Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடர்ந்தும் மறுக்கப்படும் நீதி

Featured Replies

தொடர்ந்தும் மறுக்கப்படும் நீதி

 

யுத்த மோதல்கள் இடம்­பெற்ற காலத்தில் மிக மோச­மான அடக்­கு­மு­றை­க­ளுக்கும் நெருக்­கு­தல்­க­ளுக்கும் ஆளா­கி­யி­ருந்த பத்­தி­ரிகை சுதந்­திரம் இப்­போது முன்­னேற்றம் அடைந்­தி­ருக்­கின்­றது. இதனை எவரும் மறுக்க முடி­யாது. அதே­வேளை யுத்­தத்தின் பின்னர் நிலை­மாறு கால நீதி பற்றிப் பேசப்­ப­டு­கின்ற சூழலில் இது போதியளவில் முன்­னேற்றம் அடை­ய­வில்லை என்­ப­தையும் மறுக்க முடி­யாது. 

இலங்­கையின் பத்­தி­ரிகை சுதந்­திரம் முன்­னைய ஆண்­டிலும் பார்க்க சிறிது முன்­னே­றி­யி­ருக்­கின்­றது என்­பதை ஆர்.எஸ்.எப். என்ற அமைப்பு அகில உல­க­ளா­விய தனது ஊடக சுதந்­திர நிலைமை குறித்த வரு­டாந்த மதிப்­பீட்டு அறிக்­கையில் குறிப்­பிட்­டி­ருக்­கின்­றது. ஊடக சுதந்­திரத் தரவரி­சையில் 141 ஆவது இடத்தில் இருந்த இலங்கை 131 ஆவது இடத்­திற்கு முன்­னே­றி­யி­ருப்­ப­தாக அந்த அறிக்கை மதிப்­பிட்­டி­ருக்­கின்­றது. 

பத்­தி­ரிகை சுதந்­திரம் உலகின் 180 நாடு­களில் மதிப்­பீடு செய்­யப்­பட்டு வரு­டந்­தோறும் தர­வ­ரிசை அறிக்கை வெளி­யி­டப்­ப­டு­கின்­றது. ஆங்­கிலம் உள்­ளிட்ட 20 மொழி­களில் தயா­ரிக்­கப்­ப­டு­கின்ற 87 கேள்­வி­களை உள்­ள­டக்­கிய ஒரு வினாக் கொத்தினூடாக தரவரிசை மதிப்­பீட்­டுக்­கான தர­வுகள் சேக­ரிக்­கப்­ப­டு­கின்­றன. 

இத் தர­வுகள் பன்மைத் தன்மை, ஊடக சுதந்­திரம், சூழலும் சுய செய்தித் தணிக்­கையும், ஊடகச் செயற்­பா­டுகள் தொடர்­பி­லான சட்ட நிலை­மைகள், வெளிப்­படைத் தன்மை, செய்தித் தயா­ரிப்­புக்­கான கட்­ட­மைப்பு, ஊட­கத்தின் மீதான துஷ்­பி­ர­யோகம்–வன்­முறை பற்­றிய தக­வல்கள் ஆகிய 7 விட­யங்­களில் மதிப்பீடு செய்யப்பட்டு, புள்­ளிகள் இடப்பட்டு தரவரிசை நிர்­ண­யிக்­கப்­ப­டு­கின்­றது.

இவ்­வாறு பெறப்­ப­டு­கின்ற புள்­ளி­களின் அடிப்­ப­டையில் வெள்ளை நிறத்தில் குறிப்­பி­டப்­ப­டு­கின்ற முதல் 15 புள்­ளிகள் நல்ல நிலையில் உள்­ளதையும் மஞ்சள் நிறத்தில் குறிப்­பி­டப்­ப­டு­கின்ற 15.01 இலி­ருந்து 25 வரையில் பர­வா­யில்லை என்பதையும் சிவந்த மஞ்சள் (ஆரஞ்சு) நிறத்தில் குறிப்­பி­டப்­ப­டு­கின்ற 25.01 இலி­ருந்து 35 வரை­யி­லான புள்­ளிகள் பிரச்­சி­னைக்குரி­யது என்பதையும் சிவப்பு நிறத்தில் குறிப்­பி­டப்­ப­டு­கின்ற 35.01 இலி­ருந்து 55 வரை­யி­லான புள்­ளிகள் மோச­மா­னது என்பதையும் கறுப்பு நிறத்தில் குறிப்­பி­டப்­ப­டு­கின்ற 55.01 இலி­ருந்து 100 வரை­யி­லான புள்­ளிகள் மிகவும் மோச­மா­னது என்பதையும் குறிப்பிட்டு நாடு­களின் ஊடக சுதந்­திர நிலைமை மதிப்­பீடு செய்­யப்­ப­டு­வ­தாக ஆர்.எஸ்.எப். நிறு­வனம் கூறு­கின்­றது. 

இந்த வகையில், ஜன­நா­ய­கத்தை அச்­சு­றுத்­து­கின்ற ஊட­கங்கள் மீதான வெறுப்­பு­ணர்வு என்ற தலைப்பில் ஆர்.எஸ்.எப்.அமைப்பு 180 நாடு­களில் ஊடக சுதந்­தி­ரத்தின் நிலைமை தொடர்­பாக அறிக்கையை வெளி­யிட்­டி­ருக்­கின்­றது. இத் தரவரிசை தேசப்­ப­டத்தில் இலங்­கையை உள்­ள­டக்­கிய ஆசிய பிராந்­தியம் மஞ்சள் நிறத்தில் காட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இலங்­கையில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் எவரும் 2017 ஆம் ஆண்டு கொலை செய்­யப்­ப­டாத போதிலும் ஊடக நிறு­வ­னங்­களும் ஊட­க­வி­ய­லா­ளர்­களும் மனித உரிமைச் செயற்­பாட்­டா­ளர்கள் மற்றும் பெண்­ணு­ரிமைச் செயற்­பாட்­டா­ளர்­கள் ஆகியோரும் அச்­சு­றுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். ஊட­க­வி­ய­லா­ளர்கள் அல்­லா­த­வர்கள் கருத்துச் சுதந்­திரம் மறுக்­கப்­பட்ட நிலையில் அச்­சு­றுத்­த­லுக்கும் பாதிப்­புக்கும் ஆளாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றனர் என்­பது ஊடக சுதந்­தி­ரத்தின் அம்­ச­மாக உள்­ள­டக்­கப்­பட்­டி­ருப்­பதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. 

முன்­னைய ஆட்­சியில் ஊட­கங்­களும் ஊட­க­வி­ய­லா­ளர்­களும் இறுக்­க­மான வரை­மு­றைகள், கட்­டுப்­பா­டு­களைக் கொண்ட செயற்­பா­டு­களின் மூலம் மோச­மான அடக்­கு­மு­றை­க­ளுக்கு ஆளாக்­கப்­பட்­டி­ருந்­தார்கள். குறிப்­பாக யுத்த மோதல்கள் இடம்­பெற்ற பிர­தே­சங்­களில் இடம்பெயர்ந்த மக்கள் மீள் குடி­யேற்றம் செய்­யப்­பட்டு, இயல்பு நிலை­மையை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டி­ருந்­தன. ஆயினும் அந்தப் பிர­தே­சங்கள் இரா­ணுவக் கட்­டுப்­பாட்­டிலும் முழு­மை­யான இரா­ணுவ புல­னாய்வு கண்­கா­ணிப்­பிலும் இருந்­தன. அரச நிர்­வாகக் கட்­ட­மைப்பின் செயற்­பா­டு­க­ளிலும் இரா­ணுவ அதி­காரம் மேலா­திக்கம் கொண்­டி­ருந்­தது.

இப் பிர­தே­சங்­க­ளுக்கு பாது­காப்பு அமைச்சின் முன் அனு­மதி பெறாமல் ஊட­க­வி­ய­லா­ளர்கள் செல்ல முடி­யாது. அவ்­வாறு அனு­மதி பெற்றுச் சென்­றா­லும்­கூட, அந்­தந்தப் பிர­தே­சங்­க­ளுக்குப் பொறுப்­பான இரா­ணுவ அதி­கா­ரி­களின் முன் அனு­மதி பெற்ற பின்­னரே செய்தி சேக­ரிக்க வேண்டும் என்ற எழு­தப்­ப­டாத சட்டம் இறுக்­க­மாகக் கடைப்­பி­டிக்­கப்­பட்­டி­ருந்­தது. புகைப்­ப­டங்கள்  எடுக்­கவும் காணொளிக் காட்­சி­களைப் பதிவு செய்­ய­வும்­கூட அந்த இரா­ணுவ அதி­கா­ரி­களின் முன் அனு­மதி பெற வேண்­டிய நிலைமை நில­வி­யது. 

அவ்­வாறு அனு­மதி பெற்­றி­ருந்­தாலும் நிழ­லைப்­போல பின்­தொ­டர்­கின்ற இரா­ணுவ புல­னாய்­வா­ளர்­களின் இறுக்­க­மான கண்­கா­ணிப்பின் கீழேயே ஊட­க­வி­ய­லா­ளர்கள் செயற்­பட நேர்ந்­தி­ருந்­தது. சிலவேளை­ பொது­மக்­க­ளிடம் செய்­யப்­ப­டு­கின்ற நேர்­கா­ணல்களும் அவர்­க­ளுடன் நடத்­தப்­ப­டு­கின்ற கலந்­து­ரை­யா­டல்­களும் பின்­தொ­டர்­கின்ற இரா­ணுவ புல­னாய்­வா­ளர்­களின் கைத்­தொ­லை­பே­சியில் காணொளிக் காட்­சி­க­ளாகப் பதிவு செய்யப்படு­வதும் உண்டு. ஆனால் ஆட்சி மாற்­றத்தின் பின்னர், இந் நிலை­மை­களில் மாற்­றங்கள் ஏற்­பட்­டி­ருக்­கின்­றன. ஆயினும் சில–பல இடங்­களில் பிர­தேச சிவில் உடையில் காணப்­ப­டு­கின்ற புல­னாய்­வா­ளர்­களின் அவ­தா­னிப்பும் நிழல் போன்ற கண்­கா­ணிப்பும் இன்னும் இருக்­கத்தான் செய்­கின்­றன.  

 நிலை­மைகள்

யுத்தம் முடி­வ­டைந்து ஒன்­பது வரு­டங்­க­ளாகப் போகின்ற போதிலும் இடம் பெயர்ந்­துள்ள மக்­களின் மீள்­கு­டி­யேற்றம் இன்னும் இழு­பறி நிலை­யி­லேயே உள்­ளது. இடம்­பெ­யர்ந்­துள்ள மக்­களின் காணி­களில் இரா­ணுவம் நிலை­கொண்­டி­ருப்­பதும் அந்த இடங்­களை இரா­ணுவம் தனது நிரந்­த­ர­மான இருப்­பி­ட­மாக்­கு­வ­தற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்­டி­ருப்­ப­துமே இதற்கு முக்­கிய கார­ண­மாகும். யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்த அர­சாங்­க­மும் ­சரி, ஆட்சி மாற்­றத்தின் பின்னர் அதி­கா­ரத்தைக் கைப்­பற்­றி­யுள்ள அர­சாங்­க­மும் ­சரி, இடம்­பெ­யர்ந்த மக்­களின் மீள்­கு­டி­யேற்­றத்தில் அதிக ஈடு­பாடும் அதிக கவ­னத்­தையும் செலுத்­து­வ­தற்குப் பதி­லாக யுத்­த­மோ­தல்கள் இடம்­பெற்ற தமிழ்ப்­பி­ர­தே­சங்­களில் சிங்­களக் குடி­யேற்­றங்­களை வலிந்து மேற்­கொள்­வ­தி­லேயே ஆர்­வ­மாகச் செயற்­பட்­டி­ருக்­கின்­றன. 

இத்­த­கைய சிங்­களக் குடி­யேற்­றமும் கரை­யோர தமிழ் மீன­வர்­களின் வாழ்­வி­டங்­க­ளையும் வாழ்­வா­தாரப் பகு­தி­க­ளையும் சிங்­களக் குடி­யேற்­றத்தின் மூலம் ஆக்­கி­ர­மிக்­கின்ற செயற்­பா­டு­களும் முல்­லைத்­தீவில் அர­சாங்­கத்தின் அனு­ச­ர­ணை­யோடு பகி­ரங்­க­மாக இடம்­பெற்று வரு­கின்­றன. இந்த ஆக்­கி­ர­மிப்புச் செயற்­பாடு குறித்து மக்கள் பிர­தி­நி­திகள் அர­சாங்­கத்தின் கவ­னத்­துக்குக் கொண்டு வந்த போதிலும் அது குறித்து அர­சாங்கம் அலட்­டிக்­கொள்­ளாத போக்கே காணப்­ப­டு­கின்­றது. 

இத்­த­கைய ஒரு பின்­ன­ணியில் முல்­லைத்­தீவு பிர­தே­சத்தின் ஆக்­கி­ர­மிப்புக் குடி­யேற்ற நட­வ­டிக்­கைகள் குறித்து தகவலறிந்து செய்தி சேக­ரிக்கச் சென்ற யாழ். ஊட­க­வி­ய­லா­ளர்கள் இரா­ணு­வத்­தி­னரால் அச்­சு­றுத்­தப்­பட்­டுள்­ளார்கள். அவர்கள் பதிவு செய்­தி­ருந்த காணொளிக் காட்­சி­களும் புகைப்­ப­டங்­களும் ஊட­க­வி­ய­லா­ளர்­களைப் பின்­தொ­டர்ந்து கண்­கா­ணித்த படை­யி­னரால் பல­வந்­த­மாக அழிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இது அப்­பட்­ட­மான ஊடக உரிமை மீற­லாகப் பதி­வா­கி­யி­ருக்­கின்­றது. 

மீள்­கு­டி­யேற்றப் பிர­தே­சங்­களில் தேசிய பாது­காப்­புக்­காக பெரும் எண்­ணிக்­கையில் நிலைநிறுத்­தப்­பட்­டுள்ள இரா­ணு­வத்­தினர் யுத்­தத்­தால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் மீள் வாழ்­வெ­ழுச்­சிக்­கான உத­வி­க­ளிலும் அபி­வி­ருத்திச் செயற்­பா­டு­க­ளிலும் ஈடு­பட்­டி­ருப்­ப­தா­கவே கூறப்­ப­டு­கின்­றது. அத்­துடன் யுத்­தத்தின் பின்­ன­ரான நல்­லி­ணக்க முயற்­சி­க­ளிலும் அமைதி–சமா­தானம்–ஐக்­கியம் நிறைந்த தேசிய வாழ்க்­கையைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும் இரா­ணு­வத்­தினர் உதவி புரி­வ­தா­கவும் பிர­சாரம் செய்­யப்­ப­டு­கின்­றது. ஆனால், பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு மேலும் பாதிப்பு ஏற்­ப­டத்­தக்க வகையில் மீள்­கு­டி­யேற்றப் பிர­தே­சங்­களில் இடம்­பெ­று­கின்ற அத்­து­மீ­றல்­க­ளையும் உரிமை மீறல்­க­ளையும் ஊட­கங்கள் செய்­தி­யாகப் பதிவு செய்­வ­தற்கு அனு­மதி மறுக்­கப்­பட்­டி­ருப்­பது நல்­லாட்சி அர­சாங்­கத்தின் ஊடக சுதந்­திர நிலை­மையைப் படம் பிடித்துக் காட்­டு­வ­தாக அமைந்­துள்­ளது. 

ஊட­க­வி­ய­லா­ளர்­களின் உரிமை சார்ந்த செயற்­பாட்டைத் தடுத்­த­துடன் ஊடக சுதந்­தி­ரத்­துக்கு அச்­சு­றுத்தல் விடுத்­த­தா­கவே இச் சம்­பவம் பதி­வா­கி­யி­ருக்­கின்­றது. ஊடக சுதந்­திரம் குறித்து பேசப்­ப­டு­கின்ற போது, இந்த முல்­லைத்­தீவு சம்­பவம் ஊடக சுதந்­திர மறுப்பு நட­வ­டிக்­கை­யாக எடுத்துக் காட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது. ஊடக சுதந்­திரம் முன்­னேற்­ற­ம­டைந்­துள்­ள­தாக சுட்­டிக்­காட்­டப்­பட்­ட­போது ஊடக சுதந்­திரச் செயற்­பாட்டில் மோச­மான பின்­ன­டைவாக இச் சம்­பவம் அறிக்கையிடப்­பட்­டி­ருக்­கின்­றது. 

இது மட்­டு­மல்­லாமல் ஊடக சுதந்­தி­ரத்­துக்கு அச்­சு­றுத்தல் ஏற்­ப­டுத்தும் வகையில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் அவர்­க­ளு­டைய நாளாந்தச் செயற்­பா­டு­களில் அர­சுக்கு எதி­ரா­ன­தாகக் கரு­தப்­பட்ட சம்­பவம் குறித்து சம்­பந்­தப்­பட்ட ஊட­க­வி­ய­லா­ளர்கள் விசா­ர­ணைக்குள்­ளாக்­கப்­பட்டு அவர்­க­ளு­டைய வாக்­கு­மூ­லங்கள் பதிவு செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றன. குறிப்­பிட்ட சம்­பவம் தொடர்­பான உண்மை நிலையைக் கண்­ட­றி­வ­தற்­கான விசா­ர­ணை­யாக அது காட்­டப்­பட்ட போதிலும் அந்த விசா­ர­ணையும் பதிவு செய்­யப்­பட்ட வாக்­கு­மூ­லமும் சம்­பந்­தப்­பட்ட ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு எதி­ராக எதிர்­கா­லத்தில் பயன்­ப­டுத்­தப்­படக் கூடும் என்­பதில் சந்­தே­க­மில்லை. 

ஊட­கவியலாளர்­களின் படு­கொ­லை­க­ளுக்­கான நீதி மறுப்பு 

இதே­போன்று வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டுள்­ள­வர்கள் தொடர்பில் அர­சாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் எனக் கோரி நடத்­தப்­படும் போராட்­டங்­களில் முக்­கிய பங்­க­ளிப்பு செய்­த­வர்கள் விசா­ர­ணைக்குட்­ப­டுத்­தப்­பட்­டதும் அச்­சு­றுத்­தப்­பட்­டதும் கூட பதி­வா­கி­யி­ருக்­கின்­றன. இறுதி யுத்­தத்­தின்­போது இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்­த­வர்கள் காணாமல் போயுள்­ளார்கள். இவர்கள் வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டுள்­ளார்கள். இவர்­க­ளுக்குப் பொறுப்புக் கூற வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கட­மை­யாகும். அதே­போன்று கைது செய்­யப்­பட்­ட­வர்­களும் கடத்திச் செல்­லப்­பட்ட பின்னர், காணாமல் போயி­ருப்­ப­வர்கள் குறித்தும் பொறுப்புக் கூற வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கட­மை­யாகும். இக் கட­மையைச் சுட்­டிக்­காட்டி வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­மைக்கு பொறுப்­பேற்று பதி­லளிக்குமாறு கோரியும் அச் செய­லுக்கு நியாயம் கோரியும் நடத்­தப்­ப­டு­கின்ற போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்கள் அச்­சு­றுத்­தப்­பட்­டமை அப்­பட்­ட­மான கருத்து நிலைப்­பாட்டு உரிமை மீற­லாகும். அது கருத்து வெளிப்­பாட்டு நட­வ­டிக்­கையைக் கட்­டுப்­ப­டுத்­து­கின்ற செயற்­பா­டா­கவும் கணிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

யுத்த காலத்தில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்டமீறல்­க­ளுக்கு பொறுப்புக் கூற­வேண்டும் என்ற கடப்­பாட்டை அர­சாங்கம் ஏற்று ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­க­ளுக்கு இணை அனு­ச­ரணை வழங்கி ஒப்­புதல் அளித்­தி­ருக்­கின்­றது. 

அதற்­கான பொறி­மு­றை­களை வகைப்­ப­டுத்தி அவற்றை நிறை­வேற்­று­வ­தற்கும் அரசு இணக்கம் தெரி­வித்­தி­ருக்­கின்­றது. அந்தச் செயற்­பாடு குறித்த முன்­னேற்ற அறிக்­கை­க­ளும்­கூட ஐ.நா. மனித உரிமைப் பேர­வைக்கு அர­சாங்­கத்­தால் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. ஆனால் இந் நட­வ­டிக்­கை­களில் வேண்டுமென்றே காலம் தாழ்த்­தப்­ப­டு­கின்­றது–இழுத்­த­டிக்­கப்­ப­டு­கின்­றது என்று சர்­வ­தேச அளவில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது. மனித உரிமைப் பேர­வையில் இந்த விடயம் ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ள­ரால் கடு­மை­யான தொனியில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.

அர­சாங்­கத்தின் இந்த இழுத்­த­டிப்புச் செயற்­பா­டுகள் மனித உரிமை நிலை­மை­களில் ஏற்­பட்­டுள்ள தேக்கநிலை­மையை வெளிப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­தி­ருக்­கின்­றன என்­பதே சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்­களின் நிலைப்­பா­டாகும். மனித உரிமைச் செயற்­பா­டு­களில் போதியளவில் முன்­னேற்றம் காணப்­ப­ட­வில்லை என்ற குற்­றச்­சாட்­டுக்கு படு­கொலை செய்­யப்­பட்ட ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கொலை­க­ளுக்கு ஆட்­சி­யா­ளர்கள் நீதி வழங்கத் தவ­றி­யுள்­ள­மையும் வலுச்சேர்ப்­ப­தாக அமைந்­தி­ருக்­கின்­றன.  

ஊடக சுதந்­தி­ரத்­துக்கு சாவு­மணி அடிக்கும் வகையில் நாற்­ப­துக்கும் மேற்­பட்ட ஊட­க­வி­ய­லா­ளர்கள் படு­கொலை செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். இந்தக் கொலைகள் ஒவ்­வொன்றும் மிக மோச­மான குற்றச் செயல்­க­ளாகும். அது மட்­டு­மல்­லாமல், அந்தக் கொலைகள் ஜன­நா­ய­கத்தின் ஆணி­வே­ரா­கிய ஊடக சுதந்­தி­ரத்தை அடித்து நொறுக்­கு­வ­தற்­கான மோச­மான வன்­முறைச் செயற்­பா­டா­கவும் கரு­தப்­ப­டு­கின்­றது. ஜன­நா­ய­கத்தின் நான்கு தூண்­களில் ஊடக சுதந்­தி­ரமும் ஒன்­றாகும். ஊடக சுதந்­திரம் நசுக்­கப்­பட்டாேலா அச்­சு­றுத்­தப்­பட்டாேலா அந்த சுதந்­திரம் அடக்­கு­மு­றையின் மூலம் மறுக்­கப்­பட்டாேலா அங்கு ஜன­நா­யகம் இல்லை என்­பதே கருத்­தாகும்.

 

இலங்­கையில் கொல்­லப்­பட்ட ஊட­க­வி­ய­லா­ளர்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் தமி­ழர்கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. ஊட­க­வி­ய­லா­ளர்கள் கட­மைக்குச் செல்­லும்­போது அல்­லது கட­மையிலிருந்து திரும்­பும்­போது வழி­ம­றித்துக் கொல்­லப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். அதே­போன்று பகி­ரங்­க­மாக சிலர் கடத்திச் செல்­லப்­பட்ட பின்னர் வீதி­யோ­ரங்­க­ளிலும் மறை­வி­டங்­க­ளிலும் படு­கொலை செய்­யப்­பட்டு வீசப்­பட்­டி­ருந்­தார்கள். சில ஊட­க­வி­ய­லா­ளர்களின் சட­லங்­களில்­ சித்­தி­ர­வதை செய்­யப்­பட்டு கொல்­லப்­பட்­­ட­மைக்­கான அடை­யா­ளங்கள் அவ­தா­னிக்­கப்­பட்­டி­ருக்கின்றன. இந்த சித்­தி­ர­வ­தைகள் மோச­மா­னவை. மேலும் சில சித்திரவதைகள் பாலியல் ரீதி­யா­கவும் காணப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.  இந்தச் செயற்­பா­டுகள் கொல்­லப்­பட்ட ஊட­க­வி­ய­லா­ளர்கள் மீது அவர்­களைக் கொலை செய்­த­வர்கள் கொண்­டி­ருந்த மிக மோச­மான வன்­மத்­தையும் பகை உணர்­வையும் வெறுப்­பு­ணர்­வையும் வெளிப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­தி­ருந்­தன. 

இத்­த­கைய மோச­மான கொலைகள் இடம்­பெற்­றி­ருந்த போதிலும் கொலை செய்­த­வர்­க­ளும் ­சரி கொலை­க­ளுக்குக் கார­ண­மா­ன­வர்­க­ளும் ­சரி இன்னும் அர­சாங்­கத்­தால் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை. ஆயுதம் ஏந்­தாத நிரா­யு­த­பா­ணி­க­ளான ஊட­க­வி­ய­லா­ளர்­களைப் படு­கொலை செய்­த­வர்கள் யார் என்­பதைக் கண்­ட­றி­வ­தற்கு அர­சாங்­கங்கள் ஆர்வம் காட்­ட­வில்லை என்ற குற்­றச்­சாட்டு நீண்ட கால­மாக நில­வு­கின்­றது. குறிப்­பாக "படு­கொலை செய்­யப்­பட்ட தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்கள்–தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்­கள் ­தானே..." என்ற இன­வாத சிந்­த­னையின் அடிப்­ப­டை­யில்தான் இத்­த­கைய அலட்சிய­மான போக்கு கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கின்­றதோ என்று ஊடக சுதந்­தி­ரத்­துக்­கான செயற்­பாட்­டா­ளர்­க­ளால் சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­றது.  

நல்­லாட்­சிக்கும் ஜன­நா­ய­கத்­திற்கும் ஊடக சுதந்­திரம் அவ­சியம் 

ஊட­கங்­களின் மீதான கட்­டுப்­பாடும் அடக்­கு­மு­றையும் ஊட­கங்கள் மீதான அர­சாங்­கத்­தி­னதும் ஆட்­சி­யா­ளர்­க­ளி­னதும் வெறுப்­பு­ணர்­வையே காட்­டு­கின்­றன. இது ஜன­நா­ய­கத்தின் மீதான அச்­சு­றுத்­தலின் வெளிப்­ப­டுத்­தலேயாகும். இதுவே ஆர்.எஸ்.எப். என்ற எல்­லை­க­ளற்ற ஊட­க­வி­ய­லா­ளர்­களின் அமைப்பு என்ற ஊடக சுதந்­தி­ரத்­துக்­கான அமைப்பு 2018 ஆம் ஆண்டின் ஊடக தர­வ­ரிசை அறிக்­கையின் மகுட வாச­க­மாகக் கொண்­டி­ருக்­கின்­றது. ஊட­கங்­களின் மீதான வெறுப்­பு­ணர்வு ஜன­நா­ய­கத்தை அச்­சு­றுத்தும் நட­வ­டிக்கை என அது சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றது. 

ஊட­கங்கள் அர­சாங்­கத்­துக்கு எதி­ரான செயற்­பாட்டைக் கொண்­ட­வை­யல்ல. ஊட­கமும் ஊடக சுதந்­தி­ரமும் ஜன­நா­ய­கத்தின் முக்­கிய அம்­ச­ங்களாகும். ஜன­நா­யக நெறிமுறைகளை மீறும்போதும் பொதுமக்களுடைய நன்மைகளுக்கு விரோதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்போதும் அவற்றைச் சுட்டிக்காட்டி நேர்வழியில் அரசாங்கங்களைப் பயணிக்கச் செய்யும் பாரிய பொறுப்பையே ஊடகங்கள் கொண்டிருக்கின்றன. இதனால்தான் ஊடகம் என்பது "காவல் நாயாக"  வர்ணிக்கப்படுகின்றது. அந்த வகையில் நல்லாட்சி நிலவுவதற்கும் நல்லாட்சி தொடர்வதற்கும் ஊடகங்கள் உறுதுணையாக அமைந்திருக்கின்றன. 

ஜனநாயகத்தின் பண்பு நிலைப்பாட்டில் உயர்ந்த முக்கியமான அந்தஸ்தைப் பெற்றுள்ள ஊடகங்கள் அரசாங்கங்களின் செயற்பாடுகள் அனைத்தையும் போற்றிப் புகழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் சரியானவை என மக்களிடம் கொண்டு செல்கின்ற "ஊதுகுழல் கருவி"யாக ஊடகம் செயற்பட முடியாது. ஜனநாயகத்தையும் ஜனநாயக உரிமைகளையும் பேணிப் பாதுகாக்கின்ற பணியில் ஊடகங்களின் செயற்பாடுகள் இன்றியமையாதவை. 

ஆட்சியாளர்களும்சரி அரசியல்வாதிகளும் சரி ஜனநாயக செல்நெறிகளில் இருந்து நெறி பிறழ்வதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாகவே இருக்கின்றன. அரசியல் என்பது அதிகாரத்தையும் புகழையும் பிரபல்யத்தையும் மட்டுமல்லாமல் சமூக அந்தஸ்தையும் செல்வத்தையும் கூட பெற்றுத்தரவல்லது. உண்மையான அரசியல் மக்களுக்கு நேர்மையான நியாயபூர்வமான செயற்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. அந்த ஜனநாயக இலக்கில் இருந்து வழிதவறிச் செல்வதற்கு அதிகார அந்தஸ்து–புகழ்–பிரபல்யம்–செல்வம் என்பன "ஊன்றுகோல்களாக" அமைந்திருக்கின்றன. இவற்றின் ஆதிக்கத்தில் இருந்து தப்பிச் செயற்படுவதற்கு உண்மையான ஜனநாயகத் தன்மை கொண்ட ஊடகச் செயற்பாடுகள் உறுதுணையாக இருக்கின்றன. 

எனவே, ஊடகங்கள் அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் "வழிநடத்தல் காவலர்களாக" திகழ்கின்றன. அத்தகைய முக்கியத்துவம் மிக்க ஊடகத்தை சுதந்திரமாகச் செயற்பட விடவேண்டியதும் அந்த சுதந்திரத்தைப் பாதுகாத்துப் பேணுவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும். இந்த பொறுப்பில் இருந்து அரசாங்கம் தவறுமானால் அந்த ஆட்சி நல்லாட்சியாக அமைய முடியாது. அது மட்டுமல்ல, அந்த ஆட்சி உண்மையான ஜனநாயக ஆட்சியாகவும் இருக்க முடியாது.   

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-05-05#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.