fdadaee7e2232985d2cff2dbfd.jpg

 

எஸ்.வினோத்

இலங்­கையின் தேயி­லையில் எம்.சீ.பீ.எ. எனும் இர­சா­யனம் கலந்­துள்­ள­மை­யினால் இலங்­கையில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் தேயி­லைக்கு கட்­டுப்­பாடு விதிக்­கவும் தற்­போது இறக்­கு­மதி செய்­யப்­பட்­டுள்ள தேயி­லையை இலங்­கைக்கு அனுப்­பு­வ­தற்கும் ஜப்பான் தீர்­மா­னித்­துள்­ளது. 

இது குறித்து கருத்துத் தெரி­வித்த இலங்கை தேயிலை சபையின் தலைவர் சுசில் ஜய­வர்­தன இலங்­கையில் கிளை­போசேட் தடை­வி­திக்­கப்­பட்­டதை அடுத்து தேயிலை பயிர்ச்­செய்­கை­யா­ளர்கள் எம்.சீ.பீ.எ. எனும் இர­சா­ய­னத்தை பயன்­ப­டுத்­து­கின்­றனர். இந்­நி­லையில் ஜப்­பானில் எம்.சீ.பீ.எ. இர­சா­யத்தின் பயன்­பாட்டு அள­வுக்கு கட்­டுப்­பாடு விதிக்­கப்­பட்­டுள்ள நிலையில் அந்த கட்­டுப்­பாட்­டை­விட அதிக அள­வாக எம்.சீ.பீ.எ. இர­சா­யனம் இலங்­கையில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வதால் இலங்­கையில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் தேயி­லையில் எம்.சீ.பீ.எ. இர­சா­யனம் கலந்­துள்­ள­தாக ஜப்­பா­னிய அர­சாங்கம் கரு­து­கின்­றது.

எனவே அவர்கள் இலங்­கையில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் தேயி­லைக்கு கட்­டுப்­பாடு விதிக்­கவும். தற்­போது இறக்­கு­மதி செய்­யப்­பட்­டுள்ள தேயி­லையை மீண்டும் இலங்­கைக்கு அனுப்­பு­வ­தற்கும் தீர்­மா­னித்­துள்­ளனர். அவ்­வாறு ஏற்­று­மதி செய்­யப்­பட்ட தேயிலை மீண்டும் இலங்­கைக்கு அனுப்­பி­வைக்­கப்­ப­டு­மாயின் அதனால் ஒரு பில்­லியன் ரூபா­வுக்கும் அதி­க­மான நட்­டத்தை சுமக்க வேண்டி ஏற்­படும். இது ஓர் அபா­ய­க­ர­மான நிலை­யாகும்.

எம்.சீ.பீ.எ. இர­சா­ய­னத்தை காரணம் காட்டி இன்று ஜப்பான் கட்­டுப்­பாட்டை விதித்தால் அதை தொடர்ந்து ஐரோப்பி ஒன்­றியம் உள்­ளிட்ட ஏனைய நாடு­களும் எமது நாட்டு தேயி­லைக்கு தடை விதிக்க அல்­லது கட்­டுப்­பாட்டை விதிக்க சந்­தர்ப்பம் அதி­க­மாக உள்­ளது. இது அபா­ய­க­ர­மான நிலை­யாகும். எனவே நாம் இதற்கு உகந்த தீர்­வினை எடுக்க வேண்­டி­யுள்­ளது. ஆகவே நாம் எதிர்­கா­லத்தில் ஜப்பான் உள்­ளிட்ட எமது ஏற்­று­மதி நாடு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்யும் தேயி­லையில் எம்.சீ.பீ.எ. இர­சா­யனம் கலந்­துள்­ளதா என்­பது குறித்து நன்கு ஆராய்ந்து அவற்றை ஏற்­று­மதி செய்ய வேண்டும்.

கிளை­போசேட் இர­சா­யனத் தடை­யால்தான் இவ்­வா­றான சிக்கல் நிலையை நாம் எதிர்­நோக்­கி­யுள்ளோம். எனவே நான் ஜனா­தி­பதி உள்­ளிட்ட அர­சாங்­கத்­திடம் கிளை­போசேட் தடையை ஒரு வரு­டத்­திற்கு அல்­லது இரண்டு வரு­டத்­திற்கு நீக்கி அதை மீண்டும் பயன்­ப­டுத்த சந்­தர்­பபம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்­கின்றேன். அவ்­வாறு சந்­தர்ப்பம் வழங்கும் பட்­சத்தில் நாமே கிளை­போ­சேட்டை இறக்­கு­மதி செய்து அதை அவ­தா­னத்­துடன் பயன்­ப­டுத்­துவோம் அவ்வாறு கிளைபோசேட் டை பயன்படுத்திக்கொண்டு அதற்கு மாற்றாக தீர்வு குறித்தும் ஆராய்வோம். உலகத்தில் பயன்படுத்தப்படும் களை நாசினிகளில் குறைந்த அளவான நச்சுத்தன்மையை கொண்டது கிளைபோசேட் மாத்திரமேயாகும் என அவர் தெரிவித்தார்.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2018-04-29#page-1

ஜப்பான் காரங்களோடை கதைப்பதுக்கு சம்பந்தன், சுமத்திரன், சிறிதரன் போன்ற ஆட்க்களை விட்டால்  அவைகளுக்கு  இது சிம்பிள் பிரச்சனை .

THATS TRUE

9 hours ago, spyder12uk said:

ஜப்பான் காரங்களோடை கதைப்பதுக்கு சம்பந்தன், சுமத்திரன், சிறிதரன் போன்ற ஆட்க்களை விட்டால்  அவைகளுக்கு  இது சிம்பிள் பிரச்சனை .

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.